30/05/2018

அய்யாக்கண்ணுவின் காத்திருப்பு போராட்டத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவிக்கப்பட்டது...



தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு அவர்கள் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மளிகை அருகில் 10.06.2018 முதல் 20.06.2018 வரை விவசாயிகள்  காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களிடம் மனு அளிக்கபட்டது.

அதற்கான விசாரணைக்கு 28.05.2018 திங்கள் கிழமை காலை 11.30 மணிக்கு அழைப்பு வந்தது. அதனை என்று அய்யாக்கண்ணு சென்னை பெருநகர காவல் ஆணையரை சந்தித்தார். அச்சந்திப்பின் முடிவில் காத்திருப்பு போராட்டத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்து ஆணை பிறப்பித்தனர்...

விழித்துக்கொள் தமிழா...



போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாதாம்.. ஆராயாமல் பேசக் கூடாது - மராட்டிய டூபாக்கூர் ரஜினி...


மக்கள் உயிரைக்குடித்தது போராட்டங்கள் அல்ல.. போலீஸ் அராஜகம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், மாசுக்கட்டுப்பாடு வாரியம் போன்ற அரசு அமைப்பு லஞ்சம், அவசர சிகிச்சையை எந்த அவசரமும் இல்லாமல் செய்து உயிரைக்கொன்ற பொது மருத்துவமனை, ஒவ்வொரு சாவுக்கும் யார் பொறுப்பு என்ற பொறுப்புடைத்தன்மை அற்ற நிலை, சுடும் ஆணை கொடுத்த நபர் அதற்கான காரணம் போன்றவை பரம ரகசியமாக ஒரு வாரம் வைத்திருந்த வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை. தொடர் போராட்டங்கள் செய்வதற்கான அடிப்படை உரிமையை மறுக்கும் நிலை, போன்ற இவ்வளவு விஷயம் இருக்குனு யாராவது கொஞ்சம் எடுத்து சொல்லுங்க..

மக்கள் போராட்டம் தான் வெற்றி கொடுத்திருக்கிறது என்பதை புரிய வையுங்கள் இந்த வந்தேறி கிழட்டு பயனுக்கு...

இலுமினாட்டி களின் சாகர்மாலா திட்டம் தயார் நிலையில்...


அனைத்து இடங்களிலும், வழிகளிலும் எனது உரிமைகளும், அதிகாரங்களும் மறுக்கப்படுகிறது என்றால்...


என் உரிமைகளும், அதிகாரமும் எத்தகைய வலிமை உடையதாக இருக்கும்..?

அத்தகைய வலிமையுடைய என் உரிமைகளையும், அதிகாரத்தையும் நான் கண்டிப்பாக ஒருநாள் பெறுவேன்...

அதை நான் அடைவதற்கு என் வாழ்நாளில் இறுதிவரை போராடுவேன்...

முதலில் ஜன்தன் வங்கி கணக்கு 4 முறைக்கு மேலே எடுத்தால் அந்த மாதம் முழுதும் உள்ளே வரமுடியாது...


அடுத்து எல்லா கணக்கும் இதில் வரும்..

மக்களை கஷ்டபடுத்துவதில் அவ்வளவு சந்தோஷம் இவர்களுக்கு.. என்ன செய்தாலும் ஆதரிக்க தற்குறி கூட்டம் இருக்கும் வரை இவர்களை எதுவும் செய்ய முடியாது...

பீட்டாவின் பொய் முகம் கிழியும் நேரமிது...


ஸ்டெர்லைட் ஆலை மூடல்...


இது தற்காலிகமாக வெற்றி மட்டுமே  இதுவரை போராட்டம் செய்த அனைத்து தமிழக மக்களுக்கு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்...

நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றவாளியான பாஜக MLA, கைது செய்ய வாரண்ட் பிறப்பித்த நிலையில் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்...


விருதுநகர் மாவட்டத்தில் 6 இடங்களிலும் கரிஷ்மா அக்ரோ டெக் என்கிற பெயரில் 2016 ஆம் ஆண்டு குறைந்த பணத்திற்கு நிலம் தருவதாக கூறி பொது மக்களிடம் 4 கோடி ரூபாய் அளவிற்கு நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த 9 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தை 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது, இதில் 6 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் தொகுதியின் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் சோபாராணி குஷ்வா ஆவார், இந்நிலையில் வழக்கு விசாரணை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகமல் இருந்த சோபாராணி குஷ்வாவை விசாரணைக்கு ஆஜராக அனுப்பிய சம்மனை அடுத்து மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நடுவர் நீதிமன்ற நீதிபதி மீரா சுமதி முன்பாக சரணடைந்தார், 2 இலட்சம் பினை தொகை செலுத்தியதை அடுத்து சோபாராணி குஷ்வாவை பிணையில் விடுவிக்கப்பட்டார், வழக்கு விசாரணை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது....

