09/11/2018

துத்திச்செடி...


துத்திச்செடியில் உள்ள பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இவை இரத்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கி நெஞ்சுக்கு இதம் தரும்..

மருத்துவக் குணங்கள்...

துத்திப்பூக்களை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ரத்தவாந்தி, ரத்தபேதி, சளியில் இரத்தம், சிறுநீரில் இரத்தம் ஆகியவற்றை குணமாக்கும். மேலும் ஆண்மையை பெருக்கும்..

ஆஸ்துமாநோய் குணமாக:

துத்திப்பூக்களை காம்பு நீக்கி நிழலில் உலர்த்தி சூரணம் தயார் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் சமஅளவு சர்க்கரை சேர்த்து அரைதேக்கரண்டி அளவு சூரணத்தை காலை, மாலை பாலில் கலந்து பருகினால் ஆஸ்துமா நோய் குணமாகும். மேலும் காசம் என்ற எலும்புருக்கி நோய் குணமாகும்..

மூலநோய் குணமாக:

ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வந்தால் மூலநோய் குணமாகும்.

ரத்தவாந்தி குணமாக:

அரைக் கைப்பிடியளவு துத்திப்பூக்களை ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அதனை இறக்கி வடிகட்டி நான்கு மணிக்கு ஒருமுறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.

இத்தகைய நன்மைகள் வாய்ந்த இந்தப்பூக்களை நாம் நம் அன்றாட உணவுடன் ‌கலந்து உண்போம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்...

பாஜக வின் தேர்தல் திருட்டுத்தனம்...


சித்தர்கள் சமாதியான இடம். அவர்கள் வாழ்ந்த நாட்கள்...


1. பதஞ்சலி சித்தர் - 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.

2. அகஸ்தியர் - 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.

3. கமலமுனி - 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.

4. திருமூலர் - 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில்சமாதியானார்.

5. குதம்பை சித்தர் - 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.

6. கோரக்கர் - 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.

7. தன்வந்திரி சித்தர் - 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.

8. சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.

9. கொங்ணர் - 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.

10. சட்டமுனி - 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.

11. வான்மீகர் - 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.

12. ராமதேவர் - 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.

13. நந்தீஸ்வரர் - 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.

14. இடைக்காடர் - 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.

15. மச்சமுனி - 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.

16. கருவூரார் - 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.

17. போகர் - 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.

18. பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்...

ஆர்டிஓ வீட்டில் ரூ.70 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்: 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி சிக்கியது: ஆந்திராவில் அதிகாரிகள் நடவடிக்கை...


வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வந்த புகாரையடுத்து, போக்குவரத்து துணை ஆய்வாளர் வீட்டிலும், வங்கி லாக்கரிலும் நடத்தப்பட்ட சோதனையில், 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி உள்ளிட்ட ரூ.70 கோடி மதிப்புள்ள பொருட்களை
ஆந்திரா ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் துணை மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வருவர் சரகடம் வெங்கட ராவ். இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் சேர்த்துள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி பி. ரணமி தேவி தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் வெங்கட ராவ் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் திடீரென ஆய்வு நடத்தினார்கள்.
மேலும், வெங்கட ராவின் வீட்டில் பணியாற்றும் டிரைவர் பி. மோகன், வெங்கட ராவின் சகோதரர் கிரண் குமார் ஆகியோர் வீடுகளிலும், வங்கி லாக்கரிலும் சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனையில் கணக்கில் வராத ஏராளமான சொத்துகள், நகைகள், ,பொருட்கள், சொத்து ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஏறக்குறைய 2 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் வெங்கட ராவ் கணக்கு வைத்துள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் இரு கிளைகளில் இருந்து 1.79 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஐடிஐ ஜங்ஷன் பிரிவில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் உள்ள லாக்கரில் இருந்து 1.30 கிலோ தங்க நகையும், 10 கிலோ வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கவுரி கூட்டுறவுவங்கியில் ரூ.75 ஆயிரம் வைப்பு நிதி, பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கி இருப்பதற்கான ஆவணங்கள், வைப்பு நிதிப் பத்திரங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. வெங்கட ராவின் டிரைவர் வீட்டில் இருந்து 3 பெட்டிகளை போலீஸார் கைப்பற்றினார்கள். வெங்கட ராவின் சகோதரர் வீட்டில் இருந்து ஏராளமான சொத்து ஆவணங்களையும், பத்திரங்களையும் கைப்பற்றியுள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர். வெங்கட ராவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ஆவணங்கள், பணம் ஆகியவற்றின் சந்தை மதிப்பு ரூ.70 கோடியைத் தொடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்...

ஒரு படத்தோட வெற்றி என்பது கோடிகளை வசூலிப்பதோ 100 நாள் ஓடுவதோ அல்ல.. எவனை எதிர்த்து எடுத்தோமோ அவன கதற விடறோம் பாரு அது தான் உண்மையான வெற்றி...


பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் அம்மாநில மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்...


கர்நாடகத்தில் பாஜக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த ஜனார்த்தன ரெட்டி ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இரும்புத்தாது சுரங்கங்களை நடத்தி வருகிறார்.

அம்பிதந்த் மார்க்கெட்டிங் என்னும் நிறுவனம் முதலீட்டாளர்களின் பலகோடி ரூபாய் பணத்தை ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

 அமலாக்கத்துறையின் நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக அம்பிதந்த் நிறுவனர் சையது அகமது பரீத், ஜனார்த்தன ரெட்டி மூலம் இருபது கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் தகவல் வெளியானது.

இதற்காக 2கோடி ரூபாய் பணம், 57கிலோ தங்கக் கட்டிகள் ஆகியவற்றை ஜனார்த்தன ரெட்டியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்துத் தகவல் அறிந்த பெங்களூர் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் ,கூடுதல் ஆணையர் மஞ்சுநாத் சவுத்ரி தலைமையில் பல்லாரியில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்...

ஆட்சியின் இறுதி கட்டத்தில் ரிசர்வ் வங்கியில் ஆட்டைய போடத்துணிந்து விட்ட பாஜக மோடி அரசு...


ரிசர்வ்  வங்கி தன் கைவசம் வைத்திருக்கும் அந்நிய செலாவணி பணமான 9 . லட்சத்து 50  ஆயிரம்  கோடி  ருபாய் பணத்தைக் கேட்டு மோடி அரசு மிரட்டிக்கொண்டு இருக்கிறது. அதை கொடுக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி சொல்லிக்கொண்டு இருக்கிறது. இத்தனைக்கும் ரிசர்வ் வங்கியின் இன்றைய கவர்னர் யாரென்று பார்த்தால் மோடி அரசால் நியமிக்கப்பட்ட குஜராத்தியான உர்ஜித்  படேல்.

மோடியால் நியமிக்கப்பட்டவர் மோடி அரசுக்கு பணம் கொடுக்க பயப்படுகிறார் என்றால் நிலைமை எந்த அளவுக்கு இருக்கிறது என்று பாருங்கள். ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த என்னை நீக்கி விட்டு அந்த இடத்தில் தனக்கு வேண்டப்பட்ட , தான் சொல்வதை எல்லாம் செய்யக்கூடிய ஊர்ஜித படேலை சென்ற வருடம் நியமித்தார்கள். இன்று அவரே மோடி அரசால் மிரட்டப்பட்டு கலக்கத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளார்..

ஆட்சி பறி போகிற தருணம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மையமான ரிசர்வ் வங்கியைத் தேட்டைப் போட துணிந்து இருக்கிறார்கள் மோடி அரசினர். மற்றவங்கிகள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டன. ரிசர்வ் வங்கி மட்டும் தான் இன்னும் கைவைக்கப்படாத இடம். அங்கும் நுழைய திட்டமிட்டுள்ளார்கள். மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்து அந்நிய செலாவணி பணத்தை எடுத்து கொடுத்து விட்டால் அவ்வளவுதான், எல்லோரு வெளிநாட்டுக்குப் பறந்து விடுவார்கள். இந்திய மக்கள் நடுத்தெருவுக்கு வந்து விடுவார்கள்.

உர்ஜித் படேல் மோடியின் மிரட்டலுக்கு பயந்து விடக்கூடாது. இல்லையேல் மக்கள் புரட்சி வெடிக்கும்.

-- முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் தமிழர் ரகுராம் ராஜன் அவர்கள்...

மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி...


ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப் படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.

வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும். முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது. இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு பயன்படுத்திக் கொண்டு சிறந்தபலன் கண்டவர்கள் ரஷியர்கள்.

