19/08/2018
இந்திய சதி கோட்பாடு - 4...
பண்டைய கால இந்தியாவில் நடந்த அணு போர் பற்றியது...
2010-ஆம் ஆண்டில் இந்திய நகரமான ஜோத்பூரில் கதிரியக்க சாம்பல் (Radioactive ash) கண்டுப்பிடிக்கப்பட்ட பின்தான் இந்த சதி கோட்பாடு கிளம்பியது.
குறிப்பிட்ட மகாபாரத வசனங்களில் மகாபாரத யுத்தம் நடந்தாக சொல்லப்படும் இடத்தில் கதிரியக்க சாம்பல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளத்தால் தான், பண்டைய காலத்திலேயே அணுபோர் நடத்தப்பட்டுள்ளது என்கிறது ஒரு சதி கோட்பாடு...
இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ...
பெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை என்கிறார் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின்
முதலாவது பயிற்சிமுகாம் அதிகார பூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கி வைக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர்.
மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.
இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது உயிர்ப்பலி நிகழ்ந்தது.
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவு விடுதலைப்புலிகளின் சகல வேலைத்திட்டங்களிலும் படையணிகளிலும் பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.
கடல் மற்றும் தரைக் கரும்புலிகளாகவும் பெண்புலிகள் பலர் வீரச்சாவடைந்துள்ளனர்.
தமிழரின் தேசம் அடையும் விடுதலை பயணத்தில் பெண் புலிகளின் பங்களிப்பு மகத்தானது...
எட்டுவழிச் சாலை திட்டத்தை கைவிடுக! 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம்; விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு...
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலையை எதிர்த்து அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு...
சேலத்திலிருந்து சென்னை செல்ல ஏற்கனவே மூன்று சாலைகள் உள்ளன. நான்காவதாக அதிவிரைவு எட்டு வழிச்சாலை ஒன்றைஅமைக்க மத்திய - மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதை செயல்படுத்துவதற்கான முறையில் நிலங்களை அளவீடு செய்வது, முட்டுக்கல் போடுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நில உரிமையாளர்களான விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக கடும் எதிர்ப்பினை அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடமும் விவசாயிகள் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராடி வருகின்றனர்.
தொடரும் போலீஸ் அராஜகம்...
ஆனால் தமிழக அரசு, சட்டவிரோதமாக காவல்துறை மற்றும் வருவாய்த் துறையை பயன்படுத்தி அச்சுறுத்தியும் மிரட்டியும் பொய் வழக்கு போட்டும் ஆசை வார்த்தை காட்டியும் நிலத்தை அளக்கும் பணியை மேற்கொண்டது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் மீது பொய் வழக்குபோட்டு சிறையிலடைத்தது. எட்டு வழிச்சாலைக்கு எதிராக கூட்டம் நடத்தினால், பேசினால், துண்டுப் பிரசுரம் கொடுத்தால் குற்றம் என்று காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுக்கும் தமிழக அரசின் இத்தகைய போக்குகளை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து இந்த சாலைக்கு பத்தாயிரம் ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதில் சுமார் ஏழாயிரம் ஏக்கர் விவசாயிகளுக்கு சொந்தமான நல்ல விளை நிலங்கள் ஆகும். இந்த நிலம்பறிக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்கும் நிலை ஏற்படும். வேலை தேடி புலம்பெயரும் நிலைமை உருவாகும். மலைகளை உடைத்தும், வனங்களை அழித்தும், ஏரி- குளங்களை தூர்த்தும் சாலை அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். அதிவிரைவு சாலை என்பதால் வழியிலுள்ள கிராமமற்றும் சிறு நகரங்களில் வசிக்கும் மக்கள் இச்சாலையை பயன்படுத்த முடியாது.இந்த வழியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள் என அனைத்தும் தரைமட்டமாக்கப்பட உள்ளன. இத்தனை அழிவுகளை ஏற்படுத்தி இந்த சாலை அமைக்கப்படுவதன் மூலம் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுங்க வரியாக வசூலிக்க இருக்கிறது. ஏழை சிறு விவசாயிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை ஏற்க முடியாது. சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில்உள்ள தாது வளங்களை கொள்ளையடிப்பதற்கான திட்டமும் இதில் அடங்கியுள்ளது என்று இக்கூட்டம் குற்றம் சாட்டுகிறது.எனவே எட்டுவழி அதிவிரைவு சாலை திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் கைவிட வேண்டும். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் நிலங்களில் போடப்பட்டுள்ள முட்டுக்கல் அனைத்தையும் அரசே அப்புறப்படுத்த வேண்டும். சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
10லட்சம் பேரிடம்...
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்திசம்பந்தப்பட்ட மாவட்டங்களில் பொதுமக்களிடம் 10லட்சம் கையெழுத்துக்கள் பெற்று முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்குவது என்றும், செப்டம்பர் 3வது வாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நிபுணர்கள் கலந்து கொள்ளக்கூடிய பொது விசாரணை அனைத்து மாவட்ட விவசாயிகளும் பங்கேற்கும் வகையில் திருவண்ணாமலையில் நடத்துவதென்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது. விவசாயிகளின் நில உரிமையைக் காக்கவும், தமிழக அரசின் ஜனநாயக விரோதநடவடிக்கைகளைக் கண்டித்தும் நடைபெறவிருக்கும் இப்போராட்டத்திற்கு அனைத்துக்கட்சி, சமூக நல அமைப்புகள் மற்றும் எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கும் அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எதிர்ப்புக் கூட்டமைப்பு உதயம்...
