14/11/2018

நவ-14 குழந்தைகள் தினம்...


ஊழல் அதிமுக அரசை புள்ளி விபரங்களோடு அம்பலப்படுத்தும் பாமக அன்புமணி இராமதாஸ் அவர்கள்...


தமிழின் பெருமைகள்...

               
உலகில் சுமார் 6 ஆயிரம் மொழிகள் பழக்கத்தில் உள்ளன. அத்தனை மொழிகளிலும் 6 மொழிகள் தான் உலகத்திற்கு நாகரீகம் சொல்லிக் கொடுத்த பாரம்பரியம் உடைய மொழிகள்.

அவற்றில் தமிழ், சீனம், அண்மையில் ஹூப்ரு ஆகிய மொழிகள்தான் அறிவியல் யுகத்துக்கும் ஈடுகொடுத்து தம்மைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன.

பாடம் கற்கிற ஊடகமாகவும், பயன்பாட்டுக்குரிய வாழ்க்கை மொழியாகவும், தமிழ் நமக்கு வாய்த்திருக்கும் பெருமையை இன்னும் முழுமையாக நாம் உணரவில்லை.

ஆனால் உலகம் நன்றாக உணர்ந்திருக்கிறது. ஒரு மாநிலத்திற்குரிய மொழியாக இல்லாமல் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் பேசும் உலக மொழியாகவே, சர்வதேச அளவில் தமிழ் மதிக்கப்படுகிறது.

அதற்கு சாட்சியாக உலகம் முழுவதும் 40 மொழிகளில் தனது ஒலிப்பரப்பைச் செய்கிற பி.பி.சி நிறுவனம் இந்திய மொழிகளில்  தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே ஒலிபரப்பைச் செய்கிறது..

42 மொழிகளில் ஒளிபரப்புச் செய்யும் சீன வானொலியும் இந்த இரண்டு மொழிகளுக்கு மட்டும் பெருமையளிக்கிறது.

சர்வதேச மொழிகளில் வெளியாகும் யுனெஸ்கோ கூரியர் பத்திரிக்கை இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வெளியாகிறது.

உலக வரைபடத்தில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகவே இருக்கிறது.

ஜெருசலத்தில் உள்ள ஒலிவமலை தேவாலயத்தில் 68 மொழிகளில் எழுதப்பட்டுள்ள ஏசு அருளிய ஜெபம், இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில், தமிழ் வருடங்கள் அறுபதையும் குறிக்கும் வகையில் படிக்கட்டுகளுக்கு பிரபவ முதல் அட்சய வரையிலான பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன..

இன்று சர்வ வல்லமை பெற்றுள்ள இணைய தளத்தில் அதிகம் பயன்படுத்தப்படும், பயன்பாட்டு மொழியாக இந்திய மொழிகளில், ஏறத்தாழ தமிழ் முதலிடம் வகிக்கிறது என்பது பெருமைப்படத்தக்கது..

செம்மொழி :

காலத்தால் அளவிட இயலாத தொன்மை வாய்ந்த தமிழ் இயல், இசை, நாடகம் எனும் மூன்று பிரிவுகளாக வளர்ந்துள்ளது.. பல்வேறு வரிவடிவங்களைப் பெற்று, வளர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் மொழிகளை உருவாக்கி இன்று செம்மொழி எனும் அடைமொழியும் பெற்று இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் தமிழ் மொழி நம் தாய் மொழி எனும் பெருமை அளவிட இயலாதது..

சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் குகைகளிலும், கற்ப்பாறைகளிலும் கல்வெட்டாகவும், பின்னர் செப்புத் தகடுகளிலும், அதன்பின் எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடிகளிலும் எழுதப்பட்டு வந்த தமிழின் வரிவடிவம் 1930-க்குப் பின் காகிதங்களிலும் அச்சிடப்பட்டு வருகிறது.

மேலும் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து கணிணி பயன்பாட்டிலும் உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது...

தாய் மொழியாம் தமிழ் வழிக்கல்வி இன்னும் தமிழை வளர்க்கும் என்பது தெள்ளத் தெளிவு...

பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட முயற்சிக்கும் ஆந்திராவின் சதியை முறியடிக்க வேண்டும் - பாமக அன்புமணி ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல்...


அளவுக்கு மீறினால் காபியும் நஞ்சு...


மெட்ராஸ் ஃபில்டர் காபி, கும்பகோணம் டிகிரி காபி, டிக்காக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, மைசூர் - மங்களூர் காபி, பிளாட்பாரக் காபி என்று காபிகள் பல ரகம்.

இந்தக் காபியைக் கண்டுபிடித்தது நோபல் விஞ்ஞானிகள் அல்ல. காபி நிறத்தில் ஓர் இடையர். முன்னொரு காலத்தில் அபிசீனியா நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கால்தி என்பவர். அவர் மேய்த்துச் சென்ற ஆட்டு மந்தை காட்டில் எதையோ தின்றுவிட்டு அதிக உற்சாகத்துடன் துள்ளி ஓடி ஆடி நடந்தன. "இது என்னடா, ஆட்டுக் கூட்டம் துள்ளாட்டம் போடுதே"! மேய்ப்பவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஆடுகளின் தீவனத்தை ஆராய்ந்தார். ஏதோ சிறுகனிகளைக் கொட்டையோடு அசைபோடுவதைக் கண்டார்.

ஞானப்பழம் நீயப்பா என்று பாடாமல் அந்தக் கனியைத் தானும் பொறுக்கி உண்டார். சதைப்பற்று இனிப்பாக இருந்தது. சுடாத பழத்தின் கொட்டையைச் சுட்டு வறுத்துத் தின்றார். சுறுசுறுப்பு அடைந்த உணர்வு. இரவில் தூக்கம் போச்சு.

எப்படியோ, எத்தியோபியக் காபிக் கொட்டையை நினைத்தாலே இனிக்கும். இலந்தைப்பழம் மாதிரி ருசித்துச் சாப்பிடுவர். அங்கு கண்டறியப்பட்ட காப்பிப் பழத்திற்கு "காஃப்பா" (Kaffa) என்ற நகர்ப் பெயரே மூலச்சொல் என்பார் ஒரு சாரார். காபிக் கொட்டை, குதிரைக் குளம்பு வடிவம் கொண்டதாம். அதனால் குளம்பைக் குறிக்கும் "காப்" என்ற ஆங்கிலச்சொல் அடிப்படையில் அதனைக் குளம்பி என்பார் மறுபக்கம்.

ஏதானாலும் காபியில் அடங்கிய முக்கியப் பொருளுக்குச் செல்லப்பெயர் காஃபீன் (Caffein). ஆனால் "காஃபின்" (Caffein) என்பது வேறு. சவப்பெட்டியைக் குறிக்கும். "கோஃபினோஸ்" (Kophinos) என்ற இதன் கிரேக்க அடிச்சொல்லுக்குக் "கூடை" என்று அர்த்தம்.

காபி என்றால் அதில் "காஃபீன்" (Caffein) மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதுதான் இல்லை. காபியில் கிட்டத்தட்ட 2000 வேதிமங்கள் அடக்கம். அனைத்திற்கும் வெவ்வேறு மருந்துக் குணங்கள் உண்டு. சொல்லப்போனால் காபியில் அடங்கிய பாலிஃபீனால் எனும் வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுமாம். பென்சில்வேனியாவில் ஸ்க்ரான்டன் பல்கலைக் கழக ஆய்வு முடிவு.

உலகின் முதல் காப்பிக்கடை முதலாளி இஸ்தான்புல் நகரில் ஓட்டோமான் சுல்தான். 1554-ம் ஆண்டு தொடங்கியது இந்தக் காபித் தூள் வியாபாரம். "கேஃப்" என்றால் பிரெஞ்சு மொழியில் காப்பி நிலையம் (Kophinos). "கஃபட்டேரியா" என்பது ஸ்பானிய மொழியில் "காப்பிக்கடை" (Coffee shop).

ஒருவழியாக, போப் கிளெமென்டைன் சம்மதத்துடன் காபி இத்தாலிக்கு அறிமுகம் ஆனது. கிறிஸ்தவர் அருந்தும் பானம் ஆக தேவாலய அங்கீகாரமும் பெற்றது. மத நல்லிணக்கத்தின் சின்னம் காபி என்றால் அது மிகையாகாது. இசுலாமியர், கிறிஸ்தவர் உணவோடு கலந்து காப்பியை இந்தியாவுக்குள் கள்ளச் சரக்காகக் கடத்தியது நம் ஊர் வியாபாரி. அரேபிய வர்த்தகத்தை முடித்துத் திரும்பும் வேளையில் மடியில் தங்கக் கட்டிகள் மாதிரி ஏழே ஏழு காபிக் கொட்டைகளை ஆசாமி ஒளித்து வைத்துக்கொண்டு வந்தாராம். தென் இந்தியாவில் சிக்மகளூர் தான் காபி காலடி பட்ட முதல் மண்.

1668 ஆம் ஆண்டு வெளிநாட்டுக் காபியைக் காப்பி அடித்தது அமெரிக்கா. நியூயார்க் நகரின் காலைச் சிற்றுண்டியில் காபி ஆவி பறந்தது. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் கழித்து ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா காபி குளிர்பானம் ஆயிற்று. டாக்டர் ஜான் எஸ். பெம்பர்ட்டன் என்கிற மருந்தியர் நிபுணர் காஃபீன், கொக்கோ இலைகள், சர்க்கரை, காய்கறிச் சாறு போன்றவை கலந்து 1886 ஆம் ஆண்டு கொக்கோ கோலா என்னும் பானம் தயாரித்தார்.

ஆயின், 1911 ஆம் ஆண்டு கொக்கோ கோலா கம்பெனிக்கு எதிராக அமெரிக்கா ஒரு வழக்குத் தொடர்ந்தது. அதில் அடங்கிய "காஃபீன்" உடலுக்குக் கேடு என்பது அரசுத் தரப்பு வாதம். குற்றம் சாட்டப்பட்டவர் உயிரோடு இருக்கும் போதே வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பும் வழங்கப்பட்டது முதல் ஆச்சரியம். வழக்கில் அரசாங்கம் தோற்றதைத்தான் இந்தியர்கள் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. போகட்டும்.

1970 ஆம் ஆண்டுகளில் காபி உலகப் பிரசித்தம். காஃபீன் குறித்து ஏறத்தாழ 4000 - 5000 ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்து உள்ளதாக ஜேம்ஸ் காஃப்லீன் (James Coughlin) கூறுகிறார். (இவர் பெயரில் வரும் "காஃப்" இருமல் தொடர்பானது?) தென் கலிஃபோர்னியாவில் நச்சியல் ஆய்வாளர். காபி குடித்தால் புற்றுநோய் வாய்ப்பு கால் பாகம் குறையும் என்பது இவர் கண்டுபிடிப்பு.

