11/09/2021
எருக்கம் பூ, செடி மருத்துவ குணங்கள்...
எருக்குச் செடி பல இடங்களில் வளருவதைப் பார்க்கிறேம். இதன் மருத்துவ குணங்கள்..
எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும்.
செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 4-5 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்…..
இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுக்க, ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்துவிடும்….
இலையை வாட்டி வதக்கிப் பிழிந்தெடுத்த சாறு, மூக்கினுள் 4- 6 சொட்டுகள் விட, உள்ளே அடைபட்டிருக்கும் கெட்டியான சளி கரைந்துவிடும். இதைக் காலையிலும், மாலையிலும் அளவுமிகாமல் கவனத்துடன் விட, தும்மலை ஏற்படுத்தி, மூக்கடைப்பை நீக்கிவிடும்.
பழுத்த இலைகளின் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் கலந்து, வெதுவெதுப்பாக காதினுள் விட்டுவர காதுவலி, செவிடு போன்ற காது சம்பந்தப்பட்டப் பிரச்னைகள் விரைவில் குணமாக வாய்ப்பிருக்கிறது.
இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.
காய்ந்த இலைகளைப் பொடித்து, புண்கள் மீது தூவ, அவை விரைவில் ஆறிவிடும்.
இலைச்சாறு மஞ்சள் தூளுடன் கலந்து கடுகெண்ணெய்யில் வேக வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர, விரைவில் குணமாகும்.
இலைகளையும், பூக்களையும் ஒன்றாக வேக வைத்த தண்ணீரை GUINEA WORMA எனும் புழுக்களை ஒழிக்க, அது பாதித்துள்ள கை, கால் பகுதிகளை முக்கி வைக்கலாம்..
எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு வெந்தெடுத்த தண்ணீரில் சிட்டிகை கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும்.
பூ நல்ல ஒரு ஜீரணகாரி. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது.
எருக்கம் வேர்த் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச் சாப்பிட, உடல் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும். வேர்த்தோலை அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோயில் பற்றிடலாம்..
தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாலைத் தடவி வர உடனே குறையும். பாம்புக் கடியிலும் இதைப் போலவே பயன்படுத்தலாம்.
மஞ்சள் தூளுடன் எருக்கம்பாலைக் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள், நிறமாற்றம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி வருவது நல்லது...
ரத்த அழுத்தம் குறைக்கும் கொடம் புளி...
மலபார் புளி என்ற பெயரும் கொடம் புளிக்கு உண்டு. கொடம் புளியைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
கொடம் புளி, கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கும். தென் தமிழகத்தில், மீன் குழம்பு செய்யும்போது, அதில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க, கொடம் புளியைத்தான் பயன்படுத்துவார்கள்.
கொடம் புளி சுவை மிகுந்தது. ஆனால், சமையலில் அளவாகவே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், உடலில் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும்.
கொடம் புளியைச் சீராகச் சமையலில் சேர்த்து வந்தால், அழற்சிப் பிரச்னைகள் நீங்கும், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
கொடம்புளியை ஒரு கப் தண்ணீர் சேர்த்து, மூன்று மணி நேரம் ஊறவைத்த பின்னர், விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன், வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள், சீரகத் தூள், கறுப்பு உப்பு சேர்த்து, சர்பத் போல அருந்தலாம்...
தேக்கு இலையின் மகத்துவங்கள்...
வாழை இலையைப்போலவே தேக்கு இலைகளில் நாம் உணவருந்தலாம்.
ஏனெனில் அந்த இலையானது, 30 முதல் 60 CM நீளம் மற்றும் 15 முதல் 30 CM அகலம் கொண்டது.
தேக்கு மரத்தின் இலை, பூ, காய், மரபட்டை இவை அனைத்தும் மருந்துக்காக பயன்படக் கூடியதாகும்.
மருத்துவ பயன்கள்...
தேக்கு மரத்தின் இலைகளால் செய்யப்பட்ட தேநீரை குடிப்பதன் மூலம் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உண்டாகிறது.
இதில் காணப்படும் துவர்ப்பு சுவை ரத்தத்தை உறைய வைக்குத் தன்மை கொண்டதாக விளங்குகிறது.
