27/08/2018
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் மாற்றம்.. ஸ்டெர்லைட்டை திறக்க துணை போவதா? - பாமக அறிக்கை...
தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் திறம்பட பணியாற்றி வந்த இ.ஆ.ப. அதிகாரி நசிமுதீன் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக அந்த ஆலையின் நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திடீரென செய்யப்பட்டுள்ள இந்த இடமாற்றம் கண்டிக்கத்தக்கது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு உள்ளிட்ட யாராலும், எதுவும் செய்ய முடியாது என்ற அதிகாரத் திமிரில் அதன் நிர்வாகம் இருந்தபோது, அது செய்துள்ள விதிமீறல்கள் அனைத்தையும் பட்டியலிட்டு அந்த ஆலையை மூடும்படி கடந்த மே 23-ஆம் தேதி ஆணையிட்டவர் நசிமுதீன் ஆவார்.
அந்த ஆணையின் அடிப்படையில் தான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக ஆணையை மே 29-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்தது. கடந்த 15 மாதங்களாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ள அவருக்குத் தான் ஆலையின் அத்துமீறல்கள் குறித்த விவரங்கள் அத்துபடியாகும்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு அதை எப்படியாவது திறந்து விட வேண்டும் என்பதில் அதன் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. தமிழக அரசின் முடிவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், இதுவரை மொத்தம் 3 கட்ட வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்பட்டு விட்டதாகவும், உலக நீதிமன்றத்திற்கு சென்றால் கூட அதை மாற்ற முடியாது என்றும் தமிழக அரசு இறுமாப்புடன் கூறிவந்த நிலையில், அதை உடைத்த ஸ்டெர்லைட் ஆலை, நிர்வாகப் பணிகளுக்காக ஆலையை திறக்க பசுமைத் தீர்ப்பாயத்திடம் அனுமதி பெற்றது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை நிர்வாகப்பணிகளுக்காக திறக்கும் ஆணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக பசுமைத்தீர்ப்பாயத்தில் வழக்கை நடத்தும்படி ஆணையிட்டது.
அடுத்தக்கட்டமாக ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிகளை மீறியிருக்கிறது என்பதை நிரூபிக்கத் தேவையான எந்த ஆதாரத்தையும் தமிழக அரசு தாக்கல் செய்யவில்லை என்று குற்றஞ்சாற்றிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை ஏதேனும் விதிமீறலில் ஈடுபட்டிருக்கிறதா? என்பது குறித்து விசாரிக்க பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி வசிஃப்தார் தலைமையில் மூன்று உறுப்பினர் குழுவை அமைத்துள்ளது.
அக்குழுவின் விசாரணை அடுத்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மிகக்கடுமையான வி\திமீறல்களில் ஈடுபட்டிருக்கிறது; அதனால் சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உள்ளது.
அந்தக் கடமையை சிறப்பாக செய்யக்கூடியவர் நசிமுதீன் தான் எனும் போது அவரை அரசு மாற்றம் செய்தது ஏன்? என்பது தான் மில்லியன் டாலர் வினா.
நசிமுதீனுக்கு பதிலாக சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள மூத்த இ.ஆ.ப. அதிகாரி ஷம்பு கல்லோலிகரும் அப்பழுக்கற்ற அதிகாரி ஆவார்.
ஆனாலும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நசிமுதீனுக்கு இருக்கும் புரிதலும், அனுபவமும் புதிய அதிகாரி ஷம்பு கல்லோலிகருக்கு இருக்க வாய்ப்பில்லை.
அடுத்த 10 நாட்களில் தேசியப் பசுமைத் தீர்ப்பாய குழுவின் விசாரணை தொடங்கவுள்ள நிலையில், அதற்குள்ளாக ஸ்டெர்லைட் குறித்த அனைத்து பின்னணி தகவல்களையும் அறிந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்வது சாத்தியமற்றதாகும்.
இது ஸ்டெர்லைட் விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.
நசிமுதீன் கடந்த ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி முதல் சுற்றுச்சூழல்துறை செயலாளர் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அதேபோல் 2016-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி முதல் குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குனராக கல்லோலிகர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இருவருமே சிறப்பாக பணியாற்றி வரும் நிலையில் அவர்களை பணிமாற்றம் செய்ய வேண்டிய தேவை என்ன? என்பதை விளக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிப்பதில் தமிழக அரசுக்கு தொடக்கத்திலிருந்தே விருப்பம் இல்லை. மக்கள் எழுச்சிக்கும், அரசியல் அழுத்தத்துக்கும் பணிந்து தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்தது. இப்போது ஸ்டெர்லைட் தடை விலக வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாகத் தெரிகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தான் அப்பகுதி மக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. தமிழக அரசு இப்போது இழைத்து வரும் துரோகங்கள் மற்றும் தவறுகளால் ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டால் அதையும், அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் அங்குள்ள மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
எனவே, சுற்றுச்சூழல்துறை செயலாளர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து இ.ஆ.ப அதிகாரி நசிமுதீனை இடம் மாற்றும் முடிவை கைவிட்டு, ஸ்டெர்லைட் சிக்கல் ஓயும் வரை அப்பதவியில் அவர் நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும்...
