07/06/2018

சர்க்கரை நோயை கட்டு படுத்தும் கோவைக்காய்...


நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியதுதான் கோவைக்காய்.

நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் வைக்க நாம் சாப்பிட வேண்டி உணவு பற்றி பார்க்கிறோம். சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது.

கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

நீரிழிவு நோய்யை உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளால் இதைக் கட்டுப் படுத்த முடியும். சர்க்கரை நோய் கட்டுப் பாட்டுக்குள் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாவிட்டால் அதைப் போன்ற ஆபத்தான நோய் வேறு எதுவுமில்லை.

நோயாளிகள் பாகற்காய், வேப்பிலைச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிக்கடி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறைந்து விடுகிறது என்று சாப்பிட்ட பலர் கூறுகிறார்கள்.ஆனால் அது ரொம்ப ரொம்ப கடினம்.

சாப்பிடுவர்களின் முகத்தைப் பார்த்தால் அவர்கள் முகம் எத்தனை கோணத்தில் போகும் என்று பார்ப்பவருக்கு மட்டும் தான் தெரியும். இந்த நிலையில் கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கோவைக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கோவைக்காய் பற்றி சில துளிகள்...

மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை என்ற பிரிவுகள் உண்டு. இதன் பூ வெள்ளை நிறமானதாகும். இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும்.

இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு.கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொரியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. மற்றும் கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு.

நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்ப முடையதாகத்தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம்.பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

கோவைக்காயின் ச‌த்துக்க‌ள்...

உயிர்ச்சத்து (vitamin) ஏ 156 மைக்ரோ கிராம் (Micro gram), ஃபோலிக் அமிலம் (Folic acid), கால்சியம் (Calcium), எரியம் (phosphorus), இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன.

கண்குளிர்ச்சியை உண்டாக்கும். இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும். கொவ்வங்காய் கோரோசனை மாத்திரை செய்யப் பயன்படுகிறது. நாக்கில் உள்ள வெடிப்பு, நாக்குப் புண், வாய்ப்புண் நீங்கும்.

கோவக்காயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். இக்காய் கொஞ்சாம் சூடு. அதனால் உதடு வெடிப்பு, வயிற்றுப் புண் ஏற்ப்படும்.

ஆனால் நாம் நீரிழிவு நோய்யாளிக‌ள் நீர் மோர், எலுமிச்சை சாறு என்று எடுத்துக் கொள்ளுவ‌தால் இந்த‌ சூடு அதிக‌ம் ஏற்ப்ப‌டாது. ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.முக்கியமா முற்றின கோவைக்காய் வாங்ககூடாது.

பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். இக்காய்யை நீரிழிவு நோயாளிகள் மட்டும் அல்லாமல் எல்லரும் சாப்பிட்டலாம்...

தூத்துக்குடி மக்களே உஷார்.. பாஜக - அதிமுக - ஸ்டெர்லைட் ஆலை சதி ஆரம்பம்...


தினமலரின் உச்சகட்ட எச்சைத்தனம் இதுதான்...


அவாளுக்கு நக்கலாத்தானே இருக்கும் ஏன்னா செத்தது நம்மவாதானே.....

முன்னாள் தீட்டால் கொன்றான் எம்மை இப்போது அரசு உதவியுடன் நீட்டால் கொல்கிறான்...

வங்கிகளின் அரசியல் ஆபத்தானது...


அவர்கள் உங்களை கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்..

நீங்கள் இந்த அடிமை பொருளாதார கட்டமைப்பில் இருந்து சிறிதும் விலகிவிட கூடாது என்பதற்காக..

உங்கள் வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் கடன் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி

இறுதிவரை நீங்கள் உழைக்க வேண்டும் என உளவியலை திணிக்கின்றனர்...

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் கடலாடி சத்திய மூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை...

     
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.

1991-96-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர் கடலாடி சத்தியமூர்த்தி. இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.83 லட்சம் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் அவரது மனைவி சந்திராவுக்கும் தொடர்பிருப்பதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் கீழமை நீதிமன்றத்தில் சத்தியமூர்த்தி விடுவிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை முறையீடு செய்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கீழ் நீதிமன்றம் விடுவித்த நிலையில் உயர்நீதிமன்றம் தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது...

இயற்கையை தேடி...


சுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா?


சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை விசேடமாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.

மண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும்.

மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள்.

மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும்.

ஃப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எசு (ஸ்ஸு)க்குக் கீழே இருக்கும் தெள்ள தெளிவாக (Crystal Clear) குடிநீர் இது.

குடிக்கும்போது ஏதாவது ஒரு சுவை (flevour) வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.

தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள்.

ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை இரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது...

சினிமா மோகம் எப்போது தான் போகுமோ..?


சென்னை கமலா திரையரங்கில் காலா திரையிடப்படாது...


