18/08/2018
இந்திய சதி கோட்பாடு - 3...
மனித இனத்திற்கு அத்யாவசியமான 9 விடயங்களை உள்ளடக்கிய 9 புத்தகங்கள் கொடுக்கப்பட்டு மனித இனத்தை அழிவை நோக்கி செல்ல விடாமல் பாதுகாக்கும்படி அசோகரால் 9 பேர் நியமிக்கப்பட்டனர் என்கிறது ஒரு சதி கோட்பாடு.
அப்படியாக அந்த புத்தகங்களில் போர், சமூகவியல், தகவல்தொடர்பு, ரசவாதம், மரணம், நுண்ணுயிரியல், ஒளி, ஈர்ப்பு மற்றும் அண்டவியல் ஆகிய 9 விடயங்கள் அடங்கி இருந்தது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ரகசிய சமூக நிகழ்வானது கிபி 270-ல் நடைபெற்றது என்று நம்பப்படுகிறது என்பதும், இது சார்ந்த 'தி நயன் அன்நோன்' (The Nine Unknown) என்று ஒரு நாவல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது...
ஆகஸ்ட் 18: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவு தினம் இன்று...
சுபாஷ் சந்திரபோஸ்...
இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்தவர்.
இந்தியாவுக்கு என முதல் ராணுவத்தைக் கட்டமைத்தவர். காந்தியை எதிர்த்த காங்கிரஸ் கலகக்காரர்.
மகாத்மா காந்தி மீது கொண்ட அன்பால் காந்தியை 'தேசப் பிதா' என்று முதன்முதலில் அழைத்தவரும் இவரே.
தன் மரணத்தையே மர்மமாக்கியவர்.
நேதாஜி விடுதலைக்கு முன் பர்மாவிற்கும் மலேசியாவிற்கும் சென்ற போது அவரை பாதுகாப்பாக வரவேற்று அரவணைத்தவர் சிதம்பரம் எனும் முத்தமிழர்..
இவரை சுற்றி இருந்தவர்களில் முக்கால்வாசி தமிழர்கள் தான்..இவரது சமையல்காரர் காலி கூட தமிழர் தான்.
நேதாஜியின் இறுதி கடிதத்தை எழுதியது திபி எனும் தமிழர் தான்..
இந்தியா விடுதலை அடைந்தால் தான் மற்ற ஆசிய நாடுகள் விடுதலை அடைய முடியும் என நேதாஜி அரைகூவல் விட்டதை தொடர்ந்து, தமிழின மக்கள் போராட சென்றனர்..
உயிர் பிரியும் தருவாயில் தமிழன் ஒருவன் சொன்னது,
“தமிழன் உயிர் விடும் வரை போராடுவான் என நேதாஜியிடம் கூறுங்கள்” என்று சொல்லி இறந்துள்ளார்..
ஒரு நாள் நேதாஜி திலான் எனும் தளபதியை அழைத்து தமிழர்களுக்கு நீ தலைமை தாங்கு என கூறியுள்ளார்..
இது குறித்து திலான் கூறியது,
தமிழ் வீரர்களுக்கு நான் தலைமை தாங்கியது எனக்கு பெருமை.. இந்திய இராணுவத்தின் ஆன்மாவும் உடலும் தமிழரகள் தான் என கூறியுள்ளார்.
தமிழனது பெருமை உள்நாட்டில் மட்டுமல்லாது அப்போதே அயல் நாடுகளிலும் பரவி உள்ளது என்பது புலனாகிறது.
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார்.
ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது..
இதுவரை 12 கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை.
நேதாஜியின் மரணம் இன்றும் மர்மமாக தான் இருக்கிறது...
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்...
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி கவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மயில்வாணன். இவருடைய மகள் ஜெயஸ்ரீ (வயது 20). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதியாண்டு பயின்று வருகிறார். இவருக்கும் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் பழைய பேட்டை பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் மயில்வாணன் (22) என்ற இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மயில்வாணன் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயஸ்ரீக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் தீவிர முயற்சி எடுத்து வருவதை அறிந்த காதலர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ரகசிய திருமணம் செய்துகொண்டு அதன்பின் தாங்களுக்கு பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.
அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (21). இவர், ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளாக ராணு வீரராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்க்கும் அதே பகுதியை சேர்ந்த ஜோதிகா (18) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது இதில் ஜோதிகா, குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, விடுமுறை எடுத்து கொண்டு ஊருக்கு வந்த ராணுவ வீரர் சதீஷ், ஜோதிகாவை வெளியே அழைத்துச் சென்று வேலூர் அருகே அரியூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு தாங்களுக்கு உரிய பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்.பி. அலுவல கத்தில் தஞ்சமடைந்தனர்.
ஒரே நாளில் ஒரே நேரத்தில் இரண்டு காதல் ஜோடிகள் தாங்களுக்கு உரிய பாதுகாப்பு கேட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது...
மேலைநாடுகளில் வீட்டுப் பிரசவங்கள் எவ்வாறு நிகழ்கின்றன? - சிவநங்கை...
திருப்பூரில் வீட்டுப் பிரசவத்தில் மரணம் என்பதை மருத்துவம், கல்வி, உணவு ஆகியவற்றில் ஒரு தனி மனிதருக்கு உள்ள, தன் விருப்ப உரிமைக்கு எதிராக இன்றைய நவீனவாதிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போற்றி வழிபடும் அலோபதி, மேலை நாடுகளில் எப்படிக் கையாளப்படுகிறது?
மரபா அல்லது நவீனத் தொழில்நுட்பமா? என்னும் தேர்வுக்கு உள்ளே அடி எடுத்து வைப்பதற்கு முன், மக்களின் மன நிலை எப்படி இருக்கிறது? எப்படி இருக்க வேண்டும்? இதில் மாற வேண்டியது என்ன? என்பதை மட்டுமே கொஞ்சம் நிதானமாக இங்கே பார்க்கலாம்.
நான் அமெரிக்காவில் வசித்தபோது, அங்குள்ள மக்கள் மருத்துவத்தை எப்படி அணுகுகிறார்கள் என்பதைப் பார்த்து வியப்படைந்தேன்.
கரு உறுதியான பிறகு அவர்கள் எதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. மருத்துவரை உடனே சந்திக்க வேண்டுமென்றும் சத்துப் பற்றாக்குறையைப் பற்றியும் பதட்டப்படவுமில்லை. அடிப்படைச் சோதனையை மட்டும் ஆரம்ப காலத்தில் செய்துகொள்கிறார்கள். ஐந்து மாதங்களுக்குப் பிறகுதான் மெதுவாக மேலும் சில அளவீடுகளைச் சோதனை செய்து கண்காணிக்க ஆரம்பிக்கிறார்கள். அங்கே பெரும்பாலும் சுகப் பிரசவமே ஊக்குவிக்கப்படுகிறது. அங்கும் சிசேரியன் பிறப்புகள் உண்டு. ஆனால் அற்பக் காரணங்களுக்காகவல்ல.
எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டுப் பிரசவங்களும் அங்கே உண்டு. வீட்டுப் பிரசவமா அல்லது மருத்துவமனையா என்பது முற்றும் முழுதாக சம்பந்தப்பட்டவரின் தனிப்பட்ட தேர்வு மட்டுமே. அதில் எந்த அதிகாரமும் அரசாங்க ஆணையும் குறுக்கிட முடியாது. அப்படி வீட்டுப் பிரசவம்தான் வேண்டும் என்று ஒருவர் தேர்ந்தெடுத்துவிட்டால் அரசாங்கத்திடமிருந்தும் மருத்துவமனையிலிருந்தும் அதற்கான முழு ஒத்துழைப்பும் அவருக்குக் கிடைக்கும்.
ஒருவர் வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தைப் பதிவு செய்துவிட்டால், மருத்துவமனையிலிருந்து பிரசவத்துக்கு உதவ ஒரு செவிலியை ஒதுக்குவார்கள். Midwife என்று அவர்களை அழைப்பார்கள். அவர் வீட்டுக்கு வந்து, உடனிருந்து பிரசவம் பார்த்துவிட்டு, பிரசவத்துக்குப் பிறகு செய்ய வேண்டிய சில அடிப்படைகளைச் செய்துவிட்டுச் செல்வார். ‘பிறப்பு சான்றிதழ் கொடுக்க முடியாது’ என்று எந்த அதிகார மட்டமும் சொல்ல முடியாது, ‘இது முறையற்ற செயல்’ என்று எந்தச் சட்டமும் அவர் மீது பாய முடியாது. அப்படி
ஒரு வேளை பிரசவத்தின்போது ஏதேனும் சிக்கல் வந்துவிட்டால் தயக்கமின்றி எந்தச் சூழலிலும் அவர் மருத்துவமனையின் உதவியை நாடலாம். ”உங்களை யார் வீட்டில் பிரசவம் பார்க்கச் சொன்னது” என்று யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படிக் கேட்கவும் மாட்டார்கள்.