பணம் என்று வந்துவிட்டால் இங்கு சாதி-மதம் என்பது ஒன்றுமில்லை...
எல்லா இடத்திலும் வெகுசன மக்கள், ஒரே போன்று அடிமை பொருளாதாரத்தை தான் தங்களின் வாழ்வியலாக அடைந்துள்ளனர்..
சாதி-மதம் என்பது மக்களை பிரித்தாளும் அரசியல் மட்டுமே..
இதில் கூறி இருக்கும் வளைகுடா நாடுகள் - தங்கம் - குசராத்தி வணிகம் - கேரளா வணிகம்..
இதை சரியாக பொருத்தி பாருங்கள், இதில் சாதி-மதம் என அனைத்தும் இருக்கும்.. ஆனால் பணம் என்ற ஒன்று வருவதால், இந்த வணிகத்தை செய்யும் வணிகர்கள் தங்களுக்குள் எப்போதும் சண்டை போடுவதில்லை..
தங்களைப்பற்றி மக்கள் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, மக்களிடம் எப்போதும் ஒரு பிரச்சனையே உருவாக்கி, மக்களை பிரித்தாளுகிறார்கள்...
புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க...
வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து...
புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா..?
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்.
சுத்தமான தேன் 500 கிராம்.
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை...
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்.
தோலை நீக்கிவிடக்கூடாது.
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்.
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்.
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்.
இப்போது மருந்து தயாராகி விட்டது.
மருந்தை உட்கொள்ளும் விதம்...
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .
ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ள வேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும்.
மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும்.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும் .
சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது.
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும்.
மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள்.
யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்…
சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது...
கேரளாவில் நிவாரணப் பொருட்களை லாரியோடு கடத்திய இரண்டு அரசு அதிகாரிகள் கைது...
கேரள மாநிலத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நிவாரணப் பொருட்களை உரியவர்களிடம் சேர்ப்பிப்பதும் தற்போது சவாலாக மாறியுள்ளது.
ஒவ்வொரு நிவாரண முகாம்களிலும், நிவாரணப் பொருட்கள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க கேரள அரசு வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்துள்ளது.
இருந்த போதும் பல்வேறு நிவாரண முகாம்களில் பொருட்கள் கடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் வயநாடு நிவாரண முகாமில் இருந்து பொருட்களைத் திருடியதாக இரண்டு அரசு அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், வயநாடு நிவாரண முகாமில் இருந்து ஒரு டிரக்கில் ஏராளமான நிவாரணப் பொருட்கள் வெளியே கிளம்பியது. அதனை நிவாரண முகாமில் இருந்த மக்கள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அங்கே பணியில் இருந்த அரசு அதிகாரிகள் தாமஸ் மற்றும் தினேஷ், இந்த டிரக் மற்றொரு நிவாரண முகாமுக்குச் செல்வதாகத் தெரிவித்தனர். ஆனால் மக்கள் அதனை ஏற்காமல் காவல்துறையை அழைத்தனர். அவர்கள் வந்து விசாரித்ததில், அந்த டிரக் எந்த நிவாரண முகாமுக்கும் அனுப்பி வைக்கப்படவில்லை என்பதும், அதனை தாமஸ் மற்றும் தினேஷ் திருடிச் செல்வதும் தெரிய வந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்ற புகார்கள் ஆங்காங்கு எழுந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது...
மாத இருப்பை பராமரிக்காதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள்- எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் அறிவிப்பு...
மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் 3,000 ரூபாய் சராசரி மாத இருப்பாக வைத்திருக்க வேண்டும்.
இதன்படி, 50 சதவிகிதத்திற்கு குறைவாக இருப்புத்தொகை இருந்தால் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 10 ரூபாய் அபராதமும், 50 முதல் 75 சதவிகிதத்திற்கு குறைவாக இருந்தால் ஜிஎஸ்டி வரியுடன் 12 ரூபாய் அபராதமும், 75 சதவிகிதத்திற்கு குறைந்திருந்தால் ஜிஎஸ்டி வரியுடன் 15 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2,000 ரூபாய் இருப்புத் தொகை கொண்ட புறநகர் பகுதிகளில் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ஏழரை ரூபாய், 10 ரூபாய், 12 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், 1,000 ரூபாய் இருப்புத்தொகை கொண்ட கிராமப்புறங்களில் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 5 ரூபாய், ஏழரை ரூபாய், 10 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது...
தமிழரின் வீழ்ச்சி என்பது வடுகர்களின் படையெடுப்புகளுக்கு பின்பு தொடங்கியது...
அது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கினால்
அனைவருக்கும் தாழ்வு
- என்பது பழமொழி.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை உணர்ந்து தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.
அனால் தமிழர்களை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த வடுகர்கள் நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு என்பதனை நன்கு உணர்ந்து அதற்கான வேலைகளை செவ்வன செய்துக் கொண்டிருக்கின்றனர்..
தமிழா ஒன்றுபடுவோம்..
மூல நோயை குணப்படுத்தும் கருணைக்கிழங்கு...
