01/02/2018

தமிழர் நாட்டில் வந்தேறிகள்...


தமிழர் நாட்டில் இன்று வரை தமிழர்களுக்கு வேலையில்லாத நிலை இருந்து வருவதன் காரணம் வந்தேறிகள் நிலையாக இங்கே தங்கிவிட்டது தான்...

தமிழர்கள் தான் பிறந்த மண்ணை விட்டு வெளி இடங்களுக்கு வேலை தேடி போகும் நிலையும், அல்லது உள்ளூரிலேயே கூலிகளாக இருக்கும் நிலையும் கவலைக்கிடமானது...

தமிழர்கள் இட ஒதுக்கீட்டு மாயையில் வந்தேறிகளை வாழ வைத்தும் ஆள வைத்தும் அழகு பார்ப்பது கேவலமான ஒன்று..

தொல் தமிழர்களை ஆதி திராவிடர்கள் என்றாக்கி , வந்தேறி சக்கிளியரை ஆதி தமிழர் என்றும் , அருந்தமிழர் என்றும் கூறி நமது உரிமைகளை அவர்களுக்கு பங்கிட்டுவிட்டு மிச்சத்தை நமக்கே சலுகையாக வழங்குவதும் , அதுவும் கிடைக்காத நிலையில் அதற்காக தமிழ் தேசிய தலைவர்கள் போராடுவதும் அசிங்கமல்லவா ?

ஆள வேண்டிய தமிழினம் அகதியாக திரிவதும், சலுகைகளுக்காக ஏங்குவதும் நியாயமா ?

தமிழா சிந்திப்பீர்...

மதவெறியனுக்கு செருப்படி பதில்...


நாமக்கல்: ராசிபுரம் அருகே தனியார் திருமண மண்டப உரிமையாளரின் வீடு மற்றும் நகை கடைகள் உட்பட 5 இடங்களில் வருமானவரி சோதனை...


30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்...

நான் vs ஆன்மா...


1. ஆணவம் தனக்கு மட்டும் சேவை செய்ய முயலும்...
ஆன்மா மற்றவர்களுக்கும் சேவை செய்ய முயலும்...

2.ஆணவம் எப்பொழுதும் வெளிப்புறமாக அங்கீகரிக்க முயலும்...
ஆன்மா எப்பொழுதும் உள் நம்பகத்தன்மையையாய் இருக்க முயலும்...

3.ஆணவம் வாழ்க்கையை போட்டி மனப்பான்மையோடு பார்க்கும்..
ஆன்மா பரிசாய் கொடுத்த வாழ்க்கையாய் பார்க்கும்....

4.ஆணவம் தன்னை மட்டும் பாதுக்காக முயலும்..
ஆன்மா மற்றவரையும் பாதுக்காக முயலும்...

5.ஆணவம் வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்கும்..
ஆன்மா உள்தொற்றத்தை பார்க்கும்...

6.ஆணவம் பற்றாக்குறையை உணரும்..
ஆன்மா மிகுதியை உணரும்...

7.ஆணவம் அழியும்..
ஆன்மா அழியாது...

8. ஆணவம் காமத்தை ஈர்க்கும்...
ஆன்மா அன்பை ஈர்க்கும்...

9. ஆணவம் ஞானத்தை தேடும்...
ஆன்மா ஞானமாகவே இருக்கும்...

10.ஆணவம் பரிசை மட்டும் அனுபவிக்கும்...
ஆன்மா வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியாய் அனுபவிக்கும்...

11.ஆணவம் பல வலிகளுக்கு காரணமகா இருக்கும்...
ஆன்மா மனக்காயங்களை ஆற சிகிச்சை முறைக்கு காரணமாக இருக்கும்...

12.ஆணவம் இறைவனை நிராகரிக்கும்...
ஆன்மா இறைவனை அரவணைக்கும்...

13.ஆணவம் பூர்த்தி செய்ய முயலும்...
ஆன்மா அழியாமல் முழுமையாய் இருக்கும்..

14. ஆணவம் என்பது நான்...
ஆன்மா என்பது நாம்...

