30/05/2018

மர்ம மனிதர்கள் இந்த களப்பிரர்கள்...


கி பி 250 க்கும் 575 க்கும் இடைப்பட்ட கிட்டத்தட்ட  மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தின் இருண்டகாலம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

இக்காலத்தில் சேரர் சோழர் பரம்பரையினர் ஆட்சி செய்தாலும் அவர்களை வென்று ஆட்சி அமைத்தவர்கள் தான் களப்பிரர்கள் என்று வரலாறு சொல்லுகிறது..

இங்கு தான் பெரிய பிரச்சனையும் வரலாற்று ஆசிரியர்களுக்கு உள்ளது...

அதாவது இந்த களப்பிரர்களின் பூர்வீகம் எது என்று சரியாக தீர்மானிக்க முடியவில்லை..

ஆனால் இவர்கள் வீரத்தில் அன்றைய காலத்தில் எல்லோரையும் மிஞ்சும் அளவிற்கு இருந்தனர்..

அதன் தாக்கம் தான் சேர சோழ பாண்டிய வம்சத்தின் ஆட்சியை முற்றிலுமாக சண்டையிட்டு இவர்கள் அதாவது களப்பிரர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தனர்..

குழப்பமே இங்கு தான் ஏற்படுகிறது..

வீரம் நிறைந்த ஒரு வம்சத்தின் ஆட்சியை போரிட்டு வென்று இந்த களப்பிரர்கள் தமிழகத்தை பிடித்து ஆட்சி செய்தவர்கள், எந்த ஒரு சூழ்நிலையிலும் நாங்கள் தான் களப்பிரர்கள் என்று அடுத்த சந்தையினருக்கோ அல்லது பின்னால் வரக்கூடிய நமக்கோ எந்த ஒரு கல்வெட்டையும் அரசாங்கத்தின் சார்பில் செதுக்கவில்லை...

அதாவது இந்த களப்பிரர்கள் வரலாற்றில் சொற்ப அளவில் தான் இடம் பெற்றுள்ளனர், ஆனால் கிட்டத்தட்ட பிரமாண்ட பேரரசின் ஆட்சியை கவிழ்த்து 300 வருடங்களுக்கு மேல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆட்சி செய்துள்ளார்கள்..

இப்படிப்பட்ட திறமையுள்ள இவர்கள் இவர்கள் காலத்தில் எந்த ஒரு செப்பேடையும் எழுதவில்லை எந்த ஒரு கல்வெட்டையும் செதுக்கவில்லை எந்த ஒரு இலக்கிய புத்தகத்தையும் வடிக்கவில்லை..

[சில நூட்களை தவிர அது என்ன நூல்
என்று பின்னாளில் சொல்லுகிறேன்]..

ஒரு சிறிய நாட்டை பிடிக்கும் அயல் நாட்டு மன்னன் முதலில் அங்கு செய்வது தன்னை பற்றிய அறிமுகம் தான்  இந்த அறிமுகம் தான் காலம் காலமாக அழியாமல் இருக்கும் கட்டிடமாகவோ அல்லது இலக்கிய நூட்களாகவோ அல்லது செப்பேடுகளாகவோ இருக்கும்..

ஏன் இந்த களப்பிரர்கள் ஆட்சிக்கு முன்னாள் வாழ்ந்த ஆட்சியாளர்களின் செப்பேடு குறிப்புகள் கூட தமிழகத்தில் கிடைக்கிறது.

ஆனால் இந்த களப்பிரர்களின் 300 வருட ஆட்சியில் எந்த தடயமும் அறவே இல்லை, ஒன்றை தவிர...

அது என்ன ஒன்று ?

இதை பார்ப்பதற்கு முன் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும் கிட்டத்தட்ட இக்காலத்தில் தான் திருவள்ளுவர் வாழ்ந்து வந்தார் என்றும் அனுமானிக்கப்படுகிறது..

வள்ளுவரின் காலமும் களப்பிரர்களின் காலமும் இதனோடு ஒற்றுப்போகிறது..

ஆனால் வள்ளுவர் கூட இவர்களை பற்றி சின்ன குறிப்பு கூட ஏதும் சொல்லவில்லை..

அடுத்து சேர சோழ பாண்டியன், இவர்கள் இராஜ்யத்தில் இவர்களுக்கிடையே தீராத போர் பகை உள்ளது என்று நமக்கு தெரியும் இக்காலத்தில் தான் பல்லவர்களும் வீரம் நிறைந்தவர்களாக காணக்கிடக்கிறது..

பல்லவர்களின் வலிமையையும், சேரன், சோழன், பாண்டியன், இந்த நால்வருமே இந்த கலப்பிரர்களுக்கு அடங்கி தான் போயுள்ளனர் என்று தெரிகிறது..

இது தான் எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை..

தங்களுக்குளாகவே இடைவிடாத போர் செய்து பழக்கப்பட்ட தமிழ் மன்னர்கள் கிட்டத்தட்ட 10 தலைமுறை எப்படி இந்த களப்பிரர்களின் ஆட்சியில் அடங்கி இருந்தார்கள் என்று தெரியவில்லை..

அப்படி என்ன தான் இந்த களப்பிரர்கள் செய்தார்கள் ?

இவர்களை பற்றிய  நிறைய யூகங்கள் உள்ளது இவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்  என்றும்  இன்னும் நிறையவே  எல்லாமும் அனுமானம் தானே தவிர ஆதாரங்கள் எதற்குமே கிடைக்கவில்லை..

கள = பிறர்  என்பனது கலப்பையையும் குறிக்கும் ஆகவே இவர்கள் ஒரு உள்ளவர்கள் சமூகம் என்றும் கூட கூறுகின்றார்கள்..

இதைக்கூட நாம் என்று கொள்ளல்லாம் காரணம் இவர்கள் அந்நியர்கள் என்றால் அந்நிய பாஷையில் இவர்களது ஆட்சிகள் இருக்கும்..

இதையெல்லாம் கண்டு பிடிக்க உதவிய ஒரு சின்ன கல்வெட்டு தான் புதுக்கோட்டை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு இதன் அடிப்படையில் தான் இவர்களை பற்றி ஓர் அளவிற்கேனும் தெரிகிறது..

ஆமாம் மேலே சொன்ன ஒன்று என்ன ?

இவர்களது சில நூற்கள் என்ன ?
யாருமே ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு
விஷயம் இவர்களிடம் உண்டு அது என்ன தெரியுமா ?

மெய்க்கீர்த்திகள் .?

அப்படியென்றால் என்ன எல்லாவற்றுக்கும் பதில் அடுத்த பதிவில் சொல்லுகிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.