ஆழ்மன சக்திகள் குறித்து முதல் முதலில் அதிகமாக ஆராய்ந்த நாடுகளில் முதலிடம் வகித்தது ரஷியா என்றே சொல்லலாம். வாசிலிவ் என்ற ஆழ்மன ஆராய்ச்சியாளர் செய்கையால் கவரப்பட்டு ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின் லெனின்கிராடு பல்கலைகழகத்தில் ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி அளித்தது பற்றி முன்பு கூறியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அங்கு நடந்த ஆராய்ச்சிகளில் ஸ்டாலினும், பிந்தைய ஆட்சியாளர்களும் ஆர்வம் காட்டினார்கள்.

1976ல் மாண்ட்ரீல் நகரில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் மிக அதிகமான கோப்பைகளைத் தட்டிச் சென்ற கிழக்கு ஜெர்மானிய வீரர்கள் ஆழ்மனப் பயிற்சிகளில் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அதைப் படித்தவுடனேயே 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாரான ரஷியா தங்கள் நாட்டிலேயே நடக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் மிகச் சிறப்பாக சோபிக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளுக்கு அந்தப் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தது. அந்தப் பயிற்சிகளையே ஆராய்ச்சிகளாகவும் மாற்ற எண்ணிய ரஷியர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் விளையாட்டு வீரர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர்.

’ஏ’ பிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நூறு சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ’பி’ பிரிவில் 75 சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் 25 சதவீதம் மன ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ‘சி’ பிரிவில் உடல்ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும், மனரீதியான பயிற்சிகளும் 50, 50 சதவீதமாக அளிக்கப்பட்டது. கடைசியாக ‘டி’ பிரிவில் உடல் ரீதியான பயிற்சிகள் 25 சதவீதமும், மனரீதியான பயிற்சிகள் 75 சதவீதமும் அளிக்கப்பட்டது. கடைசியாக 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்த போது கணக்கிட்டதில் அந்த விளையாட்டு வீரர்களில் மிக அதிகமான வெற்றிக் கோப்பைகளைப் பெற்றது ‘டி’ பிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதை ரஷிய ஆராய்ச்சி தெரிவித்தது. அதாவது 25 சதவீத உடல் ரீதியான பயிற்சிகளும், 75 சதவீத மனரீதியான பயிற்சிகளும் பெற்றவர்கள் தான் அதிகக் கோப்பைகள் பெற்றவர்கள். மற்ற பிரிவினர்களிலும் மனரீதியான பயிற்சிகள் பெற்ற அதிக விகிதத்தின் படியே அதிகக் கோப்பைகள் பெற்றிருந்தார்கள்.

மன ரீதியான பயிற்சிகளில் பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தியது மனக்கண்ணில் வெற்றியைக் காட்சியாகக் காணும் பயிற்சியைத் தான். இது விளையாட்டு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு மேலை நாடுகளில் சர்வ தேசப் போட்டிகளில் பங்கு பெறும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்க விளையாட்டு மனோதத்துவ நிபுணர் (sports psychologist) தனியாக நியமிக்கும் வழக்கம் ஆரம்பித்தது. 1970 களில் மொத்த விளையாட்டுகளுக்கும் சேர்த்து ஓரிரண்டு விளையாட்டு மனோதத்துவ நிபுணர்களை மட்டும் வைத்திருந்த மேலை நாடுகளில் பல இப்போது ஒவ்வொரு விளையாட்டின் குழுவிற்கும் தனித்தனியாக விளையாட்டு மனோதத்துவ நிபுணரை நியமிக்கின்றன.

டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி, கால்ஃப் வீரரான ஜேக் நிக்ளாஸ், கால் பந்தாட்ட வீரர் பீலே போன்றவர்கள் தங்கள் துறையில் சிகரத்தை எட்டி வரலாறு படைத்தவர்கள். அவர்களும், அவர்களைப் போன்ற பல வெற்றி வீரர்களும் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்பவர்களாகத் தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள். அது அவர்களுடைய விளையாட்டுப் பயிற்சியுடன் சேர்ந்த ஒரு அங்கமாகவே பிரதான இடம் வகிக்கிறது.

கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார். ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார். (கிட்டத்தட்ட இதையே 53வது அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.)

அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார். அப்படி உருவகப்படுத்தும் பயிற்சியின் போது ஆட்டத்தின் முழு சூழ்நிலையையும் கொண்டு வர வேண்டும் என்கிறார். ஆட்ட மைதானத்தின் சத்தம், கைதட்டல்கள், தட்பவெப்ப நிலை என்று முடிந்த அளவு எல்லா சின்னச் சின்ன விஷயங்களையும் அந்தக் காட்சியில் தெளிவாகக் கொண்டு வர வேண்டும் என்கிறார். இப்படி மனத்திரையில் தொடர்ந்து காட்சியைக் கண்டு ஆழ்மனதில் ஆழமாகப் பதித்தால் நிஜமான விளையாட்டின் போது ஆழ்மனம் அந்தப் பதிவை படபடப்பில்லாமல் நிஜமாக்கிக் காட்டும். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல எல்லா இலட்சியங்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்தி வரும் என்கிறார்கள் ஆழ்மனப் பயிற்சியாளர்கள்.

ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால் நெப்போலியனைச் சொல்லலாம்.

ஒரு சாதாரணக் குடிமகனாய் பிறந்து வறுமையில் வாடி வளர்ந்த நெப்போலியன் இளமையில் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் அமர்ந்து பகற்கனவு காணுவது வழக்கம். மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் அவன் மட்டும் அங்கு அமர்ந்து சக்கரவர்த்தியாகத் தன்னை பாவித்து போர்களை வெல்வது போலவும் நாடுகளை ஆக்கிரமிப்பது போலவும் கற்பனை செய்வது வழக்கம். திரண்டு வரும் அலைகளைத் தன் எதிரிகளாகவும், எதிரிகள் தன்னருகே வந்து தோற்றுப் பின் வாங்குவது போலவும் கற்பனை செய்து கொள்வானாம். அவன் ஆழ்மனதில் பதித்த அந்த கற்பனைகள் பிறகு வரலாறாகியது என்பதை எல்லோரும் அறிவோம். நெப்போலியன் அமர்ந்து கற்பனைக் கனவு கண்ட அந்த பாறைப் பிளவு இன்றும் “நெப்போலியனின் அழகுமிகு செயற்கைக் குகை (Napoleon’s Grotto)” என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

இன்னொரு வியப்பூட்டும் சம்பவத்தையும் மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்திக்கு உதாரணமாய் சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் மனோசக்தி பற்றிய சில அசாதாரண நிகழ்வுகளைக் காண்பித்தார்கள். அதில் ஒரு நிகழ்வு கான்சரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுடையது. கான்சர் முற்றிய கட்டத்தில் இருப்பதால் அவன் ஆறு மாதங்களுக்கு மேல் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அவனை ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பி அழைத்து வருகையில் அந்த சிறுவன் தாயிடம் தன் உடலுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தாய் அவனிடம் அந்த நோய் பற்றி விளக்கப் போகாமல் “உன் உடலில் நோய்க்கிருமிகள் நிறைய உள்ளன. அதனால் தான் உனக்கு அசுகம்” என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாள்.

ஆறுமாதங்கள் கழித்து சிறுவன் இறந்து போவதற்குப் பதிலாக ஆரோக்கியமாய் இருக்க தாய் மறுபடி அவனை அந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள். அவனைப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டருக்கு பேராச்சரியம். அவன் உடலில் கான்சர் செல்கள் இல்லவே இல்லை. அவர் அந்தத் தாயிடம் என்ன மருத்துவம் பார்த்தீர்கள் என்று கேட்க அவளோ “பெரிய டாக்டர் நீங்களே இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டதால் நான் வேறு சிகிச்சைக்கே போகவில்லை” என்றாள். பின் மெல்ல அந்த சிறுவனை விசாரித்த போது பதில் கிடைத்தது. ’வீடியோ கேம்’களில் மிக ஆர்வம் உள்ள அந்த சிறுவன் தாய் அவன் உடம்பில் இருப்பதாகச் சொன்ன நோய்க்கிருமிகளை எதிரிகளாக பாவித்து தினமும் அவற்றை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது போலவும் அவை எல்லாம் செத்து விழுவது போலவும் மனதில் கற்பனை விளையாட்டு விளையாடுவானாம். ஆழ்மனம் அவனுடைய கற்பனைப்படியே நோய்க்கிருமிகளைக் கொன்று அவனைக் குணப்படுத்தியே விட்டது. இது நடந்து முடிந்து பல வருடங்கள் கழித்து தான் டிஸ்கவரி சேனலில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்கள். அந்த சிறுவன் அப்போது இளைஞனாக மாறி ஆரோக்கியமாய் இருப்பதைக் காட்டவும் செய்தார்கள்.