இந்த உரிமையும் மரபின் மீதான மரியாதையும் இன்றும் பெரும்பாலான நாடுகளில் பாதுகாக்கப்படுகிறது. சரி. ஒரு midwife மருத்துவமனையிலிருந்து உதவி செய்வதற்கு வருகிறார் என்பதற்காக அவர் ஒன்றும் மருத்துவமனையின் மொத்த உபகரணங்களையும் கையில் கொண்டுவந்து உங்களுக்கு வீட்டிலேயே மருத்துவமனையின் வசதிகளைச் செய்துகொடுப்பார் என்று பொருளல்ல. பிரசவத்துக்குத் தேவையான அடிப்படை உபகரணங்கள் மட்டுமே வைத்திருப்பார். நம் மரபில் பிரசவம் பார்த்த மருத்துவச்சிகள் போலத்தான். அவர்களின் அனுபவமும், அறிவும் மட்டுமே அங்கே பிரசவத்துக்கு வழிகாட்டல். அவ்வளவே.
பிரிட்டனின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ள மூன்று இடங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. (You can give birth at home, in a unit run by midwives (a midwifery unit or birth centre) or in hospital).
1. வீடு
2. Midwife நடத்தும் கூடம்
3. மருத்துவமனை
அதற்கான சுட்டி:
https://www.nhs.uk/conditions/pregnancy-and-baby/where-can-i-give-birth/
மரபை கண்மூடித்தனமாக எதிர்க்கும் பகுத்தறிவுவாதிகள் இதைப் படித்தால் நல்லது.
நவீன அறிவியல் தோன்றி வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில்தான் அனைத்துத் துறைகளிலும் இன்றும் மரபு பேணப்படுகிறது. அங்குதான் வீட்டுப்பிரசவங்கள் அதிகம் நடக்கின்றன.
கர்ப்ப காலத்தின்போதும், பிரசவத்தின் போதும், குழந்தை வளர்ப்பின்போதும் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக அவற்றைச் செய்வதுதான் நம் மரபில் நமக்கு இருந்த பழக்கமும் மன நிலையும். இன்றைக்கும் மேற்கத்திய நாடுகளில் அம்மாதிரியான மன நிலையைத்தான் அதிகம் காண முடியும்.
வீட்டுப் பிரசவங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதைப் பற்றியல்ல இங்கே நான் சொல்ல வருவது. வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையைப் பற்றியும், வீட்டுப் பிரசவம்தான் இயல்பு என்பதை புரிந்துகொள்ளும் திறந்த மனதைப் பற்றியும்தான்.
ஆனால் இங்கே என்ன நடக்கிறது?
கரு உறுதியானவுடன் பல சோதனைகள், இரத்தப் பரிசோதனைகள், சத்து மாத்திரைகள் என்று நிரப்பி விடுகிறார்கள். மெல்ல மெல்ல மக்களும் மருத்துவர்களும் இணைந்து பயத்தைக் கட்டியமைத்துக் கொள்கிறார்கள். இது கடினமான காரியம் என்ற பயம் தாய்க்கு உருவாகிவிட்டால் அதன் பிறகு அந்தப் பயம் ஒன்றே பல மோசமான விளைவுகளுக்கு மூலதனமாகி விடுகிறது.
இதற்கு மருத்துவர்கள் மட்டும் காரணம் இல்லை. மக்களும்தான். சொல்லப் போனால் மக்கள்தான் முதல் காரணம்.
வெளிநாட்டில் (UK) இருக்கும் என் தோழியுடன் பேசிக்கொண்டிருந்தேன். ”குழந்தை பெற்றுக்கொள்வதில் சுகப்பிரசவத்தை மறுக்கும் இடத்துக்கு கிட்டத்தட்ட மக்களே பல நேரங்களில் மெதுவாக நகர்த்திக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். எல்லா நேரங்களிலும் மருத்துவர்களை மட்டுமே காரணம் சொல்ல முடியவில்லை. மக்களின் பதட்டம் குறைந்து நிதானம் வர வேண்டும். அதுதான் நாம் அடைய வேண்டிய முதல் தீர்வு” என்று பேசிக்கொண்டிருந்தோம்.
நம் ஊரில், பிரசவத்தின்போது குழந்தையை வெளித்தள்ளும்போது மலம், சிறுநீர் ஆகியவையும் கூடவே வெளிவரும் என்பதை விரும்பாமல் பிரசவத்துக்கு முன்பு தாய்க்கு எனிமா கொடுத்து வயிற்றை சுத்தப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் இங்கோ பிரசவத்தின் போது எனிமா கூடக் கொடுப்பதில்லை. ”மலம், சிறுநீர் வந்தாலும் அதை வெளித்தள்ளுங்கள். அதைச் சுத்தப்படுத்துவது எங்கள் வேலை. நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்கிறார்கள். மேலும் பிரசவத்துக்குப் பிறகு பிறப்புறுப்பில் தையல் போடும் பழக்கமும் முடிந்தவரையில் இங்கே இல்லை என்றாள்.
அதே போல ”இங்கு due date என்பது ஒரு கணக்கிற்காக மட்டுமே. நம் ஊரில் due date தாண்டிவிட்டால் எந்தத் தொந்தரவு இல்லாமலிருந்தாலும் சிசேரியன் செய்துவிடுகிறார்கள். ஆனால் இங்கோ due date முடிந்து வாரக்கணக்கில் ஆனாலும் சுகப் பிரசவத்துக்காக காத்திருக்கிறார்கள்.” என்றும் கூறினாள்.
Due date தாண்டிவிட்டால் மக்கள் பதட்டமடைந்து நிறைய கேள்விகள் கேட்டுத் தொந்தரவு தருகிறார்கள் என்பதாக ஒரு மகப்பேறு மருத்துவர் புலம்பியதாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த அவசரமும், பதட்டமும், பயமும் மக்களிடம் இருக்கும்போது due date தாண்டியும் எதுவும் செய்யவில்லை என்றால் ஏதேனும் ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் மருத்துவரை முழுக் குற்றவாளியாக்கிவிடுகிறார்கள். அந்த மருத்துவர் மிக நியாயமாக நடந்துகொள்ளும் அலோபதி மருத்துவராக இருந்தாலும் அவரால் சமாளிக்க முடிவதில்லை.
இம்மாதிரியான சிக்கல்கள் வணிக நோக்கத்துக்காக சிசேரியன் செய்யும் மருத்துவர்களைக் கேள்வி கேட்கும் உரிமையையும், சுகப் பிரசவம்தான் வேண்டும் நாங்கள் காத்திருக்கிறோம் என்று ஒருவர் அம்மருத்துவரிடம் கேட்கும் சூழலையும் மறுத்துவிடுகின்றன.
”வீட்டுப் பிரசவம்” பற்றி எல்லா நாடுகளிலும் பரிசீலனைகளும் விவாதங்களும் நிறைய இருக்கின்றன. ஆனால் அந்த விவாதங்கள் வீட்டுப் பிரசவங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குருட்டுத்தனமாக வீசப்படும் குற்றச்சாட்டுகள் அல்ல. வீட்டுப் பிரசவங்களில் குறைப்பாடுகள் என்ன, அதை எப்படிச் சரி செய்யலாம் என்ற நோக்கில்தான் அவை இருக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அமெரிக்க நாடுகளில் வீட்டுப் பிரசவங்கள் குறைவுதான். அப்படியிருந்தும் அங்கே வீட்டில் பிறக்கும் குழந்தைகளைப் பற்றி பெருமைப் பட்டுக்கொள்வதுமில்லை, அதில் சிக்கல்கள் வந்தால் முட்டி மோதிக் குற்றச்சாட்டுக்களை வீசுவதுமில்லை. அதை இயல்பாகச் செய்கிறார்கள். எது வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை, குழப்பமின்றி மிகப் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் கேள்வியின்றிப் பாதுகாக்கப்படுகின்றது.
கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு வீட்டில் குழந்தை பெற்றுக்கொண்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவரின் இரண்டாவது குழந்தை வீட்டில் பெற்றுக்கொண்டதுதான் என்பதை வேறு எதையோ பேசும்போது இயல்பாகச் சொன்னார். அவ்வளவுதான். அதைப் பற்றிப் பிறகு நான்தான் ஆச்சரியப்பட்டுக் கேள்விகள் கேட்டுக் குடைந்துகொண்டிருந்தேன். அதற்கெல்லாம் அவரிடம் பெரிதாக எந்த பெருமையும் இல்லை. எந்த அலட்டலும் இல்லை. அவர் மருத்துவத்துறையில் இருப்பவர். அவருக்குத் தெரிந்த மேலும் சிலர் அப்படித்தான் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொண்டார்கள் என்றும் சொன்னார்.
