23/05/2018

சித்து விளையாட்டுகள் இனி ஆரம்பம்...





சருமத்திற்கு வெண்ணெய் பழம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?


அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

அதிலும், வயதான தோற்றத்தை தடுக்க, வறட்சியான சருமத்தை நீக்க, சருமத்தை மென்மையாக்க பெரிதும் துணைப் புரிகிறது. நிறைய ஆய்வுகளில், பழங்களிலேயே சருமத்திற்கு சிறந்த பழம் என்றால் அது வெண்ணெய் பழம் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இந்த பழத்தில் சு(ஸ்)டெரோலின் என்னும் புரதம் அதிக அளவில் உள்ளது. இந்த சு(ஸ்)டெரோலின் அளவு சருமத்தில் குறைந்ததால் தான், முதுமை தோற்றம், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எனவே அழகான சருமத்தை பெறுவதற்கு வெண்ணெய் பழத்தில் அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தலாம்...

தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளியில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேருங்கள்...


சோதிடமும் வாழ்க்கையும்...


அந்தரத்தில் சுழன்றுக் கொண்டிருக்கும் பூமியில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

27 நட்சத்திர கூட்டங்களும் 9 கிரகங்களும் நம் பூமியின் மீது வலுவான தாக்கத்தை உண்டுபண்ணி கொண்டே இருக்கிறது.

குதிரை முக வடிவில் அமைந்திருக்கும் நட்சத்திர தொகுப்பிற்கு அஸ்வினி என பெயர் வைத்தான். அஸ்வினி என்றால் குதிரை.

இதுபோல் ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றோடு உருவகப்படுத்தி பெயர் வைத்தான்.

வாரத்தின் 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும்.

இராகு கேது மட்டும் 7 நாட்களும் தனது ஆதிகத்தை குறிப்பிட்ட நேரங்களில் செலுத்தும். அதுவே இராகு காலம் எமகண்டம் ஆகும்.

ஒவ்வொரு குழந்தை பிறக்கும் அந்த கனம் அந்த இடத்தின் சூழல் மற்றும் அதிர்வுகளுக்கு ஏற்ப அதன் உடலும் மனமும் உயிர்பிழைக்க டியூன் ஆகிவிடுகிறது.

அதுவரை அந்த குழந்தை அழும். சூழல் பழக்கப்பட்டவுடன் அதன் அழுகை நின்றுவிடுகிறது.

அந்த சூழல் அப்படியே மாறாமல் இருந்தால் அந்த குழந்தை மரணத்தை எப்பொழுதுமே தழுவாது. ஆனால் பிரபஞ்சத்தின் கோட்பாட்டில் அதற்கு இடமில்லை.

கிரகங்களின் சுழற்சியால் அந்த குழந்தையின் உடல் மற்றும் மனம் பல்வேறு அதிர்வுகளால் பாதிக்கப்படுகிறது.

அமாவாசையில் பிறக்கும் குழந்தை நிலவின் அதிர்வலைகளுக்கு பழகி இருக்காததால்  பௌர்ணமி அன்று ஏற்படும் அதீத அதிர்வுகள் அக்குழந்தையை பெரிதும் பாதிக்கின்றன.

இதுபோல் நீங்கள் பிறக்கும்போது எந்த கிரக கதிர்கள் உங்களுக்கு சரிவர கிடைக்காமல் நீசம் அடைந்துள்ளதோ அந்த கிரகங்களின் ஆதிக்க நாட்களில் உங்களுக்கு உச்சபட்ச பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த கிரக அதிர்வுகளால் உங்கள் உடலின் பஞ்சபூத தன்மையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை துல்லியமாக சுட்டிக் காட்டுவதே சோதிடம்.

பூமியின் அதிவேக சுழற்சியால் ஒவ்வொரு நொடியும் உங்கள் உடல் மையத்தை நோக்கி இழுக்கப்பட்டும் ஆன்மா மேல்நோக்கி தள்ளப்பட்டும் கொண்டே இருக்கிறது.

இந்த உயிரை தக்க வைக்க நம் மூச்சு 24/7 நேரமும் இயங்கி கொண்டே இருக்கிறது. இந்த உடல் மையத்தை அடைய விடாமல் சுவாசத்தை நன்றாக இழுத்து உள்நோக்கிய அழுத்தம் கொடுத்து கொண்டே இருந்தால் இந்த உடல் காயகல்ப உடலாக மாறும்.

அடுத்த பதிவுகளில் சில எளிமையான அறிவியல் பரிகாரங்களை வழங்கி உங்கள் ஜாதகத்தை மாற்றுவோம்...

ஒரு பழுத்த நடிகன் முதல் சீசனில் கூறியது.. I will be watching...


இரண்டாவது சீசனில் கூறுவது.. We will be watching...

புரியவில்லையா..?

இதுதான் பரிணாம வளர்ச்சி..

உங்களை படிப்படியாக அவர்களின் கட்டமைப்பிற்குள் சிறந்த அடிமைகளாக கொண்டு செல்கிறார்கள்..

