28/03/2018

நமது பூர்வீக பாரம்பரிய நெல் வகைகளை ஹிந்திய பிராமண காங்கிரஸ், பிராமண பாஜக அரசை நம்பி நாம் தொலைத்து விட்டோம்...


ஆனால் அமெரிக்க பூர்வக் குடி செவ் இந்தியர்கள் இன்றும் அவர்கள் பூர்வீக பாரம்பரிய நெல் விவசாயம் செய்து அதில் இருந்து வரும் கருப்பு  நிற அரிசையை உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றார்கள்.

இந்த அரிசியை அமெரிக்க ஐரோப்பியர்கள் காட்டு அரிசி (wild rice ) என்று அழைக்கின்றனர்

பாரம்பரிய உணவு முறையால் செவ்விந்தியர்கள் ஐரோப்பியர்களை விட அதிக ஆரோக்கியத்துடன் நோய்கள் தாக்கு இன்றி பல காலம் வாழ்கின்றனர்...

அனைவரும் மாலை வாங்கிவச்சுகிட்டு தாரை தப்பட்டையுடன் ரெடியா இருங்க...


சென்னை விமான நிலையம் சென்று தற்கொலை செய்துகொண்டு பிணமா வரபோர 37 MPகளின் பாடிக்கு வரவேற்பு கொடுக்கனும்...

சொன்னவரு மானஸ்தன் வேற...

சேலம் – மேட்டூர் காவிரி ஆற்றில் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு மீன்கள் செத்துக் கிடக்கிறது...


மேட்டூர் அணையின் காவிரி ஆற்றில் ஓடும் நீர் பச்சை நிறத்தில் இருப்பதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டி வந்தனர் இந்த நிலையில் காவிரி ஆற்றில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.

அதாவது, மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் அங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள செக்கானூர் தடுப்பணையில் தடுக்கப்பட்டு மீன் உற்பத்தி நடைபெறுகிறது. இதற்கு இடைப்பட்ட பகுதியில் மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிதக்கும் மீன்களைப் பொது மக்கள் அள்ளிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் காவிரி நீரைக் குடிநீராகப் பயன்படுத்தி வருவதாகவும், உடனடியாக மீன்களை அகற்றாவிட்டால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்றும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுபோன்று சமீபத்தில் சுமார் ஐந்து டன் மீன்கள் செத்து மிதந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரி கரையோரம் இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகளாலேயே மீன்கள் செத்து மிதப்பதாகப் புகார் எழுந்தது.

எனவே மாசுக்கட்டுப்பாடு வாரியம், மீன்வளத் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் காவிரி ஆற்றை ஆய்வு செய்து தண்ணீர் மாதிரி எடுத்துச் சென்றனர்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது....

பொய் பேசும் பாஜக அமித்ஷா கடைசில உண்மை பேசிட்டாரு, ரொம்ப நன்றி அமித்ஷா , அமித்ஷாவை கலாய்த்த சீத்தாராமைய்யா...


கன்னட ஈ.வே.ரா எனும் பெரியாரின் தமிழின அழிப்பு...


இந்த புகைப்படத்தை பதிவிட்டபோது இது போலி விசமிகளால் போலியாக உருவாக்கப்பட்டது என்று மறுப்பு கொடுத்தனர் திராவிடர்கள்..

1904ல் காசிக்கு பிராமணர்களோடு போய் விட்டு சோறு கிடைக்காத கோபத்தில் பிராமணியத்தை வெறுத்து,

ஊர் திரும்பிய ராமசாமியாரை வரவேற்ற தந்தை வெங்கட்ட நாயக்கர் மகனுக்கு பொறுப்பு வர வேண்டும் என்று தன் பெயரில் இருந்த மண்டியை மகன் பெயரில் மாற்றியுள்ளார்..

இப்பெயர் பலகை நாளடைவில் வண்ணம் மங்கவும் உடனே பா.வெ.மாணிக்க நாயக்கர் என்பவரால், ஆயில் பெயிண்ட் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது..

எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் அடையாளத்தை இழக்க விரும்ப மாட்டார்கள் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு,

இன்றும் ஈரோட்டில் துறவிக் கோல புகைப்படமும் இப்பெயர் பலகையும் இருப்பதாக செய்தி,

இனி மறைக்கப்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல...

போராட்டம் செய்யும் தமிழர்களை போர் செய்ய வைத்து விடாதே...


அமானுஷ்யம் - எப்படி தன்னுடைய உயிர் போகும் என்று முன்பே அறிந்த ஆப்ரஹாம் லின்கன்...


எதிர்காலத்தை முன்பே அறியும்  திறன் உண்மையாக உள்ளதா என்பதை இது வரை எந்த அறிவியல் ஆராய்ச்சியாளரும் சொல்ல முடிய வில்லை...

எதிர்காலத்தில் நடக்க போவதை கணிக்க இயலும் என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர்.

எதிர்காலத்தில் தாங்கள் இறக்க போகும் தருணத்தை பெரும்பாலானோர் கண்டதாக கூறி உள்ளனர்.

இதில் மிகவும் பிரபலமான ஒன்று தான் ஆப்ரஹாம் லின்கனின் மரணம்.

1865 ஆம் ஆண்டு , ஆப்ரஹாம் லின்கன் துப்பாகியால் சுட்டு கொல்லப்படும் முன்பு அவரின் கனவில்  தான் இறந்து கிடப்பதை கண்டு அந்த கனவை தனது மனைவியிடம் கூறி உள்ளார்.

இருவரும் முற்போக்கு சிந்தனையாளர்கள் என்பதால் , இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

எதோ ஒரு கேட்ட கனவு என்று விட்டு விட்டனர். இரண்டே வாரங்களில் ஆபிரகாம் லின்கன் சுட்டு கொள்ள பட்டார்.

இந்த மாதிரி கனவுகளை  Precognitive Dreams என்று ஆங்கிலத்தில் கூறுவர்...

தமிழா இதற்குப் பெயர் தான் உலகமயமாக்கல்...


வீடு நாட்டுல இல்லாம எங்க விண்வெளிலயா இருக்கு.. முத்திடுச்சா...


திராவிட திருடர்களே தமிழர் நிலம் 70,000 ச.கி.மீட்டர் பறிபோனது யாரால்?


இன்று அப்பகுதியில் நாடற்றவர்களை போல கோடிக்கோடி தமிழர் வாழ வேண்டிய நிலையை உருவாக்கியது யார்?

மூன்று முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகள் பறிபோனது யாரால்?

முக்கிய தமிழரின் வழிப்பாட்டுத் தலங்களை பறித்துக் கொண்டு.. இன்று, அத்தலங்களுக்கு செல்லும் தமிழர் மீது சுடுதண்ணீர் ஊற்றி விரட்டும் நிலையை உருவாக்கியது யார்?

ஒருங்கிணைய இருந்த தமிழரை கன்னடன் மலையாளி என துண்டாடி பிரித்தெடுத்தது யார்?

தமிழ் மூவேந்தரையும் தூக்கி தலையில் வைக்க வேண்டிய தமிழனை தூற்ற வைத்து, தூற்ற வேண்டிய இனப் பகையினரை தலையில் தூக்கிவைத்து ஆடும் நிலையை உருவாக்கியது யார்?

2009ல் மாபெரும் ஈழ இன அழிப்பை நடத்தியும் இன்னும் உணர்வற்று கிடக்கும் நிலையை உருவாக்கியது யார்?

கடந்த 2016 ஏப்ரல் மாதம் 20 தமிழரை துன்புறுத்தி சுட்டுக்கொன்ற பின்னரும் குருதி கொதிக்காமல் முடங்கிக்கிடக்கும் நிலையை உருவாக்கியது யார்?

இது போக இன்னும் ஏராளம் உள்ளது..

தமிழின அழிப்பை துளியும் அஞ்சாமல் திறம்பட செய்து, மாய பிம்பத்தால் பொய்யாக நின்று இன்றும் தமிழர் குடியை அழித்திட துணைபோகும், வடுக இனவெறியன் ராமசாமியை அரவணைத்து தமிழர் இன விடுதலை காண்போம் என்பது கானல் நீரே...

தமிழா நம் மண்ணை காக்க.. நாம் போராட வேண்டிய நேரமிது...


உண்மை அறிவு...


நம்பிக்கைக்கும் , மூடநம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் மயிரிழை அளவே வித்தியாசம் உள்ளது. அதைத் துல்லியமாக இனம் பிரித்து புரிந்துக் கொள்வதே உண்மையான பகுத்தறிவு...

மனோசக்தியே மந்திர சக்தி.என்பார்கள் அந்த மனோசக்தியை எப்படி பயன் படுத்திக் கொள்வது என்பதை உண்மையான அறிவைக் கொண்டு சிந்திப்போம்..

எப்படி மின்சாரத்தைப் பற்றிப் படித்து, தெரிந்து அதை அனுபவிக்க மின்சார விசிறியும், மின் சாதன கருவிகளையும், மின்சாரத்தால் இயங்கும் மின்சார ரெயிலும் ஓட்டுகிறோமோ, அதைப் போல மனதைக் கட்டுப்படுத்தும், மனதைத் திருப்பும் வழியைக் கற்றுக் கொண்டோமானால், நம் மனோசக்தியின் மூலம் நாம் விரும்பும் பல்வேறு காரியங்களை சாதிக்கலாம்..

நமது நாட்டில் பலர் ஏழைகளாக இருப்பதற்கும், சிலர் சுகமாக எல்லா வசதிகளுடன் வாழ்வதற்கும் காரணம், அவர்கள் படிப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பது தான். அனைவரும் சொல்லிக் கொண்டு உள்ளார்கள் .