அத்துடன் இந்த பிரச்சனையில் தொடர்ந்து கவனம் செலுத்த எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பை உருவாக்குவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள்சங்க பொதுசெயலாளர் வே.துரைமாணிக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டி.ரவீந்திரன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் ஏ.சந்திரமோகன், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பாலசுந்தரம், அகில இந்திய விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடராஜன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் ஜே.பி.கிருஷ்ணா, வாழ்க விவசாயிகள் இயக்கம் சார்பில் கே.பாலகிருஷ்ணன், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு – திருவண்ணாமலை சார்பில் அபிராமன், தமிழ்நாடு நில உரிமை கூட்டமைப்பு சார்பில் தேவருக்மாங்கதன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்டமாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, தலைவர்பொன்னுசாமி, நிர்வாகிகள் ஆர்.குழந்தைவேல், பி.தங்கவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- தீக்கதிர்...
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-9...
நினா குலாகினா தொடாமலேயே பொருட்களை அசைத்தாரென்றால் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூரி கெல்லர் ஸ்பூன்களை மடக்குதல், பல காலமாக ஓடாமல் இருந்த வாட்ச்களை ஓட வைத்தல் போன்ற செயல்களைச் செய்து பிரபலமானார்.
1973 நவம்பர் மாதத்தில் BBC ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யூரி கெல்லர் தன்னிடம் உள்ள அந்த அபூர்வ சக்திகளை அந்த நிகழ்ச்சியில் விளக்க ஆரம்பித்தார். அந்த நிகழ்ச்சி இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து முழுவதும் ஒலிபரப்பானது. அந்த நிகழ்ச்சியை நடத்தும் ஜிம்மி யங் ஷோ மிகவும் பிரபலமானவர் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
ஜிம்மி யங் ஷோ ஒரு தடிமனான சாவியை யூரி கெல்லருக்குத் தந்து அதை மடக்கிக் காண்பிக்கச் சொன்னார். அந்த சாவியை லேசாகத் தொட்ட யூரி கெல்லர் தன் மனதை ஒருங்கிணைத்து குவித்து அந்த சாவியை மடக்க முயற்சி செய்தார். யூரி கெல்லர் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்ல முடியாது. அவரால் முடியாமல் போன சந்தர்ப்பங்களும் உண்டு.
அப்போது அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருக்கும் நேயர்களையும் வீட்டில் உள்ள ஸ்பூன்கள், அல்லது பல காலம் ஓடாமல் இருந்த கடிகாரங்களை எடுத்து தங்கள் முன் ஒரு மேசையில் வைத்து தங்கள் மனங்களைக் குவித்து ஸ்பூன்களானால் அவை மடங்கும் படியும், ஓடாத கடிகாரங்களானால் அவை ஓடும் படியும் செய்ய உறுதியாக நினைக்கச் சொன்னார், யூரி கெல்லர்.
சிறிது நேரம் ஸ்டூடியோவில் ஜிம்மி யங் ஷோவின் சாவி மடங்கவில்லை. யூரி கெல்லர் கையை அதிலிருந்து எடுத்த பின் அந்த சாவி சிறிது சிறிதாக மடங்க ஆரம்பித்தது. பரபரப்படைந்த ஜிம்மி "ஸ்பூன் மடங்க ஆரம்பிக்கிறது. மடங்கிக் கொண்டே வருகிறது.... என்னால் நம்ப முடியவில்லை" உற்சாகத்தில் கத்த ஆரம்பிக்க அது பல்லாயிரக்கணக்கான வீடுகளில் எதிரொலித்தது.
அடுத்த சில நிமிடங்களில் பிபிசி ரேடியோ ஸ்டூடியோவில் தொடர்ச்சியாக போன்கால்கள் வர ஆரம்பித்தன. அந்த ஸ்டூடியோவின் ஸ்விட்ச் போர்டு கிறிஸ்துமஸ் மரம் போல போன் கால்களால் மின்ன ஆரம்பித்ததாக அங்கு பணிபுரிபவர் சொன்னார். பலருடைய வீடுகளிலும் ஸ்பூன்கள், கத்திகள், ஆணிகள் எல்லாம் மடங்க ஆரம்பித்ததாகப் பலரும் பரபரப்பாகப் போன் செய்து சொல்ல ஆரம்பித்தார்கள். நூற்றுக் கணக்கான நேயர்களின் இந்த அற்புத அனுபவங்கள் மறுநாள் பத்திரிக்கைகளில் படங்களுடன் தலைப்புச் செய்தியாயின.
நான்கு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் டெக்சாஸ் நகர ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இது போன்ற அற்புதங்களை யூரி கெல்லர் செய்து காட்டிய போது அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டு இருந்த டெக்சாஸ் அட்டர்னி ஜெனெரல் அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பெண்மணிகள் விளையாட்டாக தாங்களும் அப்படி முயற்சிக்கலாம் என்று முயன்ற போது ஒரு ஸ்பூன் 45 டிகிரிக்கு மடங்கியதாகவும், ஒரு சாவி பாதியாய் உடைந்ததாகவும் தெரிகிறது. அந்த அட்டர்னி ஜெனரல் ஆச்சரியப்பட்டு அதை எழுத்து மூலமாகவே யூரி கெல்லருக்கு அறிவித்ததாகத் தெரிகிறது.
அதை நினைவில் கொண்டு தான் பிபிசி ரேடியோவில் நேயர்களையும் அப்படிச் செய்து பார்க்கச் சொன்னதாக யூரி கெல்லர் பின்பு தெரிவித்தார். அதிலும் ஆச்சரியமான விஷயம் என்ன என்றால் இங்கிலாந்தில் பிபிசியில் நடந்தது போல டெக்சாஸில் நடந்தது நேரடி ஒலிபரப்பல்ல. டேப் செய்து பின்னர் ஒலிபரப்பிய நிகழ்ச்சி அது.
