24/01/2018
பிரபஞ்ச இரகசியம்...
இந்த பிரபஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை அனைவரும் அறிவோம். ஒரு இரகசியத்தை இங்கே கூறபோகிறேன்.
இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி. நான் சொல்வது சத்தியம்.
ஆம் எனக்கு உங்களிடம் பொய் சொல்லி சன்மானம் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
இந்த இயற்கை எனக்கு அருளியதை உங்களுக்கு நான் அருளுகிறேன் அவ்வளவே.
இதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.
இங்கே உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செடிகொடிகளுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உணர்வு உண்டு.
ஆம் நீங்கள் எதை மனதார நேசிக்கிறீர்களோ அது மட்டுமே உங்களிடம் தங்கும் உங்களுக்கு நிலைக்கும்.
உதாரணமாக ஒரு பொருளை வைத்துக் கொள்வோம்...
இந்த பொருளை நீங்கள் உணர்வு பூர்வமாக அணுகும் போது அது உங்கள் நடத்தையை அறிந்து உங்கள் செயலுக்கு எதிர்வினை புரியும் என்று உங்களுக்கு தெரியுமா?
இதுதான் உண்மையிலும் உண்மை.
நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்திடம் உணர்வு பூர்வமாக பேசுங்கள். எந்த சூழலிலும் என்னை விட்டுவிடாதே என்று அதனிடம் கூறுங்கள்.
சத்தியமாக அது உங்களை மிகப்பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும்.
ஆம் அதும் உணர்வு பூர்வமானதே. அதற்கு உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி உள்ளது. அது உங்களை நிச்சயம் காப்பாற்றும். அதற்கு அறிவு உண்டு.
ஒவ்வொரு அணுவிற்கும் அறிவு உண்டு..
இதை நீங்கள் தயவுசெய்து கடைபிடியுங்கள். அது உங்களுக்கு நிச்சயம் செயல்விடை அளிக்கும்.
ஆம் ஒவ்வொரு பொருளையும் மனதார உணர்வு பூர்வமாக நீங்கள் அணுகினால் அது அழிந்தாவது உங்களை காப்பாற்றும்.
நீங்கள் மனதார உணர்வுபூர்வமாக நேசிக்கும் எந்த ஒரு பொருளும் உங்களை விட்டு சத்தியமாக போகாது. மீறி போனாலும் அது உங்களை எந்த வழியிலாவது வந்தடையும்...
இந்திய குடியரசு தினத்தை புறக்கணிப்போம்... மொழிப்போர் தியாகிகள் நாள்: சனவரி 25...
சமசுகிருதமயமாக்கம் நடைபெறும் இக்காலக்கட்டத்தில் தமிழன் மீண்டும் மீண்டும் போராடிக் கொண்டே இருக்கிறான்.
அன்று இந்தி - மயமாக்கத்திற்கு எதிராக மட்டுமே போராடினான்.
இன்று சமசுகிருதமயமாக்கம் ஆரிய - மயமாக்கம் என்ற எதிரியோடு மட்டுமல்ல..
திரவிட மயமாக்கம் என்ற இந்தியக் கருணா-வீரமணி-ஜெயா கும்பல் துரோகிகளுக்கு எதிராகவும் அவன் போராட வேண்டியிருக்கிறது.
இந்தக்கும்பல் கூட்டணி விசயகாந்த் வரை நீண்டு கொண்டே செல்வது தான் துயரம்.
நம்முடைய விளக்குகளுக்கும், தீப்பந்தங்களுக்கும், வெடித்தெழும் உணர்வுகளுக்கும் தேவையான தீயை அந்த மொழிப்போர் போராளிகளின் அணையாத நெருப்பில் பற்ற வைத்துக் கொள்வோம்..
இந்தி எதிர்ப்பு போரட்டம் 1937 முதல் பல ஆண்டுகளாக நடைபெற்றது என்றாலும் இதன் தீவிரத்தன்மை கொண்டு இரண்டு ஆண்டுகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
1939 மற்றும் 1965...
1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசு வெற்றிபெற்று சென்னை மாகாணத்தின் (தற்போதைய தமிழகத்தையும், தெற்கு ஆந்திரா பகுதிகளையும் உள்ளடக்கியது), முதலமைச்சராக ராஜாஜி 14 சூலை 1937ஆம் நாள் பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே இந்தி பயிலவேண்டியதின் தேவையை விளக்கி வந்தார்.
தென்னிந்தியர்கள் வட மாநிலங்களில் தனியார்துறையில் வேலை தேட இந்தி பயில்வது மிகத்தேவையானது என (சுதேசமித்திரன் பத்திரிகையில் மே 6, 1937) எழுதியிருந்தார்.
எத்தனை ஆண்டுக்காலமாய் ஒரே பொய்யுரையை திரும்பத்திரும்ப திணிக்கின்றனர்.
ஆரிய ராஜாஜியின் விஷக் கொடுக்கு 2015 லும் துடித்துக்கொண்டு தான் அலைகிறது.
அதன்படியே தாம் பதவிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே 11 ஆகஸ்டு 1937 அன்று பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கவிருப்பதைக் கொள்கை அறிக்கையாக வெளியிட்டார்.
1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாக ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கப்போவதாக அறிவித்தார். அம்மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகப் பயின்று அதில் தேர்வும் எழுதி போதிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குப் போக முடியும். முதலில் நூறு பள்ளிகளுக்கு இத்திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கப்போவதாக அரசு அறிவித்தது.
மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள்.
சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ. டி. பன்னீர் செல்வம், ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்கள், வழக்குரைஞர்களின் புறக்கணிப்பு மற்றும் பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது.
இந்த எதிர்ப்புகளுக்கு இடையே ராஜாஜி 21 ஏப்ரல், 1938ஆம் ஆண்டு 125 உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார்.
அவரது பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. ராஜாஜி மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது.
3, திசம்பர் 1938 இந்தி எதிர்ப்பு நாளாக கடைப் பிடிக்கப்பட்டது.
சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.
1939ல் பேரணியில் பங்கேற்றதற்காக காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர் காவல் நிலையத்திலேயே இறந்தனர்.
1938 டிசம்பர் 5 அன்று கைது செய்யப்பட்ட நடராசன் காவல் துறை சித்திரவதையால் 1939 சனவரி 15 கொல்லப்பட்டார்.
1939 பிப்ரவரி 11 அன்று கைது செய்யப்பட்ட தாளமுத்து மார்ச் 13 அன்று காவல்துறை சித்திரவதையால் கொல்லப்பட்டார்.
இவர்களே முதல் மொழிப்போர் தியாகிகள்...
இவர்களோடு போராட்டத்தில் மரித்த மொழிப்போர் தியாகிகள்.
பெரியார் உட்பட 1200 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வலுவுற்ற எதிர்ப்பின் காரணமாக அந்தச் சட்டம் கைவிடப்பட்டது.
ஜவஹர்லால் நேரு மே 1964ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சாஸ்திரியும் அவரது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் மொரார்ஜி தேசாய் மற்றும் குல்சாரிலால் நந்தா ஆகியோரும் இந்தியை ஒரே அரசு மொழியாக ஆக்குவதன் தீவிர ஆதரவாளர்கள்.
1965 சனவரி 26 முதல் இந்தியை நாட்டின் ஆட்சி மொழியாக்குவது என்று மத்திய அரசு முடிவெடுத்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
விருதுநகர் சீனிவாசன், காளிமுத்து, நா. காமராசன் என்பவர்கள் இப்போராட்டத்தை வடிவமைத்தனர்.
1964 சனவரி சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் அன்றைய சென்னை மாகாண முதல்வர் திரு. பக்தவச்சலம் முன்பு ஒரு இளைஞன்...
அய்யா தமிழைக்காப்பாற்றுங்கள், இந்தியை நுழைய விடாதீர்கள், நீங்களும் தமிழர் தானே.
பக்தவச்சலம் உத்தரவு: இந்தப் பைத்தியத்தை கைது செய்யுங்கள்.
சனவரி 25 விடியற்காலை 4.30 மணிக்கு தனக்கு தீயை வைத்துக்கொண்டு "தமிழ் வாழ்க, இந்தி ஒழிக" என்று கத்திக் கொண்டே கருகிப்போனார் அந்த கீழப்பழூர் சின்னசாமி, அன்றைய முத்துக்குமாராய்.
1965 மொழிப் போராட்டத்தின் முதல் மொழிப் போராளி கீழப்பழூர் சின்னசாமி.
சின்னச்சாமியைப் போல ஒரு பத்துத் தமிழனாவது உயிர் நீத்தால் தான் நமது தமிழுக்கு விமோசனம் கிடைக்கும். இந்தி ஆதிக்கம் ஒழியும்." என்று அடிக்கடி பேசிவந்த கோடம்பாக்கம் சிவலிங்கம் தான் மொழிப்போரில் இரண்டாவதாகத் தீக்குளித்தவர்.
இந்திய அரசின் வன்முறைக்கு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன், மற்றும் சிவலிங்கம்.
16 சனவரி அன்று அண்ணாதுரை எதிர்வந்த குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார்.
ஐந்து போராட்டக்காரர்கள், சிவலிங்கம், அரங்கநாதன், வீரப்பன், முத்து, சாரங்கபாணி தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர்.
மேலும் மூவர், தண்டபாணி, முத்து, சண்முகம் விசமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
இரு வார கலவரங்களில் அதிகாரபூர்வ தகவலில்படி காவல்துறையால் 70 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் 500க்கும் கூடுதலானவர் கொல்லப்பட்டதாக போராட்டக்காரர்களின் தகவல்கள் கூறுகின்றன.
1 பிப்ரவரி அன்று மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் உணவு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியன் ஆங்கிலம் அலுவல்மொழியாக விளங்க சட்டப் பாதுக்காப்பு கோரினார். அவரது தீர்வு ஏற்றுக்கொள்ளப்படாததால் தன்னுடைய உடன் அமைச்சர் அழகேசனுடன் பதவி விலகினார்.
தமது அமைச்சரவையில் வெளிப்பட்ட திறந்த எதிர்க்குரலுக்குப் பின்னர் லால் பகதூர் சாஸ்திரி பின்வாங்கி பிப்ரவரி 11 அன்று அனைத்திந்திய வானொலியில் உரையாற்றினார். கலவரங்களைக் குறித்து அதிர்ச்சி தெரிவித்து ஜவஹர்லால் நேருவின் வாக்குறுதியைப் பேண உறுதி கூறினார். தவிர, மேலும் நான்கு வாக்குறுதிகள் கொடுத்தார்:
ஒவ்வொரு மாநிலமும் தனது செயல்பாட்டிற்குத் தொடர்ந்து தான் தேர்ந்தெடுத்த மொழியில், வட்டாரமொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்பாட முழுமையான, கட்டற்ற சுதந்திரம் கொண்டிருக்கும்.