33 எண்ணின் இரகசியம்...


பெரியார் என்கிற கன்னட ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் உண்மை முகம்...


தமிழ் நாடு தமிழருக்கே - 1938...

திராவிடநாடு திராவிடருக்கே - 1939...

விடுதலையில்..

எவ்வளவு தெளிவாக தமிழனை ஏமாத்தி இருக்கிறான் ...

இன்று வரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான் தமிழ்நாடு தமிழருக்கே என்று சொன்னார்  சொன்னார் என்று திருட்டு திராவிட வியாதிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...

சரி அதையும் ஆராய்ச்சி செய்து பார்த்தால் ஆண்டை கவனிக்கும் போது தான் பின்னாளில் இவரின் துரோகம் தெரியுது...

தமிழகத்துக்கு திடீரென படையெடுத்த காசி அகோரிகள்- திருச்சியில் நள்ளிரவில் அரை நிர்வாண பூஜை...


திருச்சி: வட இந்தியாவில் நிர்வாணமாக மண்டையோடு சகிதமாக வலம் வரும் மனித மாமிசம் சாப்பிடும் அகோரிகள் 20 பேர் திருச்சி காளி கோவிலில் முகாமிட்டு பூஜை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசியின் கங்கை நதிக் கரையிலும் ஹரித்துவார், ரிஷிகேஷிலும் நிர்வாண அகோரிகள் முகாமிட்டிருப்பர். காசி கங்கை நதிக்கரையில் எரியூட்டப்படும் மனித சடலங்களின் மாமிசங்களை சாப்பிடுபவர்கள் அகோரிகள்.

கடும் குளிரிலும் நிர்வாணமாக உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக் கொண்டு மண்டையோடுடன் பீதியூட்டும் வகையில் அகோரிகள் வலம் வருவர். ஆனால் இத்தகைய அகோரிகள் தமிழகத்து பக்கம் இதுவரை எட்டிப்பார்த்தது இல்லை.

திடீரென இந்துத்துவா அமைப்பினர் காசி அகோரிகள் 20 பேரை திருச்சிக்கு வரவழைத்து நள்ளிரவில் கால பைரவர் பூஜை நடத்த செய்துள்ளனர். தமிழகத்தில் நிர்வாணமாக அலைந்தால் ஆபத்து என்பதால் அரை நிர்வாண கோலத்தில் இந்த பூஜைகளள அகோரிகள் நடத்தி உள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் திடீரென நடத்தப்படுகின்றன. வட இந்திய அகோரிகள் தமிழகத்துக்கு முதல் முறையாக வரவழைக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

திமுக ஸ்டாலினே தயாரா.?


நீட், கதிராமங்கலம், நன்னிலம் , உதய் மின் திட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு..


இன்னும் நிறைய ஏதாவது ஒன்றிற்கு அவனுகளை எதிர்த்து ஒரே ஒரு சின்ன  அறிக்கை விடு பார்ப்போம...

இவர்களின் திருட்டுத்தனத்தை மக்கள் உணராத வரை மக்களால் நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் யாரோ சிலரின் துரோகத்தால் முடித்து வைக்கப்படும்...


இவர்களிடம் இருந்து தப்பித்த ஒரே ஒரு போராட்டம் சல்லிக்கட்டு. ஏனெனில் அதில் நாம் இவர்களை அனுமதிக்கவில்லை..

ஏதோ ஒன்று நுழைந்தால் விளங்காது என்று பழமொழி உண்டு, அந்த ஏதோ ஒன்று இந்த திருடர்கள் தான்...

கலசப்பாக்கம் எம்.எல்.ஏவை கன்னத்தில் அறைந்தவர் மர்ம மரணம்...


ஆளும்கட்சி எம்.எல்.ஏவை தாக்கிய இளைஞர் 10 நாள்களுக்குப் பின் திடீர் மரணம்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ., பன்னீர்செல்வத்தை அடித்த வசந்தா மணி என்ற இளைஞர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

கலசப்பாக்கம் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம்...