அதற்கு பதில் ஜூராசிக் வேல்டு திரைப்படம் திரையிடப்படும் - கமலா திரையரங்கின் மேலாளர் கோபி தகவல்...

வானம் பாடி பறவைகள்...


தரிசல் நிலங்கள், ஆற்றுப் படுகைகள், வயல் வெளிகள் இவற்றில் ஈர மண்ணில் மாட்டுக் குள்ம்பினால் ஏற்பட்ட குழி அல்லது இயற்கையிலேயே உள்ள சிறிய பள்ளம் இவற்றில் காய்ந்த வேர் இலை சரகுகளைக் கொண்டு கிண்ணம் போன்ற தனது கூட்டினை அமைக்கும் வானம்பாடி. ஆமாம், இது பாடுவது எப்போது ?

சாதாரணமாக மாசிமாதம் (பிப்ரவரி) முதல் ஆடிமாதம் (ஜுலை) வரையிலான நாட்களில் ஆண் வானம்பாடி தான் உட்கார்ந்திருக்கும் கல்லிலிருந்தோ அல்லது செடியிலிருந்தோ செங்குத்தாக மேலே பறந்து கண்ணுக் கெட்டாத தூரத்தை அடையும்.

பின் தன் இறக்கைகளை மெதுவாக அடித்துக் கொண்டு ஒரே இடத்தில் இருந்தபடி தன் அழகான குரலில் சிறிது நேரம் இசை எழுப்பும். அவ்வாறு இசை எழுப்புவது சில சமயம் ஐந்து நிமிடங்களுக்குக் கூட நிகழும்.

பின் தன் இறக்கைகளை மடித்துக் கொண்டு ஒரு கல் விழுவது போல செங்குத்தாக கீழே பல மீட்டர் தூரம் இறங்கி தன் இறக்கைகளை விரித்துக் கொண்டு மீண்டும் சிறிது நேரம் இசை எழுப்பும்.

இவ்வாறு இரண்டு மூன்று மட்டங்களில் பாடி முடித்தபின் வானம்பாடி முன்பு உட்கார்ந்து இருந்த இடத்தினை வந்தடையும்.

இந்த இசைக் கச்சேரி வாழ்க்கைத் துணை கிடைக்கும் வரை தொடரும். இப்படி வானத்தில் இசை எழுப்பி துணை தேடுவதை ஒரு ஆண் குருவி மட்டடுமின்றி பல ஆண் குருவிகள் போட்டி போட்டுக் கொண்டு செய்வதும் உண்டு.

முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தபின், தாய் தந்தை ஆகிய இரு பறவைகளுமே அவற்றுக்கு உணவளிப்பதில் பங்கேற்கும்.

நம் நாட்டில் கணப்படும் வானம்பாடிகளில், மூன்று முக்கிய வகைகள் உண்டு. அவை கொண்டைகொண்ட வானம்பாடி (Crested lark), ஆகாசத்து வானம்பாடி (Skylark),சாம்பல் தலை வானம் பாடி (Ashy crowned finch lark) என்பவையாகும்...

கல்வியும் அம்பானி - பிர்லா வின் வியாபார திட்ட அறிக்கையும்...


தமிழ் தேசிய தலைவர்களுக்கு பாஜக - அதிமுக செக்...


நேரடியான அரச பயங்கரவாதம் தமிழ்நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது...

பாஜக மோடியின் நீட் தேர்வும் உண்மையும்...


ஹாப்பிட் (Hobbit) என்றால் என்ன?


ஹாப்பிட் என்றால் மனிதனுக்கு சற்றே முன்னர் வாழ்ந்த மூதாதையர் என்பதே இதுவரையிலான கருத்து.

ஆனால், தொடர்ந்து ஆய்வில் வெவ்வேறு வகையான ஹாப்பிட்டுகள் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்டு கண்டறியப்படுவதால் இந்த வகை மனித இனம் ஒன்றுதானா இல்லை அவ்வாறு பல்வேறு வகை இருக்கிறதா என்று இன்னும் விளங்கவில்லை...

கூர்க்கா படை பாதுகாப்புடன் டிரம்ப் - கிம் ஜோங் உன் சந்திப்பு...


ஒரு மருத்துவக் கல்லூரி கட்ட சுமார் 500 கோடி செலவாகிறது. அதில் ஒரு வருடத்துக்கு 100 மருத்துவர்களை மட்டுமே உருவாக்க முடிகிறது...


