28/08/2020
இந்தியாவில் வாழ்வோர் அனைவரும் வெவ்வேறு தேசிய இனத்தவர் ஆவர்...
அவர்கள் நாடு அரசியல் ரீதியாக இந்திய ஒன்றியத்தில் இணைந்துள்ளது அவ்வளவே..
அவர்களிடம் போய் இந்தியன் என்று என்றும் இல்லாத உணர்வைத் தூண்டி அதன்மூலம் ஆதரவு திரட்ட நினைப்பது மடத்தனம்..
ஆகவே தமிழரே நம் பிரச்சனை நம் நாட்டுப் பிரச்சனை அதாவது தமிழர் நாட்டின் பிரச்சனை..
இந்தியாவின் பிரச்சனை அல்ல..
அதாவது இந்தியா என்று எதுவும் நம்மைப் பொறுத்தவரை இல்லை..
நமது பிரச்சனைகளில் முதலில் நாம் முழுமையாக இறங்க வேண்டும்..
தமிழர் சந்திக்கும் பிரச்சனைகளை இன்னொரு தமிழரிடம் கூறிப் புரிய வையுங்கள்..
உலகம் முழுதும் உள்ளத் தமிழரை ஒன்று திரட்டுங்கள்.. அது தான் பலனளிக்கும்..
பிரச்சாரத்துக்காக வேண்டுமானால் பிற இனத்தவருக்கு அதுவும் தகவலாகத் தெரிவிக்கலாம்..
அதை விட்டுவிட்டு நம்மினம் சார்ந்த ஒரு பிரச்சனைக்கு வேறொருவரை நம்புவது முட்டாள்த்தனம்..
ஈழத்திலே
காவிய நாயகனாம்
காக்கும் கடவுளாம்
கண் கண்ட தெய்வமாம்
ஒப்பாரும் மிக்காரும் எவருமிலா
நம் தேசியத்தலைவர் திரு.பிரபாகரன் கூறுவது போல..
நாம் ஒரு ஆற்றல் மிக்க இனம்...
ஒரு வீரப்பனாரை தோற்கடிக்க மூன்று மாநிலக் காவல்துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் படை சேர்ந்து நாற்பது வருடம் முக்கினார்கள்...
ஒரு பிரபாகரனைத் தோற்கடிக்க சிங்கள காவல்துறை, இராணுவம் , இந்திய இராணுவம்,உளவுத்துறை மற்றும் 32 நாடுகள் 30வருடம் முக்கினார்கள்...
ஒட்டு மொத்தத் தமிழனமும் எழுச்சி பெற்றால் நம்மைத் தோற்கடிக்க உலகநாடுகள் என்ன அண்ட சராசரமும் ஆயிரம் ஆண்டுகள் முக்கினாலும் நடக்காது...
நாளை நம்மீது இந்தியா போர் தொடுத்தாலும் தொடுக்குமேயன்றி நமக்கு நீதி கிடைக்க வழிவிடாது இதுதான் கசப்பான உண்மை...
அதனால் மீண்டும் கூறுகிறேன்..
தமிழராக இணையுங்கள்..
தயாராக இருங்கள்..
நம் விடுதலை நம் கையில்...
பேய்களின் திருவிழா...
திருவிழாக்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம்..
இரவு திருவிழாக்களில் முக்கியமானது 'ஹேலோவீன்' என்பது..
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31 -ந் தேதி இரவு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது..
கோடை முடியும் நேரம், பூமிக்கும் நரகத்துக்கும் இடையே உள்ள தூரம் குறைந்து விடும்.
எனவே பேய் பிசாசுகள் லோக்கல் சிட்டி பஸ்ஸில் பூமிக்கு வந்துவிடும் என்பது பண்டைய செல்டிக் மக்களின் நம்பிக்கை.
டவுன் பஸ் ட்ரிப்பில் சொந்தக்காரப் பேய்களும் வந்துவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை.
அந்த சொந்தக்காரர்களை தங்கள் வீட்டுக்கு விருந்தினர்களாக கூப்பிட்டு விருந்து வைப்பார்கள்.
கெட்ட ஆவிகளை வாசலிலேயே துரத்தி விடுவார்கள்..
மோசமான பேய்களை போலவே அன்றைக்கு மக்கள் மாறுவேஷம் போட்டுக் கொள்வார்கள்.
அட இது நம்ம ஆளுப்பா என்று கெட்ட ஆவிகள் ஏமாந்து, மனிதர்களை தேடி அடுத்த வீட்டுக்கு போகும்.
