திருநெல்வேலி : நெல்லை அருகே 9ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த கிறிஸ்தவ மதபோதகர் டேவிட் 50, கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள கன்கார்டியா மேல்நிலை பள்ளியில் படிக்கும் ஆதரவற்ற மாணவிகள், அருகில் உள்ள கிறிஸ்தவ மிஷனரி விடுதியில் தங்கியுள்ளனர்.
அங்குள்ள 14 வயது 9ம் வகுப்பு மாணவியை, பள்ளியின் 7ம் வகுப்பு ஆசிரியர் டேவிட் தினமும் தவறாக தொட்டு பழகினார். இதுகுறித்து மாணவி, வகுப்பு ஆசிரியை, தலைமையாசிரியரிடம் புகார் செய்தார். ஆனால் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் மாணவியை அடிக்கடி சத்துணவு கூடத்திற்கு அழைத்துச்சென்று, டேவிட் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சக மாணவிகளிடம் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்தார்.
மாணவிகளின் பெற்றோர் மூலம் இத்தகவல் நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் தேவானந்திற்கு தெரியவந்தது. நேற்று தேவானந்தம் பள்ளிக்கு சென்று மாணவியிடம் நடத்திய விசாரணையில் உண்மை தெரியவந்தது.
அவரின் புகாரின் பேரில் வள்ளியூர் மகளிர் போலீசார், டேவிட்டை கைது செய்தனர்.
டேவிட், கீக்குளம் கிறிஸ்தவ ஆலயத்தில் மதபோதகராகவும் உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் கூறுகையில், இச்சம்பவம் விடுதியின் ஏரியா மானேஜராக இருக்கும் ஜெயதாஸ் என்பவருக்கும் தெரியும்.
அவரும் டேவிட்டும் ஒரே சர்ச்சில் மதபோதகர்களாக இருப்பதாலும், ஜெயதாசின் மனைவி எலிசபெத், அதே பள்ளியில் ஆசிரியையாக இருப்பதாலும் இந்த சம்பவத்தை மூடி மறைத்துள்ளனர். ஆசிரியை, தலைமையாசிரியர், விடுதி மேலாளர், அவரது மனைவி மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்...