கடந்த ஜனவரி 21-ம் தேதி கலசப்பாக்கம் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் அ.தி.மு.க பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றார். திருமண மண்டபத்தின் முன்பு இளைஞர் ஒருவர் பன்னீர்செல்வத்திடம் ஆசீர்வாதம் வாங்குவதுபோல் காலில் விழுந்தார். பின்னர் அவரின் கால்களை வாரி கீழே தள்ளினார். பன்னீர்செல்வம் தடுமாறி தரையில் விழுந்தார். அந்த இளைஞர் அதோடு விடாமல் எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் முகத்தில் குத்தினார்.

இதைக் கண்ட எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் இளைஞரை சரமாரியாக தாக்கினர். இதனால் காயமடைந்த இளைஞர், போளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.

இதையடுத்து எம்.எல்.ஏவை தாக்கிய அந்த இளைஞர் போளூரைச் சேர்ந்த வசந்தாமணி என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில நாள்கள் முன்னர் கலசப்பாக்கத்தில் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், பிரமாண்ட மேடை அமைத்து எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளார். எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கான விழா மேடையை போளூரைச் சேர்ந்த வசந்தாமணிதான் அமைத்துக் கொடுத்துள்ளார். மேடை அமைத்ததுக்கான பணத்தை வசந்தாமணி எம்.எல்.ஏவிடம் கேட்டதாகவும், தர முடியாது என மிரட்டும் தொனியில் எம்.எல்.ஏ பேசியதாகவும் தகவல்கள் வெளியானது. பலதடவை, 'மேடை அமைத்ததுக்கான பணத்தைக் கொடுத்துவிடுங்கள்' என வசந்தாமணி கேட்டும் எம்.எல்.ஏ கொடுக்காததால் ஆத்திரமடைந்த வசந்தா மணி எம்.எல்.ஏவை தாக்கியதாகக் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, போலீஸார் வசந்தாமணியைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர். சிறையில் இருந்த வசந்தாமணிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வசந்தாமணிக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்த வசந்தாமணி சிகிச்சை பலனின்றி உயிரிழிந்துள்ளார்...

இலக்கிய இலக்கணம் (இசை)...


யானை, நாய், பூனை, கிளி, காக்கை, மயில் முதலிய உருவ பேதங்களைச் சிறு குழந்தைகளும் பகுத்து அறிகின்றனர். பின்பு அக்குழந்தைகள் எல்லோரும் பேசுவதிலிருந்தும் அவற்றின் வெவ்வேறு பெயர்களைத் தாமே அறிந்து கொள்கின்றனர். நாளடைவில் அவர்கள் செய்கை, குணம், உருவம் முதலியவற்றை எடுத்துக்கூறவும் முயலுகின்றார்கள்.

இவைபோல இசையுலகாவிய சங்கீத உலகத்தில் நிறப்பண்களின் (இராகங்களின்) விகற்பங்கள், பாட்டின் விகற்பங்கள், இசைக்கருவிகளின் ஒலிவிகற்பங்கள், அவற்றின் உருவம், அவற்றின் உருவம், அவற்றைத் திரும்பச் சொல்லும் திறமை முதலிய இவை, இயற்கையில் பல தடவை கேட்பதனால் அடைய பெறுகின்றன. இந்த அறிவு இலக்கிய அறிவு எனப்பெறும்.

யானைக்கும் பூனைக்கும் என்ன பேதம், ஆட்டிற்கும் மாட்டிற்கும் என்ன பேதம், குதிரைக்கும் கழுதைக்கும் என்ன பேதம், குரங்கிற்கும் மனிதனுக்கும் என்ன பேதம் என்பவற்றை நேரில் பார்த்துக் கவனித்து அறிந்தபடி அவற்றின் வேற்றுமையான அடையாளங்களை ஒருவன் எடுத்து விவரமாய் கூறுவதே இலக்கணப் பாடமாகும்.