ஒரு தனியாரால் இவ்வளவு தொகையை சேவையாக செலவிட முடியாது. அதனாலேயே தனியார் மருத்துவ கல்லூரி கட்டணங்களும் மேனேஜ்மண்ட் கோட்டாவுக்கு கேட்கப்படும் தொகையும் கோடிக்கணக்கில் நிர்ணயிக்கப்படுகிறது.  அவ்வளவு செலவு செய்து ஒருவர் மருத்துவம் படித்தால் அவராலும் அதை சேவையாக செய்ய முடியாது. முதலீடாகத்தான் செய்ய முடியும்.  பின் போட்ட பணத்துக்கு எத்தனை மடங்கு எடுக்க முடியும் என்றே யோசிக்க முடியும். இங்கேதான் பலவிதமான மருத்துவ வணிகம் மற்றும் கொள்ளை ஆரம்பிக்கிறது.

ஆனால் அரசு மருத்துவ கல்லூரிகளிலோ 5 வருடமும் சேர்த்து சில ஆயிரங்களில் படித்து முடித்துவிட முடிகிறது. இதில் படித்தவர்களால் மட்டுமே மருத்துவத்தை சேவையாக பார்க்க முடியும். ஒரு நல்ல சம்பளத்துடன் மனம் நிறைந்த வேலையாக மருத்துவத்தை பார்க்க முடியும்.

தற்போது சுமார் 40 தனியார் கல்லூரிகளும் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளும் தமிழகத்தில் உள்ளன.

ஒவ்வொரு வருடமும் 1,80,000 கோடி செலவுக்கணக்கு எழுதும் தமிழக அரசு ஏன் 500 கோடியில் மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கு இவ்வளவு யோசிக்க வேண்டும்?

உலக சுகாதார அமைப்பு குறைந்த பட்சம் பத்தாயிரம் பேருக்கு 10 மருத்துவர் இருக்க வேண்டும் என்கிறது. ஆனால் தமிழகத்திலோ 8 பேர்தான் இருக்கின்றனர். நாகப்பட்டினம் திருவண்ணாமலை போன்ற இடங்களில் பத்தாயிரம் பேருக்கு மூன்று மருத்துவர்கள் கூட இல்லாத அவலம்.

தனியார் மருத்துவ கல்லூரிகள்  அதிகமாக இருப்பதன் விளைவு சென்னை போன்ற பணமுள்ள பிரதேசங்களில் மருத்துவர்கள் அதிக அளவில் 'சேவை' செய்கின்றனர். அதாவது பத்தாயிரம் பேருக்கு 18 பேர் என்ற விகிதத்தில்!

நீதியும் சமத்துவமும் நிலவும் மாநிலமாக நமது மாநிலம் திகழ வேண்டுமானால் அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக அரசு மருத்துவமனைகள் துவங்கப்பட்டு அதில் அரசு மருத்துவர்கள் முழு நேரம் இருந்து முழுமையாக சேவை ஆற்ற வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளை மேலும் ஊக்கப்படுத்துவது மருத்துவத்தை வியாபாரமாக்கி பெரிய அநீதியை மக்களுக்கு ஏற்படுத்தி விடும். இது ஏற்கனவே பெரிய அளவில் நடந்தும் விட்டது.

தேவையே இல்லாமல் சுமார் 2.5 லட்சம் பொறியியல் சீட்டுகளை உருவாக்கி வேலை இல்லா எஞ்சினியர்களை உருவாக்கி வைத்துள்ளோம். ஆனால் நமது கிராமங்களிலும் பணநடமாட்டம் குறைவாக உள்ள. பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகளிலேயே மருத்துவர் கடவுள் போல எப்பவாவது காட்சி அளிக்கிறார். கண்ணுக்குத் தெரியாமல் சொல்லமுடியாத அளவு துன்பத்தை மக்கள் தினமும் அனுபவிப்பதுடன் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

ஆரோக்கியமும் சுகாதாரமும் நமது பிறப்புரிமை. இதை பணக்காரர்களுக்கு மட்டுமுள்ள உரிமையாக மாற்றக்கூடிய எந்த அரசு முடிவுகளும் கொள்கைகளும் தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டியவை. ஈவிரக்கமற்ற சமுதாயமே மருத்துவத்தில் லஞ்சமும் ஊழலும் நிகழ்வதை வேடிக்கை பார்க்கும். இன்று நாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்...

பாஜக மோடியின் நீட் தேர்வு கொலைகள்...


நிபா’ வைரஸ் : கேரளாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தடை விதிப்பு...


‘நிபா’ வைரஸ் பாதிப்பையடுத்து கேரளாவில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தடை விதித்து உள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவியது. இந்த காய்ச்சல் தொற்றுநோய் ஏற்பட்ட வவ்வால்கள் மூலம் பிற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவுவதாக தெரியவந்தது. இந்த வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மாநிலத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது அங்கு வைரஸ் தாக்கம் குறைந்து உள்ளது என மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிபா வைரஸ் தொற்று எற்பட்டதுமே பாதிப்பை தொடங்கி விடுகிறது, 14 நாட்களில் ஒருவருடைய உயிரை குடிக்கும் வைரசாக உள்ளது. 10-12 நாட்கள் வரையில் பாதிப்பாக நகரும் வைரஸ் அதற்கு பின்னர் உயிரை எடுக்கிறது. வைரஸ் மூளையின் நரம்பை பாதிக்க செய்து, வீக்கம் அடைய செய்து உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. மூச்சுவிட முடியாமை, குறைந்த இரத்த அழுத்தம், காய்ச்சல், தலைவலி, மயக்கம், குழப்பமான மனநிலை, கோமா போன்றவை வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பழம் திண்ணி வவ்வால்கள், பறக்கும் நரிகள் மூலமாகதான் நிபா வைரஸ் பரவி வருகிறது. அவைகளிடம் இருந்து வைரஸ் பிற உயிரினங்களுக்கு பரவுகிறது.

