21/09/2017

பாஜக மோடியின் மனைவி ஜிவனம்சம் கேட்டு போராடும் செய்தியை.. NDTV யை தவிர எந்த சேனலுக்கும் ஒளிபரப்பு செய்ய முதுகெலும்பு இல்லை...


விசிக திருமா விற்கு.. மாநில சுயாட்சி என்றால் என்னவென்று முதலில் தெரியுமா.?


விசிக தொடங்கி இதுவரை தமிழராக ஒரு முறை கூட தனித்து நின்று தேர்தலை சந்தித்தது இல்லை...

திராவிடத்தின் காலையே நக்கி பிழைப்பு நடத்தும் விசிக..

மாநில சுயாட்சி பற்றி பேசுவதே அரசியல் வியாபாரம் தான்..

அனைத்து மாநிலமும் அந்தந்த மொழிக்காரன் ஆளும் போது...

இங்கு தமிழனாக தானும் ஆள நினைக்காமல்..

தமிழனாக தமிழ் தேசியக் கொள்ளை கொண்டவர்களையும் இன வெறியர்கள் என்று சொல்லிக் கொண்டும்...

திராவிடம் என்ற பேரில் தெலுங்கரை ஆள வைத்து தமிழனை அடிமையாக வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்று வேலையை மட்டுமே செய்துக் கொண்டிருப்பதும்.. எல்லாமே மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுவது விசிக வும் தான்...

அதை போலவே.. தமிழ் தேசியத்தை உருவாக்கி தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும் என்று... போராடிக் கொண்டிருக்கும்.. பாமக மற்றும் நாதக வை.. எதிர்த்து திராவிடத்துடன் கூட்டு வைத்து அழிக்க நினைக்கும் இந்த விசிக திருமா...

திராவிடம் என்ற பேரில் தெலுங்கரை ஆள வைக்க நினைக்கும் விசிக திருமா.. மாநில சுயாட்சி பற்றி பேசுவதே அரசியல் வியாபாரம் மட்டுமே...

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை...

         
கிரிக்கெட்டில் சிறந்த சேவையாற்றியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியை இந்திய கிரிக்கெட் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.

இந்தியாவின்  மூன்றாவது  மிக உயர்ந்த குடிமகன் விருது பத்ம பூஷண்.

கிரிக்கெட்டில் சிறந்த சேவையாற்றியதற்காக பத்மபூஷண்  விருதுக்காக  இந்திய கிரிக்கெட் ஆணையம் இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியை பரிந்துரை செய்து உள்ளது.

இந்த ஆண்டு பத்ம விருதுக்கு டோனியின் பெயரை மட்டுமே பரிந்துரைத்து அனுப்பி உள்ளதாக  பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ஒருவரை அனைவராலும் ஒரு மனதாக பரிந்துரைத்து உள்ளனர்.

அவர் தலைமையில் இரண்டு உலக கோப்பைகளை இந்தியா வென்று உள்ளது. 2011 ஒருநாள் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை 2007)   90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.  10 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார். அவரை விட சிறந்தவர் யாரும் இல்லை. வேறு யாரை பரிந்துரைத்து இருக்க முடியும் என பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

36 வயதான டோனி  302 ஒருநாள் போட்டியில்  விளையாடி 9737 ரன்கள் எடுத்துள்ளார்.  90 டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்கள் எடுத்துள்ளார். 20 ஓவர்  சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள டோனி  1212 ரன்களை எடுத்து உள்ளார்.

டெஸ்டில் 6 சதங்களும்  ஒருநாள் போட்டிகளில் 10 சதங்களும் அடித்து உள்ளார். 100 சர்வதேச அரை சதங்கள் எடுத்து உள்ளார். விக்கெட் கீப்பராக  584 கேட்சகளை பிடித்து உள்ளார்( டெஸ்ட் போட்டிகளில் 256, ஒருநாள் போடிகளில் 285,  20 ஓவர் போட்டிகளில் 43)  மொத்தம் 163 ஸ்டெம்பிங்களை செய்து உள்ளார்.

அர்ஜூனா, ராஜீவ் காந்த் கெல் ரத்னா மற்றும் பத்ம ஸ்ரீ விருதினை ஏற்கனவே டோனி பெற்றுள்ளார். பத்ம பூஷண் விருது  டோனிக்கு  வழங்கப்பட்டால்,  இந்த விருது பெறும்  11 வது இந்திய கிரிக்கெட் வீரர் இவர்  ஆவார்.

சச்சின் தெண்டுல்கர், கபில்தேவ், சுனில் காவாஸ்கர், ராகுல் திராவிட்,சாந்து போர்டே, பேராசிரியர் டி.பி. டீஹோத்ர், கேல் சி.கே நயுடு , லலா அமர்நாத்
13 ம முதல்  தர  போட்டிகளில் விளையாடிய  ராஜா பிலிடேந்திர சிங்,
விஜய ஆனந்த், விஜயங்கிராம் மகாராஜா இவர்  1936 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவின் கேப்டனாக இருந்தவர் ஆகியோர் பத்ம பூஷண் விருதைப் பெற்றுள்ளனர்...

சித்தர் ஆவது எப்படி? சித்தர் என்பவர் யார் - 1...


இந்த உலகில் சித்தர்கள் இருக்கின்றார்களா ? என்ற கேள்வி பல வருடங்களாக சாதாரண மனிதர்களால் கேட்கப் பட்டு வருகின்றது....

சித்தர்களை பார்க்கத் துடிக்கின்ற மனிதர்கள் பலர் இன்னும் இருக்கின்றார்கள்.... சிலர் தாம் பார்த்ததாக சொன்னார்களே தவிர யாரும் யாருக்கும் காட்டியதாக தெரியவில்லை...

மனிதகுலம் தம் தம் காலங்களில் தோன்றிய சில மாமனிதர்களை சித்தர்களாக, இல்லை இல்லை சித்தர்கள் போல சித்தரித்தார்களே தவிர அதில் உண்மை துளியும் இல்லை..

இறைவன் என்ற ஒரு உயர்நிலை இருக்க சித்தர்களை இறைவனை விட உயர்வாக போற்றும் போற்றிய மர்மம் என்ன ?

இறைவனால் சாதிக்காததை அப்படி என்ன சித்தர்கள் சாதித்தார்கள் ?

சித்தர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்றும் நம்பும் உலகம் ஒருவரையேனும் இன்று பார்க்க முடியவில்லையே அது ஏன் ?

இன்று என்ன உண்மையோ அப்படி தானே முன்னும் இருந்து இருக்க வேண்டும்.. அப்படியென்றால் சித்தர்களை இதுவரை எவரும் சரித்திரத்திலோ அல்லது எந்த தலைமுறையிலோ காண வில்லை என்ற பொருளாகி விடுமா ?

இது போன்ற கேள்விகள் எழுகின்ற போது பலரது புருவங்கள் உயர்த்தப் படலாம் என்பதில் சந்தேகம் இல்லை.. மன கசப்பும் அவர்களுடைய நம்பிக்கை உடையும் அபாயம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..

சற்று பொறுமை இழக்காமல், சித்தர் ஆவது எப்படி என்ற தொடர் பதிவினை முழுமையாக படிக்குமாறு வேண்டுக் கொள்கின்றேன்... முழுவதுமாக படித்தால் மட்டுமே உள்ளதை உள்ளவாறு அறிந்து கொண்டு சித்தர் பாதையில் நேர் வழியில் பயணப்பட முடியும்...