இலக்கியமென்பது ஒன்றை மேற்பரப்பாய்ப் (ஸ்தூலமாய்) பார்த்து அறிவதைக் குறிக்கும் போது, இலக்கணமென்பது அதன் வெவ்வேறு பாகங்களின் அங்க அடையாளங்களை எடுத்துக் கூறுவதை குறிப்பதாகும்...

சுப்ரீம் கோர்ட்டில் பிப்ரவரி 23-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்க வாய்ப்பு...


காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வந்தது.

இந்த வழக்கு மீதான இறுதி வாதங்கள் கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் 20-ந் தேதி முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமின்றி நாடே இந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி அமிதவராய் வருகிற மார்ச் 1-ந் தேதி பணி ஓய்வு பெறுகிறார். மேலும், பிப்ரவரி 24-ந் தேதியில் இருந்து மார்ச் 5-ந் தேதி வரை ஹோலி பண்டிகையையொட்டி சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே காவிரி நீர் பங்கீடு தொடர்பான இந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 23-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது பிப்ரவரி 23-ந் தேதி அன்றோ வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

இந்தியாவில் இருந்து தமிழகம் பிரிவுபடும் சூழல் உருவாகியுள்ளது - சரத்குமார்...


தமிழ் மொழியை இழிவு படுத்தும் சங்கரமடக் கும்பலுக்கு எதிராக தமிழ் மொழியை நெஞ்சிலேந்திய வள்ளலாரை நினைவு கூறுவோம்...


ஆரிய எதிர்ப்பு என்பது தமிழர்களின் வரலாற்றில் ஆதிகாலந்தொட்டே இருந்து வந்துள்ளது. திருவள்ளுவர் இதனை தொடங்கி வைத்தார். பிறகு ஆன்மீகத் தளத்தில் நின்று சித்தர்கள் போர் தொடுத்தனர். இருப்பினும் ஆரியம் தமிழோடு கலந்து தன்னை புதுப்பித்துக் கொண்டது. இதனை எதிர்த்து தமிழை கருவியாக்கி போராடிய மாபெரும் புரட்சியாளர் தான் இராமலிங்க அடிகளார்.

அவர் எப்போதும்  தமிழை இயற்கையுண்மைச் சிறப்பியல் மொழி என்றும், எல்லா மொழிகளுக்கும் தந்தை மொழி என்றும் திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி என்றும் போற்றிப் புகழ்ந்திடுவார்.

இவர் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள் இராமகிருட்டிண பரமகம்சர், தயானந்த சரசுவதி, இராசராம் மோகன் ராய், விவேகானந்தர் ஆகியோர் வடமொழியை ஏற்று வைதீக மதத்தை போற்றி வந்தனர். இவரோ தமிழை ஏற்காத வைதீக மதத்தையும் வடமொழியையும் புறக்கணிக்கத் துணிந்தார். ஆரிய மொழிகளில் மனம் ஒட்டாத படியால் சாகாக் கல்வியை தரும் ஆற்றல் மொழியான தென்மொழியில் பற்று கொண்டதாக பின்வருமாறு கூறுகிறார்:

"இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெரு மறைப்பையும் பொழுது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில்  எனக்கு ஆசை செல்ல ஒட்டாது பயிலுதற்கு மணிதற்கும் மிகவுமிலேசுடையதாய்ச் சாகாக் கல்வியை இலேசிலறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யொன்றனிடத்தே மனம் பற்றச் செய்து, அத் தென்மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்"

மேலும், வள்ளலார் 'சமரச சுத்த சன்மார்க்கம்' எனும் பெயரில் புதிய சங்கத்தை தோற்றுவித்து, கடவுள் ஒருவரே! அவர் ஒளிவடிவமானவர்! எல்லா உயிர்களிடத்திலும் அன்பும் இரக்கமும் கொள்வீராக! என்று மக்களிடம் முழங்கினார்.

