27/08/2018

100 பேரை கத்தியை காட்டி காப்பாற்றிய இளைஞர்கள்.. கேரள வெள்ளத்தில் நெகிழ்ச்சி சம்பவம்...


கேரளாவில் வரலாறு காணாத வெள்ளத்தால் 370க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் வீடு, சொத்துகளை பறிகொடுத்து உள்ளனர்.

முன்னதாக வெள்ளத்தில் சிக்கிவர்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு வந்தனர். ஆனாலும் சிலர் தங்களது வீடுகள் மூழ்காது என நினைத்து கதவுகளை பூட்டி கொண்டு வீட்டை விட்டு வெளியில் வர மறுத்தனர். மீட்பு படையினர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர்கள் வரவில்லை.

இதனை அறிந்த பந்தனம்திட்டா மாவட்டம் ரன்னி அருகே உள்ள ஆயத்தலா பகுதியை சேர்ந்த பாபு நம்பூதிரி, எம்.கே கோபகுமாரன் ஆகிய இருவரும் வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி நிவாரண முகாமுக்கு அனுப்பி வைத்தனர். இது போல 100க்கும் மேற்பட்டவர்களை கத்தியை காட்டி மிரட்டி நிவாரண முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் மட்டும் வீட்டிலேயே இருந்திருந்தால் வெள்ளத்தில் நிச்சயம் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்திருப்பார்கள். நிவாரண முகாமுக்கு சென்ற பின்னர் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை இந்த இளைஞர்கள் செய்து கொடுத்துள்ளனர்.

இது குறித்து பாபு நம்பூதிரி கூறும் போது...

வெள்ளத்தில் என் உறவினர் ஒருவரை பறிகொடுத்து விட்டேன். அதுபோல வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக கத்தியை காட்டி மிரட்டி அழைத்து சென்றேன். நான் கத்தியை காட்டி மிரட்டியதால் அவர்கள்  என்மீது கோபத்தில் உள்ளனர். ஆனால் அவர்கள் காப்பாற்றிய சந்தோஷம் எனக்கு உள்ளது என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.