யூரி கெல்லரின் சாதனைகளில் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் சரிசமமாக ஆராய்ச்சியாளர்களிடம் இருந்திருக்கின்றன. சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இது அவருடைய ஆழ்மன சக்தியே என்று கூறினார்கள். சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் அவரது நம்பகத்தன்மையை சந்தேகித்தனர். அதற்கேற்றாற் போல் அவரால் பல இடங்களில் அதை செய்து காட்ட முடியாமலும் போயிருக்கிறது. இது மேஜிக் வித்தை தான் ஆழ்மன சக்தி அல்ல என்று ஜேம்ஸ் ரேண்டி போன்ற நிபுணர்கள் அடித்து சொன்னார்கள். எது எப்படியோ யூரி கெல்லர் 1971 முதல் 1977 வரை ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு பேசப்பட்டது போல பின்னாளில் பேசப்படவில்லை. (சமீபத்தில் மைக்கேல் ஜேக்சனின் மறைவுக்குப் பின் அவருடைய நண்பராக மைக்கேல் ஜாக்சன் பற்றிய தகவல்கள் சொல்லி பத்திரிக்கைகளில் பேசப்பட்டார்).
ஒருவேளை நாம் யூரி கெல்லர் விஷயத்தை சந்தேகத்தின் அடிப்படையில் ஒதுக்கினாலும் அந்த டெக்சாஸ் நகர அட்டர்னி ஜெனரல் அலுவலக ஊழியர்களான மூன்று பெண்மணிகளை அப்படி ஒதுக்க முடியாதல்லவா? அவர்களுக்கும் அதை உறுதி செய்த அட்டர்னி ஜெனரலுக்கும் பொய் பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? பிபிசி நிகழ்ச்சியைத் தொடர்ந்து பலர் வீடுகளில் நடந்த அந்த அற்புதங்களிலும் ஒரு சிலவற்றை வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டாலும் பெரும்பாலானவையும் அப்படியே இருக்க சாத்தியமில்லை என்றே பத்திரிக்கை செய்திகளைப் படிக்கையில் தோன்றுகிறது. யூரி கெல்லரால் அத்தனை பேருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அப்படி நிஜமான விளைவாக மாறியிருக்க வேண்டும் என்றே முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.
அந்த நிகழ்ச்சிகளின் தாக்கமாகவே மேட்ரிக்ஸ் திரைப்படத்தில் ஒரு சிறுவன் ஒரு ஸ்பூனை பார்வையாலேயே வளைக்கும் காட்சியைக் காண்பித்திருக்கிறார்கள்.
பிரபல ஆங்கில நாவலாசிரியரும், சினிமா தயாரிப்பாளர், டைரக்டருமான மைக்கேல் க்ரிஸ்டன் தன் "ட்ராவல்ஸ்" என்ற நூலில் "ஸ்பூன்களை மடக்கும் விருந்து நிகழ்ச்சி" ஒன்றில் தனக்கு நேரடியாக ஏற்பட்ட அனுபவம் ஒன்றை விவரித்திருக்கிறார். என்னாலும் ஸ்பூனை மடக்க முடிந்ததை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். அந்த ஸ்பூனைத் தொட்டுப் பார்த்த போது அது அது ப்ளாஸ்டிக்கைப் போல மெத்தெனவும் லேசான உஷ்ணநிலையிலும் இருந்தது. அதை மடக்க விரல்நுனியால் லேசாகத் தொடுவதே போதுமானதாக இருந்தது. எந்த பலத்தையும் பிரயோகிக்கத் தேவையிருக்கவில்லை. வேறு சில ஸ்பூன்களையும், ·போர்க்குகளையும் சிரமமேயில்லாமல் வளைத்த பிறகு எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்தேன்.
எட்டு, ஒன்பது வயது சிறுவர்கள் எல்லாம் பெரிய இரும்புத் துண்டுகளை விளையாட்டாக வளைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். யூரி கெல்லர் உண்மையாகச் செய்து காட்டினாரா, இல்லை ஜேம்ஸ் ரேண்டி சொல்வது போல மேஜிக் வித்தை தானா அது என்பது எனக்குத் தெரியாது. நான் செய்து பார்த்ததிலும், என்னைச் சுற்றிலும் சில சிறுவர்கள் செய்து கொண்டிருப்பதிலும் பொய் புரட்டு கிடையாது என்பது மட்டும் நான் அறிவேன்.
இதில் நான் வித்தியாசமாகக் கவனித்தது ஒன்றே ஒன்று தான். இது போன்ற சக்திகள் வேலை செய்ய ஆரம்பிப்பது நாம் கவனத்தைக் குவிப்பதை விட ஆரம்பித்து வேறிடத்திற்குக் கவனத்தை செலுத்த ஆரம்பிக்கும் போது தான். மிகவும் மன ஒருமைப்பாடுடன் கவனத்தைக் குவித்து பார்ப்பதற்குப் பலன் கிடைப்பது பிறகு அந்தக் கவனத்தை வேறிடத்திற்குத் திருப்பும் போது தான்.
இதன் பின்னால் இருக்கும் தத்துவம் எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. யாரும் இதைச் செய்ய முடியும் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது.
எழுத்துலகிலும், திரையுலகிலும், புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்து 2008ல் மறைந்த மைக்கேல் க்ரிஸ்டன் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவர். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பட்டதாரியும் கூட. அவர் ஒரு முறை சந்தித்த அந்த அனுபவத்தைப் பற்றி அதிகம் விவரிக்கப் போகவில்லை. இது அவருடைய துறையும் அல்ல. அவருக்கு இதுபற்றி பொய் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவசியமுமில்ல. ஆனால் அவர் தான் மட்டுமல்லாமல் சிறுவர்களும் செய்ய முடிந்ததாகச் சொன்ன அந்த அற்புதச் செயலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மேலும் பயணிப்போம்.....
100 ஆண்டுகளில் இல்லாத மோசமான வெள்ளம்.. கேரளாவில் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு...
கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தொடர் கனமழையால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளன.
அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பகுதிகளில் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. ரெட் அலர்ட் இதனால் ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு மீண்டும் மழை பெய்துவருவதால் 13 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். காலையில் 164 பேர் பலியாகியிருப்பதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
100 ஆண்டுகளில் மோசமான பாதிப்பு 2,23,139 பேர் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பை கேரளா சந்தித்திருப்பதாகவும் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்...
வெல்லம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...
உடல் குளிர்ச்சி..
கரும்பு சாற்றினால் தயாரிக்கப்பட்ட வெல்லத்தை, நீரில் கரைத்து குடித்து வந்தால், இவை வயிற்று எரிச்சலை தணித்து, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். அதிலும் இந்த முறையை கோடையில் செய்தால், உடல் குளிர்ச்சியடையும்.
நல்ல தூக்கம்..
வெல்லத்தில் செலீனியம் அதிக அளவில் உள்ளது. மேலும் இதல் உள்ள காம்ப்ளக்ஸ் சர்க்கரையானது, நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்கிறது. அதிலும் இதனை ரொட்டியுடன் சேர்த்து, இரவில் சாப்பிட்டால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
எடை குறைவு..
சர்க்கரையுடன் ஒப்பிடுகையில் வெல்லத்தில் கலோரியானது குறைவான அளவிலேயே இருக்கிறது. சர்க்கரையில் எளிதான வகையில் குளுக்கோஸானது உள்ளது. ஆனால் வெல்லத்தில் அது மிகவும் கடினமாகவும், செரிமானமடைவதற்கு தாமதமாகவும் இருக்கும். மேலும் வெல்லத்தில் நல்ல ஆரோக்கியமான கர்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர், இதனை உணவில் சேர்த்தால், உடல் எடையை குறைக்கலாம்.
இரும்பு சத்து..
வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்.
புற்றுநோய்..
வெல்லத்தில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்ப்பு போராடி புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கலாம்.
வலிகள்..
வெல்லத்தில் உள்ள செலீனியத்தால், உடலில் ஏற்படும் வலிகள் மற்றும் பிடிப்புகள் போன்றவை சரியாகும். குறிப்பாக ஒற்றை தலைவலி மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்று வலி போன்றவையும் நீங்கும்.
பிரசவத்திற்கு பிந்தைய உணவு..
பிரசவத்தின் போது பெண்களின் உடலில் இருந்து நிறைய சத்துக்கள் வெளியேறியிருக்கும். எனவே அவ்வாறு இழந்த சக்தியை மீண்டும் பெறுவதற்கு வெல்லம் பெரிதும் துணையாக உள்ளது...
சாதி ஒழிப்பை விட முதலில் திராவிட ஒழிப்புத் தான் மிக முக்கியம்...
60 ஆண்டு திராவிட ஆட்சியில் சாதியை ஒழித்தார்களா இல்லையே ஏன்?
தமிழர்களுக்குள் சாதி பகையை உருவாக்கி அதில் குளிர் காய்ந்து ஆண்டுக் கொண்டிருப்பதே இந்த திருட்டு திராவிடம் தான்...
என்று திராவிடத்தை வீழ்த்தி ஒரு தமிழர் தமிழகத்தை ஆளும் நிலை வருகிறதோ அன்றிலிருந்து தான் தமிழர்களுக்குள் இருக்கும் சாதி பிரிவினை அகலும்...
முதலில் அதைப் புரிந்துக்கொள் தமிழினமே...
பிரபஞ்சமும் நன்றியும்...
உலக புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் தனக்கு முன்னால் வாழ்ந்த அறிவியல் அறிஞர்களுக்கு ஒரு நாளில் நூறு முறை மேல் நன்றியுணர்வை வெளிபடுத்துவார்..
இயேசு கிறிஸ்து தான் செய்யும் ஒவ்வொரு அற்புதத்திற்கு முன்னரும் நன்றி சொல்லி தொடங்கினார்...
உலக புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன் தன் அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றி கூறும்போது பல அறிவியல் அறிஞர்களின் தோளில் ஏறி சாதித்தாக குறிப்பிட்டார். ஒரு நாளில் குறைந்தது நூறு முறையாவது நன்றியுணர்வை வெளிபடுத்தினார்.
எண்ணற்ற மகான்களும், அறிவியல் அறிஞர்களும், வாழ்வில் சாதித்தவர்களும் தங்கள் வாழ்வில் ஒரு நாளில் நூறு முறைக்கு மேல் நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்கள்..
நீங்கள் ஒரு நாளில் குறைந்தது நூறு முறையாவது நன்றியுணர்வை மற்றும் அன்பை வெளிப்படுத்தி உணரும்போது உங்கள் நாள் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக மாறுகிறது....
நீங்கள் செல்லுமிடமெல்லாம் மாயஜாலம் நிகழ்கிறது.... நீங்கள் சாலையில் பார்க்கும் வார்த்தைகள் அனைத்தும் உங்களை மகிழ்விக்கிறது.
உங்களை சுற்றி நடக்கும் ஒவ்வொரு செயலும் , சூழ்நிலையும் உங்களை எப்போதும் சந்தோஷமான சூழ்நிலையிலே வைத்திருக்கும்...
பிளாட்டுகளை வாங்கி விவசாய நிலமாக மாற்றிய நடிகை தேவயானி…
உழவுக்கு மரியாதை செய்த நடிகைக்கு குவியும் பாராட்டு..
பொய்த்துப் போன மழை, தொடர்ந்து விவசாயத்தில் ஏற்பட்டு வரும் நஷ்டம், நகரமயமாக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப் போய் வருகிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.
இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்கத் தொடங்கியுள்ளனர். ரியல் எஸ்டேட் முதலாளிகளும் விவசாய நிலங்களை கூறுபோட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை தேவயானி ஈரோடு அருகே தனது தோட்டத்துக்கு அருகே மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த பிளாட்டுகளை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறார்.
நடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊருக்கு அடிக்கடி செல்லும் தேவயானி தம்பதிகள், அருகில் உள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.