நம்ப முடியாத உண்மைகள்...


பூணூல் = வில்லின் நாண்...


பூ + நூல் = பூ'நூ'ல் என்று தானே வர வேண்டும்...

ஏன் பூ'ணூ'ல் என்று எழுதுகிறோம்?

யோசித்ததுண்டா?

அது ஏன் இவ்வளவு நீளம் இருக்கிறது?

அந்நூல் பிராமண அடையாளம் மட்டும் தான் என்றால் மார்பில் சிறிதாக இருந்தால் போதுமே.

ஏன் தோளிலிருந்து குறுக்காக இடுப்பையும் தாண்டி  இவ்வளவு நீளம் இருக்க வேண்டும்?

யோசித்ததுண்டா?

நூல் என்றால் ஒரு நூல் போதுமே ஏன் முறுக்குக் கயிறு போல மூன்று (அல்லது ஆறு) நூல்களைப்  பிண்ணி போட வேண்டும்.

யோசித்ததுண்டா?

ஏனென்றால் அது நீளமான வில்லின் நாண்.

பலமானதாக இருக்க அதை மூன்று நூல்களால் பிண்ணி அணிந்துள்ளனர்.

பூண் என்பது வில்லின் இருமுனையிலும் மாட்டப்படும் உலோகக் கவசத்தையும் குறிக்கும்.

இதில் மாட்டப்பட்டு இழுக்கப்படுவதே பூணூல்.

போர் வீரர்கள் முன்னங்கையிலும் வெட்டவரும் வாளைத் தடுக்க பூண் அணிந்திருப்பர் (உலக்கைப் பூண்).
மார்பு கவசத்தையும் பூண் என்பர்.

பூணூல் இவ்வளவு நீளம்தான் இருக்க வேண்டும் என கட்டுப்பாடு போட்டு அதை நீள அளவை அளக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.

பூணூல் பிராமணர் மட்டும் போடுவதில்லை.

பார்ப்பனர், தச்சர், கொல்லர், (நாஞ்சில்) நாடார்கள், தெலுங்கரில் சில பிராமணரல்லாத சாதிகள் என பலரும் போடுகிறார்கள்.

பறையர்களும் பூணூல் அணிந்ததை 500 ஆண்டுகள் பழமையான நூலான ஞானவெட்டியான் கூறுகிறது.

ஆக பூணூல் பார்ப்பனரின் அடையாளம் இல்லை.

நான் இதற்கு முன்பு பூணூல் பற்றி போட்ட தொல்காப்பியத்தில் வரும் முப்புரிநூல் பூணூலா? என்ற பதிவில் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்த ஒரு பூணூல் அணிந்த பெண் சிலை படம் போட்டிருந்தேன்.
 
அது பிராமணப் பெண்ணாக இருக்கலாம் என்று சிலர் கூறினார்கள்.

அது சோழ அரசி செம்பியன் மாதேவி சிலையாம்.

(அதாவது ராஜராஜசோழனின் பெரியம்மா)...

இச்சிலை Freer Gallery of Art, Washington DC. அமெரிக்காவில் உள்ளதாம்.

திராவிடத்தை எதிர்க்கும் தமிழர்கள் பலரும் அதே திராவிடம் ஊட்டிய பார்ப்பன - வெறுப்பு சாதி வெறிக்கு இரையாகி உள்ளீர்கள்.

பூணூலை தூக்குக்கயிறாக்கி தமிழர் கழுத்தில் போட்டுமுன்பு திராவிடம் இழுத்தது. இப்போது தமிழ்தேசியம் இழுக்கிறது.

அதை மீண்டும் நாணேற்றி தமிழ்ப் பகைவர் மீது அம்பெய்வது எப்போது?

நம்ப முடியாத உண்மைகள்...


மர்ம மனிதர்கள் இந்த களப்பிரர்கள்...


கி பி 250 க்கும் 575 க்கும் இடைப்பட்ட கிட்டத்தட்ட  மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தின் இருண்டகாலம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

இக்காலத்தில் சேரர் சோழர் பரம்பரையினர் ஆட்சி செய்தாலும் அவர்களை வென்று ஆட்சி அமைத்தவர்கள் தான் களப்பிரர்கள் என்று வரலாறு சொல்லுகிறது..

இங்கு தான் பெரிய பிரச்சனையும் வரலாற்று ஆசிரியர்களுக்கு உள்ளது...

