02/01/2018

தமிழர்களின் கருப்பு வழிப்பாட்டை மீட்டெடுப்போம்...


இறப்பைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி...


மூப்புளகா யந்தணிந்து
மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு
வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை
கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

- சித்தர் தேரையர்

முதியவர்கள் இளமை நிறைந்தவர்கள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.

நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல் அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும்.

இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து வைத்துக் கொள்ளவும்.

இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) காலை- இரவு இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்படும்.

சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது.

சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும்.

மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.

நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்...

மராட்டிய கன்னட ரஜினி கலாட்டா...


​​கந்து வட்டியால் மனமுடைந்து விவசாயி தற்கொலை​...



அரியலூரில் கந்துவட்டி கொடுமையால் நிலத்தை விற்று மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள பெரியமறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம். அதே கிராமத்தில் உள்ள அவரது நிலத்தின் பேரில் ஏலாகக்குறிச்சியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரிடம் 2005ஆம் ஆண்டில் ரூ.1.75 லட்சம் கடன் பெற்றதாகத் தெரிகிறது. 2012ஆம் ஆண்டில் கடனை அடைக்கச் சென்று எவ்வளவு கட்ட வேண்டும் என்று மாணிக்கம் கேட்டபோது, 10 லட்ச ரூபாயை நாச்சிமுத்து கேட்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த மாணிக்கம், ரூ.1.75 லட்சத்திற்கு மாதம் 2 ரூபாய் வட்டி கணக்கிட்டாலும் 4 லட்ச ரூபாய் வரைதானே செலுத்த நேரிடும் என்று கேட்டுள்ளார்.

பின்னர் தன்னிடம் இருந்த ரூ.1.75 லட்சத்தை நாச்சிமுத்துவிடம் அளித்ததாகவும் தெரிகிறது. ஆனால், கடனுக்கு ஈடாக மாணிக்கத்தின் நிலத்தை வேறு ஒருவருக்கு 10 லட்ச ரூபாய்க்கு நாச்சிமுத்து விற்றதாகத் தெரிந்ததும், மாணிக்கம் மற்றும் அவரது மகன் ஜெகந்நாதன் இருவரும் கந்து வட்டி கொடுமை குறித்து திருமானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனமுடைந்த மாணிக்கம், தனது வயலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தத் துயர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

தமிழர்களை மூட்டாளாக்க இலுமினாட்டிகளின் அடுத்த தயாரிப்பு தான் மராட்டிய கன்னட ரஜினி...


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி...


2017ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை 9% குறைவாக பெய்துள்ளது..

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை அளவு குறைந்துள்ளது..

சென்னையில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 19% அதிகம்...

குண்டலினி சக்தியின் அதீத ஆற்றல் .....


குண்டலினி யோகம் என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தைச் சீர்படுத்துவதற்காகச் செய்யும் பயிற்சியாகும்.

குண்டலினி =குண்டம்(நெருப்பு) + அலி(பாலின வேறுபாடுக்கு உட்படாத) + னி(உயிர்).

இவ்வண்டம் எவ்வாறு ஐமூல சக்திகளால் (பஞ்சபூதங்கள்) ஆனதோ அதைப் போலவே மனித உடம்பும் ஐமூல சக்திகளால் ஆனது.

ஐந்து முறைகளைக் கொண்டு இயங்குகிறது என்பது யோகக் கலையின் அடிப்படை.

அதில் ஆகாய சக்திக்கு உரிய யோகாவே குண்டலினி.

குண்டலினி என்பது சரீரம் சார்ந்த சக்தி. இது முதுகெலும்பின் அடியில் இருக்கும். இதை மூலாதாரத்தில் இருந்து ஆக்கினைக்கு ஏற்றும் போது ஒரு குட்டிப் பாம்பு ஊறுவது போல் மேலே ஏறும்...

குண்டலினி சக்தியின் அதீத ஆற்றல் .....

நமது எல்லா சக்திகளுக்கும், ஆற்றல்களுக்கும் குண்டலினியே திறவுகோள்.

அதைக் கிளப்புவதற்கு மனம் தான் கருவியாக இருக்கிறது.

மன ஒருமைப்பாடும், தாரணை, தியானப் பயிற்சிகளால் அதைக் கிளப்ப முடியும்.