ஆனால் 1980 ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தாமஸ் காலின்ஸ் நடத்திய ஆய்வு காபிப் பிரியர்களைச் சற்று அதிர வைத்தது. குறிப்பாக, கர்ப்பம் தரித்த அன்னையர் காபி குடித்தால் ஊனக்குழந்தை பிறக்குமாம்.

தம் பரிசோதனையில் இவர் சில எலிகளைத் தேர்ந்து எடுத்தார். எல்லாப் பிராணிகளைப் போலவே எலிகளுக்கும் தொண்டைக் குழிக்குள் சிறு குழாயைச் செருகி 200 காபிக்குச் சமமான அளவு பானத்தை ஊட்டினார். அடுத்த மூன்று வருடங்களாக மறுபரிசோதனை நடத்தினார். காபியைத் தண்ணீரில் கலந்து குடிக்கச் செய்தார். முடிவில் எலிக் குஞ்சுகளில் பிறவிக் குறைபாடுகள் அவ்வளவாக இல்லையாம்.

ஒரு நாளைக்கு நாலு நேரம் காபி குடித்தால் பித்தப்பையில் கற்கள் படியும் வாய்ப்பு 40 சதவீதம் என்பது ஒரு கணிப்பு. சிறுநீரகக் கற்கள் வராது. கல்லீரல் புற்று வராது. நீரழிவு நோய் உபாதை எழாது. பார்க்கின்சன் நோய் அண்டாது. நினைவாற்றல் கூடும். மன அழுத்தமும் அகலும். இப்படிப் பல!

இதற்கிடையில், காபியின் தீங்குகள் குறித்த விவாதங்களும் நடந்தேறின. ரத்த அழுத்தமும் அதிகரிக்குமாம். அதனால் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் காபியை நிறுத்த வேண்டும் என்றனர் மருத்துவர் சிலர். தொடக்கக் குடிகாரர்களிடம்தான் இந்தப் பிரச்சினை. பரம்பரைக் காபிக் குடியர்களிடம் ரத்த அழுத்தநோய்க் குறிகள் இல்லையாமே!

இருந்தாலும் ஒரு விஷயம் நம்பிக்கை அளிக்கிறது. காபி குடித்தால் ரத்தத்தில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறதாம். அதற்காக அடுக்கு மாடியில் இருந்து ஆடி ஆடி வரும் சொகுசுவாசிகளே, இன்சுலின் மாத்திரைக்குப் பதில் காபி குடித்தால் சரிப்பட்டு வராது. காபியினால் இன்சுலின் ஊற்றுப் பெருகும் என்பதை திட்டவட்டமாக மறுக்கிறார் கலிஃபோர்னியா பல்கலைக் கழகப் பேராசிரியை லிண்டா பேக்கன்.

அது மட்டுமல்ல, காபி ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான். வேளாவேளைக்கு அருந்தவில்லை என்றால் பித்துப் பிடித்தவர் போல் ஆகிவிடுவராம்!

காபியினால் மூளைக்குச் சுறுசுறுப்பு, புத்துணர்ச்சி என்பது எல்லாம் வெறும் மாயை. காபியே இது பொய்யடா வெறும் போதை மருந்துப் பையடா என்கிறார் ஜாக் ஜேம்ஸ். கால்வேயில் அயர்லாந்து தேசியப் பல்கலைக் கழகத்தின் உளவியல் நிபுணர்.

உளவியல் தொந்தரவுகள் உண்டோ, இல்லையோ கிடக்கட்டும். உடலியல் குறை நிச்சயம் என்று எச்சரிக்கிறார் ஹார்வார்டு பொதுச் சுகாதார கல்வியகப் பேராசிரியர் வால்டர் வில்லெட். காரணம் காப்பியினால் எலும்புகள் கால்சியம் என்கிற சுண்ணாம்புச் சத்து இழந்து பஞ்சு போல் ஆகுமாம்.

பில்டர் காபிக்கு என்ன மகிமையோ அறியோம். ஆனால் வடிகட்டாத (பில்டர் செய்யாத) காப்பியினால் கொலஸ்ட்ரால் சத்து அதிகரிக்கும். ஊளைச்சதை போடும். தஞ்சாவூர் பொம்மை மாதிரி கழுத்தும் இன்றி, காலும் இன்றி எத்தனை நாள் நிதானமாக நடக்க முடியும்?

அது சரி. சராசரி ஆரோக்கியவான் ஒரு நாளைக்கு எவ்வளவு காஃபீன் உட்கொள்ளலாம் என்றுதானே? ஒரு சிட்டிகை (280 மில்லிகிராம்) போதும். அதுவே 30 மடங்கானால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

அப்படியானால் தினந்தோறும் வடிகட்டாத (எஸ்ப்ரஸ்ஸோ) காபி ஒரே டம்ளர் உத்தமம். பில்டர் காபி என்றால் இரண்டு கோப்பைக்கு மேல் வேண்டாம். இன்ஸ்டன்ட் காப்பி என்றால் மூன்றரை குவளை.

இவ்வளவு சிரமம் ஏன்? "கையில் சுக்குடன் மல்லி இருக்கையில் காப்பி எதற்காக?" என்று "இசையமுது" இசைக்கிறார் பாரதிதாசன். நூற்றில் ஒரு வார்த்தை...

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டு பொதுத்தேர்வுகள், டிச.10-ல் தொடங்கி, 22 வரை நடைபெறும் - பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு...


பதனீர் – தமிழகத்தின் குளிர்பானம்..


நீர்... பதனீர் ஆம் அதுதான் பதனீர் – இயற்கை அளித்த இன்சுவை பானம்.

பனை – தமிழனின் தனிப்பெருஞ் சொத்து, தமிழ் மண்ணுக்கென்று உள்ள பல சிறப்புகளில் தலை சிறந்தது பனை என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 5.01 கோடி பனை மரங்கள் உள்ளன. ஐந்து கோடி தமிழ் மக்களுக்கும் பங்கு வைத்தால் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு பனை மரம் கண்டிப்பாகக் கிடைக்கும்..

செம்மண், சரளை, மணல், கரிசல் என்ற மண் வேறுபாடுகள் இன்றி எல்லா மண்ணிலும் வளர்ந்து பலன் தரும் பனை தமிழனின் பரம்பரைச் சொத்து ஆகும். தமிழனின் மூளைச் சோம்பலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு பனைமரம்.

செயற்கை இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவைகளின் நச்சுக்கரங்களால் இன்னும் மாசுபடாமல் கொஞ்சம் பெருமிதத்துடன் வானளாவ வளர்ந்து நிற்கும் பனைமரத்தின் அனைத்துப் பாகங்களும் பலன் தந்து கற்பக மரமாக காட்சியளிக்கின்றன..

பனை – உடை – ஆடு
தொன்றுதொட்டு வறண்ட மணற் பகுதிகளில் மனிதனை வாழ வைத்தது – பனை – உடை – ஆடு என்ற ஒருங்கிணைந்த சூழ்நிலை இணைப்பே (Integrated Biological Chain) ஆகும்.

பனை குடிசை அமைக்க உதவியது. குடிசைத் தொழில் மூலம் கருப்பட்டி தயாரிக்க, பனை பதநீரைச் சுரந்தது. உடை இத்தொழிலுக்கு எரிபொருள் தந்தது; மற்றும் நெற்றுக்களை உதிர்த்து ஆடு வளர்க்க உதவியது; பனை, உடை ஆகிய மரங்களின் கீழ்ப் புற்களும் வளர்ந்து, ஆடுகளுக்குத் தீவனமாகியது. ஆடுகள் இந்த மரங்களுக்கு உரமிட்டன. பணத்தேவையை ஆடும், கருப்பட்டியும் பூர்த்தி செய்தன.

இந்த அருமையான சுற்றுப்புறச் சூழல் சங்கிலியைச் சீமைக் கருவேல், வேலிக் கருவேல் ஆகியவை சிதைத்து விட்டன..

வேலிக் கருவேலின் நிழலில் பனை வளருவதில்லை. ஆனால் நம் நாட்டின் பூர்வீக உடையான வெள்வேல் உடையின் நிழலில் பனை செழித்து வளரும்..

தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்.
பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்..

இந்தப் பழமொழியைக் கூறியே, நம் மக்கள் பனை விதைப்பதைக் கைவிட்டு விட்டனர்.

ஆனால் உண்மை என்னவெனில் தென்னையை விதைப்பவன் நிறைய தேங்காய் கலந்த உணவுப் பொருட்களைத் தின்றுவிட்டு உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகிச் சாவான்.

பனையை விதைப்பவனோ, அதனுடைய நற்பலனால் தன்னுடைய சந்ததியர் வளமாக வாழ்வதை பார்த்துவிட்டு சாவான் என்பதே உண்மை..

பதனீரும், கள்ளும் சர்க்கரைப் பொருள் நிரம்பிய பதனீர் துரிதமாகப் புளித்து கள்ளாக மாறும் இயல்புடையது. பதனீர் சுரந்து 6 முதல் 8 மணி நேரத்திற்குள்ளேயே பதனீரில் ஆல்கஹால் தோன்றிவிடும். பின்னர்ப் படிப்படியாக ஆல்கஹாலின் அளவு 5% அதிகரித்து விடும். இதுவே போதை தரும் கள்.

இவ்விதம் கள்ளாக மாறுவது காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் ஈஸ்ட் பூசணங்களால் ஏற்படுகிறது. பதனீர் உடனுக்குடன் கள்ளாக மாறாமல் இருக்கவே, பதனீர் இருக்கும் பானையினுள் அடிக்கடி சுண்ணாம்பைத் தடவுகின்றனர்.

பதனீரிலே எல்லாம் இருக்கிறது ஆண், பெண் ஆகிய இருபால் மரங்களிலும் பதனீர் சேகரிக்கலாம்.

தினசரி ஒரு மரம் 10-12 லிட்டர் பதனீர் சுரக்கும். நல்ல சூழ்நிலையில் 18 லிட்டர் வரை பதனீர் பெறலாம்.

250 மில்லி லிட்டர் பதனீரில்,
அமிலகார நிலை 7.2
மொத்த சர்க்கரைப் பொருள் 26.8 கிராம்
இரும்பு 5.5 மில்லி கிராம்
கால்சியம் 35.5 மில்லி கிராம்
பாஸ்பரஸ் 32.4 மில்லி கிராம்
தையமின் 82.3 மில்லி கிராம்
ரிபோஃபிளேவின் 44.4 மில்லி கிராம்
வைட்டமின் சி 12.2 மில்லி கிராம்
நிகோடினிக் அமிலம் 674.4 மில்லி கிராம்
புரதம் 47.7 மில்லி கிராம்
சக்தி 113.3 கலோரி
இவ்வாறு அனைத்து ஊட்டச் சத்துக்கள் நிரம்பிய பதனீர் ஒரு அருமையான பானமாகும்.