மூக்கில் வடியும் ரத்தம், மூலத்தில் ஏற்படும் ரத்த கசிவை கட்டுப்படுத்துவதற்கும் இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
தேக்கு மரத்தின் விதைகளை கொண்டு ஒரு சிறப்பான கூந்தல் தைலத்தை உருவாக்கலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் - தேக்கு மரத்தின் காய்ந்த காய்களை எடுத்து கொள்ள வேண்டும்.
அவற்றை நசுக்கி அதில் இருக்கும் விதைகளை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
முடிந்தால் இந்த விதைகளை உடைத்தோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம்.
பின்னர் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் ஒரு 10 அல்லது 15 விதைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும்.
விதையின் நிறம் இந்த எண்ணெய்யுடன் சேர்ந்து ஒரு இளஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும்.
இதை பயன்படுத்துவதன் மூலம் தலையில் ஏற்படும் பொடுகு கட்டுப்படுத்துகிறது.
இந்த விதையை அன்றாடம் பயன்படுத்தும் போது முற்றிலுமாக பொடுகு, பேன் ஆகியவற்றின் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறலாம்.
மேலும் முடி கொட்டுதல், இள நரை போன்ற பிரச்னைகளுக்கும் இந்த தைலம் மிகச் சிறந்த ஒன்றாக வேலை செய்கிறது.
நுண் கிருமிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இதன் விதைகள் பயன்படுகிறது.
சிறுநீரகப்பிரச்சனை, மார்புச்சளி, கல்லீரல் பிரச்சனை போன்றவற்றிற்கு தீர்வு தருகிறது.
ரத்த போக்கை கட்டுப்படுத்த மருந்து..
தேக்கு மரத்தின் இலையை பயன்படுத்தி ரத்த போக்கை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு மருந்தை நாம் தயார் செய்யலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் தேக்கு மரத்தின் துளிர் இலைகள், பட்டைகள், பனங்கற்கண்டு, காய்ச்சிய பால்.
தேக்கு மரத்தின் துளிர் இலைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி 4 அல்லது 5 இலைகள் சேர்க்க வேண்டும்.
சிறிதளவு தேக்கு மர பட்டைகளை சிறியதாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இலைகள் நன்றாக வேகும் வரை இந்த கலவையை கொதிக்க விட வேண்டும்.
இந்த தேநீரை எடுத்து காய்ச்சிய பாலை சேர்த்து கொள்ள வேண்டும்.
இதை பருகி வருவதன் மூலம் ரத்த போக்கு கட்டுப்படுத்துகிறது...
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு...
பிஸ்தாவின் மருத்துவ பலன்கள்...
நட்ஸ்களில் மிக முக்கியமான ஒன்று பிஸ்தா, இதில் 30 வகையான வைட்டமின்கள், நார்ச்சத்துகள், நல்ல கொழுப்பு போன்ற ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன.
மத்திய கிழக்கு பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட பிஸ்தா மரம், உலகின் மிக பழமையான பருப்பு வகை மரங்களுள் ஒன்றாகும்.
ஏனெனில் இதில் காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், செலினியம், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்கள் உள்ளன.
அதுமட்டுமின்றி இதில் கார்போஹைட்ரேட், புரோட்டீன்கள், கொழுப்புக்கள், நார்ச்சத்துக்கள், பீட்டா-கரோட்டீன், கால்சியம், வைட்டமின் கே, வைட்டமின் ஏ மற்றும் நியாசின் போன்றவை உள்ளதால் இதனை தினமும் சிறிது உட்கொண்டு வருவது உடலுக்கு நன்மையை தரக்கூடியது.
தினமும் பிஸ்தா சாபிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிற புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் அறிவித்துள்ளது.
வெள்ளை ரொட்டியுடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும். மேலும், பசியை தூண்டி விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள்.
ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும் என்கிறது ஒரு ஆய்வு.
இதிலுள்ள வைட்டமின் பி6 இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது.
அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது.
பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் கண்களில் உள்ள திசுக்களுக்கு பாதுகாப்பு வழங்கி கண்களை பாதுகாக்கிறது...