08/02/2019

திராவிடம், திராவிடன், திராவிட நாடு சொற்களை அறவே ஒழிக்க வேண்டும் - தேவ நேயப் பாவாணர் (1959)...


தமிழ் என்னும் சொல் தெலுங்கம், குடகம், துளுவம் என்பன போல் சிறுபான்மை 'அம்' ஈறு பெற்றுத் தமிழம் எனவும் வழங்கும்.

கடல் கோளுக்குத் தப்பிய குமரிக் கண்டத் தமிழருள் ஒரு சாரர் வடக்கே செல்லச் செல்ல, தட்ப வெப்ப நிலை மாறுபாட்டாலும் பலுக்கல் (உச்சரிப்பு) தவற்றாலும், மொழிக் காப்பின்மையாலும், அவர் மொழி மெல்ல மெல்லத் திராவிடமாகத் திரிந்தது. திராவிடராக உடன் திரிந்தனர். தமிழ் சிறிது சிறிதாகப் பெயர்ந்து திராவிடமாய்த் திரிந்ததினாலேயே, வட நாடுகளை வேற்று மொழி நாடென்னாது "மொழி பெயர் தேயம்" என்றனர் முன்னோர்.

"மொழி பெயர் தேசத்தாயிராயினும்" என்பது குறுந்தொகை (11).  தமிழ் திராவிட மொழிகளாகத் திரிந்த முறைக்கிணங்க தமிழம் என்னும் பெயரும் திரமிளம்- த்ரமிடம்- த்ரவிடம் எனத் திரிந்தது.

ஒப்பு நோக்க : தோணி - த்ரோணி (வட சொல்) , பவழம்- ப்ரவாளம் (வ), பித்தளை- இத்தடி (தெலுங்கு), குமி-குலி (தமிழ்).

தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தமையாலும், திரவிடம் எனச் சொல்லப்படும் மொழிகளுக்குள் தமிழ் ஒன்றிலேயே பண்டைக் காலத்தில் இலக்கிய மிகுந்தமையாலும், முத்தமிழ் வேந்தரான சேர, சோழ, பாண்டியர் தொன்று தொட்டுத் தமிழகத்தைப் புகழ் பெற ஆண்டு வந்தமையாலும், முதலாவது; திராவிடம் என்னும் பெயர் தமிழையே சுட்டித் திராவிட மொழிக் குடும்பம் முழுவதையுங் குறித்தது. வேத காலத்துப் பிராகிருத மொழிகளுள் ஒன்று த்ராவிடீ எனப்பட்டதையும், ஐந்நூறாண்டுகட்கு முன்பிருந்த பிள்ளை லோகார்சீயர் தமிழிலக்கணத்தைத் "த்ராவிட சாஸ்த்ரம்" எனக் குறித்திருப்பதையும் காண்க.

திரவிட மொழிகள் பெலுச்சித்தானமும், வங்காளமும் வரை பரவியும் சிதறியும் கிடப்பதாலும் , தமிழும் திரவிடமும் ஒன்று சேர முடியாதவாறு வேறுபட்டு விட்டமையாலும், ஆந்திர, கன்னட, கேரள நாடுகள் தனி மாகாணங்களாகப் பிரிந்து போனமையாலும், திரவிடர் தமிழரொடுகூட விரும்பாமையாலும், ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்னும் சொற்களை அறவேயொழித்து, தூய்மையுணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ் நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும்.

எந்நாட்டிலும் மக்கள் பற்றிய இரட்டைப் பகுப்பில், உள் நாட்டு மக்களை முதற் குறிப்பதே மரபும் முறைமையுமாதலால், இனித் தமிழ் நாட்டு மக்களையும் தமிழர், தமிழரல்லாதார் என்றே பிரித்தல் வேண்டும். ஆயினும், தமிழைப் போற்றுவாரெல்லாம் தமிழரென்றே கொள்ளப்பெறுதல் வேண்டும்.

உலகின் முதன்முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடைந்து, அவற்றைப் பிற நாடுகளிற் பரப்பினவன் தமிழனே.
ஆதலால், அவன் எட்டுணையும் ஏனையோர்க்குத் தாழ்ந்தவனல்லன். தமிழ் வல்லோசையற்ற மொழியென மூக்கறையன் முறையிற் பழிக்கும் திரவிடர் கூற்றையும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவினை பற்றித் தமிழனை இழித்துக் கூறும் ஆரிய ஏமாற்றையும் பொருட்படுத்தாது, 'நான் தமிழன்' என ஏக்கழுத்துடன் ஏறு போற் பீடு நடை நடக்க,

தாழ்வுணர்ச்சி நீங்குத் தகைமைக் கட்டங்கிற்றே
வாழ்வுயர்ச்சி காணும் வழி
தமிழ் வாழ்க!