செல்கிறீர்களா..? இல்லை

அந்த கட்டமைப்பை தகர்க்க வருகிறீர்களா..?

நச்சுப்புகையை கக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தூத்துக்குடி மக்கள் 100 நாட்களாக போராடி வருகிறார்கள்.


100-வது நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அமைதியான முறையில் ஊர்வலம் சென்று முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானித்தனர்.

100 நாட்களாக போராட்டம் நடத்தும் மக்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தவில்லை. முதல் மந்திரியும் மற்ற சம்மந்தப்பட்ட மந்திரிகளும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை.

இன்றைய ஊர்வலத்திற்கு அனுமதி தரவில்லை. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் ஊர்வலத்திற்கும் கூட்டம் கூடுவதற்கும், அரசு தடை விதித்தது. நள்ளிரவில் வீடு புகுந்து பல போராட்டக்காரர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்கள்.

இப்படியெல்லாம் போராட்டத்தை முடக்க அரசு நடவடிக்கை எடுத்ததால், போராட்டம் இன்று மேலும் தீவிரமடைந்தது. அதற்கு அரசே காரணம்.

அமைதியான முறையில் ஊர்வலத்தையும் முற்றுகை போராட்டத்தையும் நடத்த அரசு அனுமதித்து இருந்தால் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்காது.

ஊர்வலத்தை காவல் துறை தடுத்தது. லட்சக்கணக்கில் ஊர்வலம் சென்ற மக்கள் காவல் துறை தடுப்பதை மீறி ஊர்வலம் செல்ல முயன்றனர். ஊர்வலம் சென்ற மக்கள் வெள்ளத்தின் மேல் கண்ணீர் புகை குண்டை வீசியும், தடி அடி நடத்தியும் கூட்டத்தை கலைக்கப் பார்த்தது காவல் துறை. லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம். கண்ணீர் புகையும் தடி அடியும் கண்டு அஞ்சாமல் ஊர்வலம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேறியது. உடனே காவல் துறை அமைதியான மக்கள் கூட்டத்தின் மேல் துப்பாக்கி சூடு நடத்தியது. துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். பலர் படுகாயமுற்றனர். இறந்தோர் எண்ணிக்கை மிக கூடுதலாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்காக தமிழக அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும். 144 தடை போடாமல் ஊர்வலத்தையும் முற்றுகை போராட்டத்தையும் அரசு அனுமதித்து இருந்தால், மக்களின் உயிர் பறிக்கப் பட்டிருக்காது; பலர் படுகாயத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

தமிழக அரசு ஸ்டெர்லைட் கார்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு பல அப்பாவி மக்களின் உயிரை குடித்துவிட்டது; பலரை படுகாயப்படுத்திவிட்டது.

உடனே ஸ்டெர்லைட் ஆலையை மத்திய அரசும் மாநில அரசும் நிரந்தரமாக மூட வேண்டும்; ஆலையின் விரிவாக்க பணிகள் நிறுத்தப் படவேண்டும். உயிர் இழந்த மக்களுக்கு செய்யும் முதல் நீதி இது தான்.

அடுத்து, மக்களின் உயிரை பறித்ததற்கும், படுகாயப்படுத்தியதற்கும் இந்த அரசு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

துப்பாக்கி சூடு நடத்தி பலரை கொன்று, பலரை படுகாயப்படுத்திய காவல் துறையினரை உடனடியாக சஸ்பெண்டு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

- judge Hariparanthaman

உங்களுக்காக ஒருத்தனும் வர மாட்டார்கள்..


நீங்களா தான் உங்கள் சிந்தனைகளை பேசி ஒருமித்த கருத்துகளில் ஒன்றிணைய வேண்டும்..

உன்னை போல் ஒருவன்...

ஸ்டெர்லைட் கைகூலி பாஜக.. இந்திய துணை இராணுவத்தை அனுப்புகிறது...


ஆட்டுமந்தை கூட்டங்களில் அடிமையாய் வாழ்வதை விட மண்ணுக்காக உயிர்துறக்கலாம் என போய்விட்டீர்களா என் இரத்த சொந்தங்களே...?


ஒற்றுமையில்லாத நாய்களிடம் பேசுவதற்க்கு பதில் உயிர்விட துணிந்துவிட்டீரோ...?

இந்த மாக்கள் மக்களாய் ஒன்றுசேர்வது எப்போது...?

ஸ்டெர்லைட் கைகூலி.. தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷ்...


மிக்சர் தின்பவர் என்று கலாய்க்கப்பட்ட ஓ.பி.எஸ் தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் மாணவர்கள் மீதும் உதவிய மீனவர்கள் மீதும் கட்டற்ற வன்முறையை அவிழ்த்து விட்டார்...


சாமி, கடவுள் என்று கலாய்க்கப்பட்ட இ.பி.எஸ் தான் தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது இன்று துப்பாக்கிச் சூடு நிகழ்த்தி சொந்த மக்களை கொன்று குவித்துள்ளார்.