இதனால் அடிக்கடி ஊருக்குச் சென்று தங்கள் விவசாய நிலங்களை குழந்தைகளுடன் பார்த்து வருவார்கள்.
இந்நிலையில் அவர்களது தோட்டத்துக்கு அருகே ஒருவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்தற்காக பிளாட்டுகளாக மாற்றியுள்ளார். இதையறிந்த தேவயானி அந் நபரிடம் 2 ஏக்கர் வீட்டு மனைகளையும் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
பின்னர் அதை விவசாய நிலமாக மாற்றி தற்போது 2 ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார். இதற்காக சொட்டுநீர் பாசனம் வைத்து தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச ஏற்பாடு செய்துள்ளார். தற்போது அந்த விவசாய நிலம் முழுவதும் செண்டு மல்லி பூத்துக் குலுங்குகிறது. இந்த தோட்டத்தை திருவிழாவுக்காக சொந்த ஊர் வந்த தேவயானி குடும்பத்தினர் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.
விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில், நடிகை தேவயானி, பிளாட்டுகளை விவசாய நிலங்களாக மாற்றி சாகுபடி செய்து வருவதை அப்பகுதி விவசாயிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
வாழ்த்துக்கள் மேடம்...
ஈழமும் தமிழகமும் ஒன்று சேர்ந்தால் இந்த உலகத்தின் உயரம் தமிழினமே...
இதை பலர் புரிந்ததனால் சேர விடாமல் தடுக்கின்றார்கள், பிரிக்கின்றார்கள், சேர்ந்தவர்களையும் சேருபவர்களையும் அடைக்கின்றார்கள்..
முன்பு ஒன்றாய் இருந்த தமிழினம் வருங்காலத்தில் ஒன்றுபட்டே தீரும்..
புலிக்கூட்டம் புலியோடு தான் சேரும் என்பதில் சந்தேகமில்லை.
அன்று தமிழகமும் புலிக்கொடி கொண்டு தான் வாழ்ந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது.
இனி மேல் உருவாகும் வரலாறும் அதையே சொல்லும்...
மறைக்கப்பட்ட தமிழனின் பெருமைகள்...
நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களை பற்றி பழந்தமிழன் அறிந்திருந்தான் என்பதற்கு சான்றுகள்.
நட்சத்திரங்கள் – உடு,
நட்சத்திரக் கூட்டம் – உடுமீன்கள் என்று தமிழில் குறிப்பிடப்படுவதும் மற்றும் ஞாயிறு போன்ற தமிழ்ச் சொற்களும் சான்றாகும்.
செவ்வாய் என்ற சொல், செவ்வாய்க் கோள் சிவப்பானது என்பதை குறிப்பிடுகிறது.
சனிக் கோளினை சுற்றி இருக்கும் கரிய வளையத்தை குறிக்கும் விதத்தில், சனிக்கிரகம் – கரியன் என தமிழில் அழைக்கப்படுகிறது.
கலிலியோ தொலைநோக்கி மூலம் வான மண்டலத்து கோள்களைப் பற்றி கண்டறிந்து சொல்வதற்கு முன்பே தமிழன் அவற்றைப் பற்றி அறிந்திருந்தான்...
சில்லென்ற உடலுக்கு செம்பருத்தி...
அனைத்து வயதினரையும் பாதித்து வரும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், இதயநோய் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றிற்கு கோபமே காரணமாக உள்ளது.
கோபத்தினால் உடலின் வெப்பம் அதிகப்பட்டு, ரத்த அழுத்தம் கூடி, நாளமில்லா சுரப்பிகளில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி, ஹார்மோன்களை சீர்குலைத்து பல நோய்களை உண்டாக்கி விடுகின்றன.
மேலும், அடிக்கடி கோபம் ஏற்படுவதால் உடல் எப்பொழுதும் சூடாக இருப்பது போன்ற ஒருவித உணர்ச்சி, முகத்தில் ஒருவித வெறி, மனம் அமைதியின்மை ஆகியன ஏற்பட்டு சமூகத்தில் இருந்து ஒதுங்க ஆரம்பிக்கின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர்.
உடலில் பித்தத்தின் அதிகரிப்பால் தோன்றும் இந்த கோபத்தை பித்தபிரமேகம் என்று மனம் சார்ந்த நோயாக சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது.
உடல் மற்றும் மனதில் தோன்றும் ஒருவித உஷ்ணம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தி, உடலுக்கு குளிர்ச்சியையும், மனதிற்கு அமைதியையும் தரும் அற்புத மூலிகை செம்பருத்தி.
சிவப்புநிற பூக்களையுடைய பருத்திச் செடியே செம்பருத்தி என்று அழைக்கப்படுகிறது.
காசிபியம் ஆர்போரியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் பூக்களே மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகின்றன.
இதே குடும்பத்தைச் சார்ந்த செம்பரத்தை செடிகளை நாம் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகளாகும்.
செம்பரத்தை செடிகளும், செம்பருத்திச் செடிகளும் வேறு, வேறு செடிகளாகும்.
செம்பருத்தி செடிகளின் பூக்களிலுள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துடன், அதிக சூடு மற்றும் வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் வராமல் நம்மை காக்கின்றன.
செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்து, அம்மியில் வைத்து மைய அரைத்து, அரைநெல்லிக் காயளவு உருண்டையாக உருட்டி, பாலுடன் கலந்து காலை மற்றும் மாலை தொடர்ந்து 5 நாட்கள் உட்கொண்டு வர தேவையற்ற கோபம் மற்றும் பதட்டத்தினால் உண்டான உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியுண்டாகும்.
செம்பருத்திப் பூக்களின் பூவிதழ்கள் அரை கைப்பிடி, சீரகம்-1 கிராம், நெல்லிவற்றல்-1 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை அருந்தி வர அதிக உடல் உஷ்ணம் தணியும், செம்பருத்தி பூவிதழ்களை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சியோ அல்லது தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தோ தலையில் தேய்த்து வரலாம். இதனால் தலைசூடு தணியும்...