சித்தர் ஆவது எப்படி என்ற தலைப்பில் வரும் பல பகுதிகளில் பல உண்மைகள் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியோடு தொடர்பு கொண்டமையால், படித்த பதிவின் நினைவு கொண்டால் மட்டுமே தொடர்ந்து வரும் பகுதியை சரியாக புரிந்து கொள்ள முடியும்..

ஆகவே ஒவ்வொரு பதிவினையும் உற்று கவனித்து படிக்குமாறும், படித்ததை நினைவில் கொள்ளுமாறும் வேண்டுகிறேன்....

நம் பஞ்சபூதங்களிலேயே அதிகம் மாற்ற அடையக் கூடியதும், அதனால் நம் வாழ்வியலை பல மாற்றங்களை ஆக்கக் கூடியதும் ஆனது நீர் தன்மை உடைய சித்தம் என்ற பூதம்..

இந்த சித்தம் என்ற பூதத்தை முறை படுத்தி மண், ஆகாயத்தை போல் ஸ்திர தன்மை பெற்றால் மட்டுமே நித்திய நிலையாகிய மரணமில்லா பெரு வாழ்வு அடைய முடியும்..

மாறும் போக்கு உடைய சித்தம் என்ற பூதம் உறுதி தன்மை அடைய வாழும் முறையை மேற் கொண்டவர்கள் தான் சித்தர்கள்..

அதாவது சித்தத்தை கையாளுகிறவர்கள் தான் சித்தர்கள்...

மாற்றம் காணும் சித்தம் உறுதி காணும் போது, முன் ஜென்மங்களில் சேர்த்து வைத்த ஆற்றல்கள் உள் வாங்கும் திறமை அதிகரிக்கப் படுவதால் அளவற்ற ஆற்றலை அடையும் பேறு கிடைக்கிறது... அதனால் மனிதன் மாமனிதன் ஆகிறான்..

இந்த சித்தர்கள் விசயத்தில் மனிதர்கள் செய்யும் பெரிய தவறு என்ன ?

சித்தர்கள் அடைந்ததாக கருதப் படும் பெரும் செயல்களால் ஈர்க்கப் பட்டு, சித்தர்கள் பால் மிகுந்த ஈர்ப்பு உடையவர்களாக இருக்கிறார்கள்..

இன்றைய திரைபடங்களில் மிக பெரிய செயல்களை செய்வது போல் நடித்துக் கொண்டு இருப்பவர்களையே தெய்வமாக கருதி அவர்களின் பெரிய பேனர் படங்களுக்கு குடம் குடமாக பால் அபிசேகம் செய்யும் காலம் இது... இது முறையற்று செயல் படும் சித்தத்தால் உருவானது..

மாயா நிலையை அள்ளி தரும் இந்த முறையற்ற சித்தத்தை சீர் செய்பவனே சித்தன்..

மாயா நிலை என்ற மயக்க நிலைவிட்டு தெளிவு நிலை என்னும் ஞான நிலை பெற வேண்டும் என்றால் முறையற்ற சித்தத்தை சீர் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதே அன்றி அப்படி சித்தத்தை சீர் செய்து பெரும் ஆற்றலை பெற்ற சித்தர்களின் பெருமை பேசி பேசி சித்தத்தை சீர் செய்யும் செயலை விட்டு விலகி செல்லும் தந்திரத்தை இந்த உலகம் செய்து கொண்டு இருப்பதை பின் பற்றக்கூடாது ..

உலகின் செயல் பாட்டை விட்டு விலகி உண்மை நிலைக்கு திரும்ப வேண்டும்..

உலகத்தார் ஏன் அப்படி விலகி செல்ல விரும்புகிறார்கள் என்றால் அவர்களிடம் ஆற்றல் இல்லாத தன்மையால் உருவான சோம்பல் என்ற பலவீனமே..

எல்லாவற்றிக்கும் ஆற்றல் பெறுவதே முதல் ஆதாரமாக உள்ளது..

அதுவே எல்லாவற்றிக்கும் மூலமாக இருப்பதால் ஆற்றல் பெறுவதே மூலாதாரம் அதாவது மூல ஆதாரம்..

இதனை தேகத்தில் ஒரு இடத்தை காட்டி குறிக்கோளை விட்டு அப்பால் நகர்ந்து செல்வோரும் உண்டு...

எப்படியோ உண்மையான ஆற்றலை பெறும் வழியை விட்டு தப்பி செல்வதே மனித இயல்பாக உள்ளது..

இப்படி தப்பிக்காமல் பொறுப்பை ஏற்று உண்மையை நோக்கி பயணப் படுவதுதான் சித்தர் வழி..

சித்தத்தை சீர் செய்யும் சித்தர் வழியையும் சித்தராகும் நுணுக்கங்களையும் பார்ப்போமாக...

ஆற்றல் பெருகுவதற்கு சித்தத்தின் பங்கு மற்ற பூதங்களை காட்டிலும் மிக மிக அதிகம்..

எண்ண ஆதிக்கங்களை தந்து நம் மனதில் உள்ள பிரபஞ்ச ஆற்றலின் கனலை வெளிச்சமாக விரையமாக்கி, நம்மை செயலற்ற சவநிலைக்கு அழைத்துச் செல்லும் சித்தத்தை சீர் செய்யாமல் சித்தராக முடியாது..

அதற்கான உளவுகளை பகுதி பகுதியாக பார்ப்போமாக...

இன்னுமா நம்ம சனம் இந்த ஐக்கிய நாடுகள் சபையை (ஐ.நா) நம்பிட்டு இருக்குது...


மூன்றாம் உலகநாடுகளின் சனத்தொகையை குறைக்க  Agenda 21 என்பதை உருவாக்கி அதில் சிறு திருத்தங்களை செய்து "2030 Agenda" என பெயரிட்டு  அதில் அனைத்து நாடுகளின் தலைவர்களும் கையொப்பம் இட்டாச்சு.

2030 க்குள் உலக சனத்தொகையை அரைவாசியாக குறைக்கும் பணிகள் இனிதே நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் நம்மோட சனம்  ஐ.நா போய் இறந்த நம் உறவுகளுக்காக நீதி கேட்கின்றனர்.

கசாப்புக்கடைக்காரனிடம் போய் செத்த கிடாய்க்கு நீதி வேண்டி நிற்கின்றது நம் தமிழினம்...

ஆந்திராவில் தமிழ் சட்டமன்ற தொகுதிகள்...


ஆந்திராவில் தெலுங்கரை விட தமிழர்கள் கூடுதலாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்.

கருப்பு வெளிக்கோடு கொண்டு வரையப்பட்டவை..

1) குப்பம்
2) பல்லவநேரி
3) பூதாளப்பட்டு
4) சித்தூர்
5) கங்காதரநல்லூர்
6) நகரி
7) சத்தியவேடு
8) திருக்காளகத்தி
9) திருப்பதி
10) சந்திரகிரி
11) புங்கனூர்
12) வேங்கடகிரி
13) உதயகிரி
14) சூலூர்பேட்டை
15) கூடூர்
16) சர்வபள்ளி
17) நெல்லூர்.

மேலும் 13 தொகுதிகளில் தமிழர்கள் ஏறத்தாழ தெலுங்கு பேசுவோராக மாறிவிட்டனர்.

மஞ்சள் நிறம் மட்டும் கொண்டு குறிக்கப்பட்டவை..

1) கோவூர்
2) மதனபள்ளி
3) பில்லேறு
4) தம்பலாப்பள்ளி
5) தர்மாவரம்
6) கதிரி
7) பொதட்டூர்
8) புலிவெண்டளை
9) கொடூர்
10) நெல்லூர் ஊரகம்
11) ஆத்மாகூர்
12) கவாலி
13) சிங்கனமலை

பறிபோனது மண் மட்டும் அல்ல. அதில் வாழும் மக்களும் அவர்களின் வாக்குகளும் அதன் மூலம் கிடைக்கும் அரசியல் அதிகாரமும் தான்...

டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள முன்னாள் ஒரிசா உயர்நீதிமன்ற நீதிபதி குதுசி வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு..


ஊழல் குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது...

திருமுருகன் காந்தியுடன் கைதாகி இருக்கும் டைசன் யார் தெரியுமா...


ஜெயலலிதாவால் கைது செய்யப்பட்ட பிரபல லாட்டரி சீட்  வியாபாரி மார்டினின் மகன்தான் இந்த டைசன்..

இவரது மனைவி பச்சைமுத்துவின் ஐஜேகேவில் இருக்கிறார்..

முதல்மகன் பாஜகவில் இருக்கிறார்..

டைசன் பெரியாரை வழியில் தமிழ்த்தேசிய கொள்கையில் தனி  கட்சியாம்...

மெக்சிகோ நாட்டில் கடும் நில நடுக்கம் இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் பலி...


எம்எல்ஏ தகுதி நீக்கத்திற்கு தடையில்லை, அரசு கொறடா, சபாநாயகர், முதலமைச்சர் பதில் அளிக்க உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்...


மறு உத்தரவு வரும் வரை வாக்கெடுப்பு நடத்த தடை..

அக்டோபர் 4 க்கு வழக்கு ஒத்தி வைப்பு..

18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தக் கூடாது - உயர் நீதிமன்றம்...

வெற்றி பெற்ற 5 அரசுப்பள்ளி மாணவர்களும்… நீட் தேர்வின் பின் ஒளிந்திருக்கும் அயோக்கியத்தனமும்...


நீட் தேர்வு நடத்துவது Prometric என்கிற அமெரிக்க நிறுவனம்..

யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ?

1) இந்தியர்கள்
2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் )
3) NRI வெளிநாடு வாழ் இந்தியர்கள்
4) ஓவர்சீஸ் இன்டியன்
5) POI வம்சாவளியினர்

எத்தனை பேர் எழுதினார்கள் ?

1) இந்தியர்கள்
அப்ளிகேஷன் போட்டவர்கள் 1136206 , எழுதியவர்கள் 1087840 ,
பாஸ் செய்தவர்கள் 609000 …
பாஸ் செய்த 6 லட்சம் மாணவர்களுக்கும் சீட் கிடைக்கலியே ஏன் ? பிறகு எதற்கு இந்த தேர்வு ?

2) வெளிநாட்டினர் ( எந்த நாட்டினரும் எழுதலாம் )
அப்ளிகேஷனை போட்டவர்கள் 612
எழுதியவர்கள் 391
சீட் வாங்கியவர்கள் 245 …. இவங்களுக்கு மட்டும் எப்படி சீட் கிடைத்தது ?

3) NRI
எழுதியவர்கள் 1370
சீட் வாங்கியவர்கள் 1106
இது எப்படி சாத்தியம் ஆச்சு ?

4) overseas Indian
எழுதியவர்கள் 426
சீட் வாங்கியவர்கள் 321
இதுவும் எப்படி சாத்தியம் ஆச்சு ??

5) person of Indian origin பல தலைமுறைகளுக்கு முன்னே இந்தியாவை விட்டு வெளியேறி எந்த தொடர்பும் இல்லாத வெளிநாட்டு குடிமக்கள்
எழுதியவர்கள் 58
சீட் வாங்கியவர்கள் 47

இதுவும் எப்படி சாத்தியம் ஆச்சு ?

ஏன் என்றால் நீட் தேர்வு அரேன்ஜ்மென்ட் தான் சிபிஎஸ்இ ஆனால் நடத்துவது Prometric என்கிற அமெரிக்க நிறுவனம் .. சென்ற ஆண்டில் இந்த நிறுவனத்தின் இணையதளம் ஹேக் செய்து நீட் தேர்வு வினாக்கள் திருடப்பட்டது என்று அந்த நிறுவனமே ஒத்துக்கொண்டுள்ளது http://bit.ly/2fyJTbq…

அப்படி என்றால் வெளிநாட்டு நிறுவனம் நடத்தும் குளோபல் அதாவது இன்டர்நேஷனல் தேர்வை என்ன --------க்கு தமிழ்நாட்டில் ஏதோ மூலையில் வாழும் மிடில்கிளாஸ் , ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் எழுத வேண்டும் ?

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாட்டில் கட்டிய மருத்துவ கல்லூரிகளில் வெளிநாட்டினர் வந்து ப்ரீ சீட்டில் படிக்க வைக்கும் , இந்த தேர்வில் தான் தமிழ்நாடு அரசு பள்ளியில் படித்து சீட் வாங்கியவர்கள் மொத்தமே 5 பேர்தான்….

புரிந்து கொள்வோம்...

தமிழக அரசை டெல்லியில் இருந்து இயக்குகின்றனர் - தினகரன் தரப்பு வக்கீல் நீதிமன்றத்தில் வாதம்...


தினகரன் தரப்பு வாதங்கள்..

சபாநாயகர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அப்பாற்ப்பட்டவர் அல்ல..

மாநில அரசை மத்திய அரசு இயக்குவது உள்ளாட்சி தத்துவத்திற்கு எதிரானது..

தங்களது பெரும்பான்மையை எப்படியாது நிரூபிக்கவே தகுதி நீக்கம்..

ஊழல் அரசு எனக் கூறிய பன்னீர் செல்வத்தின் மீது ஏன் நடவடிக்கை இல்லை..

கொரடா உத்தரவை மீறியவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது ஏன்...?

விசிக ஒரு தலித் கட்சியா?


திட்டக்குடி அருகே தர்மகுடிகாடு என்ற ஊர் உள்ளது.

அதன் நிலங்கள் அருகே உள்ள கோழியூரின் பிள்ளைமார்களுக்கு சொந்தமாக இருந்தது.

அந்த பிள்ளைமார்களிடம் வேலைக்கு சேர்ந்த அருந்ததியர்கள் (அதாவது தெலுங்கர்) அந்த நிலத்தை பராமரித்தபடி அங்கேயே தங்கியிருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த நிலம் கோழியூர் வேணுகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமானது என்பதை கண்டு பிடித்தனர்.

கோவிலின் உரிமை பறையர்களுக்கு இருந்தது.

ஆக பறையர்களின் கோவில் நிலத்தை பராமரிக்க ஒருகாலத்தில் அமர்த்தப்பட்டதே பிள்ளைமார் குடும்பம்.

பிள்ளைமார்களிடம் அந்த நிலத்தை திருப்பித் தரும்படி பறையர்கள் கேட்டனர்.

பிள்ளைமார்களும் கொடுத்து விட்டனர்.

இப்போது பிள்ளைமார்கள் வேலைக்கு அமர்த்திய அருந்ததியர்கள் போக மாட்டேன் என்று கூறியதோடு, புதிதாக கிடைத்த பகுதியில் பங்கு கேட்கும் விதமாக குடிசையும் போட்டனர்.

தகவல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் அலெக்சாண்டருக்கு போனது.

அவர் ஆட்களுடன் வந்து அருந்ததியரை அடித்து விரட்ட அந்த மோதலில் சிவக்குமார்  என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் இறந்து விட்டார் (02.08.2017).

