07/10/2017

திருப்பதி: சைவ, வைணவ மோதலால் தமிழன் இழந்த மண்...


திருப்பதி முருகன் கோவில் இல்லை அது திருமாலின் உறைவிடம் என்போர் காட்டும் ஒரு வலுவான சான்று..

சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதையில் வரும்,

ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் *கையி னேந்தி*
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

என்ற பாடலைத்தான்,
அதாவது காவிரிக்கரையில் (திருவரங்கம்) கிடந்த வண்ணம் இருக்கும் இறைவன் வேங்கடத்தில் சக்கரமும் சங்கும் கையில் ஏந்தி வேங்கடத்தில் நிற்கிறான் என்று இதிலிருந்து அறியமுடிகிறது.

இதுதான் முறியடிக்கவியலாத வலுவான சான்று.

ஆனால் இதை வலுவிழக்கச் செய்ய முடியும்.

திருப்பதி சிலையில் சங்கும் சக்கரமும் கையிலா ஏந்தப்பட்டுள்ளது?

இல்லை. தோளில்தான் ஒட்டப்பட்டுள்ளது!

வேங்கடத்தைக் குறிக்கும் போது மறக்காமல் குறிப்பிடப்படும் பெரிய அருவி இன்று இல்லை.

அதேபோல ஆயிரம் தலையுடைய பாம்பின்மேல் அரங்கன் படுத்திருக்கவும் இல்லை.

சரி, சங்கும் சக்கரமும் திருமாலுக்கு மட்டுமே உரியதா?

இதே சிலப்பதிகாரத்தின் காடுகாண் காதைக்கு அடுத்துவருவது வேட்டுவ வரி அதில்,

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த
கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்

தனது சடைமுடியில் கங்கையை அணிந்துள்ள, நெற்றியில் கண்ணை உடையவனின் (சிவன்) திருமேனியிலே மறைகள் போற்றும் பாதி பெண்ணுருவமான நீ,
உன் தாமரை போன்ற கைகளில் சங்கும் சக்கரமும் ஏந்தி சினத்தால் சிவந்த கண்ணுடைய சிங்கத்தின் மேலேறி நிற்பது என்ன மாயமோ?

என்று இதற்குப் பொருள்.

கொற்றவை கூட சங்கு சக்கரம் ஏந்தியுள்ளாள்!

பால்வெண் சங்கம் என்று வந்துள்ளது. திருமாலுக்கு பிடித்தது சாளக்கிராமம் என்ற கருப்பு சங்கு.

சிவனுக்கு பிடித்தது அதிவெண்மையான வலம்புரி சங்கு.

அழகாபுத்தூர் சிவன் ஆலயத்தில் முருகன் சங்கும் சக்கரமும் ஏந்தியுள்ளான்.

சரி நெடியோன் என்பது திருமாலுக்கு மட்டுமே உரிய பெயரா?

சிலப்பதிகாரம் மற்றொரு இடத்திலும் 'நீலமேனி நெடியோன் கோயிலைப்' பற்றிக் கூறுகிறது.

அகநானூறு (149) நெடியோன் என்று விளிப்பது திருப்பரங்குன்றத்து தலைவனை அதாவது முருகனை!!!

"வச்சிரத் தடக்கை நெடியோன் கோவில்" என்று புறநானூறு (241) கூறுகிறது. வச்சிரம் வைத்திருப்பவன் இந்திரன்.

மதுரைக் காஞ்சி தேவர்தலைவனை (இந்திரனை) 'மழுவாள் நெடியோன்' (453 - 467) என்கிறது.

பெரும்பாணாற்றுப்படை (402) கூறும் நெடியோன் கரிய நிறத்திலும் தொப்புள்கொடியில் நான்முகனைக் கொண்டவனாகவும் திருமாலுடன் ஒத்துபோகும் உருவத்துடன் உள்ளான்.

குமரிக்கண்டத்தில் ஆட்சி செலுத்திய பாண்டியமன்னன் பெயர் நெடியோன்தான் (மதுரைக்காஞ்சி 764).

சிலப்பதிகாரமே அழற்படுகாதையில் (56-61) பல அரசர்களை தோற்கடித்து நான்குவகை நிலங்களை கைப்பற்றிய மன்னனை 'உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன' என்று உவமை கூறுகிறது.

நடுகற்காதையில் பகைவரை வென்ற சேரனான செங்குட்டுவனை 'நிலந்தரு திருவின் நெடியோன்' என்று குறித்தலைக் காணலாம்.

நெடியோன் என்பது பொதுப்பெயர்.
உயர்ந்தவன் அல்லது உயரமானவன் என்று பொருள்படும்.

இது மன்னருக்கும் கடவுளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சரி கிடந்தநிலை திருமாலுக்கு மட்டுமே உரியதா?

திருப்பதிக்கு அருகே சுட்டபள்ளியில் உள்ள சிவனும் குலசேகரப்பட்டிணத்தில் உள்ள முருகனும் கூட கிடந்த நிலையில்தான் உள்ளனர்.

சிறுதெய்வங்களிலும் சில தெய்வங்கள் கிடந்தநிலையில் உண்டு.

சிறந்த எடுத்துக்காட்டு வண்டிமறிச்சம்மன்.

சிலப்பதிகாரத்தில் வரும் தெய்வங்களின் அடையாளங்கள் இன்றைய சிவன், திருமால், முருகன், துருக்கை ஆகிய தெய்வங்களுடன் ஒத்துப் போனாலும் அப்போது சைவமோ வைணவமோ இந்துமதமோ இருந்திருக்கவில்லை.

மாயோனை திருமாலாக்கி வைணவம் எடுத்துக்கொண்டது.

சேயோனை முருகனாக்கி சைவம் எடுத்துக்கொண்டது.

மாயோன்தான் திருமால் என்று பழந்தமிழ் இலக்கியம் எங்கும் கூறவில்லை.

மாயோன் அன்ன மால் என்கிறதுதான் நற்றினை (37:1) கூறுகிறது.

மால் மாயோன் ஆகியோர் கடவுளரா?

கலித்தொகையில் தலைவன் மாலுக்கும் (104:35) மாயோனுக்கும் (109:17) ஒப்பானவனாக புகழப்படுகிறான்.

புறநானூறு பாண்டிய மன்னின் புகழ் மாயோனின் புகழுக்கு ஒப்பானது என்கிறது (57:1)

ஆக மால், மாயோன் ஆகியோர் ஏற்கனவே புகழ்பெற்றிருந்த *மனிதர்கள்* என்று கருதமுடியும்.

சங்க நூல்களிலே வேங்கடமும், அதனைச் சூழ்ந்த நாட்டிற்கும் தலைவரென விளங்கிய
புல்லி (அகம் 61, 83, 209, 393-புறம் 385),
திரையன் (அகம் 85),
ஆதன் உங்கன் (புறம் 389) என்போரும் புகழ்பெற்ற மன்னர்கள்.

மலைபடுகடாம் பாடும் நன்னன் வேண்மான், வேல் உடையவனாகவும் திருவார் மார்பன் என்றும் புகழப்படுகிறான்.
வேல் முருகனுடன் தொடர்புடையது, திருவாழமார்பன் என்பது மார்பில் திருமகளைக் கொண்ட திருமாலைக்குறிப்பது.
மதுரைக்காஞ்சி (611) முருகனை நன்னன் என்றே அழைக்கிறது.