இந்நிலையில் சவுதி அரேபியா கேரளாவில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கு தடையை விதித்து உள்ளது, நிபா வைரஸ் அச்சம் காரணமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது என கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. மே 29-ம் தேதி ஐக்கிய அரபு எமிரெட்ஸ் கேரளாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தது.

கேரளாவில் இருந்து 100 டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை ஏற்கனவே ரத்து செய்துவிட்டது. இதற்கிடையே நிபா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சையளிக்கும் மருந்துக்களுடன் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் சுகாதார அமைப்பு விபிஎஸ் ஹெல்த்கேர் விமானம் ஒன்றை கேரளாவிற்கு அனுப்பியது...

நெகிழி பற்றிய இந்த விழிப்புணர்வு நோட்டீஸ்கள் உவன்களால் இன்று தஞ்சாவூரில் விநியோகிக்கப் பட்டது...


வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருளாகும்...


ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

தென் இந்தியர்களும் பழங்காலம் முதலே பயன்படுத்தி உள்ளனர். அரேபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறார்கள்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும்.

இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன.

எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பலநாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும்?

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

சம அளவு வெங்காயச் சாறு வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி குறையும்.

வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சமஅளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட காது இரைச்சல் மறையும்.

வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயத்தை அவித்து தேன் கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறுவெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடி வளரும்.

வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி. நோய் குறையும்.

வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப்போட தலைவலி குறையும்.

மாரடைப்பு நோயாளிகள். ரத்தத்தில் கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

சின்னவெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்...

பாஜக - அதிமுக வின் திருட்டு அரசியல்...


போராடி சுதந்திரம் வாங்கியதே நாங்கள் இனி போராடக் கூடாது என்பதற்குதானடா...

உங்களால் காய்ச்சல், ஜலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது... நீங்கள் அப்படி நினைக்காதவரை...


அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றை உள்ளே அனுப்புகிறீர்கள்...

நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அதை பற்றி பேசாதீர்கள்..

அது உங்களுக்கு இன்னும் அதிகமாக வரவேண்டுமென்றால் மட்டுமே பேசுங்கள்....

பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் பல நோய்களை கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்.

முடி கொட்டுதல், அதிக எடை, தைராய்டு, மூட்டு வலி, கண்பார்வை பிரச்சனைகள், மாறுபட்ட ஹார்மோன் பிரச்சனைகள், மைகிரேன், காய்ச்சல், தலைவலி, கான்சர், மற்றும் பல நோய்களை மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்.

நோய்கள் எல்லாமே உங்கள் எதிர்மறை சிந்தனையால் மட்டுமே உருவாகிறது..

நமக்கு ஏற்ற தாழ்வான கண்ணோட்டம் இருப்பதையும், நம் நன்றியுணர்வுடன் இல்லாததையும் உணர்த்தவே நமது உடல்கூறு நோய்களை உருவாக்குகிறது.

டெங்கு காய்ச்சல் பற்றி துளியளவும் எங்கும் பேசாதீர்கள், அதை பற்றிய விழிப்புணர்வு செய்திகளை பரப்பாதீர்கள்.

அதை பற்றி பற்றி பேச பேச, ஷேர் செய்ய செய்ய தான் அதிகரிக்கிறது.

உங்களுக்கு நோய் விழிப்புணர்வு தர விருப்பம் இருந்தால் ஆரோக்கியம் பற்றி மட்டும் பேசுங்கள்.

நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அழமாக நிதானமாக மூச்சு விடுங்கள்....

நல்ல எண்ணங்களை சிந்தித்து கொண்டே " ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை ஜீவனோடு வைத்திருக்கிறது.. நான் பிரமாதமாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் " என்று எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை வாய்விட்டு கூறுங்கள்....

உடனே உங்களுக்குள் மாற்றம் தெரியும்... செய்து பாருங்கள்..

நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் உங்கள் சிரிப்பு மற்றும் எண்ணங்கள் மூலம் உங்களை நீங்களே குணபடுத்தலாம்..

நோய்களால், கிருமிகளால் மகிழ்ச்சியான அல்லது சந்தோசமான உணர்வு பூர்வமான ஒரு உடலில் வாழ முடியாது..