அதாவது இந்த களப்பிரர்களின் பூர்வீகம் எது என்று சரியாக தீர்மானிக்க முடியவில்லை..

ஆனால் இவர்கள் வீரத்தில் அன்றைய காலத்தில் எல்லோரையும் மிஞ்சும் அளவிற்கு இருந்தனர்..

அதன் தாக்கம் தான் சேர சோழ பாண்டிய வம்சத்தின் ஆட்சியை முற்றிலுமாக சண்டையிட்டு இவர்கள் அதாவது களப்பிரர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தனர்..

குழப்பமே இங்கு தான் ஏற்படுகிறது..

வீரம் நிறைந்த ஒரு வம்சத்தின் ஆட்சியை போரிட்டு வென்று இந்த களப்பிரர்கள் தமிழகத்தை பிடித்து ஆட்சி செய்தவர்கள், எந்த ஒரு சூழ்நிலையிலும் நாங்கள் தான் களப்பிரர்கள் என்று அடுத்த சந்தையினருக்கோ அல்லது பின்னால் வரக்கூடிய நமக்கோ எந்த ஒரு கல்வெட்டையும் அரசாங்கத்தின் சார்பில் செதுக்கவில்லை...

அதாவது இந்த களப்பிரர்கள் வரலாற்றில் சொற்ப அளவில் தான் இடம் பெற்றுள்ளனர், ஆனால் கிட்டத்தட்ட பிரமாண்ட பேரரசின் ஆட்சியை கவிழ்த்து 300 வருடங்களுக்கு மேல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆட்சி செய்துள்ளார்கள்..

இப்படிப்பட்ட திறமையுள்ள இவர்கள் இவர்கள் காலத்தில் எந்த ஒரு செப்பேடையும் எழுதவில்லை எந்த ஒரு கல்வெட்டையும் செதுக்கவில்லை எந்த ஒரு இலக்கிய புத்தகத்தையும் வடிக்கவில்லை..

[சில நூட்களை தவிர அது என்ன நூல்
என்று பின்னாளில் சொல்லுகிறேன்]..

ஒரு சிறிய நாட்டை பிடிக்கும் அயல் நாட்டு மன்னன் முதலில் அங்கு செய்வது தன்னை பற்றிய அறிமுகம் தான்  இந்த அறிமுகம் தான் காலம் காலமாக அழியாமல் இருக்கும் கட்டிடமாகவோ அல்லது இலக்கிய நூட்களாகவோ அல்லது செப்பேடுகளாகவோ இருக்கும்..

ஏன் இந்த களப்பிரர்கள் ஆட்சிக்கு முன்னாள் வாழ்ந்த ஆட்சியாளர்களின் செப்பேடு குறிப்புகள் கூட தமிழகத்தில் கிடைக்கிறது.

ஆனால் இந்த களப்பிரர்களின் 300 வருட ஆட்சியில் எந்த தடயமும் அறவே இல்லை, ஒன்றை தவிர...

அது என்ன ஒன்று ?

இதை பார்ப்பதற்கு முன் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும் கிட்டத்தட்ட இக்காலத்தில் தான் திருவள்ளுவர் வாழ்ந்து வந்தார் என்றும் அனுமானிக்கப்படுகிறது..

வள்ளுவரின் காலமும் களப்பிரர்களின் காலமும் இதனோடு ஒற்றுப்போகிறது..

ஆனால் வள்ளுவர் கூட இவர்களை பற்றி சின்ன குறிப்பு கூட ஏதும் சொல்லவில்லை..

அடுத்து சேர சோழ பாண்டியன், இவர்கள் இராஜ்யத்தில் இவர்களுக்கிடையே தீராத போர் பகை உள்ளது என்று நமக்கு தெரியும் இக்காலத்தில் தான் பல்லவர்களும் வீரம் நிறைந்தவர்களாக காணக்கிடக்கிறது..

பல்லவர்களின் வலிமையையும், சேரன், சோழன், பாண்டியன், இந்த நால்வருமே இந்த கலப்பிரர்களுக்கு அடங்கி தான் போயுள்ளனர் என்று தெரிகிறது..

இது தான் எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை..

தங்களுக்குளாகவே இடைவிடாத போர் செய்து பழக்கப்பட்ட தமிழ் மன்னர்கள் கிட்டத்தட்ட 10 தலைமுறை எப்படி இந்த களப்பிரர்களின் ஆட்சியில் அடங்கி இருந்தார்கள் என்று தெரியவில்லை..

அப்படி என்ன தான் இந்த களப்பிரர்கள் செய்தார்கள் ?