சக்கரவர்த்தியாவதும், ஒலிம்பிக்கில் கோப்பைகள் வாங்குவதும், கடும் நோய் குணமாவதும் கூட நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.

இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும். அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்.

மேலும் பயணிப்போம்.....

புட்டிகளில் விற்கப்படும் தண்ணீரில் தாதுப் பொருட்களின் அளவு சரிவரப் பராமரிக்கபடாததால் எலும்பு, சிறுநீரகப் பாதிப்புகள் அதிகரிக்கும்...


இவற்றில் 70%க்கு மேல் உணவுப் பாதுகாப்புத் துறை நிர்ணயம் செய்துள்ள அளவுகோலைப் பின்பற்றி தயாரிக்கப் படுவதில்லை.

சுத்திகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் நீரில், மணம்,சுவை,நிறம்,கலங்கும் தன்மை, கார,அமிலத் தன்மை (PH) , நீரில் கலந்துள்ள தனிமம் (TDS=Total dissolved solutes) ஆகியவற்றுக்கு மட்டுமே புட்டிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.

வயிற்றுப்போக்கு, டைபாய்டு நோய்க் கிருமிகளை கட்டுப்படுத்துவதற்கு நுண்ணுயிரி பகுப்பாய்வுக்கூடம் இந்நிறுவனங்களில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்திய தர நிர்ணய ஆணையத்திடம் சான்றிதழ் பெறும் சமயத்தில், இக்கூடம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் பல குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், அதன்பின்னர் ஆய்வுக்கூடத்தை முறையாகப் பயன்படுத்துவதில்லை.

குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் தன்சுத்தம், சுற்றுப்புறத்தூய்மை, மறு பயன்பாட்டுக்குக் கொண்டௌவர்ப்படும் கேன்களைச் சுத்தம் செய்தல் போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு நிறுவனத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 48 மணி நேரம், ஆலை வளாகத்தில் வைத்து கண்காணித்து, நுண்ணுயிரி பகுப்பாய்வு செய்து, அதன் தரத்தை உறுதி செய்தபின்னரே விற்பனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விதிமுறையை முன்னணி நிறுவனங்களே கூட பின்பற்றுவதில்லை.

தொழில்போட்டி காரணமாக, பல முகவர்கள், கேன்களைச் சுத்தம் செய்யாமலும், சம்பந்தப்பட்ட தயாரிப்பு ஆலைகளுக்கு செல்வதைத் தவிர்த்து, அருகில் அமைந்துள்ள மாற்று நிறுவனங்களில் தண்ணீரைப் பிடித்து விற்பனை செய்வதால், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரின் சுத்தம் கேள்விக்குறியாகவே உள்ளது.

நாளொன்றுக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீரை மட்டுமே நிலத்தடியிலிருந்து எடுக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே அனுமதி பெறப்பட்டாலும்கூட, இந்நிறுவனங்கள் இந்த அளவுகோலை மீறுவது குறித்து அரசு அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவதில்லை.

காந்தி கிராம் பல்கைக்கழக மனையியல்துறை உதவிப் பேராசிரியை விஜயாஞலி கூறியது...

உள்ளாட்சி அமைப்புகள் வினியோகிக்கும் குடிநீரைக் காய்ச்சி குடிப்பதே உடல்நலத்துக்கு சிறந்தது.

தண்ணீர் மூலம் ஏற்படும் பாதிப்புகள் உடனடியாகத் தெரியாததால், பொதுமக்கள் இதுகுறித்துக் கவலைப்படுவதில்லை.

ஆனால், எதிர்காலத்தில், அதிக ஆபத்து ஏற்படப்போவது குறித்து விழிப்புணர்வு அவசியம்...

தினமணி (07.11.2016) பக்கம்7ல் வெளிவந்துள்ள கட்டுரையிலிருந்து..

உலகின் பழமையான மொழி எது? கூகுளின் பதில் - தமிழ் மொழி...


கூகுள்க்கு தெரிவது கூட நம் ஊரில் இருக்கும் பல பேருக்கு தெரியவில்லை...

அதிகார வர்க்கத்தின் ஆகச்சிறந்த வேலை...


தனக்கு எதிரான ஒருத்தனை ஒருபோதும் தன்னுடைய ஊடகங்களின் வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்காது..

அப்படி கொண்டு சேர்க்குமேயானால் அது மக்களை பிரிப்பதற்காக தான் இருக்குமே தவிர, மக்களை ஒன்றிணைப்பதற்காக இருக்க வாய்ப்பே இல்லை..

ஏனெனில் அதுதான் அதிகார வர்க்கம்...

திருட்டு திராவிடம் கலாட்டா...



சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட திமுக...

நரம்பு சுண்டி இழுத்தால்...


ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும்.

நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது...

தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான்...


முக்கடலும் முத்தமிழும் மூவேந்தர் பரம்பரையும் கோட்டையிலே வில், புலி, மீன் கொடிகள் நாட்டி செந்தமிழ் தாய் சீரிமை திறம் விளங்க சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியனும் அவன் அமைத்த தமிழ் சங்கத்திலே எழுத்தாணி ஏந்தி தலைமைப் புலவனாய் தமிழாய்ந்த புலவர்களில் ஒருவர் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் ஆவார்.

அதன் கோட்டின் அமைவிடம்:

தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க இடம்தான் அதங்கோடு. இவ்விடம் குமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது.

அதன் கோட்டில் சூரியமுக்கு என்னும் இடமுண்டு. இவ்விடத்தின் அருகில் "பக்றுளி ஆறு" என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட குழித்துறை தாமிரபரணி ஆறு செல்கிறது. தொன்றுதொட்டே அதங்கோடு ஒரு ஆற்றங்கரை நாகரீகப் பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

அதங்கோடு சூரியமுக்கில் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ் சங்கம் தண்ணீர் பெருக்கால் அழிக்கப்பட்ட காரணத்தினால் அவரும் அவரோடு சார்ந்த தமிழ்ப்புலவர்களும் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த 'கபாடபுரத்தில்' நடந்த தமிழ் சங்கத்தில் இணைந்தார்கள். கபாடபுர தமிழ்ச்சங்கத்தை கும்பவம்பக்குறுமுனி என்று அழைக்கப்பட்ட "அகத்தியர்" தலைமைதாங்கி நடத்தி வந்தார். அவருடன் கீழ்க்கண்ட பன்னிரு பெரும் சீடர்களாயினர்.

தொல்காப்பியர்
அதங்கோட்டாசான்
துராளிங்கன்
செம்புத்செய்
வையாபிகன்
வாய்ப்பியன்
பணம்பாரன்
கலாரம்பன்
அவினயன்
காக்கை பாடினியன்
நட்டதன்
வாமணன்

இவர்களை அகத்தியரின் "பன்னிருமாணாக்கர்" என அழைக்கிறோம்.

'கபாடபுரத்தில் ', "அகத்தியர்" தலைமையில் நடந்து வந்த தமிழ் சங்கத்திற்கு, முதல் தமிழ் இலக்கண நூலாக இருந்தது "அகத்தியம்" என்னும் இலக்கண நூல் ஆகும்.

"அகத்தியம்" கால வெள்ளத்தால் அழிந்த காரணத்தால் அதற்கு வழி நூலக ஒரு இலக்கண நூலை இயற்ற தனது தலை மாணாக்கரான தொல்காப்பியரை அழைத்துச் சொன்னார் அகத்தியர்.

இந்நிலையில் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார்.

மதுரை தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு.

தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களிலும் எக்குற்றமும் இல்லை என அறுதி இட்டு கூறினார் அதங்கோட்டாசான்.

பணம்பாரரின் கருத்து:

தொல்கபியப் பாயிரத்திற்கு உரை எழுதிய பணம்பாரன் என்னும் தமிழ்ப் புலவர் தனது சிறப்புப் பாயிரத்தில்..

"நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அரங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து"

இதன் விளக்கம் யாதெனில்..

மாற்றானது நிலத்தை தன் கீழ் வாழ்வார்க்கு கொண்டு கொடுக்கும் மன்னன் மாகீர்த்தியது அவையின் கண் நான்கு மறைகளையும் அதாவது ரிக், யஜூர் , சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என விரிவாக எழுதிஉள்ளார்.

