01/12/2018

எனக்கு பிடித்த பாடல்...


எனக்கு பிடித்த பாடல்...


எனக்கு பிடித்த பாடல்...


எனக்கு பிடித்த பாடல்...


எனக்கு பிடித்த பாடல்...


உயிரே வா உறவே வா
உயிரே வா உறவே வா
அழிவதில்லை காதல் அதுவே என் பாடல்
அன்பே வந்துவிடு வா
எந்தன் மூச்சே நீதான் என்பேன்
எந்தன் வாழ்வே காதல் என்பேன்
உண்மைக் காதல் தோற்குமா
உந்தன் மனம் என்னை ஏற்குமா.....

சிலருக்கு தேவை தேகம் தான்
அவரது உணர்வோ காமம் தான்
சிலருக்கு தேவை இதயம் தான்
அவரது காதல் புனிதம் தான்
போனால் இதயம் திரும்பாது
வேறொரு இதயம் பொருந்தாது
ஒரு முறை தான் நினைத்து விட்டால்
மறப்பது என்பது முடியாது....

எனக்கு பிடித்த பாடல்...


உன் தலைமுடி உதிர்வதை கூட
தாங்க முடியாது அன்பே..
கண்ணிமைகளில் உன்னை
நான் தாங்குவேன்...

உன் ஒரு நொடி பிரிவினைக் கூட
ஏற்க முடியாது அன்பே
என் கனவிலும் உன் முகம்
தேடுவேன்....

எனக்கு பிடித்த பாடல்...


நீ இல்லை நிலவில்லை
நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்....
அழுகின்றேன் இப்போது நீ என்
கண்ணீராகின்றாய்...

இப்படி வாழ்வது தான் வாழ்க்கையா.?


திருமணத்திற்கு பிறகு வேறொருவரை காதலிப்பது கள்ளக்காதல் என்றால்,

காதலித்துவிட்டு வேறொருவரை திருமணம் செய்துக்கொள்வது கள்ளத்திருமணம் அல்லவா?

முகத்தில் படந்திருக்கும் கரும்புள்ளிகள் போக...


ரோஜா இதழ்களுடன், பாதாம் பருப்பை ஊற வைத்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.

வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன், சிறிது தேன் கலந்து குழைத்து, முகத்தில் பூசி வரலாம்.

வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.

உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி, தடவவும்.

ஜாதிக்காய் அரைத்துப் போடலாம்.

முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி மறையும்.

பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவவும். பின், டவலை சூடான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தில் வைத்து பஞ்சினால் துடைத்து எடுத்து விடவும்.

வெள்ளரிச்சாறு, போரிக் பவுடர், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளிகளில் தடவி, ஐந்து நிமிடம் ஊறவிடவும். பின், லேசாக மசாஜ் செய்து துடைத்தால், உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும்.

கோதுமை தவிடு, பால் இரண்டும் தலா ஒரு மேஜைக்கரண்டி கலந்து, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். கொஞ்ச நாட்களில் கரும் புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும்...

பிரபஞ்ச சுழற்சி...


இன்னும் சில காலங்களில் இந்த உலகம் அன்பாலும் மகிழ்ச்சியாலும் சிரிப்பாலும் நிறைந்து காணப்படும்...

அப்போது இந்த இயற்கை முழுவதும் புன்னகையுடன் பொங்கி வழியும்...

ஏனெனில்.. அதுவே பிரபஞ்சத்தின் சுழற்சி ஆகும்...

நியூஸ் 7 எனும் மக்கள் விரோத தொலைக்காட்சி...


எலும்புத் தேய்மானத்தைத் தடுக்க இயற்கை வைத்தியம்...


வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.

எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.

கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.

இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.

எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.

எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.

இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.

எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.

பாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.

உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.

எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.

ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

ரெசிபி...

பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.

பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.

ஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

பிரட் தோசை: தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.

பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.

சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்...

அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.

அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.

அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.

மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.

ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.

உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்...

இன்று ஓய்வு பெறுவதாக இருந்த பொன்.மாணிக்கவேல் ஒரு வருடத்துக்கு சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக நியமித்து நீதிமன்றம் உத்தரவு...


மின்கோபுரங்கள் அமைக்க உழவர்களை துரத்தியடித்து விட்டு நிலத்தை பறிப்பதா? - பாமக மருத்துவர் அய்யா அறிக்கை...


தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் வேளாண் விளைநிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை விரட்டியடித்து விட்டு, அவர்களின் நிலங்களை அளவிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். உழவர்களை வாழ வைக்க வேண்டிய அரசு, காவல்துறை மூலமாக விளைநிலங்களை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்தேவையில் பெரும்பகுதி மத்தியத் தொகுப்பிலிருந்தும், பிற மாநிலங்களில் உள்ள தனியார் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்தும் தான் பெறப்படுகிறது. தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தைக் கொண்டு வருவதற்காக பல்வேறு மாவட்டங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டம் புகழூர் முதல் ராய்கர், திருவலம், மைவாடி, அரசூர், இடையார்பாளையம், திருச்சூர் ஆகிய இடங்களுக்கு பவர் கிரிட் நிறுவனத்தின் மூலமாகவும், அரசூர் முதல் ஈங்கூர் வரை, மைவாடி இணைப்புத் திட்டம், இராசிபாளையம் முதல் பாலவாடி வரை ஆகிய இடங்களுக்கு தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகத்தின் சார்பிலும் மொத்தம் 16 உயரழுத்த மின்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த மின்பாதை திட்டங்களின் பெரும் பகுதி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளும், பாதிப்புகளும் எல்லையில்லாதவை. உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படும் பகுதிகளில் 40 முதல் 90 மீட்டர் அகலத்திற்கான நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அந்த நிலங்களை எதற்காகவும் விவசாயிகள் பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் விளைநிலங்களில் உயர் மின்கோபுரங்களை அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் 13 மாவட்ட விவசாயிகளும் ஒன்று சேர்ந்து ‘உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி தொடர் போராட்டங்களை நடத்தி  வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் காரணமாக மின்பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இத்திட்டம் செயல்படுத்தப்படும் இந்தியத் தந்தி சட்டத்தின்படி, மின்பாதை அமைக்கும் பணிக்கு உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், திட்டப்பணிகளைத் தொடர முடியாது. மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று தான், இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் உழவர்களின் நிலங்களில் நுழைய முடியும் என்பது விதியாகும்.

ஆனால், இவ்விதியை மதிக்காத பவர் கிரிட் நிறுவனம் கோவை மாவட்டத்தில் காவல்துறை உதவியுடன் விவசாயிகளை விரட்டியடித்து விட்டு, நிலங்களை அளந்து பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இது சட்ட விரோதமாகும். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் உழவர் அமைப்புகளுக்குமிடையே ஏற்கனவே இரு கட்டப் பேச்சுக்கள் நடைபெற்று முடிந்துள்ளன. மூன்றாம் கட்ட பேச்சுக்கள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் பவர் கிரிட் நிறுவனம் செய்துள்ள அத்துமீறல் மன்னிக்க முடியாதது. இதைக் கண்டித்தும், பணிகளைக் கைவிட வலியுறுத்தியும் கோவை சுல்தான்பேட்டையில் விவசாயிகள் தொடர் உண்ணாநிலை  மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பா.ம.க. முழுமையான ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

உயர் அழுத்த மின்கோபுரங்களை அமைப்பதில் தமிழக விவசாயிகளுக்கு மட்டும் திட்டமிட்டு துரோகம் இழைக்கப்படுகிறது. இத்தகைய மின்கோபுரத் திட்டங்கள் கேரளம் வழியாகவும் செயல்படுத்தப்படுகின்றன. அங்கெல்லாம் சாலையோரங்களில் பூமிக்கு அடியில் மின்சாரக் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, இந்தப் பாதைகள் சென்னை, சேலம், மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களைக் கடந்து செல்லும் போது கூட பூமிக்கு அடியில் தான் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. இதேபோல், ஒட்டுமொத்த மின்பாதைகளையும் சாலையோரத்தில் பூமிக்கு அடியில் கேபிள்களை புதைத்து செயல்படுத்த வேண்டும்; அதன் மூலம் உழவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்...