பார்வையாலும், கையாலும், நாக்காலும் கூட கிளப்பிவிடும் ஞானியர்கள் உண்டு.

இப்பொழுதெல்லாம் கட்டணம் வசூலித்து குண்டலனியை கிளப்பி விடும் குருமார்கள் அதிகரித்து விட்டார்கள்.

குண்டலினி கிளம்பும் போது அடிமுதுகில் பட், பட் என்ற சத்தமெழும்பும்.. குறுகுறுப்பு காணப்படும்.

பாம்பு ஊர்ந்து செல்வது போல, பறவை பறப்பது போல, தவளை போல தத்தி, குரங்கு போல தாவி, மீன் போல நீந்தி.. என ஐந்து விதங்களில் குண்டலினியானது மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கி சகஸ்ராரத்திற்கு போகும் என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.

குண்டலினி கிளம்பியவர்களுக்கு நரம்புகள் ஊக்கம் பெறும்.

தேகம் ஆரோக்யமாக விளங்கும்.

பசியைத் தூண்டும்.

புலன்கள் விழிப்பு நிலையில் செயல்படும்.

பாலுணர்ச்சி சக்தி அதிகமாக ஊறும்.

அதை விரயம் செய்யாமல் ஓஜஸாக மாற்றிக் கொண்டால் ஆற்றல் அதிகமாகும்.

ஒழுக்கமில்லாதவர்களுக்கு இதனால் வக்கிரமான எண்ணங்கள் தூண்டப்பட்டு, காமவெறி பிடித்தவர்களாக மாறி விடுவார்கள்.

தீயவர்களுக்கு இதை கிளப்பி விட்டால்.. அகங்காரம், கோபம் அதிகமாகி பேராசைக்காரனாக, திருடனாக, ஏன் கொலைகாரனாக கூட மாறிவிட வாய்ப்புகள் உண்டு.

கடவுளுக்கே சவால் விடுவார்கள்..

இதை நாம் புராண காலம் தொட்டு இன்றளவும் நடைமுறையில் பார்க்கிறோம்.

ஆகவே குண்டலினியை கிளப்ப வேண்டுமெனில், முதலில் நல்லொழுக்கங்களை கடை பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

யோகத்தின் நோக்கமே மனிதனை ஒழுக்கம் உள்ளவனாக வாழ வைப்பது தான்.

தீய பழக்கவழக்கங்கள் உள்ள பலகீனமானவர்களுக்கு அதன் சக்தியை தாங்க முடியாமல் போகும்.

மனதிடம் இல்லாதவர்களுக்கு பைத்தியம் பிடிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

நல்ல குருமார்கள் சீடர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக மாறும் வரை அவர்களை பக்குவப்படுத்தி போதனைகள் செய்து அவர்கள் ஒழுக்கமுள்ளவர்கள் என்று உறுதி செய்து கொண்டு அதற்குப் பிறகே குண்டலினியைத் திருப்பி விடுவார்கள்.

அதன் சக்தியைத் தாங்க போதிய பலம் தேவை என்பதினால் ஆசனங்கள், பந்தங்கள், உடல் பயிற்சிகள் யாவும் கற்றுக் கொடுப்பார்கள்.

அதோடு ப்ராணாயாமப் பயிற்சியும் தேவை.

சுவாசம் வசப்பட்டால் மனம் அடங்கும்.

எனவே தான் நாடி சுத்தி அதைத் தொடர்ந்து ப்ராணாயாமம்..

நல்ல குருமுகமாக பயிற்சி மேற் கொண்டால், முதலில் குண்டலினியைக் கிளப்பி, பிறகு ஒவ்வொரு சக்கரமாக இதழ்களை விரித்து அதனுள் அதை ஏற்றி, மீண்டும் கீழிறங்கி விடாமல்..

ஒவ்வொரு இதழ்களையும் மூடி, முடிவில் சகஸ்ராரத்துக்கு ஏற்றி ஆயிரம் இதழ்களிலும் நிரப்பி, ஆனந்தந்தைப் பெற வழிவகை செய்வார்கள்..

ஒவ்வொரு சக்கரங்களும் இயங்க மாதக்கணக்கில் பயிற்சி தேவைப்படும்..

பயிற்சியின் முடிவில் அதிகப் புலனாற்றலும், அஷ்டமா சித்திகளும் கைகூடும். பிரகாசம் உள்ளவர்களாக மாறி விடுவார்கள்...