அந்தப் படிப்பைப் பெற்றவர்கள் கூட படிப்பிலே எது முக்கியம் என்று தெரிந்து கொள்வதில்லை. அந்த முக்கியமான விஷயம் ஏட்டுப் படிப்பால் தெரிந்து கொள்ள முடியாது..

மனதை திருப்பி மாற்றி எங்கு செல்ல வேண்டுமோ அங்கு திரும்பச் செல்ல  வைக்கும் முறைக்கு தியானம் என்று சொல்லப்படும் ..

இன்று அமெரிக்காவில் பல பல்கலைக் கழகங்களிலும் மற்ற நாடுகளிலும்  தியானத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதே போல் ஊருக்கு ஊர் தியானம் சொல்லிக் கொடுக்கும் சங்கங்கள் இருக்கின்றன.

ஒரு மனிதன் செல்வந்தனாக இருப்பதற்கும் மற்றொருவன் ஏழையாகவும் வாழ்வதற்கும் காரணம், அவர்கள் மனதில் கொண்டிருக்கும் எண்ணங்கள், ஆசைகள் தான் என்று மனவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்..

அதே போல அந்த ஆசைகளை எப்படி சீர்படுத்தி, வாய்க்கால் வெட்டி, பாத்தி கட்டி,தண்ணீர் விட்டு செல்ல வேண்டிய இடத்திற்கு செலுத்தி பயிர் இடுவது போல் மனதை எங்கு செலுத்த வேண்டுமோ அங்கு செலுத்துவது தான் தியானம் என்பதும், மனதை ஒருமுகப் படுத்துதல் என்பதாகும்..

பூதக் கண்ணாடியைப் பார்த்திருப்பீர்கள். கீழே ஒரு தாளை வைத்து பூதக் கண்ணாடியை சூரியனுக்கு எதிராகப் பிடித்தால், சூரியக் கதிர்கள் ஒருமுகப்பட்டு தாள் எரியத் தொடங்குகிறது. பூதக் கண்ணாடி சூரிய சக்தியை ஒரு முகப்படுத்துகிறது. ஒருமுகப்படுத்தும் போது சக்தி அதிகமாகிறது. அதன் வலிமை, எரிக்கும் சக்தி அதிகமாகிறது.

அதே போல்  நம் மனதை, மனச்சக்தியை கொண்டு, அந்த சக்தியை ஒருமுகப்படுத்தும் மார்க்கங்களைத்தான் 'ஜெபம்' என்றும் 'தியானம்' தவம் என்றும் சொல்லுகிறோம்.

உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'பிரார்த்தனை ,ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம்.

யோகிகள் மனதை ஒருமுகப்படுத்த சில மந்திரங்களை இரகசியமாகச் சொல்லிக் கொடுப்பார்கள். எந்த எண்ணமும் மனதிற்குள் இரகசியமாக வைக்க வைக்க, அதற்கு வலிமை அதிகமாகிறது. இது தான் இரகசியமாகச் சொல்வதின் காரணம்.

மந்திரம் என்று எதைச் சொல்கிறார்கள்?

ஒரு சொல்லை அதாவது மந்திரத்தை ஆழ்மனம் திரும்பத் திரும்பச் சொல்வது தான் மந்திர சக்தியை  ஏற்படுத்துகிறது. எதைத் திரும்ப திரும்பச் சொல்கிறோமோ அதன் பொருள் நம் ஆழ் மனதில் பதிந்து நமக்கு எப்போதும் மந்திர சக்தி உதவத் தயாராயிருக்கிறது.

அந்த மந்திரத்தைக் கொண்டு "வழிகாட்டு" என்று முறையிட்டோமானால் அந்த மந்திர சக்திக்கு தகுந்த சக்தி நமக்கு வழிகாட்டும்..

திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் விஷயங்கள் ஆழ்மனதிற்குப் போகின்றன. ஆழ்மனதில் போடப்பட்ட விஷயங்களை ஆழ்மனம் நிறைவேற்றி வைக்கிறது. இதுதான் உண்மை.

அது முழுமையானதா என்றால் முழுமையானது அல்ல . அதனால் ஒரு சிறிய சக்தி என்னும் ஒளி கிடைக்கின்றது.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரான்சு நாட்டு மருத்துவர், "நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையிலும் முன்னைவிட ஆரோக்கிய மானவனாக இருக்கிறேன்" என்று நோயாளிகள் திரும்பத் திரும்பச் சொல்லச் செய்ததன் மூலம் அவர்களது நோயைக் குணப்படுத்தினார். இது இன்னும் "நமக்கு நாம் சொல்லிக் கொள்ளுதல்" என்ற தத்துவத்தின் கீழ் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

இப்படியாக மனதை ஒருமுகப்படுத்தும் பழக்கந்தான், நாளைக்கு நாம் ஒரு வேலையைச் செய்யும் போது மனதை அந்த விஷயத்தில் ஒருமுகப்படுத்துவது எளிதாகிறது. இதனால் அந்த முயற்சிகள் வெற்றியடைகின்றன.

ஜெபம், தியானம் தவம் மூலம் மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும், நம் ஆசைகளை, இலட்சியங்களை, ஆழ்மனதிற்கு அனுப்பி வைக்கும் முறையையும் கற்றுக் கொள்கிறோம்.

சுயகட்டுப் பாட்டின் முக்கியமான பாடம் இதுதான். இதை விடாது நீங்கள் பயிற்சி செய்து பார்த்தீர்களானால், அதி ஆச்சரியமான நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்வில் நேர்வதைப் பார்ப்பீர்கள்; வெற்றி உங்கள் கைக்குள் வந்து சேரும். இதுவே இத்தனை நாள் அதிகம் பேருக்கு சொல்லிக் கொடுக்கப்படாத இரகசியமாக இருந்தது

அருட்பெருஞ்ஜோதி தியானம் !

உலக மக்களுக்கு தெரியப்படுத்த வள்ளல் பெருமான் ஒரு பெரிய மகா மந்திரத்தை நினைத்து தியானம் செய்ய சொல்லி உள்ளார்கள். அந்த மந்திரத்தை சொல்லும் போது கண், மனம், ஜீவன் , உள்ளம் அனைத்தும் வெளியே செல்லாமல் உள் ஒளியான ஆன்மாவைத் தொடர்பு கொண்டு அதையே இடைவிடாது, நினைந்து தியானம் செய்ய வேண்டும்.அதுவே சத்விசாரம் என்கின்றார் வள்ளலார் .

மற்ற மந்திரங்கள் அனைத்தும் அந்த அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி  தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்னும் மந்திரத்தின் உள்ளே அடங்கி விடுகின்றது. அதனால் அதற்கு மகா மந்திரம் என்று பெயர் வைத்துள்ளார்..

நாம் அந்த மகா மந்திரத்தை இடைவிடாது சொல்லிக் கொண்டே புருவ மத்தியில் மனத்தை செலுத்த வேண்டும்.. அப்போது மனம் வெளியில் செல்லாமல் ஆன்மாவை தொடர்பு கொள்வதால் நம் உடம்பின் தலைப் பாகத்தில் உள்ள ஆன்மாவில் இருந்து பேராற்றல் என்னும் மாபெரும் சக்தி உடல் முழுவதும் பரவி ஒரு பேரானந்தம் உண்டாகும் .

அந்த ஆனந்தம் தான் மனிதன் அடைய வேண்டிய ஆனந்தமாகும். அதை அனுபவிப்பவன் மனித நிலையில் இருந்து கடவுள் நிலைக்கு மாறுகின்றான் .

இதையே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தியானம் செய்கின்றவர்களுக்கு மனத்திற்கும் ஆன்மாவிற்கும் தொடர்பு உண்டாகி, அதிகமான சுத்த உஷ்ணம் உண்டாகும் . அந்த சுத்த உஷ்ணத்தினால் ஆன்மாவில் இருந்து அருள் என்னும் திரவம் சுரக்கும். அந்த அருளைப் பெற்றவர்களுக்கு உலகின் அனைத்து உண்மைகளும் வெட்ட வெளிச்சமாக தெரியும்.

வள்ளலார் சொல்லிய சன்மார்க்க தியானத்தை செய்பவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியும் இன்பமும், மேலும் என்றும் அழியாத உடம்பும் உயிரும் பாதுகாக்கப்படும். அதற்கு ஞான மருந்து என்று பெயர் வைத்து உள்ளார் வள்ளல் பெருமான்.

என்றே எனினும் இளமையோடு இருக்க நன்றே தரும் ஒரு ஞான மாமருந்து என்கின்றார்.

அந்த ஞானமருந்தை தியானத்தின் வழியாக பெற்று பெருங்களிப்பை அடைவோம், பெறுவோம்.

இதுவே உண்மை அறிவாகும்...

இனி நியூஸ்7 வை வச்சி செய்வோம்...


திருட்டு விபச்சார ஊடகங்கள்...


நியூட்ரினோ ஆய்வுக் கூடத்திற்கு தேவையாக முல்லை பெரியாறு அணையில் இருந்து 340 கிலோ லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதிக்க படுகிறது என்று செய்திகள் வெளியாகிறது....