 "இருட்சாதித் தத்துவச்
 சாத்திரக் குப்பை
 இருவாய்ப் புன்செயில்
 எருவாக்கிப்போட்டு
 மருட்சாதி சமயங்கள்
 மதங்களாச் சிரம
 வழக்கெல்லாம் குழிக்கொட்டி
 மண்மூடி போட்டு"
 மேற்கண்ட பாடலில், சாத்திரக் குப்பைகள் தான் இருட்சாதி தத்துவத்தையும் ஆச்சிரம வழக்கத்தையும் சமய மதத்தையும் தோற்றுவித்தன. ஆகவே அவற்றைக் குழியில் கொட்டி மண்போட்டு மூடுங்கள் என சாதிப் பித்துப் பிடித்து அலைவோர்க்கு அறிவுரை புகட்டினார்.

வள்ளலார் பார்ப்பனீய பண்டாரங்களின் ஆடம்பர காவி உடைக்கு எதிராக வெள்ளுடை தரித்தார். ஒருமுறை அவர் காலத்தில் வாழ்ந்திருந்த சங்கராச்சாரியார் வடமொழி நூலொன்றில் ஐயம் தோன்ற, அதனை விளக்குமாறு கேட்டுள்ளார். அப்போது, 'சமசுகிருதமே மாத்ரு பாஷை' (இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி) என்று சங்கராச்சாரியர் கூறிடவே, சட்டென்று நொடிப்பொழுதில் வள்ளலார், "சமசுகிருதம் மாத்ரு பாஷை என்பது உண்மையெனில், அதற்கு  'எமது தமிழே பித்ரு பாஷை'  (இந்திய மொழிகளிக்கெல்லாம் தந்தை மொழி) என்று பதிலடி தந்தார். சமசுகிருதத்தை உயர்த்திப் பிடிக்கும் நரேந்திர மோடியின் வாரிசுகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

சங்கர மடத்து குரு பீடங்கள் பெண்களை 'உவர்நிலங்கள்' என்று வர்ணித்த போது ஆணும், பெண்ணும் சமமாக இறைவனால் படைக்கப்பட்டவர்கள். ஆதலால் பெண்களை பாவப் பிறவி இழிபிறவி என்று ஒதுக்கி வைக்காமல் கல்வி புகட்டுங்கள்! என்று பரப்புரை செய்தார்.

தமிழ் மொழியிலிருந்து பிரிந்து வடமொழியோடு கலந்து போன ஏனைய திராவிட மொழிகளையும் அவர் விட்டு வைக்க வில்லை. அந்த மொழிகளில் இல்லாத தமிழ்மொழிக்குரிய இலக்கண சிறப்புகளை பின்வருமாறு கூறுகிறார்.

"ஆரியம், மகாராட்டிரம், ஆந்திரம் என்று பற்பல பாஷைகளைப் போலாகாமல்- பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாகவும், ஒலியிலே சாயும் கூட்டென்னும் சக்தி அதி சுலபமாயும் எழுதவும் கவி செய்யவும் மிக நேர்மையாயும், அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்காரமின்றி எப்பாஷையின் சந்தங்களையும் தன் பாஷையுள்ளடக்கி ஆளுகையால் ஆண் தன்மையைப் பொருந்தியதுமான தற்பாஷைக்கே அமைவுற்ற ழ் ற் ன் என்னும் முடி நடு அடி சிறப்பியலக் கரங்களில்  முடிநிலை இன பாநுபவ சுத்த மோனா தீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கையுண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பிய யொலியாம்."

 கடினமான இந்த சாரத்தைப் பிழிந்து "தமிழ்ப் பாஷையே அதிக சுலபமாகச் சுத்த சிவானுபூதியைக் கொடுக்குமென்பதாம்" என்னும் வாசகமாக வடித்துத் தருகிறார் வள்ளலார்.

அடிகளார் காலத்தில் கால்டுவெல் அவர்களின் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் வெளிவரவில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இருந்தும், 'தமிழ் தனித்தியங்கும் மொழி' என்பதை ஆராய்ச்சிச் சான்றுகளுடன் மெய்ப்பித்த தமிழர் இவரே.