அமெரிக்காவுக்கு புத்தாண்டு வாழ்த்து செய்தி அனுப்பினார் வட கொரிய அதிபர் - கிம் ஜாங்...


இசைக் கருவி கடம்...


கடம் கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும்.

இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி. இது ஒரு பெரிய மண் பானையாகும்.

கட இசைக்கலைஞர் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார்.

கர்நாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, மிருதங்கத்தைப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது.

வாய்ப்பாட்டுக் கச்சேரிகளுக்கு இடையிலும், தனி நிகழ்ச்சிகளாகவும், நடைபெறும், மிருதங்கம், கடம், கஞ்சிரா, தவில் போன்ற கருவிகள் சேர்ந்து தாளவாத்தியக் கச்சேரிகளில், கடத்தின் பங்கு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுவதாகும்...

என் னாழ்நாளில் பாஜக வுடன் கூட்டணி வைக்க மாட்டேன் - டிடிவி. தினகரன்...


வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள்...


வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம் தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள். முள்ளை எடுக்க வேண்டுமா? எளிய வழி: முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பதில்லை.

வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே.. கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம் இனி வேண்டாம்.

வாழைப் பழம் கைவசம் இருந்தால் போதுமானது. முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்ல தடவுங்கள். பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.ட்ரை பண்ணிவிட்டு சொல்லுங்க மக்களே.

சோரியாஸிஸ் பிரச்சனையா?

சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.

மருக்கள் காணாமல் போகச் செய்ய...

மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். இதனைப் போக்க மிக எளிய வழி இதுதான். வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.

சரும அலர்ஜியா?

ஏதாவது சிறு பூச்சி கடித்தால், அல்லது வேறு பிரச்சனைகளால், சருமம் தடித்து, அரிப்பு ஏற்படும். எரிச்சலும் ஆகும். இதற்கு முதலுதவியாய் வாழைப்பழத் தோலினை ட்ரை பண்ணுங்க. வாழைப்பழத் தோலை ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவுங்க. விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

முகப்பருவை எதிர்க்கிறது...

முகப்பருவை எளிதில் போக்க இன்ஸ்டென்டாய் வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப் பழத் தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.

வெண்மையான பற்கள் பெற...

மஞ்சள் கறை இல்லாமல் வெண்மையான பற்கள் பெற எல்லாருக்கும் ஆசை. இதற்காக, பற்களை ப்ளீச் செய்யும் பேஸ்ட், ஜெல் என வாங்கி பல் கூச்சத்தையா பெற வேண்டும். இயற்கையான ப்ளீச்சான நம்ம வாழைப்பழத் தோல் இருக்கு பாஸ். அதை எடுங்க. தினமும் பல் விளக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப் பழத் தோலினைக் கொண்டு உங்கள் பற்களை தேயுங்கள். அப்புறம் பாருங்க. பற்கள் மின்னும்.

காயங்கள் ஏற்பட்டுள்ளதா?

பட்ட காலிலேயே படும் என்று சும்மாவா சொன்னாங்க. காயம் வந்த அது ஆறதுக்குள்ள அங்கேயே திரும்ப அடிபடும். இதை நிறைய பேர் அனுபவப்பட்டிருப்பார்கள். வாழைப்பழத் தோலிலுள்ள சில காரணிகள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. இதுக்கு சிம்பிள் வழி தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க. அதன் தோலை காயத்துக்கு பூசுங்க. உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. காயமும் விரைவில் ஆறிடும்.

வீணாய் வீசி எறியும் வாழைபழத் தோலில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என ஆச்சரியப்படுகிறீர்கள் தானே. சிறு ஆணியும் பல் குத்த உதவும் என்பதை மறக்காதீர்கள்.

வாழைப்பழத் தோலினை வீசி எறியும் முன் மேலே சொன்ன எதற்காவது உபயோகப்படுமா என யோசித்துவிட்டுப் பின் எறியுங்கள்...

மதுரையில் திருமணம் முடித்துக கொண்ட ஜப்பான் தம்பதிகள்...


இருவரும் ஜப்பானை சேர்ந்தவர்கள். மணமகள் கூடுதல் மொழியாக தமிழை ஜப்பானில் பயின்றுள்ளார்.

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த வினோதினி இவருக்கு தமிழ் மொழியை ஜப்பானில் கற்றுக் கொடுத்துள்ளார்...