மெலிந்தோருக்குச் சிறந்த உரமாக்கி (Tonic) ஆகும். இலேசாகப் புளித்த கள் உடலுக்கு நன்மை பயப்பதாகும்.

இதில் நிறைய வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உற்பத்தியாகி இருக்கும். எனவே அருந்துவோரிடம் வைட்டமின் பி பற்றாக் குறை தோன்றுவதில்லை. கோடைக் காலத்தில் தினந்தோறும் ¼ லிட்டர் முதல் ½ லிட்டர் வரை பதனீர் பருகி வர, உடலுக்கு மிகவும் நலம் பயப்பதுடன் கோடைக்கால நோய்கள் வராமலும் தடுக்கும்...

நாளைக்கு நீரை சப்ளை செய்யவும் செயலிகள் அறிமுகப்படுத்தப்படலாம்...


கார்ப்பரேட் சாமியார்களின் வாயிலாக விளம்பரமும் செய்யப்படலாம்...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள் மூலிகைப் பெயர்...


அருகம்புல்லும் வேரும் - உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும்.

அரசு - கர்பப்பை கோளாறு, மலட்டுத் தன்மை நீக்கும், சூட்டைக் குறைப்பது, சுரம்போக்கும், வீக்கம் குறைக்கும்.

அத்தி - மலமிளக்கி, காமம் பெருக்கு, நீரிழிவு, மூட்டுவலி, இரத்தமூலம் பெரும்பாடு.

அதிமதுரம் - காமாலை நோய், வெண்குஷ்டம், எலும்பு நோய், விக்கல், மார்புச்சளி, தும்மல், இருமல் போக்கும்.

அத்தி - மலச்சிக்கல், கால், மார்பு எரிச்சல், நீர்கடுப்பு அகற்றும்.

அமுக்ரா - அசதி, பசி இன்மை, முதுமை நீக்கம், காமம் பெருக்கும், சக்தி தரும்

ஆடாதொடை - இரத்தவாந்தி, சளிநோய், இசிவு நோய், கோழை இருமல், ஆஷ்துமா, சீதபேதி, இரத்த பேதி குணமாகும்.

அம்மான் பச்சரிசி - நமைச்சல், தாய்ப்பால் அதிகரிப்பு, வீக்கம், வயிற்றுவலி, சிறுநீரில் போகும் இரத்தம் குணமாகும்.

ஆடு தீண்டாப் பாளை - பலமும் விந்தும் உண்டாகும். மாதவிலக்கைத் தூண்டும், தோல் நோய், மலச்சிக்கல், பூச்சி விஷம் நீக்கும். புண்கள் ஆறும். வாதநோய் நீங்கும். ஆஷ்துமா அகலும்.

ஓரிதழ் தாமரை - காமம் பெருக்கும், சிறுநீர் எரிச்சல், சிற்றின்ப பலவீனம் நீங்கும். சுரம், தலைவலி, வெள்ளை வெட்டைச் சூடு நீங்கும்.

கடுக்காய் - மலச்சிக்கல், பல், கண், காது, மூக்கு தொண்டை நோய்கள், பசியின்மை இரத்த மூலம், ஆண்மை இன்மை, அசதி நீங்கும்.

கல்யாண முருங்கை - மாதவிடாய் கோளாறு நீங்கும், அதிக எடையைக் குறைக்கும்.

கழற்சிக்காய் - அண்டவாய்வு, விதைவீக்கம் குறைக்கும்.

கண்டங்கத்திரி - மார்புச்சளி, தொண்டை கரகரப்பு, நுரையீரல் நோய்கள், பல்வலி போகும்.

கீழாநெல்லி - காமாலை, ஈரல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி
உண்டாகும்.

குப்பை மேனி - மார்புச்சளி, தோல் நோய்கள் போக்கும்.

குமரி இலை - வெள்ளை, வெட்டை சூடு, மலச்சிக்கல் போக்கும். உடல் குளிர்ச்சி
உண்டாகும்.

கோரைக் கிழங்கு - புத்திக் கூர்மை, முடி பக்குவப்படும்.

வல்லாரை - உடல் வலுபெறும், புத்தக் கூர்மைப்படும், நீர் பெருக்கி, மேகப்புண், கட்டி வீக்கம், விரை வீக்கம், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

சிறு குறிஞ்சான் - சர்க்கரை நோய், குணமாகும். கிருமி நாசினியாகப் பயன்படும்.

மணத்தக்காளி - உடல் உரமாக்கும், கோழை அகற்றும், வாய்ப்புண், கடவாய்ப்புண், இருமல், வயிற்றுப்புண், பாண்டு, பெருவயிறு நீங்கும்.

துளசி - சளி, இருமல் நீங்கும், காய்ச்சல், பசி இன்மை, கோபம், வெறி, தூக்கமின்மை நீங்கும்.

பொடுதலை - தலைப் பொடுகு நீங்கும்.

தாமரை - மார்பு இதய நோய் போகும்.

தான்றிக்காய் - பல்நோய் போகும், மலச்சிக்கல் நீங்கும், உடல் பலம் பெரும்.

துத்தி - மூலம், புழுப்பட்டபுண் குணம்பெற மலமிளக்கி, சிறுநீர் பெருக்கி, காமம் உண்டாக்கும்.

தும்பை - கோழை அகற்றும், தலைவலி, அசதி, இருமல், வெள்ளை, தாகம், நஞ்சு நீக்கும்.

தூதுவளை - மார்புச்சளி, காசம், இருமல், இரைப்பு, உடல் குத்தல், மந்தம் நீக்கும், ஆண்மை பெருக்கும், நரம்பு வலுப்பெறும்.

நஞ்சறுப்பான் - எல்லாவித நஞ்சும் நீங்கும், சளி கக்குவான் இருமல், வாய்வு பிடிப்பு குணமாகும், பூரம், வீரம், எட்டி, பாதரச விஷங்கள் நீங்கும்.

நாயுருவி - பல்நோய், வியர்வை, படை, தேமல், இரத்தமூலம், பேதி, இருமல், வெள்ளை, சிறுநீர் சிக்கல், சூதகத் தடை நீங்கும்.

நாவல் - பேதி, சீதபேதி, இரத்த பேதி, மதுமேகம், அதிமூத்திரம் தீரும், நீரிழிவு நீங்கும்.

நீர் வேம்பு - சுரங்கள் நீங்கும், விஷம் நீங்கும், தோல்நோய் போகும்.

நீர்முள்ளி - நீர்க்கட்டு, கால்வீக்கம், பாண்டு, வெள்ளை உடல் அசதி, பெரு வயிறு, நீர் எரிச்சல் நீங்கும்.

நெரிஞ்சில் - குளிர்ச்சி உண்டாக்கும், சிறுநீர் பெருக்கும், காமம் பெருக்கும், சிறுநீர் கல்லடைப்பு, சிறுநீர் சதயடைப்பு, சிறுநீர் எரிச்சல் நீங்கும்.

நெல்லி - அழகுண்டாகும், குளிர்ச்சியாகும், மலமிளக்கும், சிறுநீர் பெருக்கும், வாந்தி, மயக்கம், தலைச்சுற்று, பிரமேகம் போகும்.

நொச்சி - கிருமி நாசினி, காய்ச்சல், குளிர்சுரம், வீக்கம், கீல்வாயு நீங்கும்.

நீர் பிரம்மி - மூளை வளர்ச்சியடையச் செய்யும், ஞாபக சக்தி உண்டாக்கும், காமம் பெருக்கும், கோழையகற்றும்.

பிரண்டை - உடல் உரமாக்கி, பசித்தூண்டி, மூலம் மந்தம், குன்மம், கழிச்சல், அஜீரணம், வயிற்றுவலி, இருமல், எலும்பு சக்தி பெறும்.

பூவரசு - உடல் உரமாக்கி, சொறி, சிரங்கு, கரப்பான் நீங்கும், கிருமி நாசினி, வீக்கம் நீங்கும், தோல் நோய் குணமாகும்.

பொன்னாங்கண்ணி - பசி உண்டாக்கும், கண்பார்வை கூட்டும், அழகு அதிகரிக்கும், எடை கூடும்.

மருதம்பட்டை - இரத்த அழுத்தம், நீரிழிவு, வெட்டை குணமாகும்.

மாவில்வம் - நீரிழிவு, கண்பார்வை மங்கல் குணமாகும்.

முசுமுசுக்கை - சளியைக் கரைக்கும், உடல் உரமாக்கும்.

முடக்கு அற்றான் - வாய்வு, இடுப்பு வலி, முழங்கால் வலி நீங்கும்.

முருங்கை - அதிக இரத்த அழுத்தம் குணமாகும், காமம் பெருக்கும், உடல் உரமாக்கும்.

மூக்கரட்டை - சிறு நீரகக் கோளாறு நீங்கும், கட்டி கரையும்.

வசம்பு - பசி உண்டாக்கும், இரத்தபித்தம், வாய் நாற்றம், சூலை, இருமல், ஈரல், யானைக்கால் நோய், நஞ்சு, நாடாப்புழு நீங்கும்.

வில்வம் - வியர்வை பெருக்கும், காமம் பெருக்கும், சுரம் நீங்கும் பெரும்பாடு, உடல்வலி நீங்கும்.

வேம்பு - புழுக்கொல்லி, பெருநோய், அம்மைப்புண், சொறிசிரங்கு,பித்தம், காமாலை, முற்றிலும் எல்லா நோய்களுக்கும் கொடுக்கலாம்.

கறிவேப்பிலை - இரும்புச் சத்து உள்ளது, பசித் தூண்டும், வயிற்றுளைச்சல் நீங்கும், முடிகறுக்கும்...

மராட்டியன் ரஜினி கலாட்டா...


2010 திமுக ஆட்சியிலிருந்து கிடப்பில் கிடக்கும் இலவச டிவிக்கள்...


திருப்பூரில் உள்ள அரசுப் பள்ளியில், 8 ஆண்டுகளாக அரசு வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகள் விநியோகிக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், மாணவிகள் வகுப்பறைக்கு வெளியே வெயிலில் படிக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது.  திருப்பூரில் ஈஸ்வரன் கோவில் வீதியில் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் இடவசதி பற்றாக்குறை காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு, 30 அறைகள் கொண்ட கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டன. இவற்றை பயன்பாட்டுக்கு விடுவதற்கு முன்பு, அப்போதைய திமுக ஆட்சியில், இலவச தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டன.

இதனால், கீழ் தளத்தில் உள்ள 6 அறைகள் மூடி சீல் வைக்கப்பட்டன. தற்போதையை அரசு, இதை விநியோகம் செய்யாததால், தொலைக்காட்சிப் பெட்டி வீணாவதுடன், மாணவிகளின் நலன் கருதி கட்டப்பட்ட வகுப்பறைகளும் பயனற்று கிடக்கின்றன. இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளியில் போதிய வகுப்பறைகள் இன்றி வராந்தா மற்றும் மரத்தடிகளில் பாடம் நடத்தும் நிலை நீடிக்கிறது. எனவே, பூட்டிக் கிடக்கும் அறைகளை திறந்து, மாணவிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பெரும்பான்மையான பள்ளிகளில் இடவசதி இருந்தும் போதிய கட்டடங்கள் இருப்பதில்லை.ஆனால், புதிதாக கட்டப்பட்ட கட்டடம் 8 ஆண்டுகளாக பூட்டிக் கிடப்பதுடன், என்ன நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அதற்கும் பயன்படாமல் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்துள்ளனர்...