இரு மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பாடல் ஆங்கிலத்தில் இருக்கும் அல்லது நம்பத்தக்க ஆங்கில மொழிபெயர்ப்பு உடனிருக்கும்.
இந்தியல்லா மாநிலங்கள் மைய அரசுடன் ஆங்கிலத்தில் தொடர்பாட முழு உரிமை உண்டு; இந்நிலையில் இந்தியல்லா மாநிலங்களின் ஒப்புதலன்றி எந்த மாற்றமும் நிகழாது.
மைய அரசின் அலுவல்கள் தொடர்பாக ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
பின்னர் ஐந்தாவதாக: இந்திய குடியியல் சேவை தேர்வுகள் இந்தி மட்டுமே அல்லாது ஆங்கிலத்திலும் தொடரும் என்ற உறுதிமொழியும் வழங்கினார்.
சென்னையில் இரண்டு பேர் தீக்குளித்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற நிகழ்ச்சி இதற்குமுன் இந்தியாவில் நடந்ததில்லை. இப்போராட்டத்தைக் கைவிடுங்கள். இந்தி குறித்து உள்ள சிக்கல்களை நாம் ஒருவருடன் ஒருவர் பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.
அன்றைய இந்தியப்பிரதமர் லால் பகதூர் சாஸ்த்திரி. சனவரி, 29 1965 தினத்தந்தி.
தீக்குளித்தவர்களின் முன்னோடிகளாக 1939 ல் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட தாளமுத்து, நடராசன் ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட இடுகாட்டில் பேசும்போது அண்ணாதுரை...
இரண்டு மணிகளை இழந்தோம். தமிழர் ஆட்சி ஏற்படும் போது இவ்விரு வீரர்களின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டே எழுதப்படும். வருங்காலத்தில் விடுதலை பெற்ற தமிழகத்தில் தலைவர் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச்சிலை எழுப்ப வேண்டும். என்று சொன்னார்.
அவரோ, அவருக்குப்பின் வந்த திராவிடக் கருணாக்கள் எழுப்பினார்களா?
தங்கள் கையில் ஆட்சி கிடைத்த 2 ஆண்டுகளுக்குள் உத்திரப்பிரதேசத்தில், ஆரியர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிமக்கள் என்று வரலாற்றையே மாற்றி எழுதினார்களே பாஜக கட்சியினர்.
50 ஆண்டு கால 'தமிழர்' ஆட்சியில் இந்த மொழிப்போர் வீரர்களின் வரலாற்றைக் கூட நம் பாடப்புத்தகங்களில் பதிவு செய்ய வில்லையே?. எல்லாம் மணிமண்டபத்தோடு சரி.
மொழி ஒரு சமூகத்தின் மேல் கட்டுமானத்தில் தான் இடம் பெறுகிறது என்று கூறும் ஒரு சிலர் கூறுவதுண்டு. ஆனால் பொறியியல் கல்லூரியில் படித்த பீளமேடு தண்டபாணி முதல் 6 வது வகுப்பைக்கூட எட்டாத விராலிமலை சண்முகம் வரை தெரிந்து வைத்திருந்தார்கள்-
மொழி என்பது தேசிய இனத்தின் முகமும், முகவரியும் என்று.
2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1,635 தாய்மொழிகளும், 10,000 பேருக்கும் கூடுதலான பேசுபவர்களைக் கொண்ட 122 மொழிகளும் உள்ளதாக அறியப்பட்டது.
ஆனால் அன்றைய ராஜாஜி, சாஸ்த்ரி களின் இன்றைய பிரதிநிதியான நரேந்திர மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி 2014 ஆம் ஆண்டில் மீண்டும் இந்தித் திணிப்பிற்கான முயற்சிகள் மேற்கொள்கிறது. அது தொடர்பான அறிக்கையில்...
1, பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை - சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது.
2, ஜூலை 2014 மாதத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய (CBSE) பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த ஆண்டு(2014) சமஸ்கிருத மொழி வாரத்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.
3, மேலும் ஆசிரியர் தினமான செப்டெம்பர் 5 ஐ "குரு உத்சவ்" என கொண்டாடும் படி அனைத்து பள்ளிகளுக்கும் நடுவண் அரசு ஆகஸ்ட்-2014 இல் சுற்றிக்கை அனுப்பியது.
இந்தி பெரும்பான்மையினரால் பேசப்படுகிறது என்ற கூற்றுக்கு அன்று அண்ணாதுரையின் பதில்...
எண்ணிக்கைகளால் முடிவுகள் எடுக்கப்படுமானால் இந்தியாவின் தேசியப் பறவை மயிலாக இருக்காது; காகமாகத் தான் இருக்கும்...
மேளகர்த்தா ராகங்கள்...
ஸ்வர சமூகங்களின் சேர்க்கையில் ஏற்படும் எந்த தொனியாவது, செவிக்கும் மனதிற்கும் இன்பத்தை அளிக்கிறதோ, அதுவே ராகம் என்று பெயர்படும்.
கர்னாடக சங்கீததில் முக்கியமானது கர்த்தா ராகங்கள் (தாய் ராகங்கள்) என்பது. அவைகள் மொத்தம் 72. ரி, க, ம, த, நி, என்கிற விக்ருதி ஸ்வரங்களின் மூன்றுவித ப்ரஸ்தாரங்களினால் 72 மேளகர்த்தாக்கள் ஏற்பட்டன.