நீங்கள் தன்மானத் தமிழரா?
இந்தியா 1947ல் வெள்ளையரிடமிருந்து விடுதலையடைந்தது; வெள்ளையர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.
இந்தியா மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாநில மொழியினர் அந்தந்த மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர். இது நடைமுறை.
இதனால் இந்திய இறையாண்மை என்பது மத்திய அமைச்சரவையும் மாநில அமைச்சரவைகளும் இணைந்த ஒன்றாக இருக்கிறது.
இந்தியாவை இந்தியர்களே ஆள வேண்டும் என்பதும்..
தமிழ் நாட்டைத் தமிழர்களே ஆள வேண்டும் என்பதும்..
இந்திய இறையாண்மை தமிழ் இனத்திற்குக் கொடுத்துள்ள உரிமையாகும்.
இந்த நிலையில் 'தமிழ் நாட்டைத் தமிழர்களே ஆள வேண்டும் என்னும் கோரிக்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனக் குரல் எழுப்புகிறவர்கள் தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாத, தமிழர்க்கு எதிரான அந்நியர்கள் ஆவார்கள்..
இந்தியாவை வெள்ளையர் ஆளுவதற்கு முன்னர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து வந்த தமிழரல்லாத அந்நியர்கள், தமிழ் நாட்டில் பெற்ற அனைத்து வசதிகளுடன் நிரந்தரமாகத் தங்கியுள்ளனர்.
இந்தியா விடுதலையடைந்தவுடன் வெள்ளையராகிய வெளிநாட்டினரை இந்தியாவை விட்டு வெளியேற்றி விட்டோம். ஆனால், தமிழ் நாட்டின் மீது படை எடுத்து வந்து, தமிழ் இனத்தை அடக்கி, நசுக்கி, இழிவுபடுத்தி ஆண்ட தமிழரல்லாத அந்நியர் வெளியேற்றப்படவில்லை.
இதனால், தமிழரல்லாத அந்நியர் தமிழ் நாட்டை ஆளும் நிலை உருவாகியுள்ளது.
மேலும், தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்று கோருவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பது போன்ற மாயத் தோற்றத்தை இந்த அந்நியர்கள் உருவாக்கி வருகின்றனர்.
இந்தியாவின் மருமகளாகிய சோனியாகாந்தி இந்தியப் பிரதமராக ஆகும் படித் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவை ஆள முற்பட்டபொழுது, வெளிநாட்டைச் சேர்ந்தவர் இந்தியாவை ஆளக் கூடாது; இந்தியாவை இந்தியரே ஆள வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல் எழுந்தது.
அப்பொழுது, சோனியாகாந்தி கட்சிக்குத் தலைமை தாங்கிக் கொண்டு, ஆட்சித் தலைமைக்கு ஓர் இந்தியருக்கு இடம் கொடுத்தார்.
அதைப் போன்று, தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாதார் தமிழரை ஆள விரும்பாமல், அவருடைய கட்சியைச் சேர்ந்த தமிழரை ஆட்சியில் அமர்த்தி விட்டு, கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும்.
இதை விரும்பாதவர்கள், தமிழ் இனத்தை அடிமைப்படுத்தி அழிக்க விரும்பும் அந்நியர் ஆவார்கள். என்பதில் ஐயம் இல்லை.
தன்மானத் தமிழர்கள் அத்தகைய கட்சியில் இருக்க மாட்டார்கள்.
இந்தியா பல மொழி பேசும் மாநிலங்களாக இருக்கின்ற காரணத்தால், மற்ற மாநிலங்களில் தமிழர் அமைச்சராக்கப்பட்டிருந்தால், அந்த மாநிலத்தவர் இங்கும், அங்குள்ள எண்ணிக்கைக்கேற்ப அமைச்சராக்கப்படலாம்.
தமிழ்நாட்டில் இந்த நிலை இதுவரை எண்ணிப் பார்க்கப்பட வில்லை.
இதன் காரணமாகவே தமிழ் இனம் அந்நியர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது.
அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனம் - தமிழ் மொழி - தமிழர் பண்பாடு - தமிழர் சமயம் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட, தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்னும் கோரிக்கை இந்தக் காலத்தில் எழுப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
இதனால் தமிழர் அல்லாதவர்கள் தமிழ் இனத்தை ஆளுவது தமிழ் இனத்திற்கு இழிவு ஆவதுடன், அழிவையும் கொடுப்பது ஆகும்.
இந்தியாவை இந்தியரே ஆள வேண்டும் என்பதும் எப்படி சரியானதோ..
அதைப் போன்றே..
தமிழ் நாட்டைத் தமிழரே ஆளவேண்டும் என்பதும், நியாயமானதும் இந்திய இறையாண்மைக்கு ஏற்றதும் தமிழர்களின் அடிப்படை உரிமையுமாகும்.
இதைக் குறை கூறுவோர் தமிழ் இனத்தை அடக்கி ஆள விரும்பும் அந்நியரும் அந்நியர்களின் கைக் கூலிகளுமேயாவர்.
இதனால் தமிழ் இனத்தை அடக்கி, இழிவுபடுத்தி, அழிக்க விரும்பும் அந்நியர்களிடமிருந்து தமிழ் நாட்டை விடுவிக்க வேண்டிய பிறவிக் கடமை தமிழ் இனத்தில் பிறந்துள்ள தன்மானத் தமிழர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
இது இந்திய இறையாண்மை தமிழ் இன மக்களுக்குக் கொடுத்துள்ள உரிமையாகும்.
இதனால் கட்சிக்குத் தலைமை தாங்குவதுடன் ஆட்சிக்கும் தலைமை தாங்க விரும்பும் அந்நியர்களின் தலைமையிலுள்ள கட்சிகளில் தன்மானத் தமிழர் இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகின்றோம்...