இன்று மரபு நோக்கித் திரும்பும் நாம் அனைவரும் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சினை என்பது சுற்றத்தினரின் மாற்றுக் கருத்துகள். மரபு வழியைத் தேர்ந்தெடுத்த நண்பர்கள் சிலர், தன் மனைவிக்குக் கரு உறுதியானவுடன் மருத்துவரைப் பார்க்காவிட்டால் ஏதோ கருணையற்ற செயல் செய்வதாகக் கருதிக்கொண்டு சுற்றத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து அழுத்தம் தருகிறார்கள் என்றும் பயமுறுத்தும் வார்த்தைகளைச் சொல்கிறார்கள் என்றும் சொன்னார்கள்.
இது ஒரு புறமிருக்க மரபு வழியைத் தேர்ந்தெடுப்போர், உடனே எல்லாக் கட்டமைப்புகளையும் உடைத்தெறிந்துவிட்டு கடுமையான பிடிவாதத்துடன் மரபு வழியில்தான் நிற்பேன் என்று நடைமுறைத் தேவைகளைக் கூட பொறுப்பின்றி உதறிவிட்டுச் செல்வது அதே மன நிலையின் மற்றுமொரு பக்கம்.
மன நிலையை மாற்றாமல் எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் சிக்கிக்கொண்டு சிதைந்துபோகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நவீன மருத்துவம் என்னும் ஒரு கட்டமைப்பு நம்மைச் சிதைக்கிறது என்று கூச்சலிடுவதில் எந்த நியாயமும் இல்லை. ஏனெனில் பதட்டத்தையும், பயத்தையும், பெருமையையும் மூலமாகக் கொண்டு அதைக் கட்டியமைத்தது நாம்தான். நம் மன நிலைதான். நம் மன நிலையிலும், அணுகு முறையிலும், புரிதலிலும் மாற்றத்தை ஏற்படுத்தாமல் நாம் எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் மீண்டும் மீண்டும் தவறான கட்டமைப்பைத்தான் உருவாக்குவோம்.
அப்படி மன நிலையில் மாற்றம் வரும்பொது, நிதானம் வரும்போது மரபுதான் இயல்பு என்பது புரியும். அங்கே நவீன மருத்துவம் தேவையே இல்லை என்பது தர்க்கங்கள் இன்றிப் புரியும். அதே சமயம் எப்படி அந்த மரபுக்கான கட்டமைப்பையும் ஒழுங்கையும் மீட்டெடுப்பது என்ற பொறுப்புணர்வும் இணைந்து வரும். பொறுப்பைத் துறந்துவிட்டு பெருமைக்குச் செய்தால் மரபோ, நவீனமோ இரண்டிலும் உங்களுக்கு ஒரே விளைவுதான்.
மரபு வழியைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு கற்றலுக்கான தேவையைக் காட்டிலும் அகற்றலே அதிகம் தேவைப்படுகிறது. அப்படியான மரபு நோக்கிய பயணத்தில் எப்பொழுது, எந்த சிக்கலில் உதவி தேவையென்றாலும் உடனே அகந்தையின்றி ஒரு உதவியை நாடி அதிலிருந்து மீண்டு பயணத்தைத் தொடர முடியும். மெல்ல மெல்ல மரபைக் கட்டியமைக்க முடியும்.
அதற்கான முதல் தேவை விருப்பம் மட்டுமே. விருப்பத்தில், பதட்டமும் அச்சமும் இல்லை. விருப்பத்தில் ஆழ்ந்திருங்கள். உங்களால் எதையும் புரிந்துகொள்ள முடியும். அச்சமின்றி, அருவெறுப்பின்றி கற்றுக்கொள்ள முடியும். விருப்பத்தில் நிலைத்திருங்கள். உங்கள் விருப்பங்கள் மிக எளிதாக நிறைவேற்றப்படும்.
மருந்தில்லாத மரபு வாழ்க்கை என்பது நம் விருப்பம். அதில் நிலைப்போம். அது நமக்கு வழங்கப்படும்...
உள்ளாட்சி தேர்தல்: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆஜராக உத்தரவு...
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீ திமன்ற அவமதிப்பு வழக்கில் 2 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட் உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது தொடர்பான வழக்கில், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஹர்மந்தர்சிங் இருவரும் செப்.,11ம் தேதி ஆஜராகும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையர், செயலர் ஆஜராகியிருந்தனர்...
தமிழகத்தில் கோடி வடஇந்தியர்கள் குடியேற்றம்...
மெல்ல ஊடுருவும் பிறமொழி அரசியல் அபாயம்...
தமிழகத்தில் வட இந்தியர்கள் குடியேற்றம் கணிசமாக அதிகரித்து வருவது அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும் அபாயம் இருக்கின்றன என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக தென்னிந்தியாவில் 58.2 லட்சமாக இருந்த வட இந்தியர் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 77.5 லட்சமாகி இருக்கிறது என்கிற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கணக்கில் வராத எண்ணிக்கையையும் சேர்த்தால் ஒரு கோடி வர வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்தில் வட இந்தியர் குடியேற்றம் அதிகரித்திருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் சவுகார்பேட்டை, வேப்பேரி ஆகியவை வட இந்தியர்கள் ஆதிக்கப் பகுதியாகும்.
தேர்தல் காலங்களில் இந்தியில்தான் பிரசாரம் செய்ய வேண்டும்; இந்தியில் தான் போஸ்டர் ஒட்ட வேண்டும் என்கிற நிலைமை இருந்து வருகிறது. ஆனாலும் இதை மவுனமாக கடந்து சென்று கொண்டிருக்கிறது தமிழகம்.
குக்கிராமங்களில் வடஇந்தியர்கள்...
இப்போது தமிழகத்தின் குக்கிராமங்களிலும் கூட வட இந்தியர்கள் குடியேற்றங்கள் அதிகரித்திருக்கிறது. அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் ஒரு தனியார் மில் பணிக்காக ஒடிஷாவைச் சேர்ந்த 70 பேர் அழைத்துவரப்பட்டு ஒரு காலனி போன்ற குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்கிற செய்தி வெளியாகி இருந்தது. இப்படி வட இந்தியாவில் இருந்து கொத்து கொத்தாக தமிழக தொழிற்சாலைகளுக்காக தொழிலாளர்கள் 'இறக்குமதி' செய்யப்படுகின்றனர். இங்கே கிடைக்கும் சொற்ப கூலி அவர்களுக்ககு சொர்க்கமாக இருக்கிறது; இங்கே முறைகேடாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் பெற்றுவிட முடியும். அப்புறம் என்ன சுகமான வாழ்வு.. இதற்காக படையெடுத்து வருகின்றன பெருந்தொழிலாளர்கள் கூட்டம் ஒரு பக்கம்.
குறுக்குவழி குடியேற்றம்...
மற்றொரு பக்கம் முன் எப்போதும் இல்லாத வகையில் மத்திய அரசுப் பணிகளில் முறைகேடாக திணிக்கப்படும் வட இந்தியர்கள். அண்மையில் தமிழக தபால் நிலையங்களில் பீகாரைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தமிழில் 90 மதிப்பெண்கள் பெற்றவர்களாக சான்றிதழ்கள் வைத்திருந்தனர் என்கிற தகவலும் வெளியாகி இருந்தது. இதுபோன்ற அநீதியான வகையில் தமிழகத்தில் குடியேறும் நடுத்தவர வர்க்கத்தினர் மற்றொரு பக்கம்.
கைவிட்டுபோன தொழில்துறை...
தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்டவற்றில் வேலைவாய்ப்பு தேடி இங்கே வந்து இங்கேயே செட்டிலாகிவிடக் கூடியவர்கள் என பல்வேறு காரணிகளால்தான் இவர்களது எண்ணிக்கை அதிகரிக்கிறது. தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாமகவின் மூத்த வழக்கறிஞர் கே. பாலு எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட ஒரு 5 தொழில்துறைகளைப் பட்டியலிட்டு இவற்றின் சங்கத் தலைவர்களாக இருப்பவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தவர்தான் என்கிறார். தமிழகத் தொழில்துறையில் நீண்டகாலமாக பனியாக்கள் ஆதிக்கம் இருப்பது வெட்ட வெளிச்சமான ஒன்றுதான். தமிழகத்தின் நகை அடகுத் தொழிலில் 95% விழுக்காடு மார்வாடிகள் வசம்தான் இருக்கிறது. நகைக்கடைகள், எலக்ட்ரிக்கல் பொருட்கள், மின்சாதனப் பொருட்கள், ஜவுளித்துறை என பல்துறையிலும் அவர்களது ஆதிக்கம் தான் கொடிகட்டிப் பறக்கிறது. ஒரு வளர்ந்து வரும் சமூகக் கட்டமைப்பில் இவை தவிர்க்க முடியாத ஒன்றுதான்.
அரசியல் நெருக்கடிக்கு வாய்ப்பு...