 வள்ளலாரை மானசீகமாக நேசித்த தமிழறிஞர் ம.பொ.சிவஞானம் அவர்கள் "தாய்மொழிப் பற்றும் துறக்க முடியாதது, துறக்கவும் கூடாது என்பதனை உலகினர்க்கு உணர்த்தியவர் வள்ளலார் ஒருவரே" என்பார். தாய்மொழிப் பற்றை துறந்து வாழும் தமிழர்கள் இனியாவது வள்ளலாரின் நூல்களைப் படித்து தமிழ்மொழி உணர்ச்சிப் பெறுதல் வேண்டும். அது ஒன்றே தமிழினத்தை உய்விக்கும் வழியாகும்.

நூல் உதவி: ம.பொ.சிவஞானம் எழுதிய, வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு...

இயற்கை மீட்சி பெறவும் காடுகள் உருவாகவும் நம் எண்ண அலைகளைக் குவிப்போம்...


கிஸ் மிஸ் பழம் எனும் உலர் திராட்சை பற்றிய தகவல்...


கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை (ஆண்மைக்கு) தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் கு ணமடையும்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.

இதில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சியபின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடகாத்திரமாக வளரும்.

தொண்டைக்கட்டு பிரச்சனை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சைப் பழங்களை சுத்தம் செய்து பசும்பாலில் போட்டுக் காய்ச்சி 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் நிவாரணம் பெறலாம்.

மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும் மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்...

அடிக்கடி வரும் ஏப்பம்: கட்டுப்படுத்த எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்...


உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்து விட்டால், வாய்வாக வெளியேறும்.

ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால், அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும்.

இதோ அதனை சரி செய்வதற்கான டிப்ஸ்...

அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பப் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.

ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடித்தால் ஏப்பத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.

சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். இந்த முறையால் உடனே ஏப்பம் நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், செரிமான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும்.

ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும்.

சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும்.

தினமும் ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

இதில் ஏதாவது ஒற்றை தினமும் பின்பற்றி வந்தால் ஏப்பம் வரும் போது மற்றவர் எதிர் அசிங்கப்படாமல் தப்பிக்கலாம்...

பாஜக வின் ஊழல்...


சூடான குடிநீர்...


நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

அப்படியென்றால் இது உங்களுக்குத் தான் உங்களுக்காக...

உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்...

சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின்
உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கி விடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும்.

இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.

இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு...

மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும்.

தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாரடைப்பு வரும் போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.

60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும் போது அவர்களால் எழுந்து கொள்ள முடியாது. உறக்கத்திலேயே இறந்து விடுவர்.

தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.

ஆகவே எப்பொழுதும் கவனமாகவும்
எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்...

சாகர்மாலா திட்டத்தை மக்களிடம் மறைத்துக் கொண்டிருக்கும் தமிழக விபச்சார ஊடகங்கள்...


சுமேரியன் மொழியில் தமிழ் இருக்கிறது என்று ஆதாரத்துடன் நிருபித்தாலும் நிராகரிக்கப்படுகிறது...


உலக அரசியல் சுமேரிய நாகரிகத்தை புகழ்பெற வைக்கிறது. அதை மார்தட்டிக் கொள்ளும் சிலர் சில சதியை செய்கின்றனர்.

தமிழ் நசுக்கப்படுகிறது. அதிகாரமற்ற நிலை என்று நம் தமிழ் ஆராய்ச்சியாளர் புலம்புகிறார்கள்..

ஊழலால் திமுக அரசு கலைக்கப்பட்ட நாள்... இந்த திமுக அழியாமல் தமிழகம் விடியாது...


தமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்...


 தமிழகத்தில் எந்த மாவட்டத்தில், எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்...