ரஜினி எந்த தொகுதியில் நின்றாலும் அவருக்கு எதிராக போட்டியிட்டு படுதோல்வி அடையச் செய்வேன் - இயக்குநர் கவுதமன் சவால்...


தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து நாளை தனியார் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்...


லட்சக்கணக்கான தனியார் மருத்துவர்கள் பங்கேற்பு...

ஆயுர்வேதா சித்தா ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவர்கள் 6 மாதம் பயிற்சி பெற்று ஒரு தேர்வு எழுதினால் அவர்களும் ஆங்கில மருத்துவம் பார்க்கலாம் என மசோதாவில் இடம் பெற்றுள்ளது இது மனிதர்களின் உயிரோடு விளையாடும் செயல் எனக்  கூறி தனியார் மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்...

இப்படியே எல்லா வேலைகளுமே நாமே செய்தால்... நாம் கட்டும் வரி எல்லாம் எங்கே போகிறது..?


இன்றைக்கு நியூஸ் 18 விவாதத்தில், ரஜினி பேசிய காட்சி முடிந்தவுடன், குணசேகரன் முதலில் என்னிடம் தான் கேட்டு விவாதத்தைத் தொடங்கினார்...


சங் பரிவார் என்கிற குடும்பத்தில் மற்றுமொரு அமைப்பாகவே அவரது அமைப்பு இருக்கும் என்று கூறினேன். இதுதான் என் முதல் கருத்து.

மாலனும் ஜி.சி.சேகரும் அடுத்தடுத்து அப்படி இல்லை என்று சொல்வதற்கான வேலையில் இறங்கினார்கள்.

ஐயோ பாவம், அவர்கள். தமிழிசையும் அர்ஜூன் சம்பத்தும் நாராயணனும் உடனடியாக என் உதவிக்கு வந்தார்கள். நான் சொன்னக் கருத்தை உறுதி செய்தார்கள். 

ஆர் கே நகர் தோல்விக்குப் பிறகு தங்களுக்கு பலம் தேவைப்படுகிறது, அந்த பலத்தை ரஜினி அளிப்பார் என தமிழிசை நம்புகிறார். இந்து மக்கள் கட்சியும் பாஜகவும் ரஜினி பின்னால் செல்லும் என்கிறார் சம்பத்.

ரைட்டு. இனிமேல் ரஜினியை பாஜகவின் மறைமுக ஆதரவைப் பெற்றவர். பாஜகவின் பினாமி என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக ரஜினியின் அமைப்பை இந்துத்துவ அமைப்பு என்று சொல்லி வேலையைச் செய்ய வேண்டியது தான்.

2018 இல் மேலும் ஒரு முனையில் யுத்தம் வெடிக்கிறது. தட்ஸ் ஆல். பாத்துக்கலாம்.

ஆனால் ரஜினியின் இந்த நகர்வு நமக்கெல்லாம் நிறைய வேலையைக் கொடுத்திருக்கிறது. அவருக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கிறதோ அந்த அளவுக்கு அது மக்களின் தோல்வியாக இருக்கும்.

தமிழ்நாட்டின் அத்தனை நியாயஸ்தர்களும் தமிழருவி மணியன்களும் இப்போது ரஜினி பக்கம் வருவார்கள்.

மாலன்களும் சேகர்களும்  என மிகப்பெரிய ரஜினி மீடியா படை இன்றே உருவாகிவிட்டது.

மீடியாவுக்கு 2018 முழுமைக்குமான பிரேக்கிங் நியூஸ் கிடைத்துவிட்டது.

மீம்ஸ் இன்டஸ்ட்ரியின் வளர்ச்சி பல மடங்காக இருக்கும்.

நமக்குத்தான் வேலை அதிகம். மீம்ஸோடு முடங்கிவிடக்கூடாது, விவாதமேடைகளோடு நின்றுவிடக் கூடாது. செய்வோம்.  வச்சு செய்வோம். 

- தோழர் ஆழி செந்தில்...

தமிழ் இன மக்களே இன்னுமா புரியவில்லை... நம்மை யார் ஆட்சி செய்கிறார்கள் என்று...


ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள்...


தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை..

இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்...

மராட்டிய கன்னட ரஜினி கலாட்டா...


ரெண்டு நாளுக்கே இப்படியா.. பக்தாள் கனவுல மண்ண போட்டிங்களேடா...