கருணைகிழங்கில் விட்டமின்-C, விட்டமின் B, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துக் காணப்படுகிறது..
இந்த கிழங்கை நாம் மற்ற கிழங்கை போன்று சாதாரணமாக சாப்பிட முடியாது, ஏனென்றால் இது நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும்.
எனவே இக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோல் உரித்து புளி சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
பயன்கள்...
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவற்றை சீராக்கும்.
கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம் ஆகியவற்றை குணப்படுத்துகின்றது. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்ப்பதில் பயனுள்ளதாக உள்ளது.
மூல நோயை குணப்படுத்தி, ஆசன வாயிலில் உள்ள முளைகளைச் சிறுது சிறிதாக கரைத்து மூலத்தை அடியோடு குணமாக்குகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புவோர்கள் இந்த கருணைக்கிழங்கை தினமும் சாப்பாட்டிற்கு பதில் உணவாக உட்கொண்டால் நல்ல பலனைக் காணலாம்.
கருணைக்கிழங்கு பித்தப்பை பிரச்சனை, எலும்புகள் பலவீனம் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கின்றது.
பெண்களின் கர்ப்பக் காலங்களில் கருத்தரிதலின் போது ஏற்படும் பிரச்சனைக்கு உகந்ததாக கருணைக்கிழங்கு உள்ளது.
குறிப்பு...
மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் இந்த நோயின் தாக்கத்தை ஏற்படுத்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வெளிப்பாடு மோசமாக இருக்கும்...
9 மதகுகள் உடைந்து விழுந்த முக்கொம்பு மேலணையில் தற்காலிக சீரமைப்பு பணிகள் தொடங்கின...
முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்த இடத்தில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நேற்று தொடங்கின. இந்த பணிகளை 4 நாட்களில் முடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி தண்ணீர் வந்தடைகிறது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆறு மூலமாக திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மட்டும் முக்கொம்பு மேலணையில் இருந்து உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலந்து வருகிறது. கொள்ளிடம் தடுப்பணையில் தென்பகுதியில் 45 மதகுகள் உள்ளன. வடபகுதி 10 மதகுகளை கொண்டதாகும். ஒவ்வொரு மதகின் நீளம் 12 மீட்டர்.
இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி இரவு முக்கொம்பு மேலணை பகுதியில், கொள்ளிடம் பாலத்துடன் கூடிய அணையில் 6 முதல் 14 வரையிலான 9 மதகுகள் உடைந்து கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு விட்டன.
சேதமடைந்த பகுதியின் மொத்த நீளம் 108 மீட்டர் ஆகும். தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றுவதற்காகவே கொள்ளிடம் ஆறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தற்போது 9 மதகுகள் உடைந்தாலும் உபரிநீர் வெளியே செல்வதில் எந்த சிரமும் இல்லை.
இந்தநிலையில் கொள்ளிடம் தடுப்பணை இடிந்து விழுந்த பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் நேற்று முதல் மேற்கொண்டனர். சீரமைப்பு பணிக்காக ரூ.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மணல் நிரப்பிய சாக்கு மூட்டைகள் தயார் செய்யப்பட்டு, அவை டிராக்டர் மூலம் கொள்ளிடம் தடுப்பணையின் இடிந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு மணல் நிரப்பிய சாக்குமூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இதன் மூலம் கொள்ளிடம் ஆற்றில் வீணாக செல்லும் தண்ணீர் ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதகுகள் உள்ள இடத்தில் சவுக்கு கட்டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக தற்போதுள்ள மதகுகளில் சிக்கி இருந்த கழிவுப்பொருட்கள், தண்ணீர் செல்ல இடையூறாக இருந்த கம்புகள் மற்றும் செடி, கொடிகளை தொழிலாளர்கள் ஆற்றுக்குள் இறங்கி வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.
இந்த சீரமைப்பு பணிகளை 100-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகளை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் அருகில் இருந்து கண்காணித்து வருகிறார்கள்.
மேலும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, காமராஜ், துரைகண்ணு, எம்.பி.க்கள் குமார், ரத்தினவேல் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டனர். இந்த பணிகளை 4 நாட்களில் முடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்...
திராவிடர்கள் Vs தமிழ் சாதிகள்...
பரமக்குடி துப்பாக்கி சூடானது, உண்மையில் தமிழர் அல்லாத ஒரு அரசாங்கத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தமிழ் சாதிக்குமான நீண்டநெடிய போர் ஆகும்.
ஆனால் அதை ஒரு சாதி மோதலாக திரிக்கும் முயற்சியும் நடந்தது.
பள்ளர்களின் எதிரியாக திராவிட கட்சிகளால் சித்தரிக்கபடுகின்ற எந்த குறுப்பிட்ட சாதியும் இதில் நேரடியாக சம்மந்தப்படவில்லை.
இதே போன்ற அடக்குமுறைகள் பிற தமிழ் சாதிகளுக்கும் வரக்கூடிய வாய்புகள் உள்ளன.