எவ்வளவு நுட்பாக ஊடகம் தனது பயங்கரவாதத்தை காட்டுகிறது என்றால் 3,40,000 லிட்டர் தண்ணீர் என்பதை சுருக்கி, அதன் மூலமாக வரும் எதிர்ப்பை மட்டுப்படுத்த 340 கிலோ லிட்டர் என்பதும்,

கூடங்குளம் அணுவுலை மின்சார உற்பத்தி யை மெகாவாட்டில் இருந்து பெறுக்கி 2,50,000 யூனிட்கள் என்று பூதாகரமாக எடுத்துக் காட்டுவதும் பச்சை பொறுக்கித்தனம்.....

வாழ் நாள் முழுவதும் அவற்றை புறம் தள்ள வேண்டும்...


ஸ்டெர்லைட் ஆலையின் திருட்டுத்தனம்...


ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் மேலும் ஆலையின் விரிவாக்க பணிக்கு அப்பகுதி மக்கள் ஆதரவு தருகிறார்கள் என்றும்...

தனியார் பள்ளிகளின் உதவியுடன் ஸ்டெர்லைட் நிர்வாகம் அப்பகுதியில் படிக்கும் மாணவர்கள் மூலமாக பெற்றோர்களிடம் திருட்டு தனமாக கையெழுத்து வாங்குகிறது..

அதன் புகைப்படம் சமூக வலை தளங்களில் வேகமாக பரவுகிறது...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


கர்நாடக தேர்தல் தேதி பாஜக நிர்வாகிக்கு முன் கூட்டியே எப்படி தெரிந்தது , தகவல் கசிந்தது எப்படி ?, விசாரனை குழுவை அமைத்து தேர்தல் ஆணையம் உத்தரவு...


7 நாட்களுக்குள் அறிக்கை அனுப்ப உத்தரவு..

பாஜகவின் ஐடி விங் கின் தலைமை நிர்வாகி அமித் என்பவர் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்னரே தேர்தல் தேதியை டிவீட் செய்திருந்தார்...

ஆபத்தை உணர்ந்து தப்பி பிழைத்திடு எம் தமிழினமே...


ஸ்டெர்லைட் நிர்வாகம் அரசியல் கட்சிகளுக்கு நிதி(லஞ்சம்) கொடுத்த பட்டியல்...

பாஜக விற்கு  எவ்வளவு பணம் போயிருக்குனு பாருங்க...


News7Tamil என்ன அண்ணாச்சி கண்ணு வேற்குதா?

ஸ்டெர்லைட் ஆலையிடம் லஞ்சம் வாங்கின பாஜக... காவிகளுக்கு சமர்பணம்...


News7Tamil அடுத்து உங்க VV மினரல்ஸ் தயாரா இருங்க...

காஷ்மீர் நாள் 627...


புல்வாமா மாவட்டத்தில் உள்ள Tahab பகுதிக்குள் நேற்று நள்ளிரவு நுழைந்த இந்திய இராணுவம் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அத்துமீறி தேடுதல் வேட்டையை நடத்தியதோடு, வீட்டில் இருந்த பொது மக்களை தாக்கியதோடு, பொருட்களையும் அடித்து உடைத்துள்ளனர்.

இராணுவத்தின் இந்த அயோக்கியத்தனத்தை கண்டித்து இன்று அப்பகுதி மக்கள் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள Sopore பகுதிக்குள் நுழைந்த இந்திய இராணுவம் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அத்துமீறிய தேடுதல் வேட்டையை நடத்தியது, இந்த அத்துமீறிய தேடுதலை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்களின் மீது இராணுவம் கடுமையான கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

நேற்று இரவு சோபூர் மற்றும் ஹஜின் பகுதிகளில் தேடுதல் வேட்டையை நடத்திய இந்திய இராணுவம், அப்பாவி காஷ்மீரிய இளைஞர்கள் மூன்று பேரை கைது செய்துள்ளது.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள Lachipora Uri பகுதியில் ஏற்பட்ட மர்மமான தீ விபத்தில் கிட்டத்தட்ட நான்கு குடியிருப்புகள் எரிந்து முற்றிலுமாக சேதமடைந்துள்ள...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியால இதெல்லாம் சாதாரணமப்பா...


எல்லாமே அதிர்வு தான்...


நாம் எல்லோரும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறோம்.

இந்த மொத்த பிரபஞ்சமும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.

நம் ஐம்புலன்களும் அதிர்வுகளாகவே அனைத்தையும் உணர்கிறது.

கண் காட்சிகளின் அதிர்வுகளையே கிரகிக்கிறது. காது சப்தத்தின் அதிர்வுகளையே கேட்கிறது.

மூக்கு வாசனைகளை அதிர்வுகளாகவே நுகர்கிறது. வாய் சுவைகளை அதிர்வுகளாகவே சுவைக்கிறது.

மெய் ஸ்பரிசத்தை அதிர்வுகளாகவே உணர்கிறது. ஆம் உண்மையில் நாம் யாரையும் தொடவே முடியாது.

அணுக்களின் விலக்குவிசைதான் நாம் தொடுவதாக நம்ப வைக்கிறது. எல்லாம் அடிமட்டத்தில் ஆற்றலின் வெவ்வேறு  வகையான அதிர்வுகள்தான்.

நாம் எல்லோரும் Frequency generator தான். சுபக்கிரகங்களின்  கதிர்கள் நம் உடலை ஊடுருவி செல்லும்போது உணர்வுகள் சுகமாகவும்.

அசுப கிரகங்களின் கதிர்கள் நம் உடலை ஊடுருவும் போது அசௌகிரயமாகவும் உணர்கிறோம்.

இப்படியான வெவ்வேறு வகையான உணர்வுகள் வெவ்வேறு விதமான எண்ணங்களை நம் மனதில் தோற்றுவிக்கிறது.

வலுவான உணர்வுகள் புறமனத்தில் ஆழமான எண்ணங்களை உருவாக்கி  புறமனத்தை நம்ப வைத்து ஆழ்மனத்திற்கு கட்டளைகளாக பிறப்பிக்கப்படுகின்றன.

பின் பகுத்தறிவில்லாத ஆழ்மனம் எஜமானனின் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றி கொடுக்கிறது.

ஆக நம் உணர்வுகள்தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது என்பது புரியும். நாம் உணர்வுகளை கவனிக்க தொடங்கி..

எண்ணங்களின் வலிமையால் சுகமான உணர்வு நிலையிலேயே வைத்தோமானால் எந்த ஒரு எதிர்மறை விடயமும் உங்கள் வாழ்வில் அரங்கேறாது.

நாம் தேவையை நினைக்க தொடங்கிய அடுத்த கனமே விமானம் புறப்பட்டு விட்டதாக அர்த்தம். நம் சிந்தனை எல்லாம் சேர வேண்டிய இடத்திற்கு விமானம் சென்றபிறகு என்னென்ன செய்ய போகிறோம் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும்.

அதைவிடுத்து விமானம் போய் சேருமா? வழியிலே விபத்தாகி விடுமா என்பது போன்று சிந்திக்கவே கூடாது.

ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைந்துவிட்டோம் என்று நம்பி அடைந்தபிறகு என்னன்ன செய்ய போகிறோம் என்பதை மட்டும் அடிக்கடி மனத்திரையில் ஓட விடுங்கள்.

அந்த இலக்கை நீங்கள் 100 சதவீதம் நிச்சயமாக அடைவீர்கள்...

பாஜக அமித்ஷா ஒரு உண்மையை சொல்லி இருக்கார் பாராட்டுக்கள்...



இந்தியை எதிர்க்கும் காலி களைச் சுட்டுத் தள்ளுங்கள் கன்னட ஈ.வே.ரா...


ஈ.வே.ரா எழுதுகிறார்...

ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது.
எதற்காக சட்டம்?
எதற்காக போலீஸ்?
எதற்காக போலீஸ் கையில் தடி? துப்பாக்கி எதற்கு?
முத்தம் கொடுக்கவா வைத்துள்ளாய்?
இது என்ன அரசாங்கம்?
வெங்காய அரசாங்கம்.

(நூல்: கிளர்ச்சிக்குத் தயாராவோம் - ஈ.வே.ரா).

மேற்கண்டது இந்தியெதிர்ப்பு நடந்து முடிந்த பிறகு ஈ.வே.ரா எழுதிய நூல்.

இந்தி எதிர்ப்பு நடந்தபோது ஈ.வே.ரா தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் கொலைகார அரசுக்கு ஆதரவாகவும் எழுதிய கட்டுரைகளின் தலைப்புகள்.

இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் - (16.1.1965).

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்துமீறிய வன்செயல் - (28.1.1965).

திருச்சியில் மாணவர்கள் காலித்தனம். பஸ்க்கு தீ. தபால் நிலையம் கொள்ளை - (10.2.1965).

போலீசார் அத்து மீறியதாக கூறப்படுபவை அபாண்டமே - (4.3.1965).

பொள்ளாட்சியில் போராட்டத்தை இராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10பேர் மாண்டனர் - (13.2.1965).

ஈ.வே.ரா வுக்கு தமிழ் மீது இருந்த வெறுப்பையும் தமிழர் மீது இருந்த கொலை வெறியையும் இதன் மூலம் அறியலாம்.

மூலக்கட்டுரை: 1965ஆம் ஆண்டு மொழிப்போரும் - பெரியாரின் எதிர்ப்பும்...

சொம்பு அடிச்சது போதும்... தலைப்பு செய்தில் போடு...


யாருக்காக இந்த ஊடகங்கள் தமிழ் மண்ணில்..?


என் நிலத்தில் நீ பயணம் செய்கிறாய்.,..

ஆனால் எங்கள் மக்கள் தெருவில் நின்று கதறுவதை நீ மக்களுக்குச் சேர்க்க மனமில்லை எனில் , இது யார் குற்றம்...?