இந்த 72 மேளகர்த்தாக்களில் முதல் 36 ராகங்களுக்கு “சுத்த மத்யம” ராகங்கள் என்றும், அடுத்த 36 ராகங்களுக்கு “ப்ரதி மத்யம” ராகங்கள் என்றும் பெயர்.
சுத்த மத்யம ராகங்கள்...
1. கனகாங்கி
2. ரத்னாங்கி
3. கானமூர்த்தி
4. வனஸ்பதி
5. மானவதி
6. தானரூபி
7. சேனாவதி
8. ஹனுமதோடி
9. தேனுகா
10. நாடகப்ரியா
11. கோகிலப்ரிய
12. ரூபவதி
13. காயகப்ரியா
14. வகுளாபரணம்
15. மாயாமாளவகௌளை
16. சக்ரவாகம்
17. ஸீர்யகாந்தம்
18. ஹாடகாம்பரி
19. ஜங்காரத்வனி
20. நடபைரவி
21. கீரவாணி
22. கரஹரப்ரியா
23. கௌரீமனோஹரி
24. வருணப்ரியா
25. மாரரஞ்ஜனி
26. சாருகேசி
27. ஸரஸாங்கி
28. ஹரிகாம்போஜி
29. தீரசங்கராபரணம்
30. நாகாநந்தினி
31. யாகப்ரிய
32. ராகவர்த்தினி
33. காங்கேயபூஷிணி
34. வாகதீஸ்வரி
35. சூலினி
36. சலநாட்டை
ப்ரதி மத்யம ராகங்கள்...
37. ஸாலகம்
38. ஜலார்ணவம்
39. ஜாலவராளி
40. நவனீதம்
41. பாவனி
42. ரகுப்ரிய
43. கவாம்போதி
44. பவப்ரிய
45. சுபபந்துவராளி
46. ஷட்வித மார்கிணி
47. ஸீவர்ணாங்கி
48. திவ்யமணி
49. தவளாம்பரி
50. நாமநாராயணி
51. காமவர்த்தினி
52. ராமப்ரிய
53. கமனாச்ரம
54. விச்வம்பரி
55. ச்யாமளாங்கி
56. ஷண்முகப்ரிய
57. சிம்ஹேந்த்ரமத்யமம்
58. ஹேமவதி
59. தர்மவதி
60. நீதிமதி
61. காந்தாமணி
62. ரிஷபப்ரிய
63. லதாங்கி
64. வாசஸ்பதி
65. மேசகல்யாணி
66. சித்ராம்பரி
67. ஸுசரித்ரம்
68. ஜோதிஸ்வரூபிணி
69. தாதுவர்த்தனி
70. நாஸிகாபூஷணி
71. கோஸலம்
72. ரஸிகப்ரிய...
R2A2 சூத்திரம்...
நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமன்றி எப்படி செய்ய வேண்டும் என்பதையும் இந்த சூத்திரத்தை மனதில் கொண்டால் போதும்..
உங்கள் இலக்குகளை அடைவதற்குப் பயன்படும் விதமாக நீங்கள் பார்க்கும் , கேக்கும், படிக்கும் அனுபவங்களிலிருந்து கோட்பாடுகளை , உத்திகளை , முறைகளை கண்டுணர்ந்து தொடர்பு கொண்டு , உள்வாங்கி பிரயோகியுங்கள்.. இதுவே R2A2 சூத்திரம் எனப்படுகிறது.
R2 எனப்படுவது கண்டுணர்ந்து தொடர்பு படுத்திப் பார்ப்பது. (Recognize and Relate).
A2 எனப்படுவது உள்வாங்கி பிரயோகிப்பதை குறிக்கிறது (Assimilate and Apply).
உங்கள் பயனுள்ள இலக்குகளை அடைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொண்டு , உங்கள் எண்ணங்களை வழிப்படுத்தி , உணர்வுகளைக் கட்டுப்படுத்தி , உங்கள் தலைவிதியை தீர்மானியுங்கள்..
இலக்குகளை மற்றும் அதனை அடையும் வழிகளை முதலில் கண்டுணருங்கள் அவற்றை உங்கள் கனவுடன் தொடர்புபடுத்தி பாருங்கள்..
அவற்றை முழுதாக உள்வாங்குங்கள் அதனை பிரயோகித்து இலக்கினை அடையுங்கள்...
கட்டண உயர்வு: அரசு பஸ் சிறைபிடிப்பு...
பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகளின் போராட்ட்டம் தீவிரமடைந்து வருகிறது. கட்டண உயர்வைக் கண்டித்து பல பகுதிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை மாணவர்கள் சிறைபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...
பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் நவீன கொள்ளை...
சர்வதேச கச்சா எண்ணெய் விலை $147. இருந்த போது இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.75, டீசல் விலை ரூ.55... அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது...
பாஜக ஆட்சியில் வந்த பிறகு...
சர்வதேச கச்சா எண்ணெய் விலை $68. இப்போது தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.77, டீசல் விலை ரூ.67...
பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை ரூ.82...
ஊடகங்களே தமிழினத்தின் முதல் எதிரி...
௧) கொலை, கொள்ளை, கற்பழிப்பு இன்னும் பல பதற வைக்கும் கொதிப்படைய செய்யும் பாதகச் செயல்களை நம்மிடம் அனுதினமும் சொல்லி சொல்லி அதை ஒரு சாதாரண செய்தியாக கடந்து போகும் நிலையில் நம் மனதில் பதித்தனர்.