அங்கும் இப்படியே மனிதர்கள் வேஷம் போட்டிருப்பார்கள்.
இப்படி ஒவ்வொரு வீடாக அடைந்து ஏமாந்து மீண்டும் நரகத்துக்கே அந்த பேய் போய்விடும்.
அன்று விருந்துக்கு வரும் ஒவ்வொருவரும் டிராகுலா, வேம்பையர் என்று பதறவைக்கும் வேஷத்தில் அலறவைப்பார்கள்.
பூசணிக்காயில் பேய் உருவங்களை செதுக்கி உள்ளே லைட் போட்டு 'திகில் எபக்ட்' கொடுப்பார்கள்.
மண்டை ஓடு கேக், எலும்பு சாக்லேட், ரத்தக்கத்தி என்று இரவு சாப்பாடே மிரட்டலாக இருக்கும்.
ஒரு அறை முழுக்க பிளாஸ்டிக் எலும்புக் கூடுகளை அடுக்கி வைத்திருப்பார்கள்.
செட்டப் கல்லறைகள், நகரும் நிழல் உருவங்கள் என்று ஆவிகளை அலறவைப்பார்கள்.
விருந்து முடிந்ததும் திகில் படங்களை பார்த்து கூட்டமாக பயப்படுவார்கள்.
கன்னிப் பெண்கள் 'ஹேலோவீன்' இரவு அன்று தனியறையில் லைட் எதுவும் போடாமல் கண்ணாடியை பார்த்தால் அதில் எதிர்கால கணவனின் முகம் தெரியுமாம்.
ஒரு வேலை கண்ணாடியில் மண்டை ஓடு தெரிந்தால் அவ்வளவுதானாம்.
திருமணம் எதுவும் நடக்காமலேயே அந்த பெண் இறந்து விடுவாளாம்...
உன் வளர்ச்சிக்கு நீயே பொறுப்பு...
சாதனையாளர்களுக்கும், சாமானியர்களுக்கும் இடையேயான மிக முக்கியமான வித்தியாசம் என்ன தெரியுமா?
சாதனையாளர்கள் தங்கள் செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் தாங்களே எடுத்துக் கொள்கிறார்கள். அது வெற்றியில் முடிந்தாலும் சரி, தோல்வியில் முடிந்தாலும் சரி, இரண்டையுமே தங்களுடைய தோளில் ஏந்திக் கொள்கிறார்கள்.
சாமானியர்கள் வெற்றிகள் வந்தால் ஏந்திக் கொள்ள தங்கள் தோள்களைத் தயாராக்குகிறார்கள். தோல்வி நெருங்கும் போதோ சுண்டுவிரலைத் தயாராக்குகிறார்கள், அடுத்தவர் மீது பழியைப் போட..
நமது செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் நாமே எடுத்துக் கொள்வது என்பது கடினமான வேலை. அதற்கு தளராத மன உறுதியும், தைரியமும், தன் மீது வைக்கும் அழுத்தமான நம்பிக்கையும் வேண்டும்.
நமது செயல்களுக்கான விளைவுகளின் பொறுப்பை நாமே எடுத்துக் கொள்ளும்போது தான் வாழ்க்கை சுவாரசியமாகிறது. ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் எனும் வேட்கையும், தவறி விழுந்தால் உடனே எழவேண்டும் எனும் உந்துதலும் அப்போதுதான் உருவாகும்.
இதுதான் வெற்றியாளர்களை உருவாக்குகிறது!
இதுதான் சாதனையாளர்களைச் சம்பாதிக்கிறது!
கொஞ்ச நேரம் உங்கள் அலுவல் சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு உறவுகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கும் உங்கள் சகோதரர்களுக்குமிடையே இணக்கம் இல்லாததற்கு யார் காரணம்? உங்கள் பெற்றோருடன் பிணைப்பு இல்லாததற்கு யார் காரணம்? நண்பர்களுடன் நட்பு இல்லாததற்கு யார் காரணம்?
அடுத்தவர்களை குறை கூறும் முன், 'நானும் இதற்கு ஒரு காரணமா?' என ஒரு நிமிடம் நிதானித்துப் பாருங்கள்.
இதுவரை உங்கள் மனதிற்குத் தெரியாத ஏகப்பட்ட விஷயங்கள் தெரியவரும்! உங்கள் மனதின் கண் சட்டென இமை விரிக்கும்.