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி-யாக அபய்குமார்சிங் நியமனம்- தமிழக அரசு அறிவிப்பு...


இலவசம் கொடுத்து தமிழகத்தை அழித்து விட்டார்கள் என்று வெற்று பேச்சு பேசும் பாஜக தெலுங்கானா தேர்தலுக்கு தந்த வாக்குறுதிகள் இவை...


1) பெண்களுக்கு திருமணம் போது ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 12 gm தங்கம்.

2)பள்ளி குழந்தைகளுக்கு இலவச மிதிவண்டி. பெண்கள் மோட்டார் வண்டி வாங்க 50% கட்டணம் ஏற்பு.

3) வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3500 ரூபாய்.

4) எல்லோருக்கும் இலவச மாடு.

5) இலவச லேப்டாப்.

6) விவசாய கடன் தள்ளுபடி.

7) காசி, பூரி, ரமேஸ்வரம் போக சலுகை- கட்டணம் அரசு ஏற்பு.

https://wap.business-standard.com/article/elections/free-laptops-free-cows-among-bjp-promises-in-telangana-election-manifesto-118112900748_1.html

இனிமே கருப்பு போர்டில் ஏதாவது கிறுக்கிட்டு வந்து இலவசம் கொடுத்து ஏமாத்துறாங்க என்று சங்கிகள் யாராவது சொன்னா செவிட்டிலேயே ஒன்னு கொடுங்க...

இந்த பூமியை சொந்தம் கொண்டாட எந்த தகுதியும் மனிதனுக்கு கிடையாது...


ஒரு போதும் உங்கள் அறிவுகளை இயற்கையிடம் காட்டாதீர்கள்..

உங்கள் உணர்வுகளை காட்டுங்கள். அது உங்களை ஏற்க்கும் தாயாக..

மனிதன் ஒரு பார்வையாளன் மட்டுமே..

இந்த இயற்க்கையுடன் மகிழ்ந்து வாழ மட்டுமே அவர்களுக்கு அனுமதி..

நிலையானது என்று ஏதுமில்லை மனிதனுக்கு..

நிலையானது இயற்கை மட்டுமே...

உலகின் திகில் கிளப்பும் தீவு...



ராஸ் தீவு (Ross Island)...

அண்டார்டிக் பிரதேசத்தில் இருக்கும் ஒரு தீவு. 1841-ல் ஜேம்ஸ் ராஸ் என்ற பிரிட்டிஷ் ஊர்சுற்றி இந்த தீவைக் கண்டு பிடித்தார். அவரின் பெயரே இதற்கு சூட்டப்பட்டது.

எரிபஸ், டெரர் என இரு எரிமலைகள் இங்கு உள்ளது. ராஸ் அமைத்த கூடாரங்கள் இன்னும் இந்த பகுதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அண்டார்டிக் பகுதியில் ஆராய்ச்சியை மேற்கொள்ள அடித்தளமிட்டது இந்த தீவு தான். 1979-ல் ஒரு மிகப்பெரிய விமான விபத்து ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டவர்கள் இங்கு இறந்ததாக சொல்லப்படுகிறது.

இந்தத் தீவின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று வரை யாருமே சென்றதில்லை...

ஜாக்டோ ஜியோவுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை...


பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு  அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...

திருவடி தீட்சை என்றால் என்ன?


எட்டு (8), இரண்டு (2) எதை குறிக்கிறது?

நமது வலது கண் 8 என்றும், இடது கண் 2 ஆகவும் குறிப்பிடபடுகிறது.

வலது கண் – அ , இடது கண் – ௨
வலது கண் – சூரியன் , இடது கண் -சந்திரன்.
வலது கண் – சிவம் , இடது கண் – சக்தி
வலது கண் – சக்கரம் , இடது கண் – சங்கு

திருவடி தீட்சை என்றால் என்ன?

தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை.

தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன்.

நம் கண்மணியை கிருஷ்ண மணி என்பர். தகுந்த ஞான சற்குருவின் மூலம் நம் கிருஷ்ண மணியில் உணர்வு பெறுவதே கிருஷ்ண உணர்வு. இந்த உணர்வை பெறுவதே தீட்சை. இதை தான் சித்தர்கள் “தொடாமல் தொடுவது” , “உணர்வால் உணர வைப்பது” என்றனர்.

நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார்.

“அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு நாதர் அக்னியால் வழங்கியே ஞானஸ்தானம் இதுவே.

தீட்சை பெற்றவனே துவிசன் ஆகிறான். துவிசன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள். இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சம்ராட்சியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே.

மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.

தீட்சை பெற என்ன தகுதி வேண்டும்?

தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம். தீட்சை பெற முக்கிய தகுதி...

1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.

2 . போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விடு நீங்க வேண்டும்.

3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.
சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும்.இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு , இனி இவைகளை செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் தீட்சை பெறலாம்.

தவம் செய்வது எப்படி?

தவம் என்றால் மந்திர ஜபம் அல்ல. தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்பதோ அல்ல. தவம் என்றால் பிரணாயாமமோ அல்ல. தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல.

கண்மூடி செய்யும் எந்த செயலும் தவம் ஆகாது. கண்களை திறந்து தான் “விழி திறந்து” தான் தவம் செய்ய வேண்டும்.

இறைவன் திருவடியில்(நம் கண்ணில்- கண் மணியில் – கண்மணி ஒளியில்) மனதினை நிறுத்துவதே தவமாகும். சும்மா இரு என்பதன் அர்த்தம் இதுவே. அதாவது நம் மனதை திருவடியில் வைத்து இருப்பதே. குரு தீட்சை பெற்று நம் கண்ணில் உணர்வு பெற்று அதை நினைத்து நினைத்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும்.

இங்நனம் தவம் தொடர்ந்தால் பலவித அனுபவங்கள் நாம் பெறலாம். நமது வள்ளல் பெருமான் ஞான சரியையில் கூறியபடி நாம் இவ்வாறு தவம் செய்தால் பெறலாம் நல்ல வரமே. நம் வினைகள் எல்லாம் எரிந்து விடும். பெறலாம் மரணமிலா பெருவாழ்வே. பிறவாப்பெருநிலை. அருட்பெரும் ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும் ஒளியாகி இணையலாம். பேரின்பம் பெறலாம்...

மாதந்தோறும் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தக் கூடாது - செல்போன் ஆபரேட்டர்களுக்கு, டிராய் எச்சரிக்கை...


விவசாயிகள் கடன் ரத்து செய்யக்கோரி தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் லட்சம் விவசாயிகள்...


இன்று மேலும் பல லட்சம் தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள்..

டில்லி தினறுகிறது! மோடியே வெளியேறு எனும் கோஷம் South Block ஐ மிரட்டுகிறது...

கடைகளில் கோழி உணவுகளை வாங்கி உண்ணாதீர்கள்...


ஒரு லோடு கோழி ஏற்றினால் தொலைதூரம் சென்று லோடு இறக்கும் போது 5 to 10% கோழிகள் இறந்து விடும்.

அவ்வாறு இறந்த கெட்டுப்போன கோழிகளை மொத்தமாக எடுத்துச்சென்று மறைவான எந்தவிதமான சுகாதாரமற்ற பகுதியில் வைத்து மேல் தோலை மட்டும் அரைகுறையாக உறித்துவிட்டு தலை, கால், குடல் கழிவுகளை அகற்றாமல் அப்படியே மிஷினில் மாமிச செதில்களாக அரைத்து அணைத்து பேக்கரிகள், தியேட்டர் கேண்டீன்கள் ஆகிய இடங்களுக்கு அவர்களது தேவைக்கேற்ப சப்ளை செய்கிறார்கள்.

