இலுமினாட்டிகள், இவர்களின் தொடக்கம், இருப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் மதவரலாற்று ரீதியான தகவல்களை நான் ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் ஒன்று "இலுமினாட்டிகள்" என்ற எனது முதல் புத்தகத்தில் பதிவு செய்திருந்தேன்..
அதில் நான் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் மேலோட்டமாக இருப்பதாக சிலர் என்னிடம் கூறினார்.
உண்மை தான், சில முக்கியமான விஷயங்களை பற்றி அதில் விரிவாக கூற தவறிவிட்டேன்., அதற்காகத்தான் இந்த பதிவு., நான் அதில் குறிப்பிட்டிருக்கும் சில முக்கியமான தகவல்களுக்கான மத ரீதியான ஆதாரங்கள் மற்றும் சாத்திய கூறுகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.,
தொடக்கம்:
இலுமினாட்டிகள் என்ற இரகசிய குழு கி.பி. 1776 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் தொடங்கப்பட்டதாக பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன., இந்த குறிப்புகள் முழுவதும் உண்மை என்று நம்பும் சிலர் இலுமினாட்டிகள் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் தான் தோன்றினார்கள் என்றும் அதற்கு முன்பு வரை அவர்கள் இல்லை என்றும் தீர்க்கமாக நம்புகின்றனர்.
உண்மையில் இலுமினாட்டி குழுமம் அதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டு விட்டது., ஆனால் இந்த பெயர் இல்லை., சூழலுக்கு ஏற்றாற்போல் இவர்கள் தங்களது வெளிப்படுத்தும் பெயர்கள் மற்றும் அடையாளங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
இந்தவகையில் தற்போது அவர்கள் வெளிப்படுத்தி நாம் அவர்களை அழைத்துக் கொண்டிருக்கும் பெயர் தான் "இலுமினாட்டி". இந்த பெயரும் மாற்றப்படும்., கூடிய விரைவில் இவர்கள் தங்களை வேறு பெயரிலும் வெளிப்படுத்தலாம்.
காபாலா, ஃப்ரீ-மேசன்ஸ், சியோனிஸ்ட், இன்னும் இதுபோன்ற பல பெயர்கள் இவர்களுக்கு உண்டு.,
தங்களது நிகழ்கால தேவைகளை நிறைவேற்றுவதற்காக இது போன்ற பெயர்களில் தங்களை வெளிப்படுத்தி இந்த குழுக்களை திரைக்கு பின்னால் இருந்து இயக்குவதும், தேவை நிறைவேறிய உடன் இந்த குழுக்களை தடை செய்வதும் கலைப்பதும் இவர்கள் தான்.,
இவர்களின் நிலையான இருப்பை நாம் உணர்ந்து கொள்ளாமல் இருப்பதற்கு இவர்கள் கையாளும் யுக்திகளில் இதுவும் ஒன்று.,
ஆனால் இந்த வேறுவேறான குழுக்களின் செயல்பாடுகள், நோக்கம் மற்றும் இறுதி இலக்கு இவற்றை ஒத்து நோக்கும் போது இவற்றை இயக்கும் ஒரு பொதுவான கூட்டம் இருக்கிறது என்ற இவர்களின்(இலுமினாட்டிகளின்) இருப்பு உறுதி செய்யப்படுகிறது.
1776க்கு முன்பிருந்தே இவர்கள் இருக்கிறார்கள்:
1. யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை (The protocols of the elders of Zion) இலுமினாட்டிகளை பற்றி தேடும் அனைவரும் இந்த புத்தகத்தை படித்திருப்போம்., இந்த புத்தகம் சுமார் 120 வருடங்களுக்கு முன் பேசப்பட்ட சில திட்டங்களை பற்றி எடுத்துரைக்கிறது., இந்த திட்டங்கள் இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்ட சியோனிஸ்ட்டுகளுக்கு இலுமினாட்டிகளால் இடப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு., 1897ல் விவாதிக்கப்பட்ட அந்த திட்டங்களை சற்று உன்னிப்பாக கவனிக்கும் பொது, அந்த திட்டங்கள் விவாதிக்கப்பட்ட விதம், அவற்றின் நுணுக்கம், அடுத்தடுத்து அவைகள் செயல்படுத்தபட்ட விதம் இவை அனைத்து இவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன் அதாவது 1776ல் தான் உருவானார்கள் என்ற கருத்தியலை உடைத்தெறிகிறது.,