ஆக தலித் தலித் என்று பேசிக்கொண்டு தெலுங்கரும் தலித் என்று பங்குக்கு வரும்போது தூக்கிப்போட்டு மிதிப்பதும்,
அவர்களை மொழிவழி சிறுபான்மை என்று குறிப்பிட்டு அறவே ஒதுக்குவதும்,
அருந்திய பெண்ணின் கணவர் பறையர் என்பதால் ஒருமுறை வாய்ப்பளித்ததும்,

தலித்தியமா?
பறையரியமா?
இல்லை தலித்தியத்திற்குள் ஒரு தமிழ்தேசியமா?

தமிழக கோவில்களின் கோபுர உயரம்...


1, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் – 236 அடி

2, திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு.

3, தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்

4, ஆவுடையார் கோவில் – 200 அடி

5, தென்காசி – 178 அடி

6, கங்கைகொண்ட சோழபுரம் – 174 அடி

7, மதுரை – 170.8 அடி தெற்கு கோபுரம்

8, ஸ்ரீவில்லிப்புத்தூர் – 164 அடி வடபத்ர சாயி கோபுரம்

9, மன்னார்குடி – 154 அடி

10, குடந்தை சாரங்கபாணி கோவில் – 147 அடி

11, சிதம்பரம் – 140 அடி வடக்கு கோபுரம்

12, திருவானைக்காவல் – 135 அடி கீழ கோபுரம்

13, சுசீந்திரம் – 134 அடி

14, திருவாடனை – 130 அடி

15, குடந்தை கும்பேஸ்வரர் – 128 அடி

16, இராமேஸ்வரம் – 126 அடி கிழக்கு கோபுரம்

17, திருச்செந்தூர் – 127 அடி

18, சங்கரன் கோவில் – 125 அடி

19, திருவாரூர் – 118 அடி கீழ கோபுரம்...

திராவிடம் பேசுபவன் எல்லாருமே தமிழினத்தை ஏமாற்றி வயிறு வளர்க்கும் திருடனுங்க தான்...


கேரளாவில் தமிழர்களின் நிலை... மலையாளிகளின் இனவெறி...


கேரளாவில் ரேஷன் கார்டில் கேரளத்தில் குடி இல்லாதவர்கள்  என்று தனி வகுப்பு வைத்து கார்டு கொடுக்கிறான்...

இது தான் எல்லா மாநிலங்களிலும்...

இன்னும் சொல்ல போனால் தமிழ்நாட்டில் வேற மாநிலத்தவர்களுக்கு BC-OBC-SC இடஒதுக்கீடு உள்ளது போல தமிழர்களுக்கு மற்ற மாநிலங்களில் BC-OBC-SC  இடஒதுக்கீடு இல்லை..

எல்லா தமிழர்களும் OC இடஒதுக்கீட்டில் தான் வரணும்...

ஆனால் தமிழ்நாட்டில், தெலுங்கன், மலையாளி, கன்னடன், தமிழனை ஆளனும் என்று வரிசையில் நிக்கிறானுங்க...

தமிழன் தமிழ்நாட்டை ஆளனும்னு சொன்னால் இனவெறியன் என்று சொல்லி ஏறி  மிதிக்க பார்க்கிறானுங்க...

இலுமினாட்டி - அமராவதி தான் நகரத்தார்களின் பூர்வீகமண் இதை அவர்களே சொல்லுவார்கள்...


சாதவாகன பேரரசு என்பது இவர்களுடையதே..

இது ஒரு வணிகப்பேரரசு என்று வெளிநாட்டு ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது..

(புதுக்கோட்டைக்கு அருகில் பொண் அமராவதி என்று தாங்களின் பூர்வீக பெயரை சூட்டி அங்கே வாழ்ந்து வருகிறார்கள். இப்போதும் பொண் அமராவதியில் நகரத்தார்களே அதிகம்).

எத்தனை எத்தனை ஆதாரங்களை தொடர்ச்சியாக கொடுத்து வருகிறோம் ஆனாலும் எல்லாருக்குமே சந்தேகம் வருகிறது ஏனெனில் இவர்களா இந்த நகரத்தார்களா என்று.

அதையும் நான் முன்னமே சொல்லியுள்ளேன் இங்கே இருக்கும் நகரத்தார் செட்டிகள் வெள்ளாளர் கலப்பு. நான் சொல்லுவது தூய இனம்... அறிவாற்றலில் மிதம்மிஞ்சிய ஒரு இனம்...

இப்போது இருக்கும் நகரத்தார்கள் ஆகச்சிறந்த முட்டாள்கள் ஏனெனில் பணத்திற்காக நாங்கள் தான் உண்மையான நகரத்தார்கள் என கூறி பின்னால் வரப்போகும் ஒரு அழிப்பை நினைத்து பார்க்காமல் இருக்கிறார்கள்.

எதிரி இவர்கள் தான் என கண்டு பிடித்து ஒரு நாள் இவர்களை அழிக்க போகிறார்கள். அப்போது நாங்கள் இல்லை நாங்கள் இல்லை என்று கத்தினாலும் கதறினாலும் கேட்கப் போவது இல்லை...

மொத்த உலகமும் பாழ்பட செய்ய உதவிய அனைவருக்குமே அழிவு நிச்சயம் ஊழிக்காலம் நெருங்கி வருகிறது...

(ராஜமெளலியை அழைத்தற்கு காரணம் இவனுக்கு மன்னர் குடும்பத்தை பற்றி ஒரளவு தெரியும் என்பதாலேயே பாகுபலி கதை உலகத்தை ஆளும் அந்த மன்னர் குடும்பத்தை பற்றிய துணுக்குகளை கோர்த்த மாலை)...

அறுவடையான நெல்லை பாதுகாப்பாக சேமிக்கும் நுட்பம்...


கடினமாக உழைத்து உற்பத்தி செய்யப்பட்ட உணவுதானியங்களை பூச்சிகளும், எலிகளும் தின்று சேதப்படுத்தி விடுகின்றன. அறுவடைக்கு பின்னர் போதிய பாதுகாப்பில்லாமல் சேமித்து வைக்கப்படும் தானியங்களை தான் இந்த உயிரினங்கள் குறிவைக்கின்றன. எனவே, களத்திலிருந்து அறுவடை செய்து கொண்டு வந்த தானியங்களை தகுந்த வழிகளில் பாதுகாப்பாக சேமிக்க வேண்டும்.

நெல்மணிகள் அறுவையின் போது 62 சதவீதம் கிடைக்க நெல் அறுவடையை உரியநேரத்தில் செய்ய வேண்டும். நெல் தானியத்தை பொறுத்தமட்டில் நெல் மணியானது 80 சதவீதம் மஞ்சள் நிறமாக இருக்கும் போது அறுவடை செய்யலாம். அப்போது ஈரப்பதம் 19.23 என்ற அளவில் இருக்க வேண்டும். நெல்மணிகளை அதிக சூரிய வெப்பத்தில் காய வைக்க கூடாது. காய வைத்த நெல்லின் ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.

அதிக ஈரத்துடன் காணப்படும் நெல்லை சேமிக்க கூடாது. சரியான நிலையில் இருக்கும் நெல்லை கோணிப்பையில் நிரப்பி, தரை மீது மரச்சட்டங்களை அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி, நெல் மூடைகளை அடுக்க வேண்டும். அதே போல் சுவரிலிருந்து ஓரடி இடைவெளி விட்டு அடுக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மிலி மாலத்தியான் மருந்தைக்கலந்து தரைப்பகுதி மற்றும் மூட்டைகளின் மீது தெளித்தால், அந்துப்பூச்சி தாக்காமல் இருக்கும்.

ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் உள்ள வணிக முறை தரம்பிரிப்பு மையங்களில் நான்கு ரகங்களாக பிரிக்கப்படுகிறது. விவசாயிகள் நெல்லின் தரத்தையும், ஈரப்பதத்தையும் அங்கு தெரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களில் பூச்சிகளால் 2.55 சதவீதமும், எலிகளால் 2.5 சதவீதமும், பறவைகளால் 0.85 சதவீதம், ஈரப்பதத்தால் 0.68 சதவீதம், கதிரடிக்கும் இயந்திரங்களால் 1.68 சதவீதம், போக்குவரத்தின் போது 0.15 சதவீதமும் இழப்பு ஏற்படுவதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

சீனாவிடமிருந்து இந்தியாவை பாதுகாக்க களத்தில் இறங்கிய ஓபிஎஸ்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள்-20...


துவக்கத்தில் சில மருத்துவர்களும், சில ஆராய்ச்சியாளர்களும் ஆழ்மன சக்திகளில் காட்டிய ஆர்வத்தையும், ஆராய்ச்சிகளையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்தார்கள். பின் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் சிலர் காட்டிய அக்கறை அவர்களையும் சிந்திக்க வைததது. உதாரணத்திற்கு 1912ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் அலெக்சிஸ் காரல் ஆணித்தரமாகத் தன் கருத்தை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சொன்னார்.

கண்களின் உதவியில்லாமல் காண முடிவது, காதுகளின் உதவியில்லாமல் கேட்க முடிவது, ஐம்புலன்களின் உதவியில்லாமல் எண்ணங்களை பரிமாறிக் கொள்வது போன்றவை உண்மையானவையே. உண்மையாக சிந்திக்க முடிந்த எந்த மனிதனும் இது குறித்த தகவல்களை முழுவதும் ஆராயாமல் இந்த உண்மைகளை ஒதுக்கி விட முடியாது.

அவர் கூறியபடி அந்த உண்மைகளை ஒதுக்க முடியாமல் மேலும் ஆராய முற்பட்டவர் ஜோசப் பேங்க்ஸ் ரைன் (1895-1980). அவர் அறிவு தாகம் மிக்கவர். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் கடற்படையில் சேர்ந்து துப்பாக்கி சுடுவதில் சிறந்து விளங்கியவர். பின் தாவரவியலில் சிகாகோ பல்கலைகழக்த்தில் 1923ல் பிஎச்டி பட்டம் பெற்றவர். பின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மனோ தத்துவத்திலும் பட்டம் பெற்றவர்.

ஒருமுறை அவரும் அவர் மனைவியும் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆர்தர் கானன் டாயில் இறந்தவர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக இருக்கின்றன என்று உதாரணங்களுடன் ஆற்றிய உரையைக் கேட்க நேரிட்டது. இப்படியெல்லாம் நடக்க முடியும் என்கிற எண்ணமே அறிவு தாகம் உள்ள அவர் ஆர்வத்தைக் கிளறி விடவே ஆழ்மன சக்திகள் குறித்து முழுவதுமாக ஆராய்வது என்று அவர் தீர்மானித்தார்.

அது குறித்து பல நூல்கள் பற்றியும், பரிசோதனைகள் பற்றியும் படித்த அவர் 1930ல் ட்யூக் பல்கலைகழகத்தில் ஆழ்மன சக்திகள் குறித்த விரிவான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.

1931ல் லின்ஸ்மேயர் என்ற பொருளாதார மாணவரை வைத்து அவர் முதலில் தொடங்கிய ஆராய்ச்சி ஜெனர் கார்டுகளை (zener-cards) உபயோகப்படுத்தியதாக இருந்தன. அதில் கிடைத்த முடிவுகள் யூகத்தில் சொல்வதால் வரக்கூடிய விளைவுகளை விட அதிகமானதாக இருந்தன. ஆரம்ப ஆராய்ச்சிகளில் மிகவும் வெற்றிகரமாகக் கிடைத்த முடிவுகள் போகப் போகக் குறைய ஆரம்பித்தன. காரணங்களை ஆராய்ந்த போது உற்சாகக்குறைவு, கவனச்சிதறல், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியுணர்வு ஆகியவை எல்லாம் காரணங்கள் என்பதை ரைன் கண்டுபிடித்தார்.

(இது இன்றளவும் உண்மையாக உள்ளது. பரபரப்பில்லாத உற்சாகம், முழுக் கவனம், வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற வெறியில்லாமல் அமைதியாக முயல்தல், களைப்பின்மை ஆகியவையே ஆழ்மன சக்திகள் வெற்றிகரமாக வெளிப்பட உதவுகின்றன. பின் ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி, பயன்படுத்துவதெப்படி என்பதை அலசும் போது இது பற்றி விரிவாகப் பார்க்கலாம்)

லின்ஸ்மேயரை விட்டு விட்டு ரைன் ஹுபர்ட் பியர்ஸ் என்பவரை வைத்து 1932ல் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அந்த கார்டுகளில் சிலவற்றை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ள அந்தக் கார்டுகளைச் சரியாக யூகித்துச் சொல்லும் அந்தப் பரிசோதனைகளில் வியக்கத் தக்க சதவீத வெற்றிகள் கிடைத்தன. சில ஆராய்ச்சிகள் கார்டுகள் வைத்திருப்பவருக்கும், யூகிப்பவருக்கும் இடையே நிறைய இடைவெளியில் நடத்தப்பட்டன என்றாலும் அந்த விளைவுகளில் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.


எடுத்த கார்டுகளை யூகிப்பது போலவே எடுக்கப் போகும் கார்டுகளையும் யூகிக்கும் ஆராய்ச்சிகளையும் ரைன் மேற்கொண்டார். ஜெனர் கார்டுகளைப் போலவே பகடைக் காய்களும் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டன. கையால்உருட்டிப் போடுவது, ஒரு கப்பில் வைத்து வீசுவது, எந்திரம் மூலமாக எறியப்படுவது போன்ற பரிசோதனைகளும் நிகழ்த்தப்பட்டன. எந்த எண் வரக்கூடும் என்ற யூகங்களையும் ஆராய்ச்சி செய்து சரிபார்த்தனர். அப்படிக் கிடைத்த முடிவுகளும் ஆழ்மன சக்திகளை உறுதிப்படுத்தும் அளவுக்கு உயர்ந்த சதவீதமாகவே இருந்தன.

1934ல் ரைன் தன் ஆராய்ச்சிகளைப் புத்தகமாக (Extra Sensory Perception) வெளியிட்டார். அது பல பதிப்புகளைக் கண்டு வெற்றிவாகை சூடியது. ரைன் மேலும் பல நபர்களை வைத்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1960களில் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்காக Foundation for Research on the Nature of Man. என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தினார். பின்னர் அது மாற்றம் அடைந்து ரைன் ஆராய்ச்சி மையம் (Rhine Research Center) என்ற பெயரில் இன்றும் ஆராய்ச்சிகளை நடத்தியும், மற்றவர்களின் ஆராய்ச்சிகளுக்கு உதவியும் வருகிறது.

முறைப்படியான ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஜே.பி.ரைன் எடுத்த முயற்சிகள் இன்னொரு மைல்கல் என்றால் அது மிகையாகாது. 1930 முதல் தன் மரண காலம் வரை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் அந்த ஆராய்ச்சிகளில் சளைக்காமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவரது முயற்சிகள் தற்கால அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தன. பின்னால் வந்த பல ஆராய்ச்சியாளர்கள் அவருடைய அடிப்படைகளையே ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ளும் அளவு இந்தத் துறைக்கு பெரும்சேவை புரிந்துள்ளார்.

