19/08/2018

100 ஆண்டுகளில் இல்லாத மோசமான வெள்ளம்.. கேரளாவில் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு...


கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தொடர் கனமழையால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளன.

அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பகுதிகளில் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. ரெட் அலர்ட் இதனால் ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு மீண்டும் மழை பெய்துவருவதால் 13 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். காலையில் 164 பேர் பலியாகியிருப்பதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகளில் மோசமான பாதிப்பு 2,23,139 பேர் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பை கேரளா சந்தித்திருப்பதாகவும் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.