1. சிம்மக்கல் - கறி தோசை, கோலா உருண்டை.
2. நடுக்கடை - இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா.
3. சிதம்பரம் -கொத்சு.
4. புத்தூர் -அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்.
5. திருவானைக்கா - ஒரு ஜோடி நெய் தோசை.
6. கும்பகோணம் - பூரி-பாஸந்தி.
7. ஸ்ரீரங்கம் - இட்லி பொட்டலம்.
8. மன்னார்குடி - அல்வா.
9. கூத்தாநல்லூர் - தம்ரூட்.
10. நீடாமங்கலம் - பால்திரட்டு.
11. திருவையாறு - அசோகா.
12. கும்பகோணம் - டிகிரி காபி.
13. விருதுநகர் - பொரிச்ச பரோட்டா.
14. கோவில்பட்டி - கடலை மிட்டாய்.
15. ஆம்பூர் - தம் பிரியாணி.
16. நாகர்கோவில் - அடை அவியல்.
17. சாத்தூர் - சீவல்.
18. திருநெல்வேலி - இருட்டுக் கடை அல்வா.
19. ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா.
20. செங்கோட்டை - பார்டர் கடை. பரோட்டா, நாட்டுக் கோழி வறுவல்.
21. மணப்பாறை - அரிசி முறுக்கு.
22. கீழக்கரை - ரொதல் அல்வா.
23. திண்டுக்கல் - தலப்பாக் கட்டி பிரியாணி.
24. பண்ருட்டி - முந்திரி சாம்பார்.
25. மதுரை - ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்.
26. சாயல்குடி - கருப்பட்டி காபி.
27. பரமக்குடி - சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா.
28. பழனி - சித்தநாதன் பஞ்சாமிர்தம்.
29. கமுதி - மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி.
30. ‪புதுக்கோட்டை - முட்டை மாஸ்‬.
31. தூத்துக்குடி - மக்ரூன்.
32. சௌக்கார் பேட்டை - மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி.
33. கன்னியாகுமரி - தேங்காய் சாதம், மீன் குழம்பு.
34. ராமநாதபுரம் - கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்.

35. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும் தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பாயிருக்கும்.

அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில...

1. குழிப்பணியாரம்.
2. வாழைப்பழ தோசை.
3. எண்ணெய் கத்தரிக்காய்.
4. பால் பணியாரம்.
5. பூண்டு வெங்காய குழம்பு.
6. ரவா பணியாரம்.
7. பால் கொழுக்கட்டை.
8. சேமியா கேசரி.
9. மோர் குழம்பு.
10. நாட்டுகோழி மிளகு வறுவல்.
11. இறால் தொக்கு.
12. நாட்டுக் கோழி ரசம்.
13. நண்டு மசாலா.
14. வெண்டைக்காய் புளிக்கறி.
15. பருப்பு சூப்.
16. ரிப்பன் பக்கோடா.
17. பருப்பு உருண்டை குழம்பு.
18. குருமா குழம்பு.
19. தேன்குழல்.
20. கருப்பட்டி பணியாரம்.
21. சீயம்.
22. மாவுருண்டை.

உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்..

கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?

இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமே தான்னுங்கிறது நிதர்சமான உண்மை...

இந்த நிலை தொடர்ந்தால் மனித இனமும் வெகு விரைவில் இதே நிலை தான்...


தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே சென்னையில் பிப்ரவரி 3 அன்று மாநாடு...


திருச்சி செய்தியாளர் சந்திப்பில்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அழைப்பு...

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே - வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல என்ற தலைப்பில், வரும் பிப்ரவரி 3 – சனிக்கிழமையன்று, சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் சிறப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து, இன்று (29.01.2018) காலை, திருச்சியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், பொதுக்குழு உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன் உள்ளிட்டோர் இச்செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.

தோழர் பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது...

தமிழ்நாட்டில் வருவாய்த் துறை எழுத்தர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) உள்ளிட்ட மாநிலப் பணிகளுக்குத் தேவையான 9,351 வேலைகளுக்கான எழுத்துத் தேர்வைத் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (TNPSC) 11.02.2018 அன்று நடத்துகிறது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் உள்ளவர்களம், நேப்பாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்களும், பாக்கித்தான், வங்காளதேசம், திபெத், மியான்மர், இலங்கை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்து வந்தவர்களும் கலந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தனது அறிவிக்கையில் (14.11.2017) அழைத்துள்ளது.