உன்னை கேள்விக்கேட்கிறோம்..
தூத்துக்குடி மக்களும் தஞ்சை டெல்டா மக்களின் போராட்டம் புரியவில்லையா?

காவிரி மேலாண்மை வாரியம், டெல்லியில் தமிழக விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்...


கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ந் தேதி தேர்தல்...


தேர்தல் தேதி அறிவித்திருந்தாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை- தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

தமிழ் விவசாயிகள் சங்கம். தூத்துக்குடி மாவட்டக்குழு....


மாவட்ட நிர்வாகத்தில் சில சமூக விரோதிகள்.. விவசாயிகள் என்ற போர்வையில் சில அதிகாரிகளை தங்கள் கைப்பாவையாக வைத்துக் கொண்டு. உண்மை நிலையை வெளிப்படுத்தும் தமிழ்விவசாயசங்க நிர்வாகிகள் மீது அவதூறு பரப்புவதும். அதிகாரிகள் மூலமாக பொய் வழக்குகள் போட முயற்ச்சிப்பதும் நடந்து வருவது தெரிகிறது.

இவர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் நாங்கள் தான் என்று ஒரு பொய்யான முகமுடியை மாட்டிக் கொண்டு
உண்மையான விவசாய சங்க பிரதிநிதிகள் மீது பொய் வழக்கு போட்டால்.. இவர்கள் செய்யும் ஊழல் வெளியில் தெரியாது என்று நினைக்கிறார்கள்.

இந்த சமூக விரோதிகள் தனிமனிதர்கள் தான். இவர்கள் பின்னால் மக்கள் ஆதரவு கிடையாது.

அதிகாரிகள் தான் இவர்களை உறுவாக்குவது என்று அம்பலமாகி விட்டது.

தமிழ் விவசாயிகள் சங்கம் உண்மையாக போராடுவதை இவர்களால் பொறுக்க முடியவில்லை.  ஊழல் செய்ய முடியவில்லை.

அதிகாரிகளை வைத்து தமிழ் விவசாய சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய முயற்ச்சி நடக்கிறது.

இந்த சமூக விரோதிகளின் முகமுடியையும் இவர்களுக்கு முகமுடி வாங்கி கொடுத்த ஊழல் அதிகாரிகளயும் பட்டியலிட்டு. மனித உரிமை ஆனையத்தில் வழக்கு பதிவு செய்ய தமிழ் விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. 

ஒன்று படுவோம்.
வெற்றி பெறுவோம்.
வாழ்க விவசாயிகள்...

கார்பரேட்களிடம் லட்சம் வாங்கி பல கோடிக்கு அதிபதியாக இருக்கும் நீ எல்லாம் மக்கள் நலன் பற்றி பேசுற...


ஆல்பா தியான நிலை...


இந்த ஆல்பா நிலை தியானத்தின்போது நாம் எது குறித்து சிந்திக்கின்றோமோ அது தொடர்பான மனப்படங்களை, காட்சிகளாக காண வேண்டும்.

மனித உடல் அழியக்கூடியது, ஆன்மா அழிவில்லாதது என்பது போல மனித மனதில் உருவாகும் எண்ணங்கள் அழிவதில்லை.

எப்படி ஒரு காந்த ஒலி, ஒளி (Audio & Video) நாடாக்களில் சப்தங்களும் காட்சிகளும் பதியவைத்து வைத்து வேண்டும் பொழுது அவற்றை இயக்கிப் பார்க்க முடிகிறதோ அதுபோல இதுவரை வாழ்ந்த இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற எல்லாவித மனிதர்களின் எண்ணங்களும் வான் காந்தத்தில் (Universal Magnetism) பதிய வைத்து பாதுகாக்கப்படுகிறது.

வான்காந்தம் ஆற்றல் மற்றும் அறிவின் நிலைக்களன்.

பிரபஞ்ச அறிவிலிருந்து தேவையான செய்திகளை பெறமுடியும் என்று பெஞ்சமின் ஃபிராங்கிளின் போன்ற அறிஞர்கள் நம்பியிருக்கிறார்கள். எடிசன் போன்ற அறிவியல் கண்டு பிடிப்பாளர்கள் பிரபஞ்ச அறிவிலிருந்து செய்திகளை பெற்றுமிருக்கிறார்கள்.

ஆழ்மனம் நம்மை இந்தப் பிரபஞ்ச மனத்தோடு இணைக்கும் நடுநிலை மனம். நாம் விரும்பும் எதுவாக இருந்தாலும் நாம் எந்த நிலையிலிருந்தாலும் பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்த பொக்கிஷம்.

இதற்காக பெஞ்சமின் ஃபிராங்கிளின் ஒரு உத்தியை பின்பற்றியிருக்கிறார்.

பெஞ்சமின் ஃபிராங்கிளின் கையில் ஒரு கூழாங்கலை வைத்துக் கொண்டு ஒரு சாய்வு நாற்காலியின் கைப்பிடியின் வெளியே கை இருக்குமாறு வைத்துக் தளர்வாக, ஓய்வாக்க் கண்களை மூடி அமர்ந்து கொண்டு உறங்குவதுபோல் இருப்பாராம். உறக்கம் வருகிற போது கைப்பிடி தளரந்து கூழாங்கல் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உலோகத் தகட்டின் மீது விழுந்து ஒலி உண்டாக்கும். அந்த நிலை தூங்காமல் தூங்கும் அறிதுயில் என்கிற ஆல்பா தியான நிலை.

இந்த நிலையில் தன்னுடைய பிரச்சனைகள் குறித்து சிந்திக்கும்போது மின்னல் கீற்றென சில சிந்தனைகள், விடைகள், தீர்வுகள் உண்டாகும். அவை பிரபஞ்ச பதிவிலிரந்து கிடைக்கும் செய்திகள். இந்த வகையான செயல்பாட்டிற்கு பின்னர் நாம் இதை மறந்து இருக்கும்பொழுது சில நேரங்களில் திடீரென்று சில சிந்தனைகளை மனம் உருவாக்கித் தரும். மனதை கசக்கிப் பிழிவதை விட (Brain Storminng) வலிந்து சிந்திப்பதை விட ஓய்வாக மகிழ்ச்சியாக இருக்கும்பொழுதே கற்பனை ஊற்றெடுக்கும்.

கற்பனை, படைப்பாற்றல், புதியன உருவாக்கல் என்பது மாற்றி யோசிக்கற ஒருமுறை. நேரடி சிந்தனை (Straight Thinking) கணக்குப்போடுவது போல் பக்கவாட்டுச் சிந்தை (Lateral Thinking) என்பதுதான் புதிய சிந்தனை, மாறுபட்ட சிந்தனை, கற்பனை.

இப்படி மாற்றி யோசிக்கிற Lateral Thinking இல்லையென்றாலும் Permutation Combination என்கிற முறையில் புதியன உருவாக்க எளிய வழிமுறையில் முயலலாம். பூச்சியம் முதல் ஒன்பது வரை பத்து இலக்கங்களை வைத்துக் கொண்டு எல்லையற்ற (Infinit Numbers) புதிய எண்களை உருவாக்குவது போல எல்லா வகையிலும் மாற்றி மாற்றி இணைத்து புதியன படைப்பது எளிது. மனமும் முயற்சியுமே தேவை...

1996-ல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு காப்பர் ஏற்றி வந்த கப்பலை மறித்த மீனவ சொந்தங்கள்.. வரலாறு திரும்புமா?


மரமும் மனிதனும்...


ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரம்... 140 கோடி மரங்கள் இலக்கு..

'மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்' என்பது எல்லாம் இன்று வாசகங்களாகவே இருக்கின்றன. மரம் வளர்ப்பிற்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

தமிழக வனத்துறை சார்பில் பல லட்சங்கள் செலவழித்து மரம் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொடக்க விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வி.ஐ.பிக்களும், அதிகாரிகளும் அதன்பிறகு அந்த மரங்களை கண்டுக்கொள்வதில்லை. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அவைகள் பட்டுபோய்விடுகின்றன. அடுத்து, சாலை விரிவாக்கம், நகர வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் மரங்களின் எண்ணிக்கை ஆண்டுந்தோறும் குறைந்து வருகின்றன.

டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் பூங்கா, அரசு அலுவலகங்கள், சில சாலைகளில் மட்டுமே மரங்களைப் பார்க்க முடிகிறது. குறுகிய இடத்தில் பலமாடி கட்டி வாடகைக்கு விடப்படும் வீடுகளில் மருந்துக்கு கூட மரங்கள் இருப்பதில்லை. கிராமங்களில் கூட வறட்சிக் காரணமாக மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. வரலாற்று புத்தகத்தைப் புரட்டினால் சாலையோரங்களில் அரசர்கள் மரங்களை வளர்த்தனர் என்பது குறிப்பிட்டு இருக்கும். இன்று அந்த மரங்களை நாம் வெட்டி வருகிறோம். இதே நிலை நீடித்தால் கையிலிருக்கும் லேப்-டாப்பில் தான் மரங்கள் குறித்த விவரங்களையும், அதன் புகைப்படங்களையும் வருங்கால சந்ததியினர் காண வேண்டியதிருக்கும்.

மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பெரியளவில் சென்றடையவில்லை. காடுகள் அழிக்கப்படுகின்றன. பிளாட்களுக்காக விளைநிலங்கள் வீடுகளாக்கப்படுகின்றன. இதன் காரணமாக வறட்சியின் பிடியில் சிக்கும் நிலையில் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. மரங்களின் எண்ணிக்கை குறைந்தால் மழை குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு தாண்டவமாடுகிறது. இருப்பினும் மரங்களை வளர்ப்பில் அக்கறை செலுத்தும் ஆர்வலர்கள் கொஞ்சம் இருப்பதினால் ஆங்காங்கே இன்னமும் மரங்கள் இருக்கின்றன.

சென்னையில் கடந்த 34 ஆண்டுகளாக மரங்களை வளர்ப்பதில் அக்கறை செலுத்தி வரும் முல்லைவனம் கூறுகையில், "என்னுடைய 13ம் வயதிலிருந்து மரம் வளர்ப்பில் ஈடுப்பட்டு வருகிறேன். இதற்காக 'ட்ரி பேங்க்' என்ற அமைப்பை நிறுவி, மர வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். மரம், செடி ஆகியவற்றின் நன்மைகள் குறித்து தமிழகம் முழுவதும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளில் எங்கள் அமைப்பு சார்பில் இலவசமாக மரங்கள், செடிகள் விநியோகிக்கப்படுகின்றன. மரங்களை வளர்க்க முடியவில்லை என்று யார் கூறினாலும் அங்கு சென்று அவற்றை வாங்கி வந்து வேறுஇடங்களில் அதை வளர்க்கிறோம். அதைப் போன்று மரம், செடிகளை வளர்க்க விரும்புபவர்களுக்கும் இலவசமாக மரக்கன்று, செடிகளை கொடுத்து வருகிறோம்.

மரக்கன்றுகளை நாங்களே தயார் செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியிலிருந்து ஜூன் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் விதைகள் சேகரிப்பு முகாம்களை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்ட இந்த முகாமில் விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 5 வகையான மரங்களின் 30 கிலோ விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் மரக்கன்று உறுப்பினர்கள், போரூர் ஆல்பா கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். கடந்த ஆண்டு இந்த விதை சேகரிப்பு முகாமில் 780 கிலோ விதைகள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆண்டு அதை விட கூடுதலாக விதைகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளோம். சேகரிக்கப்படும் விதைகளை முளைக்க வைத்து மரங்களை வளர்க்கிறோம்.

இதைத்தவிர வேறு இடங்களிலிருந்தும் மரக்கன்றுகள் வாங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மரங்களை நட்டோம். இதில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மரங்கள் நல்ல நிலையில் உள்ளன. இதே போன்று 2013ம் ஆண்டு நட்ட மரங்களில் ஒரு லட்சம் மரங்கள் நன்றாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். இதுவரை 93 லட்சம் மரங்களை நட்டுள்ளோம். இந்தியாவில் மக்கள் தொகை 127 கோடி என்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரம் இருக்க வேண்டும். இந்த வகையில் 140 கோடி மரங்களை என்னுடைய ஆயுட்நாட்களுக்குள் நட வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். அதுவே என்னுடைய மூச்சு, முயற்சி. இது எங்களுடைய இலக்கு. இதற்கு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார்.

அழிந்து வரும் மரங்கள்: முன்பெல்லாம் சாலையோரங்களில் ஆலமரமும், அரச மரமும், புளிய மரமும் அதிகமாக காணப்படும். கிராமங்களிலும் இந்த மரங்களை அதிகளவில் பார்க்கலாம். இதில் ஆலமரத்துக்கும், அரச மரத்துக்கும் இடம் அதிகம் தேவை. இதைக்கருத்தில் கொண்டு ஆல, அரச மரங்களை வளர்க்க யாரும் முன்வருவதில்லை. இதனால் இந்த மரங்கள் அழிந்து வருகின்றன.

முல்லைவனம் போன்ற ஆர்வலர்களால் தான் இன்னும் மரங்கள் காப்பாற்றப்பட்டு வருகிறது.

பெருசங்கர் - ஈரோடு மாவட்டம்...

ஒன்று சேருவோம்.. வென்று காட்டுவோம்...


இயற்கை வாழ்வியல் முறை...


சித்த மருத்துவத்தில் சித்த உணவியல் துறையைத் துவங்கி அதை முழுமையாகத் தமிழ் சமூகத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய ஒரு பெரிய முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறேன். ஏன் என்றால்  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தை வாளோடு முன் தோன்றிய மூத்த குடிமக்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் இருந்துதான் நாகரீகமாக இருந்தாலும் சரி, உணவுக் கலாச்சாரமாக இருந்தாலும் சரி உலகம் முழுக்க எடுத்துச் சென்றதற்கான மிகப்பெரிய ஆதாரங்கள் உள்ளது. ஆக இந்த உணவு சார்ந்த கலாச்சாரம் உணவையே மருந்தாக பயன்படுத்திய தன்மை, அதன் பாங்கு எல்லாமே தமிழர்களுடைய வாழ்வியல் முறையில் தான் இருக்கிறது. அதற்கான ஆதாரம், எட்டுத்தொகை படித்தாலும் சரி, பத்துப்பாட்டு, கலித்தொகை படித்தாலும் சரி, உள்ளது. எல்லாவற்றிலும் பார்க்கும் பொழுது உணவு சார்ந்த மிகப்பெரிய ஆய்வு தமிழர்களுடைய சங்ககால இலக்கியங்களில் இருக்கிறதை நாம் கண் கூடாகப் பார்க்கலாம்.

ஆக தமிழர்கள், உணவே மருந்து, மருந்தே உணவு என்ற கொள்கையில்  முழுமையாக இருந்து வாழ்ந்தார்கள். தமிழகத்தில் தோன்றிய சித்த மருத்துவத்தில், சித்தர்களால் வழங்கப்பட்ட சித்த மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரே ஒரு விடயம் என்னவென்றால், எது உனக்கு உணவாக இருக்கிறதோ அதுவே மருந்தாக இருக்க வேண்டும், எது உனக்கு மருந்தாக இருக்கிறதோ அதுவே உணவாக இருக்க வேண்டும் என்ற கொள்கை. சித்தர்கள் “பதார்த்தகுண சிந்தாமணி” என்ற நூலை எழுதி அந்த நூலிலே நாம் சாப்பிடக்கூடிய தண்ணீருக்கு என்ன குணம்? பாலுக்கு என்ன குணம்? பருப்புக்கு என்ன குணம்? அதே போல அரிசிக்கு என்ன குணம்? அரிசியில் எத்தனை வகை இருக்கிறது? பாலில் எத்தனை வகை இருக்கிறது? வெள்ளாட்டுப் பாலுக்கு என்ன குணம்? பசும்பாலுக்கு என்ன குணம்? காராம்பசு பாலுக்கு என்ன குணம்? எருமைப்பாலுக்கு என்ன குணம்? என்று  ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி முழுமையாக எழுதியிருக்கிறார்கள். அந்த உணவுப் பொருள்களுக்கான குணத்தை வகுத்து, ஒரு மனிதன் தன்னுடைய உடல் கூறுக்குத் தகுந்த எந்த உணவை எந்தப் பருவகாலத்தில் சாப்பிடவேண்டும்? என்ற முறைகள் எல்லாம் தமிழர்களுடைய பழங்கால வாழ்வியல் முறைகளில் எல்லாமே எழுதப்பட்டுள்ளது.

அப்படியெல்லாம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக இருந்த தமிழ்ச் சமூகம் இன்றைக்கு உபயோகப்படுத்தக்கூடிய உணவுகள் என்ன? என்பதை பட்டியலிட்டுப் பார்த்தோமானால் மிகவும் வேதனை தரக்கூடிய விடயமாக இருக்கிறது. உணவே மருந்து மருந்தே உணவு என்று இருந்த தமிழ்ச் சமூகம் இன்றைக்கு உணவே மருந்து, உணவே நச்சு என்ற கோட்பாட்டுக்கு ஒத்துக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதற்கான காரணம் என்ன? ஏன் இந்த உணவு சார்ந்த விழிப்புணர்வு இல்லாத சூழல் இங்கு உண்டாயிற்று? என்பதை எங்களுடைய ஆய்வில் எடுத்து ஒன்றொன்றாகச் செய்து கொண்டிருக்கிறோம். ஆக உணவை எவ்வாறு மருந்தாக மாற்றுவது? அதை மக்களுக்கு பயிற்றுவிப்பதற்காகத்தான் சித்தர்களால் அருளப்பட்ட “சித்த உணவியல்” துறையை சிறிது வேகப்படுத்தவேண்டும் என்பதற்காக தமிழர் சித்த உணவியல் மற்றும் இயற்கை மருத்துவ சங்கத்தை ஆரம்பித்து அதற்குத் தலைவராக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

தமிழர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய உணவுகள் என்று பார்க்கும் பொழுது சிறு தானியம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அதில் பிரதானமானது வரகு, திணை, குதிரை வாலி, சாமை. இதனைத் தொடர்ந்து சாப்பிட்ட தமிழர்களுக்கு எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான சூழலில் வாழ்ந்ததை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. சிறு தானியங்களை உபயோகப்படுத்தும் பழக்கம் எல்லாத்தட்டு மக்களிடையுமே அப்படியே இருந்திருக்கிறது. அதாவது ஆடி, பொங்கல், தீபாவளி  போன்ற தினங்களில் மட்டுமே அரிசி சோற்றை சாப்பிட்டு வந்த தமிழ்ச் சமூகம் ஒன்று இருந்தது. அது காலப்போக்கிகல் அன்னியர் ஆதிக்கத்திற்குப் பிறகு, மேற்கத்தியக் கலாச்சார மோகம் வந்த பிறகு தினமும் அரிசிச் சோறு சாப்பிடக்கூடிய பழக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவுமே வேரூன்றக்கூடிய காலகட்டம் வந்தது. ஆக பாரம்பரிய சிறுதானிய உணவுகளைத் தினசரி பயன்படுத்தும் போது நோயின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது.