எல்லா நோய்களும் ஒரே அடிப்படை காரணத்தில் தான் தோன்றுகின்றன... அதுதான் மன இறுக்கம்..

முதலில் மன இறுக்கத்தை மட்டும் உங்களுக்குள் இருந்து வெளியேற்றுங்கள்.. பிறகு உங்கள் உடல் தன்னுடைய இயற்கையாக கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தன்னை தானே குணபடுத்தி கொள்ளும்...

உங்கள் உடல் இயற்கையாகவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது அற்புதமான ஒன்று.... உங்களுக்குள்ளே ஒரு மருந்தகம் இருக்கிறது...

உங்களால் மருந்துகள் இன்றி ஒரு மரபணுக்களில் பிரச்சனை இருந்தால் கூட சரி செய்ய முடியும்....

விழித்துக்கொள் எம் தமிழினமே...


மலாய் மொழியில் தமிழ்...


அகா (aka) = அக்கா
அசல் (asal) = அசல்
அதிகார (adhikaara) =அதிகாரம்
அண்டை (andai) = அண்டை(அருகே)
அதா (adha) = அது
அதவா (adhawa) = அதுவா?
அபா (abaa) = அப்பா
அமா (amaa) =  அம்மா
அல்பா (alpa) = அற்பம்
ஆயா (aayaa) = செவிலித்தாய்
ஆரா (aara) = ஆறு
இஞ்சி (inji) = இஞ்சி
இலை (ilai) = இலை
உண்டில் (undil) = உண்டியல்
அயா (ayaa) = ஐயா (தந்தை)
கஞ்சி (kanji) = கஞ்சி
கட்டில் (kattil) = கட்டில்
கெடக்காய்க் (kedakaik) = கடுக்காய்
கட்டைக் (kattaik) = கட்டை
கபல் (kapal) = கப்பல்
கபுரா (gapura) = கோபுரம்
கமண்டலம் (kamandalam) = கமண்டலம்
கல்தை (kaldhai) = கழுதை
கன்யா (kanyaa) = கன்னி
காவல் (kaawal) = காவல்
குட்டையன் (kuttaiyan) = குட்டையன்
குட்டைச்சி (kuttaichi) = குட்டைச்சி
கெடை (kedai) = கடை
கூடை (koodai) = கூடை
கூலி (kooli) = கூலி
கெடலை (kedalai) = கடலை
கெண்டி (kendi) = கெண்டி
கொட்லம் (kotlam) = கொத்தளம்
குண்டை (kundai) = கொண்டை
கொலம் (kolam) = குளம்
கோட்டா (kottaa) = கோட்டை
சக்கெரா (chakera) = சக்கரம்
சதை (sathai) = சதை
சவுக்கு (savuku) = சவுக்கு
சாணை (saanai) = சாணை
சின்டனா (chendana) = சந்தனம்
சிதி (sidhi) = சித்தி
சும்மா (chummaa) = சும்மா
செண்பகா (chempaka) = செண்பகம்
சிருட் (chirut) = சுருட்டு
செர்ப்பு (cherpu) = செருப்பு
தட்கலா (thatkala) = தற்காலம்
தெண்டா (dendaa) = தண்டம்
சம்மட்டி (tchammatti) = சம்மட்டி
தெந்தா (denta) = தந்தம்
தாம்பூல் (thaambul) = தாம்பூலம்
தயேர் (thaer) = தயிர்
தாலா (thaalaa) = தாளம்
திரை (thirai) = திரை
நகர் (nagar) = நகரம்
நாடி (naadi) = நாடி
நாலி (naali) = நாழி (நேரம்)
நீலம் (neelam) = நீலம்
பட்டானி (pattaani) = பத்தினி
பட்டில் (battil) = வட்டில்
படா (badaa) = வடை
பவளம் (pawalam) = பவளம்
பரயா (paraiaa) = பறையர்
பாடை (baadai) = வாடை
பாயு (bayu) = வாயு
பித்தம் (pittham) = பித்தம்
பெலங்கு (belanggu) = விலங்கு
பீங்கான் (pinggaan) = பீங்கான்
புட்டு (puttu) = புட்டு
பெங்காட்டி (pengaatti) = பெண்டாட்டி
பெடி (peti) = பெட்டி
பெடில் (bedil) = வெடி
பெர்வீரா (perwira) = பெருவீரன்
பெரிய (peria) = பெரிய ஆள்
பெல்பகை (pelbagai) = பலவகை
பொன்னு (ponnu) = பெண்
மட்ஜம் (matjam) = மச்சம்
மகசுல் (mahasul) = மகசூல்
மந்தம் (mandham) = மந்தம்
மாங்கா (mangga) = மாங்காய்
மாமாக் (mamak) = மாமா
மாணிக்கம் (maanikkam) = மாணிக்கம்
மாலை (maalai) = மாலை
மாளிகை (maaligai) = மாளிகை
மீசை (meesai) = மீசை
முட்டு (muttu) = முத்து
மெட்டை (mettai) = மெத்தை
மொடல் (modal) = முதல்
வள்வி (walwi) = வளைவி (வளையல்)
வேப்பலை (wepalai) = வேப்பிலை
வைரம் (wairam) = வைரம்
ஜெந்தெரா (jendera) = எந்திரம்...