அதுவும் குறிவைத்து போராட்டக்காரர்களை சுடும் ஸ்னைப்பர்கள் வீடியோவை பார்த்த பிறகு பதறுகிறது. அரசு நினைத்தால் யாரை வேண்டுமானாலும் பட்டப்பகலில் நடுரோட்டில் சுட்டுக் கொல்ல முடியும். கொல்கிறது.

இவர்கள் ஜோக்கர்கள் அல்ல. அப்படி அழைக்கப்படுவதில் எந்த பிரச்சினையும் அவர்களுக்கு இல்லை. Infact they use that well. இவர்கள் எவ்வித அரசியல் அறமும் அடிப்படை மனிதாபமும் இல்லாத அதிகாரப் பசிக்கு எவரையும் பலியிடத் துணியும் கொலைகாரர்கள். Paid Killers. ஜோக்கர்கள் நாம் தான்...

செருப்பை தயார் செய்யவும்...


இது ஒரு முன்னோட்டம் தான்....


ஹைட்ரொகார்பன், சேலம் ஆறு வழி சாலை போராட்டம், நியூட்ரினோ திட்டங்களின் போராட்டத்திற்கு எதிராக கார்பொரேட் கைக்கூலி மோடியின் அரசும்-எச்சைப்பய இடப்படியின் அரசும் சேர்ந்து நடத்த போற இனப்படுகொலையின் முன்னோட்டம் தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு...

விழித்துக்கொள் தமிழினமே...


பாஜக பினாமி அதிமுக வின் கேடுகெட்ட செயலை பாருங்கள்...


தன் மக்களின் உயிரை பொருட்படுத்தாமல்.. கர்பொரேட்டின் மகுடி இசைக்கு ஏற்ப ஆடும் பாஜக - அதிமுக அரசே....


சிறிது சிறிதாக வேதனை பட்டு சாகவேண்டாம் என எண்ணி       
உடனடியாக  சாக ஆணையிட்டாயோ....

உன்னில் இருந்து எய்ய்யப்படும் ஒவ்வொரு அம்பிற்கும்... நீ பதில் கூறியே ஆக வேண்டும்... அதற்க்கான காலம் வந்துவிடத்தது....

விழித்துக்கொள் தமிழினமே...


ஸ்டெர்லைட் கற்றுத்தரும் பாடம்...


காஷ்மீரிகளின் கைகளில் கற்கள் எவ்வாறு ஏறியமர்ந்தது!?

என்ற கேள்விக்கான விடையை தமிழகர்கள் இரத்தத்தைக் கொடுத்து உணரும் தருணம்...

சிரியா ஈரானுக்கு அடுத்து தமிழகம்...


பாஜக குருமூர்த்தியின் பேச்சைக்கேட்டு தான் இங்கு அனைத்தும் நடக்கிறது...


இன்றும் அப்படியே நடந்தது..

இனிமேலும் அது தொடரும்..

யார்..? இந்த குருமூர்த்தி..?

உலக வல்லாதிக்கத்தின் தமிழக தரகர் (மாமா)..

தமிழ்நாட்டில் என்ன நடக்க வேண்டுமென்று முடிவு செய்பவன் இவனே..

கட்சிகளை நீங்கள் வசைபாடும் நேரத்தில், இவன் நம் வாழ்வாதாரத்தை அழிக்கின்றான்...

அரசாங்கம் என்றால் என்ன.. என்று புரிந்ததா..?


கார்பரேட் ஸ்ர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்று பாஜக-அதிமுக இனைந்து திட்டமிட்டு நடத்திய தமிழின படுகொலை...


Planned Massacare - வானத்தை நோக்கி ஒரு முறை கூட சுடவில்லை. ஸ்னைப்பர் வீரர்கள் மப்டி உடையில் இருந்து உள்ளனர்.

போராட்ட களத்திற்கு வெகு தூரத்தில் இருந்து துப்பாக்கி சூடு தொடங்கி உள்ளனர்...

இது ஒரு திட்டமிட்ட இனபடுகொலை.

இலக்கு தவறகூடாது என்பதற்க்காகவே ஸ்னைப்பர் வீரர்கள் பயன்பட்டுள்ளது.

ஸ்னைப்பர் வீரர் 7.2 mm துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளர்.

3800 மீட்டர்  இலக்கை தாக்கி கொல்லும்.

ஆப்டிகல் சைட் 1300 மீட்டர்.

ஒப்பன் சைட் 1200 மீட்டர்.

1300 மீட்டரில்( 1.3 கிலோ மீட்டர் ).
ஒரு முடி அளவு குறி தவறாமல் சுடலாம்.

கலவரத்தை கலைக்க எதற்க்காக ஸனைப்பர் பயன்படுத்தப்பட வேண்டும் ?

இலக்கு தவறாமல் மிகச்சரியாக சுட கூடிய துப்பாக்கியை வைத்து கால்களில் சுடமால் மார்பில் வாயில் சுட்டதான் நோக்கம் என்ன...?

துப்பாக்கி சூடு நடத்த அனுமதி அளித்த அதிகாரி யார்.