தமிழா விழித்துக் கொள்...


மொழிகளின் முதல் நூல்...


சிங்களத்தில் எழுதப்பட்ட முதல் நூல் 'சியபஸ்லகர' 1,000 ஆண்டுகள் பழமையானது.

தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நூல் 'மாபாரதம்' 1,000 ஆண்டுகள் பழமையானது.

கன்னடத்தில் எழுதப்பட்ட முதல் நூல் 'கவிராசமார்க்கம்' 1,170 ஆண்டுகள் பழமையானது.

தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் 'தொல்காப்பியம்' 4,100 ஆண்டுகள் பழமையானது...

நான் படித்த உளவியலில் இருந்து உங்களுக்காக சில தகவல்கள்...


1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்..

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்..

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்..

30-ஆண்டுகால ஆயுதம் போராட்டம் சாத்தியமென்றால்...


அங்கு எத்தகைய வலிமையான கருத்தியல் விதைக்கப்பட்டு இருக்கும்..?

நினைத்து பாருங்கள்....

மனிதர்கள் வேற்று கிரகவாசிகளா? உண்மையை மறைக்கும் நாசா...


வேற்று கிரகவாசிகள் மனிதனுக்கு இன்றைய நவீன யுகத்தில் சவாலாக காணப்படும் ஓர் சுவாரசியமான புதிர் என்று கூட சொல்லலாம்.

பூமி எவ்வாறு தோன்றியது? அதில் மனிதர்கள் எவ்வாறு கால்பதித்தனர்?

இதற்கான பதில் விஞ்ஞானம் மற்றும் ஆன்மிக ரீதியாக நிறைய காணப்பட்டாலும், ஆரம்பத்தில் பூமியில் செல் உயிர் ஒன்றின் தோற்றத்தாலேயே உயிர்கள் தோற்றம் பெற்றதாக நம்பப்பட்டு வருகின்றது.

இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் பூமியில் காணப்படும் மனிதர்கள் வேற்றுக் கிரகவாசிகள் தான் என்ற ஓர் அறிவியல் செய்தி தற்போது கசிந்து கொண்டிருக்கின்றது.

அது எவ்வாறேனில் ஆரம்பத்தில் தோன்றியதாக கூறப்படும் அந்த செல் உயிரி இந்தப் பூமியை சேர்ந்தது அல்லவாம்.

சூரிய குடும்பத்தை பொருத்தவரை பூமியில் உயிரினம் தோற்றம் பெற முன்பு செவ்வாயில் உயிரினங்கள் செழிப்பாக வாழ்ந்திருக்கின்றன.

சுமார் 360 கோடி வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகம் இன்றைய பூமியைப் போல உயிரினங்கள் வாழ எல்லாத் தகுதியுடன் மிகவும் செழிப்பாக இருந்துள்ளது, உயிரினங்களும் வாழ்ந்துள்ளன.

அதன்பின் செவ்வாய்கிரகத்தில் மிகப்பெரிய விண்கல் ஒன்று மோதிய காரணத்தினால் அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கலாம் என நம்பப்பட்டு வருகின்றது.

இதற்கான சான்றாக இன்றும் செவ்வாய் கிரகத்தில் விண்கல் மோதிய சுவடு காணப்படுகின்றது.

இவ்வாறான மோதலினால் சிதறிய விண்கற்களில் 7.5 சதவிதம் பூமியை வந்தடைந்தனவாம்.

ஆனால் இந்த விண்கற்கள் பூமியை வந்தசேர எடுத்துக் கொண்ட காலம் மிகப்பெரிதாகும்.

இச்செயற்பாட்டை Seeds Everywhere என்ற வார்த்தையினால் வரையறுக்கலாம்.

விண்வெளியில் ஒழுங்கின்றி சுற்றித்திரியும் விண்கற்களில் நுண்ணுயிரிக்கள் புதைந்திருக்கின்றன, அந்த விண்கற்கள் நுண்ணுயிரிகளை சுமந்து செல்லும் கேப்சூல் போல் செயற்படுகின்றது.

பறந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் வெவ்வேறு கிரகங்களுக்கு உயிரினங்களை அனுப்ப இது ஒரு சிறந்த வழி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அண்மையில் உலகமும் இவ்வாறான ஓர் பரீட்சையை நடத்தியிருக்க கூடும் என்றால் நம்பமுடிகின்றதா?

நாசா அனுப்பிய விண்கலம் ஒன்று பத்துவருட பயணத்தின் பின் விண்கல் ஒன்றில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

மனிதகுலத்தின் பெரும் வரலாற்று சாதனையாக பேசப்பட்ட நிகழ்வு இது.

அந்த விண்கலம் அங்கு சில ஆய்வுகள் நடத்தப் போவதாக நாசா தெரிவித்திருந்தது.

ஆனால் பூமியில் வாழும் சில நுண்ணுயிரிகளை அதனுள் செலுத்தும் முயற்ச்சி தான் இது என்ற கருத்தும் தற்போது நிலவிவருகின்றது.

மேலும் அமெரிக்க விஞ்ஞானிகள் 1984இல் அண்டார்டிக்காவில் Allan Hills 84001 (ALH84001) என்ற 1.95kg எடை கொண்ட விண்கல்லை கண்டெடுத்தார்கள்.

இது செவ்வாயில் ஏற்பட்ட மோதலினால் சிதறி பூமிக்கு வந்த கற்களில் ஒன்றாக இருக்கலாம் என யுகித்தனர்.

1996இல் நாசா விஞ்ஞானி David Mckay என்பவர் இதில் நானோபாக்டிரியாவின் எச்சம் இருப்பதை கண்டறிந்தார்.

இந்நிகழ்வின் பின் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பில்கிளிண்டன் செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்பும் திட்டத்திற்கு பெரும் தொகை ஒதுக்குவதாகவும் அறிவித்தார்.

மனிதர்களாகிய நமக்கு செவ்வாய் கிரகம் தான் அடிப்படை என பல விஞ்ஞானிகள் தீர்க்கதனமாக நம்புகின்றார்கள்.

இன்றளவும் நாசாவின் ஆளில்லா விண்கலங்கள் செவ்வாயில் தேடிக் கொண்டிருப்பது தண்ணீரையும் தாதுப் பொருட்களையும் மட்டுமல்ல. அங்கு வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்கள் மற்றும் ஆதாரங்களையும் தான்..

அவ்வாறான நிறைய ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றாலும் அதனை பற்றிய முழுமையான தகவல்களை ரகசியமாக வைத்துள்ளனர் நாசா...

தமிழகத்தை அழிக்க பாஜக மோடியின் அடுத்த திட்டம் நீர்வழி சாலை...


எலி மிச்சம் வைத்த ஒரே பழம் – எலுமிச்சை...


எலுமிச்சை ஒரு தேவகனி. இந்த பழத்தின் பெயர் காரணமே ஒரு அற்புதமாகும்.

அதாவது, எலுமிச்சையின் மணம் எலிக்கு ஆகாது. மீதி உள்ள எல்லா பழங்களையும் எலி கடித்து குதறி விடும், எலுமிச்சை தவிர்த்து. பெயரிலேயே இத்தனை சக்தி வாய்ந்த இந்த பழம் ஒரு அற்புதம். புளிப்பு சுவை உடைய எளிமிச்சை சிட்ரஸ் குடும்ப காய் கனி வகைகளை சேர்ந்தது.

எலுமிச்சை பல்வேறு வகையில் மருந்தாக வேலை செய்கிறது. அதனை சிறு குறிப்புகள் மூலம் இப்போது பார்க்கலாம்.

வாந்தி மற்றும் வயிற்றுப்பிரட்டலுக்கு சிறந்த கைமருந்து எலுமிச்சை. நல்ல வாசமுள்ள எலுமிச்சையை முகர்ந்தாலே குமட்டுல் நின்று விடும்.

வயிற்று பொருமல், வாயு தொல்லை, அஜீரணம், உப்பசம் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகிய தொந்தரவுகளுக்கு எலுமிச்சை சிறந்த மருந்தாகும். ஒரு டம்ப்ளர் எலுமிச்சை சாறு அருந்தினால் போதும். வயிறு தொடர்பான தொந்தரவுகள் யாவும் காணாமல் போகும்.

எலுமிச்சை சாருடன் சிறிது தேன் கலந்து வெது வெதுப்பான நீரை காலை வெறும் வயிற்றில் அருந்தினால் உடல் பருமன் குறையும்.

உடலின் அமிலத்தன்மையும் காரத்தன்மையும் எலுமிச்சை சமன் செய்கிறது.

எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த ஒரு பழம். இதனால் சருமம் மேம்படும். மேலும் உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எலுமிச்சை சாறினை முகத்தில் தேய்த்தால் கரும்புள்ளிகள் மறையும்.

கிருமித்தொற்றில் இருந்து பெரிதும் காக்க எலுமிச்சை உதவுகிறது.

உடல் சூடு சார்ந்த எல்லா தொந்தரவுகளுக்கு எலுமிச்சை சிறந்த மருந்தாகும். உதரணாமாக, வேட்டை, நீர்ச் சத்து குறைபாடு, கண் நோய், போன்றவை.

எலுமிச்சை பழம் சாறினை தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும் மற்றிம் பித்தம் குறையும்.
ரத்தக் கொதிப்பை தடுப்பதிலும், சமன் படுத்துவதிலும் எலுமிச்சை பெரும் பங்கு வகிக்கிறது.

எலுமிச்சை குளிர்ச்சியானது, தனமும் உணவில் சேர்த்தாலோ அல்லது சாறு பருகினாலோ சளி மற்றும் காய்ச்சல் வரும் என்ற தவறான எண்ணத்தை மறந்து விடுங்கள்.

சிறு குறிப்பு: எலுமிச்சை சாறு அருந்தும் போது சிறிது உப்பு சேர்த்து கொண்டால் சுவை கூடும்...

ஜாதிக்காயின் மருத்துவ மகிமைகள்...


1. வேறுபெயர்கள்: கிழக்கிந்திய ஜாதிக்காய், மேற்கிந்திய ஜாதிக்காய்.

2. தாவரப்பெயர்: Myristica Fragran Ce, Myristicaceae, Myristice Faeglos.

3. வளரும் தன்மை: மொலுக்கஸ் தீவில் தோன்றிய ஜாதிக்காய் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் 1000 டன்கள் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இது செம்புறைமண், தோமிலிமண், களிமண் கலந்த தோமிலிமண் பயிர் செய்ய ஏற்றது.