-தேவ நேயப் பாவாணர்.

குறிப்பு: மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் மலரில் (1959) " தமிழ் வேறு, திராவிடன் வேறு" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையாகும்.
ஏற்கெனவே, கி.ஆ.பெ.விசுவநாதம் நடத்திய " தமிழர் நாடு" (1951) இதழிலும் இதே தலைப்பில் பாவாணர் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

( இக்கட்டுரை பழ.நெடுமாறன் நடத்தும் "தென் ஆசியச் செய்தி" ஏட்டில் (மார்ச் 16-31, 2016)  வெளி வந்தது)...

காவல்துறை பொதுமக்களை அடித்தால் எந்த சட்டத்தில் வழக்கு தொடரலாம்...


செந்தமிழ் ஞாயிறு பாவாணர் பிறந்த நாள் 7.2.1902...


"திராவிடர்" என்ற பெயர் "தமிழர்" என்ற பெயருக்கு தகுதியானதா?

"எந்த நாட்டிலும் ஒரு மொழியின் பெயராலேயே ஓர் இனத்தின் பெயர் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டு; ஆங்கிலம் -ஆங்கிலேயர், செருமன் -செருமானியர், சீனம் -சீனர், சப்பான் -சப்பானியர். ஒரே மொழி பேசுபவர் பல்வேறு நாட்டிலும், பல்வேறு மொழி பேசுபவர் ஒரே நாட்டிலும் வாழின் அவர் அவ்வந் நாட்டுப் பெயரால் அழைக்கப் பெறலாம்.

ஆனால், மொழியைப் பொறுத்த வரையில் அவருள் ஒவ்வொரு வகுப்பாரும் ஒவ்வொரு தனி மொழியாற் பெயர் பெறுபவரே யன்றி ஒருமொழி தொகுதியாற் பெயர் பெறுபவரல்லர், தமிழ் என்பது ஒரு மொழி. திராவிடம் என்பது ஒரு மொழித்தொகுதி. அது பதின்மூன்று மொழிகளை உட்கொண்டது. திராவிட நாடு என்பது பல நிலப்பகுதிகளாகத் தமிழ்நாட்டிலிருந்து பெலுச்சித்தானம் வரை தொடர்பின்றிப் பரவியுள்ளது. அந்நிலப் பகுதிகளெல்லாம் சேர்ந்து ஒரு நாடாக ஆகப்போவது மில்லை.

வட இந்தியத் திராவிட நாடுகள்தான் தொடர்பற்றவை. தென்னியந்தியத் திராவிட நாடுகள் தொடர்புற்று ஒரு பெருநிலப் பகுதியாயுள்ளன. ஆதலால் அப்பகுதியைத் திராவிட நாடாக்கலாம் என்னின்; தென்னிந்தியத் திராவிட நாடுகள் இன்னும் ஒன்று சேரவில்லை; இனிமேல் சேரப்போவதாக ஒரு குறியும் இல்லை.

இதுபோது பிற தென்னிந்தியத் திராவிட நாடுகள் சேராவிடினும் எதிர்காலத்தில் அவை சேருமாறு தமிழ்நாட்டில் இன்று அடிகோலுவோர் என்னின்; அதுவும் பொருந்தாது. ஏனெனில், அங்ஙனம் அடிகோலுவதற்கும் ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய ஏனை முப்பெருந் திராவிட நாடுகளில் உள்ள மக்கள் நூற்றுக்கு ஐந்து வீதமாவது திராவிட நாட்டியக்கத்தில் சேர்ந்து உறுப்பினர்களாகத் தம்பெயரைப் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

அல்லது அவ்வியக்கப் பரப்புரைக்காவது அங்குள்ள மக்கள் இடந்தரல் வேண்டும். இவ்விரண்டு மில்லை. ஆகையால் திராவிட நாட்டுத் துவக்கத்திற்கும் வழியில்லை. யாரோ ஒருவர் எங்கோ ஓரிடத்திலிருந்து இவ்வியக்கத்தைப் பாராட்டி எழுதின், அது வலியுறாது.

இனி பல திராவி இனத்தார் தமிழ்நாட்டிலிருத்தலின், தமிழ் நாட்டையே திராவிட நாடாகத் துவக்கலாமெனின், அது தமிழுக்கும் உலை வைப்பதாகும். ஏற்கனவே தமிழ்நாட்டில் தமிழுணர்ச்சியும் தமிழனுணர்ச்சியும் குன்றியுள்ளன.

