கடந்த ஆண்டு 1,14,602 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் தகுதி பெற்றவர்கள் 39.6% அதாவது 45,336 மாணவர்கள். அரசாங்க பள்ளிகளில் படித்து தகுதி பெற்ற மாணவர்கள் 1.12% அதாவது 1,337 மாணவர்கள் . இந்த 1,337 மாணவர்களில் 2 மாணவர்களுக்கு மட்டுமே அரசாங்க மருத்துவ கல்லூரிகளில் MBBS சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் 2,447 Mbbs சீட்டுகள் உள்ளன . அரசாங்க பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் 0.16 % . 2016 நீட் தேர்வு இல்லாத பொழுது 30 அரசாங்க பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகள் (இட ஒதுக்கீடு இன்றி பொதுப்பிரிவில் +2 மதிப்பெண் அடிப்படையில் ) சேர்ந்துள்ளனர்.
(தகுதி பெற்றவர்வள் அனைவருக்கும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு அமைந்துவிடாது என்பது இந்த தகுதித் தேர்வின் கூடுதல் சிறப்பு).
ST பட்டியலில் இருக்கும் ஒரு மாணவர் கூட இந்த ஆண்டு மருத்துவத்துறையில் நீட் தேர்வினால் சேர இயலவில்லை.
இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் பத்து இருபது வருடங்கள் அல்ல கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒப்பீடு இது..
கடந்த ஆண்டு அரசாங்க பள்ளி / அரசாங்க உதவி பெறும் பள்ளிகளில் படித்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை 9,154 . இந்த ஆண்டு 3,700..
வாழ்க மாஃபாக்கள்.. வாழ்க சீதா ராமன்கள்.. வாழ்க கல்யாணிகள்.. வாழ்க நீட் தேர்வை ஆதரித்த நீதிபதிகள்.. வாழ்க நீட் தேர்வை ஆதரித்த வழக்கறிஞர்கள்... உங்கள் அறப்போர் அதாவது ஆரியபோர் நிச்சயம் வீழ்த்தப்படும் . சமூகநீதி காக்கப்படும்..
ஆதாரம் மறுமொழியில்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.