பொதுவாக நாம் நமது தோல்விகளுக்கான காரணங்களை வெளியேதான் தேடுவோம். நமது சோகத்துக்குக் காரணம் நண்பன் என்போம், கோபத்துக்குக் காரணம் தோழி என்போம், ஏமாற்றத்துக்குக் காரணம் மேலாளர் என்போம்.
நமக்கு வெளியே இருப்பவைதான் நம்மை இயக்குகின்றன, நமது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன என்று நாம் கருதிக் கொள்வதே இதன் காரணம்.
நமக்குள்ளே நாம் மூழ்கி நமது தோல்விகளுக்கான காரணங்களை ஆராயத் துவங்கினால் விடைகள் வித்தியாசமாக வரும். நமது ஈகோவோ, பொறுமையின்மையோ, திறமையின்மையோ ஏதோ ஒன்று இதன் காரணமாக இருக்கும்.
காரணங்கள் நமக்குள்ளேயே இருப்பது நல்லது. நமக்குள் இருக்கும் பிழைகளைத் தானே நாம் சரி செய்ய முடியும்! பிறரிடமோ, சூழ்நிலையிடமோ நமது வெற்றி தோல்விக்கான சுக்கான் இருக்கிறது என நாம் கருதிக் கொள்ளும் காலம் வரை நமது வெற்றியை நாம் உருவாக்க முடியாது.
'டைமே இல்லை... இருந்திருந்தா நல்லா எக்ஸர்சைஸ் பண்ணி உடம்பைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பேன்' என பலரும் சொல்வதுண்டு. உடற்பயிற்சி செய்யாத சோம்பேறித் தனத்தையும், ஆரோக்கியமான உணவைச் சாப்பிடாத கட்டுப்பாடற்ற மனதையும் தப்ப வைப்பதற்காகச் சொல்லப்படும் பொய்- `டைம் இல்லை'.
அந்த சிந்தனையை மாற்றி, 'நாம்தான் அதன் காரணம்' என யோசித்துப் பாருங்களேன்! அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது, வேலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, நடப்பது, ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவது... என செயல்பாடுகளுக்கான வாய்ப்புகள் தோன்றும்.
'நானே பிரச்சினை' என புரிந்து கொள்பவர்கள் 'என்னால்தான் தீர்வு' என்பதையும் அறிந்து கொள்வார்கள்.
தோல்விகளில் மட்டுமல்ல, வெற்றிகளிலும் இப்படியே நடந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஒரு வெற்றி வந்தால் அதற்குக் காரணமும் நீங்களே என உங்கள் மனதைப் பாராட்டுங்கள். உங்களுக்கு மேலும் மேலும் வெற்றிகள் வரும். வெற்றிகளில் கர்வம் கொள்ளாமல் இருக்க வேண்டியது முக்கியம். அதே நேரம் வெற்றிக்குக் காரணமான உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டியதும் ரொம்ப ரொம்ப முக்கியம்.
உங்கள் செயல்களுக்கும், முடிவுகளுக்கும் நீங்களே பொறுப்பெடுத்துக் கொள்வதென்பது நீங்கள் உங்களுக்கு எஜமானன் என்பதைப் போல. 'என்னால் முடியும்' எனும் தன்னம்பிக்கையின் வேர் அது. அது உங்களுக்கு நீங்களே தரும் சுதந்திரம். உங்களுக்கு நீங்களே சூட்டிக் கொள்ளும் கிரீடம்.
'என் செயல்களுக்கு நான் காரணம் அல்ல' என்பவர்கள் அடிமை மனநிலையினர். எப்போதுமே ஏதோ ஒன்றின் அடிமையாய் இருப்பதிலேயே பழகிப் போகின்ற மனநிலைமை. இவர்கள் எக்காலத்திலும் உயரிய இருக்கைகளுக்கு வந்தமர முடியாது.
சிலர் என்ன சொல்வார்கள் தெரியுமா? 'நானும் காரணம்தான், ஆனா நானே முழுக் காரணமல்ல'. இது நம்முடைய வெற்றி தோல்விக்கு இன்னொருவனையும் கூட இழுத்துக் கொள்வது.
'இருட்டில் நடக்கப் பயமாய் இருந்தால் கூடவே ஒரு நண்பனையும் இழுத்துக் கொண்டு போவது போல'. இது தன்னம்பிக்கைக் குறைவின் வெளிப்பாடு, அச்சத்தின் வெளிப்பாடு, தோற்றுப் போய்விடுவோமோ எனும் தடுமாற்றத்தின் விளைவு.