அவர் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இது போன்ற அதீத சக்திகள் இருப்பதாகக் கருதினார். சிலர் அதிகமாக அதை வெளிப்படுத்த முடிந்தவர்களாக இருப்பதாகவும், அதுவும் சில குறிப்பிட்ட சமயங்களில் அந்த சக்திகள் அதிகமாக வெளிப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

விளக்க முடியாத மகாசக்திகளைக் காணும் போது உற்சாகமாக அதைப் பற்றிக் கொண்டு ஆராய முற்படுகிற ஆராய்ச்சியாளன் அதில் ஒரு பெரிய பொக்கிஷத்தையே கண்டுபிடிக்கிறான். அது எந்த அளவு மர்மமானதாகவும் விளக்க முடியாததாகவும் உள்ளதோ அந்த அளவு உயர்ந்த ஞானத்தை அது விளங்கப்பெறும் போது தருவதாக இருக்கிறது என்று 1947ல் ரைன் கூறியது போல பல ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியை ஆராய்ந்து மலைத்துப் போனார்கள்.

எத்தனை தான் ஆதாரங்களுடன் சொன்னாலும் ஆழ்மன சக்திகள் ஆர்வத்தைத் தூண்டும் அதே அளவுக்கு “உண்மையில் இப்படி இருக்க முடியுமா?” என்ற சந்தேகத்தையும் படிப்பவர் மனதிலும் கேள்விப்படுபவர் மனதிலும் ஏற்படுத்துவது இயல்பே. எனவே ஆராய்ச்சிகள் மேலும் அதிகமாகவும் ஆழமாகவும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் இந்த ஆராய்ச்சி நடந்திருக்கிறது என்றால் நம்பக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. அதன் விவரங்களைக் காண்போமா?

மேலும் பயணிப்போம்....

பண்ருட்டி அருகே மலைக்கோவிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு மூன்று சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்...


பண்ருட்டி 27.09.16: பண்ருட்டி அருகே சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பாதாள அறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் மிகுந்த பரவசம் அடைந்துள்ளனர். இது பற்றி விபரம் வருமாறு.

கடலூர் மாவட்டம் சித்தர்கள் வாழந்த பூமி என்பது அனைவரும் அறிந்த உண்மை. குறிப்பாக பண்ருட்டி திருவதிகை பகுதியில் ஏராளமான சித்தர்கள், யோகிகள், ஞானிகள், முனிவர்கள், ரிஷிகள் வாழ்ந்துள்ளனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர் வாழும் போது பல அற்ப்புதங்களை நிகழ்த்தியதோடு தற்போதும் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரர் ஸ்ரீபுஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் திருப்பணிக்கான பணி நடைபெற்று வருகிறது.

திருப்பணி வேலை நடைபெற்று கொண்டிருந்தபோது பூமிக்கடியில் சுரங்க அறை இருப்பது தெரியவந்தது.

இதனால் பரவசமடைந்த பக்தர்கள், ஊர் பொதுமக்கள் திருப்பணி குழுவினர் அந்த சுரங்க அறை வழியாக சென்று உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது கோவிலுக்கு கீழே அற்பூதமான கட்டிட அமைப்புடன் நூற்று கணக்கான சதுர அடி கொண்ட கட்டிடம் இருப்பது தெரிய வந்தது.

இது சுமார் 400, 500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மிகவும் பழமையான மற்றும் அற்புதமான அறை என தெரிய வந்தது.

இந்த அறைக்குள் முக்கிய பிரமுகர்கள் தொல்லியல் துறையினர், கல்வெட்டு ஆய்வாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

பாதாள அறைக்குள் சென்ற பார்த்தபோது மேலும் ஆச்சரியமூட்டும் அற்பூத காட்சி கிடைத்தது.

அங்கு அந்த பகுதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர் சுவாமிகள் மூன்று பேர் தியானத்தில் அமர்ந்த நிலையிலே முக்தி அடைந்த நிகழ்வு இருப்பதை உணர்ந்தனர்.

வெவ்வேறு திசைகளில் அமர்ந்த நிலையில் இருந்த மூன்று சித்தர்கள் உயிருடன் தியானத்தில் ஆழ்ந்து ஜீவசமாதி அடைந்து கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த செய்தி சுற்றுவட்டார பகுதியில் காட்டு தீ போல பரவியது.

ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் குவிய தொடங்கினர்.

இதற்கிடையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளனர்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலையில் வாழ்ந்த சித்தர்கள் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் குறிப்புகள் பழங்கால ஓலைச்சுவடி மற்றும் நூல்களை தேடி கண்டு பிடித்து இவர்களை பற்றிய குறிப்பு சேகரித்து வருகின்றனர்.

இந்த சித்தர்களால் இந்த மலை மேலும் சிறப்படையும் என்று திருப்பணிக் குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து திருப்பணிக்குழு தலைவரும் கடலூர் மாவட்ட முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் மல்லிகா வைத்திலிங்கம் கணவருமான வைத்திலிங்கம் இதுபற்றி கூறியதாவது..

இந்த புஷ்பகிரி மலையாண்டவர் என்று அழைக்கப்படும் மலைப்பிள்ளையார் அருள்பாலிக்கும் இந்த மலை பல வரலாற்று பெறுமைகளையும் கொண்ட மலையாகும்.

இந்த கோவிலில் தை பொங்கல் நாளில் மூலவர் விநாயகர் பெருமானின் திரு உருவத்தின் மீது சூரிய கதிர்கள் அமையுமாறு அமைக்கப்பட்டுள்ளது பெரும் பெருமைக்குரியதாககும்.

வடலூர் வள்ளலார் மற்றும் பல சித்தர்கள் இந்த மலைக்கு வருகை தந்துள்ளனர்.

வள்ளலாரின் பஞ்சலோக வெண்கல உருவ சிலை இந்த கோவிலில் மட்டும்தான் உள்ளது.

5000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க கால வரலாற்று தடையங்களும் கி.பி.7ம் நூற்றாண்டு முதல் கி.பி.19ம் நூற்றாண்டுவரை பொலிவுடனும் புகழுடனும் விளங்கிய மிகப்பழமையான மற்றும் அற்புதமான இந்த மலைக்கோவிலில் நிம்மதியான இறை உணர்வு நிறைந்த வாழ்க்கைய மேற்கொண்டிருந்த மூன்று சித்தர்கள் பாதாள அறையில் தியான நிலையில் ஜீவ சமாதியான நிகழ்வை பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளிப்பட்டுள்ளது.

இதனால் எங்கள் பகுதி மேலும் வளர்ச்சி அடைந்து நலம் பல பெறும் என நம்புகிறோம்...

சென்னை மெரினாவில் காவல்துறை சாதனை...


தமிழன் அனைத்து விதமாகாவும் வஞ்சிக்கப்படுகிறான்.. இனி சிந்தித்து செயல் படுவோம்...


பணக்காரரை (மட்டுமே) திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு.. முகேஷ் அம்பானி கொடுத்த பட்டாசு பதில்...


பூஜா என்ற  இளம்பெண், பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?. என்றார்.

இந்தப்  பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில்....

உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும். பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்துக் கொண்டே போகும்.

பொருளாதார பார்வையில் இதை கண்டால், பணம் எனும் ஆண் (நான்) அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் (பூஜா) தேய்மானம் அடையும் சொத்து. ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருக்கும். செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும் முனைய மாட்டார். வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே தவிர, திருமணம் செய்துக் கொள்ள மாட்டார். எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விட்டு நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள். என்றார்...

இந்தியாவிற்கும் இந்திக்கும் சம்பந்தமே இல்லடா...