இதுவரை இல்லாத புதிய மாற்றமாக இவ்வறிப்பு உள்ளது. தமிழ்நாட்டில் கல்வித்தகுதி பெற்ற 90 இலட்சம் பேர் வேலை தேடி, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இந்திய நாடு முழுவதும் உள்ளவர்களும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இத்தேர்வு எழுதினால் தமிழ்நாட்டின் குடிமக்களுக்குத் தமிழ்நாட்டிலேயே வேலை கிடைக்காத அவலம் ஏற்படும். மண்ணின் மக்களாகிய இளம் ஆண்கள் மற்றும் பெண்களின் எதிர்காலம் என்னவாகும்?

இதற்குமுன், தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணி இடங்களுக்கான தேர்வில், இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களை அனுமதித்ததால், பல நூறு பணி இடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்குக் கிடைத்தது. அதில் தேர்வுத்தாள் திருத்துவதில் ஊழல் செய்தவர்கள் இப்போது பிடிபட்டு வருகிறார்கள். அம்முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான பி.எச்.இ.எல்., நெய்வேலி அனல் மின் நிலையம், இரயில்வே, படைக்கலத் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், மற்றும் வருமான வரி, உற்பத்தி வரி, அஞ்சலகங்கள், வங்கிகள் போன்றவற்றில் அண்மைக்காலமாக 100க்கு 80 பேர் என்ற அளவில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலைக்கு அமர்த்துகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வேலை வழங்கினால் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலமே இருண்டு விடும்!

தமிழ்நாட்டு தொழில், வணிகம், அதிகார வர்க்கம் அனைத்திலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே கோலோச்சுகிறார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டப்படி தமிழர்களின் மொழி, கல்வி, பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்காக 1956இல் மொழியின மாநிலமாக, உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு. அரசமைப்புச் சட்டப்படி உள்ள தமிழர் உரிமைகளை மறுக்கும் வகையில் வெளி மாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வேலை வாய்ப்புகளில் கொண்டு வருவது மிகமிகத் தவறு.

மகாராட்டிரம், கர்நாடகம், குசராத், மேற்கு வங்கம், சத்தீசுகட் போன்ற பல மாநிலங்களில், அந்தந்த மாநில மக்களுக்கு மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறை வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுத்து வேலை ஒதுக்கீடுகளுக்கான சட்டங்களும், அரசு ஆணைகளும் இருக்கின்றன.

எனவே, தமிழ்நாட்டிலும் அதுபோல் அரசுத்துறை வேலைகளில் 100 விழுக்காடும், நடுவண் அரசு வேலைகளில் – தனியார் வேலைகளில் 90 விழுக்காடும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும். அதற்கான மாதிரிச் சட்ட வரைவு 03.02.2018 அன்று சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே” மாநாட்டில் நிறைவேற்றப்படும்!

இதற்கான சட்டத்தை நிறைவேற்றும்படி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தொடர் மக்கள் திரள் இயக்கம் நடத்தப்படும். வரும் 11.02.2018 அன்று நடைபெறும் எழுத்துத் தேர்வில், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து, தமிழ்நாட்டு மாணவர்களை மட்டுமே தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானம் அம்மாநாட்டில் இயற்றப்படும்.

சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவர் திரு. மு. தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கப் பொதுச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன், இயக்குநர் மு. களஞ்சியம், இயக்குநர் வ. கௌதமன், திசம்பர் 3 இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீபக்நாதன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், துறைசார் வல்லுநர்கள் மாநாட்டில் உரையாற்றுகின்றனர். கலை நிகழ்ச்சிகள், புகைப்படக் கண்காட்சி, பா வீச்சு என காலை 9.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை இம்மாநாடு நடக்கிறது.

தமிழர்களின் எதிர்காலம் குறித்து அக்கறையுள்ள அனைவரும், இம்மாநாட்டில் அவசியம் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கிறோம்.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் பேசினார்...