நீதிக்கட்சி யாட்சியிலாவது காங்கிரசு ஆட்சியிலாவது பார்ப்பனத் தமிழனும் எத்துறையிலும் தலைமைப் பதவிக்கு வந்ததில்லை. தமிழ்நாடு தமிழ் நாடாயிருக்கும் போதே இந்நிலைமை யெனின், திராவிட நாடாகிவிடின், தெலுங்கரும், கன்னடரும், மலையாளியரும் வரம்பின்றித் தமிழ்நாடு புகுந்து தமிழரெல்லாம் வாழ்வுக்கே இடமின்றித் தவிக்கவேண்டியது தான்.

தமிழ் நாட்டிலுள்ள பல திராவிட இனத்தாரையும் தமிழர் என்னும் சொல் தழுவாமையால் அவரையெல்லாம் திராவிடரென்றே அழைத்தல் தகுதி எனின், எந்நாட்டிலும் பல இனத்தார் இருக்கத்தான் செய்கின்றனர். ஆயின், பெரும்பான்மை பற்றியுமே பழங்குடி மக்கள் பற்றியுமே ஒரு நாடு பெயர் பெறும். இங்கிலாந்தில் ஏனை நாட்டு மக்கள் இல்லாமலில்லை. ஆயின், அதுபற்றி அது ஆங்கில நாடு என்னும் பெயரை இழந்துவிடாது. ஆதலால், தமிழ்நாடு பல திராவிட இனத்தார் வாழ்வதாயினும் தமிழ் நாடே.

ஒரு நாட்டில் பிறநாட்டு மக்களுமிருப்பின், வெளிநாட்டார் உள் நாட்டாரை எல்லாவகையிலும் பின்பற்ற வேண்டுமேயன்றி, உள் நாட்டார் வெளிநாட்டரைப் பின்பற்ற வேண்டியதில்லை. வெளிநாட்டார் நாகரிகத்திற் சிறந்தவராயிருப்பின், உள் நாட்டார் அவரைப் பின்பற்றலாம். தமிழரல்லாத மற்ற திராவிடர் அத்தகையவரல்லர். மேலும், வெளிநாட்டார் நாகரிகத்திற் சிறந்தவராயிருந்த விடத்தும் உள் நாட்டாரின் இனப்பெயர் மாறிவிடாது. ஆதலால், எவ்வகையிலும் தமிழ் நாட்டிலுள்ள பிற திராவிடர் தம்மைத் தமிழர் என்று கொள்ளுதல் வேண்டுமே யன்றி, தமிழரைத் திராவிடன் என்று அழைத்தல் கூடாது.

தமிழர் ஒரு சிற்றினத்தாராதலானும், பிற திராவிடரோடு சேரினல்லது அவர்க்குப் பாதுகாப்பில்லாமையாலும், திராவிடர் என்று தம்மை அழைத்துக் கொள்வதே அவர்க்கு நலமெனின், இது பேதையர்க்குக் கூறும் ஏமாற்றுரையேயன்றி வேறன்று.

பிற திராவிடர் தமிழரோடு சேர்வதில்லை யென்று முன்னரே கண்டோம். மேலும் இக்காலத்தில் ஒரு நாட்டிற்குப் பாதுகாப்பாயிருப்பது உலக அரசுகளிடை வளர்ந்து வரும் அமைதி விருப்ப அறவுணர்ச்சியே யன்றி, அந்நாட்டின் பருமை அல்லது வன்மை யன்று. ஆதலால், தமிழரை அவர் பாதுகாப்பிற்காகத் திராவிட நாடு சேர அல்லது திராவிடரென்று கூறச்சொல்வதெல்லாம், கொக்கு மீன்களின் பாதுகாப்பிற்காகத் கூறியது போன்றதே.

தமிழர் என்னும் பெயர் பார்ப்பனரையும் தழுவுவதலால், இனவுணர்ச்சி யூட்டுவதற்குத் திராவிடர் என்னும் பெயரே ஏற்றதென்னின், வட சொல்லின்றிப் பிற திராவிட மொழிகட்கு நிலையும் உயர்வுமின்மையானும், எழுத்து முதல் அணிவரை இலக்கணமெல்லாம் வடமொழியைப் பின்பற்றி யிருத்தலானும், இலக்கண இலக்கிய ஆசிரியருட் பெரும்பாலார் பிராமணாயிருந்திருத்த லானும், பிற திராவிடர் தம்மை ஆரிய வழியினராகக் கூறிக் கொள்ளுதலானும், தமிழையும் தமிழரையும் புறக்கணித்து வருதலானும், திராவிடர் என்னும் பெயர் தமிழர் என்னும் பெயரினும் தகுதியற்றதாகும்.