இவ்வளவு பெரிய போராட்டம் நடக்கும் என தெரிந்தும். முன் தினமே போராட ஒருங்கிணைப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யாதது ஏன்...

முதல் துப்பாக்கி சூடு நடந்த பொழுது மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு ஓடி விட்டனர்.
அதற்கு பின்னர் அங்க இருந்த போலீஸ் வாகனங்களுக்கு தீ வெச்சது யார்....?

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட ஸ்னைப்பர் வீரர்கள் எந்த அணியை சேர்ந்தவர்கள்.
தமிழக படை பிரிவா.
துணை ராணுவா படை பிரிவா
தொழில் பாதுகாப்பு படைபிரிவா
இந்திய ராணுவா படை பிரிவா

இதற்கு முன் இந்திய ஒன்றியத்தில் இது போன்ற கலவரத்தில் ஸ்னைப்பர் வீரர்கள் கொண்டு துப்பாக்கி சூடு நடந்து உள்ளதா...

All are Commandos in plain uniform -  Cowardice act of police...

கார்பரேட் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்று.. பாஜக - அதிமுக இனைந்து செய்த கொலைகள் தான் இது...


அவ்வளவு பெரிய தீவிரவாதிகளாடா நாங்க...


இவை அனைத்தும் நாம் சாகர்மாலா திட்டத்தை எதிர்த்து போராடக் கூடாது என்பதற்காக உளவியல் ரீதியாக அச்சுறுதல் ஏற்படுத்தவே...

நாளைக்கு இவர்களிடம் தானே வாக்கு கேட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட குறைந்த பட்சம் இல்லையே, ஏன்..?


ஏன்னா, நாளைக்கு உங்க சாதிக்காரனை நிறுத்தினால் அவரை தாண்டி வேறு யாருக்கும் ஓட்டு போட கைவராது உங்களுக்கு என்ற நம்பிக்கையினால், கை நீட்டி காசு வாங்கிட்டா, சத்தியம் பண்ணிட்டா மாற மாட்டோம் என்ற நம்பிக்கினால், இதயெல்லாம் மறந்துவிடுவோம் தேர்தல் வரும் பொழுது என்ற நம்பிக்கையினால்..

இதுவரை இப்படித்தான் இருந்தோம்.. இனிமேயும் இப்படித்தான் இருக்க போகிறோமா இல்லை ஒவ்வொரு நிகழ்வையும் குறித்து வைத்துக் கொண்டு அடித்து விரட்ட போகிறோமா..?

எப்படிடா இவங்ககிட்ட வாக்கு கேட்டு போறது என்று நினைத்து கூனி குறிகியாவது நிற்க வைக்க வேண்டும். அதை செய்யவில்லை என்றால் இன்னைக்கு வடிக்கும் கண்ணீர் சோகம் எல்லாம் நடிப்பு, நல்லவன் வேஷம்.. மற்றபடி சுட்டவனுக்கும் சுட சொன்னவனுக்கும் இந்த அழுகை சத்தத்தை ரசித்தவனுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லை...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


இந்த ஆளோட முக நூல் பக்கம் ஆதங்கத்தில் என்ன செய்வது.? நீங்களே முடிவு செய்யுங்கள்...


https://www.facebook.com/profile.php?id=100001337132582

நிபா வைரஸ் தாக்குதல்...


ஸ்டெர்லைட் போராட்ட செய்திகளை வெளியிடக்கூடாது என செய்தி சேனல்களுக்கு பாஜக - அதிமுக அரசு மிரட்டல்...


ஆகையால் தோழர்கள் நாம் தொடர்ந்து எழுதுவோம்... இன்றைய நாள் முழுவதும் தூத்துக்குடிக்கா இருக்கட்டும்....

கார்பரேட் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கூலிப்படையாக மாறிய பாஜக-அதிமுக-காவல்துறை...


இன்று காலையில் கண்ணை திறந்து போது, நேற்றிரவு கண்ட கனவு நனவாகும் என்ற நம்பிக்கையில் இருந்திருப்பார்கள்...


அந்த கனவு என் மண்ணுக்கான அரசியலில் நான் வென்று விடுவேன் என்று..

அவர்களை நீங்கள் அழித்துவிட்டீர்கள்,

ஆனால் அவர்களின் கனவே..? ஒருபோதும் அழிக்க முடியாது...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


மார்ச் 28-ஆம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மட்டும் RDO உள்ளிட்ட குழு ஒன்று ஸ்டெர்லைட் வளாகத்திற்குள் ஏழு இடங்களிலிருந்தும், ஸ்டெர்லைட் அருகே உள்ள கிராமங்களில் 8 இடங்களிலிருந்தும் நிலத்தடி நீர் மாதிரிகளை சேகரித்து வாரியத்தின் ஆய்வகத்தில் ஆய்வு செய்துள்ளது...


ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என சொன்ன அரசு, ஆய்வறிக்கை தயாரானதும் ரகசியமாகவே வைத்துள்ளது.
அறிக்கையில் நீர் மாதிரி எடுத்த 15 இடங்களிலுமே நிலத்தடி நீர் குடிப்பதற்கு தகுதியற்றவை என கூறப்பட்டுள்ளது.