இளம்பூரணரின் கருத்து:

தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணம் என்னும் தமிழ்ப்புலவர் நான்கு மறைகளையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று எழுதி உள்ளார்.

அடைமொழி இன்றி தனிமொழியாக "அதங்கோடு" என்கிற ஊர் திகழ்கிறது.

அதனால் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தை அரங்கேற்றியவர் அதன் கோட்டில் பிறந்து தமிழ் ஆய்ந்த இடம் "அதங்கோடு" என உறுதி செய்யப்பட்டுள்ளது...

இருவரின் உழைப்பை, இருவரும் சமமாக பிரித்து கொள்வதற்காக அன்றாட வாழ்க்கையை நோக்கி ஒரு பயணம்...


ஆனால் இங்கு இருக்கின்ற அரசியல்வியாதிகள்..?

மக்களின் உழைப்பை திருடி, மக்களை ஒன்று சேராமல் பார்த்து கொள்வது..

தன்னுடைய கட்சி மற்றும் தலைவனுக்காக தன் நண்பர்களை எதிர்த்து நிற்பவர்கள் இங்கு பலர் இருக்கிறார்கள்..

காரணம் தலைமை என்ற அடிமை மற்றும் அறியாமை...

விளையாட்டை நடத்துறவன் ஒருத்தன் தான்...


நீயும் நானும் அதில் வேடிக்கை பார்க்கும் மந்தைகளே..

விளையாடுகிறவர்கள் அரசியல்வாதிகளும், வணிகர்களும்..

ஊடகங்கள் அதை ஒளிபரப்புகிறார்கள்..

அவனை பொறுத்தவரை, இங்கு அனைவரும் அடிமையே..

இதில் சாதி என்ன..?

மதம் என்ன..?

சமூகம் என்ன..?

சிறு கீரை மருத்துவம்...


சிறுகீரை வேரை இடித்துச் சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவுக்குக் குடித்து வந்தால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.

சிறுகீரையுடன் இஞ்சி , பூண்டு , பெருங்காயம் , மஞ்சள்தூள் ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்து சூப் வைத்துக் குடித்தால் தலைவலி குணமாகும்.

சிறுகீரை , பார்லி ஆகியவற்றோடு சீரகம் ( சிறிதளவு ) மற்றும் மஞ்சள்தூள் ( 4 சிட்டிகை ) சேர்த்துக் கொதிக்க வைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் வீக்கம், உடல் பருமன் குறையும்.

சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்துக் கொண்டால் சொரி , சிரங்கு , படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

சிறுகீரையுடன் சிறு பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் பித்த சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

சிறுகீரையோடு மிளகுத் தூள் , உப்பு சேர்த்துச் சமைத்து கொஞ்சம் நெய்யோடு சாதத்தில் போட்டுச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்...

பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும்...


1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா ஃபாஸோ.

3.அபிசீனியா --- எத்தியோப்பியா.

4.கோல்டு கோஸ்ட் --- கானா.

5.பசுட்டோலாந்து --- லெசதொ.

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா.

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா.

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே.

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா.

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்.

11.சாயிர் --- காங்கோ.

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா.

14.பர்மா --- மியான்மர்.

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்.

16.சிலோன் --- ஸ்ரீலங்கா.

17.கம்பூச்சியா --- கம்போடியா.

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்.

19.மெஸமடோமியா --- ஈராக்.

20.சயாம் --- தாய்லாந்து.

21.பார்மோஸ --- தைவான்.

22.ஹாலந்து --- நெதர்லாந்து.

23.மலாவாய் --- நியூசிலாந்து.

24.மலகாஸி --- மடகாஸ்கர்.

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்.

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா.

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்.

28.அப்பர் பெரு --- பொலிவியா.

29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வானா...

திருட்டு திராவிடம் vs தமிழ் தேசியம்...


சிந்தனைகளையும், நகைச்சுவையையும் மட்டும் அதிகாரத்தால் ஒருபோதும் சமாளிக்க முடியாது...


உன் சிந்தனைகளால் ஏற்படுகின்ற எதிர்ப்புகளை நகைச்சுவையாக கடந்து செல்..

அதற்கான மனப்பான்மையை வளர்த்து கொள்..

இந்த இரண்டு மட்டும் தான் இதுவரை இங்கு அவர்களால் தடைசெய்ய முடியவில்லை.. 

இயல்பான இந்த இரண்டையும் அதிகாரத்திற்கு எதிராக உபயோகப்படுத்து...

கருவூர்ச் சித்தர்...


மன்னர் இராசராசசோழனின் அரசகுரு, பிறவிப் பெருங்கடல் கடந்து, பிறப்பு-இறப்பெனும் கர்மச்சக்கரத்தை வென்று முற்றுப்பெற்ற சித்தர் மகான் கருவூர்ச் சித்தர்.

தஞ்சைப் பெருங்கோவிலை வடிவமைத்தவர் எனக் கருதப்படும் தமிழ்ச் சித்தர்.

ஓம் கருவூரார் திருவடிகள் போற்றி...

ஆறு கால் ஆச்சரியம் - எறும்பு...


நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போதோ அல்லது நாம் கவனிக்காமலோ ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டமே வந்து சேர்ந்து விடுவதைப் பார்த்திருக்கலாம். இது எப்படி நடக்கிறது? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? எறும்புகளுக்குக் கண்கள் கூட ரொம்பத் தெளிவாகத் தெரியாது.

ஆனால் மோப்ப உணர்வு அதிகம். இது மட்டுமில்லாமல் ஓரிடத்தில் உணவு இருப்பதைப் பார்க்கும் முதல் எறும்பு, அத்துகளின் அருகே சென்று தன் தலையில் உள்ள உணர்ச்சிக் கொம்பு (Antenna) போன்ற உறுப்பால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச்செல்லும்போது உடலின் பின்பகுதியிலிருந்து ஃபெரமோன் என்ற வேதிப்பொருளைத் தரையில் கோடுபோல இட்டுக்கொண்டே செல்கிறது. இந்தக்கோடு அதன் கூடு வரை நீளும். இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றிச் சென்று, உணவு இருக்கும் இடத்தை விரைவாகச் சென்றடைந்து விடுகின்றன.

எறும்புகள் ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும்.எறும்புகள் போடும் இந்த ஃபெரமோன் பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும். இடையே சில இடங்களில் நீர் சொட்டிக்கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்துவிட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது.இதை நீங்கள் நேரில் பார்க்கும்போது கவனித்திருக்கலாம்.

உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்துவைக்கும் உணவு, மழைக்காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில், அது பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு எறும்பின் காலனியில் முகப்பில் இருக்கும் காவலாளி எறும்பு, அங்கே வரும் ஒவ்வொரு எறும்பையும் முகர்ந்து பார்த்துவிட்டு, அது தனது குழுவைச் சார்ந்ததா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கும். எறும்புகள் நகர்ந்து செல்லும்போது சில நேரம் ஆண்டெனாவை, மற்றொரு எறும்பின் தலையில் வைத்து, தங்கள் கூட்டத்தைச் சேர்ந்தது தானா என்று பரிசோதிப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

உணவுப் பாதை போடுவது போலவே, ஆபத்து ஏற்படுவதையும் வேறொரு வேதிப்பொருளை வெளியிட்டு சிப்பாய் எறும்புகள் எறும்புக் காலனிக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுகின்றன. இதை அறிந்து மற்ற எறும்புகள் தப்பிச் செல்லும். அதேபோல ஆண் எறும்பை இனப்பெருக்கம் செய்ய ஈர்க்கவும் ராணி எறும்புகள் ஒரு வகை ஃபெரமோனை வெளியிடுகின்றன.

இப்படியாக வழிகாட்ட, ஆண் எறும்பை ஈர்க்க, எச்சரிக்கை செய்ய என பல்வேறு செயல்பாடுகளுக்காக எறும்பு வெளியிடும் எல்லா வேதிப்பொருளும் ஃபெரமோன்தான். ஆனால், ஒவ்வொரு செயல்பாட்டுக்கான ஃபெரமோனின் வகையும் வேறுபட்டிருக்கும். இந்த வேறுபாட்டை வைத்தே, மற்ற எறும்புகள் விஷயத்தை புரிந்துகொள்கின்றன. இப்படியாக எறும்புகளின் வாழ்க்கையில் வேதியியல் மிகப்பெரிய பங்காற்றுகின்றது.