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் கணிசமாக வாழ்கிற போது அம்மாநில மக்கள் தமிழகத்தில் வாழ்வதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. அதேநேரத்தில் இதை கடும் விழிப்புடன் தமிழக அரசுடன் அணுக வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இத்தகைய வெளிமாநிலத்தவர் குடியேற்றம் தமிழக சமூக, அரசியலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆராய தனி அமைச்சகமே தேவை என்கின்றனர் இவர்கள். ஏனெனில் தமிழகத்தில் தற்போது ஜாதிவாரியாக வேட்பாளர்களை நியமிக்கும் அவலம் இருக்கிறது. காலப்போக்கில் சவுகார்பேட்டையை உள்ளடக்கிய தொகுதியில் தாங்களே தீர்மானிக்கும் சக்தி என்பதால் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கும் கட்சிக்கே என்கிற முழக்கம் எழுந்துவிட்டால் தமிழக அரசியலில் நெருக்கடி உருவாகிவிடும்.
பிற மாநில குடியேற்றம்...
கர்நாடகாவில் கன்னடர்களுக்கு இணையாக தமிழர்கள் இருந்த போதும் தமிழர் பகுதிகளில் மட்டும் தமிழரை வேட்பாளராக நிறுத்தும் போக்கு இருந்தது. ஆனால் தற்போது அது மாறி வருகிறது. தமிழகத்திலும் பிற மாநிலத்தவர் வாழும் பகுதிகளில் பிற மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளர் என்கிற முழக்கம் எழும் அபாயத்தைத்தான் இத்தகைய குடியேற்ற அதிகரிப்பு சுட்டிக்காட்டுகிறது. தமிழக அரசியல் கனத்த தாக்கத்தைத் ஏற்படுத்தக் கூடிய, புதிய ஊடுருவலாக இருக்கும் மொழி அரசியல் அபாயம் தொடர்பான உரத்த விவாதம் அவசியமே...
- தமிழர் ஆய்வுக் கூடம்...
தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்...
வந்தேறி திராவிட அயோக்கியர்களின் தமிழின அழிப்பு அரசியலை புரிந்து கொள்ளுங்கள்...
தென்னாப்பிரிக்க தலைவர் மண்டேலா அவர்களின் இறப்பிற்க்கு திராவிட அரசு இறங்கள், பாதி கம்பத்தில் திராவிட அரசின் கொடி..
ஆந்திர முதலமைச்சர் பச்சை தெலுங்கர் ராஜசேகர ரெட்டி மரணத்திற்க்கு தமிழ்நாட்டில் திராவிட அரசு விடுமுறை..
பச்சை தெலுங்கு பண்டிகை உகாதிக்கு தமிழ்நாட்டில் திராவிட அரசு விடுமுறை…
பச்சை தெலுங்கர்கள் சக்கிலியர்களுக்கு தமிழ்நாட்டில் திராவிட அரசின் தனி இடஒதுக்கீடு..
அடுத்து பாருங்க தமிழர்களே...
2 லட்சம் தமிழ் இனப் படுகொலைக்கு திராவிட அரசு கொடி அரைகம்பத்தில் அல்ல...
2 லட்சம் தமிழர் இறப்பிற்க்கு காரணமே இந்த வந்தேறி திராவிட அரசு துரோகிகளால் தான்…
தமிழீழ அதிபர் தாயார் பார்வதி அம்மாள் இறப்பிற்க்கு திராவிட அரசு விடுமுறை அல்ல...
தமிழீழ அதிபர் தாயார் இறப்பிற்க்கு காரணமே இந்த வந்தேறி திராவிட அரசு துரோகிகளால் தான்...
தமிழா சிந்தித்து விழித்தெழு டா...
மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்...
ஏனென்றால் அது ஒன்றுதான் நீ தற்கொலை செய்து கொள்வதிலிருந்து உன்னை காக்கிறது.
நீ இங்கே யாருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்கு பிறக்கவில்லை.
யாருடைய எதிர்ப்பார்ப்புக்கும் நீ பலி ஆகாதே.
உன் எதிர்பார்ப்பிற்கு எவரையும் பலியாக்காதே.
இதைத்தான் நான் தனித்தன்மை என்கிறேன்.
உன் தனித்தன்மையை மதி.
பிறர் தனித்தன்மையையும் மதி.
எப்போதும் எவரையும் உன் தனிப்பட்ட வாழ்வில் குறுக்கிட அனுமதியாதே.
அதே போல் எவருடைய தனிப்பட்ட வாழ்விலும் நீ குறுக்கிடாதே.
அப்போதே நீ ஒரு நாள் ஆன்மிகத்தில் மலரமுடியும்.
மாறாக 99 சதவீத மக்கள் வெறுமே தற்கொலை செய்து கொண்டே இருக்கிறார்கள்.
அவர்களுடைய மொத்த வாழ்வும் மிக மெதுவான தற்கொலையன்றி வேறில்லை.
மற்றவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொண்டே இருப்பது.....
சில நாட்கள் அப்பாவின் எதிர்பார்ப்பு,
சில நாட்கள் அம்மாவின் எதிர்பார்ப்பு,
ஒரு நாள் மனைவி மற்றொரு நாள் கணவன், குழந்தைகள்---அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
பின் சமூகத்தின் எதிர்பார்ப்பு, அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு,
மத குருமார்களின் எதிர்பார்ப்பு. சுற்றிலும் யாவரும் எதிர்பார்ப்புடனேயே உள்ளனர்.
நீயோ பாவம் எளிய மனிதன் மொத்த உலகமும் உன்னிடம் இதை செய் அதை செய் என்று எதிர்பார்க்கிறது.
உன்னால் அனைவரின் அனைத்து எதிர்பார்ப்பையும் நிறைவேற்றவே முடியாது.
அனைவரும் உன்னிடம் கோரும் எதிர்பார்ப்புகளை பார்த்து நீ பைத்தியம் அடைந்து விட்டாய்.
உன்னால் யாருடைய எதிர்ப்பார்ப்பையும் முழுதாக நிறைவேற்றவே முடிவதில்லை.
யாருமே திருப்தி அடைவதேயில்லை.
யாருமே திருப்தி அடையாததால் நீ வீணானவன் தோற்றவன்.
தனக்குள் திருப்தியாக மகிழ்ச்சியாக இருக்க இயலாதவர்களால் மகிழ்ச்சியாக சந்தோசமாக இருக்க முடிவதேயில்லை.
எதை நீ செய்தாலும் மற்றவர்கள் உன்னுடன் திருப்தியடையாமல் இருப்பதற்கு வழி காண்பார்கள்.
ஏனென்றால் அவர்களால் திருப்தி அடைய முடியாது. சந்தோசமாக இருக்க முடியாது.
மகிழ்ச்சி திருப்தி என்பது ஒரு கலை. அதை ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீ எதை செய்கிறாய் எதை செய்யவில்லை என்பதை பொருத்தது அல்ல அது.
மற்றவர்களை மகிழ்விப்பதை விட நீ மகிழ்ச்சியாக இருக்கும் கலையை கற்றுக் கொள்...
தமிழகத்தின் வரலாறே மாறிய போர்கள்...
வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்திருந்தாலும், சில போர்களால் தமிழகத்தின் வரலாறே மாறியுள்ளது, அப்படியான போரில் குறிப்பிட்டு நாம் பார்க்க வேண்டியது ” தெள்ளாற்றுப் போர்“.
இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
“தெள்ளாறு”, இன்றைக்கு, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம், பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் வலிமையுடன் ஆட்சி புரிந்தவர்கள்.
இவர்களை அழிக்க எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும், குறிப்பாக சோழரும், பாண்டியரும் ஒன்றாக இணைந்து பல்லவ பேரரசின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைத்தது இங்கு தான், பாண்டியர்கள் பேரரசர்கள், சோழர்கள் அங்கும் இங்குமாய் சிற்றசர்களாகவே இருந்தனர்.
அப்போது ஆட்சி செய்த வந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850 ) , இங்கு நடந்த போரில் சோழர் மற்றும் பாண்டிய கூட்டுப் படையை எதிர் கொண்டு அதில் வெற்றியும் கண்டான், அதுமட்டுமல்லாது அவர்களை கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு ஆகிய இடங்களில் எதிர்கொண்டு பாண்டிய நாட்டு எல்லை வரை ஓட ஓட விரட்டினான், சோழர்கள் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர். அது முதல் நந்திவர்மன் ” தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் ” என போற்றப்பட்டான்.
இந்த போர் குறித்து ஏராளமான கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன, அவன் மீது பாடப்பெற்ற ” நந்திக் கலம்பகத்தில் ‘ இந்த தெள்ளாற்று வெற்றியினை பலவாறு புகழந்துரைக்கிறார்கள்.