2. திருகுர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 90 முதல் 102 வரையிலான வசனங்கள் ஒரு யூத குழு பேரரசர் முஹம்மது(pbuh) அவர்களை சந்தித்து பேசிய சில விஷயங்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே இறக்கப்பட்டதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்., அந்த குழுவின் பெயர் எந்த விரிவுரையிலும்(தப்ஸீர்) குறிப்பிடப்படவில்லை., ஆனால் அந்த குழு முன் வைத்த வாதத்தை ஆராயும் போது அந்த குழு காபாலா என்று சொல்லப்படக் கூடிய ஃபிரீமேசன் குழு என்பது உறுதியாகிறது., ஃபிரீமேசன் என்பது 33° (33 படிநிலைகள்) கொண்ட ஒரு (இரகசிய) குழு., இவர்களை இலுமினாட்டிகளின் முதல் கட்ட அடிமைகள் என்று சொன்னால் அது மிகையாகாது., இந்த குழுவின் உச்ச அதிகாரத்தில் இருப்பவர்களைத் தான் நாம் இலுமினாட்டிகள் என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம்., இந்த உச்ச அதிகாரத்தில் இருக்கும் இலுமினாட்டிகள் தங்களது திட்டங்களை நிறைவேற்ற காபாலா என்ற சூனிய மந்திரம் பயன்படும் என்று நம்புகின்றனர், அதை பயன்படுத்தவும் செய்கின்றனர்., எனவே தான் இவர்களுக்கு காபாலாஸ் என்ற பெயரும் உண்டு.,
பேரரசர் முஹம்மதிடம்(pbuh) இவர்கள் விவாதித்த விஷயங்கள்:
(பல விஷயங்கள் உண்டு தலைப்பிற்கு தேவையானதை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்)
i) நாங்கள் எங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுகிறோம் என்பதால் எங்களை எங்கள் வழியில் விட்டுவிடுங்கள்.,(இங்கு எங்களுக்கு அருளப்பட்டதை என்று இவர்கள் குறிப்பிடுவது தவ்ராத்தையோ, சபூரையோ, இஞ்சீலையோ அல்ல, ஆதாரம் 2:91).
ii) பேரரசர் சாலமன் (pbuh) அவரே எங்கள் தலைவர், அவரே எங்களில் தலைசிறந்த சூனியக்காரர் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். (2:102வது வசனம் இவர்களின் இந்த கூற்றை அடியோடு மாறுகிறது, அதேவேளை இலுமினாட்டிகளின் தொடக்கத்தை பற்றியும் தெளிவாக பேசுகிறது.,).
iii) ஜிப்ரீல் எங்களுக்கு எதிரி, அவர் தான் உங்களுக்கு செய்தியை கொண்டு வருகிறார் என்றால் நாங்கள் உங்களை ஏற்கமாட்டோம்., (சிலர் இதை ஒட்டு மொத்த யூதர்களின் கருத்தாக பார்க்கின்றனர், ஆனால் அவர் ஒட்டுமொத்த யூதர்களுக்கும் எதிரியல்ல., பேரரசர் சாலமனின் (pbuh) ஆட்சி அதிகாரத்தை பார்த்து பொறாமை பட்டவர்களுக்கும், இயேசுவை (pbuh) கொல்ல முயற்சித்தவர்களுக்குமே இவரை எதிரியாக பார்த்தனர்.,)
இன்னும் சில.,
விவாதிக்கப்பட்ட இந்த விஷயங்கள் ஃபிரீமேசன்ஸ் 1400 வருடங்களுக்கு முன்பே இருந்தார்கள் என்பதை உறுதி செய்கிறது., இன்று நாம் யாரை இலுமினாட்டிகள் என்று அழைக்கிறோமோ அவர்களின் ஆரம்பகால பெயர் தான் இந்த காபாலா, ஃபிரீமேசன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.,
3. இயேசுவின் (pbuh) மீதான கொலை முயற்சி மற்றும் கிறிஸ்துவத்தின் உருவாக்கம், இது 2000 வருடங்களுக்கு முன்பிருந்தே இவர்கள் ஒரே நோக்கம் மற்றும் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு மற்றோரு ஆதாரம்., இது பற்றி மிகத்தெளிவாக ஆழத்துடிக்கும் அடிமைகள் பாகம் இரண்டு "நிழலின் நிஜங்கள்" என்ற எனது இரண்டாவது புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.,