பாஜக மோடியின் நீட் தேர்வு உண்மைகள்...


திராவிடலு பகுதி-1...


இந்தியா- பல்வேறு இனங்கள் வாழும் பரந்த நிலப்பிரப்பு...

ஆங்கிலேயரால் ஒருங்கிணைக்கப்பட்டு,
ஆங்கில மொழியால் ஆளப்பட்டு,
மொழிவாரி இன உணர்வைவிட தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு மேலோங்கி,
அதனால் விடுதலை அடைந்து,
அதன்பிறகு மதவழியாக இரண்டு துண்டாடப்பட்டு,
மதவழிதேசியம் எனும் போலி தேசியத்தை
இனவழி தேசியம் தோற்கடித்ததால் மூன்று துண்டானது.

இனவழி தேசியத்தின் முதல் வெற்றியானது திரு.பசல் அலி அவர்கள் தலைமையில் அமைந்த கமிசன் பரிந்துரையின்படி..

1956 நவம்பர் ஒன்றில் காந்தி, நேரு, காமராசர் மற்றும் பலரின் எதிர்ப்பையும் மீறி மொழிவாரி மாநிலங்களை அமைத்ததாகும்.

அன்றைய எழுச்சிபெற்ற இனங்கள் தங்கள் நிலப்பரப்பை தக்கவைக்க கிளர்ந்தெழுந்தன.

அதுவரை மூன்று மாநிலங்களே இருந்தன.

கல்கத்தாவை தலைநகராகக் கொண்ட வங்காளம், ஓரிசா, பீகார், அசாம் மற்றும் மத்திரபிரதேசம் ஆகியவையும்,

பம்பாயை தலைநகராகக் கொண்டு பஞ்சாப், சிந்து, மகாராட்டிரம் மற்றும் குசராத் ஆகியவையும்,

சென்னையை (மதராசப்பட்டிணம்) தலைநகராகக் கொண்டு தமிழகம், ஆந்திரா, கன்னடம் மற்றும் கேரளா ஆகியவையும்ஒருங்கிணைக்கப்பட்டு சுமார் நூறு ஆண்டுகள் ஆளப்பட்டன.

மொழிக்கான முக்கியத்துவம் இல்லாததால் ஆங்கிலம் படித்த எவரும் எந்த இனமக்களையும் அதிகாரம் செலுத்த வழி ஏற்பட்டது.

இனவுணர்வை மழுங்கடிக்க ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட மாநில மொழிகள் கற்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லாமல் ஆக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் மற்ற மொழியினரை விட தமிழர் ஒரு மாபெரும் பிழை செய்தனர்.

அன்றைய தமிழர் செய்த பிழைக்கான தண்டனையை இன்றைய இளந் தலைமுறையினர் இன்றும் அனுபவித்து வருகின்றனர்...

சட்டமும் உண்மையும்...


ஜப்பானை செதுக்கியவர்...


1864ல் அமெரிக்கா, பிரிட்டன், ஹாலந்து, பிரான்ஸ் நான்கு நாடுகள் கூட்டாகப் போர்தொடுத்தன; ஜப்பான் படுதோல்வி அடைந்தது.

1867ல் கோமே மரணமடைந்தார்;
அவரது 15வயது மகன் முட்ஷிஹிடோ அரியணை ஏறினார்.

இவர்தான் மெய்ஜி (Meiji=தெளிவுபெற்ற அரசன்) என்று அழைக்கப்படுகிறார்;

வேற்றுநாடுகளின் ஆதிக்கத்தில் சிக்குண்டிருந்த ஜப்பானை 40 ஆண்டுகளில் வல்லரசாக செதுக்கி எடுத்தவர் இவர்தான்.

அரசியலில் முதியவர்களை வைத்துக் கொள்ளாமல் இளைஞர்களை அரசியல் அவைக்குக் கொண்டு வந்தார்.

முதல் கட்டமாக வேளாண்மையை ஆராய்ந்து காலநிலை, மண்வளம், பருவசூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து புதிதாக வேளாண்மை நிலங்களை ஏற்படுத்தி நவீனமுறைகளைப் புகுத்தினார்.

தொழிற்சாலை உருவாக்கி வேளாண்மைக்கு அடுத்தபடியாக நாட்டைத் தாங்குமளவு தொழிற்துறையை உருவாக்கினார்.