இவர்களை பற்றிய  நிறைய யூகங்கள் உள்ளது இவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்  என்றும்  இன்னும் நிறையவே  எல்லாமும் அனுமானம் தானே தவிர ஆதாரங்கள் எதற்குமே கிடைக்கவில்லை..

கள = பிறர்  என்பனது கலப்பையையும் குறிக்கும் ஆகவே இவர்கள் ஒரு உள்ளவர்கள் சமூகம் என்றும் கூட கூறுகின்றார்கள்..

இதைக்கூட நாம் என்று கொள்ளல்லாம் காரணம் இவர்கள் அந்நியர்கள் என்றால் அந்நிய பாஷையில் இவர்களது ஆட்சிகள் இருக்கும்..

இதையெல்லாம் கண்டு பிடிக்க உதவிய ஒரு சின்ன கல்வெட்டு தான் புதுக்கோட்டை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு இதன் அடிப்படையில் தான் இவர்களை பற்றி ஓர் அளவிற்கேனும் தெரிகிறது..

ஆமாம் மேலே சொன்ன ஒன்று என்ன ?

இவர்களது சில நூற்கள் என்ன ?
யாருமே ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு
விஷயம் இவர்களிடம் உண்டு அது என்ன தெரியுமா ?

மெய்க்கீர்த்திகள் .?

அப்படியென்றால் என்ன எல்லாவற்றுக்கும் பதில் அடுத்த பதிவில் சொல்லுகிறேன்...

இந்த பதிவில் யார்..? எந்த விதமான அறிவுப்பூர்வமாக கேள்விகள் கேட்டாலும், அதற்கு இப்போதே பதில் கூறி விடுகிறேன்..


நானே முதல் குற்றவாளி...

அங்கு வலிக்கும் போது நாம் இங்கு என்ன செய்து கொண்டிருந்தோம் என்று, உங்களை நீங்களே கேள்வி கேட்டு, அதற்கான பதிலை தேடுங்கள்..

நான் கூறிய பதில் வந்தால், அவனும் தமிழனே...

மனிதனுக்கு மட்டும் ஏன் மூளை மிக பெரியதாக வளர்ந்தது/இருக்கிறது?



மூளை பெரிதானதற்கு என்ன காரணம் என்று சரியாக தெரியாவிட்டாலும் சில யூகங்களின் படி பார்த்தால்...

1. ஆயுதங்கள் போன்றவற்றை வடிவமைக்கத் தொடங்கியதால் மூளை வளர்ச்சிக்கான அவசியம் இருந்தது.

2. பிற மனிதர்களுடன் நன்கு பழக ஆரம்பித்ததால் மூளை வளர்ந்ததாகவும்.

3. சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தால் மூளை வளர்ச்சி ஏற்பட்டது போன்ற கருத்துக்கள்  உள்ளன..

சரி நண்பர்களே, உங்களில் யாருக்காவது தெரியுமா இந்த கேள்விகளுக்கான விடைகள்? தெரிஞ்சா சொல்லுங்களேன்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் அதிமுக வின் ஏமாற்று வேலை...


இது தான் பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


ஒரு பக்கம் மட்டும் கோடு உயர்ந்து கொண்டே இருக்கும்,

சரி பரவாயில்லை, இன்னொரு கோடு தானாக வளரும் என நினைத்தால்,

அந்த கோடு-யை அழிப்பதும் அந்த உயர்ந்த கோடுகளாக தான் இருக்கும்..

இந்தியா அரசாங்கம் வணிகர்களுக்கு உடலை விற்கும்,

ஆனால் தன்நாட்டு மக்களிடம் பத்தினி போல் நடிக்கும், மானங்கெட்ட இந்திய அரசாங்கம்...

கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி நாயக்கரும் தமிழின அழிப்பும்...


இந்தியை எதிர்க்கும் 'காலி'களைச் சுட்டுத் தள்ளுங்கள் _ ஈ.வே.ரா

ஈ.வே.ரா எழுதுகிறார்...

ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது.

எதற்காக சட்டம்?
எதற்காக போலீஸ்?
எதற்காக போலீஸ் கையில் தடி? துப்பாக்கி எதற்கு?
முத்தம் கொடுக்கவா வைத்துள்ளாய்?
இது என்ன அரசாங்கம்?
வெங்காய அரசாங்கம்

(நூல்: கிளர்ச்சிக்குத் தயாராவோம் - ஈ.வே.ரா)..

மேற்கண்டது இந்தி எதிர்ப்பு நடந்து முடிந்த பிறகு ஈ.வே.ரா எழுதிய நூல்.