சல்பேட் (sulphate), கால்சியம் (calcium), மெக்னீசியம் (magnesium), ஈயம் (lead), பிளோரைட் (fluoride) போன்ற அளவுருக்கள் இந்திய தரநிலைகள் பணியாகத்தால் (Bureau of Indian Standards) நிர்ணயிக்க பட்ட குடிநீர் தர அளவுகளை விட பல மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளது.

குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை மட்டும் மூளை வளர்ச்சியை தாக்கும் ஈயம் அளவு பாதுகாப்பு தர அளவைவிட -- அதாவது 0.01 மில்லிகிராம்/லிட்டர் -- 4 மடங்கிலிருந்து 55 மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளது...

நிலமெல்லாம் இரத்தம்...


எம்மக்கள் எம்மண்ணிலேயே ஈவு இறக்கமின்றி கொல்லப்படுகிறார்கள்.
எம்மண்ணின் வளத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்க துணிந்த தலைகள் இன்று தரையில் கிடக்கின்றன.

தேடிப்பாருங்கள் இறந்தவர்களில் ஒருவர்க்கூட தெலுங்கனாகவோ,
மலையாளியாகவோ, கன்னடனாகவோ, இருக்க வாய்ப்பே இல்லை.

ஆனால் இந்த அரசியல் கோமாளிகள் இங்கு திராவிட அரசியலையும்,
நான்கு இனமக்களும் இணைந்ததே திராவிடம் என்று வாய்க்கிழிய
பேசுவார்கள்.

தமிழன் என்ற வேடம் அணிந்து
தமிழர்களின் ஆளும் உரிமைகளையும்,
அரசு பதவிகளையும் கைப்பற்றி
அவற்றை தமது தெலுங்கு, மலையாளாள, கன்னட இனக்குழு மக்களிடம் கொண்டு சேர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

இம்மண்ணின் வாழ்வாதாரப் பிரச்சனைகளின் போது உயிர்துறக்கும் ஒவ்வொருவனும் தமிழனாகவே இருக்கிறான்.

அது வீரப்பன் ஆனாலும் சரி,
முத்துக்குமார், செங்கொடி, அனிதா,
சசிபெருமாள். விக்னேஷ் என யாராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களாகவே இருக்கிறார்கள்.

தமிழனின் அரசியல் அதிகாரத்தையும்
ஆளும் அரசு அதிகாரத்தையும் என்றோ தெலுங்கர்களும், மலையாளிகளும்
கைப்பற்றிவிட்டனர்.

இங்கு பலியாடுகளாக மட்டுமே தமிழன் இருக்கிறான்.

தமிழக அரசியலும், அரசு அதிகாரமும் இன்று கார்பெரேட்டுக்களுக்காகவும், அவற்றை இங்கு இயக்கி கொண்டிருக்கும் பனியாக்களுக்காகவுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இனிவரும் போராட்டங்களின் அடக்குமுறைகள் இதைவிடவும் கொடூரமானதாகவே இருக்கப்போகிறது.

இதன் தொடர் போராட்டங்கள் உறுதியாக
அடுத்த நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது.

இந்நிலத்தை நாம் என்ன விலை கொடுத்தேனும் தக்கவைத்தே ஆக வேண்டும், இல்லையேல் நம் அடுத்த சந்ததிகள் அனைத்தும் அகதிகள் என்ற அடைமொழியோடும், அன்றாடம் காட்சிகளாகவும் வாழ வேண்டி வரும்.

எதிரி பொறுமை இழக்கிறான். நாம் எதிர்த்து நிற்க வேண்டிய நேரம் இது. அவனது அதிகபட்ச தாக்குதலின் வெப்பநிலையெனும் தாக்குதல்களை தாண்டாமல், அவனை அழித்தொழிக்கவே இயலாது.

காலம் நெருங்குகிறது நெருப்பாய் நிற்போம்.

நெருப்பை நெருப்பே அணைக்கும்...

கார்பரேட் நிறுவனம் ஸ்டெர்லைட்டைக் காப்பாற்ற மக்களை கொலை செய்யும் பாஜக - அதிமுக அரசு...


அயோக்கியத்தனமான ஒரு கார்ப்பரேட் கம்பெனியை காப்பாற்ற பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் அரசே, உன் காட்டுமிராண்டி நடவடிக்கையை நிறுத்து.

துப்பாக்கி சூடு நடத்திய காவல் அதிகாரிகள், தூத்துகுடி மாவட்ட கலெக்டரை கொலைக்குற்றத்தில் கைது செய்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட்ட மாவட்ட கலெக்டர், தூத்துக்குடி காவல்துறை ஆகியோரின் அராஜகத்தை எதிர்த்து முன்னேறும் மக்களுக்கு துணை நிற்போம். தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின் அயோக்கியத்தனத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுதும் போராட்டங்களை முன்னெடுப்போம்.

மக்க்ள் திரள் போராட்டங்கள், கைக்கூலி அரசை கைப்பற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை தூத்துக்குடி மக்கள் தமிழகத்திற்கு சொல்லியிருக்கிறார்கள்.