எந்த ஒரு சாதியும் “தமிழ் நாடு தமிழருக்கே” என்ற நிலையை எடுக்கும் பட்சத்தில் அவர்கள் மீதும் இது போன்ற துப்பாக்கி சூடும், விசாரணை ஆணையங்களும் கண்டிப்பாக வரும்..
அதற்கான உதாரணம் தான் மரக்காணத்தில் நடந்த வன்னியர்களின் படுகொலைகளும். மருத்துவர் ராமதாஸ் மீது போடப்பட்ட வழக்குகளுமே ஆகும்.
இந்நிகழ்வுகள் அனைத்தும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் திராவிட எதிர்ப்பு நிலைக்கு பிறகு நடந்தவைகளே..
தமிழர்களை ஒன்றினைய விடாமல்
தமிழர்களுக்குள் சாதி பூசல் உருவாக்கி தமிழர்களுக்குள் பகையை உருவாக்கி அதற்குள் குளிர் காய்வது தான் திராவிடம்...
இதைக் கூட உணராமல் சிலர் பதவிக்காகவும் பணத்திற்காகவும் தன் சுயநலமத்திற்காகவும் திராவிடத்தின் காலடியில் விழுந்து தமிழனை மீண்டும் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்..
தமிழா சிந்தித்து விழித்தெழு...
16 வகை லட்சுமி...
மகாலட்சுமி பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது.
அதன் விவரம் வருமாறு...
ஹரிணி: பசுமையான மேனி அழகைப் பெற்றவள்.
சூர்யா: கதிரவனுக்கு நிகரான ஒளிமயமானவள்.
ஹிரண்மயி: பொன்னி.
ஈஸ்வரி: எல்லா உயிரிலும் உறைபவள்.
ஹிரண்ச வர்ணா: பொன்னிற மேனியாள்.
சந்திரா: நிலவுக்கு நிகரான முகமுடையாள்.
அனபகா முனிம்: நிலை தவறாதவள்.
ஆர்த்திரா: நீரில் தோன்றியவள்.
பத்ம ஸ்திதா: தாமரையில் வாசம் செய்பவள்.
பத்ம வர்ணா: தாமரை வர்ணத்தாள்.
ஆதித்ய வர்ணா: சூரியகாந்தி உடையவள்.
வருஷோபில்வ: கூவளத்தில் தோன்றியவள்.
கரிஷிணி: பெருகும் பசுச் செல்வமுடையவள்.
புஷ்ஷிணி: யானைகளால் வணங்கப்படுகிறவள்.
பிங்கள: செம்மை நிறம் கொண்டவள்.
யக்கரிணி: தர்ம தேவதை
16 வகை லட்சுமி...
1. ஸ்ரீதனலட்சுமி: நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.
2. ஸ்ரீவித்யாலட்சுமி: எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.
3. ஸ்ரீதான்யலட்சுமி: ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீ தான்ய லட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.
4. ஸ்ரீவரலட்சுமி: உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.
5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி: ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.
6. ஸ்ரீசந்தானலட்சுமி: எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.
7. ஸ்ரீகாருண்யலட்சுமி: எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.
8. ஸ்ரீமகாலட்சுமி: நாம் நம்மால் முடிந்ததை மற்றவர் களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத் தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.
9. ஸ்ரீசக்திலட்சுமி: எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.
10. ஸ்ரீசாந்திலட்சுமி: நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை நினைத்து பக்தி seidhaale எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.
11. ஸ்ரீசாயாலட்சுமி: நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை பக்தி செலுத்தி அருளைப் பெற வேண்டும்.
12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி: எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.
13. ஸ்ரீசாந்தலட்சுமி: பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.
14. ஸ்ரீகிருத்திலட்சுமி: நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
15. ஸ்ரீவிஜயலட்சுமி: விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.
16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி: நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்...
100 பேரை கத்தியை காட்டி காப்பாற்றிய இளைஞர்கள்.. கேரள வெள்ளத்தில் நெகிழ்ச்சி சம்பவம்...
கேரளாவில் வரலாறு காணாத வெள்ளத்தால் 370க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் வீடு, சொத்துகளை பறிகொடுத்து உள்ளனர்.
முன்னதாக வெள்ளத்தில் சிக்கிவர்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு வந்தனர். ஆனாலும் சிலர் தங்களது வீடுகள் மூழ்காது என நினைத்து கதவுகளை பூட்டி கொண்டு வீட்டை விட்டு வெளியில் வர மறுத்தனர். மீட்பு படையினர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர்கள் வரவில்லை.
இதனை அறிந்த பந்தனம்திட்டா மாவட்டம் ரன்னி அருகே உள்ள ஆயத்தலா பகுதியை சேர்ந்த பாபு நம்பூதிரி, எம்.கே கோபகுமாரன் ஆகிய இருவரும் வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி நிவாரண முகாமுக்கு அனுப்பி வைத்தனர். இது போல 100க்கும் மேற்பட்டவர்களை கத்தியை காட்டி மிரட்டி நிவாரண முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் மட்டும் வீட்டிலேயே இருந்திருந்தால் வெள்ளத்தில் நிச்சயம் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்திருப்பார்கள். நிவாரண முகாமுக்கு சென்ற பின்னர் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை இந்த இளைஞர்கள் செய்து கொடுத்துள்ளனர்.