நீங்களே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம். இதுவரை நீங்கள் அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்காவிட்டால், இதுவே தருணம். இப்போது அந்த சிந்தனைக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நுழையுங்கள்.
'உங்கள் தோல்விகளுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அவற்றை அரவணையுங்கள். உங்கள் தோல்விகளுக்கான பொறுப்பையும் நீங்களே எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு வெற்றி சர்வ நிச்சயம்' என்கிறார் ரால்ப் மார்ஸ்டன்.
தோல்விகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போதுதான் உங்களுடைய மன அழுத்தமும் குறையும். வெற்றியை நோக்கிப் பயணிக்க உங்களுக்கு ஊக்கமும் கிடைக்கும். இல்லையேல் `யாரைக் குறை சொல்லலாம்' என தேடுவதிலேயே ஒட்டு மொத்த சக்தியும் வீணாகிவிடும்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், வெற்றிகளில் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள், தோல்விகளில்தான் கற்றுக் கொள்வீர்கள்.
கூடைப்பந்து விளையாட்டுப் பிரியர்களுக்கெல்லாம் பிரமிப்பைத் தரும் பெயர் மைக்கேல் ஜோர்டன். அவர் தனது வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'இருபத்து ஆறு விளையாட்டுகளில் என்னிடம் தரப்பட்ட கடைசி வாய்ப்பில் தோல்வியடைந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் தோற்றுக் கொண்டிருந்ததால் தான் என்னால் வெற்றியாளனாய் மாற முடிந்தது. காரணம் எனது தோல்விக்கான காரணம் நான் என்பதை அறிந்திருக்கிறேன்' என்கிறார்.
தங்கள் செயலுக்குத் தாங்களே பொறுப்பேற்பவர்கள் பாசிடிவ் மனநிலையினர். வாழ்க்கையை எதிர்மறையாய் அணுகுபவர்களே அடுத்தவர்களை நோக்கிக் குறை சொல்கிறார்கள் என்கிறது தெற்கு கலிபோர்னியாவில் நடந்த ஆராய்ச்சி ஒன்று.
அடுத்தவர்கள் மேல் பழி போட்டு ஹாயாக பொய்களின் மேல் படுத்துறங்குபவர்களின் பட்டியலில் மேலதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் இடம் உண்டு. தங்களுடைய 'இமேஜ்' போய் விடக் கூடாது என்பதற்காக பழியைத் தூக்கி அடுத்தவர் தோளில் போட்டு விடுகிறார்கள்.
ஆனால் தைரியமான தலைவர்களோ தங்களுடைய தவறுக்கு தாங்களே பொறுப்பேற்று அதை நிவர்த்தி செய்யும் வழியை யோசிப்பார்கள். பிறர் மேல் பழி போடாத தலைவர்களைக் கொண்ட நிறுவனம் உயரங்களைச் சந்திக்கும் என்கிறது இந்த ஆய்வு முடிவு.
ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், 'இப்படித் தான் நீ சிந்திக்க வேண்டும்', 'உன்னுடைய உணர்வுகள் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்றெல்லாம் யாராச்சும் உங்களைக் கட்டாயப்படுத்த முடியுமா?
உங்களுடைய சிந்தனைகளும், உணர்வுகளும் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் போது, செயல்கள் மட்டும் உங்களிடம் இல்லை என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?
எந்த ஒரு செயலையும் நமது மனம்தான் தீர்மானிக்கிறது. சிரிக்க வேண்டுமா, அழ வேண்டுமா என்பதைக் கூட நாமேதான் தீர்மானிக்கிறோம். ஒருவரை திட்ட வேண்டுமா, பாராட்ட வேண்டுமா என்பதையும் நாமேதான் தீர்மானிக்கிறோம்.
காலையில் அவசரமாக காரோட்டிக் கொண்டிருக்கும் போது எதிரே ஒருவன் வந்தால் திட்டுகிறோம். `டிராபிக்கில் சட்டென குறுக்கே வந்ததால் திட்டிட்டேன்' என பழியைத் தூக்கி வெளியே போடுகிறோம்.
எப்போதாவது 'என்னோட கோபத்தால் திட்டிட்டேன்' என்று சொன்னதுண்டா?
சின்னச் சின்ன செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதுதானே பெரிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதன் முதல் படி?