மேலும் ஒரு சான்று தரவா?

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும்  திருமலை மேல் எந்தைக்கு,
இரண்டுருவும்  ஒன்றாய் இணைந்து
- பேயாழ்வர், (மூன்றாம் திருவந்தாதி 63)

அதாவது சடை, மழு, சூழரவு இவை சிவனின் அடையாளங்கள்,
நீள்முடி, சக்கரம், பொன்னாண் இவை திருமாலின் அடையாளங்கள்,

இரண்டும் கலந்த உருவம்தான் திருப்பதியில் உள்ளது என்று பொருள்.

திருப்பதியில் நடக்கும் வில்வ அர்ச்சனை, பாலாஜி என்பதில் பாலா என்ற  வேலைக் குறிக்கும் வடசொல் என பல சான்றுகள் சைவத்தின் தொடர்புக்கு வலுசேர்க்கின்றன.

என்றால் திருமால் என்ற சொல் அப்போது இருந்ததில்லையா?
இருந்துள்ளது.
காடுகாண் காதையிலேயே
திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்
பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியோடு
இட்ட சித்தி யெனும்பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப்
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்

திருமால் குன்றம் மலையின் மேலே
புண்ணிய சரவணம் என்ற  பொய்கை இருந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார் இளங்கோவடிகள்.

அதுதான் இன்றைய அழகர் மலை.
பழைய பெயர் 'திருமாலிருஞ்சோலை'.
மலைக்கு மேலே சுனையும் உண்டு.
இதனை சிலம்பாறு (சிலம்பு!) என்றும் கூறுவர்.

ஆனால் இவ்விரண்டிற்கும் நடுவில் இருக்கும் பழமுதிர்சோலை பற்றி எந்த குறிப்பும் இல்லை.

அழகர்தான் முருகரோ என்ற ஐயம் தோன்றுகிறது.

காரணம் முருகனைத்தான் அழகன் என்று கூறுவர்.

இளங்கோவடிகள் திருமால் என்று முருகனைக் குறிப்பிட்டுள்ளார் என்றுகூடச் சொல்லலாம்.

சரவண என்பது முருகருடன் தொடர்புடையதா?

ஆம். குன்றக்குரவையில்
'சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திரு முலைப் பால் உண்டான்
திருக் கை வேல்' என்று வருகிறது.

அதாவது ஆறுகுழந்தையாகப் பிறந்து சரவணப் பொய்கையில் ஆறு (கார்த்திகைப்) பெண்களிடம் தாய்ப்பால் குடித்த முருகன் கையில் இருக்கும் வேல் என்பதிலிருந்து இதை அறியலாம்.

அழகர் ஆற்றிலிறங்குவது நாயக்கர்கள் காலத்தில்தான் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

காலங்காலமாக அழகர் மலையில் இருந்து அலங்காநல்லூர் வழியாக தேனூரில் வைகையாற்றிலிறங்கிய அழகரை, நாயக்கர்கள் இறங்கவிடாது தடுத்து முறையை மாற்றி மதுரையிலேயே இறக்குகின்றனர்.

மேலேயிருந்த சிலம்பாற்றில் 'ராக்காயி' அம்மனை உட்காரவைத்தனர்.

கள்ளழகர் நகைகள் தெலுங்கு குடும்பத்தின் பொறுப்பில்தான் உள்ளது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நாயக்கர்களால் முருகனின் படைவீடான பழமுதிர்சோலையே மறைக்கப்பட்டது.

அதை வெளிக்கொணர்ந்து இப்போது தற்காலக் கோவிலான சோலைமுருகன் கோவிலை 1950களில் நிறுவியவர் அண்ணல் கி.பழனியப்பனார்.

அப்பதிவு தமிழர் மண்மீட்பை அடிப்படையாகக் கொண்டது.

அதாவது நாயக்கர்காலத்தில் வைணவ ஆதரவும் தெலுங்கு ஆதரவும் தமிழர் பகுதியான திருப்பதியை பறித்து தெலுங்கு வைணவரிடம் கொடுத்துவிட்டன.

திருமால் பக்தரோ முருக பக்தரோ தமிழர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்ளாமல் திருப்பதியை மீட்டுவந்தால் போதும்...

ஒரே ஒரு நாளை நம்பி வருடம் முழுவதும் பணியாற்றும் இந்த தொழிலாளிகளை ஏமாற்றிவிடாதீர்கள்...


தயவு செய்து சீன பட்டாசுகளை வாங்காதீர்கள்...

திருப்பதி முருகா...


திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுவிட்டு வருகிறாராம், அடங்கப்பா, எந்த பெருமாள் கோவிலிலாவது மொட்டைபோடும் வழக்கம் உண்டா?

எந்த பெருமாள் வெறும் இரண்டு கைகளோடு இருக்கிறார்?

எந்த பெருமாளுக்கு ஈஸ்வரன் என்ற சைவ(சிவன்) பெயர் உள்ளது?

எந்தப் பெருமாள் கோவில் கொடிமரமும் தெப்பக்குளமும் இல்லாமல் இருக்கிறது?

எந்த ஆழ்வாராவது திருப்பதி பெருமாளைப் பாடியது உண்டா?

எந்த பெருமாள் சிலையாவது இடது கையை கீழே தொங்கப் போட்டபடி உள்ளங்கையை மட்டும் மடக்கி உயர்த்தியவாறு உள்ளதா?

(படத்தில் பார்க்க)

கோவிலைச் சுற்றி கிடைத்துள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ்க் கல்வெட்டுகள் என்பதை அறிவீரோ?

கோவில் சுவர் முழுக்க தமிழ் எழுத்துகள் சுண்ணாம்படித்து மறைக்கப்பட்டிருப்பதை கவனித்துள்ளீரா?

சங்கும் சக்கரமும் தோளில் ஒட்ட வைத்திருப்பதையும் அதன் பின்னால் போலியான பின்கைகள் ஒட்ட வைக்கப்பட்டிருப்பதையும் கூர்ந்து நோக்கியிருக்கிறீரா?

பெருமாள் கோவில்கள் பெரும்பாலும் மலைமீது  இருக்காதே?

தங்கத்தாலும் வைரத்தாலும் அடக்கம் செய்யப்பட்டுள்ள சிலை முருகர் சிலை என்றால் நம்புவீரா?

சங்கநூல்கள் வேங்கடத்தைப் பாடுகின்றன; (ஆனால் முருகன் என்று பாடவில்லை)..

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் 'வேங்கடத்து நெடியோனைப்' பாடுகிறார்.

அருணகிரிநாதர் முருகன் என்று அடையாளம் கண்டு 'வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மாமலையில் உறைவோனே!' என்று பாடுகிறார்.

சைவர்களும் வைணவர்களும் திருப்பதியைச் சொந்தம் கொண்டாட 12ம் நூற்றாண்டில் ராமானுஜர் கருவறையில் சங்கு சக்கரத்தை வைத்துவிட்டு அரச முத்திரையோடு பூட்டு போட்டாராம்.

மறுநாள் காலை திறந்துபார்த்தால் சங்கும் சக்கரமும் சிலைமேல் இருந்ததாம்.

சைவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனராம்..