இந்தியாவில் 1903இல் பணிபுரிந்த ராணுவ அதிகாரியான கர்னல் பிங்காம் எழுதிய புத்தகம்தான் இந்தியாவில் எறும்புகளைப் பற்றிப் பேசிய முதல் புத்தகம். அதற்குப் பிறகு ஏறக்குறைய நூறாண்டுகள் ஆகியும்கூட, எறும்புகள் பற்றிய விரிவான நூல்கள் அதிகமாக வரவில்லை.

தமிழகத்தில் நமக்குத் தெரிந்தவை சிவப்பு நிற சிறிய நெருப்பெறும்பு, உருவத்தில் சற்றுப் பெரியதாக இருக்கும். கருப்பு நிற கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் கருப்பு நிற கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் வெளிர் சிவப்பு நிற சூவை எறும்பு, சிறிய பிள்ளையார் எறும்பு ஆகிய நான்கு வகைகள்தான். கட்டெறும்பு பெரும்பாலும் மாமரங்களில் அதிகம் இருக்கும்.

சுள்ளெறும்பு என்று அழைக்கப்படும் சிவப்பு எறும்புகளும், கட்டெறும்புகளும் எதிரி என்று கருதுபவர்களைக் கடிக்கும்.அப்போது உடலில் படும் வேதிப்பொருளால் நமக்கு சிறிது நேரம் வலிக்கிறது. அந்த வேதிப்பொருளின் வீரியம் குறையும் வரை வலிக்கும். சாமி எறும்புகள் எனப்படும் கறுப்பு எறும்பு பெரும்பாலும் கடிப்பதில்லை. கூசுவது போல ஓடிச் சென்று விடும். சில நேரம் பளிச்சென்ற நிறம் ஏதுமில்லாமல் சிறியதாக, வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் எறும்புகளைப் பார்த்திருக்கலாம். அவை முழு வளர்ச்சி அடையாத குட்டி எறும்புகள்.

எறும்புப்புற்றில் சேர்த்து வைத்திருந்த தானியங்களை வறுமையால் வாடிய மனிதர்கள் சிலர் எடுத்து, சமைத்து உண்டதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது...

தமிழனின் முதல் எதிரி ஆரியமும் திராவிடமும் தான்...


ஆழ்மனதின் அபார சேவை...


ஆழ்மனதில் ஆழமாகப் பதிபவையே நம்மை உண்மையில் இயக்கும் சக்தியாக இருக்கிறது என்பதைப் பார்த்தோம். இனி ஆழ்மனம் தன் தகவல் களஞ்சியத்தைப் பயன்படுத்தி நமக்கு எப்படியெல்லாம் அபார சேவை புரிகிறது என்பதையும், அதனிடம் அந்த வேலை வாங்குவது எப்படி என்றும் பார்ப்போம்.

மேல்மனம் உறக்கத்தின் போது ஓய்வு எடுத்துக் கொள்கிறது. ஆழ்மனம் உறக்கத்தின் போதும் கூட ஓய்வு எடுத்துக் கொள்வதில்லை. இதை பல ஆராய்ச்சிகள் செய்து உதாரணங்களுடன் டாக்டர் ஏ.ஸ்மித் என்ற இங்கிலாந்து மனவியல் அறிஞர் தன்னுடைய நூலில் (Does Brain Think, When I Sleep?) எழுதியுள்ளார். முன்பே கூறியது போல அது தான் சேகரித்து வைத்து இருக்கும் தகவல்களுடன் புதிதாகப் பெற்ற தகவல்களைச் சேர்த்து தக்க விதத்தில் சரி செய்தும், ஒழுங்குபடுத்தி, புதுப்பித்து வைத்துக் கொள்கிறது. மேல்மனம் எப்போதோ நினைத்து மறந்த சின்னத் தகவல் கூட ஆழ்மனதில் முறையாக சேகரிக்கப்பட்டு இருக்கும்.

இந்த தகவல் களஞ்சியத்தில் இருந்து தேவைப்பட்ட தகவல்களை எல்லாம் தேர்ந்தெடுத்து இணைத்து தொகுத்து புதிய கண்டுபிடிப்புகளையும், புதிய சித்தாந்தங்களையும், புதிய கோட்பாடுகளையும், பேருண்மைகளையும் முடிவாக நமக்கு உணர்த்த வல்லது ஆழ்மனம். எந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பையும், வாழ்வையே திசை திருப்ப வல்ல பேருண்மையையும் ஆழ்மனதின் உதவி இல்லாமல் யாரும் பெற்று விட முடியாது.

சர் வில்லியம் ஆர். ஹேமில்டன் என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதை, வானவியல் அறிஞர், மற்றும் இயற்பியல் அறிஞர். அவர் ஒரு முக்கிய கணித ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது என்ன முயன்றும் அவரால் அதற்கு தீர்வு காண முடியவில்லை. 1843 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் அவர் தன் மனைவியுடன் ஒரு பாலத்தின் அருகே நடந்து கொண்டிருந்த போது திடீரென்று பதில் தானாக அவர் மனதில் உதித்தது. அந்தத் தீர்வை மறந்து விடக்கூடும் என்று பயந்து அந்த பாலத்தின் சுவரில் கல்லால் கீறி அந்த சமன்பாட்டை அவர் பதித்தார்.
அவர் கண்டுபிடித்த க்வார்டெர்னியன்ஸ்  என்ற தீர்வு இன்றும் கணிதத் துறையில் மிக முக்கிய விதியாகக் கருதப்படுகிறது. அந்தப் பாலத்தின் சுவரில் இருந்த கீறல் பிற்காலத்தில் மறைந்து விட்டிருந்தாலும் அயர்லாந்து அரசாங்கம் அதே இடத்தில் அந்த தீர்வை ஒரு குறிப்புடன் கல்வெட்டாக இன்றும் வைத்திருக்கிறது.

டாக்டர் தாம்சன் என்ற மனோதத்துவ மேதை “System of Psychology” என்ற நூலை எழுதத் துவங்கியிருந்த போது அதற்காக நிறைய படித்து குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். ஆனால் எழுதுகின்ற சமயத்தில் நிறைய விஷயங்கள் கோர்வையாக இல்லாமல் தனித் தனியாக இருந்ததாக அவருக்குத் தோன்றியது. ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும் போது அது கோர்வையாக வராமல் இப்படி சம்பந்தமில்லாத தனிக் கருத்துகளாக இருந்தால் அது முழுமையாக இருக்காது என்று நினைத்த டாக்டர் தாம்சன் என்ன தான் அதைக் கோர்வைப் படுத்த முயன்றும் முடியாது போகவே அவர் எழுதுவதை சுமார் ஒரு மாதத்திற்கு நிறுத்தியே வைத்திருந்தார். பிறகு ஒரு நாள் எழுதியதை எடுத்துப் படிக்கையில் விடுபட்டதாய் நினைத்த விஷயங்கள் அவர் மனதில் தானாக பளிச்சிட்டன. உடனடியாக அவற்றை எழுதி அந்த நூலை அவர் முடித்தார். இது போன்ற நிகழ்வுகள் பல முறை தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.

Synthetic Chemistry ஐ கண்டுபிடித்த விஞ்ஞானி பெர்த்லாட் அவர்களும் தன் கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஆராய்ச்சி கூடங்களில் முறையாக சிந்திக்கும் போது வந்தவை அல்ல என்றும் திடீரென்று தானாக வானில் இருந்து வந்தவை போல வந்தவை தான் என்று கூறுகிறார்.

மோசார்ட் என்ற இசை மேதை தன் 35 வருட வாழ்க்கையில் பத்து ஓபரா என்னும் இசை நாடகங்கள், 41 ஸிம்ஃபனி என்னும் விரிவான இசை நாடகங்கள், நூற்றுக் கணக்கான சிறிய இசைச் சித்திரங்கள் உருவாக்கிய மேதை. அவர் தன்னுடைய பெரும்பாலான புதிய இசைப் படைப்புகள் ஒவ்வொன்றும் முழுமையாக தானாக மனதில் தோன்றியவை என்றும், மனதில் கேட்டவற்றை அப்படியே திரும்ப உருவாக்கியது தான் அவர் செய்த வேலை என்றும் கூறுகிறார். நம் கணித மேதை ராமானுஜம் தன்னுடைய எல்லா கணக்குகளுக்கும் விடையை நாமகிரிப் பேட்டை அம்மன் கொண்டு வந்து தருவதாகச் சொல்லி இருக்கிறார்.