அரிசியை தினசரி உணவாகவும், அரிசியை மூலப்பொருளாகக் கொண்ட இட்லி, தோசையை தினசரி உணவாக தமிழர்கள், இந்திய மக்கள் எடுக்க ஆரம்பித்த பிறகு தமிழர்களுடைய உடல் கூறும், இந்தியர்களுடைய உடல் கூறும் வெகுவாக மாற ஆரம்பித்தது. ஏனென்றால், நம் உணவிலே இரண்டு வகையான உணவு உண்டு, ஒன்று அமில உணவுகள் மற்றொன்று கார உணவுகள். அமில உணவுகள் என்று நாம் சொல்வது என்னவென்றால்? எந்த உணவில் மாவுப்போருள்கள் மிக அதிகமாக இருக்கிறதோ அவை எல்லாம் அமில உணவுகள். நார்ச்சத்து(ஃபைபர் கன்டன்ட்), புரதம்(ப்ரோடீன் கன்டன்ட்) அதிகமாக இருக்கக் கூடிய உணவுப் பொருள்கள் எல்லாமே கார உணவுகள். அரிசி முழு நேர உணவாக இருக்கும் பொழுது தமிழ் நாட்டில் பரவலாக இருக்கக் கூடிய கலாச்சாரம் என்னவென்றால்,காலை வேலையில் இட்லி, தோசை, பொங்கல். மதியம் சாப்பாடு, இரவிலும் சாப்பாடு அல்லது இட்லி, தோசை, பொங்கல் ஆகிவிட்டன. ஆக இதனுடன் இருக்கக் கூடிய காய்கறிகள் என்ன என்று பார்க்கும்பொழுது உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் போன்றவற்றைச் சேர்க்கிறோம். அடுத்து வெண்டைக்காய், முருங்கைக்காய். இதற்கு மேல் எந்த காய்கறிக்குள்ளேயும் போவதில்லை.

இன்றைய உணவுப் பழக்கத்தில் சராசரியாக 10  காய்கறிகள், முழுமையாக அரிசி, கூடுதலாக வட இந்திய ஆதிக்கத்திலிருந்து வந்த சப்பாத்தி (கோதுமை உணவு) , இதை மட்டுமே நாம் உபயோகப்படுத்துகிறோம். ஆனால் தமிழர்கள் பயன்படுத்திய உணவுப்பொருள்கள் சங்க காலத்தில் இருந்த வந்த உணவுப் பொருள்கள் என்று பார்த்தோமானால் கிட்டத்தட்ட 3000 வரையில் உணவுப் பொருள்கள் இருக்கிறது. இந்த மூவாயிரம் உணவுப் பொருள்களை தமிழர்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எல்லாமே இருக்கிறது. இன்று ஒரு வீட்டில் களி கிண்டக் கூடிய தன்மை இருக்கிறதா? என்றால் அது கிடையாது. அது ஏன்? ஏனென்றால் அன்றைய கால கட்டத்தில் நல்ல உடல் வன்மைக்கும், உடல் வலுவுக்கும், தமிழர்கள் சாப்பிட்ட உணவு  களி ஆகும். ஆக காலை வேலையில் தோட்ட வேலைக்குப் போகக்கூடிய தமிழர்கள் ஒரு வெந்தயக் களி, உளுத்தங்களி, கேழ்வரகுக் களி, சோளக்களி , கம்புக்களி உண்டு வந்தனர். களி என்பது திடப்பொருள் உணவாகும். இந்த மாதிரியான களியை உட்கொண்டு தோட்டத்திற்கு செல்லும்போது அவர்களால் கடுமையான வேலைகளைக் கூட செய்ய முடிந்தது.

ஊட்டத்திறன், உண்டாற்றல், உந்துசக்தி எல்லாமே அந்த உணவில்  கிடைத்ததால் அவர்கள் செய்த வேலை என்பது மிகச்சிறந்த பயிற்சியாக அங்கீகரிக்கப்பட்டு உடலோம்பலும், அதன் மூலம் அற்புதமான ஆரோக்கியமும் அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள், இந்தியர்கள் எல்லாருமே எடுக்கக்கூடிய உணவுகள் என்னவென்று பார்க்கும் போது காலை இட்லி, தோசை ஆகும். இந்த இட்லி, தோசை என்பது அரிசியை புளிக்க வைத்து, அதாவது அரிசியை மாவாக்கி புளிக்கவைத்து, அந்த புளிப்புத்தன்மை  மிகுதியான பின்புதான் இட்லியாகவோ, தோசையாகவோ வார்க்க முடியும். அரிசியை அப்படியே ஆட்டி, இட்லித் தட்டில் வைத்தால் இட்லி வராது, தோசையாகவும் வராது. ஆக அரிசியைப் புளிக்கவைத்து அதாவது புளிப்பு என்றால் சாகடித்தல், அதன் அடிப்படையில் வரும் உணவை இட்லியாகவோ, தோசையாகவோ வார்த்து அதைச் சாப்பிட்டு வேலைக்குப் சென்றோமானால் உடம்பு இன்னும் கூடுதலாக புளிக்க ஆரம்பிக்கிறது. ஆக புளிப்பு உணவுகளை தெரிந்தோ, தெரியாமலோ, மறைமுகமாகவோ நாம் தொடர்ந்து எடுக்கக் கூடிய ஒரு கால கட்டத்தில் இருக்கிறதால் இந்த உடம்பு தன்னுடைய ஊட்டத்திறனை முழுமையாக இழந்து உடலிலும் புளிப்புத் தன்மை மிகுந்து பல்வேறு நோய்கள் வருகிறது.  இட்லி, தோசை என்று இருந்த தமிழ் சமூகம் இன்று வேறு ஒரு உணவை உண்ணும் நிலைமைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். எப்படி என்றால் உடனடியாக (Instant) வரக்கூடிய சப்பாத்தியையும், பரோட்டாவையும்,  பிரியாணியையும் உட்கொண்டு வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.. உலகம் முழுக்க உணவுப் பொருள்களில் ஒரு லட்சம் (chemicals) ரசாயனம் இருப்பதாக மதிப்பீடு செய்து இருக்கிறார்கள். இவை உலகம் முழுக்க இருக்கின்றதோ இல்லையோ, ஆனால் தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய உணவுப் பொருள்களில் ஒரு லட்சம் ரசாயனம் மருந்துகள் இருக்கிறது. அந்த மாதிரியான ரசாயனம் கலந்த உணவுகளைச் சாப்பிடும்பொழுது  தமிழர்களுடைய உணர்வு மழுங்கடிக்கப்படும்.

இதைத்தான் சித்த உணவியல் துறையில் முழுமையாக நாங்கள் சொல்வது என்னவென்றால் உணவு அடிப்படையில் தான் ஒரு மனிதன் உணர்வைப் பெற முடியும். ஆக அந்த உணர்வுதான் சிந்தனையாக மாறும். அந்த சிந்தனைதான் செயல்பாடாக மாறும். அந்த செயல்கள் எல்லாம் சிறப்பான செயலாக இருந்து சமூகத்தை மேன்மைப்படுத்தும் இதுதான் உண்மை. ஒரு அறிஞன் சொல்லியிருப்பான் ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவனுடைய உணவுப்பழக்கத்தை அழித்தால் போதும், கண்டிப்பாக அந்த இனத்தை அழித்து விடலாம் இதுதான் உண்மை.

தமிழினத்தை, தமிழனுடைய வீரம், மனித நேயம் எல்லாவற்றையுமே முழுமையாக அழிக்கக் கூடிய தன்மையை இன்று பன்னாட்டு  நிறுவனங்கள் முழுமையாக இந்தியாவில் இறங்கி தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பெரும் சந்தையை நிறுவி செயல்பட்டு வருகின்றன. இந்த மனித சந்தை இருக்கக் கூடிய இடத்தில் உலகளாவிய அளவில் உள்ள நிறுவனங்கள் ஒரு வணிகச்சந்தையை நிறுவி விட்டது. இப்பொது வெளிநாடுகளில் (பிரான்சு,கனடா) இருக்கக் கூடிய மனிதர்கள் எல்லாம் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளையும் சாப்பிடலாம். ஆனால் அதே தன்மையை இப்போது இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பன்னாட்டு நிறுவனங்கள் வந்து, இங்குள்ள மக்களை நோயாளியாக மாற்றி அவர்களுடைய உணர்வுகளை மழுங்கச்செய்து மருத்துவமனைகளை நிறுவி நம்மிடம் இருக்கக் கூடிய நிதி ஆதாரங்களை முழுமையாக கொள்ளையடிக்கக் கூடிய ஒரு நிலைக்கு உணவின் மூலம் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். ஆக உணவு சார்ந்த விழிப்புணர்வு இன்று கண்டிப்பாக வேண்டும். உணவு விழிப்புணர்வை முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நாங்களும் விடாது இதை ஒரு போராட்டமாக செய்து கொண்டிருக்கிறோம். உணவு சார்ந்த ஆய்வை நாங்கள் முழுமைப்படுத்தி எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் நமக்கு நல்லது. எந்தெந்த உணவைச் சாப்பிடும் பொழுது நீரிழிவு வியாதி கட்டுப்படும்? நீரிழிவு வியாதி இருப்பவர்கள் என்னவெல்லாம் உணவை உண்ண வேண்டும்? ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் எதைச் சாப்பிட வேண்டும்? எதைச் சாப்பிடக் கூடாது? ஒவ்வொரு நோயாளிகளும் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன? என்று வெளியிடுகிறோம். ஒரு நோயாளி ஒரு மருத்துவரிடம் அடிமைப்பட்டுப் போகக் கூடிய தன்மையை மாற்ற வேண்டும்.