ஜாதிக்காய் ஈரப்பதம் அதிகமுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளான தென்மேற்கு மலை ஓரங்களில் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உயரமுள்ள பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள மண் உகந்தது. மண்ணின் அங்ககப் பொருட்கள் அதிகமாக இருந்தல் மிகவும் அவசியம். இது அடர்த்தியாக வளரக்கூடிய பசுமைமாறா மரம். இவை சுமார் 10-20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய பளபளப்பான இலைகளையுடையவை. இவற்றின் பூக்கள் இளமஞ்சள் நிறத்தில் மிகச் சிறியதாகக் காணப்படும். ஜாதிக்காயில் ஆண் மரம், பெண்மரம் என தனித்தனியாகக் காணப்படும். இதை 6 வருடங்கழித்து அவை பூக்கும் போதுதான் காண முடியும்.

விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதை முளைக்க 6 வாரம் ஆகும். பின் ஆறு மாத கன்றுகளைத் தொட்டிகளுக்கு மாற்றி, ஒரு வருடம் முடிந்தவுடன் நடவுக்குப் பயன்படுத்தலாம். விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஜாதிக்காய் மரங்கள் 7-8 வருடங்களில் மகசூலுக்கு வருகின்றன 10-12 வருட மரங்கள் ஒரு மரத்திலிருந்து 2000-3000 காய்கள் கிடைக்கும். ஓட்டுக் கன்றுகள் நட்டபின் 4வது வருடத்திலிருந்து மகசூலுக்கு வருகின்றன.

4. பயன்படும் உறுப்புகள்: ஜாதிக்காயின் விதையைச் சுற்றி இருக்கும் சிகப்பு நிறமான பூ போன்ற பகுதிக்கு ஜாதிப்பத்திரி என்று பெயர். இரண்டையும் தன்னடக்கியுள்ள சதைப்பற்றான பகுதிக்கு ஜாதிக்காய் ஆப்பிள் என்று பெயர். மேல் ஓடு வெடிக்கும், அதுவும் பயன்படும்.

5. பயன்கள்: ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் “மேசின்” என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஜாதி எண்ணெயில் அடங்கியுள்ள “மிரிஸ்டிசின்” என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குணமாக்கவும், காமப் பெருக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் “ஒலியோரேசின்” கொழுப்பு, வெண்ணை போன்றவை வாதம் மற்றும் தசை பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.

“சதை தரும் பத்திரிக்குத் தாபச் சுரம்
ஓதுகின்ற பித்தம் உயருங்காண் – தாகுவிருத்தி
யுண்டாங் கிரகணியோ டோதக்கழிச்சலும்
பண் டாங் குறையே பகர்”

அகத்தியர் குணவாகட பாடல் குறிப்பிடுவது போல் ஜாதிப் பத்திரியானது தாப சுரம், பேதி, நீர்க் கழிச்சல், வாதம், தலைவலி, இருமல், வயிற்றுவலி, மாந்தம் போன்றவற்றைக் குணமாக்கும் தன்மையுடையது.

ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவாக பாலில் கலந்து நாளைக்கு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு தீரும், விந்திறுகும், உடல் வெப்பகற்றும், இரைப்பை, ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும், மன மகிழ்ச்சியை அளிக்கும். நடுக்கம், பக்கவாதம், ஓக்காளம் ஆகியவற்றைப் போக்கும். சிறு அளவில் உண்டுவரச் செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும்.

எண்ணையில் இட்டு காய்ச்சி இவ்வெண்ணையை காதுக்கு 2 துளி விட்டால் காது நோய், காது வலி தீரும். 10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் புதிய நெல்லிக்காய்ச் சாறு ஒரு மேஜைக் கரண்டியளவு கலந்து சாப்பிட்டால் அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும். ஜாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து ஆப்பிள் ரசம் (அ) வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து விடும்.

ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

ஜாதிக்காயை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது அவை போதையை உண்டாக்கும்.

ஆகவே ஜாதிக்காய் வெப்பமுண்டாக்கி, அகட்டுவாய்வகற்றி, மூர்ச்சையுண்டாக்கி, மணமூட்டி, உரமாக்கி போன்ற மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளது. இதன் தைலம் பல்வலி, வாதம், வாயு, கழிச்சல் போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது...

அதிர்ச்சியில் உலக மக்கள் – நீரில் மூழ்குமா உலகம்...


450 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட அமெரிக்க முடிவு – அதிர்ச்சியில் உலக மக்கள் – நீரில் மூழ்குமா உலகம்?

அமெரிக்கா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அதிர்ச்சி விடயம் ஒன்றும் தற்போது பயங்கரமாக பரவத் தொடங்கியுள்ளது.

அதாவது உலகம் அதி பயங்கரமான அழிவைச் சந்தித்திடுமா என்ற கேள்வியே அது.

இதற்கு முக்கிய காரணம் உண்டு 2016 நடக்கப் போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சுமார் 450 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டு கூறியமையால் தான்.

உலக அளவில் பலரையும் கவர்ந்துள்ள 16ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ் கணிப்புகள் இன்றளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் இருந்தாலும் கூட அவரது கணிப்புகளுக்கு இன்று வரை ஈர்ப்பும் இருக்கின்றது.

நாஸ்டிராடமஸின் பல கணிப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை.

காரணம், பல முக்கிய வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை.

கென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியனின் வீழ்ச்சி, 9/11 தாக்குதல் என பல உண்மைச் சம்பவங்களை முன் கூட்டியே கணித்தவர் அவர்.

அதே போன்று மோடி இந்தியாவின் பிரதமராவார் என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே இவர் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு வகையாக கருத்துகள் ஊடகங்கள் மூலம் வெளிவந்தன. இது ஆச்சரியமான உண்மை.

தற்போது ஒபாமாவே கடைசி எனவும் நாஸ்டிராடமஸின் கணித்து கூறியுள்ளார்.

இவரின் 2016ம் ஆண்டுக்கான கணிப்புகளில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது அதிபர் ஒபாமாவைப் பற்றி அவர் கூறியுள்ளதாகும்.

அவர்தான் அமெரிக்காவின் கடைசி அதிபராக இருப்பார் என்று நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார்.

2013ல் ஒபாமா மீண்டும் வெல்வார் என்றும் நாஸ்டிரடாமஸ் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அது அப்படியே நடந்து விட்டது.

அதன் பின்னர் அமரிக்காவின் கடைசி அதிபர் தொடர்பில் ஒபாமா எனவும் கூறியுள்ளார்.

அப்படியானால் ஒபாமா ஆட்சியோடு அமெரிக்கா அழியப் போகிறதா?

அல்லது அமெரிக்காவில் அதிபர் ஆட்சி முறை மறைந்து விடுமா அல்லது சீனா, ரஷ்யா போன்ற புதிய வல்லரசு நாடுகள் எழுச்சி பெறுமா என்பது குறித்துத் அவரின் கணிப்பு கூறவில்லை.

ஆனாலும் 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என 450 வருடங்களுக்கு முன்னர் கணித்து கூறப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது..

அவ்வகையில் 2016 பற்றி அவர் கணித்துள்ள பயங்கரமான விடயங்கள்,

2016ம் ஆண்டு அதி பயங்கரமான வானிலை மாற்றங்களை உலகம் சந்திக்கும்.

இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள் அதிக அளவில் இருக்கும். பூமியே கடலுக்குள் போய் விட்டதைப் போன்ற அளவுக்கு வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும்.

ஏற்கனவே பல நாடுகளில் பெருவெள்ளம் அலைக்கழித்ததைப் பார்க்கும்போதும், எல் நினோ எபக்ட் என்று கூறப்படுவதைப் பார்க்கும்போதும் இந்தக் கணிப்பு பலிக்கலாமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.

மேலும் 2016 இன் பின்னர் கோள்கள் வழக்கத்திற்கு விரோதமான முறையில் இடம் மாறுமாம்.

இந்த கோள்கள் மாற்றத்தால் பூமியில் பல அதி பயங்கர நிகழ்வுகள் ஏற்படலாமாம்.

ஆனால் அது என்ன மாதிரியான நிகழ்வுகள் என்பதை நாஸ்டிரடாமஸ் சொல்லவில்லை.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பேரழிவு ஆண்டாக அமையும். வல்லரசு நாடுகளின் தலைமை மாறுபடும் அவை உலகை அழிக்க திட்டமிடும். ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் கூறியுள்ளார்.

ஈராக் போர் தான் உலக அழிவுக்கான முதல் படி எனவும் 450 வருடங்களின் முன்பே நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார்.

அவர் கூறியதைப்போன்றே தற்போது அடுத்த உலக யுத்தம் பற்றியும் பேசப்பட்டு கொண்டு வருவதோடு பயங்கரவாதமும் உலகில் தலை தூக்கியுள்ளமை அவதானிக்க கூடிய ஒன்றே.

தற்போது அமெரிக்கா தேர்தலும் அவர் ஏற்கனவே கூறிய பல்வேறு விடயங்களும் பலித்துள்ளமையால் தற்போது உலக அழிவு கொள்கையும் பல்வேறு ஊடகங்கள் மூலம் பரவலாக வெளிவருகின்றது.

தொடர்ச்சியாக அவர் கூறியவை நடந்து வருகின்ற காரணத்தினால் உலகம் பயங்கர அழிவை சந்தித்திடும் என்று மக்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த அச்ச நிலையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்...

கரிகாலனின் இமய படையெடுப்பு...


சீறிபாய்ந்து வந்த காவிரியை தடுத்து கரிகாலன் அணை கட்டிய வரலாறு நாம் அனைவரும் அறிந்திருப்போம்.. ஆனால் அதற்கு முன்பு இமயம் வரை படையெடுத்து சென்று இமய மலையில் புலி சின்னத்தை பொறித்த வரலாறு பற்றி பலரும் அறிந்திருக்கமாட்டோம். இதோ கல்லணை கட்டியவனின் கம்பீர வரலாறு....

தென்னகத்தில் பெற்ற வெற்றிகளால் மன்னன் கரிகாலன் திருப்தியடையவில்லை.கரிகாலனின் போர்த் தாகம் தணியாத நிலையில் அவனுடைய போர்ப் பார்வை, போரிடுவதற்கான எதிரிகளைக்த் தேடி வட திசை நோக்கிப் பாய்ந்தது. எனவே, தன் வாள் மற்றும் வெண் கொற்றக் குடையுடன் மயிர்க் கண் முரசம் எனும் ஒருவகைப் போர் முரசத்தை(ஒரு புலியை கொன்ற எருதின் தோலால் செய்யப்பட்ட முரசம்) தன் படையினர் ஒலிக்க, தன் வலிமைமிக்க தோள்களுக்கு எதிரிகள் கிடைப்பார்கள் என்ற எண்ணத்தில் நல்ல நாள் ஒன்றில் வட திசை நோக்கிப் புறப்பட்டான். (ஆதாரம்-சிலப்பதிகாரம் 5:90-94).