கார்ப்பரேட்டுகளை விரட்ட, தமிழகமே துணிந்து நில்.

தமிழ்நாடு தூத்துக்குடிக்கு ஆதரவாக திரளட்டும்...

இந்தியாவில் சட்டம் யாருக்கானது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...


உன்னைப் போல் ஒருவன்...


பாஜக அதிமுக ஸ்டெர்லைட் கூட்டு சதி...


தூத்துக்குடி உப்பு தான் சாப்பிடுகிறோம்...


கொஞ்சமாவது சூடு, சொரணை இருந்தால்.. தூத்துக்குடிக்காக ஒன்றிணைய முயலுங்கள்...

தூத்துக்குடி மக்களை காப்பாற்ற நாம் செய்ய வேண்டியது...


இனப்படுகொலையின் மறு வடிவம் இது...


உங்களுக்கு ஓட்டு போட்டதை தவிற ஒரு பாவமும் செய்யாத அப்பாவி தூத்துக்குடி ஸ்ரெட்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த அரசுகள் தமிழர் நிலத்தை அழிக்கும். அதை எதிர்த்து போராடினால் சுட்டுக்கொல்லும்.

எதிர்த்து போராடவில்லை என்றால் ஸ்ரெட்லைட் நச்சுக்காற்று எங்களை கொல்லும்.

போராடினாலும் சாவு வரும் போராடவில்லை என்றாலும் சாவு வரும்.

போராடினால் ஒருவேலை நாம் வென்று நிம்மதியாம வாழ வழியிருக்கிறது...

பாஜக பினாமி அதிமுக தமிழினப் படுக்கொலையை தொடங்கியது...


தூத்துக்குடி கலவரம் தூப்பாக்கி சூட்டில் பலியானவரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதும் நெஞ்சை உருக்கும் காணோளிகள் வலம் வருகிறது..

அதையும் பார்த்துக் கொண்டு உச்சுக் கொட்டுங்கள்...

சித்தர்கள் பறப்பது எப்படி?


நம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம். சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோம். அது எப்படி சாத்தியம் ஆகிறது.

சித்தர்கள் பறந்து செல்பவர்கள், நீரில் நடப்பார்கள். அந்தரத்தில் மிதப்பார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா. அவை எதுவும் மாயாஜால்மோ அல்ல நடக்க முடியாத கட்டுக் கதையோ அல்ல. பிறகு எப்படி பறக்கிறார்கள்?

எல்லா ஜீவன்களுக்கும் இரண்டு உடல்கள் இருக்கும். ஒன்று நாம் கண்ணால் காணக்கூடிய எலும்பும் சதையும் கொண்ட புற உடல். மற்றொன்று கண்களுக்குப் புலப்படாத மாயா உடல். உதாரணமாக, நாம் பின்னால் ஒருவர் தொடும் தூரத்தில் வந்தி சத்தமில்லாமல் நின்றால் கூட நம்முடைய உள்ளுணர்வு காரணமாக திரும்பி பார்த்து விடுவோம். யோரோ நம் பின்னால் நிற்பது போல இருக்கிறதே என்ற உள்ளுணர்வின் உந்துதல் எதனால் ஏற்படுகிறது? அருகே நிற்பவர் நம் புற உடலைத் தொடாவிட்டாலும் ஆத்மாவின் உடலான மாய உடலைத் தீண்டி நிற்பதால் நமக்கு உள்ளுணர்வு உண்டாகிறது. இவ்வாறுநடமாட்டத்தை உணர்வலைகளின் வாயிலாகவும் மின்காந்தப்புலத்தின் பரிமாற்றத்தாலும் நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் உணரமுடிகிறது.

இவற்றில் புற உடல் புவி ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டது. மாய உடல் ஆத்மாவின் உடல். இது பூமியின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்படாதது.

ஆத்மாவில் லயித்திருக்கும் போது மாய உடலோடு ஒன்றியிருப்பதும், புற உலகில் லயித்திருக்கும் போது சாதாரண உடலோடு ஒன்றியிருப்பதும் நடக்கிறது. சித்தர்களும் முனிவர்களும் தொடர்ந்த பயிற்சியின் மூலமாக மாய உடலையும் , புற உடலையும் ஒரு சேர இயக்க கற்றுக்கொள்கிறார்கள்.

மொத்த சக்தியையும் நாபி எனப்படும் தொப்புளுக்கும் கீழே உள்ள இடத்தில் ஒரு உருண்டையைப் போல திரட்டி அந்த சக்தியையே உடலின் மைய புள்ளியாகக் கொண்டு புவி ஈர்ப்பு விசைக்கு எதிர் விசை கொடுத்து பறக்கிறார்கள்!