இந்தி எதிர்ப்பு நடந்த போது ஈ.வே.ரா தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் கொலைகார அரசுக்கு ஆதரவாகவும் எழுதிய கட்டுரைகளின் தலைப்புகள்...

இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் -16.1.1965..

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்துமீறிய வன்செயல் - 28.1.1965..

திருச்சியில் மாணவர்கள் காலித்தனம். பஸ்க்கு தீ. தபால் நிலையம் கொள்ளை - 10.2.1965..

போலீசார் அத்து மீறியதாக கூறப்படுபவை அபாண்டமே - 4.3.1965..

பொள்ளாட்சியில் போராட்டத்தை இராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10பேர் மாண்டனர் - 13.2.1965..

ஈ.வே.ரா வுக்கு தமிழ் மீது இருந்த வெறுப்பையும் தமிழர் மீது இருந்த கொலை வெறியையும் இதன் மூலம் அறியலாம்.

மூலக்கட்டுரை: 1965ஆம் ஆண்டு மொழிப்போரும் - பெரியாரின் எதிர்ப்பும்...

சிந்தித்துப் பார் தமிழா...


உலகமே ஏற்றுக்கொண்டுள்ள ஒரு பொய்யான கோட்பாடு...


குறிப்பு : இந்த பதிவை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை...

அரிவை தெரிவை பேரளம் பெண்ணென பாற்படு மங்கை பருவக்காதல் நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.

பேதை 1 வயது முதல் 8வயது வரை
பெதும்பை 9 வயது முதல் 10 வயது வரை.

[அடுத்த வார்த்தையை நன்றாக கவனிக்கவும்].

மங்கை 11 வயது முதல் 14 வயது வரை
மடந்தை 15 முதல் 18 வரை
அரிவை 19 முதல் 24 வயது வரை.

இவைகளை எதற்காக சொன்னேன் தெரியுமா ?

நமது நாட்டில் மிகப்பெரிய விஷயமாக கருதுவது குழந்தை திருமணம்..

இப்படி ஒரு கான்செப்டை உருவாக்கி பல பெண்களின் வாழ்க்கையை வீணாக தான் ஆக்கியுள்ளது இந்த நவீன சமூகம்.
எப்படி ?

ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கடினமாக இருப்பினும் இதுவே உண்மை ...

எயிட்ஸ நோயாளியின் எச்சிலோ அவர்களது உடம்பை தொடுவதாலோ எய்ட்ஸ் நோய் மற்றவர்களுக்கு பரவாது என்று சொல்லியும்..

அவர்கள் எய்ட்ஸ் நோயாளி என்று தெரிந்து விட்டால் நாம் அவர்களை புறக்கணிப்போம் இதற்க்கு காரணம்.?

நம் மனதில் இந்த நோயின் அதிகப்படியான தாக்கம் தான்..

அதே போன்று தடுப்பூசி என்பதே ஒரு மருத்துவ கொள்ளை தான், தடுப்பூசி சம்பந்தமாக நன்றாக ஆய்விட்டுவிட்டு படித்து விட்டு நம் குழந்தைக்கு தடூப்பூசி போடாமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு..

திடீரென்று எல்லோர் குழந்தைக்கும் தான் தடுப்பூசி போடுகிறார்களே நம் பிள்ளைக்கு போடாமல் போனால் பின்னாளில் ஏதேனும் பிரச்சனை வந்து விட்டால் என்ற மனநிலை சற்று யோசிக்க வைக்கிறதே..

இது எல்லாமும் நம் உள் மனதில் திணிக்கப்பட்ட விஷயங்கள் தான்..

அதே போன்று தான் குழந்தை திருமணம் என்பதும்..

குழந்தை பருவம் இது தான் என்று வரையறுத்து சொல்ல நம் ஆய்வாளர்கள் தயாரில்லை..

காரணம் பெண் பூப்பெய்தும் நாள் அவள் குழந்தை பருவத்தை கடந்து வாலிப பருவத்தை அடைகிறாள்..

பூப்பெய்வது சம்பந்தமாக படித்தால் பெண் திருமண தேவைக்காக அவள் கர்ப்பப்பை தயாராகி விட்டது என்பது தான் பொருள்..

ஆனால் பூப்பெய்தும் அவளை குழந்தையாக பார்ப்பது என்னவித
மனநிலை..?

அவள் பெற்றோருக்கு 30 வயதானாலும் அப்பெண் குழந்தை தான் அவர்களுக்கு..

அப்படியென்றால் 30 வயது குழந்தைக்கு திருமணம் செய்வது தவறு என்பதா என்ன மாதிரியான வாதம் இது..

