23/05/2018

நிலமெல்லாம் இரத்தம்...


எம்மக்கள் எம்மண்ணிலேயே ஈவு இறக்கமின்றி கொல்லப்படுகிறார்கள்.
எம்மண்ணின் வளத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்க துணிந்த தலைகள் இன்று தரையில் கிடக்கின்றன.

தேடிப்பாருங்கள் இறந்தவர்களில் ஒருவர்க்கூட தெலுங்கனாகவோ,
மலையாளியாகவோ, கன்னடனாகவோ, இருக்க வாய்ப்பே இல்லை.

ஆனால் இந்த அரசியல் கோமாளிகள் இங்கு திராவிட அரசியலையும்,
நான்கு இனமக்களும் இணைந்ததே திராவிடம் என்று வாய்க்கிழிய
பேசுவார்கள்.

தமிழன் என்ற வேடம் அணிந்து
தமிழர்களின் ஆளும் உரிமைகளையும்,
அரசு பதவிகளையும் கைப்பற்றி
அவற்றை தமது தெலுங்கு, மலையாளாள, கன்னட இனக்குழு மக்களிடம் கொண்டு சேர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

இம்மண்ணின் வாழ்வாதாரப் பிரச்சனைகளின் போது உயிர்துறக்கும் ஒவ்வொருவனும் தமிழனாகவே இருக்கிறான்.

அது வீரப்பன் ஆனாலும் சரி,
முத்துக்குமார், செங்கொடி, அனிதா,
சசிபெருமாள். விக்னேஷ் என யாராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களாகவே இருக்கிறார்கள்.

தமிழனின் அரசியல் அதிகாரத்தையும்
ஆளும் அரசு அதிகாரத்தையும் என்றோ தெலுங்கர்களும், மலையாளிகளும்
கைப்பற்றிவிட்டனர்.

இங்கு பலியாடுகளாக மட்டுமே தமிழன் இருக்கிறான்.

தமிழக அரசியலும், அரசு அதிகாரமும் இன்று கார்பெரேட்டுக்களுக்காகவும், அவற்றை இங்கு இயக்கி கொண்டிருக்கும் பனியாக்களுக்காகவுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இனிவரும் போராட்டங்களின் அடக்குமுறைகள் இதைவிடவும் கொடூரமானதாகவே இருக்கப்போகிறது.

இதன் தொடர் போராட்டங்கள் உறுதியாக
அடுத்த நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது.

இந்நிலத்தை நாம் என்ன விலை கொடுத்தேனும் தக்கவைத்தே ஆக வேண்டும், இல்லையேல் நம் அடுத்த சந்ததிகள் அனைத்தும் அகதிகள் என்ற அடைமொழியோடும், அன்றாடம் காட்சிகளாகவும் வாழ வேண்டி வரும்.

எதிரி பொறுமை இழக்கிறான். நாம் எதிர்த்து நிற்க வேண்டிய நேரம் இது. அவனது அதிகபட்ச தாக்குதலின் வெப்பநிலையெனும் தாக்குதல்களை தாண்டாமல், அவனை அழித்தொழிக்கவே இயலாது.

காலம் நெருங்குகிறது நெருப்பாய் நிற்போம்.

நெருப்பை நெருப்பே அணைக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.