அவர்கள் அதை வாங்கி சிக்கன் பப்ஸ், சிக்கன் கட்லெட், சிக்கன் ரோல், என்று தயார்செய்து விற்கிறார்கள்.

எனவே இதுபோன்ற உணவுகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதையோ, நீங்களோ சாப்பிடுவதை தவிர்க்கவும்..

மனிதன்...


மனிதர்கள் மட்டுமே கேள்வியும் கேட்கிறார்கள்.. பதிலும் தருகிறார்கள்.. கேள்வியும் அர்த்தமற்றது பதிலும் அர்த்தமற்றது...

மனிதனை தவிர எதுவும் கேள்விகள் கேட்பது கிடையாது பதிலும் தருவது கிடையாது.

இப்பிரபஞ்சத்திற்க்கு நோக்கம் எதுவும் இல்லை அதை விளையாட்டு என்கிறோம்.

இப்பிரபஞ்சத்திற்க்கு நிறைவேற்றுவதற்கான எந்த குறிகோளும் இல்லை.

அது எதை நோக்கியும் செல்லவில்லை.

ஆனாலும் அது போய்க் கொண்டிருக்கிறது.

நிறையவே போய்க் கொண்டிருக்கிறது.

ஆனால் அது விளையாட்டாகத் தான் இருக்க வேண்டும்.

இது கடலின் அலைகள் போல தான் ஆரம்பம் இல்லை முடிவும் இல்லை

எல்லா அலையின் பின்னாலும் அலையிருக்கிறது எல்லா அலைகளின் முன்னாலும் ஏதோ இருக்கிறது.

ஆக கடல் முழுவதும் அலைகளாக இருக்கிறது. அந்த அலைகள் ஆதி அந்தத்திற்க்கு அப்பாற்பட்டது.

மனித மனதின் கேள்விகள் மனித மனதின் பதில்கள் என்று பெரும் குழப்பத்தை நாம் இந்த கேள்வி பதில்களால் உருவாக்கியிருக்கிறோம்.

மரத்தில் இருக்கும் இலைகள் போல, அல்லது வானத்தில் இருக்கும் மேகங்கள் போல, கடலில் இருக்கும் அலைகள் போல, கேள்வியும் பதிலும் இல்லாமல் வாழுங்கள்...

பாஜக வின் மானங்கெட்ட பொழப்பு...


இருளர் குலச் செங்கொடி...


ஆதித் தெலுங்கரான சக்கிலியர் (அருந்ததியர்) திடீரென்று ஐந்தாண்டுகளுக்கு முன் பறையர் குலத் தமிழச்சியும் உலகின் முதல் தற்கொலைப் போராளியுமான குயிலி தங்கள் சாதி என்றனர்.

பிறகு பறையர் குலத் தமிழரும் தமிழ்தேசியவாதியும் ஆன பெருஞ்சித்திரனார் ஒரு சக்கிலியர் என்று கதையளந்தனர்.

தற்போது தங்கை செங்கொடியை சொந்தம் கொண்டாடுகின்றனர்.

இது எல்லாமே 2009 க்குப் பிறகு திடீரென்று அவர்கள் கண்டு பிடித்தது ஆகும்.

சான்று கேட்டால் தருவதில்லை.

ஆனால் தங்கையின் வாழ்க்கையை 'இப்படிக்கு தோழர் செங்கொடி' என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்துத் தந்த இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் செங்கொடி (தமிழினப் பழங்குடியினரான) இருளர் என்று கூறுகிறார்.

நன்றி: 22.08.2012 ஆனந்த விகடன் இதழ்...

5g Network மனித இனத்திற்கு பாதிப்பு...


உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான நாகதாளி...


உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளிச்செடியை ஏன் பயன்படுத்த தவறினோம்?

எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் சப்பாத்தி கள்ளி பழம். கொஞ்சம் மெனகெட்டாலே போதும். இது நமக்கான உணவு மருத்துவம். செலவில்லாத சிறந்த உணவு மருந்து.

புற்றுநோய் கட்டிகள், கட்டிகள் உடலில் ஏன் உருவாகிறது? நமது இரத்தத்தில் உள்ளபல விதமான செல்கள் கனிம கரிம பொருட்கள் கலந்து உள்ளது இவைகள் தான் உடல் செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. டிபன்ஸ் மெக்கானிசம் எனப்படும் உடல் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன நமது உடலுக்குள் நுழையும் நூண்னுயிரிகளை இரத்த அணுக்கள் சண்டையிட்டு அழித்து விடுகின்றது இந்த கழிவுகள் தோலின் வழியாக வெளியேற்ற படுகின்றன. இந்த கழிவுகள் வியர்வை துவாரங்களை அடைத்து உடலில் கட்டிகளை உண்டு பன்னுகிறது.... இந்த கழிவுகள் சிறிது சிறிதாக திரண்டு பெரிதாகி சிவந்து,உடைந்து,சீழாக வெளியேறிய பின்பு புண்ணாக மாறி உடல் ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக புண் ஆறி விடுகிறது இது தான் இயற்கையான நிகழ்வு அதாவது கிருமிகளை கிருமிகளே அழித்து உடலில் இருந்து வெளியேற்றி உடலை பாதுகாக்கிறது தோலின் தன்மையை கெடுக்கும் சன்ஸ்கிரின் லோசன் மற்றும் அதிகப்படியான கிரீம்களை பயன்படுத்தும் அமெரிக்கா ஐரோப்பியா நாடுகளில் அதிகப்படியான புற்றுநோய் உருவாகிறது என்பதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ளலாம்....

நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே, மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும்  உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் B மிகவும் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.

வரண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் போது நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும்.

பழங்குடியினர் மத்தியில் இந்த சப்பாத்தி கள்ளி சிறந்த உணவாக மருந்தாக பயன்படுத்துவதை நான் உணர்ந்து இருக்கிறேன். நாங்கள் தொலை தூரமாக காடுகளில் திரியும் போது ஓடைகளில் தேங்கி இருக்கும் அசுத்தமான நீரை நன்னீராக மாற்ற சப்பாத்தி கள்ளியின் மடலில் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கலங்கிய அசுத்தமான நீருடன் கலந்து வைக்க சிறிது நேரத்தில் சுத்தமான நீர் மட்டும் கிடைக்கும் கழிவுகள் வீழ்படிவாக கீழே இருக்கும் இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலானது பெரும் ஆற்றல் பெருகிறது புத்துணர்வுடனே இருக்கும் எவ்வளவு தூரம் நடந்தாலும் சோர்வோ பசியோ எடுக்காது இது எனது அனுபவத்தில் உணர்ந்தது. இருளர் இனமக்கள் கக்குவான் நோய்க்கு இதன் பழத்தை நெருப்பில் வாட்டி குழந்தைகளுக்கு கொடுக்க பூரண குணமாவதையும் நான் அறிவேன்.

நாகதாளியின் பயன்பாடுகள்...

1.சப்பாத்தி கள்ளியின் பசையை மேல் பூச்சாக  பயன்படுத்தி வீக்கத்தை போக்கலாம்.

2.உடலில் ஏற்படும் எந்தவொரு கட்டியாக இருந்தாலும் இதன் மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைகல்லை அறைத்து  இரண்டையும் சமமாக சேர்த்து அறைத்து  கட்டிகளின் மீது பற்று போட கறைந்து விடும் அதுவும் அக்குள் கழுத்து பகுதிகளில் வரும் கட்டிகளுக்கு சிறந்த மருந்து இதுவே. ஓரிரு நாளில் கட்டி கரைந்து விடும்.