௨) ஒரு இடத்தில் நிகழும் திருட்டு அல்லது சில தீய செயல்களை பல லட்சக்கணக்கான மக்களிடம் சேர்ப்பது அது விழிப்புணர்வுக்கு அல்ல..
இப்படியும் சில தவறுகள் நடக்கிறது என அவர்களுக்கு அந்த தவறுகளை செய்யும் யுக்தியை கற்று தருவது..
௩) பெரும்பாலும் நீ என்ன நினைக்க வேண்டும்? எதை பற்றி பேச வேண்டும் என முடிவு செய்வது அவர்கள் தான்..
எடுத்துக்காட்டாக ட்ரெண்டிங் என சொல்லும் தலைப்புகள் அவர்கள் உருவாக்குப்படுவது தான்.
௪) திசை திருப்புதல் இதை பற்றி சொல்லத் தேவையில்லை. இது தான் அவர்களின் பிரதான நோக்கமே.. அதற்காக தான் அவர்களின் கட்டமைப்பே..
உதாரணத்திற்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதை ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தது நமக்கு தெரிந்ததே..
இது போல் நிறைய உள்ளது மக்கள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் சினிமா பிரபலங்களை தலையில் வைத்து அதை மறைப்பது..
மக்கள் விரோத திட்டத்தை பேசாமல் ஒரு சுக்குக்கும் பெறாத விஷயங்களை பரப்புவது..
முக்கியமாக சாதி, மத, இன பிரிவினையை உருவாக்குவது. அல்லது ஆபாசம் தொடர்பான நிகழ்வுகளை அதிகம் பரப்புவது.
இவை எல்லாம் மக்கள் இன்னலுக்கு ஆளாகும் நேரத்தில் தான் செய்வார்கள். (தமிழ்நாட்டில் நடந்து கொண்டே தான் இருக்கிறது நுட்பமாக கவனிக்க).
௫) ஊடகங்களில் உள்ள நண்பர்களிடம் கேட்டால் சில திடுக்கிடும் உண்மைகளை சொல்வார்கள்.
எந்த செய்தியை போட வேண்டும் எதை நீக்க வேண்டும் என மிக பெரிய கட்ட பஞ்சாயத்து உள்ளே நடக்கும்.
சில இரகசியங்களை சொல்ல முற்பட்டு தன் உயிரை மாய்த்த உண்மையானவர்களும், உயிருக்கு பயந்து சிலரும் உள்ளனர் ஆனால் வெகு சிலரே..
ஊடகங்கள் நம்மை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உள்ளேயே சிந்திக்க வைக்கும் அதன் மூலம் மூளையை மழுங்க செய்வது, திசை திருப்புதல் இது தான் அவர்களுக்கு கொடுத்த வேலை...
விழித்தெழு தமிழா...
குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது...
தட்டுத்தடங்கல்களோடு சரளமாக பேச முடியாத குறைதான் திக்குவாயாகும். திக்குவாய் உடல்ரீதியான பிரச்சனை இல்லை. வாயும் தொண்டையும் நன்றாக இருக்கும் போதே பலருக்கு திக்குவாய் ஏற்பட்டிருக்கிறது. திக்கித்திக்கி பேசுவது மனரீதியான பிரச்சனையின் காரணமாகத்தான். திக்குவாயர்கள் பேசும்போது திக்கித்திக்கி பேசுவார்கள். ஆனால் பாட்டு பாடச் சொன்னால் திக்காமல் தெளிவாக பாடி முடித்து விடுவார்கள். பேசும் போது தானாக யோசித்து பேச வேண்டியுள்ளது.
எனவே எங்கே நாம் தவறாக பேசி விடுவோமோ, பிறர் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் பேச்சு சரளமாக வருவதில்லை. ஆனால் பாட்டு யாரோ பாடியது. எனவே அதைப் பாடும் போது எவ்வித மன பயமும் இன்றி தெளிவாக திக்காமல் பாடி விடுகிறார்கள். இதிலிருந்தே திக்குவாய் மனம் தொடர்பான நோய் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளை அடக்கி அடக்கி வளர்த்தல் திக்குவாய் ஏற்பட முதல் காரணம் ஆகும். ‘அதைச் சொல்லாதே, இதைச் சொல்லாதே, சத்தம் போடாதே’ என்று எப்போதும் குழந்தைகளை மிரட்டிக்கொண்டே இருப்பது குழந்தைகளின் ஆழ்மனதில் கட்டுப்பாட்டை உண்டாக்கி இயல்பாக தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த இயலாத நிலைக்கு அவர்களை இட்டுச் செல்கிறது.
ஒருவர் தன் சகோதரரை எதிர்த்து பேசாதே என்று சாட்டையை கையில் வைத்துக் கொண்டு மிரடிக் கொண்டே இருந்தார். அப்பையன் வளர வளர திக்குவாய் தோண்றி பெரியவனானதும் நல்ல திக்குவாயனாக மாறிவிட்டான். சிறு வயதில் மிரட்டிக் கொண்டே இருந்ததே இதற்கு காரணம்.
பழக்கத்தின் காரணமாகவும் குழந்தை பருவத்தில் திக்குவாய் உருவாகி பின் வாழ்க்கை முழுவதும் தொடரலாம்.