சிகரட் புகைப்பதால் ஏற்படும் நோய்கள்...


அனைவரும் புகைப்பிடித்தால், புற்றுநோய் மட்டும் தான் வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தான் தவறு. புகைப்பிடிப்பதால், புற்றுநோய் மட்டுமின்றி, வேறு சில நோய்களும் உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது. அதிலும் அவை புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமின்றி, அருகில் உள்ளோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

தற்போது இத்தகைய பழக்கம் ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் அதிகம் உள்ளது. ஆரம்பத்தில் சிகரெட் பிடிப்பது ஒரு ஸ்டைலாக இருந்தது. அதனால் பலர், அதனை ஒரு முறை மட்டும் செய்து பார்க்கலாம் என்று பின்பற்றினர். அவ்வாறு ஒருமுறை சிகரெட் பிடிக்க ஆரம்பித்தவர்களால், அதனை நிறுத்துவது என்பது கடினமான ஒன்றாகிவிடும்.

மேலும் எவ்வளவு தான் அதனை நிறுத்துவதற்கு முயற்சி செய்தாலும், சிலரால் அது முடியாத செயலாகிவிடும். இதனால் தொடர்ச்சியான புகைப்பழக்கத்தால், அதில் உள்ள புகையிலை நுரையீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, சிலரது உயிரையே பறித்துவிடுகிறது. என்ன தான் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலும், உடற்பயிற்சிகளை பின்பற்றினாலும், சிகரெட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்தை மட்டும் தடுக்க முடியாது.

புற்றுநோய் : புகைப்பிடித்தால், முதலில் உடலில் ஏற்படும் நோய் தான் புற்றுநோய். அதிலும் அந்த சிகரெட்டில் உள்ள கார்சினோஜென் நுரையீரல், வாய், தொண்டை மற்றும் உணவுக்குழல் போன்ற இடங்களில் புற்றுநோய் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சிகரெட் பிடித்ததால், 90 சதவீதம் பேர் நுரையீரல் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிலர் சிறுநீர்ப்பை, கணையம், கர்ப்பப்பை வாய், சிறுநீரகம் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோயாலும் அவஸ்தைப்படுவார்கள்.

கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி : சிரெட் பிடிப்பதால், மூச்சுக்குழாயில் அழற்சி ஏற்பட்டு, சரியாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும். அதிலும் நீண்ட நாட்கள் சிகரெட் பிடித்தால், மூச்சுக்குழாய் அழற்சியானது தீவிரமாகி, சுவாசிக்க முடியாமல், இறுதியில் இறப்பை சந்திக்க நேரிடும்.

மாரடைப்பு : புகைப்பிடித்தால், இதயம் மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய் மற்றும் மற்ற பாகங்களில் உள்ள இரத்தக் குழாயில், கொலஸ்ட்ராலை தங்க வைத்து, அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பு மற்றும் இதர இதய நோயை உண்டாக்கும்.

இனப்பெருக்க மண்டலம் : சில நேரங்களில் சிகரெட் பிடித்தால், இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியமானது பாதிக்கப்பட்டு, கருத்தரிப்பதில் பிரச்சனை, குறைப் பிரசவம், கருச்சிதைவு, மலட்டுத்தன்மை திடீரென்று கருவில் இருக்கும் குழந்தை இறப்பது போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் தொடர்ச்சியாக சிகரெட் பிடிக்கும் ஆண்களுக்கு விறைப்பு குறைபாட்டின் தீவிரம் அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தி தடைப்பட்டு குழந்தை பிறப்பதில் பிரச்சனையை உண்டாக்கும்.

அல்சைமர் : நோய் புகைப்பிடித்தல், மனச் சரிவை ஏற்படுத்திவிடும். மேலும் புகைப்பிடிப்பதால், தமனிகளில் பாதிப்பு, இரத்த உறைதல் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்பட்டு, இறுதியில் ஒருவரின் மனநிலையையே மாற்றிவிடும்.

நோய்த்தொற்று : சிகரெட் பிடிப்போரின் மேல் சுவாசப் பாதையில் மற்றும் நுரையீரலில் நோய்த்தொற்றானது அதிகம் ஏற்பட்டு, புரையழற்சி, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா போன்றவற்றை ஏற்படுத்தி, நிம்மதியான வாழ்க்கையையே கெடுத்துவிடும்.

இதய நோய் பாதிப்பு : புகைப் பிடிப்போரின் அருகில் இருக்கும் பெரியோர் மற்றும் சிறுவர்களுக்கு, 20-30 சதவீதம் இதய நோய் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

கர்ப்பிணிகள் : கர்ப்பிணிகள் சிகரெட் பிடிப்போரின் அருகில் இருந்தால், வயிற்றில் உள்ள குழந்தை பிறக்கும் போது, மிகவும் எடை குறைவாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

குழந்தைகள் : குழந்தைகள் புகைப்பிடிப்போரின் அருகில் இருந்தால், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்றவை ஏற்படுவதோடு, வளர வளர நுரையீரலின் வளர்ச்சியும் வளராமல் தடைபடும்...

உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு...


இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.

1. இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள்.

2. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்).

3. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்).

4. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்).

5. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி).

6. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - பெல்லாரி மாவட்டம்).

7. மலை மண்டலம் (திருவாங்கூர் - கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி).

8. மும்முடிச் சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - சேலம் மாவட்ட வடபகுதி).

9. வேங்கை மண்டலம் (கிருட்டின - கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட கீழைச் சாளுக்கிய நாடு).

பேராட்சி முறையில் மன்னனுக்குத் துணை செய்த அலுவலர்கள்..

1. உத்திர மந்திரி
2. பெருந்தர அதிகாரிகள்
3. திருமந்திர ஓலை
4. திருமந்திர ஓலை நாயகம்
5. ஒப்பிட்டுப் புகுந்த கேழ்வி
6. வரியிலிடு
7. காடுவெட்டி
8. உடன் கூட்டத்து அதிகாரி
9. அனுக்கத் தொண்டன்
10. நடுவிருக்கை
11. விடையில் அதிகாரி
12. உள்வரி திணைக்களத்துக் கண்காணி
13. புரவரித் திணைக்களம்
14. புரவரி திணைக்களத்து நாயகம்
15. வரிப் பொத்தகம்
16. முகவெட்டி
17. வரிப்பொத்தகக் கணக்கு
18. வரியிலிடு புரவரி திணைக்களத்து நாயகம்
19. கடமை எழுதுவோன்
20. பட்டோலை
21. ராகாரிய ஆராய்ச்சி
22. விதிசெய்

பெண் அதிகாரிகள்..

அரசியின் ஆணையை நிரவேற்றிய பெண் அதிகாரி ”அதிகாரிச்சி” என்று அழைக்கப் பட்டாள்...

தன் வீட்டு வாசலுக்கு வரும் பூச்சிகள் எறும்புகள் கூட பசியுடன் திரும்பக்கூடாது என்பதற்காக அரிசிமாவில் கோலம் போடுவது நம் தமிழர்களின் பண்பாடு...


ஆனால் பசிக்கிறது என்று வாய்திறந்து கேட்டால் கூட பார்க்காதது போல் செல்கிறார்கள் மேல்நாட்டு கலாச்சாரத்தில் ஊறிப்போன இன்றைய தமிழர்கள் பலர்....

தமிழ் மொழியின் சிறப்புகள்..


1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்

2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்

3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்

4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்

5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்

6) அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ்

7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)

8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது

9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)

10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.