பெரும்படையுடன் சென்ற கரிகாலன் செல்லும் வழியில் தன்னை எதிர்த்து நின்ற அரசர் அனைவரையும் வென்று, இறுதியில் இமயமலை சாரலைச் சென்றடைந்தான். இமையமலையை கடந்து வடக்கே செல்ல நினைத்த கரிகாலன், குறுக்கே அமைந்திருந்த பாதை பயணத்துக்கு ஏற்றதாக இல்லை என்பதை உணர்ந்து, பொன் போன்ற இமயமலையின் ஒரு பாகத்தை இடித்திவிட்டு புதுப்பாதை ஒன்று அமைத்தான். பின் பழைய பாதையை மூடி விட்டான்.

"பொன்மலை புலி வென்று ஓங்கப்
புதுமளையிடுத்துப்
பொற்றும் அந்நெறி வழியேயாக
அயல் வழி அடைத்த சோழன்"
- பெரியபுராணம் 55

மேலே குறிப்பிட்ட சான்றை மேற்கோள் காட்டிய குடவாயில் பாலசுப்ரமணியம், புலி சின்னம் பொறிக்கப்பட்ட இடத்தை பற்றி மேலும் சில விவரங்களை குறிப்பிடுகிறார்.

சிக்கிம் மாநிலத்திலிருந்து திபெத் நாட்டின் சீனப் பகுதிக்குச் செல்கிற சூம்பிப் பள்ளத்தாக்கை ஒட்டி அமைந்துள்ள 'சோழக் கணவாய்' மற்றும் 'சோழ மலைத் தொடர்' ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதிதான் கரிகாலன் இமயமலையில் புலிச் சின்னத்தை பொறித்த இடம். இது கரிகாலனால் புதிதாக அமைக்கப்பட்ட பாதை, அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு மலையை கடந்து மறுபுறம் செல்ல வசதியாக இருந்ததால் அதை அமைத்துக் கொடுத்த கரிகால் சோழனுக்கு நன்றி கூறும் முகமாக, அந்தப் பாதைக்குச் 'சோழக் கணவாய்' என்றும் அதை ஒட்டிய மலைத்தொடருக்கு 'சோழ மலைத்தொடர்' என்றும் பெயர்கள் சூட்டி அழைத்துள்ளனர். அவ்வாறு, புதிய வழித் தடத்தை அமைத்த பின், கரிகாலன் அந்த வழித் தடத்தை ஒட்டிய இமயமலைப் பாறையின் மீது புலிச் சின்னத்தை பொறித்தான்.

புதிய வழி தடம் அமைப்பதிலும் பழைய வழி தடத்தை மூடுவதிலும் அவன் போர்ப் படையில் இடம் பெற்றிருந்த சேர நாட்டுப் படை வீரர்களும், பாண்டிய நாட்டுப் படை வீரர்களும் வேற்றுமை பாராட்டாமல் அவன் படை வீரர்களுடன் உற்சாகமாய் ஈடுபட்டனர். ஆதலால், சேர மன்னனின் 'வில்-அம்பு' சின்னத்தையும், பாண்டிய மன்னனின் 'கயல் மீன்' சின்னத்தையும், புலி சின்னத்துடன் பொறித்துத் தன் பெருந்தன்மையை வெளிபடுத்திக்கொண்டான்.

#இமயமலை_வழித்_தடம்

கரிகாலன் தன் போர்ப் படையுடன் கிழக்குக் கடற்கரையோர வழித் தடம் மூலமாகக் #கலிங்கநாடு, வங்காளத்தில் உள்ள '#வச்சிரநாடு' மற்றும் பீகாரைச் சேர்ந்த பகுதிகள் வழியாக இமயமலையை அடைந்தான். மலையின் மீது சோழ, சேர, பாண்டிய நாடுகளின் சின்னங்களை பொறித்த பின், வச்சிர நாட்டு மன்னனை வென்று அவன் கொடுத்த 'கொற்றப் பந்தரை'த் திரையாகப் பெற்றுக் கொண்டான். திரும்பும் பொது, மேற்குத் திசை வழியாக வந்து #மகதநாட்டு(பீகார்) மன்னனை வென்று அவன் அளித்த அரச குல பட்டி மண்டபத்தை திரையாக பெற்று கொண்டான். மேற்கு திசை நோக்கி மேலும் நகர்ந்து, தன் நண்பனாகிய அவந்தி நாட்டு மன்னன் மனமுவந்து அளித்த 'தோரண வாயிலை' அன்பளிப்பாக பெற்றுக்கொண்டு, தன் நாடு திரும்பினான்.நாடு திரும்பிய கரிகால் மன்னன் தான் பெற்று திரும்பிய மூன்று அரிய பொருட்களையும் பூம்புகார் நகரில் 'சித்திர மண்டபம்' என்னும் ஒரு மண்டபத்தை வடிவமைத்து, அந்த மண்டபத்துக்குள் நிலைநிறுத்தி தன் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் காட்சி பொருட்களாக வைத்தான்.

இந்த தகவல் டாக்டர் ரா.நிரஞ்சனாதேவி அவர்கள் எழுதிய 'கரிகால் சோழன்' என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது...

கரிகாலனுக்கு பிறகு மேலும் இரண்டு தமிழ் மன்னர்கள் இமயமலை வரை படையெடுத்து சென்று வெற்றிபெற்று, இமயமலையில் தங்கள் அடையாள சின்னங்களை பொறித்து விட்டு திரும்பியுள்ளனர்...

ஈழத்தைப்படி.. ஈழத்தை மட்டுமே படி - தமிழ்...


ஒரு கருத்தியலுக்கான அடிப்படையில் தெளிவு பெற்றாலே அதை சார்ந்து வரும் மேல் கருத்துக்களும் எளிமையா புரியும், இங்கே ஒரு கருத்தியலில் நல்லா தெளிவு பெற்றோரும், புதுசா வர்றவங்களுக்கு அடிப்படையை தெளிவா கற்பிக்கனும்...

இதன் தொடர்ச்சியும், விளைவுகளும் நாளை...

தக்காளி சாப்பிட்டால் புற்று நோயைக் குறைக்கலாம்...


உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தாக்காளியைத் தமது உணவில் சேர்த்துக்கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் காணப்படுகிறது.

பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 35,000 ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. அவர்களில் 10,000 பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள்.

பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்கவேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதோடு, இறைச்சியின் அளவையும், கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 20,000 ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயது வரையானதாக இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் வாரத்துக்கு குறைந்தது 1500 கிராம் தக்காளியை உணவில் சேர்த்துக் கொண்டவர்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் சாத்தியம் 18 சதவீதம் வீழ்ச்சியடைந்ததை இவர்கள் கண்டறிந்தனர்.

உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தாக்காளியைத் தமது உணவில் சேர்த்துக்கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் காணப்படுகிறது. பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 35,000 ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. அவர்களில் 10,000 பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள்.

பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்கவேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதோடு, இறைச்சியின் அளவையும், கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 20,000 ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயது வரையானதாக இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் வாரத்துக்கு குறைந்தது 1500 கிராம் தக்காளியை உணவில் சேர்த்துக் கொண்டவர்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் சாத்தியம் 18 சதவீதம் வீழ்ச்சியடைந்ததை இவர்கள் கண்டறிந்தனர்.

உணவில் காய்கறிகளின் அளவு அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும்.

அத்துடன், சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில் குறைந்தது 500 கிராம் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் 24 சதவீதம் அளவுக்குக் குறைவதையும் இவர்கள் கண்டறிந்தனர்.

புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பில் தக்காளி முக்கிய பங்காற்றுவதாகத் தங்களின் ஆய்வு கண்டறிந்திருப்பதாகக் கூறும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத் துறையைச் சேர்ந்த வனசா எர், அதே சமயம், இதை உறுதி செய்யவேண்டுமானால் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

தக்காளிக்குச் சிவப்பு நிறத்தை அளிக்கும் லைகோபீன் என்கிற இயற்கையான வேதிப்பொருள், மனித செல்களில் மரபணு மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக அந்தச் செல்கள் வேகமாகச் சிதைவுறுவதையோ அல்லது வேகமாக வளர்வதையோ தடுக்க வல்லது.

அதன்மூலம் இந்த லைகோபீன் மனித செல்களின் வேகமான கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி புற்றுநோயாக உருவாவதைத் தடுக்கும் பணியை செய்வதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தக்காளியில் இருக்கும் லைகோபீன் மட்டுமல்லாமல், நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளான கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டி, பாஸ்தா போன்றவற்றில் இருக்கும் செலீனியம் என்கிற வேதிப்பொருளும், பாலிலும் அதிலிருந்து தயாராகும் அனைத்து வகையான உணவுப் பொருட்களிலும் இருக்கும் கால்சியமும் கூட ஆண்களுக்கு உருவாகும் புராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கவல்லவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே ஆண்கள், கணிசமான தக்காளியையும், மாவுப் பொருளில் இருந்து தயாராகும் உணவுகள் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளைக் கூடுதலாகத் தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் வருவதைக் கணிசமான அளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

உணவில் காய்கறிகளின் அளவு அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும்

அத்துடன், சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில் குறைந்தது 500 கிராம் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் 24 சதவீதம் அளவுக்குக் குறைவதையும் இவர்கள் கண்டறிந்தனர்.

புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பில் தக்காளி முக்கிய பங்காற்றுவதாகத் தங்களின் ஆய்வு கண்டறிந்திருப்பதாகக் கூறும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத் துறையைச் சேர்ந்த வனசா எர், அதே சமயம், இதை உறுதி செய்யவேண்டுமானால் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

தக்காளிக்குச் சிவப்பு நிறத்தை அளிக்கும் லைகோபீன் என்கிற இயற்கையான வேதிப்பொருள், மனித செல்களில் மரபணு மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக அந்தச் செல்கள் வேகமாகச் சிதைவுறுவதையோ அல்லது வேகமாக வளர்வதையோ தடுக்க வல்லது.

அதன்மூலம் இந்த லைகோபீன் மனித செல்களின் வேகமான கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி புற்றுநோயாக உருவாவதைத் தடுக்கும் பணியை செய்வதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தக்காளியில் இருக்கும் லைகோபீன் மட்டுமல்லாமல், நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளான கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டி, பாஸ்தா போன்றவற்றில் இருக்கும் செலீனியம் என்கிற வேதிப்பொருளும், பாலிலும் அதிலிருந்து தயாராகும் அனைத்து வகையான உணவுப் பொருட்களிலும் இருக்கும் கால்சியமும் கூட ஆண்களுக்கு உருவாகும் புராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கவல்லவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே ஆண்கள், கணிசமான தக்காளியையும், மாவுப் பொருளில் இருந்து தயாராகும் உணவுகள் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளைக் கூடுதலாகத் தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் வருவதைக் கணிசமான அளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்...