இது போல் எத்தனையோ காலத்தை வென்று நின்ற எழுத்துக்களையும், இசையையும், அறிவியல் கண்டு பிடிப்புகளையும் சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றைத் தங்கள் முயற்சியால் வந்ததென அந்த அறிஞர்களால் சொல்ல முடியவில்லை. தானாக வந்ததாகவும், தாங்கள் நம்பும் இறைவன் கொண்டு வந்து தந்ததாகவும் அவர்கள் சொன்ன போதிலும் அவற்றை அவர்கள் மேல்மனதிற்குத் தந்தது அவர்களுடைய ஆழ்மனமாகவே இருக்க வேண்டும் ஆழ்மன சக்தி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எத்தனையோ முறை ஏதாவது ஒரு பெயர் மறந்து போயோ, ஒரு பொருளை வைத்த இடம் மறந்து போயோ நாம் அனைவருமே மூளையை கசக்கி இருந்திருக்கக் கூடிய தருணங்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். பிறகு வேறெதோ நாம் செய்து கொண்டிருக்கையில் தானாக அது நம் நினைவில் பளிச்சிடுவதை நாம் அனுபவித்திருக்கிறோம். இது நம் ஆழ்மன செயல்பாடே.

நாம் பல விதங்களில் சிந்தித்தும் விடை கிடைக்காத அல்லது நினைவுக்கு வராத விஷயங்களில் இருந்து சிந்தனையை மேல்மனம் கை விட்டு வேறு விஷயங்களுக்கு நகர்த்தும் போது அந்த பழைய தேடலை ஆழ்மனம் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறது. அது தன்னிடம் உள்ள தகவல் களஞ்சியத்தில் இருந்து நமது அறிவுக்கெட்டாத முறையில் பிரம்மாண்டமான விதத்தில் விடையைக் கண்டுபிடித்து வேறு விஷயத்தில் ஆழ்ந்திருக்கும் மேல்மனத்திற்கு அனுப்பி வைக்கிறது. நாம் அதை ‘திடீர்’ என்று வந்ததாக நினைத்து வியக்கிறோம்.

சிறு வயதில் நாம் பூதம் அல்லது தேவதைக் கதைகள் நிறைய படித்திருப்போம். பாவப்பட்ட ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு கொடுமைக்காரர்கள் இரவில் ஏராளமான வேலைகளைத் தந்து மறு நாள் காலையில் அனைத்தையும் முடித்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டுப் போய் விடுவார்கள். அந்த பாவப்பட்ட ஜீவன் மீது அன்பும், இரக்கமும் கொண்ட பூதமோ, தேவதையோ அந்த வேலைகளைத் தான் எடுத்துக் கொண்டு அனைத்தையும் அசுர வேகத்தில் நேர்த்தியாக செய்து தந்து விடும் என்பதைப் படித்திருப்போம். உண்மையில் நம் ஆழ்மனம் அது போன்ற ஒரு சக்தி படைத்த தேவதையே.

சிக்கலான ஒரு பிரச்னைக்கு ஒரு தீர்வோ, அல்லது சிக்கலான ஒரு கேள்விக்கு விடையோ அறிய நாம் எந்த விதத்தில் யோசித்தும் நமக்கு பதில் கிடைக்கவில்லையானால் மேலே சொன்ன அறிஞர் பெருமக்கள் தாங்கள் அறியாமலேயே ஆழ்மனதைப் பயன்படுத்தி விடை கண்டு பிடித்தது போல நாமும் ஆழ்மனதின் உதவியை நாடலாம். அது எப்படி என்று பார்ப்போம்.

உங்கள் பிரச்னைக்கோ, கேள்விக்கோ சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும் ஆழ்ந்து யோசித்துக் கொள்ளுங்கள். அதன் தீர்வு அல்லது விடை உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். அதை மிக முக்கியமானது என்று நீங்கள் மனப்பூர்வமாக நினைக்க வேண்டும். எல்லா விதங்களிலும் சம்பந்தப்பட்ட விஷயங்களை யோசித்து விட்டு ஆழ்மனதிடம் ‘இதைக் கவனி’ என்று கட்டளையிடுங்கள். பின் அதை மறந்து விடுங்கள்.

இதைச் செய்யப் பொருத்தமான நேரம் இரவு தூங்குவதற்கு சிறிது நேரம் முன் என்கிறார்கள். மேல்மனம் உறங்க ஆரம்பித்தவுடன் 24 மணி நேரமும் விழித்திருக்கும் ஆழ்மனம் நீங்கள் தந்த அந்த வேலையை, தான் சேகரித்து வைத்திருக்கும் பல்லாயிரம் தகவல்களையும் பல விதங்களைலும் மிக நேர்த்தியாக அலசி மிகச் சிறந்த ஒரு தீர்வையோ, பதிலையோ மறு நாள் உங்களுக்குத் தந்து விடும். ஆரம்பத்தில் நீங்கள் தந்திருக்கும் வேலையின் சிக்கல் தன்மையின் கடுமைக்கேற்ப ஒரிரு நாட்கள் அதிகமாகக் கூட அது எடுத்துக் கொள்ளக் கூடும். ஆனால் இந்த விதத்தில் மிகச் சிறப்பான பதில் கிடைத்தே தீரும் என்பது பலரின் அனுபவம்.

இதில் மூன்று விஷயங்கள் முக்கியம். முதலாவது அது உண்மையாகவே உங்களுக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் அது சம்பந்தமாக நிறைய தேவையான தகவல்களை அலசி இருக்க வேண்டும். (தகவல்கள் என்ற பெயரில் கவலைகள், பயங்களை ஆழ்மனதிற்கு அனுப்பி விடாமல் இருப்பது முக்கியம்). மூன்றாவது ஆழ்மனதிடம் ஒப்படைத்து விட்ட பின் விரைவில் அதனிடம் இருந்து தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உங்களுக்கு அவநம்பிக்கை இருக்கக் கூடாது.

(ஒன்பதாவது அத்தியாயத்தில் மைக்கேல் க்ரிஸ்டன் என்ற பிரபல ஆங்கில சினிமா டைரக்டர் ஸ்பூன்களைப் பார்வையாலேயே மடக்கும் சம்பவங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் நன்றாக கவனத்தைக் குவித்து விட்டு பிறகு கவனத்தை வேறிடத்திற்குத் திருப்பின பிறகு தான் இந்த சக்தி வேலை செய்கிறது என்பதை வியப்புடன் சொல்லி இருப்பதைக் குறிப்பிட்டிருந்ததைப் படித்திருப்பீர்கள். அதற்கும் காரணம் இது தான். மேல்மனம் நன்றாக முயன்று விட்டு பின் அதிலிருந்து கவனத்தை திருப்பி விட்ட பின் ஆழ்மனம் அதைத் தன் பணியாக எடுத்துக் கொண்ட பிறகு தான் சக்தி வேலை செய்ய ஆரம்பிக்கிறது)

இரவு உறங்கப் போகும் நேரத்திற்கு முன் ஓரிரு மணி நேரம் ஆழ்மனம் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான நேரம். இந்த நேரத்தில் அதிகமாக நாம் எண்ணும் எண்ணங்களே பெரும்பாலும் நம் உறக்கத்தில் ஆழ்மனதால் அதிகம் அலசப்படுகின்றன. அதனால் அந்த நேரத்தில் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள், துக்ககரமான அல்லது வன்முறை சீரியல்கள் ஆகியவற்றைத் தவிர்த்து விடுதல் நல்லது. அந்த நேரத்தில் நல்ல புத்தகங்கள் படித்தல், மனதிற்கு இதமான இசை கேட்டல், நமக்குப் பயன்படும் விஷயங்களில் ஈடுபாடுடைய செயல்கள் செய்வது எல்லாம் மிக நல்லது.

முக்கியமாக நம்முடைய இலட்சியங்கள், குறிக்கோள்கள் குறித்து அந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்ளுவதும், அது சம்பந்தமான செயல்களில் அந்த நேரத்தில் ஈடுபடுவதும் நாம் விரைவில் இலக்கை அடைய மிகவும் உதவும்.

இனி ஆழ்மனதின் சக்தியை அதிகரித்து பயன்பெற முக்கியமான அடுத்த பயிற்சியைப் பார்ப்போமா?

மேலும் பயணிப்போம்.....

பிப்ரவரி 1, 2019-ல் உலகம் அழியப் போகிறதாம்.. காலை 11.47க்கு ஒட்டு மொத்தமாக துடைக்கப்படும் உலகம் – ஆதாரம்...