இதயநோய் வந்த பெரும்பாலான நோயாளிகள் ஏதாவது ஒரு மருத்துவரிடம் வாழ்நாள் முழுக்க அடிமையாகவே, அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கிற ஒரு காலகட்டம் இன்றைய வளரும் நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை உடைக்க வேண்டும், அது உருத்தெரியாமல் போக வேண்டும் என்றால் தனி மனிதனாய் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் தன்னுடைய உணவுமுறை, தன்னுடைய பாரம்பரியத்தை, தன்னுடைய கலாச்சாரத்தை தயவு செய்து ஒரு ஆய்வு செய்து அந்த ஆய்வின் அடிப்படையில் முன்னோர்கள் என்ன உணவு முறையில் சாப்பிட்டார்கள், எப்படி ஆரோக்கியமாக இருந்தார்கள், எப்படி அவர்கள் மட்டும் பல குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆரோக்கியமாக இருந்தார்கள்? எப்படி அவர்களால் மட்டும்  தேவையான கடமைகளை செய்ய முடிந்தது, ஏன் இன்று நம்மால் இயலவில்லை? எப்படி மரபுக் கூறுகள் மழுங்கடிக்கப்பட்டன? என்பதை ஒவ்வொரு தனி மனிதனும் உற்று நோக்கி ஆய்ந்து பார்க்க வேண்டும். அந்த விடயத்திற்கு உறுதுணையாக, உதவியாக எங்களுடைய தமிழர் சித்த உணவியல் மற்றும் இயற்கை மருத்துவர் சங்கம் உணவியல் சார்ந்த விடயங்களை மக்களிடம் கொண்டு செல்கிறோம்.

தற்போது தமிழ்நாட்டில் திணை, வரகு, குதிரைவாலி, சாமை போன்ற உணவுகளை பழக்கப்படுத்தும் ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறோம். அரிசியை கூடிய மட்டும் தவிர்த்து பாரம்பரிய சிறு தானிய உணவுகளையும், பச்சைப் பயிர்கள் , உளுந்து, எள்ளு, கடுகு இவற்றை எவ்வாறு மருந்தாக மாற்றுவது என்பதையெல்லாம் நாங்கள் கொண்டு செல்கிறோம். அன்றைய தமிழர்கள் வாழ்க்கையிலே கடுகோதன்னம் என்ற சாப்பாட்டு முறையே இருந்தது. கடுகோதன்னம் என்றால் கடுகை பிரதானப்படுத்தி அரிசியுடன் சேர்த்து சமைக்கக்கூடிய ஒரு முறை. உளுந்தோதன்னம் என்பது உளுந்தையும், அரிசியையும் வைத்துச் சமைக்கக்கூடிய ஒரு முறை, எள்ளோதன்னம் என்றால் எள்ளையும், அரிசியையும் வைத்து சமைக்கக்கூடிய ஒரு முறை. ஆக இந்த முறையெல்லாம் முன்பு வாழ்ந்த தமிழர்களிடம்  இருந்தது.

எள்ளுச்சோறு, கொள்ளுச்சோறு, கடுகுச்சோறு இவையெல்லாம் இருந்த தமிழ் சமூகத்தில் ஹார்மோனல் பிரச்சனை இன்று உலகளாவிய அளவில் பேசப்படுகிற தைராய்டு பிரச்சனை  எல்லாவற்றுக்குமே சோறே மருந்தாக மாறியது. ஏன் அப்படி ஒரு  காலகட்டத்தை நாம் உருவாக்கக் கூடாது. இதை தமிழ் சமூகம் சிந்திக்க வேண்டும்.  இந்த மாதிரியான எள்ளுச்சோறு, கொள்ளுச்சோறு, இதெல்லாம் சாப்பிட்டால் அதன் அடிப்படையில் நாளமில்லாச் சுரப்பிகள் ஒழுங்காகத் தோன்றி ஒவ்வொரு தமிழனும் சிறப்பான வாழ்க்கையை மேற்கொண்டு வந்தார்கள்.  அப்படி இருந்த தமிழர்கள் இன்று உணவுகளால், பன்னாட்டு கம்பெனிகளால் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் நம்முடைய புராதன உணவு முறைகளை, பாரம்பரிய உணவு முறைகளை நாம் ஒவ்வொருவரும் நினைத்து, மறுபடியும் மீட்டெடுக்க வேண்டிம். ஆக மறைந்துவிட்ட உணவுப் பொருள்களை அடையாளப்படுத்தவேண்டிய ஒரு மிகப் பெரிய பொறுப்பு சித்த உணவியல் துறையில் ஈடுபட்டிருக்கிற என் போன்ற பலரிடம் திணிக்கப்பட்டுள்ளது.  நாங்களே தமிழர்கள் பயன்படுத்திய மூவாயிரம் வகையான உணவுப்பொருள்களை கண்டறிந்துள்ளோம். அந்த மூவாயிரம் வகையான உணவுப் பொருள்களையும் இனிவரும் காலங்களில் (siragu.com)  சிறகு  இணைய இதழில் தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

அது அல்லாமல் இன்று பார்த்தீர்களேயானால் இந்தியாவிலே நீரிழிவு நோய் உலகளவில் இந்தியா முதலிடத்திலும், இந்திய அளவில் தமிழகம் முதலிடத்திலும், தமிழகம் அளவில் சென்னை முதலிடத்திலும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கையில் நாம் இருக்கிறோம்.  ஆக தமிழன் வலுவாக இருந்த தன்னுடைய உடலமைப்பை முழுவதுமாக மாற்றி ஒரு தளர்ந்த உடலுக்கு சொந்தக்காரனாய் தமிழன் மாறியிருப்பதால் மறுபடியும் தமிழனை ஒரு வலுவானவனாய், அன்றைய காலகட்டத்தில் ஈடுபட்ட ஜல்லிக்கட்டு இளைஞனாய், ஒரு இளவட்டகல்லைத் தூக்கிப் போட்ட இளைஞன் போல் மாற்ற எண்ணுவதால் முதலில்  உணவு முறைகளை மாற்றக் கூடிய ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம்

அருன் சின்னையா அவர்களின் அலைபேசி எண் 9884076667...

தமிழகத்தில் நடக்க இருக்கும் மீடியாவிற்கு எதிரான மாபெரும் சர்ஜிக்கல் அட்டாக்...


விபச்சார ஊடகங்களை வச்சி செய்வோம்...


ஐம்தாயிரம் வருடமாக தமிழர்கள் வாழ்ந்த மண் இந்த இந்தியா...


நம் தமிழ் மக்கள் சுதந்திரம் பெறுவதற்காக இணைந்து போராடி பின் பிரியாமல், வெறும் 200 ஆண்டுகளாக தான் 'இந்தி' ஆதிக்க இந்திய தேசிய இனத்திற்க்குள் அடைபட்டு கிடக்கிறான் என்பது தான் உண்மை..

'இந்தியன்' என்ற இனம் என்றாவது இருந்தததுண்டா ?

அவருக்கு என்ன மொழி ?
என்ன பண்பாடு ?

தேசிய இனங்களைப் பற்றி படிக்கும் போது எங்காவது இந்தியன் என்று படித்திருக்கீறீரா ?

இந்தியா ஒரு துணைக் கண்டம் அவ்வளவே... அதுவும் தமிழன் போட்ட பிச்சையில் உருவானதே..

இந்தியன் என்று தமிழனையும் மற்ற தேசிய இனத்தவரையும் எப்படி அழைக்க முடியும்..?

மொழி, பண்பாடு போன்ற அனைத்திலும் வேறுபடுகிறார்கள்..

ஆனாலும் அவர்களை சுரண்ட வடநாட்டு இந்தி ஆதிக்க கும்பல் கண்டு பிடித்த ஆயுதம் தான் இந்தியன் என்கிற சொல்லாடல்..

தமிழர்கள் தனித்த தேசிய இனம்..

அவர்களை இல்லாத இந்திய தேசிய இனத்திற்குள் அடைப்பது மிகப்பெரும் தவறு..

தமிழர்கள் பெற்றிருப்பது வெறும் இந்தியத் துணைக்கண்டத்தின் குடியுரிமை தான்..

தமிழர்கள் மராட்டியத்தில் கூலி வேலைக்கு சென்ற போது மராட்டியர்கள் அடித்து விரட்டினர்...

அவர்கள் மும்மையில் எந்நிலைமையில் வாழ்கிறார்கள் என்று உங்களுக்கு தெரிந்த மும்பை வாசிகளிடம் விசாரிக்கவும்..

அங்கிருந்து இங்கு பிழைக்க வந்த மும்பை மராட்டிய குசராத்தி சேட்டுகள் இங்கு எப்படி வாழ்கிறார்கள் என ஒப்பிட்டு பார்க்கவும்...

இரண்டும் இந்தியா தானே...

அவர்கள் ஏன் தமிழர்களை  விரட்ட வேண்டும்.. அவர்களிடம் இல்லாத தேசிய உணர்வு தமிழர்களிடம் மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பது ஏமாற்று வேலை அன்றி வேறில்லை...