உடனே சங்கு சக்கரத்தை சிலையோடு பொருத்தி வைணவத் தலமாக்கிவிட்டார்களாம்.

ஆம்ஸ்டர்டாமில் இருந்து ரோஜா மலர்கள், ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு,
பாரீஸில்  இருந்து வாசனைத் திரவியங்கள் என வளம் கொழிக்கும் திருப்பதி..

2013ம் ஆண்டில் மட்டும் 860கோடி வருமானம் ஈட்டியுள்ளது..

இந்த ஆண்டு 1000கோடி எதிர்பார்க்கப்படுகிறது..

எல்லாம் தெலுங்கருக்குத்தான்.

திருப்பதி மட்டுமா திருக்காளத்தியும் (காளஹஸ்தி) போனது..

நல்லவேலை ம.பொ.சி படைவீடான திருத்தணியை மீட்டுக்கொடுத்தார்;

திருப்பதியைச் சுற்றியிருக்கும் தமிழ் ஊர்களாவன,

சந்திரகிரி (தமிழர் - 60 %),
சித்தூர் (தமிழர்- 65%),
குப்பம்(தமிழர்-60 %),
நகரி(தமிழர்-55%),
புங்கனூர்(தமிழர்-50%),
சத்தியவேடு(தமிழர்-70 %),
திருக்காளத்தி(தமிழர்-65 %),
புத்தளப்பட்டு(தமிழர் -55%),
திருப்பதி(தமிழர்-55 %),
பல்லவனேறி(தமிழர்-50 %),
நெல்லூர்(தமிழர்-55 %),
கோவூர்(தமிழர்-60%),
உதயகிரி(தமிழர்-55%) ...

1300களில் நாய்க்கெராட்சி வரும்வரை வேங்கடமலை என்ன அதற்கும் வடக்கே துங்கபத்திரை ஆற்றுக்கு தெற்கே என்றும் வேற்றினத்தார் நுழையவில்லை..

காலம் காலமாக தமிழர் பகுதியாக இருந்த வேங்கடம் இன்று தெலுங்கர் ஆட்சிக்குப் போய்விட்டது..

கோவிலைக் கட்டியவன் உன் பாட்டன் ஆனால் அங்கே தெலுங்கன் உன்னை 'ஜருகண்டி' என்று பிடித்துத் தள்ளுவான்..

பாலாஜி என்ற பெயரே 200ஆண்டுகள் முன்பு கிடையாது..

வடயிந்தியன் பாலாஜி என்ற பெயரை வைப்பான்; தமிழன் அந்தப் பெயரை வைத்துக் கொண்டு திரிகிறான்..

இருநூறாயிரம் (2லக்சம்) தமிழனைக் கொன்று தள்ளிய ராஜபக்ச மாமியார் வீட்டுக்கு வருவது போல திருப்பதி வந்துபோவான்..

அவன் தமிழகத்திற்கு வந்து போனால் கூட எவனும் கேட்க முடியாது.

உலகிலேயே பெரிய முருகன் சிலை மலேசியாவில் பத்துமலையில் உள்ளது..

இப்போது அதற்கு அருகிலேயே ராமர்கோவிலும் ஹனுமான் சிலையும் வந்தாயிற்று.

சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் சிலையைச் செய்து அனுப்பியவன் தமிழன்..

ஆனால் அங்கே வெந்நீர் ஊற்றிக் கொலை செய்யப்பட்டான் ஒரு தமிழன்..

தமிழன் என்றதும் மலையாளி கொலையாளி ஆகிவிடுகிறான்.

கேரளாவில் மலைமலையாக தங்கம் கிடைத்த பத்மநாபசுவாமி கோவில் கடைசி அறை திறக்கப்படவில்லை.. அந்த அறையில்தான் தங்கம் தமிழருக்குச் சொந்தம் என்று நிறுவும் சான்றுகள் உள்ளதாக தமிழுணர்வாளர்கள் கூறுகின்றனர்..

தங்கத்தை மலையாள அரசு வைத்துக் கொண்டது..

கண்ணகிக் கோவில் தமிழக எல்லைக்குள் உள்ளது ஆனால் மலையாள காவல்துறை அங்கே பண்ணுகிற அட்டூழியம் தமிழன் எவ்வளவு கையாலாகாதவன் என்று நிறுவுகிறது..

கண்டியை 'நுவர' என்றாக்கி சிங்களவன் வைத்துக்கொண்டான்.

 சமண வெள்ளைக் குளத்தை ஸ்ரவணபெலகோலா என்றாக்கி கன்னடவன் வைத்துக் கொண்டான்.

தஞ்சை பெரியகோயில் சோழர்காலத்து ஓவியங்களுக்கு மேலேயே நாய்க்கெர்கள் ஓவியம் வரைந்து சோழர் கல்வெட்டுகளைத் திருத்தி பெயர்த்து தமிழ் வரலாற்றை அழிக்க முயன்றுள்ளனர்..

குமரி அன்னை கோயிலை விட விவேகானந்தர் பாறையும் காந்தி மண்டபமும் பரவலாகிவிட்டது..

ராமேசுவரத்தில் எங்கே திரும்பினாலும் வடயிந்தியன் நிற்கிறான்..

கேட்டால் எல்லாரும் ஹிந்துவாம்..

ஹிந்து என்ற வார்த்தையே 1829ல் ஆங்கிலேயன் உருவாக்கியது என்று தெரியுமா?

ஆசியாவிலேயே பெரிய கோபுரம் திருவரங்கத்தில் (சிறிரங்கம்) அமைத்து, சீனாவில் கேண்ட்டான் (cantan) அருகே குப்ளாய்கான் (1300கள்) காலத்தில் சிவன்கோவில் கட்டி, உலகிலேயே பெரிய வழிபாட்டுத் தளமான அங்கோர்வாட்டை (கம்போடியாவில்) எழுப்பி, தஞ்சை பெரியகோவிலும் மதுரை மீனாட்சி கோவிலும் இன்றும் வானாளவ நிற்குமாறு பேரரசு செலுத்திய தமிழினமா இன்று இப்படிக் கேடடைந்துவிட்டது?

உன்னைக் கடவுளும் காப்பாற்றவில்லை..

கடவுளை நீயும் காப்பாற்றவில்லை..

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...


1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

கருணாநிதி என்பவர் ஒரு தீய சக்தியின் பிறப்பிடம் என்பதற்க்கு ஆயிரம் எடுத்துக்காட்டு இருக்கிறது அதில் ஒன்றுதான் இந்த படம்....


மதுவிலக்கும் திராவிடமும்...


இராஜாஜி 1949ல் நிறைவேற்றிய மதுவிலக்கால் 25 ஆண்டுகள் குடிப்பழக்கத்தை மறந்திருந்த தமிழகத்தை..

1971 ல் கருணாநிதி சட்டத்தை தளர்த்தி சாராயக்கடைகளைத் திறந்து குடிகார மாநிலமாக்கினார்.

1991ல் மது ஒழிப்பை பரப்புரை செய்து ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா அவர்கள் கருணாநிதியின் மலிவுவிலை மதுக்கடைகளை (மிடாஸ்) மூடும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டுத் தன் ஆட்சியைத் தொடங்கினார்.

பிறகு டாஸ்மாக் கொண்டு வரப்பட்டது...

இலுமினாட்டி களை எதிர்க்கும் வடகொரியா...


தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் T David Raj (டேவிட் ராஜ்) தொடர்ந்து 159வது நாள்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்,...


தோழரின் போராட்டத்தை  ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன....

இலுமினாட்டி அரசியலை புரிந்துக் கொள்வோம்...


50 ஆயிரத்திற்கு மேல் நகை வாங்கினால் பேன் கார்டு ஆதார் கார்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை - மத்திய அரசு அறிவிப்பு...


கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியையும் மத்திய அரசு இன்று குறைத்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது...

ஆதார் என்பது நம்மை அடிமைப் படுத்தவே உருவாக்கப்பட்டது...


ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். இனிமேல் அரசுக்கு எதிராய் யார் போராடினாலும், குரல் கொடுத்தாலும்  கைது செய்த அடித்த நொடியிலே அவரின் வங்கி கணக்கு, தொலைபேசி எண் மிக எளிதாக முடக்கவும். கண்காணிக்கவும் பயன்படப்போகிறது.

பாஜக மோடியால் இந்திய பொருளாதாரம் சரிவரிடைந்த நிலையில், அம்பானியின் சொத்து மதிப்பு 67% சதவிகிதம் உயர்வு! போர்ப்ஸ் சின் 100 பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி முதல் இடம் - போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை பட்டியல் வெளியீடு...


பட்டியலில் இடம் பெற்றுள்ள 100 இந்தியர்களின் சொத்து மதிப்பு சராசரியாக 26 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்திய பொருளாதாரம் சரிவதடைந்த நிலையில் இவர்களின் சொத்து மதிப்புகள் மட்டும் எப்படி இந்த அளவு உயர்ந்துள்ளது என கேள்விகள் எழுந்துள்ளது.

போர்ப் இந்தியாவின் தகவல், ”நாட்டில் நடப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்துவற்கான அரசா அல்லது அம்பானி அதானிகளை வாழ வைப்பதற்கான அரசா” என கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

மத்திய அரசின் திட்டங்களும் செயல்பாடுகளும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்கி இருக்கின்றதே தவிர ஓட்டு போட்ட மக்களுக்கு எந்த பலனையும் அளிக்கவில்லை , புதிய இந்தியா புதிய இந்தியா என பிரதமர் மோடி மேடைகளில் முழங்குவதெல்லாம் தங்களுக்கு தான் என நம்பிய மக்களுக்கு மோடி பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். என எதிர் கட்சிகள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றன.

போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வு தகவல்கள் கமண்டில் இடம் பெற்றுள்ளது...

இந்திக்கு கொடி பிடிக்கும் பலர், மொழி உரிமைக்காக போராடுபவர்கள் மீது அடிக்கடி தொடுக்கும் கேள்வி இதுதான்...


Isn't it mentioned in the constitution of India that "It shall be the duty of the Union to promote the spread of the Hindi language"? So what is wrong in promoting Hindi?

ஆம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இந்தியை மேன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடபட்டிருக்கிறது, ஆனால் அதே அரசியல் அமைப்பு சட்டத்தில் எங்காவது தமிழை புறக்கணித்துவிட்டு இந்தியை மேன்படுத்துங்கள் என்று குறிப்பிட பட்டிருக்கிறதா? இந்தியை இந்தியாவின் தனி அதிகார மொழியாக்குவது தான் இந்தியாவின் மொழி கொள்கை,

"The Constitution adopted in 1950 stipulated that English and Hindi would be used for the Union's official business for a period of fifteen years (s. 343(2) and 343(3)). After that time, Hindi was supposed to become the sole official language of the Union."

ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை முன்னிறுத்துவது தான் இந்திய அரசின் அடிப்படை மொழி கொள்கை.

அதன் அடிப்படையில், எங்கே இந்தி பேசும் மாநிலங்களை ஆங்கிலத்தை புறக்கணிக்க சொல்லுங்கள் பார்ப்போம்?. ஏன் இந்தி மாநிலங்களில் இன்னும் ஆங்கிலம் பயன்பாட்டில் உள்ளது?

ஆங்கிலத்தை இனி இந்தியாவில் ஓரம் கட்ட முடியாது என்று தெரிந்து தான் இப்போது பிற தேசிய மொழிகளை ஓரம் கட்ட முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த உண்மை தெரியாமல் தான் பல இந்தி ஆதரவாளர்கள் பிதற்றி கொண்டு திரிகிறார்கள்.

இந்தி மாநிலங்களுக்கு திராணி இருந்தால் முதல் ஆங்கிலத்தை பயன்படுத்துவதை நிறுத்த சொல்லுங்கள்.

இந்தியால் ஆங்கிலத்தை வீழ்த்த முடியவில்லை, அதனால் தான் எம் மொழியின் இடத்தை ஆக்கிரமிக்க மத்திய அரசு முற்படுகிறது.

நாம் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். அதுவும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது தான் எங்கள் எதிர்ப்பு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில்

"Any section of the citizens residing in the territory of India or any part thereof having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same"(Article 29 Protection of interests of minorities,).என்று குறிப்பிட பட்டிருக்கிறது.

நாம் இந்தி திணிப்பை எதிர்ப்பது எமது மொழியை பாதுகாக்க தான். நாம் இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கு காரணம் இந்தி தமிழின் இடத்தை ஆக்கிரமிக்க துடிப்பதினால் தான்.

இந்தி திணிப்பை நாம் எதிர்காததினால் தற்போது தமிழகத்தில், வர்த்தகம் செய்யும் பெரும் நிறுவனங்கள் தமது விளம்பர பதாகைகளில் இந்தியையும் ஆங்கிலத்தையும் மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

வெளிநாட்டு நிறுவனங்களும் இதையே முன்மாதிரியாக கொண்டு தமது விளம்பரங்களையும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழகத்தில் உள்ள வங்கிகளின் படிவங்களிலும் இப்போது இந்தியும் ஆங்கிலமும் மட்டும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் ..

படிவங்களில் மட்டும் இல்லை, சில வங்கிகளில் வேலைக்கு அமர்த்தப்படும் அதிகாரிகளுக்கும் தமிழ் தெரிவதில்லை. வங்கி இயந்திரங்களிலும் தமிழ் இல்லை.
தமிழக விமான நிலையங்களில் வேலை செய்யும் மேல் அதிகாரிகள் பலருக்கு தமிழ் தெரிவதில்லை. அதை தவிர விமானத்தில் பயணம் செய்யும் போது அறிவிப்புகளும், அபாய குறிப்புகளும் தமிழில் இல்லை.

வானொலியிலும் இந்தி மெல்ல மெல்ல நுழைந்துவிட்டது. இந்திக்கென்று தமிழகத்தில் தனி அலைவரிசை என்ற நிலையும் இப்போது வந்துவிட்டது.

தொலைகாட்சியிலும் இப்போது இந்தி ஆளுமை செலுத்த தொடங்கிவிட்டது. விஜய் தொலைகாட்சியில் சமீபகாலமாக இந்தி திரைப்படங்களை எந்த ஒரு  மொழி பெயர்ப்பும் இல்லாமல் திரையிட ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் சில மாத காலத்தில் இந்தி நாடகங்களையும் நேரடியாக இந்தியிலேயே திரையிட்டாலும் ஆச்சர்ய படுவதற்க்கில்லை.