இது குறித்து பாபு நம்பூதிரி கூறும் போது...
வெள்ளத்தில் என் உறவினர் ஒருவரை பறிகொடுத்து விட்டேன். அதுபோல வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக கத்தியை காட்டி மிரட்டி அழைத்து சென்றேன். நான் கத்தியை காட்டி மிரட்டியதால் அவர்கள் என்மீது கோபத்தில் உள்ளனர். ஆனால் அவர்கள் காப்பாற்றிய சந்தோஷம் எனக்கு உள்ளது என்றார்...
இந்தி திணிப்பை முதலில் எதிர்த்தவர் பெரியார் அல்ல பாம்பன் அடிகளார்...
சனவரி 25ஆம் நாள் என்பது இந்தி எதிர்ப்பு ஈகியரின் நினைவு நாளாகும். இந்த ஆண்டில் தான் 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரின் 53ஆம் ஆண்டு விழாவும் தொடங்க உள்ளது. 1938ஆம் ஆண்டு தமிழறிஞர்களாகிய மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்பு தீ இன்னும் தமிழர்களிடத்தில் அணையவில்லை. தமிழர்களின் மரபு என்பது அடிப்படையில் ஆரிய- வடமொழி எதிர்ப்பு தன்மை உடையதே இதற்குக் காரணமாகும்.
ஆன்மீகத் தளத்தில் நின்று கொண்டு வடமொழியை இராமலிங்க வள்ளலாரும், அதுபோல் இந்திமொழியை தமிழ்த்துறவி பாம்பன் அடிகளார் என்பவரும் எதிர்த்து வந்துள்ளனர்.
இந்த உண்மைகளை மூடிமறைத்து இந்தி எதிர்ப்பு உணர்வை முதன் முதலில் தோற்று வித்தவர் ஈ.வெ.ரா. என்றும், அவரே சித்திரபுத்திரன் எனும் புனைப்பெயரில் 7.3.1926இல் தனது குடியரசு இதழில், "தமிழுக்குத் துரோகமும் இந்திமொழியின் ரகசியமும்" என்ற தலைப்பில் கட்டுரை தீட்டினார் என்றும் வரலாறு எழுதுவோர் ஆராய்ச்சி செய்யாது நுனிப்புல் மேய்வோராய் எழுதி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராய் ஆன்மிகத் தளத்தில் நின்று 1899ஆம் ஆண்டில் முதற்குரல் கொடுத்தவர் குமரகுருதாச சுவாமிகள் என்றழைக்கப்படும் பாம்பன் அடிகளார் என்பதே உண்மையான வரலாறாகும்.
பாம்பன் அடிகளார் இராமேசுவரம் பாம்பனில் 1853ஆம் ஆண்டு பிறந்தவர். சைவநெறி மீதும், முருகன் மீதும் தீராப்பற்று கொண்டவர்.
வடமொழியிலும், தமிழ்மொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். அவர் 6600 அருந்தமிழ் பாடல்களை இயற்றியுள்ளார். இவரால் வடமொழி கலவாமல் தனித் தமிழ் நடையில் எழுதப்பட்ட "சேந்தன் செந்தமிழ்" எனும் நூல் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். 1929ஆம் ஆண்டு மறைந்த இவருக்கு சென்னை திருவான்மியூரில் சமாதி கோயில் கட்டப்பட்டுள்ளது.
பாம்பன் அடிகளார் இந்தியை எதிர்த்ததன் காரணம் என்னவெனில், இந்தி நுழைந்து விட்டால் தமிழர்களின் சைவ சமயமும், தமிழ்மொழியும் அழிந்து விடும் என்று அஞ்சினார். வேறு பாடையான இந்தியை வளர்க்க முற்படும் வடநாட்டவரின் சுயநலத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதையும், தமிழ்மொழியை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரப்பும் பணியில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்பதையும் 1899ஆம் ஆண்டு வெளியிட்ட தனது 'திருப்பா' எனும் சாத்திர நூலில் குறிப்பிட்டுள்ளார். இதன் வரிகள் இதோ:
பாடை பதினேட்டேயன்று பண்டைப் பரதகண்ட சாத்திரங்கள் பகர்ந்தவாறு கடந்து எத்தனையோ பாடைகளிஞ் ஞான்று காணப்படல் காலந்தோறும் கன்மதன்மங்கள் வேறுபடுமென்பதைக் காட்டுகின்ற தென்பதூஉம், அவ்வேறுபாட்டிற்கியையப் பன்முகத்தாலுந் தமிழ் பல்கு வழியினைத் தேடல் வேண்டுமென்பதூஉம், அப் பல்கலின்மையால் வடநாட்டிலும் மற்றை நாட்டிலுந் தமிழ் வேதப் பெருமையினையும் ஆக்கிய வருளாளர் பெருமையினையுமறியாக் குறையானது வடமொழி பிறமொழியென்பவற்றின் கண்ணவேயே விருப்பத்தையும் பிற மத வேட்கையையும் பெருமயக்கத்தையும் பெருக்கு கின்றதென்பதூஉம் தமிழ்நலன் இற்றென வறியாது
" இந்தி முதலிய வேறு பாடைகளை யிந்நாட்டகத்தும் விருத்தி செய்ய விழையும் வடநாடரது சுயநலத்தினை யாதரித்தல் தமிழர் கடன்மை யன்றென்பதூஉம் "
தலைவனருளற்புதமும், கண்டுகூறு முண்மையுமுட் கொண்டிலகு தமிழ்வேதம் இனிது வியாபிக்கின் இந்நிலவுலகெங்கணுஞ் சைவ சமயமே தலைப்படுமென்பதும், அஞ்ஞான்று ஆன்மலாப வவாவுடையா ரனைவரும் இவ்வுலகினை நேடாதிருக்க நியாய முற்றென்பதூஉம் இங்ஙனங் கொளக் கிடப்பனவாம். (திருப்பா நூன்முகம் பக்க.எ. 17.)