மேலே சொன்ன வார்த்தைகளை இப்பொழுது படியுங்கள் அக்காலத்தில் வயது கணக்கிடும் முறையெல்லாம் கிடையாது..

மேலே சொன்ன வாக்கியங்கள் தான் வயதை கணிக்கும் முறை.

ஒரு பெண் பூப்பெய்து விட்டால் என்றால் அவளுக்கு சிறந்த கணவனை தேர்தெடுத்து கொடுப்பது தான் பெற்றோர்களின் கடமையாக அன்றைய காலம் இருந்தது..

மங்கை என்கிற வார்த்தையை நாம் கண்டிப்பாக கேட்டு இருப்போம், மங்கை என்பதே திருமண பெண் தான்..

சிணுங்கும் மங்கை ,
மலர் மங்கை ,
பூயவளின் மங்கை
மங்கையர் இவைகளெல்லாம் சங்ககால இலக்கியங்களில் மணப்பெண்ணை குறித்து சொல்லும் பாட்டுக்கள்..

அப்படியென்றால் நீங்கள் குழந்தை திருமணம் என்று வாதிட்டு கொண்டு இருக்கும் வயதில் நம் முன்னோர்கள் திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள்..

களியும் கேப்பையும் கரைத்து குடித்து வளர்த்தெடுக்கப்பட்ட 15 வயது பெண் திருமணம் செய்ய தகுதியாகவே தான்
இருந்தால் அன்றைய காலத்தில்..

இன்று இதெல்லாம் நவீன மயம் என்று சொல்லிவிட்டு இவளுக்கு இந்த வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்..

இன்னொரு பக்கம் பாருங்கள்..

குழந்தை திருமணம் என்று பிதற்றும் பலர் ஆண்களை கணக்கில் கொள்ளவே மாட்டார்கள்..

காரணம் ஆணுக்கு அது தேவை இல்லை
பெண்ணுக்கு தான் வயது வித்யாசம் தேவை..

இது என்ன வாதம் ?

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒரு பெண் பூப்பெய்து விட்டால் என்றால் தயாராகி விடுகிறாள்..

25 வயது தான் திருமணம் வயது என்று அவளுக்குள் புகட்டப்பட்டு அந்த வயதிற்குள் கொடுக்க வேண்டிய அத்துணை அனாசார சிந்தனைகளை அவ்வளவையும் அவள் மூலையில் காட்டுவதற்காகவே இப்படி உருவாக்கினார்கள்..

இதன் முடிவு ? பள்ளியில் படிக்கும் பெண்கள் பெரும்பாலானவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்..

சிலர் இந்த கட்டத்தை தாண்டி வந்தால் கல்லூரியில் தங்களது கல்லூரி பருவத்தில் சிலரால் சிலரை வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுகிறார்கள்..

திருமணம் ஆகிவிட்டால் படிக்க மாட்டார்கள் என்ற கான்செப்ட் எதற்காக உருவாக்கியுள்ளனர் என்பதே ஆச்சர்யம் தான்..

படிப்பிற்கும் திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இன்னும் சொல்லப் போனால் திருமணம் ஆகி கல்லூரிக்கு சென்றால் மன ரீதியாகவும் அப்பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பும் நிம்மதியும்  உண்டு..

இந்த கட்டுரை உங்களை குழப்புகிறது என்றால் உங்கள் தாத்தா பாட்டி எந்த வயதில் திருமணம் செய்தார்கள் என்று கேளுங்கள்..

அவர்கள் காலத்தில் கற்பழிப்புகள் நடந்தேறியுள்ளதா ? என்று கேளுங்கள்..

இதற்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றினாள் நான் பழமைவாதி என்று கூறிவிட்டு சென்று விடுங்கள்..

ஆனால் நீங்கள் சொல்லும் இந்த நவீனயுகம் 7 வயது குழந்தையை கூட குழந்தையாக நினைக்கவில்லை அவளும் பெண் தானே என்று தான் கொடூரமாக சிதைக்கப்பட்டு இருக்கிறாள்..

இதை நாம் ஆதரவில்லை அதே நேரத்தில் அவனுக்கு முந்தியே திருமணம் செய்து வைத்து இருக்கலாம் என்கிறேன்..

அட அந்த குழந்தையாவது காப்பாற்றி இருக்கலாமே ?

நான் இந்த பதிவில் சொல்லியுள்ள சில வார்த்தை ஏற்றுக்கொள்ள ஏதுவாக இருக்காது என்று தோன்றினாள்.. அதை மட்டும் எடுத்துக்கொண்டு விவாதம் செய்ய வேண்டாம் முழுவதையும் படியுங்கள்..