நாட்டுக்குள் இந்தியை நுழைய விட்டோம், வீட்டுக்குள் இந்தியை நுழைய விட்டோம், இப்போது கட்டைவிரலிலும் இந்தியின் ஆட்சி தான்.

இந்தியில் கையொப்பம் இட்டால் சன்மானம் வழங்கப்படுமாம். கையொப்பம் என்பது எமது தனிப்பட்ட அடையாளம், எம் கையொப்பம் எப்படி இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கும் உரிமை கூட இப்போது தமிழர்களுக்கு இல்லையா? இந்திக்கு இன்று சன்மானம் கொடுப்பவர்கள், தமிழுக்கு நாளை அபராதம் விதிக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

தமிழரைக் கூறுபோடும் அரசியலும் சினிமாவும்...


அரசியலில் தமிழ்நாட்டைக் கூறுபோட 'திராவிடம்' என்ற மாயவலை மற்றவர்களுக்கு ( கன்னடன், தெலுங்கன், மலையாளி) பயன்பட்டது போல்....

திரைத்துறையில் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற போர்வை தமிழரை - தமிழ்நாட்டைச் சுரண்ட...

இவர்களைப் போன்ற போலித் தமிழ் விசுவாசிகளுக்குப் பக்கபலமாக இருந்துக் கொண்டிருக்கிறது.....

தமிழர் பகையை அடையாளம் காண்போம்..
தமிழின விடுதலை அடைந்திட களம் நிற்போம்...

தமிழின அழிப்பின் ஆணிவேர் கன்னட தெலுங்கர், சாதி வெறியர், பலிசா நாய்டு ஈ.வே. ரா எனும் பெரியார்...


இல்லாத திராவிட இனத்திற்கு பாடுபடுவதாகச் சொல்லிக் கொண்டே தமிழையும் தமிழரையும் அழித்து ஒழிப்பதிலேயே குறியாக இருந்தார்.

அதனால் தான் கன்னடன், தெலுங்கன், மலையாளி போன்ற வந்தேறிகள் எல்லாம் தமிழர்களை எறிமிதித்து அழிக்கத் துடிக்கிறார்கள்.

பிழைக்க வந்த நாய்கள் இல்லை அவர்கள் தமிழகளை வேட்டையாடிய வேட்டை நாய்கள்..

இந்த சனநாயக காலத்திலிலும் பெரும்பான்மை தமிழர்களை திராவிடன் என்ற முகமூடியை மாட்டி தமிழர்களை ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்கள்.

அதனால் தான் தமிழ் தமிழ்நாட்டின் ஆட்சி மொழி இல்லை.
தமிழ் வழிபாட்டு மொழி இல்லை.
தமிழ் வழக்காடு மொழில்லை.
தமிழ்வழிக் கல்வியும் இந்த வந்தேறி திராவிடக் கூட்டத்தால் (தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள்) ஒழிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் இந்த வந்தேறிகள் மட்டும் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதைதான் தெலுங்கர் அண்ணாதுரை தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி என்பதை அழித்து தாய்மொழி வழியில் கல்வி என்று கொண்டு வந்தார்; “hindi never, english ever” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழர்களை அழித்ததும் இத்தெலுங்கரின் ராசதந்திரம்.

ஆனால் தமிழர்கள் தங்களது தாய்மொழிக் கல்வியை தமது சொந்த மண்ணிலேயே இழந்துவிட்டார்கள்.

இவை அனைத்திற்கும் காரணம் பெரியார் வழிவந்த திராவிடக் கும்பலே.

இதற்கெல்லாம் அவர்கள் தமிழ் மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது..

அப்போது அவர்கள் தமிழக அரசியலில் இருந்த்து ஒடஒட விரட்டி அடிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்...

இனி திருடன் எல்லாம் தனக்குத் தானே கலைஞன் என்ற பட்டத்தோடு தான் சுற்றுவான்...


மறைக்கப்படும் தமிழர் வரலாறு...


தமிழ் வரலாற்றின் உச்சம் தெரியாததன் விளைவு.....

இன்று ஜெய் ஹிந்த்..க்கு சோடை போகின்றனர் தமிழரில் சிலர்..

உலகிற்கே முன்னோடியான ஒரு அறிவார்ந்த சமூகத்தை....

குமரிக்கண்டத்தைப் பற்றிய ஆய்வில்கூட அயலாரின் பெரும்பங்கு நமக்கு தேவைப்படுகிறது.

இத்தகைய ஆய்வுகளை இந்திய அரசு மறைமுகமாக தடுத்துவருவது இன்னொரு வரலாறு.....

தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.. தளராது இனமான விடுதலைக்கு தோள்கொடுப்போம்..

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தலைவர்களாய் பரிணமித்தவர்கள் சமூக - அரசியல் தளத்தில் தங்களை (பெரும்பாலும் மரபுவழி வேற்று மொழிக்காரர்களாக இருந்தமையாலா….) நிலைநிறுத்திக் கொள்ள வேண்டி, தமிழ், தமிழின வளர்ச்சியை அடகுவைத்தும், அலட்சியப்படுத்தியும், தாழ்த்தியும் திசைதிருப்பியும் வந்ததே இன்றைய தமிழன் – தமிழனின் நிலைக்கு காரணம்...

பாஜக வின் காவி நிறத்திற்கு மாறிய தமிழக அரசு விழா...


மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்...


என் முப்பாட்டன், பாட்டன், அப்பன்,
எல்லாம் வெள்ளையனே வெளியேறு என்று..

வெள்ளையர்களை விரட்டிய காலம் போய்..

இப்போ எனது காலத்தில்..

திராவிடனே வெளியேறு என்று..

திராவிடர்களை விரட்ட வேண்டிய காலகட்டத்தில் தள்ளப்பட்டு உள்ளோம்..

தமிழகத்தை விட்டு..
திராவிடனே வெளியேறு..

அன்று..
வெள்ளையனே வெளியேறு
என்றது சரியென்றால்...

இன்று..
அந்தியனே வெளியேறு
என்பதும் சரிதானே...

தமிழனுக்குத் தனிநாடு மட்டும் தான் தீர்வு...


தனிநாடு கேட்டுப் போராடிய தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்..

தனிநாடு கேட்டுப் போராடும் தமிழர்களுக்குத் தனிஈழம் அமைத்துக் கொடுக்க வேண்டும்..

நேர்மையாக சிந்தித்தால் இவை இரண்டும்தான் தீர்வுகள்.

மற்ற அனைத்தும் பித்தலாட்டத்தின் பல்வேறு வடிவங்கள்..

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வழக்கமாக இரண்டு குழி வெட்டுவார்கள்.

ஒன்றை தில்லி வெட்டும்.
மற்றொன்றை திராவிடம் வெட்டும்.

தில்லி வெட்டிய குழியில் தமிழ்நாட்டுத் தமிழன் விழாமல் தப்பித்தால்..

திருட்டுத் திராவிடம் வெட்டிய குழி இவனை விழுங்கக் காத்திருக்கும்.

தமிழனுக்குத் தனிநாடு தான் தீர்வு..
அதற்காகத்தான் எங்கள் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன...

யார் தீவிரவாதி?



தீவிரவாதி என்பதற்கு இந்தியாவின் வரையறை என்னவென்றால்.....

ஆதிக்க / ஆளும் சக்திகளின் வாதங்களை விவாதிக்காமல் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்....