இந்த போரின் வெற்றிக்குப் பிறகு பல்லவர்கள் பெரிதும் வலிமை பெற்றனர், இறுதிக்காலம் வரை பகைவர்கள் நந்திவர்மனை கண்டு அஞ்சியே இருந்தனர். பல்லவர்கள் தங்கள் வலிமையை நிலைநிறுத்திய போராக இது விளங்கியது.
அடுத்தாக வடக்கே கங்கை வரையும், தெற்கே கடல் கடந்து கடாரம் வரை ஆட்சி புரிந்த சோழப் பேரரசு..
விஜயலாயன் தொடங்கி, ராஜ ராஜன் சோழன், ராஜேந்திரன் சோழன் என்று புகழின் உச்சிக்கே சென்ற சோழர்கள் கி.பி-1279 பிறகு எங்கே சென்றார்கள் ?
அவர்கள் வீழ்ந்த இடமும் இந்த “தெள்ளாறு” தான்..
சோழப் பேரரசு மூன்றாம் ராஜ ராஜனின் ஆட்சியின் போது அழிவின் விளிம்பில் இருந்தது, தெற்கே ” சுந்தர பாண்டியன் ” சற்றே வலிமை பெற்று, சோழர்களின் மீது போர் தொடுத்தான், பாண்டியனுக்கு அஞ்சிய சோழன் காஞ்சிபுரத்தை நோக்கி ஓடினான், அவனை காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த தெள்ளாற்றில் இடைமறித்து போர் புரிந்தான், அதில் மூன்றாம் ராஜ ராஜன் தோல்வியுற்றான், அது சோழர்களுக்கு பெரும் பின்னடைவாய் இருந்தது.
பின்னர் காடவ மன்னன் அவனது தலைநகரான சேந்தமங்கலத்திற்கு கொண்டு சென்று அங்கு சோழனை சிறை வைக்கப்பெற்றான்.
இதை அறிந்த பாண்டியனும், சோழனின் மாமனாரான மேலைச் சாளுக்கிய மன்னனும் சேந்தமங்கலத்தின் மீது போர் தொடுத்து சோழனை சிறை மீட்டனர், சேந்தமங்கலமும் அதன் கோட்டையும் முற்றிலுமாக அழிக்கப்பெற்றது.
இங்கு தற்போது தமிழக அரசு தொல்லியல் துறை அகழாய்வு செய்து கோட்டைப் பகுதிகளையும், காடவர் தலைநகரையும் வெளிக்கொணர்ந்தது.
மூன்றாம் ராசா ராசனுக்கு பின், மூன்றாம் ராஜேந்திரன் சிறிது காலம் ஆட்சி புரிந்தான், பின்னர் கி.பி-1279- ல் சோழப் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது.
இவ்வாறு இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போருக்கு பின்னர் தமிழகத்தின் வரலாற்றின் பாதையே மாறியுள்ளது..
ஒரு வேலை முதல் போரில் பல்லவர்கள் தோற்று பாண்டியர்கள் வெற்றி பெற்றிருந்தால், சோழ வம்சமே மீண்டும் வராமல் போயிருக்கும், அவர்கள் பாண்டியர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாகவே இருந்திருப்பார்கள்..
தஞ்சை கோயில், கடாரம் வரை ஆட்சி என தமிழர்களின் புகழ் விரிவடையாமலே சென்றிருக்கலாம்..
ஒரு வேலை இரண்டாவதாக காடவர்களுடன் நடந்த போரில் சோழர்கள் வென்றிருந்தால் ?
இன்னும் அவர்கள் வலிமையுடன் தமிழகத்தை ஆண்டிருப்பார்கள், கடாரம் வரை கப்பலில் சென்று போர் புரிந்த சோழர்களுக்கு, ஆங்கிலேயர்களை விரட்ட எவ்வளவு காலம் பிடித்திருக்கும்...
மரமும் மனிதனும்...
ஒரு மரத்துக்கு அருகில் சென்று, அதனுடன் பேசுங்கள்..
அதைத் தொட்டுத் தழுவிக் கொள்ளுங்கள்.
அதை உணர்வுடன் சந்தியுங்கள்.
அதன் அருகில் உட்கார்ந்து அந்த மரமும் உங்களை உணரச் செய்யுங்கள்.
அது உங்களை, "நீங்கள் மிகவும் நல்லவர். எந்தக் கெடுதலும் எண்ணாதவர்" என்று உணரட்டும்.
கொஞ்சம் கொஞ்சமாக இந்த நட்பு அதிகரிக்க, நீங்கள் எப்பொழுதெல்லாம் அதன் அருகில் வருகிறீர்களோ,
அப்பொழுதெல்லாம் அதன் தன்மையில் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள்.
நீங்கள் தொடும்பொழுதெல்லாம் ஒரு குழந்தையைப் போல குதூகலம் அடையும்.
நீங்கள் அருகில் உட்கார்ந்திருக்கும் போதெல்லாம் அதன் சிநேகத் தன்மையை உணர்வீர்கள்.
நீங்கள் துக்கமான மன நிலையில் அதன் அருகில் வரும்போதெல்லாம் துக்கம் மறைந்து போவதை உணர்வீர்கள்.
அப்போதுதான் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
நீங்கள் அந்த மரத்தை மகிழ்ச்சி அடையச் செய்யலாம்.
அதுபோல, அந்த மரமும் உங்களை மகிழ்ச்சி அடையச் செய்யும்.
வாழ்க்கை முழுக்கவும் ஒருவரை ஒருவர் நேசித்து, சார்ந்து இருப்பதை உணர்வீர்கள்.
இந்த சார்புடைய தன்மையைத்தான்,
நான் கடவுள் தன்மை என்று அழைக்கிறேன்...
சயாம் மரண ரயில் பாதை - மறைக்கப்பட்ட.. மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு...
எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை ? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை ?
முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார்.
அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது.
அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாஜி. இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான்.
இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டு வருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது.
அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.
அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க்கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களை பயன்படுத்திக் கொண்டனர்.
சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர்.
இதற்காக பெருமளவில் ஆசிய தொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது.
ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்த, ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை ஜப்பானின் கங்காணியர்கள். ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.
போரினால் கடும் பஞ்சம் வேறு.
உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம். ஒரு இலட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்களோ “The Bridge on the River Kwai” என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டனர். அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன.
நம் பாடு தான் திண்டாட்டம். வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன.
எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993’ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் ”சயாம் மரண ரயில் – சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்”. இதை தமிழோசை பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது.
இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு தான் இதைப் பதிவு செய்ய வேண்டுமென ஒர் உந்துதல் ஏற்பட்டது.
உண்மையைச் சொன்னால் இதற்கு முன், இதில் குறிபிடப்பட்டுள்ள ஒரு விவரமும் நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது.
ஜப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது, படிக்க படிக்க அது எவ்வளவு உண்மை என உணரமுடிகிறது.
அந்த களத்தில் பஞ்சத்தினால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமலும், தன் தந்தையை கண்டு பிடித்துவிடலாம் எனற நோக்கத்திலும் தானே சென்று இணையும் மாயா என்ற ஒரு இளைஞன் சுற்றியே கதையை சுழல விட்டு, தான் சொல்ல வந்த உண்மைகளை கதையெங்கும் தெளித்திருக்கிறார் ஆசிரியர்.
அதனூடே ஒரு மெல்லிய காதல் கதையையும் சேர்த்து ஒரு சுவாரஸ்யம் சேர்க்க முனைந்திருக்கிறார் ( நமக்கு தான் எல்லாவற்றிலும் தேவைப்படுமே)..
மரவள்ளிகிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின் உணவு. உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை. ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான்.
முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டு விடுவார்கள்.
கும்பல் கும்பலாய் வயிற்றுபோக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான்.
அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்து விடுவார்களாம்.
எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல.
குற்றுயிரும் குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம். மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும்.
இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது.
ஆங்காங்கே ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்வுகள், குடும்பத்தை பற்றிய கவலைகள், தாங்களும் உயிரோடு அங்கிருந்து பிழைப்போமா என கேள்விகள், மாயாவின் காதல் கதை, அவனுடன், உடன் பிறந்தவனைபோல உறவாடும் வேலுவின் நட்பு, முடிவை ஒட்டி அவன் மரணம் என உணர்வுப்பூர்வமாய் பயணிக்கிறது கதை.
இரண்டு பெரிய குன்றுகளை வெட்டி சாய்த்து, இரும்புப் பாதை அமைக்க உதவிய நம் மக்கள், ஆற்றுப் பாலத்திற்கும் மலைக்கும் நடுவில், தூண்கள் கட்ட முடியாமல், ராட்சத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட தொங்கும் பாலத்திலும் தண்டவாளத்தில் உயிரைப் பிடித்துக் கொண்டு பயணிப்பதைப் படிக்கும் போது, லேசாய் பயம் பற்றிக் கொள்கிறது.
