27/08/2018

கேரளாவில் நிவாரணப் பொருட்களை லாரியோடு கடத்திய இரண்டு அரசு அதிகாரிகள் கைது...


கேரள மாநிலத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நிவாரணப் பொருட்களை உரியவர்களிடம் சேர்ப்பிப்பதும் தற்போது சவாலாக மாறியுள்ளது.

ஒவ்வொரு நிவாரண முகாம்களிலும், நிவாரணப் பொருட்கள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க கேரள அரசு வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்துள்ளது.

இருந்த போதும் பல்வேறு நிவாரண முகாம்களில் பொருட்கள் கடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் வயநாடு நிவாரண முகாமில் இருந்து பொருட்களைத் திருடியதாக இரண்டு அரசு அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், வயநாடு நிவாரண முகாமில் இருந்து ஒரு டிரக்கில் ஏராளமான நிவாரணப் பொருட்கள் வெளியே கிளம்பியது. அதனை நிவாரண முகாமில் இருந்த மக்கள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அங்கே பணியில் இருந்த அரசு அதிகாரிகள் தாமஸ் மற்றும் தினேஷ், இந்த டிரக் மற்றொரு நிவாரண முகாமுக்குச் செல்வதாகத் தெரிவித்தனர். ஆனால் மக்கள் அதனை ஏற்காமல் காவல்துறையை அழைத்தனர். அவர்கள் வந்து விசாரித்ததில், அந்த டிரக் எந்த நிவாரண முகாமுக்கும் அனுப்பி வைக்கப்படவில்லை என்பதும், அதனை தாமஸ் மற்றும் தினேஷ் திருடிச் செல்வதும் தெரிய வந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுபோன்ற புகார்கள் ஆங்காங்கு எழுந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.