குறிப்பாக பார்ப்பனிய - பனியா கும்பலின் கருத்தியலுக்கு எதிராக ..

இல்லாத இந்திய தேசியத்திற்கு - இந்தி(ய) இறையாண்மைக்கு எதிராக
செயல்படுபவர்க்கு தீவிரவாதி என்று பட்டம் சூட்டப்படுவார்கள்.

இதில் வேடிக்கை  உண்மை என்னவென்றால்....

மக்களுக்கு எதிராக தீமை செய்பவர்கள் எல்லாம் போராளிகள் என்றும்....

தம்மின மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்றும் வகைப்படுத்தப்படுவது தான்....

சரி நம்மின மக்களுக்கு நல்லது செய்வது என்பது, இந்திய அரசின் தீவிரவாதி பட்டத்தை சுமந்தால் தான் முடியும் என்றால்....

இது நல்ல பேரும் பெருமையும் மிக்கது தானே..

ஆம் நான் தமிழ் வெறிப் பிடித்த தீவிரவாதி தான் போங்கடா...

இராமனும் தமிழனே...


2300 ஆண்டுகளுக்கு முன்பு கி.மு.295 வாக்கில் சந்திரகுப்த மௌரியரின் மகன் பிம்பிசாரன் ஆட்சி இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவிவிட்டது.

தமிழ்மண் மட்டும்  எதிர்த்து நின்றது..

கரிகாலனின் தந்தையான இளஞ்சேட்சென்னி தலைமையில் தமிழ் மூவேந்தரும் சேர்ந்து கூட்டணி அமைத்து அந்த பெரிய படையெடுப்பை முறியடிக்கிறார்கள்.

இந்த செருப்பாழி போரின் வெற்றியைப் பாடினார் ஊன்பொதி பசுங்குடையார்..

இளஞ்சேட்சென்னி அவருக்கு அளவுக்கதிமாக விலையுயர்ந்த புதிய ஆபரணங்களை அளிக்கிறான்.

புலவரின் குடும்பத்தினர் அந்த நகைகளை எப்படி அணிவது என்று தெரியாததால் கண்டபடி அள்ளிப் போட்டுக் கொள்கின்றனர்.

இதை இராவணன் சீதையைக் கடத்திச் சென்றபோது வழிநெடுக அவள் கழற்றி எறிந்த நகைகளை குரங்குகள் கண்டபடி அணிந்து கொண்டதுடன் ஒப்பிடுகிறார் புலவர்..

கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு

-  (புறநானூறு 378)

இராமன் இராவணனை வென்றபிறகு பாண்டிய நாட்டுக்கு வருகிறான்.

கோடி என்ற இடத்தில் (தனுஷ்கோடி) ஒரு ஆலமரத்தடியில் ஆமர்ந்து வேதங்களை ஓதுகிறான்.

(இராவணனைப் போல இராமனும் தமிழ்ப் பார்ப்பானோ.)

அப்போது அம்மரம் (அதில் இருந்த உயிர்கள்) ஒலி எதுவும் எழுப்பாமல் அமைதியாக இருந்ததாம்.

வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே

- ( அகநானூறு 70)

மணிமேகலை கூறுவதைக் கேளுங்கள்..

நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்

- (உலக அறவி புக்க காதை, 10-20)

பூமியில் பிறந்த நெடியோனின் (திருமாலின்) அவதாரம் (இராமன்),
கடலை வழிமறிக்க குரங்குகள் கொண்டு வந்து போட்ட மலைகள் எல்லாம் கடலில் அமிழ்ந்து மறைந்ததுபோல.. என் அடங்காப் பசியினால் நான் உண்ணும் உணவு மறைந்துவிடுகிறது என்று வருகிறது.

இதே மணிமேகலையில் வேறொரு இடத்தில்..

மீட்சி என்பது இராமன் வென்றான் என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்

(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)என்று வருகிறது.

அதாவது இராமன் வென்றான் எனில் இராவணன் தோற்றான் என்றுதானே பொருள் என்று வினவுவது போல் உள்ளது.

சிலப்பதிகாரம், புறஞ்சேரியிறுத்த காதையில்..

அருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்

என்று கோவலன் இல்லாத காவிரிப் பூம்பட்டிணத்தை
காட்டிற்கு சென்ற ராமன் இல்லாத அயோத்தியுடன் ஒப்பிடுகிறார் இளங்கோவடிகள்.

அன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் விளங்கியது தமிழே.

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா வெல்லைத் தோன்று மொழிந்து தொழில் கேட்ப

என்று மதுரைக்காஞ்சி கூறுகிறதே..

இராவணனைப் போலவே கரிய நிற இராமனும் ஒரு தமிழனே.

இருவருக்கும் நடந்த போர்க்கதை (இராமாயணம்) அன்றே தமிழ் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.

ஏற்கனவே தெரிந்த ஒன்றைத் தானே எடுத்துக்காட்டாகக் காட்ட முடியும்.

எனவே வடமொழி புளுகுப் புராணமான இராமயணம் தமிழர் வரலாற்றை திரித்து எழுதிய கதையே ஆகும்..

https://ta.m.wikipedia.org/wiki/சங்கப்_பாடல்களில்_இராமாயணம்

தமிழர் விடுதலையா? அல்லது 90கோடி உயிரிழப்பா? முடிவு செய்யட்டும் உலகம்...


இந்த உலகம் 14 கோடித் தமிழர்களின் தாய்நிலத்திற்கு விடுதலை வழங்கி தனிநாடாக விடவேண்டும்..

அல்லது தமிழர்களுடனான போரில், தமிழ் உயிர்களையும் சேர்த்து.

90 கோடி உயிர்களை தனது மக்கள் தொகையில் இருந்து இவ்வுலகம் இழக்க வேண்டும்..

அப்படி நடந்தாலும் மகிழ்ச்சி தான்.

தமிழர்களை அழிப்பதிலாவது இந்த உலகம் ஒற்றுமையுடன் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி..

அந்த ஒற்றுமையால் யாதொரு பலனும் ஏற்படாது என்றாலும் கூட..

we may go down,
but we will a world with us...

தமிழின் பழமை குறித்து திரு. முத்துராமலிங்கனார்...


மொகஞ்சதாரோ என்ற இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அனைத்தும், பண்டைத் தமிழர்களே அவற்றை படைத்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

அங்குள்ள தண்ணீர் குழாய் இன்றைய நவீன என்ஜினீயரிங்கிற்கு மேற்பட்ட சிமென்ட் அல்லாத கலவைப் பொருளால் செய்யப்பட்டுள்ளது.

அது என்ன பொருளென்று கண்டறிய முடியாமல் விஞ்ஞானம் திகைக்கிறது.

இதுபோன்ற திகைப்பை ஏற்படுத்தும் தன்மையெல்லாம் தமிழ் நாகரீகத்தின் கலையை நன்கு நிரூபிக்கும்.

1949 பிப்ரவரி 13-ம் வெளியான 'ஃபார்வேர்டு பிளாக் கட்சி'யின் இதழான 'கண்ணகி'யில்.. இல்லாதது இல்லாத முதுமொழி - தமிழ் என்ற தலைப்பில் திரு.முத்துராமலிங்கத்தேவர் எழுதிய கட்டுரையிலிருந்து...