3.நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை,மலக்குடல், சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.

4. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கி விடும் இதனை சுரக்கட்டி(Enlargement of Spleen) என்பார்கள் இதனை தீர்க்க நாகதாளி பழத்தை கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்

5.ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம் இந்த பழத்தை தொடர்ந்த எடுத்துகொள்ள கண் பார்வை கூர்மையாகிறது என்றும் ஏடுகளில் உள்ளது.

6.சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கறைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது அதனால் தான் பிரேசில் போன்ற நாடுகளில் இதிலிருந்து எடுக்கப்படும் Extract உடல் குறைப்புக்கு மருந்தாக பல நூறு கோடி ரூபாய்க்கான வியாபாரம் நடைபெறுகிறது என்பதையும் உணருவோம் . சித்த மருத்துவத்தில் இதனை தீ நீராக செய்து பயன்படுத்தி வந்தால் உடல் குறையும் சர்க்கரை நோயும் கட்டுபடுகிறது என்று குறிப்புகள் உள்ளது. கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் மகோதிரம் எனப்படும் பெருவயிறு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.

உலகின் மிகச்சிறந்த இயற்கை உரம் சப்பாத்தி கள்ளி என்றால் மிகையாகாது....

தென்னை மரத்தை சுற்றி இரண்ட்டிக்கு குழி எடுத்து அதில் சப்பாத்தி கள்ளியின் மடல்களை வெட்டி பரப்பி இதன்மீது கொஞ்சம் கல்உப்பையும் அடுப்பு கரியையும் போட்டு மண் மூடி விட ஆறு மாதத்தில் தென்னை மரம் கருகருவென்று இருப்பது மட்டுமின்றி தென்னம் பிஞ்சு உதிர்வது அப்படியே மட்டுபடும் ஒரு வருடத்தில் சுமார் 300 தேங்காய் வரை காய்க்கும் தென்னையை தாக்கும் பலவிதமான நோய்கள் நெருங்கவே நெருங்காது இதுவும் அனுபவ ரீதியான உண்மை.

நிலங்களில் இதனை பயன்படுத்துவதில் உள்ள சிரமம் இதில் உள்ள கூர்மையான முட்கள் தான் அதனை போக்க எளிய வழிமுறை. வெட்டி போடபட்ட மடல்களின் மீது  எள்ளுபுண்ணாக்கை தூவ ஒரு வாரத்தில் முட்கள் இருந்த இடம் தெரியாமல் அழுகிவிடும் பிறகு அத்தனை வயல்களிலும் பயன்படுத்தி மண்ணை வளமாக்கி கொள்ளலாம்.

ஆடு மாடு மேய்க்கும் போது கால்களில் இந்த முள் ஆழமான சென்று விடும் அப்பொழுது எள்ளை அரைத்து முள் உள்ள இடத்தில் கட்ட ஒரிரு நாளில் தூள் தூளாக வந்து விடும்.

தென்அமெரிக்க பழங்குடியினர் இதனை உணவு பொருளாகவே பயன்படுத்தி வருகின்றனர் Tunas என்ற பெயரில் இதன் பழங்கள் விற்க்கபடுகிறதாம். எங்கோ படித்தது.

இவ்வளவு சிறப்பான சப்பாத்தி கள்ளி பழத்தை நாமும் பயன்படுத்த முயல்வோம் ஏனெனில் இன்று புற்றுநோய் ஓர் பயமுறுத்தும் வகையில் உருவெடுத்து வருகிறது. இந்த பழத்தில் இருக்கும் Flavonoid, Polyphenol போன்ற வேதி பொருட்களால் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் பண்பு உள்ளது என மேலை நாட்டு ஆய்வுகள் கூறுகிறது இந்த பழம் Antioxidant ஆக செயல்பட்டு உடல் செல்களுக்கு அதிகபடியான ஆக்சிஜனை கொண்டு செல்கிறது...

நமக்கு தெரியும் இரத்த ஒட்டம் தடைபெற்ற இடங்களில் தான் புற்றுநோய் செல்கள் உருவாகிறது உடலில் உள்ள செல்களுக்கு அதிகபடியான ஆச்சிஜன் தேவை புற்றுசெல்களுக்கு சிறிதளவு ஆச்சிஜனே போதும். அதனால் தான் இவைகள் பல்கி பெருகி வருகிறது இந்த பழத்தில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் செல்களுக்கு ஆக்சிஜனை  அதிகரித்து புற்றுசெல்களை அழிக்க உதவி புரிகிறது....

எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் சப்பாத்தி கள்ளி பழம். கொஞ்சம் மெனகெட்டாலே போதும். இது நமக்கான உணவு மருத்துவம். செலவில்லாத சிறந்த உணவு மருந்து...

காங்கிரஸ் ப. சிதம்பரம் எனும் காப்பரேட் கைகூலி...


ஆத்மா...


இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஆத்மா என்பது உண்டு, அப்படிப்பட்ட ஆத்மா பிறக்கும் இடம், காலம் அனைத்தும் பூர்வ புன்னியத்தை அடிப்படையாக கொண்டது.

கடவுள் பாதி மிருகம் பாதி என்பவன் தான் மனிதன், இதில் கடவுள் என்பது ஆத்மா, மிருகம் என்பது மனித மனம்.

நாம் ஒரு காரியத்தை செய்யும் போது கடவுள் ஆகிய ஆத்மா நமக்கு சரியான திசையை காண்பிக்கும். ஆனால் மனித மனம் ஆன மிருகம் நம்மை தவறான வழியில் நம்மை இழுத்துச் செல்லும்.

அப்படி இழுத்துச் செல்லும் மனம் என்ற மிருகத்தை நம் ஆத்ம பலத்தால் கட்டுப்படுத்தி சரியான திசையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

மனம் என்ற மிருகத்தை எப்படி ஆத்மாவை வைத்து கட்டுப்படுத்த முடியும்? ஆத்ம பலத்தை எப்படி பெறுவது?

ஆத்ம பலம் பெற குருவின் துணை அல்லது அருள் வேண்டும்.

ஞானம் இரண்டு வகைப்படும் ஒன்று தெய்வீக ஞானம் மற்றொன்று பிரம்ம ஞானம் அல்லது ஆத்ம ஞானம் என்று கூறலாம்.

தெய்வீக ஞானம் நமது கர்ம வினையின் அடிப்படையில் கிடைக்கும் அதாவது நமது பூர்வ புண்ணிய கா்மா சரியாக இருந்தால் தெய்வீக ஞானம் இயற்கையிலேயே கிடைத்து விடும். அல்லது நாம் இப்பிறவியில் செய்யும் நல்லவை, தீயவையைக் கொண்டு உண்டாகும்.

தெய்வீக ஞானத்தின் அடுத்த நிலை தான் ஆத்மா ஞானம் அல்லது பிரம்ம ஞானம், ஆத்ம ஞானம் அல்லது பிரம்ம ஞானம் பெற கட்டாயம் குருவின் அருள் அல்லது துணை தேவை. குருவருள் இன்றி நாம் பிரம்ம ஞானத்தின் வாசலில் தான் நிற்க வேண்டும்.

குருவருள் எப்படி கிடைக்கும்? நாம் குருவை தேட வேண்டாம், எப்படி நாம் கடவுளை (பரபிரம்மத்தை) தேடுகின்றோமோ அதே போல கடவுளும் தன்னுடைய குழந்தையை மீட்டு தன்னிடம் அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறது.

அப்படி அழைத்துச் செல்ல பிரம்மம் நேராக வருவதில்லை தனக்கு பதிலாக குருவை அனுப்பி வைகின்றார்கள்.

நமது செயலும், நமது என்னமும், நமது பூர்வ புண்ணிய கா்மாவும் சரியாக இருந்தால் குரு நம்மை தேடி வருகின்றனர்.