தொழில்வழி வந்த பிரிவுகளை (சாதிகள்) வணிக சாதியார் மட்டுமன்றி மற்றவரையும் வணிகத்தில் புகுத்தி குலத்தொழில் முறையை உடைத்தார்.

நான்கு பெரிய தீவுகளும் பலநூறு சிறு தீவுகளும் ஆன ஜப்பானின் நிலப்பரப்பில் போக்குவரத்தை மேம்படுத்தினார்; சாலைகள், தண்டவாளங்கள், நீர்வழிப் போக்குவரத்துகளைப் போர்க்கால அடிப்படையில் மேம்படுத்தினார்.

குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி, ஏழை எளிய மக்களுக்கும் எத்தகைய உயர்கல்வியும் பயிலலாம் என்ற நிலையை உருவாக்கினார்;

கல்விசாலைகளை உருவாக்கி அதில் அறிவியல் புத்தகங்களை தாய்மொழியில் மொழிபெயர்த்து சிறப்பான முறையில் கல்வி கிடைக்கச்செய்தார் (ஜப்பான் மக்களில் ஏறத்தாழ அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள் ஆனால் 5%பேருக்குக் கூட ஆங்கிலம் உட்பட வேற்றுமொழி எதுவும்தெரியாது).

இளைஞர்களை கட்டாய படைச் சேவையில் ஈடுபடுத்தினார் (ஜப்பானியர் ஒரு படைவீரரின் ஒழுங்குடன் இன்றும் செயல்பட இதுவொரு காரணம்).

அரசன் ஆளுவதாக இல்லாமல் சட்டதிட்டங்கள் வகுத்து அதன்மூலமே ஆட்சி என்ற முறையைக் கொண்டு வந்தார்.

அரசின் முடிவுகள் அனைத்து தட்டு மக்களையும் கூட்டி ஆலோசனை நடத்திய பிறகே எடுக்கப்படும் என்ற முறையைப் பின்பற்றினார்.

எல்லாவற்றையும் விட உலகில் எந்தமூலையில் அறிவு இருந்தாலும் அதைத் தேடிச்சென்று பெறவேண்டும் என்ற ஆவலை மக்களிடம் புகுத்தினார்.

1871ல் நாட்டின் பலதரப்பான மக்களும் அடங்கிய நூற்றுக்கும் அதிகமானோர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது;
பெரும் பொருட்செலவில் இவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, ரஷ்யா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து என்று அன்றைய வல்லரசு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

(ஈழத்தின் அரசியல் சட்டவரைவு ஏற்படுத்த தலைவர் அமைத்த தூதுக்குழு பல்வேறு நாடுகளுக்கும் சென்று பார்த்தது நினைவு வருகிறதுதானே?)

இக்குழு அந்நாடுகளின் கழிவு மேலாண்மை முதல் சட்டசபை வரை சுற்றிப்பார்த்தார்கள்;

எவ்வளவு கற்கமுடியுமோ கற்றார்கள்; 

முடிவில் நாடுதிரும்பி 2,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மன்னனிடம் கையளித்தார்கள்.

(1876ல் தான் தொலைபேசியே கண்டுபிடிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க).

அதன்படி எந்தநாட்டில் எந்த துறை சிறப்பாக இருக்கிறதோ அந்தத் துறையில் (நகல் எடுத்தாற்போல) அந்த நாட்டை அப்படியே பின்பற்றவேண்டும் என்று பட்டியல் போடப்பட்டு அந்தந்தத் துறையினரிடம் அளிக்கப்பட்டது;
அதன்பிறகு பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு துறையில் சாதித்தவர்கள் ஜப்பானுக்கு அழைக்கப்பட்டார்கள்;
அனைத்துவசதிகளும் அவர்களுக்கு சிறப்பான முறையில் செய்துகொடுத்து நன்றாக விருந்தோம்பல் செய்து அவர்களை முடிந்த அளவு பயன்படுத்திக் கொண்டனர்; 30 ஆண்டுகள் இந்தமுறையைப் பின்பற்றினர்.

கிட்டத்தட்ட 20ஆண்டுகள் கழித்து மெய்ஜி மன்னரின் முயற்சி பலன்தரத் தொடங்கியது நாட்டுமக்கள் அறிவில் சிறந்தவர்களாக அத்தனை துறைகளையும் வளர்த்தெடுத்தார்கள்;
நாட்டுமக்களின் அறிவுவளம் போல ஒரு நாட்டின் பகட்டான செல்வம் வேறு உண்டோ?