இந்தியா நாடு என்று சட்டமே சொல்லவில்லை...


1950ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்ட வரைவு இந்தியர் என்றோ இந்தியா என்றோ எங்குமே குறிப்பிடவேயில்லை.

இந்தியர் (indians) என்று எங்கும் வரவில்லை.

இந்தியாவில் வாழும் குடிமக்கள் (citizens of india) என்று தான் குறிப்பிடுகிறது..

பழனி பாபா (அகமது அலி) என்ன சொல்கிறார் கேளுங்கள்.

இந்தியா என்பது ஒரு நாடே இல்லை சகோதரர்களே..

இந்திய சாசன சட்ட புத்தகத்தில் (indian constitution) இந்தியா நாடு (nation) என்ற வார்த்தையை யாராவது காண்பித்தால் 10லட்சம் ரூபாய் தருகிறேன் சகோதரர்களே..

இந்திய சாசன சட்டம் என்பது இந்தியாவிற்கு வேதம் போல, எப்படி முஸ்லிம்களுக்கு குரானோ கிருஸ்துவர்களுக்கு பைபிலோ,
அப்படியே இந்தியாவிற்கு இந்திய சாசன சட்டம்..

அதில் எங்குமே 'இந்திய நாடு' என்று குறிப்பிடவில்லை.

'Indian union territory' (இந்திய ஒன்றிணைவு பிரதேசம்) என்று தான் சொல்கிறது..

டேனியல் எனும் தமிழன்...


தமிழ் போர் புரியும் என்று 90 ஆண்டுகள் முன்பே அறிவித்த தமிழன்..

தமிழ் இந்திய ஆட்சிமொழி ஆக திரு.காயிதே மில்லத் வாக்கெடுப்பு நடத்தியது பலரும் அறிந்ததே.

அதற்கு முப்பதாண்டுகள் முன்பே தமிழுக்கு ஆட்சியதிகாரம் தரவில்லை என்றால் போர் வெடிக்கும் என்று கூறியுள்ளார் டேனியல் என்ற தமிழர்.

பிரிட்டிஷ் இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் திருமூலம் சட்டமன்ற உறுப்பினராய் இருந்த, திரு.பால்.வி.டேனியல்..

27.01.1923 அன்று ஆற்றிய உரையின் முதல் ஐந்து வரிகள்,

ராஜபாஷையாக இருந்த தமிழ் நசுக்கப்பட்டு அடுப்பண்டையில் ஒளிவிடம் தேட வேண்டியதாயிற்று.

இக்கடைசி உறைவிடத்தினின்றும் தள்ளப்படுமாயின் அது தன் நியாயமான அவகாசத்துக்காக எதிர்த்து நின்று அல்ஸ்றர் போர் புரியும்..

Ulster என்பது வட அயர்லாந்தைக் குறிக்கும்..

அயர்லாந்து மக்கள் மொழி உணர்வால் கிளர்ந்தெழுந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடினார்கள்.

இது ஐரிஷ்-தேசியம் எனப்படும்..

1919ல் அமைதிப் போராட்டமாக ஆரம்பித்து 1921ல் ராணுவ மோதலாக உருவெடுத்தது.

இந்த போராட்டம் அயர்லாந்து பிரிட்டிஷ் பேரரசுக்கு உள்ளேயே மாநில உரிமை கிடைக்கப் பெற்றதால் தற்காலிகமாக நின்றது.

அயர்லாந்தின் வடகிழக்கில் சிறுபகுதி (1/6) விடுதலையை ஆதரிக்காமல் இங்கிலாந்துடன் இணைவதை விரும்பியது.

பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாக இருந்த தனது சொந்த நாட்டின் வடகிழக்குப் பகுதியின் மீது போர் தொடுத்தனர் அயர்லாந்து நாட்டின் மற்ற பகுதியினர்(5/6)..

இந்த போரானது 1921 முதல் 1923 வரை நடந்தது.

வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இதைத்தான் டேனியல் 1923ல் உதாரணமாகக் கூறியுள்ளார்.

அதாவது கேரளாவின் தமிழ் பகுதிகளில் தமிழ் நசுக்கப்படுவதை கேரளத் தமிழர்கள் சகித்துக் கொண்டிருந்தால், தமிழகம் கேரளத்தமிழர் மீதே போர் தொடுக்கும் என்பதைத் தான் அவர் கூறியுள்ளதாக அறியமுடிகிறது..

அயர்லாந்தினரின் 'நாம் ஐரியர்' இயக்கத்தைப் பார்த்து தான் 'நாம் தமிழர்' என்று சி.பா.ஆதித்தனாரால் உருவாக்கப்பட்டது..

அல்ஸ்றர் பகுதியை மீட்க முடியாவிட்டாலும் இங்கிலாந்திடமிருந்து பிரிந்து அயர்லாந்து தனிநாடானது.

அதன்பிறகு மிகக்குறுகிய காலத்தில் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது...

தானாக சுற்றும் மர்மத் தீவு...



அர்ஜெண்டினாவின் வடகிழக்கு முனையில் அமைந்திருக்கிறது பரானா டெல்டா.

இது மிதக்கக்கூடிய சின்னஞ் சிறுதீவு. ’ஐ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியை 6 மாதங்களுக்கு முன்பு அர்ஜெண்டினாவின் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான செர்கியோ நெஸ்பில்லர் கண்டுபிடித்தார்.

வட்டமாக அமைந்துள்ள நிலப்பகுதியைச் சுற்றிலும் 130 அடி அகலத்துக்குத் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

தண்ணீர்ப் பகுதியும் நிலப்பகுதியும் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள்.

இயற்கையாக உருவாகியுள்ள இந்த வட்டமான நிலமும் அதைச் சுற்றியுள்ள நீரும் தானாகவே சுற்றி வருகின்றன.

வட்டப் பகுதியில் இருக்கும் மரங்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு நகர்ந்துவிடுகின்றன.

இந்த இடம் அற்புதமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கிறது.

இந்தத் தண்ணீர் பளிங்கு போலவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது.

அடிப்பகுதி சதுப்பு நிலமாக இருக்கிறது.

மேற்பகுதி நிலம் சுழல்கிறது.

நீர், நிலம், மண், தாவரம் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்ய வேண்டும்.

சிலர் இது வேற்றுக்கிரக வாசிகளின் வேலையாக இருக்கும் என்கிறார்கள்...

இந்தோனேசியாவில் 20,000 ரூபாய் தாளில் விநாயகரின் உருவம்...


இந்தோனேசியாவில் 20,000 ரூபாய் தாளில் விநாயகரின் உருவம் பொறிக்கப் பட்டிருக்கும்.

சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளால் ஆன இந்தோனேசியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாகும். இங்கு 87% முஸ்லீம்கள் வாழ்கின்றனர்.

இங்கு 2 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள்..

இருப்பினும், அந்நாட்டில் இந்துக்கள் அதிகம் வாழ்கிற பாலி தீவில், செல்வத்தின் அதிபதியாக விநாயகர் கருதப்படுகிறார்.

எனவே, இந்தோனேசிய அரசு விநாயகர் உருவம் பதித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது...

ஒரு கட்டிடமே தனி நாடான அதிசயம், உலகின் மிக குட்டி நாடு பற்றி தெரியுமா?


நீங்கள் படங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடம் என்ன தெரியுமா?