மாய உடலை இயக்கும் போது புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு இவர்களால் பறக்க முடியும். மாய உடலின் ஆதிக்கத்தைக் குறைத்து புற உடலை இயக்கும் போது புவியீர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டு சராசரியாக இயங்க முடியும். இவ்வாறு இவர்களால் புவி ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த முடியும் போது அந்தரத்தில் நடக்க முடிகிறது. நீரில் நிற்க முடிகிறது. அதற்கு காரணம் தொடர்ந்த பயிற்சிகளால் புற மற்றும் அக உடல் இரண்டின் சக்தியையும் இயக்கக் கற்று விடுகிறார்கள். ப்ரபஞ்சத்தின் சக்தியோடு முழுமையாக ஒன்றி விடுகிறார்கள்.

சலனமற்ற மனமும் அமைதியான தியானமும் இதுபோன்ற உள்ளிருப்பு சக்திகளை வெளியே கொண்டு வர உதவும் முதல் படிகள் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

நம்மைப் போன்றவர்கள் தான் சலனப்படாத நிமிடங்கள் கூட கிடையாதே! அதனால் தான் 58 பெருக்கல் 28 என்ன என்று கேட்டால் கூட மன சக்தியை பயன்படுத்தாமல் கால்குலேட்டருக்குத் தாவுகிறோம்...

இது அனைத்திற்கும் பொருந்தும்...


உங்கள் அரசு உங்களை அழிக்க பார்க்கிறது,

எல்லா வழிகளிலும்..

ஒன்று பொருளாதார ரீதியாக மறைமுகமாக அழிப்பது,

மற்றொன்று நேரடியாக...

பூமியின் (அ)பூர்வ கதை - 3...


பூமியின் மொத்த வரலாற்றை சுற்றி ஒரு வேக பயணம்...

பிறந்த குட்டியாக எதை ஒன்றையும் பார்தாலும் பார்க்க மிக அழகாக இருக்கும் என்ற லாஜிக்  பூமிக்கு பொருந்தாது. காரணம் பூமி பிறந்த போது அது ஒரு மிரட்டும் நரக கிரகம்.

அதன் பரப்புகளில் எட்டி பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உருகிய பாறைகளின் லாவா குழம்புகள் உலா வந்து கொண்டிருப்பதை காண முடியும்..
அந்த சூடான கொழ கொழ பாறை கூழால் தான் இந்த கிரகம் சூழ பட்டிருந்தது.

இந்நிலையில் பூமியின் சுழற்சி வேகம் இன்றை போல 24 மணி நேரமாக இருந்திருக்க வில்லை. அன்றைய ஒரு நாள் என்பது வெறும் 6 மணி நேரங்கள் மட்டும் தான்.

குறிப்பிட்ட காலத்திற்கு எல்லாம் கலந்த கலவையாக இருந்த பூமியின் தனிமங்களை தனித்தனி அடுக்குகளாக வரிசையாக அடுக்கிவைத்த புண்ணியம் பூமியின் ஈர்ப்பு விசையையே சாரும்.

அவைகள் இரும்பு நிக்கல் போன்ற கனமான தனிமங்களை பூமியின் மையத்திலும் ஏனைய கணம் குறைந்த தனிமங்களை படி படியாக மேல் அடுக்கில் ஒன்றின் மேல் ஒன்றாகவும் அடுக்கி வைத்தன.

மையத்தில் உள்ள இரும்பு நிக்கல்  போன்றவையால் பூமிக்கு காந்த புலம் என்ற ஒன்று உருவாகி பூமியை ஒரு ராட்சத காந்தமாக மாற்றியது. இந்த காந்த புலங்கள் சூரியனில் இருந்து வரும் சக்தி யூட்ட பட்ட துகள்களில் இருந்து சூரிய புயலில் இருந்து பூமியை காக்க தொடங்கின. இன்றும் காத்து கொண்டு இருக்கின்றன.

இப்படி ஆர்பாட்டமாக சுற்றி சுழன்று கொண்டிருந்த பூமியின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத விபத்து ஒன்று ஏற்பட்டது... மோதல் விபத்து.

அதாவது கிட்ட தட்ட 450 கோடி ஆண்டு முன் இளைய பூமியை விண்வெளி பொருள் ஒன்று மிக வேகமாக தாக்கியது.

தாக்கிய அந்த பொருள் ஏதோ சிறிய விண்கல் அல்ல (பூமி வரலாற்று பாதையில் விண்கல் மோதல் என்ற ஒரு நிகழ்வும் நடக்க இருக்கிறது. ஆனால் இப்போது இல்லை அதற்கு இன்னும் சில கோடி ஆண்டுகள் செல்ல வேண்டும். நியாபகமாக இக்கட்டுரை தொடரின் 7 வது அத்தியாயத்தில் அதை பற்றி சொல்கிறேன்)..

மோதிய அந்த பொருள் ஒரு முழு கிரகம் அதன் அளவு கிட்ட தட்ட இன்றைய செவ்வாய் கிரகம் அளவு. அது மோதிய வேகம் அசுர தனமான மணிக்கு கிட்ட தட்ட நாற்பது ஆயிரம் கிலோ மீட்டர் வேகம்.