அங்கேயும் சந்தடி சாக்கில் சின்ன சின்ன பலசரக்குகளை வாங்கி முகாம்களின் உள்ளேயே வியாபாரம் பண்ணிய நமது மக்களின் திறமையை நினைத்து பெருமைப்படுவதா வேதனைப்படுவதா எனப் புரியவில்லை.
இத்தனை வேதனைகளிலிருந்தும் மீண்டு வீடு திரும்பியவர்களில் சிலர், தங்கள் குடும்பம் சிதைந்ததைக் கண்டு, மறுபடியும் சயாமுக்கே சென்றிருக்கின்றனர் என்பதும் மிகுந்த வேதனைக்குரியது...
தமிழிலேயே பாட்டெழுதி, தமிழிலேயே பாடி , தமிழிசையை வளர்த்த தமிழிசை மூவர்...
தமிழிசை மும்மூர்த்திகள் என்று சொல்லப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாபி பிள்ளை என்போரே...
ஆனால் இவர்களை மறைத்து, தெலுங்கு சோத்துப் பண்டாரங்களான தியாகராஜர், சியாமா சாஸ்திரி, மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகியோரை சங்கீத மும்மூர்த்திகள் என்று ஆக்கி இருக்கிறது திராவிடம்.
சமஸ்கிருத இசையான கர்நாடக சங்கீதத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லி, அந்த இடத்தில தமிழ் இசை மூவேந்தர்களை முன்னிறுத்தாமல், திராவிட முகரைகளை முன்னிறுத்தி இருக்கிறது.
தமிழிசை பாட வேண்டிய இடத்தில, தெலுங்கு இசையை கொண்டு வந்து விட்டது.
இது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்குமான ஒரு மறைமுக ஒப்பந்தம்...
பிரபஞ்சமும் நோய்களும்...
உங்களால் காய்ச்சல், ஜலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது... நீங்கள் அப்படி நினைக்காதவரை.
அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றை உள்ளே அனுப்புகிறீர்கள்...
நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அதை பற்றி பேசாதீர்கள்..
அது உங்களுக்கு இன்னும் அதிகமாக வரவேண்டுமென்றால் மட்டுமே பேசுங்கள்....
பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் பல நோய்களை கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்.
முடி கொட்டுதல், அதிக எடை, தைராய்டு, மூட்டு வலி, கண்பார்வை பிரச்சனைகள், மாறுபட்ட ஹார்மோன் பிரச்சனைகள், மைகிரேன், காய்ச்சல், தலைவலி, கான்சர், மற்றும் பல நோய்களை மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்.
நோய்கள் எல்லாமே உங்கள் எதிர்மறை சிந்தனையால் மட்டுமே உருவாகிறது..
நமக்கு ஏற்ற தாழ்வான கண்ணோட்டம் இருப்பதையும், நம் நன்றியுணர்வுடன் இல்லாததையும் உணர்த்தவே நமது உடல்கூறு நோய்களை உருவாக்குகிறது.
டெங்கு காய்ச்சல் பற்றி துளியளவும் எங்கும் பேசாதீர்கள், அதை பற்றிய விழிப்புணர்வு செய்திகளை பரப்பாதீர்கள்...
அதை பற்றி பற்றி பேச பேச, ஷேர் செய்ய செய்ய தான் அதிகரிக்கிறது..
உங்களுக்கு நோய் விழிப்புணர்வு தர விருப்பம் இருந்தால் ஆரோக்கியம் பற்றி மட்டும் பேசுங்கள்.
நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அழமாக நிதானமாக மூச்சு விடுங்கள்....
நல்ல எண்ணங்களை சிந்தித்து கொண்டே " ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை ஜீவனோடு வைத்திருக்கிறது.. நான் பிரமாதமாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் " என்று எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை வாய்விட்டு கூறுங்கள்....
உடனே உங்களுக்குள் மாற்றம் தெரியும்.. செய்து பாருங்கள்..
நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் உங்கள் சிரிப்பு மற்றும் எண்ணங்கள் மூலம் உங்களை நீங்களே குணபடுத்தலாம்..
நோய்களால், கிருமிகளால் மகிழ்ச்சியான அல்லது சந்தோசமான உணர்வு பூர்வமான ஒரு உடலில் வாழ முடியாது..
எல்லா நோய்களும் ஒரே அடிப்படை காரணத்தில் தான் தோன்றுகின்றன... அதுதான் மன இறுக்கம்..
முதலில் மன இறுக்கத்தை மட்டும் உங்களுக்குள் இருந்து வெளியேற்றுங்கள்.. பிறகு உங்கள் உடல் தன்னுடைய இயற்கையாக கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தன்னை தானே குணபடுத்தி கொள்ளும்...
உங்கள் உடல் இயற்கையாகவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது அற்புதமான ஒன்று.... உங்களுக்குள்ளே ஒரு மருந்தகம் இருக்கிறது...
உங்களால் மருந்துகள் இன்றி ஒரு மரபணுக்களில் பிரச்சனை இருந்தால் கூட சரி செய்ய முடியும்....
தூதுவளை இலை மூலிகை மருத்துவம்...
தூதுவளை ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.
தூதுவளை இலை மூலிகை மருத்துவம்...
சளி பிடிப்பதால் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளில் இருமலும் ஒன்று. சளி போனாலும் இருமல் போகாமல் பாடு படுத்தும். இருமலைப் போக்க எளிதான வழி உள்ளது. தூதுவளை இலையை 4 அல்லது 5 எடுத்து அதன் முட்களை நீக்கிவிட்டு கழுவிக் கொள்ளவும். இலைக்குள் 4 அல்லது 5 மிளகு வைத்து வெற்றிலைப் போல் மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட இரண்டே நாளில் மார்புச் சளி போய், தொடர்ந்து வந்த குத்தல் இருமலும் காணாமல் போகும்.
தூதுவளையை உளுத்தம் பருப்பு, புளி வைத்து துவையல் செய்தும் சாப்பிடுவார்கள். சளி பிடித்தவர்களுக்கு இந்த துவையலை செய்து கொடுத்தால் எந்த மருந்துக்கும் அசராத சளியும் கரைந்து காணாமல் போய் விடும். தூதுவளை இலை உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும் என்பதால், சூட்டு உடம்புக் காரர்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது.
தூதுவளைக் கீரை முட்கள் நிறைந்த ஒருவகை கீரையாகும். முட்கள் நிறைந்த மூலிகைகளின் பூக்களில், நரம்புகளை வலுவாக்கும் தன்மையை இறைவன் வைத்திருக்கிறான். தூதுவளைப் பூவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது உணர்வு நரம்புகள் பலப்பட்டு, சரும நோய்கள், பார்வைக் குறைவு, காது கேளாமை, ருசியின்மை போன்ற கோளாறுகள் மாயமாய் மறையும்.
தூதுவளை தோசை...
முட்கள் நீக்கப்பட்ட தூதுவளை இலைகளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து விழுதாய் அரைக்கவும். இதனை எட்டு கரண்டி தோசை மாவில் கலந்து தோசை வார்க்கவும். இது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது; சுவையானது. இதனை வாரம் இருமுறையேனும் உட்கொண்டு வந்தால் சளி, இருமல், கப நோய்கள் அனைத்தும் குணமாகும்.
தூதுவளை ரசம்...
முட்கள் நீக்கப்பட்ட தூதுவளை இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சிறிதாய் அரிந்து கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை மைய தட்டி எடுத்துக்கொள்ளவும். கறிவேப்பிலை, மல்லி இலைகளையும் சிறிதாய் அரிந்து, அவற்றை தூதுவளை இலையுடன் சேர்த்து வதக்கி, அதில் தக்காளிக் கரைசலைச் சேர்த்து, மிளகு, சீரகம், பூண்டு, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து சூடு செய்யவும். கொதி வருவதற்கு முன் இறக்கி சுவையாய் சாப்பிட, சளி, இருமல் மூக்கடைப்பு, ஈஸ்னோபீலியா, தும்மல், சைனஸ், ஆஸ்துமா போன்ற அனைத்துக் குறைகளும் தீ ரும்
நல்ல பசி உண்டாக...
தூதுவளை இலைகள் மூன்று, மிளகு மூன்று, சிறிது மஞ்சள் ஆகியவற்றைத் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்துச் சாப்பிட, நல்ல பசி உண்டாகும்.
தொண்டைச் சதை கரைய...
தூதுவளை இலை ஒரு கைப்பிடி, அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு ஆகியவை வகைக்கு பத்து கிராம் எடுத்து நன்கு நசித்து, ஒரு லிட்டர் தண்ணீரி லிட்டுக் கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பங்காய்ச் சுண்டச் செய்து, வேளைக்கு அறுபது மி.லி. வீதம் தினம் மூன்று வேளை சாப்பிட்டு வர, ஏழு தினங்களில் தொண்டையில் வளர்ந்துள்ள சதை கரையும்.