பாம்பன் அடிகளார் இந்நூன்முகத்தை புதுப்பாக்கமெனும் குமாரபுரத்தில் புதுப்பேட்டை அமீர் மகால் அருகில் தங்கி 26.7.1920ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பிலும் வரைந்திருக்கிறார்கள்.
1899ஆம் ஆண்டு இந்தி என்பது தமிழ்நாட்டில் திணிக்கப்படாத காலம்.
வடநாட்டினரின் இந்தியை திணிக்க முற்படும் உணர்வை முன் கூட்டியே அறிந்து பாம்பன் அடிகளார் எழுதியது வியப்பிற்குரியது.
எனவே, இந்தி எதிர்ப்பு வரலாற்றை எழுதுவோர் இனியாவது ஈ.வெ.ரா. முன்னரே இந்தி எதிர்ப்புக்கான விதை ஊன்றிய பாம்பன் அடிகளாரை இந்தி எதிர்ப்பு வரலாற்றின் பக்கங்களில் குறிப்பிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்...
குறிப்பு : ஈ.வெ.ரா இந்தியை எதிர்க்கவில்லை.. இந்தியை எதிர்த்த தமிழர்களை தான் எதிர்த்தார் என்பதே உண்மையான வரலாறு...
சித்தர்களின் பாடல்களில் அவர்கள் ரசனையைப் பற்றி பேச வார்த்தைகளே இல்லை...
எளிய சொற்களுக்குள் உலகத் தத்துவங்களையே மறைபொருளாக வைத்து அவர்கள் பாடுகிற பாங்கு அற்புதத்திலும் அற்புதம்.
இந்த உடலைக் குறித்து சொல்லும் போது...
பராபரத்தில் பரம் தோன்றி,
பரத்தில் சிவம் தோன்றி,
சிவத்தில் சக்தி தோன்றி,
சக்தியில் நாதம் தோன்றி,
நாதத்தில் விந்து தோன்றி,
விந்துவில் சதாசிவம் தோன்றி,
சதாசிவத்தில் மகேஸ்வரன் தோன்றி,
மகேஸ்வரனில் ருத்திரன் தோன்றி,
ருத்திரனில் விஷ்ணு தோன்றி,
விஷ்ணுவில் பிரம்மா தோன்றி,
பிரம்மாவில் ஆகாயம் தோன்றி,
ஆகாயத்தில் வாயு தோன்றி,
வாயுவில் அக்னி தோன்றி,
அக்னியில் அப்பு தோன்றி,
அப்புவில் பிருதிவி தோன்றி,
பிருதிவியில் அன்னம் தோன்றி,
அன்னத்தில் ரஸம் தோன்றி,
ரஸத்தில் உதிரம் தோன்றி,
உதிரத்தில் மாமிசம் தோன்றி,
மாமிசத்தில் மேதை தோன்றி,
மேதையில் அஸ்தி தோன்றி,
அஸ்தியில் மச்சை தோன்றி,
மச்சையில் சுக்கிலம் தோன்றி,
சுக்கிலத்தில் சுரோணிதம் தோன்றியது.
சுக்கிலமானது சுரோணிதத்துடன் கலந்து
ஜலமயமாகிப் பின் ஏழாம் தினத்தில்
குமிழியாகி, முப்பதாம் நாள் உதிரம் திரண்டு
பிண்டமாகி, அறுபதாம் நாள் அப்பிண்டத்திற்கு அச்சு(சிரசு)உண்டாகி, தொண்ணூறாம் நாள்
மாமிசம் திரண்டு மூட்டு (கை, கால்கள்)
உண்டாகி, நூற்று இருபதாம் நாள் தண்டமாய்
நரம்பு, நாடி(கை, கால்களில் விரல்கள்)
உண்டாகி, நூற்றி ஐம்பதாம் நாள்
நவத்துவாரங்களும் உண்டாகி, இரு நூற்றுப்
பத்தாம் நாள் பிராணன் உண்டாகிக் கர்பத்தை
சூழ்ந்து புரளும். இருநூற்று நாற்பதாம் நாள்
மற்ற அவயங்கள் உண்டாகி நீட்டி, முடக்கி,
தாயுண்ட அன்ன சாரத்தை தொப்புள் வழியாக
உண்டு, பிள்ளையினுடைய உடல் வளர்ந்து
தாயுடன் தோன்றி உயிருடன் ஆடும்.