உலகம் அழியப்போகிறது என்று நிறைய பேர் நிறைய கட்டுரைகளை எழுதிவிட்டனர். அதையும் நம்மில் பலர் நம்பியும் நம்பாமலும் நிறைய செய்தாகிவிட்டது. டிசம்பர் 21, 2012 இப்படித்தான் நிறைய கதைகள் பரவின. மாயன் காலண்டர் முடிந்துவிட்டது. உலகம் அழியும் என நிறைய தகவல்கள் அங்கங்கு பரவிக் கிடந்தன. அதே நேரத்தில் இந்தியாவிலும் சில கூற்றுகள் இருந்தன. உலகம் அழியப்போகிறது என்று இந்திய இடங்கள், கோயில்கள், சித்தர்கள் கூறியுள்ளதாக பரவி வரும் தகவல்கள் குறித்தும் அந்தந்த இடங்கள் குறித்தும் இந்த பதிவில் காணலாம்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அமைந்துள்ளது சிவன் மலை. இந்த சிவன் மலை மீது அமைந்துள்ளது அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில். இந்த கோயில் ஒரு கண்ணாடி பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் உத்தரவு பெட்டி. இதில் என்ன வைக்கப்பட்டுள்ளதோ அது தொடர்பான நல்லதோ, கெட்டதோ விரைவில் நடைபெறும். இந்த கோயிலின் மூலவர் பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட பொருளை கூறி வழிபடு என்று சொல்வாராம். அதன்படியே பக்தரும் கோயில் நிர்வாகிகளிடம் பேசி அந்த பொருளை பூசைக்கு வைத்து அந்த பெட்டியில் இடுவார்கள்.

இதற்கு முன் ஒருமுறை இந்த பெட்டியில் உவர் நீர் வைத்து வழிபட்டனர். உள்ளூர் நபர் ஒருவருக்கு ஆண்டவர் கனவில் வந்து சொன்னதாக கூறப்பட்டது. அதன்பின்னர் சில நாட்களிலேயே சுனாமி ஏற்பட்டது. பின்னர் இரும்பு சங்கிலி வைத்து வழிபட்டனர் இந்த கோயிலின் பக்தர்கள். அந்த முறைதான் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகினர் சசிகலா சகாக்கள். இந்த முறை உலக உருண்டையை வைத்து பூசை செய்யச்சொல்லி ஆண்டவர் கட்டளையிட்டிருப்பதாக கூறப்படுகிறது. உலக உருண்டை ஒன்றை ஆண்டவர் உத்தரவு பெட்டிக்குள் வைத்தாகிவிட்டது. இதன் பிறகு நிறைய பொருள்கள் வைக்கப்பட்டது. எனினும், இந்த உலக உருண்டை வைக்கப்பட்டது மிகவும் அதிர்ச்சிகரமானது என்று சிலர் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இது உலக அழிவைக் குறிக்கவுள்ளதாக கூறுகின்றனர் அவர்கள்.

இந்த கொல்லிமலையில் வாழ்ந்துவரும் சித்தர்களும் உலகம் அழிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறுகின்றனராம். இது காலம்காலமாக சொல்வதுதான் என்றாலும், இதைக் கேட்கும்போது கொஞ்சம் பீதி வருவதை தவிர்க்கமுடியவில்லை. இப்படித்தான் 2012ம் ஆண்டு முடியும்தருவாயில் உலகம் அழியும் என்று புரளி கிளம்பியது. ஆனால் அப்படி எதும் நடக்கவில்லை.


மகாராஷ்டிர மாநிலத்தில் காணப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த கோயில்தான் “ஹரிஷ்சந்திரகட் கோயில்”. தானே மாவட்டத்தில் அமைந்துள்ள கிரேஷ்வர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளதுதான் இந்த கோயில். இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இது 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இதற்கு தகுந்த ஆதாரங்களும் உள்ளதாக தெரிகிறது. ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு அருகில் “கேதாரேஷ்வர்” என்ற ஆச்சரிய குகையினை காணலாம். இந்த குகைக்குள் சென்றால் பல மர்ம முடிச்சுகள் அவிழும் என்று கூறப்படுகிறது.

அழியும் குகைக்கு உள்ளே சென்றால் அங்கு நீரினால் சூழப்பட்ட சிவலிங்கம் ஒன்றை பார்க்கலாம். இந்த சிவலிங்கமானது 5 அடி உயரம் கொண்டது. இதன் அருகில் சென்று வழிபடுவது என்பது மிகவும் ஆபத்தானது. இந்த சிவலிங்கத்தை சுற்றி காணப்படும் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். சாதாரண சூழ்நிலையில் இதை கடந்து லிங்கத்தை அடைவதே சற்று கடினம் தான். அப்படி இருக்க குளிர் காலங்களில் செவ்லதென்பது மிகவும் சிரமமானது. மேலும் மழைக்காலங்களில் இக் குகையை சென்றடைவது கணிப்புக்கு மீறிய விசயமாகும். இந்த நான்கு தூண்களும், “சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம்” ஆகிய நான்கு யுகங்களை தெளிவு படுத்துவதாக நம்பப்படுகின்றது. நான்கு யுகங்கள்தான் உள்ளது என புராணம் கூறுவதாக நம்பப்படுகிறது.

கலியுகம் தொடங்கி சரியாக 964 நாள்கள் கழித்து இந்த கோயில் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. அப்படி பார்க்கையில் இந்த கோயில் நமக்கு சொல்லவருவது என்ன என்பது கேட்பவருக்கு மர்மமாகவும், அச்சமாகவும் உள்ளது. இந்த கோயில் பற்றி கேள்விப்படுபவர்கள் உலகம் அழியப் போகிறது என்று பீதி கொள்கின்றனர். இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ள விஷ்ணு சிலை தூங்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளதாக கருத்து உண்டு. அதாவது அந்த சிலை விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பதை போன்று இருக்கிறது. இந்த மர்ம அறை திறக்கப்பட்டால் உலகம் அழியும் என பத்மநாபசுவாமியின் பக்தர்கள் திடகாத்திரமாக நம்புகின்றனர். இதனால்தான் திறக்க மறுக்கின்றனர் அவர்கள்.


கவலைப் படாதீர்கள். கடந்த செப்டம்பர் மாதம்தான். இதனை டேவிட் மிடே என்ற ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்திருக்கிறார். அவரது கணக்குப்படி வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதி உலகம் அழியும் என்கிறார். டேவிட்டின் கோட்பாட்டின் படி நிபிரு எனப்படுகின்ற ‘ப்ளானெட் எக்ஸ்’ பூமியை நோக்கி வந்த அந்த கிரகம் பூமியை ஆகஸ்ட் 21 ஆம் தேதி மோதிடும். ஒரு மாதத்தில் அதாவது செப்டம்பர் 23,2017 அன்று உலகம் முழுவதும் அழிந்திடும் என்று கூறினார்.

சரி நம்பிக்கைகளை புறந்தள்ளிவிட்டாலும்கூட, இது அறிவியல் கூற்று ஆயிற்றே எப்படி புறந்தள்ளுவது என்று பலர் நினைத்திருந்தவேளையில் இந்த கூற்றும் பொய்யானது. இப்படித்தான் மீண்டும் புரளிகள் கிளம்புகின்றன. இந்த முறையும் அறிவியல் ரீதியாக கிளப்பி விடுகின்றனர் என்றே தோன்றுகிறது. இது மொத்த கண்டங்களையும் தூசுதட்டி பார்த்துவிடுமாம். அன்றையதினம் காலை 11.47 மணிக்கு உலகம் துடைக்கப்பட்டுவிடும் என்று தகவல்கள் பரவி வருகின்றன...

கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் இந்தி எதிர்ப்பும்...


காந்தி இந்தியா முழுவதும் பொது  மொழியாக இந்தியை பயன்படுத்த வேண்டி.. நாடு முழுவதும் இந்தியை பயற்றுவிக்க இந்தி பிரச்சார சபாவினை தொடங்க வேண்டும் என்று காங்கிரசு கட்சியினருக்கு ஆணையிட..

அதையேற்று ஈரோட்டில் இந்தி பிரச்சார சாபிவினை தொடங்கி நடத்தியவர் தான் கன்னட ஈ.வெ.ராமாசாமி..

அங்கு பயின்றவர்கள் தான் பின்னாளில் தமிழகமெங்கும் இந்தியை பயிற்றுவிக்கும் பண்டிதர்களாக உருவெடுத்தனர்...

தமிழின துரோகி பாஜக அடிமை அதிமுக கலாட்டா...


