தமிழர்கள் இசுலாமியர் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்கும் கூட்டம்.
தமிழர்கள் கிறித்துவர் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்கும் கூட்டம்.
தமிழர் இன்னும் பல மதங்களுக்கு மாற்றப்பட்டதை ஏற்கும் கூட்டம்.
தமிழர் இந்துவாக்கப்பட்டதை ஏற்க மறுக்கிறது.
காரணம் அதில் இருக்கும் வழிபாட்டு/பண்பாட்டு முறைகள்.
ஒன்றை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் மதங்களில் இனங்களில் மொழிகளில் எல்லாவற்றிலும் தமிழ்/தமிழர் தாக்கம் இருக்கும்.
காரணம் தமிழ் தான் முதன் மொழி தமிழர் தான் மூத்த மாந்த இனம்.
இசுலாம் கிறித்து இன்னும் பிற மதங்கள் வேறு நிலப்பரப்பில் இருந்து தமிழர் நிலப்பரப்பினுள் நுழைந்து தமிழரை மதமாற்றம் செய்தது.
ஆனால் இந்து என்று இன்று அழைக்கப்படும் ஆரிய கோட்பாட்டின் கருத்தியல் மதம், தமிழர் பாரம்பரியம், பண்பாடு, மொழி, கலை போன்றவற்றை நம் நிலப்பரப்பில் இருந்து கொண்டே, அதை களவாடி (திருடி) பின் திரித்து (ஆரிய கோட்பாடை கலந்து) நம்மிடம் திணிக்கப்பட்டது.
எனவேதான் தமிழர் நாம் இயல்பாகவே தொன்றுதொட்டே நம்மை இந்துக்கள் என்று எண்ணி ஏமாந்து வாழ்கிறோம்.
இதையெல்லாம் அறிந்து தெளிந்து எடுத்துரைத்தால், தமிழர்களே அதற்கு எதிராக நிற்பது, 1800 ஆண்டுக்கும் மேல் அடிமைபட்டு, அடிமைக்கும் அடிமையாகிப் போன நிலை தந்த அறியாமையே.
என் பாட்டன் சொன்னார் என் அப்பன் சொன்னார் என்று நான் மாற மாட்டேன் நான் இப்படித்தான் வாழ்வேன் என்னும் சில வாதங்கள் வேதனைக்குரிய ஒன்று.
நம் பாட்டனும் அப்பனும் அறியாத வரலாற்றை நாம் மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து தெளி என் தமிழினமே.
தொன்றுதொட்டு வந்ததை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று மடமையில் விழுந்து உன் இனம் அழிய நீயே வழிகாட்டாதே.
மலேசிய வரலாறுபடி 200 ஆண்டுக்கு முன் அடிமையாய் இந்த நாட்டுக்கு வந்தோம் என்கிறான். எனவே நான் அடிமையாய் வந்தேன் அடிமையாய் தான் இருப்பேன் என்றால் அது சரியா?
200 ஆண்டுதானா உன் வரலாறு?
உன் பாண்டிய சேர சோழன் காலத்தில் நீ உலகை ஆண்டவனா அடிமையா?
2000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த வள்ளுவன்.
6000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த காப்பியன்.
இவர்கள் தமிழரா இந்துவா?
இதற்கு பதிலுண்டா உன்னிடம்..
புரிந்துகொள், நீ 50,000 ஆண்டுக்கும் மூத்த நீண்ட நெடிய வரலாறு கொண்ட மாபெரும் தமிழர் எனும் தேசிய இனம்.
இனியும் நீ எழாவிட்டால்..
எழு.. மதத்தை தூரப்போடு
குலத்தில் ஏற்றதாழ்வை தூக்கிப்போடு..
இனம் மீள விடுதலை வெல்ல..
உன் களப் பணியை
செய்.... அல்லது செத்துமடி..
தமிழர் வெல்வது உறுதி...