இருநூற்றி எழுபதாம் நாள் தலை முதல் கால்
வரை ரோமத் துவாரம் உண்டாகி, அறிவுக் கண் திறந்து, முன்னூறாவது நாள் மலை
மேலிருந்து தலைகீழாய் விழுவது போல்,
நிறைந்த பிண்டமாய் அபானனின் பலத்தினாலே
பூமியில் ஜெனிக்கும் குழந்தை, நாடி,
நரம்பிகளும், ஆறாதாரமும்,? ஐந்தெழுத்தும்,
ஐம்பத்தோரு அட்சரமும், பஞ்சபூத
தேவதைகளும் தூலச் சூக்குமத்துள்ளே
கொழுந்துவிடப் பேதையாம்.
கருவானது தன் செவ்விய இளங்காலை
முடக்கித் தலையுடன் சேர்த்து, ஓம் வடிவமாக
அமைந்திருக்கும் கருப்பைக்குள் சுமையாக
நின்று, வெளியேறத் திருவுள்ளங் கொண்டு,
முந்தித் தவம் கிடந்து, அன்னையின் வயிற்றில் நீங்கும் சுமையாகக் காத்திருக்குமாம்.
இதையே திருமூலர்.......
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்பு
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே. 452.
திருமூலர் அருளிய திருமந்திரத்தில், எட்டாம்
தந்திரத்தில் இடம் பெற்றுள்ள "காயப்பை'
என்னும் பாடலில் பல நுட்பங்கள்
அடங்கியுள்ளன.
காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மன்னா மயங்கிய வாறே. (2122)
- நம் உடம்பில் பல்வேறு "பை'கள் உள்ளன.
அவற்றுள் முதல் பை காயப்பை. அதாவது, புற
உடம்பாகிய தூல உடம்பைக் காயப்பை என்பர்.
அவற்றுள் இரண்டாவது பை மாயப்பை. மாயம்
என்பதற்கு மறைந்து எனப் பொருள் கொண்டு
மறைந்திருக்கும் சூக்கும உடம்பு என்பர்.
மூன்றாவது ஆனந்த மயகோசம் என்கின்ற
மற்றுமோர் பையாகும்.
இந்தப் பாடலில் வந்துள்ள சரக்குப்பலவுள
என்பதன் விளக்கத்தைத் திருமூலர் "இரதமும்'
எனத் தொடங்கும் பாடலில் (2125)
குறிப்பிட்டுள்ளார். அதன்படி இரதமும்,
உதிரமும், இறைச்சியும், தோலும், மேதையும்,
அத்தியும், வழும்பும், மச்சையும்,
சுக்கிலமும் ஆகிய ஒன்பதும் காயப்பையில்
உள்ள ஒன்பது சரக்குகளாம்.
1. இரதம் - உண்ட உணவின் சாரம்
2. உதிரம் - இரத்தம்
3. இறைச்சி - உதிரம் பரவுவதற்கு இடமான
தசையும் நாரும்
4. தோல் - ஊனை உள்வைத்துப் பாதுகாப்பாய்
மூடியிருப்பது
5. மேதை - அறிவு விளக்கத்திற்குப்
பயன்படும் மூளைப் பகுதியை சுற்றியுள்ள
வெள்நிணம். இது நீர்மையானது. (சிலர்
கொழுப்பு என்பர்)
6. அத்தி - எலும்பு
7. வழும்பு - நிணத்திலிருந்து ஊறும்
வெண்மையான நீர்
8. மச்சை - எலும்புக்குள்ளே ஓடும்
வழுவழுப்பான திரவம்
9. சுக்கிலம் - வெண்ணீர் (பெண்களுக்குள்ள
சுரோணிதம்)
காயப்பை என்னும் தூல உடம்பில் உள்ள
ஒன்பதும் சரக்கும் சேர்ந்து உடல் எனக்
கொள்ளப்படுகிறது
ஏழு தாதுக்கள் என்பது எதனால் ?
உணவிலிருந்து, ரத்தத்திலிருந்து மாம்ஸம், மாம்ஸத்திலிருந்து கொழுப்பு கொழுப்பிலிருந்து நரம்புகள், நரம்பிலிருந்து எலும்புகள், எலும்பிலிருந்து ஊன், ஊனிலிருந்து சுக்ரம்,இப்படி ஏழு தாதுக்கள் அவற்றால் ஆனது சரீரம்,சுக்கிரமும் சோணிதமும் சேர்ந்தால் கர்ப்பம் உண்டாகிறது. அதை இயக்குமிடம் இதயம். இதயத்தினுள் ஒரு அக்னி உள்ளது. அதில் பித்தமும், பித்தத்திலிருந்து வாயுவஜம் தோன்றுகிறது. அந்த வாயு மீண்டும் கிரமமாக இருதயத்தை நாடுகிறது. இது இறைவனின் நீதி.
யஜுர்வேதம்...