வீட்டில் தாத்தா, பாட்டி அப்பா அம்மா என யாராவது ஒருவருக்கு திக்குவாய் பழக்கம் இருந்தால் அவ்வீட்டில் வளரும் குழந்தை அவர்கள் பேசுவதை கூர்ந்து கவணித்து தானும் திக்கித்திக்கி பேச கற்றுக் கொண்டு விடும். ஒருவர் சிறுவயதில் தன் நண்பனுக்கு திக்குவாய் இருந்ததால் அவனை கேலி செய்யும் விதமாக திக்கி திக்கி பேசி கிண்டலடித்தார். பின்னர் அதுவே இவருக்கும் பழக்கமாகிப் போய்விட வயதாகிய காலத்தில் இன்னமும் திக்கி திக்கி பேசிக் கொண்டிருக்கிறார்.
மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை சமூக சூழலில் ஒருவரை திக்கிப் பேச காரணமாக அமையலாம். கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் வகுப்பில் எழுந்து நின்று பிறர் முன்னிலையில் பேசும் போது மட்டும் திக்கிப் பேசுவார்.
ஆனால் வகுப்பிற்கு வெளியே தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு திக்குவாய் இருக்காது. இயல்பாக பேசுவார் பிறர் முன்னிலையில் பேசும் போது தவறாக பேசி விடுவோமோ என்ற தாழ்வு மனப்பான்மையே திக்கிப் பேசுவதற்கு காரணம்.
திக்குவாய் குணமாகக் கூடிய ஓர் உளவியல் பிரச்சனை..
குழந்தைகளுக்கு திக்குவாய் உள்ளது என்பதை கண்டறிந்து கொண்டால் உடனே உளவியல் மருத்துவரை அணுக வேண்டும். அத்தகைய குழந்தைகளுக்கு பேச்சு தொடர்பான உடல் உறுப்புகளில் எவ்வித குறையும் இல்லை எனச் சோதித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்குப் பின்னர் குழந்தைகள் திக்கிப் பேசினால் உடனே அதை திருத்தி நன்றாக பேச செய்ய வேண்டும். அதட்டிப் பேசாமல் அன்புடன் இதைச் செய்வது நன்று. அத்தகைய குழந்தைகளை பெற்றோர் தம் முன்னிலையில் பிறரிடம் பேச வைக்க வேண்டும்.
அதிகமான அளவுக்கு வெளியிடங்களுக்கு அழைத்து சென்று பிறரிடம் பயமின்றி உடையாட பெற்றோர் உதவ வேண்டும். திக்குவாய் குறையை குழந்தை முன்னிலையிலேயே அனைவரிடமும் சொல்லி கவலைப்படுவதை தவிர்ப்பது நன்று.
மேலும் குழந்தை திக்காமல் நன்றாக பேசும் சமயங்களில் குழந்தையை முதுகில் தட்டிக் கொடுப்பது, தலையை தடவுவது போன்ற செயல்களின் மூலம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
நன்கு வளர்ந்த பெரியவர்களுக்கு திக்குவாய் இருப்பின் அவர்களும் இக்குறையை போக்கிக் கொண்டு நன்றாக பேச முடியும். இவர்கள் முதலில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வித மனப்பதட்டமும் இல்லாத நிலையில் என்னால் பிறர் முன்னிலையில் திக்காமல் தெளிவாக பேச முடியும் என்று தனக்குத்தானே சுய கருத்தேற்றம் செய்து கொள்ள வேண்டும். தினமும் ஏதாவது ஒரு புத்தகத்தில் ஐந்து பக்கங்களை மிக மிக மெதுவாக ஒரு ஸ்டூலின் மீது ஏறி நின்று காலையிலும் மாலையிலும் படித்து வர வேண்டும்.
இவ்வாறு படிக்கும் முறைக்கு நீட்டிப் படித்தல் என்று பெயர். ஸ்டூலின் மீது ஏறி நின்று படிக்கும் போது முன்னால் நிறைய பேர் அமர்ந்திருப்பதாக கற்பனை செய்து கொண்டு படிக்க வேண்டும்.
திக்குவாய் உள்ளவர்கள் மேற்கண்ட பயிற்சிகளோடு ‘எனக்கு உள்ள திக்குவாய் பிரச்சனையிலிருந்து நான் வெளிவந்தே தீருவேன்’ என்று மனதினுள் பெருங்கோபம் கொள்ள வேண்டும். அவ்வுறுதியினை வலிமையாக்கும் விதமாக நீண்ட தூரம் நடைப் பயிற்சி செய்தல், நீண்ட நேரம் நீந்துதல், நீண்ட நேரம் கயிறு தாண்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம்.
மேற்கண்ட பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் திக்குவாய் பிரச்சனையை விரைவில் தீர்த்துவிடலாம். தற்காலத்தில் உளவியல் வல்லுநர்கள் மேற்கண்ட பயிற்சிகளை அளிப்பதன் மூலம் ஆறே நாட்களில் திக்குவாயை குணமாக்குகிறார்கள். உங்களுக்கு திக்குவாய் இருந்தால் நீங்களும் முயன்று முன்னேறலாமே...
கர்மா...
ஒருவன் பிறக்கும் போதே பணக்காரனாகவும் ஏழையாகவும் ஆரோக்கியமாகவும் நோய்வாய்பட்டும் பிறக்க காரணம் என்ன என்பதை ஆராய்ந்ததில் எனக்கு கிடைத்த பதில் ஒன்றே ஒன்று தான்.
அது தான் கர்மா...