அந்த தாக்கத்தால் பூமி மிக பெரிய அளவில் பாதிக்க பட்டது அதன் உடலில் ஒரு சிறிய பகுதி பிய்த்து எறிய பட்டு அவைகள் ஈர்ப்பு விசையால் ஒன்றிணைந்து பிறகு பூமியை தொடர்ந்து சுற்ற ஆரம்பித்தது.

பிற்காலத்தில் நிலா என்று அழைக்க பட்டு கவிஞர்கள் கவிதை எழுத.. குழந்தைகளுக்கு காட்டி சோறூட்ட பயன்பட்டது.

(பிய்த்து எறிய பட்ட இடத்தில உண்டான பள்ளங்கள் தான் பிற்காலத்தில் தன்னீர் நிரப்ப பட்டு கடல்கள் என்று அழைக்க பட்டன. இன்று நிலாவின் பருமன் எவ்வளவு உள்ளது என்று கணக்கு போட்டு பார்த்த ஆய்வாளர்கள் அதை உடைத்து தூள் ஆக்கி நமது கடலில் போட்டு நிறப்பினால் கிட்ட தட்ட பூமியின் கடலை தூர்க்கும் அளவு சரியாக நிலா இருப்பதாக சொல்கிறார்கள்).

மோதலில் தான் காதல் உண்டாகிகிறது பிறகு வாழ்க்கை துணை கிடைக்கிறது என்ற சினிமா லாஜிக்கிற்கு ஏற்ப பூமி மோதலுக்கு பின் தனக்கு என்று ஒரு துனையை அதாவது துணை கிரகத்தை உண்டாக்கி கொண்டது.

அந்த துணை கிரகம் சும்மா வெட்டியாக சுத்தி வரவில்லை. பூமியில் பல விஷயங்களை அது நிர்ணயிக்கிறது. (கணவன் செயல்பாட்டில் பின்னணியில் இருந்து உதவும் மனைவியை போல்) குறிப்பாக பூமியின் பருவநிலை.

பூமி தனது அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து கொண்டு சுற்றுவதால் தான் பருவ மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று நமக்கு தெரியும். சரி இதில் நிலவின் பங்கு என்ன?

ஒரு மைதானத்தில்  சங்கிலியால் கட்ட பட்ட இரும்பு குண்டு ஒன்றை ஒருவர் கையால் பிடித்து வேகமாக  சுற்றுவதாக கற்பனை செய்யுங்கள் .இப்போது அவர்
அந்த குண்டின் எடையால் பாதிக்க பட்டு ஒரு குறிப்பிட்ட பேலன்ஸ் இல் சுழல்வதை பார்க்கலாம். அந்த குண்டு இவரை இழுத்து கொண்டு சுற்றும். திடீரென  அதை விடுத்தால் அவரும் அந்த சூழல் பேலன்ஸ் இல் இருந்து விடு
படுவார் அல்லவா.

அப்படி தான் நிலாவின் ஈர்ப்பு விசையால் பூமி தனக்கும் நிலவுக்கும் ஒரு கற்பனை கயிறு கட்டி விட்டதை போல அதை இழுத்து கொண்டு சுற்றி வருகிறது.

மேலும்  'பூமி பெலன்ஸி'ல்  நிலா முக்கிய பங்கு வகிக்கிறது. நிற்க போகும் பம்பரம் போல பூமி தலை ஆட்டி நிலையில்லாமல் சுற்றாமல் நிலையான சுழற்சிக்கு இது உதவியாக இருக்கிறது.

பூமி இப்போது இருக்கும் அச்சில் சூழல இதுவும் ஒரு காரணம். அப்படி அந்த அச்சில் சுழல வில்லை என்றால் பருவங்கள் ஏற்பட்டிருக்காது.

இது தவிர நிலவின் ஈர்ப்பு விசை இன்னோரு காரியத்தை செய்தது பூமியை இழுத்து பிடித்து 6 மணிநேரமாக இருந்த பூமியின் சுழற்சி வேகத்தை படி படியாக குறைத்து 24 மணி நேரமாக மாற்றியது.

இப்படி சுற்றி திரிந்து கொண்டிருக்கும் இந்த சூழல் பூமியில் உயிரினங்கள் ஏதும் இன்றி கிட்ட தட்ட 80 கோடி ஆண்டுகளுக்கு தொடர்ந்தது.

காரணம் உயிரினங்கள் உண்டாக மிக முக்கிய தேவை ஒன்று இருந்தது.
நீர் இன்றி அமையாது உலகு என்று வள்ளுவன் அப்போதே சொல்லி விட்டு போன நீர்.

பூமியின் அடுத்த கட்ட தேவையாக இருப்பது நீர் உருவாக்கம். அது எப்போ எப்படி உண்டாகியது என்ற தகவல்கள் அடுத்த பாகத்தில்....

- பூமி இன்னும் சுழலும்...

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது, பயிற்சி பெற்ற கமாண்டோ படை வீரர்கள் போலிஸ் வாகனத்தின் மீது ஏறி நின்று கொண்டு ஒவ்வொருவராக குறி பார்த்து சுட்டது இவர்கள்தான் - டைம்ஸ் நவ் தகவல்...