விடாத இருமல் விலக...
தூதுவளை இலை ஒரு கைப்பிடி, உலர்ந்த திராட்சை முப்பது எண்ணிக்கை, அதிமதுரம் ஒரு துண்டு, சீரகம் பத்து கிராம் ஆகியவற்றை எடுத்து, அனைத்தையும் நசித்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பங்காய் சுண்டச் செய்து, நூறு மி.லி. அளவில் காலை, ம தியம், இரவு மூன்று வேளையும் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வர, எப்பேர்ப்பட்ட இருமலும் மூன்று தினங்களில் குணப்படும்.
ஆஸ்துமா, மூச்சுத் திணறல் குணமாக...
தூதுவளை, துளசி, முசுமுசுக்கை, கண்டங் கத்திரி ஆகிய நான்கையும் காயவைத்து, வகைக்கு நூறு கிராம் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், ஜாதிக்காய், மாசிக்காய், ஜாதிப்பத்திரி, ஏலக்காய், கருஞ்சீரகம், அக்ரகாரம், கடுக்காய் ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் எடுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) பொடியை எடுத்து, தேனில் குழைத்து தினம் இருவேளை சாப்பிட்டு வர, ஆஸ்துமா, மூச்சுத் திணறல், நுரையீரல் கோளாறுகள் போன்ற அனைத்தும் தீரும்.
சைனஸ் - தொடர் தும்மல் குணமாக...
தூதுவளை, குப்பைமேனி, துளசி, நிலவேம்பு, திப்பிலி, அதிமதுரம், சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை வகைக்கு பத்துகிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் தட்டிப்போட்டு கசாயமிட்டு, நான்கில் ஒரு பங்காய் சுண்டச் செய்து, நூறு மி.லி. அளவில் தினமும் இருவேளை சாப்பிட்டு வர, தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க...
தூதுவளைப் பூக்களை நிழலில் உலர்த்தி நூறு கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். இத்துடன் மாதுளம் பூ நூறு கிராம், ஜாதிக்காய் நூறு கிராம் சேர்த்து அரைத்து பத்திரப்படுத்தவும். இதில் காலை- மாலை இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு நீங்கி புத்திரப்பேறு உண்டாகும்.
தூதுவளை மிக நுண்ணறிவு தரும் மூலிகையாகும். இதனை அலட்சியம் செய்யாமல் பிறவிப்பயன் பெற வேண்டி, குருவின் திருவடி சரணடைந்து வணங்கி, ஏதேனும் ஒரு வகையில் உட்கொண்டு வரவேண்டும். இதனால் தேக அசுத்தம் நீங்கி, தேகம் வலுவாகி, உடம்பில் ஒளி, தேஜஸ், காந்தம் உண்டாகும். அதுவே முக்திக்கும் ஏதுவாகும்.
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பாதம் பணிவோம். அவர் வழிகாட்டிய ஞான மூலிகையாம் தூதுவளையைச் சரணடைந்து, பிறவிப் பயன் பெறுவோம்...
மரணம் இப்படித்தான் இருக்குமா...?
யோகி முதல் போகி வரை கேட்கப்படுகின்ற ஒரே கேள்வி நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகிறோம் என்பதுதான்.
போகுமிடம் என்றால் என்ன?
மரணத்திற்கப் பின் நம் உயிர் பறவைக்கு உடல் கூட்டிலிருந்து விடுதலை கிடைத்தபின் அது அடையக் கூடிய நிலை என்னவென்று நாம் தெரிந்து கொண்டால் போகும் இடத்தைப் பற்றிய விவரங்கள் சுலபமாகக் கிடைத்துவிடும். அத்தகைய உயர்நிலையை அறிந்துகொள்ள செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆதாரமாக கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.
செத்துப் பிழைத்தவர்கள் என்று கருதப்படும் பல நபர்களின் வாக்கு மூலங்கள் முழுமையாக நமக்குக் கிடைத்து இருக்கிறது. இருப்பினும் பெரும்பாலான வாக்கு மூலங்களில் அந்தந்த நபர்களின் சுய கற்பனைகளும் பய உணர்ச்சியால் ஏற்பட்ட வார்த்தை தடுமாற்றங்களும் நிறைந்து இருக்கின்றன என்பதை மறப்பதற்கில்லை. ஆனாலும் அந்த வாக்கு மூலங்களில் சில உண்மைகளும் பல ஒற்றுமைகளும் இருக்கிறது. அவைகளைப் பற்றி சிறிது பார்ப்போம்.
கனடா நாட்டைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் 1954ம் வருடம் மார்ச் மாதம் 17ம் தேதி காலை 8.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்து மூன்று மணி நேரம் கழித்து திடீரென தனது சாவுப் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். வழி தவறி அடையாளம் தெரியாத இடத்தில் அகப்பட்டு மீண்டும் தனது சொந்த இடத்தை எதேச்சையாக அடைந்த நபர் போல மிரண்டுபோய் இருந்தார்.
அவரிடம் உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று கேட்டபோது காலையில் தன்னால் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு உடலில் இனம் தெரியாத வலி இருந்தது.
அதனால்தான் மிகவும் வேதனையும் சோர்வும் அனுபவித்தேன். திடீரென்று தன்முன்னே வெள்ளை நிறத்தில் தேவதைகள் போல் மூன்று நபர்கள் வந்தனர். அவர்கள் தன்னை தன் உடலுக்குள் இருந்து வெளியே இழுத்தனர். அப்போது படுக்கையில் கிடக்கும் எனது உடலைப் பூரணமாக என்னால் பார்க்க முடிந்தது. அதன்பின் அந்த மூன்று நபர்களும் வெளிச்சம் மிகுந்த ஒரு பாதையில் தன்னை அழைத்துச் சென்றனர். அவர்களுக்குள் புரியாத பாஷையில் ஏதேதோ பேசிக் கொண்டனர். அதில் ஒரு வார்த்தைக் கூட எனக்குப் புரியவில்லை. சிறிது தூரம் கடந்தபின் அவர்களுக்குள் பேசி ஏதோ முடிவுக்கு வந்து என்னை மீண்டும் உடம்பிற்குள்ளேயே தள்ளிவிட்டு விட்டனர். அதன் பின்னரே தான் எழுந்து உட்கார்ந்ததாகவும் கூறினார். அந்த மூன்று தேவதைகளின் முக அழகு இன்னும் தனது மனதில் பூரணமாக நிறைந்து இருப்பதாகக் கூறி சந்தோஷப்பட்டார்.
இதே போன்ற ஒரு சம்பவம் அபுதாபியில 1975ம் வருடம் ஜனவரி மாதம் நடந்தது. 30 வயது இளைஞர் ஒருவர் இதய நோய் கராணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் இறந்து விட்டதாகக் கருதி உடல் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி வீட்டுக்கும் அனுப்பிவிட்டனர். உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்த போது உறவினர்கள் பிரமிப்பு அடையும் வகையில் மரணத்திவிருந்து எழுந்தார். எழுந்தவர் இரண்டு நாள் வரையில் பித்து பிடித்தவர் போல் யாரிடமும் பேசாமல் இருந்தார். அதன் பிறகு கூறிய விஷயங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.
என் இதய வலியை நீக்கவும் இதயத் துடிப்பை சமப்படுத்தவும் டாக்டர்கள் போராடிக் கொண்டு இருந்தனர். என் மீது என்னென்னவோ கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. அறை முழுவதும் மருந்துகளின் வாடை. எனக்கு அந்கச் சூழல் பயத்தை மேலும் அதிகரித்தது. அப்போது என் கண் முன்னே 3 நபர்கள் தோன்றினார்கள. அவர்கள் கால்வரையில் வெள்ளை அங்கி அணிந்திருந்தார்கள் என நினைக்கிறேன். அவர்கள் மூன்று பேருமே வெளிச்சமாகவும் அழகாகவும் இருந்தனர். என்னை வா என்று அழைத்தனர்.
நான் அவர்களின் அழைப்பை ஏற்று எழுந்தேன். ஆனால் என் உடல் படுக்கையில்தான் கிடந்தது. கருவிகள் பொருத்தப்பட்டுக் கிடந்த என் உடலைப் பார்ப்பதற்கு எனக்கு அப்போது ஏனோ வேடிக்கையாக இருந்தது. ஆனால் அந்த மூன்று பேரும் உடனடியாக என்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மேலும் கீழும் மணலால் சூழப்பட்ட ஒரு சுரங்கப் பாதைக்குள் என்னைக் கூட்டிச் செல்வது போல் இருந்தது. அந்த நிலையில அந்த மணல் சுரங்கம் எனக்குப் பயத்தையும் இனம் புரியாத திகிலையும் தந்தது. அங்கு இதுவரை நான் அனுபவித்து இராத உயரிய நறுமணம வீசியது. சுரங்கத்திலிருந்து ஒரு மணல் அறைக்குள் என்னை அழைத்துச் சென்றனர். அந்த அறையினுள் வெளிச்சமும் குளிர்ச்சியும் இருந்தது. அந்த 3 நபர்களும் திடீரென்று என்னை அந்த அறையினுள் இருந்து வெளியே கூட்டி வந்து என் வீட்டிற்குள் இருந்த உடம்பிற்குள் என்னைத் தள்ளி விட்டனர். அவர்கள் தள்ளிய வேகமும் உடலுக்குள் புகும்போது நான் அனுபவித்த இனம்புரியாத கிலியும் என்னை பிரம்மையில ஆழ்த்தி விட்டது என்று அவர் தனது அனுபவத்தை நெகிழ்ச்சியான வார்த்தைகளால் கூறினார்...