கர்மா என்பது நாம் எடுத்த முதல் பிறவியில் இருந்து நம் சித்தத்தில் பதிந்த விடயங்கள் ஆகும்.
இயற்கைத் தான் சேர்த்து வைத்துள்ள மொத்த அறிவையும் பயன்படுத்தி மிக மிக எளிய வழியில் சம்பவங்களை நிகழ்த்துகிறது.
உதாரணமாக இன்று ஒருவனுக்கு விபத்து நேர வேண்டும் எனில் அந்த சூழலை முன்னமே அறிந்த இயற்கை திடீரென அவன் மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கும்.
எப்படி எனில் வேறு வேலைகளில் அவன் ஈடுபட்டிருந்தாலும் திடீரென வண்டியில் அங்கே சென்று அந்த வேலையை முடித்து வருவோம் என தோன்றும்.
உடனே இவனும் கிளம்பி போய் வாகனத்தில் அரைபட்டு மால்வான்.
இவனுக்காக அந்த சூழல் உருவாக்கப் படாவிட்டாலும் இவனை அதனுடன் எளிமையான சிந்தனையில் மூலம் தொடர்புபடுத்தி விடுகிறது.
நம் மனம் இரண்டு விதமாக இயங்குகிறது..
ஒன்று நாமாக மனதினை இயக்கி செயல்படுத்துவது. இது சங்கற்பம் எனப்படும்.
மற்றொன்று தாமாக இயங்கும் மனதை கண்கானிப்பது. இது விகற்பம் எனப்படும்.
இதில் இரண்டாவது வகையான விகற்பத்தின் ஊடே தான் நம் கர்மா செயற்படுகிறது.
இதனை நிறைவேற்றுவது கிரகங்கள், தெய்வங்கள், ஆவிகள் மற்றும் பிறரின் வலுவான எண்ணங்கள் ஆகும்.
திடீரென உதிக்கும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் கர்மாவால் அலைக்கழிக்கப் படுகிறான்.
மனம் செயல்படாத ஒருவனை கர்மாவால் எதுவும் செய்ய இயலாது.
உதாரணம் கோமா நிலையில் இருப்பவன்.
அதே போல் மனதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனையும. கர்மா தீண்டாது.
உனக்கு நடக்கும் ஒவ்வொரு செயலும் உன் மன எண்ணங்கள் மூலமே நடக்கிறது. எந்த ஒரு செயலும் முதலில் மனதில் தான் நடக்கிறது. பிறகு தான் ஸ்தூல உலகில் அது செயல்படும்...
நான் கூற வருவதை அனைவரும் புரிந்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்...
நம் உரிமைக்காக நம் ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராடுகிறோம் அல்லவா, அதுதான் தமிழ் தேசிய அரசியலின் தொடக்கம்..
ஒரே நோக்கத்தில் தமிழ் தேசிய நாம் பேசும் வரை அவர்கள் நம்மை பலவிதமாக பிரித்துக் கொண்டே இருப்பார்கள்...
நாம் என்றைக்கு களத்தில் இறங்கினோமோ, அன்றைக்கு தமிழ் தேசிய அரசியலின் விதை விதைக்கப்பட்டு விட்டது..
ஏனெனில் நாம் போராடிய எந்த போராட்டத்திற்கும் திராவிடமும் வரவில்லை, மற்ற எந்த கட்சிகளும் வரவில்லை...
தமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்...
தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.
தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம்.
திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் மொழியாகும்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர். குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது.
ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு.
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா.
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா.
4. தொலை கிழக்கில் – சீன நாடு.
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்.
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர் இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன்.
அவன் கையாண்ட நாகரிகம் தான் தமிழ் நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது.
இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பினர் என்பதே உண்மை.
இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.
குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே...
குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே.
அம்மொழியும் தமிழ் மொழியே.
கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன.
பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல.
நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.
நான்கு பெருங் கடல் கோள்கள்...
1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது.
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது.
3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது.
4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.
சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது. தொல்காப்பியம் பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம்.
தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும்.
தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன.
ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.
மூன்று தமிழ்...
தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்...
1. பழந்தமிழ்.
2. இடைக்காலத்தமிழ்.
3. தற்காலத்தமிழ்.
1. பழந்தமிழ் (Ancient Tamil) உட்பிரிவுகள் மூன்று.
அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ் Early ancient Tamil (or) Proto Ancient Tamil.
ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil.
இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil.
2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil) உட்பிரிவுகள் மூன்று...
அ. முன் இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil.
ஆ. மத்திய இடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil.
இ. பின் இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil.
3. தற்காலத் தமிழ் (Mode Tamil) உட்பிரிவுகள் மூன்று...
அ. முன் தற்காலத் தமிழ் – Early Mode Tamil.
ஆ. மத்திய தற்காலத் தமிழ் – Medium Mode Tamil.
இ. பின் தற்காலத் தமிழ் – Later Mode Tamil.
தொல்பழங்காலத்தில் தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள்.
தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது.
பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தீவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.
தமிழினம் மற்றும் மொழிச் சிதைவு உலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது.
அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன.
அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது.
உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது. வரலாற்றுச் சான்றுகள் வரலாறு பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று.
மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் இப்படிப் பல மொழிச் செய்திகளை நமக்குத் தருவது மொழி வரலாறு.
ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப் பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும்.
தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள் மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக் கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல் பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர்.
ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள் ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே..
இத்தோடு ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள், மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர்.
மொழிகள் தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது...