4. ஃபிரீமேசன் என்பது பேரரசர் சாலமானால் (pbuh) யூதர்களுக்கான முதல் ஆலயத்தை அதாவது பைத்துல் அல்அக்ஸாவை கட்டுவதற்காக இழுத்துவரப்பட்டவர்களால் உருவாக்கப்பட்டது., சிலர் இந்த குழு 1717ல் தான் உருவாக்கப்பட்டது என்று சொல்கின்றனர்., ஆனால் திருகுர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 102 இவர்கள் பேரரசர் சாலமன் (pbuh) காலத்திலேயே உருவானவர்கள் தான் என்பதை உறுதி செய்கிறது., இலுமினாட்டிகளுக்கு காபாலாவின் சூனிய மந்திரங்கள் எப்படி கிடைத்தது என்பதையும், பேரரசர் சாலமனை (pbuh) சூனியக்காரர் என்றும் தங்களின் தலைவர் என்றும் சொல்லிக்கொண்டிருந்த ஒரு கூட்டம் பேரரசர் சாலமனின்(pbuh) காலத்திலேயே உருவாக்கி விட்டது என்பதை விரிவுரையாளர்களின் குறிப்புகள் உறுதி செய்கின்றன.,
இதுவே இலுமினாட்டிகள் 1776ல் உருவானவர்கள் அல்ல என்பதற்கும் அவர்கள் பேரரசர் சாலமனின்(pbuh) ஆட்சி காலத்தில் உருவானார்கள் என்பதற்கும் நான் தரும் ஆதாரம்.,
தஜ்ஜாலின் பிறப்பு:
தஜ்ஜால் எந்த வருடம், எங்கு பிறந்தான் என்பதற்காகன நேரடியான எந்த ஒரு தெளிவான ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை., ஆனாலும் கிடைத்திருக்கும் குறிப்புகளை வைத்து இவன் எங்கு எப்போது பிறந்திருப்பான் என்பதற்கான சாத்தியக்கூறுகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.,
1. இலுமினாட்டிகள் தங்களது அரசனை பற்றி வெளிப்படுத்தும் அநேக இடங்களில் அவன் அரசர் தாவூத்தின் (pbuh) வம்சத்தை சேர்ந்தவன் என்றே குறிப்பிடுகின்றனர்., யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கையில் கூட இந்த வாசகம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.,
2. பேரரசர் சாலமனுக்கு (pbuh) வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தின் மீது பொறாமை கொண்டிருந்த யூதர்களில் ஒரு சாரார், அவர்கள் பாபிலோனில் தான் வசித்து வந்தனர்., பேரரசர் சாலமன் (pbuh) உயிரோடிருந்த காலத்தில் அவரால் சிறைபிடிக்கப்பட்டு அவரின் மரணத்திற்கு பின் விடுதலை பெற்ற ஜின் ஒன்று அவரது ஆட்சி குறிப்புகளை திருடி அந்த பாபிலோன் வாசிகளிடம் தான் கொடுத்தான்.,
3. காபாலாஸ், ஃபிரீமேசன் இந்த குழுவின் அடித்தளம் பாபிலோனில் வைத்தே இடப்பட்டது.,
4. சராசரிக்கு அதிகமாக மனித ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவனை சிறை பிடிக்க வேண்டும் என்றால், அது முழு மனித ஆற்றலை வெளிப்படுத்த கூடிய ஒருவரால் தான் முடியும்., அந்த வகையில் பார்த்தால் இது வரை வரலாற்றில் பேரரசர் சாலமன் (pbuh) வெளிப்படுத்திய அளவிற்கு மனித ஆற்றலை யாரும் வெளிப்படுத்தியதில்லை.,
5. தஜ்ஜால் தனது ஆற்றலை வெளிப்படுத்த தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே சிறைபிடிக்கப் பட்டுவிட்டான்., எனவே தான் அவனை பற்றிய எந்த குறிப்பும் (மதங்களுக்கு வெளியே உள்ள) வரலாற்றில் இல்லை.,
6. அரசர் தாவூதுக்கு (pbuh) வழங்கப்பட்டதை விட மிக உயர்ந்த மற்றும் பலம் பொருந்திய அதிகாரம் மற்றும் ஆட்சி பேரரசர் சாலமனுக்கு (pbuh) வழங்கப்பட்டிருந்தது., இருந்தும் இவர்கள் அரசர் தாவூதுக்கு (pbuh) கொடுக்கும் முக்கியத்துவத்தை பேரரசர் சாலமனுக்கு கொடுப்பதில்லை., அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் மீது கொண்ட பொறாமை, லூசிஃபரை சிறைவைத்ததினால் ஏற்பட்ட வன்மம், தஜ்ஜாலை சிறைவைத்ததினால் ஏற்பட்ட கோபம் இவைகளே இவர்கள் பேரரசர் சாலமனை (pbuh) புறக்கணிப்பதற்கும், அவரை சூனியக்காரர் என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வதற்கும் காரணம்.,
இவையெல்லாம் தஜ்ஜாலின் பிறப்பு பேரரசர் சாலமனின்(pbuh) காலத்தில் பாபிலோனில் வைத்து நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கு நான் முன் வைக்கும் சாத்தியக்கூறுகள்.,
தொடரும்.,
இலுமினாட்டிகளின் இருப்பு மற்றும் நோக்கத்தை உறுதி செய்யும் மதரீதியான ஆதாரங்கள் அடுத்த பதிவில்., இறைவன் நாடினால்.,
தகவல் - musthafays..