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுபோதையில் அதிவேகமாக வாகனங்களை இயக்கியதால் ஒரேநாள் இரவில் 170 விபத்துகள் ஏற்பட்டுள்ளன...


விபத்தில் காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

களையிழந்த குமரி மாவட்டம்...


உலகமே புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், குமரி மாவட்டத்தின் கடற்கரையோர கிராமங்கள் சோகத்தால் நிறைந்துள்ளன.

ஒகி புயலில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு, புத்தாண்டு கொண்டாட்டங்களை மீனவ மக்கள் தவிர்த்தனர்...

முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்...


ஆழ்மனத்தின் அற்புத சத்திகள்...


உங்களுக்குள் ஒளிந்திருக்கும் புதையல்...

அளவற்ற செல்வங்கள் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளன.

அவற்றை அடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் மனக்கண்களைத் திறந்து உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மாபெரும் புதையள் களஞ்சியத்தை தரிசிப்பது தான்.

நீங்கள் புகழோடும், மகிழ்ச்சியோடும், அமோகமாகவும் வாழ்வதர்க்குத் தேவையான அனைத்தையும் உங்களுக்குள் இருக்கும் சேமிப்புக் கிடங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

எல்லையற்ற சக்தி நிறைந்த இப்புதயல் களஞ்சியமும், அளவில்லா அன்பும் தங்களுக்குள் இருப்பதை அறிந்து கொள்ளாத மக்கள் பலரும், தங்கள் முழு ஆற்றலை உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக இருந்து விடுகின்றனர். உங்களுக்கு வேண்டிய அனைத்தும் இதிலிருந்து பெற முடியும்.

காந்த விசையுட்டபட்ட ஓர் இரும்பு துண்டால், தன எடையை போல 12 மடங்கு எடையுள்ள பொருட்களை தூக்க முடியும். அதே இரும்பு துண்டிலிருந்து அக்காந்த விசை நீக்கபட்டால், ஒரு இறகைக்கூட அதனால் தூக்க முடியாது.

இது போன்று, மக்களிலும் இருவகையானோர் உள்ளனர்.

கவர்ந்திழுக்கும் ஈர்ப்பு சக்தி நிறைந்த மக்கள் துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் இருப்பார்கள். தாங்கள் வெற்றி நடை போட பிறந்தவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

அதே சமயம், வலுவிழந்தவர்கலாக ஏராளமான மக்கள் உள்ளனர். அவர்கள் மனம் முழுவதும் பயன்களும் சந்தேகங்களும் நிறைந்திருக்கும். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது ஒருவளை நான் தோற்றுவிட்டால் என்னவாகும்? நான் என் பணத்தை இழக்க நேரிடலாம். மக்கள் என்னை பார்த்து ஏளனமாக சிரிப்பார்கள்.. என்று கூறுவார்கள்...

இத்தைகைய மக்கள் வாழ்வில் வெகுதூரம் சென்றடைய போவதில்லை. முன்னேற விடாமல் தடுக்கும் அவர்களது பயம் அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களை முடக்கி போட்டு விடும்.

காலத்தால் அழியாத இந்த பரம ரகசியத்தை நீங்கள் கண்டறிந்து அதை நடைமுறைப்படுத்தினால், உங்களுக்கு வேண்டியதை ஈர்த்துக்கொள்வதக்கான காந்த சக்தியை நீங்கள் பெறலாம்...

தமிழர்கள் முட்டாள் ஆக்கப்படுவார்கள் என ஒவ்வொரு முறையும் அவர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.. நாமும் ஆம் என்று தலையாட்டி கொண்டு இருக்கிறோம்...


தமிழத்தை தமிழன் மட்டுமே ஆள வேண்டும் என்பது எனக்கு உடன்பாடில்லை - கன்னடன் பிரகாஷ்ராஜ்...


இப்போது தமிழக நடுநிலை என்ற பேரில் சுற்றிக் கொண்டிருக்கும் விபச்சார ஊடக கம்முனாட்டி ஊடகவியாளர்களும் யாரு கன்னடர்ன்னு கேக்கமாட்டாணுங்க...

ஏன்னா அந்த நாய்களும் தமிழன் இல்லை...

யோகா முத்திரைகள்...


முத்திரை யோகம் ஹதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.

ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த “பஞ்ச மஹாபூதங்கள்” ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி. ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது.

உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. வாயு உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து வாயு உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. அக்னி பித்தம். லகுவானது. வெளிச்சத்தை உண்டாக்கும்.

இந்த பஞ்சபூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.

நமது கைகளின் ஐந்து விரல்கள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன...

1. கட்டைவிரல் – அக்னி

2. ஆள்காட்டி விரல் – வாயு

3. நடுவிரல் – ஆகாயம்

4. மோதிரவிரல் – பூமி

5. சுண்டுவிரல் – நீர்.

இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

முத்திரைகளை பயிலும் முறை...

1. பத்மாசனம் போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.

2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.

3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.

4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.

5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.

6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில...

1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.

பயன்கள் – களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.

2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.

பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.

3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.

பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.

4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.

பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.

5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.

பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.

6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.

பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.

7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.

பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.

8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.

பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.

9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.

பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.

பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

எச்சரிக்கை...

1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.

11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.

பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.

12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.

பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.

நமது பழங்கால முனிவர்கள் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்...

கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் நேர்மையான இறை மறுப்பாளரா?


நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன்..

சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன் - ஈ.வே.ரா  (விடுதலை 1.1.1962 ).

ஆனால் ஈ.வே.ரா குடியரசு இதழைத் தொடங்கிய போது வயது 46.

அந்த முதல் இதழில்..

இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக. என்று எழுதியுள்ளார்.

குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கிவைத்து ஈ.வே.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும்.

இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும் படி சுவாமிகளை வேண்டுகிறேன்...

அதாவது 46 வயது வரை இறை நம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வே.ரா எழுதியுள்ளார்..

நன்றி - முதல் குடியரசு சில பிரச்சனைகள், விமர்சனங்கள்.
ஆசிரியர்: முருகு இராசாங்கம்...

சூரியனை சாப்பிடலாமா.?


வெற்றிடத்தில் குவான்டம் ஆற்றல் செயல்பட்டு மின்புலத்தை உருவாக்கியது.

மின்புலம் அசைந்து காந்த புலத்தை உருவாக்கியது.

இவை இரண்டும் சேர்ந்து மின்காந்த அலைகளை உருவாக்கியது.

இந்த அலைகள் மூன்றுவித துகள்களை உருவாக்கியது.

அவை புரோட்டான் நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்.

இவை இணைந்து அணுக்களானது.

அணுக்கள் பல்வேறு விதத்தில் பிணைந்து தனிமங்கள் ஆனது.

தனிமங்கள் மூலக்கூறுகள் ஆனது.

மூலகூறுகள் சேர்ந்து நாம் உண்ணும் உணவுகளை உருவாக்கியது.

இவை எல்லாம் உருவானது மின்காந்த சக்தியில் இருந்து தான் என்பது தெளிவாகிறது.

மின்காந்த அலைகள் தான் ஒளி.

எனவே சூரியனை நாம் உற்று நோக்கி அந்த சக்தியை கிரகிக்க முடியும்.

நமது ஆத்ம காரகனான சூரிய பகவானை தினமும் உதயத்தின் போதும் மறைவின் போதும் கண்சிமிட்டாமல் உற்று நோக்கி நமஸ்காரம் செய்து ( மந்திரம் உண்டு ) அவரின் சக்தியை நாம் கிரகிக்க முடியும்.

அவ்வாறு செய்வதால் நாம் உண்ணும் உணவின் மூலம் நமக்கு கிடைக்கும் தாதுப்பொருட்கள் அனைத்தையும் நேரடியாக கிரகிக்க முடியும்.

சூரிய நமஸ்காரம் என்பது இதுவே.

இதை தொடர்ந்து செய்யும் போது நாளாக நாளாக நாம் உணவை குறைத்து ஒருகட்டத்தில் உணவே இல்லாமல் நம்மால் உயிர் வாழக் கூடிய நிலையை அடைய முடியும்.

இதனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து சொன்ன நமது சித்தர்களின் வலிமை எப்பேர்பட்டது...

மீடியாக்களை இதை விட யாராலும் கிழிக்க முடியாது.. கவிஞர் மோகனசுந்தரம் தனக்கே உரிய ஸ்டைலில் அசத்தல் பேச்சு...


TRP மீடியாக்களை சும்மா வச்சி செஞ்சிடாரு...