உங்களுடைய திறமைகளின் மீது நீங்கள் நம்பிக்கை வைக்காதபோது தான் அடுத்தவர் களையோ, விதியையோ, சூழலையோ குற்றம் சுமத்த முயல்கிறீர்கள். 'தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்காதவர்கள் மரியாதை குறைவானவர்களாகவும், அதிகம் கற்க முடியாதவர்களாகவும், பிறரை போல திறமையாக செயல்படாதவர்களாகவும் மாறிவிடுவார்கள்' என்கிறது ஆராய்ச்சி ஒன்று.
பயத்தைப் புறந்தள்ளி, தன்னம்பிக்கையைக் கையில் எடுத்து, தன்னையே நேசித்து, தாழ்மையைக் கைக்கொண்டு, தனது செயல்களுக்கான பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது வெற்றிக்கான ரகசியம்.
உனது செயல்களுக்கு நீயே பொறுப்பு
உணரும் பொழுதில் வெற்றிகள் உனக்கு...
தேங்காயின் மருத்துவக் குணங்கள்...
தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.
அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.
தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப் பட்டுள்ளன.
தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள்.
தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல. மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம்.
இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை.
விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள். தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் : ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை.
தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன? புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப் படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
தைலங்கள்: தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.
எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும்.
தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.
வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.
தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன.
இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.
வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.
தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.
ஆண்மைப் பெருக்கி : முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.
குழந்தை சிவப்பு நிறமாக: குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.
இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர்.
சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம். இளநீர் மிக மிகச் சுத்தமானது.
இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.
சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்...
முடி உதிர்தல், இளநரை சரியாக....
கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா.... முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.
கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.
மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா... கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்...
ஹனிமூன்...
திருமணமான ஜோடிகளுக்கு மிகப்பெரும் இன்ப நிகழ்வாக அமைவது ஹனிமூன் என்கிற தேன்நிலவு தான்.
தம்பதிகள் உல்லாசமாக சில மாதங்களை கழிப்பதே ஹனிமூன்.
ஆரம்ப காலங்களில் ஹனிமூன் கிடையாது. ஹனிமன்த் தான் இருந்துள்ளது.
அதுதான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர்.
டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிகளுக்கு தேனை முப்பது நாட்கள் கொடுப்பார்களாம்.
இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர்.
எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும், திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது.
புதுமண தம்பதிகள் ஒரே கிண்ணத்தில் இருந்து தேன் பருகும் வழக்கம் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உண்டு.
மணமகள் வீட்டு கதவில் தேனை தெளிப்பது கிரேக்க விவசாயிகளின் வழக்கம்.
ருமேனிய மக்கள் புதுமண பெண்ணின் முகத்திலும், உடலிலும் தேனை தடவிக்கொண்டு முதலிரவை கொண்டாடுவார்கள்.
புகுந்தவீட்டில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கு ஒரு கோப்பை தேனை பருக கொடுப்பது துருக்கியர் வழக்கம்.
போலந்து நாட்டில் மணப்பெண்ணின் உதட்டில் தேன் தடவி, அதை மணமகனை சுவைக்க வைப்பார்கள்.
பலகாரங்களை தேனில் தொட்டு மணமக்கள் சாப்பிடுவது பால்கன் நாடுகளில் உள்ளமரபு.
ஒரு கோப்பையில் தேனை வைத்துக் கொண்டு மணமகனும் மணமகளும் மாறிமாறி பருகுவது சீனர்கள் வழக்கம்.
இப்படி புதுப்பெண், மாப்பிள்ளைக்கு பல தரப்பட்ட பழக்கங்களை தேனைக் கொண்டே உருவாக்கியுள்ளார்கள்.
எல்லா நாடுகளிலுமே திருமணமான தம்பதிகளுக்கு தேனை கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.
அதனால் தான், புதுமண தம்பதிகள் செல்லும் முதல் சுற்றுலாவிற்கு ஹனிமூன் என்று தேனின் பெயரையே வைத்து விட்டார்கள்...
காவிரிக் கலவரத்தை தட்டிக்கேட்ட அண்ணன் வீரப்பனார்...
1991 ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி.
வீரப்பனார் தமது தம்பி அர்ச்சுணனிடம் காவிரியைக் கடக்க பரிசல் ஏற்பாடு செய்யுமாறு கூறியிருந்தார்.
இரண்டு நாட்களாகியும் அர்ச்சுணன் அந்த ஏற்பாட்டைச் செய்யவில்லை.