இன்றுவரை Cluster Bombs என்ற வெடிகுண்டுகளை தான் பாலஸ்தீனத்தில் இசுரேல் என்ற அரக்கன் பயன்படுத்தி கொண்டிருக்கிறான்...
Cluster Bombs உடலை சிதறச்செய்யும் வெடிகுண்டு வகையை சார்ந்தவை.. இது தடைசெய்யப்பட்ட ஒன்று..
இதை அதிகம் பயன்படுத்தினார்கள் தமிழீழத்தின் மீது..
இதுவரை இதைப்பற்றி இங்கு எந்த அரசியல்வாதியும் பேசியதில்லை..
இசுரேல் என்ற வார்த்தையை எந்த அரசியல்வாதியும் உபயோகிக்கவில்லை..
இறுதிவரை சிங்களம் தமிழ் இனத்தின் மீது நடத்திய இன வன்ம போராகவே தமிழீழ-சிங்கள போர் இங்கு சித்தரிக்கப்படும்..
ஏனெனில் அவ்வாறு சித்தரித்தால் தான் இவர்களின் பொழப்பு ஓடும்...
தமிழகத்துக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு...
கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் தமிழகத்துக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தமிழக எல்லையான ஒகேனக்கல்லுக்கு சீறிபாய்ந்து வரும் வெள்ளத்தால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் குடகு, சாம்ராஜ் நகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கேரளத்தின் வயநாடு, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி அணையிலிருந்து 50 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 1. 50 லட்சம் கனஅடியும் நீர் தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 1.18 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
பின்னர் மதியம் 3 மணியளவில் நீர்வரத்து அதிகரித்து நொடிக்கு 1.40 லட்சம் கனஅடியாகவும், மாலை 6 மணியளவில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து நொடிக்கு 2 லட்சம் கனஅடியாக வேகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது...
இங்கு தலைமை என்பது இரண்டே வகைகள் தான்...
ஒன்று அதிகாரத்தால் உருவாக்கப்பட்ட தலைமைகள் மக்கள் முன் நிறுத்தப்படும்..
இரண்டு மக்களுக்காக உருவாகும் தலைமைகள் விலைப்பேசி பொம்மை தலைமையாக மக்கள்முன் புதுப்பிக்கப்படும்..
ஏனெனில் அதிகார வர்க்கமும், இந்திய உளவுத்துறையும் அவ்ளோ எளிதாக வெகுசன மக்களின் கருத்தியலை இந்தியா என்ற வணிகச்சந்தையில் விதைக்க விடாது...
யோக சித்தி ரகசியங்கள்...
ஞான யோகம், இராஜ யோகம், சன்மார்க்க யோகம்...
1. உயிர் வர்க்க சன்மார்க்க நெறி.
2. யோக ஞான மார்க்கங்களுக்கு அழைத்துச் செல்லும் கிரக அமைப்புகள்.
3. உண்மையான குருமார்கள் நிலை.
4. தேகதத்துவங்கள் - ஸ்தூல பூதங்கள் .
5. உள்கருவிகளில் பஞ்சபூதங்கள்.
6. காலாகில வாசி.
7. பஞ்சாக்கினி விபரம்.
8. யோகிகளின் பார்வையால் ஸ்பரிசத்தால் சப்தத்தால் நோய் தீர்த்தல்.
9. பஞ்சாட்சர மந்திரங்கள்.
10. அஷ்டாங்க விவரம்.
11. நித்திரை செய்யும் முறை.
12. சுத்தாரம்மம்.
13. சித்திகளடைய முக்கிய கவனிப்பு.
14. சிவயோக சாரம்.
15. இடகலை, பிங்கலை, சுழுமுனை தன்மைகள்.
16. பூரக, ரேசக, கும்பக விபரம்.
17. பிராணாயாம நிர்ணயம்.
18. குண்டலினி ஸ்தான நிலை - அமிர்த்த நிலை ஸ்தானம்.
19. குண்டலினி யோக கிரியைகள்.
20. ஜப, நாத யோகம்.
21. தாடன நௌமுகி கிரியைகள்.
22. சாம்பவி முத்திரை விளக்கம்.
23. உண்மை உபதேசம்.
24. சொரூபதரிசனம், சூட்சும சரீரத்தை செயல்படுத்துதல்.
25. சிதாகாச தரிசனம்.
26. யோகநிஷ்டை செய்யும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கிய விதிகள்.
27. சாயா புருஷ தரிசனம்.
28. ஆசனங்கள்.
29. மானச தந்தி [Telepathy].
30. மூளையை வலுப்படுத்தும் பயிற்சி.
31. தொலைவில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கிரியை.
32. தண்ணீரில் சக்தியை ஏற்றுதல்.
33. இராஜ யோகம் செய்யும் முறை... [கேசரி-சாம்பவி முத்திரை-பிராணாயாமம்-குண்டலினி யோக முறை]..
ஐயா அறிவுஜீவி மார்கன்டே கட்ஜ் பிராமின் அவர்களே...
திருவள்ளுவர் ஐயராகவோ பறையாராகவோ கோனாராகவோ தேவராகவோ பள்ளராகவோ ஐயங்காராகவோ அதுவாகவோ இதுவாகவோ எதுவாகவோ இருந்தால் என்ன...
அவர் சமஸ்கிருதம் மட்டுமல்ல இந்தி துளு மராட்டி கன்னடம் பிரஞ்சு மேண்டரின் மலாய் போன்ற ஆயிரம் மொழிகளை கற்றறிந்தவராக கூட இருக்கட்டும்...
எந்த மொழியில் அவர் திருக்குறளை எழுதினார்?
நீங்கள் சொல்வது போல் ஒரு ஐயராக சமஸ்கிருத புலியாக இருந்த போதும் அவர் தமிழை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால்... சமஸ்கிருதத்தில் இல்லாத சிறப்பு தமிழுக்கு இருப்பதானால் தானே...
திருவள்ளுவரோடு நீங்கள் நிறுத்தியிருக்கலாம்.. இளங்கோவடிகள் ஐயர், மணிமேகலை ஐயர், ஆண்டாள் ஐயர், கம்பர் ஐயர் என்று வரிசையாக நிறைய ஐயர்களை இழுத்து விட்டிருக்கிறீர்கள்...
இத்தனை ஐயர்கள் இருந்தும் அனைவரும் சம்ஸ் மொழியில் இலக்கியம் இயற்றாமல் தமிழை ஏன் தேர்ந்தெடுத்தார்கள். ஒருவேளை சம்ஸ் குறைபாடுள்ள மொழியோ? இலக்கியங்கள் இயற்ற வளமற்ற மொழியோ?
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் "
இப்படி பல மொழிகள் கற்றறிந்த பாரதி ஐயர் பாடிச்சென்றிருக்கிறாரே.
இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நல்லவேளை அவர் இப்போது உயிரோட இல்லை இருந்திருந்தால் உங்களைத் தேடி வந்து கவிதையாலேயே அடித்துக் கொன்றிருப்பார்.
இப்படி பல பிராமின்கள் புறக்கணித்த சம்ஸ் மொழியை விட்டுவிட்டு பல பிராமின்கள் கூடி வளர்த்த தமிழைக் கற்று நீங்களும் உங்கள் சந்ததியினரும் பலன் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உங்களை நாங்கள் "Abuse" பண்ணி விடுவோம் என்று கூறியிருக்கிறீர்கள்.
உண்மையில் பிராமின் தவிர வேறு யாராலும் இலக்கியங்கள் எழுத முடியாது என்பதுபோல் உங்கள் சாதி வெறியை வெளிப்படுத்தியதோடு சில தமிழ் சொற்களை கொச்சைப்படுத்தும் விதமாக அவற்றை சம்ஸ் என்று கூறி நீங்கள் தான் எங்களை "Abuse" பண்ணியிருக்கிறீர்கள்.
இருந்தாலும் உங்களை நாங்கள் மன்னித்து விடுகிறோம்...
பிராமின்கள் தேர்ந்தெடுத்து இலக்கியங்கள் எழுதிய தமிழைப் படித்து வாழ்வில் வளம் பெற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...
Subscribe to:
Posts (Atom)