கன்னடர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் மலையாளிகளுக்கும் இருக்கின்ற உணர்வுகள் சிறிதும் இன்றி..

தமிழன் எல்லோரிடத்தும் அடிபட்டு வாழ்வதை நீங்கள் எந்த கல்நெஞ்சத்தோடு ஏற்கிறீர்கள் ?

ஒருவன் மட்டும் அடிபடுவது தான் இந்திய தேசியமா ?

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுதலித்த கேரள கர்நாடக அரசுகளை தண்டிக்க வக்கற்ற மத்திய 'இந்தி'ய அரசு எந்த முகத்தை வைத்துக் கொண்டு நெய்வேலி மின்சாரத்தை சுரண்டி மற்ற மாநிலங்களுக்கு விற்கிறது.?

கொடுங்கள் என்று உரிமையைக் கேட்க அச்சப்படும் தமிழர்கள் இருக்கும் வரை உரிமைகளை நாம் இழந்து கொண்டு தான் இருப்போம்..

மத்திய அரசு என்கிற பெயரால் மாநிலங்களை சுரண்டி வாழுவதை முதலில் தடை செய்ய வேண்டும்..

மாநிலங்களுக்கு தம்மைத் தானே ஆளும் தன்னாட்சி அளிக்க வேண்டும்..

தமிழைக் கல்வி மொழியாக்க இந்திக் காரனிடம் தான் கையேந்தவிருக்கிறது.. முதலில் உரிமையை மாநிலங்களுக்கு கொடுக்கட்டும்..

தமிழக மின்சாரம் தன் கட்டுப்பாட்டில் இருந்தால் நாம் ஏன் நீருக்கு கையேந்த வேண்டும்....

கர்நாடகத்திற்கு மின்சாரத்தை தடை செய்ய எந்த ஆட்சியாளரும் முன் வரவில்லை.. காரணம் யாரும் தமிழர்கள் இல்லை...

இந்தியமும் - திராவிடமும் முழு தமிழகத்தையும் சூறையாட போகிறது...




தமிழா இன்னுமா நீ இந்தியம் திராவிடம் என்று சொல்லி மண்ணில் விழுந்து சாகப் போகிறார்...

தொப்பை குறைய எளிய உடற்பயிற்சி.....


தொப்பை குறைய பல பயிற்சிகள் இருந்தாலும் இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் உள்ள  தரையில் படுத்துக்குங்க. மெதுவா உங்கள் காலை மேல தூக்குங்க.

முதுகு தரையில் இருக்க வேண்டும். காலை மடக்க கூடாது. கால் நேராக தான் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் கீழே உள்ளபடி படிப்படியாக செய்ய ஆரம்பிக்க வேண்டும். இரண்டு காலையும் மடக்கி தரையில் படுங்க. பின் வலது காலை மட்டும் நேராக நீட்டவும். 10 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.

பின் வலது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். பின் இடது காலை நேராக நீட்டவும் 10 வினாடி இருக்கவும். பின் இடது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். இவ்வாறு 10 முறை இவ்வாறு செய்யவும். பின்னர் இரண்டு காலையும் தரையில் இருந்து முட்டி மடங்காம நேரா தூக்குங்க.

எவ்வளவு உயரத்துக்கு தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் தூக்கலாம். 30 வினாடி அந்த நிலையிலேயே இருக்க வேண்டும்.  நேரம் ஆக ஆக வயிறு இறுகும். உங்களால் காலை தூக்கியதுபோல் வைச்சிருக்க முடியாது. 10, 15, ...., 60 வினாடின்னு வரை நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். 10 முறை இப்படி செய்யுங்கள்...

மாணவர்கள் போராட்டம் வலுவாக தொடங்கியது...


தூத்துகுடி ஸ்டேர்லைட் அலைக்கு எதிராக மாபெரும் மக்கள் எதிர்ப்பு போராட்டம் நடந்ததுள்ளது...


இதைப்பற்றி எந்த அரசியல் கட்சிகளும் பெரிதாய் வாய்திறக்காமல் கள்ளமௌனம் சாதிப்பது...

அவர்களும் அந்த ஆலைக்கு ஆதரவு என்பதாகத்தான் அர்த்தம்.

மக்களின் உயிர் வாங்கத்துடிக்கும்  ஆலைகளின் அருகில் அரசு  அதிகாரிகள், அரசியல்வாதிகளின் குடும்பங்களை குடி அமர்த்த வேண்டும்...

பாஜக எனும் தமிழின விரோத கட்சி.. தேனியில் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருக்கிறது...


தென் ஆப்பிரிக்கா...


தென் ஆப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவு தமிழர்கள் வாழ்கிறார்கள். ஏராளமான இந்துக் கோயில்கள், மத அமைப்புகள், தமிழ் மொழி அமைப்புகள் உள்ளன.

இவை இருந்தும் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் தங்கள் தாய் மொழியை வேகமாக இழந்து விட்டார்கள்.

தமிழைக் கற்பதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் மூத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் ஓரளவிற்கு தமிழில் பேசுகிறார்கள். நல்ல தமிழில் பேச ஆர்வம் காட்டுகிறார்கள்.

தாய்மொழியை இழந்துவிட்டாலும் மத சம்பந்தமான சடங்குகளையும் கலாச்சார நடவடிக்கைகளையும் போற்றிப் பாதுகாத்தல் மட்டுமே தங்களுடைய இன அடையாளத்தைப் பாதுகாக்க முடியும் என அவர்கள் கருதுகிறார்கள்.

தென்ஆப்பிரிக்காவில் 200 பள்ளிக் கூடங்களில் 189 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில் 5 பேர் மட்டுமே தமிழ் கற்பிக்கத் தகுதி படைத்தவர்கள்.

தமிழ் இளங்கலை வகுப்புகள் டர்பன் பல்கலைக் கழகத்திலும் வெஸ்ட் வில்லோ பல்கலைக்கழகத்திலும் 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் போதுமான மாணவர்கள் சேராத காரணத்தினால் 1984ஆம் ஆண்டு இவைகள் மூடப்பட்டன.

தமிழர்கள் ஆப்ரிக்காவிலுள்ள பல்வேறு நாடுகளுக்குக் குடி பெயர்ந்த போது தங்களுடைய பொருளாதார உயர்வுக்காகவும் சமூகத் தகுதிக்காகவும் தாய் மொழியினால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து ஆங்கிலம், பிரஞ்சு, கிரியோலி மொழிகளைக் கற்கத் தொடங்கினார்கள்.

தென்ஆப்பிரிக்காவில் ஆங்கிலம் பொருளாதார உயர்வுக்கு வழி வகுக்கும் என கருதப்பட்டது.

தென்ஆப்பிரிக்காவில் சாதிக் கலப்புத் திருமணம் - இனக் கலப்புத் திருமணம் சர்வசாதாரணம். இத்திருமணங்களின் விளைவாக குடும்பங்களில் ஆங்கிலமே வீட்டு மொழியாகி விட்டது.

தென்ஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளையர்கள் அங்குள்ள தமிழர்களைக் கூலிகள் என்றும் அவர்கள் பேசும் மொழியை கூலி மொழி என்றும் இழிவு படுத்தியதால் தமிழர்கள் தங்கள் மொழியிலேயே பேசுவதற்கு வெட்கப்பட்டார்கள்.

இந்த நிலைமை தொடருமானால் தென்ஆப்பிரிக்காவில் அடுத்த இரு தலைமுறைகளுக்குள் தமிழ் முற்றிலுமாக மறைந்து போய் ஆங்கிலமே தமிழர்களின் மொழியாக மாறும்.

தென்னாப்பிரிக்காவிற்கான தமிழர்களின் புலம்பெயர்வு 1860-1911- களில் தொடங்கியது. குவாலு நத்தால் (Kwazulu-Natal) என்ற பகுதியே தமிழர்களின் குழுமங்கள் உருவாக்கப்பட்ட இடமாக இருந்தது.

இன்று டர்பன் (Durban) போன்ற இடங்கள் தமிழர்களின் வாழ்வுத் தளமாக உருவாகியுள்ளது. இன்று தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் வாழ்வியல் மொழியாகியுள்ளவை ஆப்பிரிக்கமொழியும் ஆங்கிலமொழியுமாகும்.

இங்கு வழங்கப்படும் ஆப்ரிகன்ஸ் (Afrikans), பிர்வா (Birwa), கம்தோ (Camtho), ஃபராகோலா (Faragola), எகாய்ல் (Gail), எக்கோரறா (Korara), எக்சூ (Kxoe), நுலூ (Nulu), நாம்மா (Nama), நெடிபி (Ndebee), ஊர்லாம்ஸ் (Oorlams), ரொங்கா (Ronga), சோத்தோ (Sotha), சவாலி (Swahili), சுவாதி (Swahiti) ஆகிய மொழிகள் பல்வேறு குழுக்களால் பேசப்படுகின்றன.

இவற்றில் ஒவ்வொரு தமிழரும் குறைந்தளவிற்கு ஒரு மொழியினையாவது பேசும் ஆற்றலினைப் பெற்றிருக்கின்றனர்.

இம் மொழிகளைப் பேசுவதற்கான முனைப்பும் முயற்சியும் இவர்களிடம் உண்டு. இம் மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கும் கையாள்வதற்குமான ஆளுமையும் ஆற்றலும் இவர்களிடம் உண்டு..

மொத்த மக்கள்தொகை - 2,50,000...

ஓடி ஒழிந்த விபச்சார ஊடகம் நியூஸ் 7.. அந்த பயம் இருக்கனும்டா...