21/09/2017

விசிக ஒரு தலித் கட்சியா?


திட்டக்குடி அருகே தர்மகுடிகாடு என்ற ஊர் உள்ளது.

அதன் நிலங்கள் அருகே உள்ள கோழியூரின் பிள்ளைமார்களுக்கு சொந்தமாக இருந்தது.

அந்த பிள்ளைமார்களிடம் வேலைக்கு சேர்ந்த அருந்ததியர்கள் (அதாவது தெலுங்கர்) அந்த நிலத்தை பராமரித்தபடி அங்கேயே தங்கியிருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த நிலம் கோழியூர் வேணுகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமானது என்பதை கண்டு பிடித்தனர்.

கோவிலின் உரிமை பறையர்களுக்கு இருந்தது.

ஆக பறையர்களின் கோவில் நிலத்தை பராமரிக்க ஒருகாலத்தில் அமர்த்தப்பட்டதே பிள்ளைமார் குடும்பம்.

பிள்ளைமார்களிடம் அந்த நிலத்தை திருப்பித் தரும்படி பறையர்கள் கேட்டனர்.

பிள்ளைமார்களும் கொடுத்து விட்டனர்.

இப்போது பிள்ளைமார்கள் வேலைக்கு அமர்த்திய அருந்ததியர்கள் போக மாட்டேன் என்று கூறியதோடு, புதிதாக கிடைத்த பகுதியில் பங்கு கேட்கும் விதமாக குடிசையும் போட்டனர்.

தகவல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் அலெக்சாண்டருக்கு போனது.

அவர் ஆட்களுடன் வந்து அருந்ததியரை அடித்து விரட்ட அந்த மோதலில் சிவக்குமார்  என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் இறந்து விட்டார் (02.08.2017).

ஆக தலித் தலித் என்று பேசிக்கொண்டு தெலுங்கரும் தலித் என்று பங்குக்கு வரும்போது தூக்கிப்போட்டு மிதிப்பதும்,
அவர்களை மொழிவழி சிறுபான்மை என்று குறிப்பிட்டு அறவே ஒதுக்குவதும்,
அருந்திய பெண்ணின் கணவர் பறையர் என்பதால் ஒருமுறை வாய்ப்பளித்ததும்,

தலித்தியமா?
பறையரியமா?
இல்லை தலித்தியத்திற்குள் ஒரு தமிழ்தேசியமா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.