…..கர்ப்போபநிஷத்1.4ருதுகால சம்போகத்தால்
ஓரிரவு கழிந்ததும் கருவானது
கலங்குகிறது.ஏழிரவுகளில் நீர்க்குமிழி
போன்ற உருவத்தை அடைகிறது.அரை மாதத்தில் பிண்டமாகிறது.
ஒரு மாதத்தில் அது கடினமாகிறது. இரண்டு மாதத்தில் தலை தோன்றுகிறது. மூன்று மாதங்களில்
பாதங்களின் பிரதேசம் தோன்றுகிறது. நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு, இடுப்பு முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன. ஐந்தாவது மாதத்தில் பின்புறம் (மூங்கில் போன்ற முதுகு) எலும்பு உண்டாகிறது. ஆறாவது மாதத்தில் வாய், மூக்கு கண்கள். காதுகள் உண்டாகின்றன. ஏழாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா
லக்ஷணங்களும் பூர்த்தியாகின்ற
ன.தந்தையின் வீர்யம் அதிகமாயிருந்தால் புருஷனாகவும், தாயின் வீர்யம் அதிகமாயிருந்தால் ஸ்திரீயாகவும், இரண்டும் சமமாக இருந்தால் அலியாகவும் ஆகிறது.
மனக்கலக்கத்தோடு இருந்தால்
குருடர்களாகவும், முடவர்களாகவும், கூனர்களாகவும்,குள்ளர்களாகவும்
பிறக்கிறார்கள். ஒன்றுக்கொன்று வாயுவினால் பீடிக்கப்பட்டு சுக்லம் இரண்டுபட்டால் அப்போது இரட்டை பிள்ளைகள் பிறக்கிறார்கள்.
யஜுர்வேதம்…..
கர்ப்போபநிஷத் 3கர்பத்தில் இருக்கும் போது தாயார் உண்டதும் பருகியதும் தாயுடன் இணைந்து நாடிகளில்
பரவி அதன் மூலம் குழந்தையின் பிராணனை திருப்தியடைகிறது. பிறகு ஒன்பதாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் பரிபூரண நிலையை அடைகின்றன. அப்போது
அந்த ஜீவனுக்கு முந்திய பிறவியின் ஞாபகம் வருகிறது. தான் செய்த புண்ணிய செயல்களையும். பாபச் செயல்களையும் உணர்கிறது. முன்பு என்னால் ஆயிரக்கணக்கான
யோனிகள் பார்க்கப்பட்டும் பலவிதமான
ஆகாரங்கள் புசிக்கப்ட்டும் பலவிதமான
ஆகாரங்கள் புசிக்கப்ட்டும்.பலவிதமான
ஸ்தன்ய பானங்கள்(தாய்ப்பால்) பருகப்பட்டும் ஆகிவிட்டன. திரும்பத்திரும்ப பிறந்தும்
இறந்துமாயிற்று. நல்லதோ பொல்லாததோ எந்த கருமம் எந்த சுற்றத்தின்ன் பொருட்டு என்னால் செய்யப்ட்டதோ அந்த உற்றார்
பயனை அனுபவித்துவிட்டு போய் விட்டார்கள்.
நானோ தன்னந்தனியாக அதனால் தவிக்கிறேன்.
யோனியினின்று வெளிவந்தால் இனி நான்
பாவத்தை போக்குபவரும் கருமப்பயனிலிருந்து முக்தியளிப்பவரும்மான மகேஷ்வரனை
நாராயணனை சரணடையப்போகிறேன்.
யோனியிலிருந்து வெளிவந்தால் இனி நான்
பாபத்தை போக்குவதும் கருமப்
பயனிலிருந்துவிடுதலையளிப்பதுமான
ஞானமார்க்கத்தை அப்பியாசம்
செய்வேன்.
யோனியிலிருந்து வெளிவந்தால்
பிரம்மத்தை தியானிப்பேன் என்று
எண்ணுகிறான். பிறகு யோனித் துவாரத்தை அடைந்து இயந்திரத்தால் பீடிக்கப்ட்டவனைப்போல மிகுந்த துன்பத்திற்குள்ளாகி பிறந்தவுடன் விஷ்ணுமாயா வாயுவால்
தொடப்பட்டு நினைவிழந்து
முற்பிறவியையோ புண்ணிய
பாபச்செயல்களையோ எதையும்
அறிவதில்லை.
அறு கோண நட்சத்திர சிவ தத்துவம் ( contemporary shape of shivalinga) இதை உருவாக்கியவர் முருகன், இதைத்தான் சிவனுக்கு உபதேசித்ததாக கூறுவர் இதனால் தான் ஆறுமுகன் என்று அழைக்கப்படுகிறார், விந்துவை யோக சக்தி (metaphysics) யால் உணர்ந்து அதன் வடிவத்தில் தான் வேல் உருவாக்கினார் அதனால் தான் வேல்தன்.. வேந்தன் என்றழைக்கப்பட்டார்... காமம் இல்லாமல் முனிவர்களின் பிறப்பேது?, எல்லாமே இறை என்றபின் முகம் சுழிக்க வேண்டிய எண்ணம் எப்படி...
Subscribe to:
Posts (Atom)