11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)

12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்

13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)

14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்

15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்

16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்

17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்

18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்

19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது

20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)

21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்

22) தனித்தமிழ்:- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்

23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது

24) தாய்த்தமிழ்:- தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாமம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ்

25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்

26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது

27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்

28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்

29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)

30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்

31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது

32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது

33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது

34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது

35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)

36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்.

37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்).

38) வளர்தமிழ்:- காலந்தோறும் வளர்ந்து கொண்டே வரும் தமிழ்...

நேதாஜியை காட்டி கொடுத்த நேரு என்கிற எட்டப்பன்...


நேதாஜி 18, ஆகஸ்ட், 1945 அன்று
விமான விபத்தில் இறந்து விட்டதாக
அன்றைய காங்கிரஸ் மாமா கட்சி
அறிவித்து அதையே இதுவரை
வரலாறாக வைத்து கொண்டது .

ஆனால் நான்கு மாதம் கழித்து,
அதாவது 27 டிசம்பர் 1945 அன்று
ஆங்கிலேய காட்டேரி அட்லியின்
இந்திய உளவாளி மாமா எழுதிய
கடிதத்தில் உங்களின் போர் குற்றவாளி சுபாஸ் சந்திர போஸ் ரஷ்யாவுக்குள் ஸ்டாலின் உதவியால் நுழைந்து விட்டார்,

ரஷ்யா எப்போதும் பிரிட்டிஷ்
மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது .

எனவே இதை கருத்தில் கொண்டு சரியானதை செய்ய வேண்டும் . என்று போட்டு கொடுத்திருக்கிறார் இந்த மாமா.

4 மாதத்திற்கு முன்னாலே இறந்து
விட்டார் என்று இந்தியர்களை நம்ப
வைத்து விட்டு இந்த அய்யோக்கிய்ய மாமா செய்த எட்டப்பன் வேலையே
பார்த்தீர்களா ?

காங்கிரஸ் என்கிற இந்த தேச துரோக கட்சியில் சுரணையுள்ள இந்தியன் எவனாவது இனியும் நீடிக்கலாமா ?

முதுகில் குத்திய இந்த தேச துரோகிக்கு மாமா என்கிற பட்டமா ?

எட்டப்பன் என்று அல்லவா வைத்திருக்க வேண்டும் ?

உண்மையை உலகிற்கு காட்டிய மேற்குவங்க அரசிற்கு மிக்க நன்றி...

பாஜக மோடி பக்தாள்ஸ் எல்லாம் எங்கப்பா போனீங்க....


மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி வரலாறு காணாத சரிவு....

முதல்வர் எடப்பாடி மற்றும் சபாநாயகர் தனபாலின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்து, அவர்களுக்கு சேலை பார்சலில் அனுப்பிய, ஈரோட்டைச் சேர்ந்த 8 பேரை கைது செய்த போலீஸ், அவர்களின் மீது என்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்வது என கையை பிசைந்து கொண்டு உள்ளனர்...



யாராவது இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்குப்பா.. இந்த வடநாட்டு பாஜக எச். ராஜா சர்மா போய் தொலையட்டும்...


அமாவாசை குளிச்சுட்டு அண்டர்வேர கழட்டினா கசக்கறதுக்கு போட்டி போட்ட மாதிரி.. நாம அண்டர் வேர கழட்டுனா கசக்கத்தான் இவ்வளவு கூட்டமாக நிக்கிறாங்களோ? இல்ல நம்மள கசக்கவா? கடவுளே காப்பத்து...


பாஜக எச். ராஜா சர்மா வை யாரோ வச்சி செய்றாங்க போல...


புலம்பெயர் தமிழ் திருமணத்தில் தமிழினத் தலைவர் பிரபாகரன் தாலி...


தமிழர்களின் கல்வி கலை கலாசாரம் மொழி வாழ்வியல் என்று அனைத்திலும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இரண்டறக் கலந்திருக்கிறார் என்பதற்கு இந்த திருமண நிகழ்ச்சியும் நல்லதொரு எடுகோள்.

 ‘பிரபாகரன் வேறு மக்கள் வேறு’ என்று தமிழர்களின் உடற்கூறுகளிலிருந்து அவரை எவரும் அவ்வளவு இலகுவில் அந்நியப்படுத்தி பிரித்து வைத்துவிடவே முடியாது என்பதற்கு குறித்த திருமண நிகழ்ச்சி தகுந்த சான்று.

தமிழர்களின் திருமணத்தில் அணிவிக்கப்படும் ஒரு முக்கிய ஆபரணம் தாலி.


தாலி என்பது சமுக பண்பாடு, சமய சம்பிரதாயங்களின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றது.

திருமண ஜாதகப் பொருத்தத்தில் தாலிப் பொருத்தம் மிகவும் முக்கியமாக கவனிக்கப்படுகின்றது.

இந்த தாலி கழுத்தில் இருக்கும் வரை அஸ்டமாசித்திகளும் எந்த இடையூறுமின்றி கட்டியவனும் கட்டியவளும் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

இப்படித் தான் தாலி இருக்க வேண்டும் என்று ஒரு விதி கிடையாது.

பிள்ளையார் தாலி எனும்போது ஆரம்பத்தில் தும்பிக்கை வடிவம் தான் பொறித்தார்கள். பின்னர் ஆசாரியாரின் கற்பனைத்திறன் மற்றும் வேலைத்திறனுக்கு ஏற்ப வடிவங்களும், அழகுபடுத்தல்களும் அதிகரித்தன.

தாலி வடிவங்களை வைத்துக் கொண்டு அவற்றை பிள்ளையார் தாலி (தும்பிக்கை வடிவம்), சிவன் தாலி (லிங்க வடிவம்), அம்மன் தாலி (அம்மன் வடிவம்), தேர்த்தாலி (தேர் வடிவம்), புறாத்தாலி (விரிந்த புறாவின் வடிவம்), இராமர் தாலி (சங்கு சக்கரம் வடிவம்) பொட்டுத்தாலி எனப்பல இன்றைக்கு புழக்கத்தில் உள்ளன.

பொதுவாக கிறிஸ்தவர்கள் புறாத்தாலி அணிவார்கள். சிலர் வேதாகமத்தில் புறா வடிவம் வைப்பார்கள்.


இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு வித்தியாசமான வடிவங்களில் தாலிகள் செய்யப்படுகின்றன.

மங்களகரமான தாலியுடன் இலட்சுமி காசு, மணி, பவளம் கோர்த்து மணப்பெண்ணுக்கு அணிவிப்பதே தமிழர் மரபாக இருந்து வந்துள்ளது.

தமிழ் உயிர், உயிர்மெய், ஆயுத எழுத்துகளுடன் திருவள்ளுவர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை தாலியுடன் இணைத்து அணிவதையும் தமிழ் இலக்கிய குடும்ப பாரம்பரியத்தை கொண்டுள்ளவர்கள் கடைப்பிடித்து வருகின்றமை இன்னும் கூடுதல் சிறப்பு.

ஆனால், இந்த சமுக சமய சம்பிரதாய மரபை உடைத்து சமீபத்தில் புலம்பெயர் தேசம் ஒன்றில் நடைபெற்றுள்ள திருமண நிகழ்ச்சியில், தாலியுடன் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உருவமும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் இலச்சினையும் (புலிச்சின்னம்) பொறிக்கப்பட்ட நாணயங்களை கோர்த்து மணப்பெண்ணுக்கு அணிவித்துள்ளமை, உலகத் தமிழர்களின் அடையாளமாக தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வரலாற்றில் என்றும் தொடருவார் - நிலைத்திருப்பார் என்பதையே புலப்படுத்துகின்றது...