கடலின் நட்ட நடுவில் உள்ள பழைய கட்டிடம் என்று தானே நினைக்கிறீர்கள்.

அதுதான் இல்லை.. இது ஒரு நாடு..

உலகின் மிகவும் குட்டி நாடு. இதன் பெயர் சீலேண்ட். ஆச்சரியமாக இருக்கிறதா?

இந்தக் குட்டி நாட்டைப் பற்றிப் படிக்கப் படிக்க இன்னும் விந்தையாக இருக்கும்..

இங்கிலாந்து நாட்டின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த நாடு..

இரண்டாம் உலகப் போர் பற்றிப் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறீர்கள் அல்லவா?

அப்படி அந்தப் போர் தொடங்கிய போது 1942-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு கடலில் குட்டித் துறைமுகத்தைக் கட்டியது.

கடலில் இரும்பு மற்றும் வலுவான கான்கிரீட்டைப் பயன்படுத்தி இந்த துறைமுகத்தைக் கட்டியிருக்கிறார்கள்.

போரில் பயன்படுத்தப்பட்ட கப்பல்களுக்கு எரிபொருள் போடுவதற்காக இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

போர் முடிவடைந்த பிறகும் 1956-ம் ஆண்டு வரை ரப் டவர் எனப் பெயரிட்டு இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பின்னர் இந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டார்கள் ஆங்கிலேயர்கள்.

1967-ம் ஆண்டில் இந்த இடத்துக்கு பேட்டி ராய் பேட்ஸ் என்பவர் தனது குடும்பத்துடன் இந்தத் துறைமுகத்துக்குப் போய்த் தங்கிவிட்டார்..

இவர் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர்..

இங்கு வந்த பேட்ஸ், ‘பிரின்ஸிபாலிட்டி ஆஃப் சீலேண்ட்’ என்று அந்த இடத்துக்குப் பெயரை வைத்தார்.

அங்கிருந்து ராய் பேட்ஸை அனுப்பப் பிரிட்டிஷ் அதிகாரிகள் நிறைய முயற்சி செய்தார்கள். ஆனால், அவரை அங்கிருந்து அனுப்ப முடியவில்லை.

இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. ஆனால், இந்தத் துறைமுகம் இங்கிலாந்து நாட்டு கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், வழக்கை நடத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

இதன்பிறகு ராய் பேட்ஸ் 1975-ம் ஆண்டில் சீலேண்டை தனி நாடாக அறிவித்தார்..

இந்த நாட்டுக்கென்று தனியாகக் கொடி, தேசியக் கீதம், பணம், பாஸ்போர்ட் என்று ஒரு நாட்டில் என்னவெல்லாம் இருக்குமோ எல்லாவற்றையும் பேட்ஸ் அறிமுகப்படுத்தினார்..

கடலுக்குள்ள ஒரு குட்டி கட்டிடத்தில் தான் இந்த நாடே இருக்கிறது.

ஒரு முறை பேட்ஸூம் அவரது குடும்பத்தினரும் இங்கிலாந்துக்குப் போனபோது, ஜெர்மனி, போர்ச்சுகல் கொள்ளையர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்கள்.

பேட்ஸூம், அவரது மகன் மைக்கேலும் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளையர்களை விரட்டினார்கள்.

1987-ம் வருடத்தில் பிரிட்டிஷ் அரசு கடல் எல்லைப் பரப்பை 22 கிலோ மீட்டராக அதிகரித்து, சீலேண்டை அவர்களுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஆனாலும் முடியவில்லை.

சீலேண்டின் இளவரசராக ராய் பேட்ஸ் செயல்பட்டு நிர்வாகமும் செய்து வந்தார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு பேட்ஸ் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.

அப்போது முதல் சீலேண்ட் நாட்டின் இளவரசராகப் பேட்ஸின் மகன் மைக்கேல் இருந்து வருகிறார்.

தற்போது இவர்களது குடும்பத்தினர் உட்பட 50 பேர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தக் குட்டிக் கட்டிடத்தில் 30 அறைகள் உள்ளன.

கடலுக்குள் இருப்பதால் தேவையான நீரை அவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள்.

ஞாபகச் சின்னங்கள் போன்றவற்றை இணையதளத்தில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

இந்த நாட்டுக்கு வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வர வேண்டுமென்றால் பாஸ்போர்ட், விசா எடுத்துக் கொண்டு தான் வர வேண்டும்...

நான் ஒரு இனவெறியனாம்...


என்னால் அதை முழுதும் மறுக்க முடியவில்லை..

அழிவுக்குத் தள்ளப்படும் ஓர் இனத்தின் முடிவை..
அந்த இனத்திற்கான உரிமை மறுப்பை..
அந்த இனத்தின் உயிரிழப்பை..
அந்த இனத்தின் கற்பழிப்பை..

தடுத்து நிறுத்தத் தேவை ஓர் இனவெறியன்தான் என்றால்..

நான் இனவெறியனாகவே இருந்து விட்டுப் போகிறேன்..

இன்றைய தமிழினத்தின் நிலையிலிருந்து அதை மீட்டெடுக்கும் இனவெறியர்களை மேலும் மேலும் உருவாக்கவே செய்வேன்...

நான்கே வரியில் கூறுகிறேன்.
இவ்வுலகத் தமிழர்களே...

நல்லவனாக இருக்கிறாயோ இல்லையோ வல்லவனாக இரு..
தமிழன் வாழவேண்டும் இல்லையேல்
எவனும் வாழக்கூடாது...

தமிழ் இனத்தின் தேசிய மரம்...



கடவுளின் பெயர் ஏக்-[ சுவா] / சிவா...


மாயன் இன  மக்கள் வழிபட்ட தெய்வம் முதல் தமிழ் சங்கத் தலைவன்  சிவன் முப்பாட்டன் ஆவான்.

இங்கே அதற்கான ஒற்றுமைகள்..

கடவுளின் பெயர்  ஏக்-[சுவா] / சிவா.

மாயன் நிறம் செவ் நிறம் ஆனால் வழிபட்ட கடவுளின் நிறம் கருப்பு.

சிவனை கருமை நிறம் கொண்டே குறிப்பார்கள்.

மாயன் இனத்தவர்களின் நிலப்பரப்பில் ஜாகுவார் இருந்தது புலிகள் இல்லை.

நம் தமிழர்களின் நிலப்பரப்பில் ஜாகுவார் அதிகம் இல்லை, புலிகள் அதிகம் இருந்தன.

புலித்தோல் இடுப்பில் / ஜாகுவார்தோல் தோளில். சூலம் /வேல், கழுத்தில் பாம்பு /கயிறு..

குறிப்பு : மெல்கிப்சன் இயக்கிய அபோகாலிப்டோ என்ற படத்தில் மாயன் இனத்தவர்கள் உரையாடலில் பல இடங்களில் தெளிவான  தமிழ் சொல் எச்சங்கள் இருந்தது என்பது சொல்லியல் ஆய்வாளர்களின் கூற்று. விரைவில் அதனின் விளக்க ஆவணங்கள் வெளிவர இருக்கிறது..

கொய்யால எவனை போய் நோண்டி நொங்கு எடுத்தாலும் ஆதி தமிழாகத் தான் இருக்கிறது...

இருந்தும் என்ன பயன்..?