நான் என்ன தான் சொல்ல வருகிறேன் என்று புரியும்..

மறுபடியும் நம் பாரம்பர்யத்தையே ஒருமுறை வாசிப்போம்..

அரிவை தெரிவை பேரளம் பெண்ணென பாற்படு மங்கை பருவக்காதல் நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே...

நம்ம மக்களை போராடவிடாமல் தடுக்க துப்பாக்கி சூட்டை ஆதரித்தது. அதற்காக பதிவிட்டதே இந்த துரோகிகளின் வேலை...


இவர்களின் இருப்பே கார்ப்பரேட் தீவிரவாதிகளின் ஊடுருவல்..

என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தற்கொலை முயற்சி - உரிய நீதி தேவை...


என்எல்சி தொழிலாளர்கள் 25 பேர் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்ற தகவல் அதிர்ச்சி அளிக்கின்றது. சுரங்க விரிவாக்கத் திட்டங்களுக்கு வீடு மற்றும் நிலங்களைத் தாரை வார்த்துக் கொடுத்த 13000 பேர், நிரந்தரப் பணி வாய்ப்பு இன்றி ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். அவர்களுள், முதல் சுரங்க விரிவாக்கத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்  40 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதுடன், வேலை நாட்களையும்  பாதியாக என்.எல்.சி. நிர்வாகம் குறைத்தது. ஏற்கனவே மிகக் குறைந்த ஊதியத்தில் வாழ்க்கைப்பாட்டுக்குத் திண்டாடி வரும் நிலையில், இப்போது வேலை நாட்களையும் பாதியாகக் குறைத்ததால், அத்தொழிலாளர்களின் குடும்பங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

தங்களுக்கு முழு பணி நாள் அளிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே பணியாற்றிய முதல் சுரங்க விரிவாக்கத்தில் பணியமர்த்த வேண்டும் என்றும் பல கட்டங்களாக அறவழியில் போராடி வந்தனர்.

அவர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்காததால், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 25 பேர் இன்று முதல் சுரங்க விரிவாக்க நுழைவாயிலில் நஞ்சு அருந்தி உள்ளனர். அதில் 2 தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது. 25 தொழிலாளர்களையும் காப்பாற்றுவதற்கு உயர்ந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். 

ஏதேனும் உயிர் இழப்புகள் நேர்ந்தால், அதற்கு மத்திய மாநில அரசுகளும், நெய்வேலி நிலக்கரி நிர்வாகம், காவல்துறையும்தான் பொறுப்பு ஆகும். 

உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; வீடு, நிலங்களைக் கொடுத்துவிட்டு, வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, சட்டப்படியும், நியாயப்படியும் உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்...

ஸ்டெர்லைட் மூன்றாவது முறையாக மூடப்பட்டுள்ளது...


எங்களை எப்படி சுட்டாங்கன்னு தெரியுமா? அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மௌனமாக இருந்த ஓ.பி.எஸ்...


ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகரமே தன்னெழுச்சியாக போராடியது. போலீசாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள். 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவர்களை பார்வையிடுவதற்காகவும், ஆறுதல் கூறுவதற்காகவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மே 28ஆம் தேதி வருவதாக இருந்தது. அவர் வருகைக்கு ஏற்ப முன்னதாக மே 27 முதல் மாவட்டத்தில் விதித்திருந்த 144 தடை உத்தரவை, ஆட்சியர் விலக்கிக்கொண்டார்.

இன்று காலை தூத்துக்குடி சென்ற ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட அலுவலகம் சென்றார். அங்கு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி விஜயகுமார் யாதவ், ஐஜி சைலேஷ்குமார் யாதவ், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நடந்த விவரங்களை கேட்டு அறிந்த ஓ.பன்னீர்செல்வம் அதன் பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேதடைந்த வாகனங்களை பார்வையிட்டர். அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு வந்தார்

துணை முதல்வர் வருவதால் ஏதேனும் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக மருத்துவமனையையை சுற்றிலும், மருத்துவமனைக்குள்ளும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. காலை நேரத்தில் அவர் வந்ததால் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. நோயாளிகளின் உறவினர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சிகிச்சைப் பெற்று வருபவர்களை பார்த்துக்கொண்டே வந்த ஓ.பன்னீர்செல்வம் அனைத்துக் கல்லூரி மாணவர் அமைப்பின் தலைவர் சந்தோஷ் ராஜ் என்பவரையும் பார்த்தார்