மரபுக்குத் திரும்புங்கள். அதுவே புவி முழுமைக்குமான தீர்வு - ம.செந்தமிழன்...
வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்வது குற்றம் இல்லை. ஆனால் அரசின் பதிவு பெறாத நபர்கள் பிரசவம் பார்ப்பது குற்றம். பயிற்சியில்லாத நபர்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை மருத்துவம் என்று கூறி பிரசாரம் செய்வது குற்றம்.
தமிழக சுகாதாரத் துறைச் செயலர், மரு.இராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்.
பி.பி.சி தமிழ் இணையச் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் இந்த செய்தியைப் பதிவு செய்துள்ளார்.
எனது கருத்துகளையும், செம்மைச் செயற்பாட்டாளர் கலாநிதியின் கருத்துகளையும் கூட இதே கட்டுரையில் பதிவு செய்துள்ளார் அவர்.
வீட்டுப் பிரசவமே குற்ற நடவடிக்கை. இதைப் பற்றிப் பேசுவோரைக் கைது செய்ய வேண்டும் என்ற பொய் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.
பகுத்தறிவின் ஊனப் பார்வைக்குச் சட்டமும், நடைமுறையும் தெரியாது.
எல்லாப் பிரசவங்களும் அலோபதி முறைப்படி, மருத்துவமனையில்தான் பிறக்க வேண்டும் என்பது மேற்கத்திய நிறுவனமயப்பட்ட அடிமைகளின் பேராசை.
மரபுவழியில் பயணிப்போருக்கு பேராசை இல்லை. விருப்பம் உள்ளது. நாம் நம் விருப்பத்தில் நிலைக்கிறோம். ஆழ்ந்த வேண்டுதலுடன் உள்ளோம். மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுள்ளன.
மரபுவழிகளில் பிள்ளைப் பேறு எட்டும், கல்வி முறை வேண்டும் என்பதை இப்போதும் வலியுறுத்துகிறேன். இக்கல்வி ஏட்டுக் கல்வியாக மட்டுமில்லாமல், மரபு நுட்பங்களின் நடைமுறைகளின் தொகுப்பாக இருக்க வேண்டும்.
நகரமயப்பட்ட புதிய தலைமுறையினருக்கு இக்கல்வி எளிதில் கிடைக்க வேண்டும். அவர்கள் விரும்பினால், இக்கல்வி வழிகாட்டலோடு வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை வேண்டும். இதைச் செய்வதும் அரசின் கடமைதான்.
இந்த நிலத்தில் வாழும் அனைவருக்கும் இந்த நிலத்தின் மரபுகளைப் போற்றவும், பற்றவும் உரிமை உண்டு.
இவ்வுரிமையைச் செயலாக்குவதில் சிக்கல் நேர்ந்தால், அச்சிக்கலைச் சரி செய்ய வேண்டுமே தவிர, உரிமையைப் பறிக்கக் கூடாது.
போலி வாக்குறுதி அளிப்போரும், பழமைவாதிகளும், வணிக மருத்துவ நிறுவனங்களும் சமூகத்தின் கேடுகள். இக்கேடுகளைக் களையும் தீர்வு, தற்சார்பான வாழ்வியலில் மட்டுமே உள்ளது. மரபுதான் தற்சார்பின் தாய். ஆகவே, மரபுக்குத் திரும்புங்கள்.
ஹீலர் பாஸ்கர், வீட்டுப் பிரசவத்திற்காக எவ்வித வாக்குறுதியும் அளித்து, அதற்கான பணம் பெறவில்லை. நான் புரிந்துகொண்டவரை, அவர் அவ்வாறான மனிதர் அல்ல. அவர் மீது, புகார் அளித்தவர்கள் பகுத்தறிவுவாதத்தின் பித்துப் பிடித்த நிலையில் உள்ளோர். அவரைப் புரிந்துகொள்ளாமல் செய்திருக்கிறார்கள்.
சட்டப்படி அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. நியாயப்படி அவர் நன்மைகள் பல செய்துள்ளார். அவரை விடுவிக்க வேண்டும். மரபுச் சமூகத்திற்கு வருகை தரும் நம் மக்கள் அனைவரும் தொடர்ந்து செயல்படுங்கள். அவர் விடுதலை நம் விருப்பம்.
இச்செய்திக் கட்டுரையை, இதில் உள்ள உண்மைகளைப் பரவலாக எடுத்துச் செல்லுங்கள். பகுத்தறிவாளர்களுக்குப் பதில் கூறாதீர்கள். அவர்கள் அடுத்த பொய்களை உருவாக்க உழைப்பார்களே தவிர, சட்டத்தையும் மதிக்க மாட்டார்கள், நியாயத்தையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
ஆங்கிலமே அறிவு மொழி, அறிவியல் என்றாலே மேற்கிலிருந்து வருவதுதான் என்பவை எல்லாம் பகுத்தறிவின் மூடநம்பிக்க்கைகள். நாம் ஆங்கிலமும் அறிவோம் தமிழும் அறிவோம் ஆரியமும் அறிவோம். நமக்கு எம்மொழி மீதும் வெறுப்பில்லை. மேலை நாட்டு நுட்பங்களை நாம் வெறுப்பதில்லை. நம் நாட்டு நுட்பங்களை விட்டுக் கொடுப்பதுமில்லை.
நாம் பழமைவாதிகள் அல்ல, மரபுவாதிகள். மரபு என்பது காலத்திற்கேற்ற மாற்றங்களைச் செய்துகொண்டு, தொன்மையின் மெய்மையில் நிலைத்து வளர்வதாகும்.
நமக்குக் கருவிகளைப் பயன்படுத்தவும் தெரியும், அக்கருவிகள் இல்லாமல் வாழவும் தெரியும்.
