18/08/2018

ஆகஸ்ட் 18: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவு தினம் இன்று...


சுபாஷ் சந்திரபோஸ்...

இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்தவர்.

இந்தியாவுக்கு என முதல் ராணுவத்தைக் கட்டமைத்தவர். காந்தியை எதிர்த்த காங்கிரஸ் கலகக்காரர்.

மகாத்மா காந்தி மீது கொண்ட அன்பால் காந்தியை 'தேசப் பிதா' என்று முதன்முதலில் அழைத்தவரும் இவரே.

தன் மரணத்தையே மர்மமாக்கியவர்.

நேதாஜி விடுதலைக்கு முன் பர்மாவிற்கும் மலேசியாவிற்கும் சென்ற போது அவரை பாதுகாப்பாக வரவேற்று அரவணைத்தவர் சிதம்பரம் எனும் முத்தமிழர்..

இவரை சுற்றி இருந்தவர்களில் முக்கால்வாசி தமிழர்கள் தான்..இவரது சமையல்காரர் காலி கூட தமிழர் தான்.

நேதாஜியின் இறுதி கடிதத்தை எழுதியது திபி எனும் தமிழர் தான்..

இந்தியா விடுதலை அடைந்தால் தான் மற்ற ஆசிய நாடுகள் விடுதலை அடைய முடியும் என நேதாஜி அரைகூவல் விட்டதை தொடர்ந்து, தமிழின மக்கள் போராட சென்றனர்..

உயிர் பிரியும் தருவாயில் தமிழன் ஒருவன் சொன்னது,

“தமிழன் உயிர் விடும் வரை போராடுவான் என நேதாஜியிடம் கூறுங்கள்” என்று சொல்லி இறந்துள்ளார்..

ஒரு நாள் நேதாஜி திலான் எனும் தளபதியை அழைத்து தமிழர்களுக்கு நீ தலைமை தாங்கு என கூறியுள்ளார்..

இது குறித்து திலான் கூறியது,

தமிழ் வீரர்களுக்கு நான் தலைமை தாங்கியது எனக்கு பெருமை.. இந்திய இராணுவத்தின் ஆன்மாவும் உடலும் தமிழரகள் தான் என கூறியுள்ளார்.

தமிழனது பெருமை உள்நாட்டில் மட்டுமல்லாது அப்போதே அயல் நாடுகளிலும் பரவி உள்ளது என்பது புலனாகிறது.

1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார்.

ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது..

இதுவரை 12 கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை.

நேதாஜியின் மரணம் இன்றும் மர்மமாக தான் இருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.