வீரப்பன் தமது தம்பியிடம் இது பற்றி விசாரித்தார்.
அர்ச்சுணன் தயங்கித் தயங்கிக் கூறினார்.
அண்ணே காவிரியை தமிழ்நாட்டுக்குத் தெறந்துவிட கர்நாடகா மறுத்துட்டதாம்.
கர்நாடகாவுல இருக்குற தமிழ்க் கிராமத்துலல்லாம் ஒரே கலவரமாம்.
நம்ம மக்களோட சொத்துபத்த கொள்ள அடிச்சுட்டு விரட்டுதானுவ.
அதான் பரிசலுக்குத் தட்டுப்பாடு.
வீரப்பன் குதித்தெழுந்தார்..
மடையா இத ஏன் நீ மொதல்லயே சொல்லல? என்று கடிந்து கொண்டே விருட்டென்று தன் துப்பாக்கியை தோளில் மாட்டிக் கொண்டார் அவருடன் இருந்த தளபதிகள் தத்தமது துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டனர்.
அப்போது அர்ச்சுணன் அண்ணே அண்ணிக்கு பிரசவமாகுற நேரம்.
நீங்க இங்க இருக்குறது ரொம்ப முக்கியம்.
சேதி தெரிஞ்சா நீ புறப்புட்டுருவனு தான் சொல்லாம இருந்தேன் என்றார்.
அதற்கு வீரப்பன் சரி நீ இங்கயே இரு. மத்தவங்க என்னோட வாங்க என்று கூறிக்கொண்டே வேகமாக ஆற்றங்கரைக்கு ஓடினார்.
அவரது தளபதிகளும் பின்தொடர்ந்து ஓடினர்.
ஆற்றங்கரைக்கு வீரப்பன் வந்ததும் எதிரில் தமிழ் மக்கள் தமது வீடு நிலமெல்லாம் விட்டுவிட்டு கையில் கிடைத்ததை அள்ளிக் கொண்டு பரிசலில் கண்ணீர் சிந்திய முகத்தோடு கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
அங்கு ஓடோடிச் சென்ற வீரப்பன் அவர்களிடம் என்ன இது? எப்படி ஆச்சு? என்று வினவினார்.
அந்த மக்கள் காவிரில தண்ணி தெறந்து விடனும் கேட்டதுக்கு. நம்ம பங்கு தண்ணீரையும் குடுக்காம இந்தக் கன்னடனுங்க, இங்க காலங்காலமா வாழுற எங்கள எல்லாத்தையும் புடுங்கிட்டு வெரட்டுறானுவ.
தட்டிக் கேக்க யாருமில்ல என்றார் ஒருவர்.
இன்னொருவர் கன்னட வனத்துறையும் போலீசும் இதுக்கு உடந்தை.
பெங்களூர்ல கலவரம் நடந்து நம்ம மக்கள கொன்னுட்டானுவ.
மஞ்சள் கயிறு தாலிய வச்சு அடையாளம் கண்டுபிடிக்கிறானுக.
அடி, உதை, கொள்ளை தான்.
காலங்காலமா இதுதான் நடக்குது என்றார் இன்னொரு தமிழர்.
வீரப்பன் ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டார்...
யார் இத தூண்டிவிடுறது? என்று மீசையை முறுக்கியபடி கேட்டார்..
ஒரு கட்சியா ஒரு டிபார்ட்மென்டா எல்லாரும் சேந்துதான் செய்றானுவ.
மத்த மாநிலத்தோடயும் தண்ணி பிரச்சன இருக்கு.
ஆனா, தமிழன்னா மட்டும் அடிக்கிறானுக. கேக்க நாதியில்ல பாரு.
இதுல மட்டும் ஒத்துமையா இருக்கானுக என்றார் ஒரு தமிழர்.
ஏன் இல்லை இந்த வீரப்பன் இருக்கான் என்று உறுமியபடி பரிசலில் ஏறி தமது தளபதிகளுடன் அக்கரைக்குப் போனார்.
அக்கரையில் தமிழரை விரட்டி அவர்கள் வெளியேறுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கன்னடவர், ஆற்றங்கரையில் 20, 25 பேர் வீரப்பன் தலைமையில் கண்களில் கொலை வெறியுடன் பரிசலில் இருந்து துப்பாக்கிகளைப் பிடித்தபடி இறங்குவதைப் பார்தததுதான் தாமதம், காலியான அந்த தமிழ்ச் சிற்றூரில் வீடுகளுக்குள் கன்னடர்கள் புகுந்து ஒளிந்து கொண்டனர்.