நாம் பகுத்தறிவாளர்களை விட மேலான தகுதி பெற்றோர். அவர்களுக்கு இருப்பது ஒற்றைத் தன்மை. நம்மிடம் இருப்பது பன்மயம். தமிழ் போற்றிய அப்பாத்துரையார் 18 மொழிகள் அறிந்தவர். ’பன்மொழிப்புலவர்’ என்று அவருக்கு அடைமொழி உண்டு.
ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன் அவர் இயற்றிய, ‘குமரிக்கண்டம்’ எனும் நூலில் டைனோசரஸ் எனும் விலங்கு குறித்த தகவல்களை, மேலை நாட்டு ஆய்வுகளின் அடிப்படையில் பதிவு செய்தவர் அவர். இந்த பகுத்தறிவாளர்களுக்கு அந்தக் காலத்தில் இவ்வாறான கல்வியே கிடையாது. ஆங்கிலத் திரைப்படம் பார்த்த பிறகுதான், டைனோசரஸ் எனும் விலங்கை இவர்கள் அறிந்து கொண்டார்கள்.
நாம் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்லர். நாம் எந்தக் கண்டுபிடிப்பிற்கும் எதிரிகள் அல்லர். மாற்றங்களை நிராகரிப்பவர்கள் அல்லர்.
இயற்கைக்கும், பல்லுயிர் வாழ்க்கைக்கும் பொருந்தாதவற்றை நிராகரிக்கிறோம். இந்த மெய்யறிவை நமக்கு நம் மரபு வழங்கியுள்ளது.
மரபுக்கொள்கையில் நிலைப்பதே இறை அருள்தான்.
மரபு வாழ்வியலே புவிமுழுமைக்குமான தீர்வு. நாம் நம் மரபில் வாழத் துவங்குவோம்...
பி.பி.சி கட்டுரைச் சுட்டி:
https://www.bbc.com/tamil/india-45074210
தமிழர் தேசத்தை நோக்கி செயல்படுபவர்கள் தொடங்க வேண்டிய முதல் போர்...
சுயசார்பு மற்றும் தற்ச்சார்பு மாநிலமாக தமிழர் தேசத்தையும் தமிழரையும் மாற்ற வேண்டும்.
தமிழர் பொருட்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
நாம் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நாம் பயன்படுத்தும் அணைத்து பொருட்களும் பிற மாநிலத்தையோ, அல்லது நமது தமிழினதிற்க்கு துரோகம் இழைத்ததாகவோ தான் இருக்கிறது…
அப்படி இருக்க தமிழர் தேசம் எப்படி அமையும்?
இலங்கை பொருட்களை வாங்காதீர்கள் என்று பரப்புரை செய்தோம்..
யாராவது பிரித்தானியா பொருட்களை வாங்காதீர் என்று போராட்டம் செய்தோமா?
இது தானே நாம் அமெரிக்க அரசு மீதும் பிரித்தானியா மீதும் இந்த நொடிப் பொழுதே நாம் தொடுக்கும் போர்?
சிந்தி தமிழா.?
தமிழர் வணிகத்தை ஆதரித்து முன்னிலைப் படுதுங்கள்…
தமிழர் தேசதின் மொட்டு அன்றே மலரத் தொடங்கும்….
உன்னுள் நுழைய தியானம்...
எந்த எண்ணத்தையும் உன்னுள் நுழைய விடாமல் ஆச்சரியத்துடனேயே
இருப்பது தான் தியானம்..
நீ ஆச்சரியமாக இருக்கும் போது.. உன் மனதில் எண்ணம் புகுந்தால்.. நீ யோசிக்க ஆரம்பித்து விடுகிறாய்..
இந்த உலகம் முழுக்க ஆச்சரியம் நிறைந்து இருக்கிறது..
நீ ஆச்சரியத்தில் சாதாரணமாக இருக்க முடியவில்லை என்பதால் கேள்விகள் கேட்கிறாய்..
கேள்விகளுக்கும் பதில்களுக்கும் முடிவே கிடையாது..
ஒரு கேள்வி ஒரு பதிலுக்கு இட்டுச் செல்லும்..
ஒரு பதில் ஆயிரம் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்..
ஆச்சரியம் அற்புதத்துக்கு இட்டுச் செல்கிறது..
அதற்கு ஓர் ஆன்மீகப் பெயர் தான் கடவுள்..
கடவுள் என்பது அறிந்து கொள்ள முடியாத ஓர் அற்புதம்..
கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு.. ஆச்சரியத்தின் மீது கவனம் செலுத்து..
வெகு விரைவில் ஆச்சரியம் மறைந்து போய் அற்புதம் தோன்றி விடும்..
ஆச்சரியம் என்பது ஒரு சிறு அலை.
அற்புதம் என்பது பெருங் கடல்.
நீ ஆச்சரியத்திலேயே இருக்கும் போது அது உன்னை அற்புதத்திற்கு இட்டுச் செல்கிறது..
அற்புதம் எல்லையற்றதற்கு இட்டுச் செல்கிறது..
அது கடவுளுக்கு இட்டுச் செல்கிறது..
ஆனால் உடனே சிந்திக்க மட்டும் ஆரம்பித்து விடாதே.
உனக்கு ஏதாவது ஆச்சரியம் தோன்று மானால் அதனுடனேயே தங்கி விடு..
அப்போது ஆழ்ந்த மௌனம் உன்னைச் சூழ்ந்து கொள்ளும்..
ஒரு நாள் அந்த ஆச்சரியம் அற்புதத்திற்குள் கரைந்து போகும்..
அந்த ஆச்சரியத் தோடு நீயும் கரைந்து போவாய்..
யோசிக்க ஆசை வரும்..
உன்னுடைய மனது அந்த ஆச்சரியத்தை சிந்தனையாக்கி விடும்..
அதனால் அந்த யோசிக்கும் ஆசையிலிருந்து விடுபட்டு நில்..
நீயும் ஒரு அற்புதமாகி விடுவாய்..
Subscribe to:
Posts (Atom)