அப்போது சந்தோஷ் ராஜ், மாநில அரசான உங்களுக்கு அதிகாரம் இருந்தும் ஏன் இந்த ஆலையை மூடவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் மௌனமாக இருந்தார். பின்னர், வழக்கு இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற பன்னீர்செல்வத்திடம், எங்கள் உயிருக்கு உத்திரவாதமில்லை, போலீசார் என்னை சுற்றி நின்றுகொண்டு தாக்கினர். எங்களை சுட சொன்னது யார்? உங்களுக்கு தெரியும்... சொல்லுங்கள்... என்றார். தம்பி நான் சொல்லக்கூடிய நிலையில் இல்லை, சொல்லக் கூடாத இடத்தில் நிற்கிறேன். உடம்ப பார்த்துக்கொள்ளுங்கள். விசாரணை கமிஷன் அமைத்திருக்கிறோம். நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு மற்றவர்களை பார்க்க புறப்பட்டார்.

அனைவரையும் பார்வையிட்ட பின்னர், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று சந்தோஷ் ராஜீடம் வந்த ஓ.பன்னீர்செல்வம், தம்பி நீங்க சொன்னது அனைத்தும் என் நெஞ்சில இருக்கு. நான் இது சம்மந்தமாக பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என கூறிவிட்டு புறப்பட்டார்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் அபார வளர்ச்சி யாருக்கு..?


அம்பானிக்கும், அதானிக்கும்...

அப்போ மக்களுக்கு..?

அறிவு மங்கிப்போகும் அபார வளர்ச்சி...

அனைத்தையும் ஆராயுங்கள்...


கிழக்கு தெருவில் திருடனை பார்த்து நாய் குறைக்கும்..

அதை கேட்ட தெற்கு தெரு நாய் தானும் திருடனை பார்த்ததுபோல் பெரிதாய் காட்டிக் கொண்டு குறைக்கும்.

இதனை அடுத்து ஊர் முழுவதும் நாய் குறைப்பு சத்தம் கேட்கும்.

உண்மையில் திருடனை பார்த்தது ஒரே நாய்தான். அதேபோல் உண்மையில் கடவுளை உணர்ந்தவன் மூலைக்கு ஒருவன்தான் இருக்கிறான்.

எனவே அடுத்தவன் கூறுவதை நாம் ஏன் உண்மை என எடுத்து கொள்ள வேண்டும்.

சிவம் பலவானாலும் ஒவ்வொன்றிற்கும் அறிவு உண்டு.

நீங்களாக உணர முயற்ச்சியுங்கள், புராணங்களை படியுங்கள். ஆனால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

என் கருத்துக்களை கூட நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

எப்போது உங்களுக்குள் ஏன்? எப்படி? எதனால்? என்பது போன்ற கேள்விகள் எழுப்புகிறதோ அப்போதே நீங்கள் அடுத்த படிக்கு உயரத் துவங்குகிறீர்கள்...

மாலிப்டினம்...


ஒவ்வொரு வருடமும் இரண்டு உலகப் போர் நடந்து கொண்டு உள்ளது...


இரண்டாம் உலக போரில் கொல்லப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை 60 இலட்சம்.

இன்று உலகமெங்கும் பட்டினிச்சாவு எண்ணிக்கை 130 இலட்சம்.

அப்படியாயின் இன்று ஒவ்வொரு ஆண்டும் இரண்டு உலகப்போரில் சாகும் மக்கள் பசியினால் உலகம் முழுவதும் சாகிறார்க்ள்.

இந்தியாவில் மட்டும்  வருடத்திற்கு 10,000 பட்டினியால் சாகிறார்கள்.

எம் மக்கள் ஒருவகையில் இந்த 130 லட்சம் மக்களுமே அதிஷ்டசாலிகள்.

ஏன் தெரியுமா ?

ஏறக்குறைய 700 கோடி பேர் உள்ள உலக மக்கள் தொகையில் 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பசியின் கொடுமையை அனுபவித்து கொண்டே இரவு படுக்க செல்கிறார்கள்..

இந்தியாவில் அண்டை நாடுகள் போர் தொடுத்து வந்து இந்தியர்களை கொன்று குவித்தால் அதற்கு பொறுப்பு இந்தியாவின் பிரதமர் தான்..

அதே போன்று பசியால் வாடி வருடத்திற்கு 10,000 பேர் சாகிறார்கள் என்றால்கூட பிரதமர் ஆட்சி செய்ய தெரியாமையே காரணம்..

இத்தனை உயிரையும் காப்பாற்றி விட்டு வாருங்கள் பிறகு இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறோம்...