மற்றவர் தலைதெறிக்க ஓடினர்.
தமிழர் வெளியேறக் கெடுவிதித்த கர்நாடக வனத்துறை காணாமல் போய்விட்டிருந்தது.
ஊருக்குள் நுழைந்த வீரப்பனார்
எவன்டா தமிழன் மேல கைய வெச்சது.
ஆம்பளனா வெளிய வாங்கடா பாப்போம்.
தமிழனுக்கு யாருமில்லனு நெனச்சீங்களா?
இனிமே ஒரு தமிழனத் தொட்டீங்க தொலச்சிருவேன். என்று முழங்கியபடி தமது ஆட்களை வீதிகளில் தேடச் சொன்னார்.
அப்போது அங்கே சில கன்னடர் வர அவர்கள் வீரப்பனிடம் கொண்டு வரப்பட்டனர்.
உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்டா?என்று வீரப்பன் மீசையை முறுக்க..
வீரப்பனைப் பார்த்து நடுநடுங்கிய அவர்கள்..
ஐயா, நாங்க ஒண்ணும் பண்ணல தமிழர் எங்க கூடப் பிறந்தவங்க மாதிரி என்று குழறியபடி சொன்னார்கள்.
ஊருக்கெல்லாம் சொல்லுங்க..
இந்த வீரப்பன் இருக்குற வர எவனாவது எங்க மக்களத் தொட்டீங்க தொலஞ்சீங்க என்று எச்சரித்து விட்டு அந்த சிற்றூரிலிருந்து பரிசல் ஏறி மறுகரைக்கு வந்தார்..
ஆற்றங்கரையில் நின்ற அர்ச்சுணன்.. அண்ணே உங்களுக்கு ரெண்டாவது பெண்கொழந்த பிறந்திருக்குவஎன்று கூறினார்.
அதன் பிறகு அவர் தம் மனைவியை பார்க்கக் காட்டுக்குள் சென்றார்.
இது சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் காவிரிப் பிரச்சனை தீவிரமடைந்திருந்தது.
அப்போதே வீரப்பனாருக்குத் தெரிந்திருந்தால் கன்னடவருக்குத் தக்கப் பாடம் புகட்டியிருப்பார்.
ஆனால், தமிழர் அனைவரும் கிட்டத்தட்ட வெளியேறிய பிறகே வீரப்பனாருக்கு அது தெரியவந்தது.
தவிரவும் வீரப்பனார் அப்போது தமிழ்ப் போராளியாக மாறியிருக்கவும் இல்லை..
ஒரு கடத்தல்காரனாகத் தான் இருந்தார்..
ஆனாலும் தமது இனத்தின் மேலிருந்த பற்றினால் தமது மனைவி அடர்ந்த காட்டில் பிள்ளைபேறு வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போதும் தமது மக்களைக் காக்கப் பாய்ந்தோடினார்.
வீரப்பனார் தமிழருக்காக முதன் முதலில் வெளிப்படையாகக் குரல் கொடுத்த நிகழ்வு இதுவே ஆகும்...
தற்போது வீரப்பனார் இல்லை.. ஆகையால் காவிரி பிரச்சனை மீண்டும் வந்தது.. இதற்கும் இந்த திருட்டு திராவிட சதி தான் காரணம்...
அன்று முதல் இன்று வரை அரசியலில் தலைவனாவது எப்படி? இது தான் அந்த இரகசியம்...
நீ ஒரு தனிமனிதன்...
உனக்கு ஆளும் விருப்பம் வந்துவிட்டது.
நீ ஆள மக்கள் வேண்டும்.
குறிப்பிட்ட மக்களைத் தேர்ந்தெடு.
அவர்கள் மதம்,இனம்,சாதி, ஊர், வரலாறு, பண்பாடு என அனைத்தையும் அலசு.
இதில் எது அவர்களிடம் நன்கு வேறூன்றியிருக்கிறது என்று ஆராய்.
அதைக் கையிலெடு.
அவ்வுணர்வுக்கு எதிரான பிரச்சனைகள், தடைகளை எதிர்த்துப் போராடி அவ்வுணர்வை மேலும் தூண்டு.
உன் பின்னால் ஒரு கூட்டம் வரும்.
உன் வலிமை கூடும்.