கடும் கண்டணத்தோடு தீர்வை கூறும் பாமக மருத்துவர் இராமதாசு அய்யா..


இந்தியாவில் உள்ள குடும்பத்தை காப்பாற்றுவதற்க்காக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பலர் அனுபவித்து வரும் துன்பங்களை நம்மிடம் கூறாமல் அங்கு கிடைக்கும் உணவையும்., இருப்பிடங்களையும்., பணிசுமைகளையும் நம்மிடம் மறைத்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஒரு சமயத்திற்கு மேல் இந்த துன்பங்களை எல்லாம் பொறுக்க இயலாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
தனது குடும்பத்தை எப்படியாவது நேர்மையாக உழைத்து முன்னேற்றமடைய செய்வது தனது தலையாய கடமையாக நினைத்து பெரும் துன்பங்களுக்கு மத்தியில் பணியாற்றி வரும் அவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்துகொளவ்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் அங்கு பணியாற்றும் இந்தியர்களால் எடுக்கப்பட்டு இணையதளங்களில் வெளியாகி அவர்கள் படும் துன்பத்தை நம்முடன் சிலர் பகிர்ந்தும் வருகின்றனர்.
இந்த விசயத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர.அய்யா அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்., இந்தியாவில் உள்ள குடும்பங்களைக் காப்பாற்றுவதற்காக வளைகுடா நாடுகளுக்கு பணிக்கு செல்லும் இந்தியத் தொழிலாளர்கள் அங்கு அனுபவித்து வரும் கொடுமைகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறன. சவுதி அரேபியா உள்ளிட்ட 6 வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற இந்தியத் தொழிலாளர்களில் 24,570 பேர் கடந்த 6 ஆண்டுகளில் உயிரிழந்திருக்கின்றனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்றவர்கள் உயிரிழந்தது குறித்த விவரங்களை தொகுப்பதற்காக  காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி என்ற அமைப்பைச் சேர்ந்த வெங்கடேஷ் நாயக் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து பெற்ற தகவல்களில் இந்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. 2012-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் 10,416 பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சமாக பஹ்ரைனில் 1,317 பேர் இறந்துள்ளனர். குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை இன்னும் துல்லியமாகக் கிடைக்கவில்லை. அந்த எண்ணிக்கை முழுமையாகக் கிடைத்தால் சவுதி, குவைத், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார் ஆகிய 6 நாடுகளில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும். சராசரியாகப் பார்த்தால் வளைகுடா நாடுகளில் தினமும் 10 இந்தியர் உயிரிழக்கின்றனர் என்பதை மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது.

சவுதி அரேபியா உள்ளிட்ட 6 வளைகுடா நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையே 5.49 கோடி தான். இது இந்திய மக்கள் தொகையில் 25-ல் ஒரு பங்கு மட்டுமே. தமிழகத்தின் மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கு மட்டுமே. அவ்வளவு சிறிய நாடுகளில் 6 ஆண்டுகளில் சுமார் 25 ஆயிரம் பேர்  உயிரிழப்பதை சாதாரணமான ஒன்றாக கருதி கடந்து சென்று விட முடியாது.

மேற்குறிப்பிட்ட நாடுகளில் கத்தார் மட்டுமே உயிரிழப்புக்கான காரணங்களைத் தெரிவித்திருக்கிறது. 80% இயற்கை மரணங்கள் என்றும் 14% விபத்து மரணங்கள் என்றும், 6% தற்கொலைகள் என்றும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் அனைவருமே மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உடல் நலம் சரியாக இருப்பதாக உறுதி செய்யப்பட்ட பிறகு தான் அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு  இருக்கும் போது 80 விழுக்காட்டினர் உடல் நலம் பாதித்து இயற்கை மரணம் அடைந்ததாக கூறப்படுவதை நம்ப முடியவில்லை. விபத்து, தற்கொலைகள் சார்ந்த புள்ளிவிவரங்களும் ஐயத்தையே அளிக்கின்றன.

வளைகுடா நாடுகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் அனைத்தையும் ஐயத்திற்கிடமானவை என்று குற்றம் சாட்ட முடியாது. ஆனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பதை உறுதியாகக் கூற முடியும். இந்திய அரசு விழிப்புடன் இருந்து செயல்பட்டால் அவற்றில் பெரும்பாலானவற்றை  தடுக்க முடியும். வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று உயிரிழந்தவர்களில் 6 விழுக்காட்டினர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றால், அங்கு அவர்களுக்கு இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு ஏதோ பிரச்சினைகள் இருந்திருப்பதாகத் தானே அர்த்தம்? அதை கண்டுபிடித்து தீர்த்து வைத்திருக்க வேண்டியது அங்குள்ள இந்திய தூதரங்களின் கடமை ஆகும். ஆனால், தூதரகங்கள் தங்களின் கடமையை செய்வதில் தோல்வியடைந்து விட்டதால் தான் 25,000 பேர் உயிரை இழந்திருக்கின்றனர்.

இந்தியாவுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் 15 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை வருவாயாக கிடைத்துள்ளது. இந்தியத் தொழிலாளர்கள் தான் தங்கள் கடுமையான உழைப்பால் அந்தத் தொகையை ஈட்டிக் கொடுத்துள்ளனர். அவ்வாறு இருக்கும் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தூதரங்கள் மூலமாக இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களில் கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம். ஆனால், தமிழ்நாடு, ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும்.

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் தமிழர்கள் அங்கு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது குறித்தும், கொத்தடிமைகளாக நடத்தப்படுவது குறித்தும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இவற்றின் அடுத்தக்கட்டம் தான் உயிரிழப்புகள் ஆகும். வளைகுடா நாடுகளில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதன் மூலம் இத்தகைய உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.

வளைகுடா நாடுகளில் பணியாற்றுவோரில் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்பதால் அங்குள்ள தூதரங்களில் தென்னிந்திய மொழி தெரிந்த அதிகாரிகளை அமர்த்த வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருந்து வெளியுறவு அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்துக்கு புத்துயிரூட்ட வேண்டும். அதேபோல், தமிழகத்திலும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காக புதிய அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அறிக்கையில்., இந்த சம்பவம் தொடர்பாக தனது ஆதங்கத்தையும்., பிரச்சனைக்கு தீர்வு காணும் முறைகளையும் தெளிவாக மருத்த.அய்யா அவர்கள் தெரிவித்துள்ளார்...

மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட ஒரே தொலைக்காட்சி பாமக வின் மக்கள தொலைக்காட்சி மட்டுமே....


ஆக்ஞா சக்கரம்...


நெற்றி பொட்டு..

கரு குடத்தை உள்ளடக்கி
படைக்க போகும் படைப்பாளிக்காக...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


இந்திய ஐ.என்.ஏ தலைவர் சுபாஷ் சந்திர போஸ். ஹிட்லரின் பறக்கும் தட்டு, யுஎஃப்ஒ திட்டத்தை பற்றி அறிந்திருந்தார், பெங்காலி சமஸ்கிருதப் பண்டிடை பயன்படுத்தி சமஸ்கிருத மொழிபெயர்ப்புகளுடன்
வேத வைமானிக சாஸ்திரங்களில் கூறப்படுகிற, பாதரச சுழற்சியில் அயனி இயந்திரங்களை உருவாக்க
ஹிட்லர் உதவியிருந்தார், என இந்திய சதி கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிகழ்வுக்கு சான்றாக,
ஏப்ரல் 4, 1944 இல், ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல் U-859, 33 டன் பாதரசம் மற்றும் 67நாசி படைவீரர்களுடன் அண்டார்டிக்காவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கையில்.   துணை பிரிட்டிஷ் நீர்மூழ்கிக் கப்பலுடன் போரிட நேரிட்டது.

அப்போது U-859 மூழ்கியது மற்றும் பெரும்பாலான குழுவினர் இறந்தனர். அதில் நாசி படைவீரர் ஒருவர் உயிர் பிழைத்தார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது மரண படுக்கையில் தங்கள் அண்டார்டிக்கா பயண நோக்கம் பற்றி கூறினார்.

அண்டார்டிக்காவில் உள்ள இரகசிய விமான கட்டுமான தளத்திற்கு இந்த பாதரசம் கொண்டு செல்லவே எங்களுக்கு கட்டளையிடப்பட்டது. ஒருவித விசேஷ விமான கட்டுமானத்திற்க்காகவே, இந்த பாதரசம் பயன்படுத்துவதாக கூறியிருந்தார்...