எங்கும் வளம் எவரிடத்தும் அறிவு.
அடித்தளம் அமைந்ததும் மெய்ஜி மன்னர் அடுத்த திட்டங்களை வகுத்தார்; மூலப்பொருட்களை விற்காமல் அதை பொருளாகத் தயாரித்து விற்பனை செய்யத்  தூண்டினார்; அளவுக்கதிகமாக சொத்துசேர்த்து வைத்திருந்தவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி சொத்துகளை அரசுடைமை ஆக்கினார்; பெரிய அளவிலான தொழில் தொடங்குவோருக்கு அரசே முதலீடு செய்யும் முறையைத் தொடங்கிவைத்தார்; பள்ளிகளில் வேளாண்மைக் கல்வியை புகுத்தினார்; பணக்கார குடும்பங்களை வங்கிகள், தொழிற்சாலைகள், வணிகம் ஆகியவற்றில் ஈடுபடுத்தி அவர்களைப் பயன்படுத்திக்கொண்டார்; அத்தனைத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்களை உழைப்பாளர்களாக உருவாக்கினார். (அப்போது தொழிற்துறையில் 50% பெண்கள்).

அடுத்த 20ஆண்டுகளில் விண்ணுக்குப் பாய்ந்தது ஜப்பான்; வல்லரசுக்குத் தேவையான அத்தனையும் ஜப்பானிடம் தாராளமாக இருந்தன;

மெய்ஜி அரசனின் தலைமையில் 1894ல் ஆண்டாண்டுகாலமாக  தன்னை ஆண்டு நடத்திய சீனாவையே கொரிய போரில் தோற்கடித்தது ஜப்பான்.

1895ல் வல்லரசு நாடுகள் மஞ்சூரிய நாட்டில் ஜப்பான் பார்வை படக்கூடாது என்று மிரட்டின.

மெய்ஜி படைவலிமையை அதிவிரைவில் பெருக்கினார்; அதன்விளைவு 1904ல் ரஷ்ய படை மஞ்சூரியா போரில் ஜப்பான் படையிடம் மரண அடி வாங்கியது; 1914ல் சீனாவில் இருந்த ஜெர்மானிய படைகளைத் தோற்கடித்தது.

1868ல் தோற்று அடங்கிப்போயிருந்த ஜப்பான் 1914ல் மூன்று வல்லரசுகளைத் தோற்கடித்து உலக வல்லரசுப் பட்டியலில் இடம்பெற்றது.

இதற்கு காரணமாக விளங்கிய மெய்ஜி 1912ல் மறைந்தார் அதாவது உடலால் மரணமடைந்தார்; ஆனால், அவரது பெயர் இன்றும் ஜப்பானில் உயிருடன் உள்ளது.

அன்று ஜப்பானிய மக்கள் பெற்ற பேரெழுச்சி அப்படியே இன்று வரை தொடர்கிறது.

அணுகுண்டு விழுந்தும் அசராமல் எழுந்துநிற்கிறது அந்நாடு; இன்று உங்கள் கைகளில் தவழும் கைபேசிகூட மெய்ஜி அரசனின் பெயரைச் சொல்லாமல் சொல்கிறது.

படம்: இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் கைப்பற்றிய பகுதிகள்.

பி.கு: ஜப்பானிடம் தமிழ்க் குடியரசு மக்களாகிய நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் வல்லரசாக ஆனாலும் சிறிலங்கா ஹிந்தியா போன்ற அண்டைநாடுகளிடம் வரம்புமீறக்கூடாது.

மக்கள் எழுச்சியை நாடுபிடிக்கும் கருவியாகப் பயன்படுத்தினால் அழிவு தான் நேரிடும் என்பதை ஜப்பானும் ஜெர்மனியும் உணர்த்துகின்றன...

பாஜக மோடியின் நீட் தேர்வும் டிஜிட்டல் ஊழலும்...


என்றும் இளமையோடு வாழ எளிய வழி....


நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், வெப்பம் (உஷ்ணம்), காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

வெப்பத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை எல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்...

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் வெப்பம் (உஷ்ணம்), வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே...

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிசமாகும்...

சாகர்மாலா திட்டங்கள்...


பண்டைத் தமிழர்களின் முகத்தலளவை...


உழக்கு என்பது பண்டைத் தமிழர்களின் முகத்தலளவை அலகுகளில் ஒன்றாகும். உலக அளவை முறையில், ஒரு உழக்கின் அளவு 336 மி. லி ஆகும்.

இந்த உழக்கை நீர், பால், எண்ணெய் போன்ற பாய்மப் பொருள்களை அளப்பதற்கும் நெல், அரிசி, உளுந்து போன்ற தானியங்களை அளப்பதற்கும் பயன்படுத்துவார்கள்.

பண்டையத் தமிழர் பயன்படுத்திய முகத்தல் அளவைகள்..

5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி அல்லது நாழி
8 படி = 1 மரக்கால் (குறுணி)
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி

இவ்வாய்ப்பாட்டின் படி..

1 உழக்கு = 10 செவிடு
1 உழக்கு = 2 ஆழாக்கு
1 உழக்கு = 1/2 உரி
1 உழக்கு = 1/4 படி
1 உழக்கு = 1/16 மரக்கால் ஆகும்...