திருவாசகத்தின் ஆறு வரிகளில் அண்டம் விரிகிறது...


அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழைக் கதிரின் துன்அணுப் புரைய
சிறியோனாகப் பெரியோன் தெரியின் என்பது திருவாசகம்.

அண்டமாகிய இந்தப் பிரபஞ்சத்தின் காட்சியை விளக்குவதென்றால், இங்கே உள்ள பொருட்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்து அழகுற திகழ்கின்றன. இவற்றின் எண்ணிக்கையோ நூறு கோடிகளுக்கும் மேற்பட்டது. இந்த எண்ணிக்கையும் நிலையாக இருப்பதில்லை அவை விரிந்து கொண்டே செல்கின்றன. இது எப்படி இருக்கிறதென்றால், வீட்டுக் கூரையில் உள்ள சிறிய ஓட்டை வழியாக வெயில் நுழையும்போது, அந்த நீண்ட குழல் வடிவமான ஒளியில் பல கோடி தூசுத் துகள்கள் சுழலுமல்லவா.. அதைப் போல அண்டம் முழுவதும் அணுத் துகள்களும் அவற்றாலான பெரும் பொருட்களும் எல்லை வகுக்கவே இயலாத வகையில் சுழல்கின்றன. இந்த அண்டத்தின் அணுக்களில் சிறியதாகத் தெரிபவன் யாரென்றால் யாவற்றுக்கும் பெரிதான இறைவன் – என்பது இப்பாடலின் கருத்து.

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடிய இதே கருத்தைத்தான் நவீன அறிவியல் இப்போது செயற்கைக்கோள் உதவியுடனும் தொலைநோக்கிகள் துணையுடனும் முன்வைக்கிறது.

நவீன இயற்பியலின் அடிப்படைக் கொள்கைகள் இரண்டு. ஒன்று, பகுதிக் கோட்பாடு (quantum theory). மற்றொன்று, தொடர்புக் கோட்பாடு (relativity theory).

பகுதிக் கோட்பாட்டின் சாரம், ‘பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களில் ஒளி பயணித்துக் கொண்டுள்ளது. இந்த ஒளி இடைவிடாத அலைபோலப் பயணிப்பதில்லை..

ஏனெனில் ஒளி என்பது ஒரே கற்றையான பொருள் அல்ல. அது எண்ணற்ற துகள்களின் தொகுப்பு. ஒவ்வொரு ஒளித்துகளுக்கும் இடையில் இடைவெளி உள்ளது.

இவ்வாறு பகுதி பகுதியாக பயணிக்கும் ஒளிக் கற்றைகள் பொதுப் பார்வைக்கு ஒரே அலைபோலத் தெரிந்தாலும் உண்மையில் அவை தனித் தனித் துகள்கள்தான். எல்லாத் துகள்களுக்கும் இடையில் வெளி (space) உள்ளது. இந்த வெளி நிலையானது அல்ல, விரிந்துகொண்டே இருக்கிறது’

’இன்னுழைக் கதிரின் துன்அணுப் புரைய
சிறியோனாகப் பெரியோன் தெரியின்’ எனும் இரு வரிகள் மிக அழகாக இந்தக் கருத்தை வலியுறுத்துகின்றன.

‘வீட்டினுள் நுழையும் ஒளிக் கற்றையைப் பாருங்கள். அது பொதுத் தோற்றத்தில் ஒரே ஒளிக் கற்றைபோல் இருக்கும். ஆனால், அக்கற்றையின் உள்ளே எண்ணற்ற நுண் அணுத்திரள்கள் இருக்கின்றன..

இதேபோல் அண்டம் முழுவதும் ஒளிக் கற்றையின் பயணம் நிகழ்கிறது. வீட்டில் விழும் ஒளிக் குழலில் நுண் துகள்கள் இருப்பதைப் போல அண்டத்தில் பெரிய கோள்களும் பிற பொருட்களும் உள்ளன. இறைவன் பெரியவன். ஆனாலும் அவனைச் சிறியோனாகவும் காண இயலும்..

எப்படி என்றால், வீட்டுக் கூரையிலிருந்து கசியும் ஒளியில் துகள்கள் மிதப்பதும், அண்டத்தில் பெரும் பொருட்கள் மிதப்பதும் ஒரே விதமாக இருக்கிறதல்லவா. அதைப் போல இறைவன் சிறியதாகவும் பெரியதாகவும் இருக்கிறான்’

தொடர்புக் கோட்பாடு என்பது, ’அண்டத்தில் உள்ள பொருட்களைத் தனித்தனியே புரிந்துகொள்வதும் மதிப்பிடுவதும் சாத்தியமற்றது. அதாவது, பூமி எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்பதை, பூமியை மட்டுமே ஆய்வு செய்து கூறிவிட இயலாது. அவ்வாறு கூறினால் அது உண்மைக்குப் புறம்பானதாக இருக்கும். ஏனெனில் பூமியின் வேகம் சூரியக் குடும்பத்தில் உள்ள பிற கோள்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. சூரியக் குடும்பத்தின் இயக்கம் பால்வெளியின் இயக்கத்தைச் சார்ந்துள்ளது. பால்வெளியின் இயக்கமோ அண்டத்தின் கோடிக் கணக்கான பகுதிகளைச் சார்ந்துள்ளது. இவ்வாறு ஒன்றோடு ஒன்று சார்ந்தும் தனித்தும் உள்ளன. இவை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டுள்ள வெளி (space) எப்போதும் விரிவடைந்துகொண்டே இருக்கிறது. அதாவது, எல்லாப் பொருட்களுக்கும் ஆதாரமாக இருக்கும் வெளி, நிலையாக இல்லாமல் விரிந்துகொண்டே உள்ளது. ஆகவே, பிரபஞ்சத்தை மதிப்பிடுவது துல்லியமான (absolute) செயலாக ஒருபோதும் இருக்காது. மாறாக, ஒன்றுக்கு ஒன்று ஒப்பிட்டுக் கூறுவதே சாத்தியம். இவ்வாறு ஒன்றோடு மற்றொன்று கொண்டுள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவதால், இதன் பெயர் தொடர்புக் கோட்பாடு’

” அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” என்ற வாசகங்களுக்கு வேறு எந்தப் பொருளும் இல்லை.

நேரடியாகவே பின்வரும் செய்திகளைத் தாங்கியுள்ளன இவ்வாசகங்கள்:

1. அண்டம் என்பது ஒன்றல்ல, பல்வேறு பகுதிகளை அடக்கியது. ஆகவே ’அண்டப் பகுதி’ எனப்பட்டது.

2. ’உண்டை’ எனும் சொல்லுக்கு ‘உருண்டை, கூட்டம்’ உள்ளிட்ட பொருட்கள் உண்டு. உருண்டை வடிவமான கூட்டம் என்பதை உண்டை எனலாம்.

3. ‘பிறக்கம்’ எனும் சொல்லுக்கு, ‘ஒளி, உயர்ச்சி, குவியல்’ ஆகிய அர்த்தங்கள் உள்ளன.

4. ஆக, ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்’ என்றால், ”எண்ணற்ற அளவில் உள்ள அண்டத்தின் ஒரு பகுதி, உருண்டை வடிவத்தில் கூட்டம் கூட்டமாக, ஒளிக் குவியலாக உள்ளது” என்று அர்த்தம்.

5. இந்தக் காட்சியைக் காணும்போது, அது அளவிடுவதற்கே இயலாததாகவும் மேன்மை பொருந்திய காட்சியாகவும் (வளப்பரும் காட்சி) உள்ளது.

6. ’ ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன’ என்றால்,

பின்வரும் பொருள் கொண்ட வாசகம்,

’இந்த அண்டப் பகுதியின் பொருட்கள் யாவும் தனித்தனியாக இருப்பதில்லை. ஒன்றுக்கு ஒன்று பொருந்துமாறு நின்றுகொண்டுள்ளன. இதன் அழகை விவரிப்பதானால்...அவை நிலையாக நில்லாமல் நூற்றுக் கணக்கான கோடிகள் எனும் எண்ணிக்கையில் விரிந்து கொண்டுள்ளன’.

மேற்கண்ட விளக்கங்களில் ஒரே ஒரு சொல்லைக் கூட மிகைப்படுத்தி நான் எழுதவில்லை. திருவாசகத்தில் உள்ள பொருள் மாறாமல் நேரடியாக விளக்கியுள்ளேன்.

திருவாசகம் இயற்றப்பட்டு ஏறத்தாழ ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்பாடல் உள்ள பதிகத்திற்கு ‘திருவண்டப் பகுதி’ எனப் பெயரிட்டுள்ளார் மாணிக்கவாசகர். அதாவது, பெருமைமிகுந்த அண்டத்தைப் பற்றிய பகுதி என்று பொருள். பிரபஞ்சத்தை ‘திரு’ எனும் அடைமொழியால் அழைக்கும் பணிவு திருவாசகத்தின் சிறப்புகளில் ஒன்று.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ.போப் திருவண்டப் பகுதி எனும் சொல்லை, ‘Nature and Development of the Universe’ என்று மொழி பெயர்த்துள்ளார். ‘பிரபஞ்சத்தின் இயல்பும் வளர்ச்சியும்’ என்று இதற்குப் பொருள். ஏனெனில், திருவண்டப்பகுதி இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய நுட்பமான விளக்கங்களை உள்ளடக்கியுள்ளது.

தமிழர்களின் அறிவியல் மரபிற்கும் இறையியல் மரபிற்குமான சிறந்த உறவை ஏற்படுத்திய பெருமை திருவாசகத்திற்கு உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக, இறையாற்றலை ஓர் உருவத்திற்குள் அடக்காமல் உணர்ந்த பெருஞ்சிறப்பும் மாணிக்கவாசகருக்கு உண்டு.

இறையை நோக்கி ‘ஆக்கம் அளவு இறுதி இல்லாய்’ என்றவர் அவர். ’உனக்கென ஒரு வடிவமும் அளவும் முடிவும் இல்லை’ என்பது இதன் கருத்து. ‘ஆணாகி பெண்ணாகி அலியாகி’ நின்றாய் என்றும் இறையைப் பாடியவர் மாணிக்கவாசகர்..

சமயங்களுக்கு அப்பாற்பட்ட பேருண்மைகளைத் தாங்கியுள்ள மந்திரத் தொகுப்பாக திருவாசகத்தைக் காண்கிறேன் நான்...

விடுதலைப்புலிகளின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை..


இந்த சந்தேகம் ஒருநாள் இங்கு இருக்கிற மக்களுக்கும் எழும் - உவன்..

அதுவரை தமிழீழத்தை வைத்து இங்கு அரசியல் பிழைப்பு மட்டுமே நடக்கும்...

அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படித்தான் ஸ்கூலுக்கு வரணும் - செங்கோட்டையன் அதிரடி...


பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வு இருக்கக்கூடாது என்பற்காக அவர்கள் சீருடை அணிந்து வர வேண்டும் என்ற முறையை முன்னாள் முதலமைச்சர் காமராஜர் நடைமுறைப்படுத்தினார். இதன் மூலம் வகுப்பறைகளில்  ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு இல்லாத சமநிலை உருவானது.

இதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தமிழக பள்ளிகளில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், கனிணி வகுப்புகள், ஆங்கில வழிக்கல்வி, தொடக்கப் பள்ளிகளில்  எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் என அசத்தி வருகிறார்.

இதனிடையே  பள்ளி மாணவர்கள் ஒழுக்கத்தை ஆசிரியர்களிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் என பள்ளிகல்வித்துறை  தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களைப் போல ஆசிரியர்களும் பள்ளிக்கு சீருடை அணிந்து வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தற்போது தனியார் பள்ளிகளில் இந்த முறை வழக்கத்தில் உள்ளது. அமைச்சர் செங்கோட்யைன் , அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளைவிட சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு சீருடை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது செயல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால் தற்போது அரசுப் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகளும் சீருடையுடன் பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளனர்...

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் வரன்முறைபடுத்த காலக்கெடு நீட்டிப்பு...


தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்...


1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...

எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது...

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...

எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது...

3. உடல் எடையைக் குறைக்கிறது...

எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பது நிருபணமான உண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிற து...

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது.

7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது...

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

9. stress ஐ குறைக்கிறது.

இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை.

10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது...

இலுமினாட்டி இரகசியம்...


எண்ணமின் அலைகளின் பயணம்...


நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது.

எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.

அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.

அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.

அதற்கு தேவையான ஆற்றல் தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.

அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.

எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.

அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்...

பாஜக மோடி கலாட்டா...


இமயமலை ஆழ்கடலுக்குள் இருந்ததா ?


சில உண்மைகளை நம்மால் எளிதில் நம்ப முடியாது. கற்பனையோ, கட்டுக்கதையோ என்று யோசிக்கத் தோன்றும்.

உதாரணமாக, இன்று உலகத்திலேயே உயர்ந்த மலையாக விளங்கும் இமயமலை ஒரு காலத்தில் ஆழ்கடலுக்குள் இருந்தது என்றால் யாராவது நம்புவார்களா? ஆனால் அதுதான் உண்மை..

நமது உலகம் தோன்றும் போது அது இப்போது நாம் காணும் தோற்றத்தில் இல்லை. இப்போது கடல்கள் சூழ்ந்து காணப்படும் ஐந்து கண்டங்களும் அப்போதே இருந்தன. ஆனால் ஒரு வித்தியாசம். அவை இப்போது இருப்பதைப் போல் ஐந்து கண்டங்களாக இல்லை. உலகத்தின் சிறுபகுதி வெறும் நிலத்திட்டாகவும், பெரும்பகுதி நீரால் சூழப்பட்டதாகவும் இருந்தது.

ஆனால் அந்த நிலத்திட்டு நிலையாக இருக்கவில்லை. எப்போதும் நகர்ந்துகொண்டே இருந்தது. அதை கண்டங்களின் நகர்வு என்கிறார்கள். அதற்குக் காரணம், பூமி ஒரே திடப்பொருளாக இல்லாததுதான்.

பூமி முக்கியமாக நான்கு அடுக்குகளாகக் காணப்படுகிறது. பூமியின் மையத்தில் கனமான திடப் பொருளால் ஆன மையப் பகுதி உள்ளது. அதைச் சுற்றி திரவ நிலையில் உள்ள புறமையம் இருக்கிறது. அந்தப் புறமையத்தைச் சுற்றி ரப்பர் போன்ற `மேன்டில்' பகுதி உள்ளது. அந்த மேன்டில் மீள்தன்மை உடையது. கிட்டத்தட்ட `பாகு' நிலையில் இருக்கிறது. இந்த மேன்டிலின் மீதுதான் நாம் இருக்கும் நிலப்பகுதி மிதந்து கொண்டிருக்கிறது.

நம்முடைய நிலப்பகுதி ஒரே துண்டாக இல்லாமல் பல துண்டுகளாக இருப்பதால் அவை மேன்டிலின் மீது நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனால் ஒரு காலத்தில் நிலமாக இருந்தபகுதி இப்போது கடலாகவும், கடலாக இருந்த பகுதி இப்போது நிலமாகவும் இருக்கின்றன. அதாவது பூமியின் முகத்தோற்றம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது.

நமது தமிழ்நாட்டுக்குத் தெற்கே லெமூரியாக் கண்டம் என்ற ஒரு நிலப்பரப்பு இருந்தது என்றும், பின்னர் அதை கடல் கொண்டு சென்றுவிட்டது என்றும் படித்திருக்கிறோம். அதற்கு இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன..

இதே போல் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஈரானும், சீனாவும் ஒரே கடலால் இணைக்கப்பட்டிருந்தன. ஈரான், சால்ட் ரேஞ்ச், ஸ்பிடி, காஷ்மீர், இந்தோ- சீனா, சீனா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் இந்தப் பகுதிகள் அனைத்தும் ஒரே கடலால் இணைக்கப்பட்டிருந்தன என்பதை நிரூபித்திருக்கின்றன. லடாக், நேபாளம் ஆகிய பகுதிகள் கூட கடலாகத்தான் இருந்திருக்கின்றன.

இந்தப் பகுதிகள் எல்லாம் கடலாக இருந்தன என்று எதை வைத்துக் கூறுகிறார்கள்?

பூமியின் வரலாற்றைப் பல்வேறு காலகட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்தெந்தப் பகுதியில் என்னென்ன விலங்குகள் வாழ்ந்தன என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

பழங்காலத்தில் வாழ்ந்த விலங்குகளில் சில பூமிக்கடியில், பாறைகளில் புதைபடிவங்களாகப் பாதுகாக்கப்பட்டன. பூமியைத் தோண்டி ஆராய்ச்சிகளை மேற்கொண்டால், அங்கு இயற்கையால் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளின் புதைபடிவங்களைக் காண முடியும். இந்தப் புதைபடிவங்கள் பூமியின் வரலாற்றையும், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

இவ்வாறு இமயமலைப் பகுதியைத் தோண்டி ஆராய்ச்சிகள் நடத்திய போது அங்கு கடல்வாழ் விலங்குகளின் புதைபடிவங்கள் காணப்பட்டன. அந்தப் புதைபடிவங்களில் காணப்படும் கடல்வாழ் விலங்குகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் வாழ்ந்தவை. எனவே பல கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி கடலாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர்.

இந்த முடிவை வேறு பல சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன..

பரிணாம வளர்ச்சியில் நாம் இழந்தவை பல அதிசய சக்திகளை...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


ஒரு முன்னாள் நாசா பொறியாளர். சூரியனில் நாம் முன்பு பார்த்து நமது கிரகம் அளவுடைய பறக்கும் தட்டு பற்றிய செய்திகளை வெளியிட்டு உள்ளார். இந்த பிரமாண்ட மேலோட்டமான விண்கலம். நமது சூரிய மண்டலத்தில் இருப்பதாகவும், சனிக் கிரகத்தின் பாரிய வளையங்களில் மறைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த கூற்றுக்கள் விரைவாக அமெரிக்க மற்றும் ரஷ்ய முக்கிய ஊடகங்கள் இரண்டிலும் பரவியது-இது சற்றே விநோதமானதாக உள்ளது, இந்த விண்கலம் சனிக கிரகத்தின் வளிமண்டலமட்டுமல்ல, வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற மற்ற கிரகங்களைச் சுற்றி வருகிறது என்றார்.

முன்னாள் NASA பொறியாளர் டாக்டர் நார்மன் பெர்க்ருன்-ஒரு தெளிவான பறக்கும் தட்டு ஆய்வாளர் ஆவார்-வேற்றுகிரக விண்கலம் உண்மையில் 'கிரகத்தின் ஆற்றலை' 'மோதிர வளையங்கள் வழியாக' வளர்க்கிறது என்று நம்புகிறார்.

இந்த விண்வெளிக்கலம் சூரிய மண்டலத்திற்கு புதியவை அல்ல, என்று டாக்டர் பெர்குன் கூறுகிறார். முன்னாள் நாசா போபின் 1986 ஆம் ஆண்டு முதல் நமது சூரிய மண்டலத்தில் விண்கலம் பரவலாக்கப்படுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார், இது குறித்து அவர் "சனிக்கிரக ரிங்ஸ்மேக்கர்ஸ்" என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.

டாக்டர். பெர்க்ருன் இந்த விண்கலம் பற்றி நீண்ட காலத்திற்கு முன்னர் பேசியுள்ளார், சனி கிரகத்தின் வளையங்களில், அங்கே வசித்து வருகின்ற ஏராளமான அயல் விண்கலங்கள் ஆகியவற்றைப் பற்றிய மர்மம் விளக்கி வருகிறார்.
இது வெளிப்படையாக வியக்கத்தக்க கண்டுபிடிப்புகள் " நம்பகத்தன்மை இருப்பதாகத் தோன்றுகிறது என்று ஸ்குட்னிக் நியூஸ் கூறுகிறது.

2016 ஆம் ஆண்டில், இந்த மர்மமான பறக்கும் பொருட்கள் சனி, யுரேனஸ் மற்றும் வியாழன் கோள்கள் ஆகியவற்றில் வசிப்பதாகவும்:
"நான் மின்காந்தவியல் என்று கூறுகிறேன், ஏனென்றால், அதைப் பொறுத்தவரை, என்னுடன் தொடர்புபடுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளை நான் கண்டறிந்திருக்கிறேன். மின். அந்த கோடுகள் ஒரு பொருளின் வெளிச்சத்தை வெளிப்படுத்தின என்று நான் கூறமுடியும், "என்று அவர் கூறினார்.

யுஎஃப்ஒ வேட்டைக்காரர்கள் மற்றும் அமானுஷ்ய ஆய்வாளர்கள். டாக்டர். பெர்க்ரூன் கூற்றை நம்புகின்றனர், பெர்குன் மிகுந்த இரகசிய விண்வெளி திட்டங்களுக்கு தேசிய விமான ஆலோசனை குழுவில் (NACA) மற்றும் லாக்ஹீட் மார்டின் (NACA) தேசிய ஆலோசனை குழுவில் பணிபுரிந்த காலத்தில் மிக அதிகமான இரகசிய நாசா படங்களைக் கண்டதாகக் கூறினார்.

யுஎஃப்ஒ ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அவரது முடிவு, அவர் படங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்கின்றனர்.

உண்மைகள் எப்போதும் தண்ணீரில்
முழ்கிய காற்றடைத்த பந்து போல.
மேலே வந்து சுழன்று பறக்கதான் செய்யும்...