அப்படி வந்த அல்லது கிடைத்த குருவை சிறிதும் ஐயம் இன்றி ஆத்மார்த்தமாக நாம் ஏற்றுக் கொண்டு அவர் வழி நடந்தால் பிரம்ம ஞானம் அல்லது ஆத்ம ஞானத்தின் கதவுகள் திறக்க படும்.

அப்படி திறக்கப்பட்ட பின்பு நம் ஆத்மவானது பரமாத்மாவை (நமது உண்மையான பெற்றோர்களை) சென்று அடைகிறது.

சரியான குரு இவர் தானா என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும், என்ற கேள்வி எழுவது சகஜம் தான்..

நீங்கள் அதைப் பற்றிய கவலை கொள்ள வேண்டியது இல்லை பிரம்மம் (நமது உண்மையான பெற்றோர்கள்) பார்த்து கொள்ளும்.

நாம் வணங்கும் கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து குருவின் வழி சென்றால் நிச்சயம் இறவா நிலை மீண்டும் பிறவா நிலையை அடைவோம்.

தக்க சமயத்தில் உங்களுக்கு கொடுக்க வேண்டியதை உங்கள் குருவானவர் தருவார் அதை விட்டு விட்டு நம் உடலை காயகல்பம் ஆக்க வேண்டும், அப்படி செய்தால் தான் பிரம்மத்தை அடைய முடியும் என்று நினைக்க வேண்டாம்.

எது எப்போது எப்படி எங்கே நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்...

இரண்டில் எது உண்மை ? வெற்று அறிவிப்பா?


மனிதனும்.. இயற்கையும்...


ஒரு ஐந்து  நிமிடம் உங்களை சுற்றியுள்ள மனிதர்களை பாருங்கள் எந்திரம் போல  இருப்பார்கள்...

அடுத்த கணமே உங்களை சுற்றியுள்ள இயற்கையை எதாவது ஓன்றை பாருங்கள் அது மகிழ்ச்சியில் ஆழ்ந்து இருக்கும்...

ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரவுக் கிளிகள் கண்டுபிடிப்பு...


100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அவுஸ்திரேலிய காடுகளில் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பெருகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகின் பல வகை உயிரினங்களும் அழிந்து வருகின்றன.

அவ்வகையில் 100 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அழிந்து விட்டதாகவே கூறப்பட்டது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய காடுகளில் வன விலங்குகள் மற்றும் பறவை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஜோன் யங், இந்த கிளிகள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்....

அவுசுத்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள யங், 15 ஆண்டுகளாக இரவுக் கிளிகள் பற்றிய தேடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக 2007ஆம் ஆண்டு இரவுக் கிளிகளின் குரல்கள் காடுகளில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பதிவு கருவிகளில் பதிவாகியிருந்தன.

இதையடுத்து, புதிய நம்பிக்கையுடன் கிளிகளைப் படம் பிடிக்கும் முயற்சியில் யங் ஈடுபட்டார். அவரின் அயராத உழைப்பின் பயனாக, அவுசுத்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒளிப்பதிவு கருவிகளில் அரிய வகை கிளிகளின் படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்...

மனிதர்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது...


உங்களை ஓரு பறவையாக மட்டுமே  நினைத்து கொள்ளுங்கள்...

மனிதர்கள் செய்யும் ஓவ்வொரு  செயல்களை மட்டுமே கவனியுங்கள்..

உங்களுக்கு சிரிப்புத் தான் வரும்...

பெட்ரோல் விலை மேலும் குறைய வாய்ப்பு...


சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் சூழ்நிலையில், இந்திய ரூபாய் மதிப்பும் உயர்ந்து வருகிறது. இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. எனவே வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது...

காலம்...


கேள்வியும் மனிதன் கேட்கிறான்
பதிலும் மனிதன் சொல்கிறான்..

விடையை மட்டுமே.. 
இயற்கை உணர்த்தி விட்டு செல்கிறது... 

நீட் தேர்வின் சதிகள்...


கடந்த ஆண்டு 1,14,602 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் தகுதி பெற்றவர்கள் 39.6% அதாவது 45,336 மாணவர்கள். அரசாங்க பள்ளிகளில் படித்து தகுதி பெற்ற மாணவர்கள் 1.12% அதாவது 1,337 மாணவர்கள் . இந்த 1,337 மாணவர்களில் 2 மாணவர்களுக்கு மட்டுமே அரசாங்க மருத்துவ கல்லூரிகளில் MBBS சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் 2,447 Mbbs சீட்டுகள் உள்ளன . அரசாங்க பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் 0.16 % .  2016 நீட் தேர்வு இல்லாத பொழுது 30 அரசாங்க பள்ளி மாணவர்கள்  அரசு மருத்துவ கல்லூரிகள் (இட ஒதுக்கீடு இன்றி பொதுப்பிரிவில் +2 மதிப்பெண் அடிப்படையில் ) சேர்ந்துள்ளனர்.

(தகுதி பெற்றவர்வள் அனைவருக்கும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு அமைந்துவிடாது என்பது இந்த தகுதித் தேர்வின் கூடுதல் சிறப்பு).

ST பட்டியலில் இருக்கும் ஒரு மாணவர் கூட இந்த ஆண்டு மருத்துவத்துறையில் நீட் தேர்வினால் சேர இயலவில்லை.

இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் பத்து இருபது வருடங்கள் அல்ல கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒப்பீடு இது.. 

கடந்த ஆண்டு அரசாங்க பள்ளி / அரசாங்க உதவி பெறும் பள்ளிகளில் படித்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை 9,154 . இந்த ஆண்டு 3,700..

வாழ்க மாஃபாக்கள்.. வாழ்க சீதா ராமன்கள்.. வாழ்க கல்யாணிகள்.. வாழ்க நீட் தேர்வை ஆதரித்த நீதிபதிகள்.. வாழ்க நீட் தேர்வை ஆதரித்த வழக்கறிஞர்கள்... உங்கள் அறப்போர் அதாவது ஆரியபோர் நிச்சயம் வீழ்த்தப்படும் . சமூகநீதி காக்கப்படும்..

ஆதாரம் மறுமொழியில்...

கஜா புயலுக்கு கேரளா 10 கோடி நிதி அளித்துள்ளது...


தமிழர்களுக்கு ஜப்பான் இழைத்த பெரும் துரோகம்...


இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது.

இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது.

தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறியதோடு சிங்கள அரசுக்குச் சாதகமான இராசதந்திர நகர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம் ஜப்பான் முன்னெடுத்தது.

மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான் நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா, சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டது. சியாம் இப்போது தாய்லாந்து என்று அழைக்கப்படுகிறது.

பர்மாவைத் தாக்கிய பிறகு தனது படையினரையும் ஆயுத தளபாடங்களையும் எடுத்துச் செல்ல ஒரு புகையிரதப் பாதை அமைக்க தொடங்கியது. தாய்லாந்து தலைநகர் பாங்கொக், பர்மா தலைநகர் இரங்கூன் ஆகியவற்றை இணைக்கும் 252 மையில் நிளமான இருப்புப் பாதையை அமைக்க ஜப்பான் திட்டம் தீட்டியது.

அடர் காடுகள், கருங்கல், மலைகள், பெரிய நதிகள் ஆகியவற்றைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. பாதை போடும் பணிக்குப் போர்க் கைதிகளைப் பயன்படுத்த ஜப்பான் படையினர் திட்டமிட்டனர்.

அத்தோடு மலாயா சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களையும் வலுக்கட்டாயமாகக் ஈடுபடுத்தவும் திட்டமிட்டனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தமிழ் ஆண்களும் இளைஞர்களும் சரியான உணவு, மருந்து, ஒய்வு இல்லாமல் மரணமடைந்தனர்.

ஓரு சிலரை விட எல்லோரும் கொல்லப்பட்டனர் என்பதால் இந்த புகையிரதப் பாதை மரண இரயில்வே என்று அழைக்கப்படுகிறது.

சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரான இந்தச் செயல் ஜப்பான் அரசு இழைத்த மிகப் பெரிய போர்க் குற்றமாக போர் முடிந்த பிறகு அதன் மீது சுமத்தப்பட்டது.

இந்த இரும்புப் பாதையைப் போடுவதற்கு ஜப்பான் இராணுவம் 16,000 போர்க் கைதிகளையும் கூடுதலான எண்ணிக்கையில் பொது மக்களையும் பயன்படுத்தியது.

மலாயாத் தோட்டப் புறங்களில் இருந்து கொண்டுச் செல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 80,000 தொடக்கம் 100,000 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

பிரிட்டன், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சோந்த போர்க் கைதிகள் மேற்கூறிய 16,000 பேரில் அடங்குவர்.

மலேரியா, கொலரா, பெரிபெரி, போசாக்கின்மை போன்றவை உயிரிழப்பை ஏற்படுத்தின. வேலை செய்ய முடியாதவர்கள் சுடப்பட்டனர். குற்றவாளிகள் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

மலாயா சிங்கப்பூர் தமிழர் வரலாற்றில் இது ஒரு கண்ணீர் அத்தியாயம்.

சுபாஸ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்த பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த இந்தியச் சிப்பாய்கள் பர்மா – சயாம் இரயில்வே பணிக்கு கொண்டு செல்லப்படவில்லை.

இந்த ரயில் பாதை தொடர்பான திரைப்படங்களும் ஆய்வு நூல்களும் இன்றுவரை வெளிவந்தபடி உள்ளன.

குவாய் நதிக்கு மேலான பாலம் (Bridge on the River Kwai) என்ற திரைப்படம் பிரசித்தமானது. இதனுடைய படப்பிடிப்பு இலங்கையின் மலைப் பிரதேசத்தில் நடத்தப்பட்டது. காலஞ்சென்ற பிரிட்டிஷ் நடிகர் சேர் அலெக் கினெஸ் (Sri Alec Guinness) பிரதம பாகத்தில் நடித்தார்.

அவுஸ்திரேலியப் போர் கைதிகளின் துன்பியல் வரலாறு பற்றி ஊடகவியலாளர் கமரன் போர்ப்ஸ் (Cameron Forbes) நரகநெருப்பு (Hellfire) என்ற தலைப்பில் 559 பக்க ஆய்வு நூலை எழுதினார். ஒரு அத்தியாயத்தில் பின்வரும் செய்தி கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட சிறிய கப்பலில் ஓரு சிலரை ஜப்பான் படை அதிகாரிகள் மிக நல்லமுறையில் கவனித்தனர்.

சிங்கப்பூரில் ஜப்பானிடம் சரணடைந்த பிரிட்டிஷ் படைக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் ஆர்தர் பேர்சிவலை (Gen Arthur Percival) மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய தளபதி ஜெனரல் தோமோயுக்கி யமாஷிற்றா (Gen Tomoyuki Yamashita) பெரும் மரியாதையுடன் நடத்தினார்.

1,700 கைதிகள் நெருக்கமாக அடையப்பட்டனர். நிற்பதற்கு மாத்திரம் இடம் இருந்தது. வேண்டுமென்றே கப்பல் 54மணி நேரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கைதிகள் ஒருவருக்குமேல் ஒருவர் படுத்து உறங்கினார்கள். சிலர் கப்பலில் இறந்தனர். உடல்கள் கடலில் வீசப்பட்டன. பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இறந்தனர்.

போர் முடிந்து ஜப்பான் படைகள் சரண்புகுந்த பிறகு அவுஸ்திரேலியப் படைகள் அவர்களுக்குச் சொல்லொணாத் துன்பத்தைக் கொடுத்தனர். நீதி விசாரணை என்ற பெயரில் நாளொன்றுக்கு சராசரி ஏழு ஜப்பான் படையாட்கள் தூக்கிலடபட்டனர். விசாரணை இல்லாமல் பலர் சுட்டும், வெட்டியும் கொல்லப்பட்டனர்.

வெறி அடங்கியதும் நட்புறவுகள் ஆரம்பித்தன. சில அவுஸ்திரேலியப் போர் வீரர்கள் ஜப்பான் பெண்களைத் திருமணம் செய்தனர். இன்னும் சிலர் ஜப்பான் சென்று பழைய படையினரோடு நற்புறவு பூண்டனர். இந்த நடவடிக்கைகள் வெள்ளை அவுஸ்திரேலியா நிறவெறிக் கொள்கையை உடைக்க உதவின.

இன்று ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் வர்த்தகப் பங்காளிகளாகி விட்டனர். மன்னிப்போம் மறப்போம் என்ற கட்டம் தொடங்கிவிட்டது.

ஆனால் ஈழத்தமிழர்களால் ஜப்பான் ஆடிய கபட நாடகத்தை மன்னிக்க முடியவில்லை.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக உலகத் தமிழர்களின் குரலாக ஒன்றிணைவோம்...

நகரமயமாக்கல் Vs மக்கள்...


பிறப்பின் இரகசியம்...


மனிதன்.. உயிர் இருந்தால் தான்? இல்லையேல் பிணம்..

மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம்.. இல்லையேல் நாம் சவம்..

உயிர் இருந்தால் தான் வாழ்வு.. உயிர் உடலைவிட்டு போய்விட்டால்? சாவு தான்..

உடலும் உயிரும் சேர்ந்திருந்தாலே பிரயோஜனம்.. பிரிந்திருந்தால் இயக்கம் இல்லை.. உடலோடு உயிர் இருந்தாலே இயக்கம்..

உடலைவிட உயிரே முக்கியமானது..

உயிர் உடலுடன் இருக்கும் போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன்.

இப்படி தலை கால் தெரியாமல் ஆடுபவனெல்லாம் அடிமுட்டாள்களே..

ஒருவன் எப்படி பிறக்கிறான்?

பிறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறான்?

இதுதான் தேவரகசியம். பிறப்பின் இரகசியம்.

ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறந்து விடுமா? நடக்காது..

இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்களே?

விஞ்ஞான வளர்ச்சி, டெஸ்ட்டியுப் குழந்தை உருவானது. ஆயிரம் பல்லாயிரம் முயற்சி செய்தால் ஒன்று உருவாகிறது. எல்லாம் ஜனிப்பதில்லை. எல்லோராலும் முடியாது..

விஞ்ஞானம் ஒரு வரையரைக்கு உட்பட்டதே.. இன்றைய உலக வளர்ச்சி விஞ்ஞானத்தின் பரிமாணம் தான் மறுக்க முடியாது..

பஞ்சபூதங்களை அப்படி இப்படி, எதையாவது செய்து ஏதோதோ கண்டு பிடித்து சுகபோகமாக வாழ வழி கண்டனர் பலர்..

எல்லோரும் இந்த பூமியில் உள்ளவர்கள் தானே.. இந்த பூமியில் தானே பிறந்தார்கள், இந்த பூமியில் தானே, எப்படியெப்படியோ வாழ்ந்து மடிந்தார்கள்.

இந்த மனிதர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? பூமியில் கொஞ்சகாலம் வாழ்ந்தார்கள்.. எல்லோரும் – பெரும்பாலானவர்கள் இறந்து போயினர். இறந்து அவர்கள் போனது எங்கே?

பிறந்தவர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? இறந்தவர்கள் எங்கு போனார்கள்? பிறந்தபோது வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே?

அப்டியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையே? பின் எதற்கு? உயிர்கொண்டு உடல் வந்தாலே பிரயோஜனம். உயிர் இன்றி உடல் இருந்தால் மண் தான்..

உயிர் தான் பிரதானம். உயிர் தான் பிறக்கிறது உடல் கொண்டு. உடலை விட்டு உயிர் பிரிவதே மரணம். பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான்..