அவ்வுணர்வுள்ள மக்களுக்காக ஒருவன் போராடி மடிந்திருப்பான் அவனை அறிந்துகொள்.
அவனின் வாரிசாக மாறு.
உன் மீது விமர்சனங்கள் வரும்.
கருத்தியல் ரீதியான விமர்சனங்களை உன் தலைவனின் பிம்பத்தால் உடை.
நடைமுறை எதிர்ப்புகளை உன் வலிமையால் உடை.
பாதிவாழ்நாள் கழிந்ததும் கிடைத்த நாற்காலியில் அமர்.
கடந்த காலத்தைச் சொல்லியே சுகமாக வாழு.
பணம், புகழும், இல்லமும் தளைக்க நல்லசாவு பெறு.
பத்து தலைமுறைகளுக்கு சொத்தும்.
ஐந்து தலைமுறைக்கு உன் பெயரும் எஞ்சியிருக்கும்...
புளியம்பழ மருத்துவம்...
புளி இரத்தத்தைச் சுண்ட வைக்கும் என்பது ஒரு மூட நம்பிக்கை. இரத்தத்தை முறிக்கக் கூடிய சத்து ஏதும் புளியில் இல்லை.
குமட்டல், வாந்தி ஏற்பட்டால் சிறிதளவு புளியை வாயில் போட்டு நீரை விழுங்கினால் வாந்தி நிற்கும்.
அடிபட்டு இரத்தக்கட்டு ஏற்பட்டால் புளியும், உப்பும் கலந்து அரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து தாங்கக்கூடிய சூட்டுடன் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு கரைந்துவிடும்.
எகிர் வீக்கம், பல் வலி இவற்றிற்கு சிறிதளவு புளியும் அதே அளவு உப்பும் கலந்து வலியுள்ள இடத்தில் வைத்திருந்து 10 நிமிடம் கழித்து வாயில் வைத்திருந்த புளியை துப்பி வெந்நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி மூன்று வேளையும் செய்தால் பல் வலி குறையும். அந்த உமிழ் நீரை விழுங்கக்கூடாது...
ஓம் = அ+உ+ம்...
ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே..
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.
-ஆசான் திருமூலர்..
அருவுருவ ஒலியொளி (நாதசுடர்) ஓம்..
ஓம் = அ+உ+ம்
இந்தப் பிரபஞ்சமே "ஓம்" என்ற அருவுருவ ஒலி(அருவம் > நாதம்), ஒளி(உருவம் > சுடர்/ சோதி)யிலேயே உருவாகி, அந்த ஓங்காரத்திலேயே ஆதி தொடங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த அளவற்ற ஓங்கார நாதத்தைத் தம்முள் தட்டி எழுப்பிக் கேட்டும், அடிமுடி காணமுடியாத ஓங்காரப் பிளம்பாகியச் சுடர்/ சோதியில் இரண்டறக் கலந்தும், பேரின்பமாகிய பேரறிவெனப்படும் பேரருள் பெற்றவரே சித்தர்கள்.
"ஓம்" அதன் ஆற்றல்கள் அளவிட முடியாதளவிற்குப் பல்வேறு பேதங்களாக இருக்கின்றது. அதன் பல்வேறு ஆற்றல்களையே சித்தர்கள் பல்வேறு இறைநிலைகளாக (பல்வேறு கடவுளராக) உருவகித்து உலக மக்களுக்கு விளக்கினர். அந்த ஓங்காரமாகிய அருவுருவ நாதசோதியுடன் இரண்டறக் கலத்தலே ஈடிணையற்ற முத்திகளும், சித்திகளும் பெற்ற சிவநிலை (இறைநிலை) யாகும்.
ஓம் அழிவற்றது, அளவற்ற ஆற்றல்கள் கொண்டது. அதையடைந்த சித்தர்களும் அழிவற்றவர்கள், அளவற்ற ஆற்றல்கள் கொண்டவர்கள். அந்த அழிவற்ற நிலையான இறைநிலையையே சாகக்கல்வியாகவும் மற்றும் மரணமில்லாப் பெருவாழ்வாகவும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
சித்தர்கள் தாம் பல்கோடி யுகங்கள் தாண்டியும் வாழ்வதாக தங்கள் பாடலில் குறிப்பிடுவதும் இதன் நிமித்தமே.
தினமும் "ஓம்" என்போம். ஆக்கமும், ஊக்கமும், ஆற்றலும் பெறுவோம்...
Subscribe to:
Posts (Atom)