21/09/2017

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை...

         
கிரிக்கெட்டில் சிறந்த சேவையாற்றியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியை இந்திய கிரிக்கெட் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.

இந்தியாவின்  மூன்றாவது  மிக உயர்ந்த குடிமகன் விருது பத்ம பூஷண்.

கிரிக்கெட்டில் சிறந்த சேவையாற்றியதற்காக பத்மபூஷண்  விருதுக்காக  இந்திய கிரிக்கெட் ஆணையம் இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியை பரிந்துரை செய்து உள்ளது.

இந்த ஆண்டு பத்ம விருதுக்கு டோனியின் பெயரை மட்டுமே பரிந்துரைத்து அனுப்பி உள்ளதாக  பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ஒருவரை அனைவராலும் ஒரு மனதாக பரிந்துரைத்து உள்ளனர்.

அவர் தலைமையில் இரண்டு உலக கோப்பைகளை இந்தியா வென்று உள்ளது. 2011 ஒருநாள் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை 2007)   90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.  10 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார். அவரை விட சிறந்தவர் யாரும் இல்லை. வேறு யாரை பரிந்துரைத்து இருக்க முடியும் என பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

36 வயதான டோனி  302 ஒருநாள் போட்டியில்  விளையாடி 9737 ரன்கள் எடுத்துள்ளார்.  90 டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்கள் எடுத்துள்ளார். 20 ஓவர்  சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள டோனி  1212 ரன்களை எடுத்து உள்ளார்.

டெஸ்டில் 6 சதங்களும்  ஒருநாள் போட்டிகளில் 10 சதங்களும் அடித்து உள்ளார். 100 சர்வதேச அரை சதங்கள் எடுத்து உள்ளார். விக்கெட் கீப்பராக  584 கேட்சகளை பிடித்து உள்ளார்( டெஸ்ட் போட்டிகளில் 256, ஒருநாள் போடிகளில் 285,  20 ஓவர் போட்டிகளில் 43)  மொத்தம் 163 ஸ்டெம்பிங்களை செய்து உள்ளார்.

அர்ஜூனா, ராஜீவ் காந்த் கெல் ரத்னா மற்றும் பத்ம ஸ்ரீ விருதினை ஏற்கனவே டோனி பெற்றுள்ளார். பத்ம பூஷண் விருது  டோனிக்கு  வழங்கப்பட்டால்,  இந்த விருது பெறும்  11 வது இந்திய கிரிக்கெட் வீரர் இவர்  ஆவார்.

சச்சின் தெண்டுல்கர், கபில்தேவ், சுனில் காவாஸ்கர், ராகுல் திராவிட்,சாந்து போர்டே, பேராசிரியர் டி.பி. டீஹோத்ர், கேல் சி.கே நயுடு , லலா அமர்நாத்
13 ம முதல்  தர  போட்டிகளில் விளையாடிய  ராஜா பிலிடேந்திர சிங்,
விஜய ஆனந்த், விஜயங்கிராம் மகாராஜா இவர்  1936 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவின் கேப்டனாக இருந்தவர் ஆகியோர் பத்ம பூஷண் விருதைப் பெற்றுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.