நம்மை ஈன்ற தாய் நமக்கு கொடுத்தது உடல் மட்டுமே.. அன்னையின் உடலில் உடலிலிருந்து மாதந்தோறும் வெளியேறும் உதிரமே, அன்னை தந்தையின் சுரோணித சுக்கில சேர்க்கையால் உருண்டு திரண்டு கருவாகி பிண்டம் உருவாகிறது..

தீட்டு என்கிறோமே – நம் உடலே தீட்டு தான். நம் தாயின் தீட்டு தான் நாம். மனிதன் மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளும் இப்படியே..

ஆணின் உயிர் சக்தி சுக்கிலம், பெண்ணின் உயிர் சக்தி சுரோணிதம் இரண்டும் சேர்ந்தால் தான் புதிய உயிர் தோன்றுவதற்கு அஸ்திவாரம்..

ஆணும் பெண்ணும், சிவமும் சக்தியும், பாஸிடிவ் நெகடிவ் சேர்ந்தாலே-இணைந்தாலே சக்தி பிறக்கும்-இயக்கம் ஆரம்பமாகும்..

தாயின் கருவிலே வயிற்றிலே உருவாகிறது பிண்டம், மூன்று மாதத்திற்கு பிறகு தான் உயிர் வருகிறது. இதுவே அற்புதம் கருவுக்கு உயிர் எப்படி வந்தது?

இங்கே தான் ஆரம்பிக்கிறது நமது மெய்ஞ்ஞானம்..

தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல்தான் உருவாகிறது. உயிர் எல்லாம் வல்ல இறைவன் அருளால் வந்து சேர்க்கிறது.

இன்னாருக்கு இன்னார் வந்து பிறக்க வேண்டும் என்ற நியதி – விதி – கணக்கு எல்லாம் வல்லவன் வகுத்து வைத்தது. அவன் அருள் ஆக்ஞைபடியே உயிர் தாய் கருவிலே வருகிறது..

இதுவே தேவரகசியம். எப்படி வருகிறது? யாரும் இதுவரை அறிந்திராத ஒன்று..

இந்த காலத்தில் வருகிறது - வந்தது என்று அறியலாமே தவிர எப்படி வந்தது என அறிவார் இல்லை..

உயிர் என்றால் என்ன? உயிர் எங்கிருந்தது? எப்படி உடலினுள் பிரவேசித்தது? உடலில் எங்கு இருக்கிறது? எந்த வடிவில் தன்மையில் இருக்கின்றது? இதையெல்லாம் அறிந்தவனே ஞானி. அவனே சித்தன்..

ஒரு சிசு தாயின் கருவிலே 10 மாதம் வளர்ந்து பூரணமாகிறது. ஒரு மாதம் என்பது 27 நாட்களே. 27 நட்சத்திரங்களே 1 மாதம். 10 மாதம் என்றால் 270 நாட்களே.

பிரசவ வலியே சிசுவின் பிரவேசத்திற்கு அறிகுறி.. கன்னிக்குடத்திலே – குளத்திலே மிதந்து கொண்டு, ஸ்டிரா மூலம் குளிர்பானம் அருந்துவது போல, தொப்புள் கொடி மூலம் வேண்டிய உணவை தாயிடமிருந்து உறிஞ்சும் சிசு..

படைக்கும் பரமாத்மா உயிர்களை படைக்கும் ஆற்றல் இருக்கிறதே, அப்பப்பா அதிசயம். அற்புதம். எண்ணிப் பார்க்க இயலாத ஒப்பற்ற அதி உன்னத செயலாகும்..

படைத்த பரமன் காக்க மாட்டானா? இறைவன் தான் நம்மை காப்பாற்றுகிறான். தாயின் கருவிலிருந்து எப்போதும் துணையாக இருந்து காப்பவன் இறைவன் மட்டுமே..

கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் படியளப்பவன் காப்பவன் இறைவன் ஒருவனே..

நம்மை படைத்து காப்பவன் நம்மிடமிருந்து, நான் யார்? ஏன் பிறந்தேன்? எப்படி பிறந்தேன்? இது போன்ற எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமறியா குழந்தையாக்கி உலகில் விட்டு விடுகிறான். என்னே அவனின் திருவிளையாடல்..

பிறப்பிக்க வைத்த அந்த இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிப்படுத்திக் காட்டு கின்றான்..

ஆனால் அறிவோர் உணர்வோர் வெகு சிலரே. எல்லாம் வல்ல அந்த இறைவனே கருணையே உருவானவன். அருங்கடல். எல்லா உயிர்களும் தன்னை அடைய அருள்மழை பொழிகிறான். மனிதனாக பிறக்கும் அனைவருக்கும் இறைவன் அருளும் அரிய சந்தர்ப்பம் இது..

மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கு ஏற்ப வாழ்வை முடித்தும் வைக்கிறான்..

அதாவது உடலை அழித்து அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்குக்கேற்ற நிலையை தந்தருள்கிறார்..

எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே..
அவரே படைக்கிறார் அப்போது அவர் பிரம்மா..

அவரே காக்கிறார் அப்போது அவர் விஷ்ணு..

அவரே மறைக்கிறார் அப்போது அவர் மகேஸ்வரன்..

அவரே அருள்கிறார் அப்போது அவர் சதாசிவம்..

அவரே அழிக்கிறார் அப்போது அவரே ருத்திரன்..

ஆக ஏக இறைவனே எல்லாம் புரிகிறார்..

எல்லாமே அவன் செயலே..

அவனின்றி ஓர் அணுவும் அசையாது...

பழங்குடினர்...


இருப்பு நிலை...


உண்மையை அறிய எல்லாப் பொய்மைகளையும் மாயைகளையும் நீங்கள் விட்டு விட வேண்டும்.

அந்தப் பொய்மைகளில் மிகப் பெரியது " நான் " என்ற அகங்காரம் தான்.

கடவுளை நம்புவதற்கு அவரை அறிய வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் கடவுளை அறிந்த பிறகு நம்புவதற்கு ஒன்றும் இல்லை.

உங்களுடைய நான் என்ற மறைவே கடவுளின் உதயமாகும்.

கடவுள் என்பது...

வாழ்வு
அன்பு
ஒளி
பேரியக்க பிரபஞ்ச அனுபவம்
உங்களது உள் உணர்வு
உங்கள் உள்ளே மலரும் நறுமணம்

கடவுள் என்ற மலரை நீங்கள் பார்க்க முடியாது.

அதன் நறுமணத்தை நீங்கள் நுகரலாம்.

எல்லாமே தெய்வீகம் தான்..

இந்த
மலர்கள்
பறவைகள்
பாறைகள்
ஆறுகள்
மரங்கள்

இவைகள் யாவும் கடவுட் தன்மையுடன் மிளிர்கின்றன.

நீங்கள் உண்மையை அறிந்து கொள்ளுவதை நம்பிக்கை தடுக்கிறது.

பொய்யான நம்பிக்கைகளால் மக்கள் பிளவு பட்டு நிற்கிறார்கள்.

நீங்கள் யார் என்றே உங்களுக்குத் தெரியாத போது...

கடவுள் யார் என்று எப்படி உங்களுக்குத் தெரிய போகிறது..

கடவுள் உங்களுக்கு மிக அருகில்..

இதயத்தின் வழியாகவும்..

மூச்சின் வழியாகவும் தன்னை உணர்த்திக் கொண்டிருக்கிறார்..

உங்கள் நம்பிக்கைகள் அனைத்தும் உங்கள் பயத்தில் இருந்து உருவானவைகள் தான்.

அவைகள் உங்கள்
அன்பிலிருந்தோ..

உண்மையை அறிந்ததிலிருந்தோ..

சொந்த அனுபவத்தில் இருந்தோ..