தமிழைப் பழித்த கன்னட ஈ.வெ.ரா...
யாராவது தேசியம் நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்று எதைச் சொன்னாலும் அதற்கு எதிராக பேசி அவர்களை கடுப்படிப்பது என்பது மட்டுமே ஒருவரது வேலையாக இருந்தது என்றால் அது மிகையாகாது.
யார் எதைச் சொன்னாலும் அதற்கு எதிராகவும் குதர்க்கமாகவும் பேசி அவர்கள் மனம் கோனுவதை பார்த்து ரசிப்பது ஒரு வித சைக்கோ பழக்கம்.
அத்தகைய பழக்கம் கொண்ட ஒருவர், தமிழகத்தில் தமிழை வளர்க்க வேண்டும் என பலரும் சொல்லும் போது இல்லை தமிழை விட்டொழியுங்கள், ஆங்கிலத்தை வீட்டு மொழி ஆக்குங்கள் என்று ஏறுக்கு மாறாக முழங்கி தாய்மொழியாம் தமிழை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தரம் தாழ்த்திப் பேசி தமிழர்களை கடுப்பேற்றி அதனால் மிகுந்த சந்தோஷம் கொண்டார். அத்தகைய குரூர குணம் கொண்டவர் யார் என்று கேட்கத் தோன்றுகிறதா?
அட, வேறுயாராக இருக்கமுடியும் – கன்னட ஈ.வெ ராமசாமி நாயக்கரைத் தவிர.
தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, அதை பேசும் தமிழனுமொரு காட்டுமிரான்டி என்று அவர் சொன்னதாகச் சொல்லுவார்கள். சரி தமிழை தரம் தாழ்த்தி அவர் வேறென்ன சொன்னார் என்பதையும் கொஞ்சம் பார்ப்போம்.
தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் போன்றது தமிழ், எனினும் அந்த தாய்ப்பாலில் சக்தியும் சத்தும் இல்லை. தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு நோயாளியாகவும் இருக்கும் போது அந்தப்பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக இருக்குமா?
தாய்ப்பாலை அதாவது தமிழை எதற்காக படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்கு பயன்படுகிறது?
உலக ஞானத்தில் முற்போக்கு தன்மையில் தமிழுக்கு எந்த சிறப்பும் இல்லை.
தமிழனுக்கு தெளிவான நேரான சரித்திரம் எதுவும் இல்லை.
மனித வாழ்வுக்கு மொழி முக்கியம் என்றால் உலகில் மற்ற நாடுகளைக் காணும் போது தமிழ்நாட்டுக்கு தமிழ் மொழி என்ன பயனை அளித்திருக்கிறது?
ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துக்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் வந்தால் நான் பெரிதும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன்..
மேற்கண்ட கூற்றுக்கள் யாவும் ஈவெரா வின் அறிக்கை மற்றும் கட்டுரைகளில் காணக்கிடைக்கின்றன. ம பொ சிவஞானம் அவர்கள் அக்காலத்தில் ஈவெராவின் இது போன்ற தமிழுக்கெதிரான மற்றும் ஆங்கில ஆதரவுக் கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்பதை "தாய்ப்பால் பைத்தியம் - ஈ வே ரா கண்டு பிடிப்பும் ம பொ சி மறுப்பும்" என்கிற சிறிய நூலில் பா. குறிஞ்சிக்குமரன் தொகுத்தளித்திருக்கிறார்.
தமிழ், தமிழன் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் முற்போக்கு வியாதிகளும் ஈவெரா அடிபொடிகளும் தமிழுக்கெதிராகவும் தமிழை அவமதித்தும் ஈவேரா பேசியதை மறைத்தே வருகின்றன.
தமிழின் அருமை என்னவென்று கொஞ்சமும் தெரியாத கன்னடரான ஈவேரா தமிழ் மொழியில் சத்தில்லை அதனால் தமிழ் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை என்றெல்லாம் தன்னால் ஆனவரை தமிழை உமிழ்ந்திருக்கிறார். ஆனால் சூடு சுரனை இல்லாத இன்றைய முற்போக்கு சிந்தனை பேசும் டமில் ஒணர்வாளர் கூட்டங்கள் ராமசாமி நாயக்கரையே தங்களது ஆதர்ஷ புருஷராக கொண்டாடி வருகின்றனர். ஆனால் அழிவின் விளிம்பில் இருந்த தமிழை அச்சு இயந்திரத்தில் ஏற்றி காப்பாற்றிய உவே சுவாமிநாத ஐயரை புறம் தள்ளுகின்றனர்.
இப்படி யாரை ஆதரிக்கிறோம் என்று விவஸ்தை இல்லாமல் உணர்ச்சி வசப்பட்ட கூட்டமாய் ஈவேராவை தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை தெரிந்தேதான் தமிழ் காட்டுமிரான்டி மொழி என்றும் தமிழனை காடுமிரான்டி என்றும் ஈவேரா சான்றிதழ் கொடுத்திருப்பார் போல.
நாம் காட்டுமிரான்டியாக கன்னட ஈவேராவை போற்றி தமிழை வெறுக்க வேண்டுமா அல்லது சிந்திக்க தெரிந்த மனிதர்களாக உ வே சாமிநாத ஐயரைப் போற்றித் தமிழை வளர்க்க வேண்டுமா?
சிந்தியுங்கள் தமிழர்களே..
சிந்திக்கும் திறனிருந்தால்?
Subscribe to:
Posts (Atom)