உண்டானதில்லை...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


இதோ, என் வேலைக்காரன் ஞானமாய் நடப்பான்; அவர் எழுப்பப்படுவார், உயர்த்தப்படுவார், மிக உயர்ந்தவர். அவரைப் பார்த்ததில் பலர் இருந்தனர் -அவருடைய தோற்றம் எந்த மனிதனுக்கும் அப்பால் சிதைந்துபோயிருந்தது, அவருடைய சாயல் மனுஷரின் சாயலுக்கு அப்பால் விழுந்தது; அவர் அநேகம் ஜாதிகளை தெளிப்பார்.  (ஏசாயா 52:13-15)

சீனாவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட ஒரு 'மாபெரும்' புராதன புதைகுழிகளை கண்டுபிடித்து அதிர்ச்சியூட்டிள்ளனர்.

தென்கிழக்கு சீனாவில் ஷாண்டோங் மாகாணத்தில் ஒரு அகழ்வாராய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள், 3.9 மீட்டர் (12 அடி 9.543 அங்குலம்) உயரத்திலும், 1 மீட்டர் (3 அடி, 11.244 ) அகலத்திலும் உள்ளது.

இவைகள் இராட்சத மனிதர்களின் எலும்புக்கூட்டை அடிப்படையாகக் கொண்டது" என்று சீனாவின் ஷாண்டோங் பல்கலைக்கழகத்தின் வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பள்ளியின் தலைவரான ஃபாங் ஹுய். சீனாவின் அரசு செய்தி நிறுவனமான ஸினுவாவாவிற்கு விளக்கினார்.

கண்டறியப்பட்ட எலும்பு சிதலங்களுக்கு சொந்தக்காரர் உயிருடன் இருந்திருந்தால், அவரது உயரம் கண்டிப்பாக நான்கு மீட்டரை தாண்டிவிடும் என்கின்றனர். இன்றைய சூழலில், 2015 ஆம் ஆண்டில், இப்பகுதியில் 18 வயதான ஆண்களின் சராசரி உயரம் 1.753 மீட்டர் (5 அடி, 9 அங்குலம்). அதே 2015 ஆம் ஆண்டில் தேசிய சராசரி 1.72 மீட்டர் (5 அடி, 8 அங்குலமே ஆகும்.

5,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதனின் சராசரியான உயரம்  எவ்வளவு என்று உறுதியாக தெரியவில்லை என்றாலும், ஐரோப்பிய காலத்தில் ஆண்கள் 1.65 மீட்டர் (5 அடி, 5 அங்குலம்) மட்டுமே இருப்பதாக கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு முதல் சீனாவின் ஜாங்கான் நகரில் உள்ள ஜியாஜியா கிராமத்தில் அகழ்வாராய்வு நடந்து வருகிறது. இதுவரை 104 வீடுகள், 205 கல்லறைகள் மற்றும் 20 பலிபீடங்களைக் கொண்ட இடிபாடுகள் அகழாய்வு செய்யப்பட்டன.

இந்த ராட்சதர்களின் விகிதாச்சாரத்திற்கு இன்னுமொரு துப்பு. அவர்களுடைய பண்டைய சூழலில் உள்ளது. மிக உயர்ந்த நபர்களில் மிக உயர்ந்தவர்கள், உயர்ந்த நிலையின் முக்கிய நபர்களாக இருக்கலாம், அவர்களுக்கு நல்ல உணவு மற்றும் வசதியான வாழ்வுக்கான சிறந்த வசதிகள் செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

ஜியாஜியாவில் வாழ்ந்து வந்தவர்கள்.  ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திட்டமிட்ட வசதியான அறைகள், மற்றும் தனித்தனியான படுக்கை அறைகள் மற்றும் சமையலறைகள் போன்றவற்றில் அமைத்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

மற்றும் எஞ்சியுள்ள கட்டிட அடித்தளங்களின் கூடுதல் தொல்பொருள் ஆய்வில், பன்றி எலும்புகளையும், வண்ணமயமான மட்பாண்டம் மற்றும் ஜேட் பொருள்கள் ஆகியவற்றோடு சேர்த்து கண்டுபிடித்தனர்.

எலும்புக்கூடுகள் மற்றும் கலாச்சாரக் கலைப்பொருட்கள் சில உடல் ரீதியான சேதங்களின் அடையாளங்களைக் கொண்டுள்ளன. இது சில வகையான உள்நாட்டு அதிகாரப் போராட்டத்தில் ஏற்பட்ட அரசியல் உந்துதலாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

இந்த ஆரம்ப கண்டுபிடிப்புகள் இப்போது பூர்வாங்கமாகவும் பிற விஞ்ஞானிகளால் மறுபடியும் மறுபரிசீலனை செய்யப்படவில்லை, ஆனால் இந்த பண்டைய இராட்சத மக்கள் பற்றிய கண்டுபிடிப்பு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதுவரை, ஜியாஜியாவின் தளத்தின் 2,000 சதுர மீட்டர் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது - ஒட்டுமொத்த சதுர கிலோமீட்டரில் ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை மட்டுமே தோண்டியெடுக்கப்பட்டது மற்றும் விசாரணை செய்யப்பட்டது.

இந்த ஜியோஜியாவின் தொடர்ச்சியான இரகசியங்களை யாருக்கும் தெரியப்படுத்த அரசு முயற்ச்சிக்கவில்லை, எனினும் பலரும் இதை பற்றி அறிந்திருக்கவில்லை, ஆனால் இந்த பழங்கால ராட்சதர்கள் யார் என்பதை அறியும் ஆர்வம் அழகாக வளர்ந்துள்ளது, என்பதை விளக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்று. ஃபாங் ஹுய் கூறியுள்ளார்.

இறுதியாக "கடந்த காலத்தின், கதையொன்று இங்கு நினைவுபடுத்த வேண்டும். நீண்ட காலம் முன்பு, பூதர்கள் பூமியைத் தொடர்ந்தனர். அவர்கள் பூமியின் தோட்டக்காரர்களாக இருந்தனர், இந்த கிரகத்தில் உயிரின் வளர்ச்சியை மேற்பார்வையிடுவதற்கு இங்கு வந்தனர். ஆனால் பூதங்களின் இந்த இனம் வாழ்வதற்காக பூமி செய்யப்படவில்லை. சிலர் சொல்வார்கள், சந்தேகம் ஆரோக்கியமானது என்று, எனவே நான் அதை மதிக்கிறேன்...

கணவு உலகில் வாழாதே...


உன்னை நீ முதலில் மாற்று அதுவே சிறந்த கருத்தியல்.

உன் உன்மை தன்மையை வெளியே கொண்டு வா அதுவே சிறந்த பாதை.

உன் அன்பின் அதிர்வை உன்னிடத்தில் நிரப்பு அதுவே சிறந்த வெளிச்சம்.

உன் பாதையை நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உன் பாதையில் நீதான் பயணிக்க வேண்டும்.

உனது இருட்டு பாதையில் நீதான் ஒளியை ஏற்ற வேண்டும்.

உன் வாழ்க்கையை நீதான் வாழ வேண்டும்.

வாழும் வாழ்க்கையை மகிழ்ந்து வாழ் இந்த நிகழ்காலத்தில்.

இந்த இயற்கை முழுவதும் உன்னை மெய்சிலிர்க்க வைக்கும்.

பிறகு உனது சந்ததியினர் முழுவதும் உனது பாதையில் வருவார்கள்.

நீ மகிழ்ந்து இருந்தால் உன்னை சுற்றிலும் மகிழ்ந்து இருப்பதை உணர்வாய்...

தொடரும்...

மேசன்களில் மறைக்கப்பட்ட கை அடையாளம்...


எனக்கு பிடித்த பாடல்...


யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கில்லை
என் வழியில் நீ வந்தாய்
நானும் எனக்கில்லை
கண்ணீரில் கருவானேன்
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிரானேன்
நீயாக நான் ஆனேன்...