தமிழ் வடமொழித் துணை வேண்டாத தனிமொழி எனக் கொள்ளுதலும், வடசொற் கலப்பின்றித் தமிழைத் தூய்மையாக வழங்குவதலும், இந்திய நாகரீகம் தமிழ் நாகரீகம் என்று தெளிதலும், பிறப்பால் சிறப்பில்லை என்பதைக் கடைப் பிடித்தலும், கல்வியையும் அலுவற் பேற்றையும் எல்லார்க்கும் பொதுவாக்குதலும், இன்னோரன்ன பிறவும், தமிழர்க்கிலக்கணமாம். இவ்விலக்கணங்களைக் கொண்டவரெல்லாம் தமிழரென்றே துணிந்து, தமிழுக்கும் தமிழருக்கும் கேடாக அரசியற் கட்சியார் கூறும் வீண்வம்பு வெற்றுரை களையெல்லாம் செவிக்கொள்ளாது விடுத்து தமிழர் கடைத்தேறுவாராக.

 -பாவாணர்.

('முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் நடாத்திய "தமிழர் நாடு" ஏட்டில் பாவாணர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும். 15.5.1951)...

Regrow Ur Hair At Bald Head / சொட்டை தலையில் மீண்டும் முடியை வளர செய்வது எப்படி.?


https://youtu.be/LnKj0n3WIKY

Subscribe the channel for more tips...

கல்வி மட்டுமே எங்களை உலகறியச் செய்யும் - தோடர் சமூகத்தின் முதல் பெண் மருத்துவர் பாரதி...


கல்வி மட்டுமே பழங்குடியின சமூகத்தினரை உலகறியச் செய்யும் என்கிறார் தாேடர் பழங்குடியினத்தில் இருந்து முதல் மருத்துவராகியுள்ள பாரதி.

நீலகிரி மாவட்டத்தில் குரும்பர், இருளர், பனியர், காட்டுநாயக்கர், கோத்தர், தாேடர் என பாரம்பர்யம் மிக்க ஆறு வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மக்கள் தாெகை எண்ணிக்கையில் சுமார் இரண்டாயிரத்துக்கும் குறைவாகவே உள்ள தாேடர்கள் உள்ளனர். தாேடர் பழங்குடியினத்தில் இருந்து பாரதி என்ற இளம் பெண் பல் மருந்துவராகியுள்ளார். ஊட்டி தலைக்குந்தாவை அடுத்துள்ள தேனாடு மந்தில் உள்ள அவரது வீட்டில் பல் மருத்துவர் பாரதியை சந்தித்தாேம்.

‛‛ஒன்று முதல் ஆறாம் வகுப்புவரையான பள்ளிப்படிப்பை ஹெச்.பி.எப்.பில் உள்ள அரசுப் பள்ளியில்தான் பயின்றேன். சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்ற கனவு இருந்தது. எனது முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை எனக்கு அளிக்கப்பட்ட கற்பிக்கப்பட்ட முறை தான் மனதுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. இப்போதுகூட எனக்கு கல்வி போதித்த ஆசிரியர்களைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து வருகிறது. சிறு வயதில் நான் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பேன் என்பதால், எனக்கு சிறப்பு பரிசுகள் அளித்து ஊக்கமளித்த பியூலா மிஸ்ஸை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஊட்டியில் சி.எஸ்.ஐ, ஜெம் மெமாெரியல் பள்ளியில் பயின்றேன். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்க கோவை அவினாசிலிங்கம் பள்ளியில் படித்தேன். இதுவரை என்னை பழங்குடியின மாணவி என்று சக மாணவர்களாே, ஆசிரியர்களோ ஒதுக்கியதில்லை. எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தபாேதும் ப்ளஸ் டூ-வில் 810 மதிப்பெண் தான் எடுக்க முடிந்தது.

பிறகு கவுன்சலிங் மூலம் கோவை ஆர்.வி.எஸ். கல்லுாரியில் பி.டி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு என்னை பழங்குடியின மாணவி என்று யாருக்கும் தெரியவில்லை. அப்பாேது சென்னையில் தனியார் செய்தி நிறுவனம் சார்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதன் மூலம் ஓரிரு ஆசிரியர்களுக்கு நான் பழங்குடியினத்தில் இருந்து படிக்க வந்துள்ளது தெரிந்துகாெண்டு என் மீது தனிக் கவனம் செலுத்திக் காெண்டார்கள். தற்பாேது பல் மருத்துவத்தில் (முதுகலை படிப்பு) எம்.டி.எஸ். படிப்பதற்காக நீட் தேர்வு எழுதியுள்ளேன். வரும் டிசம்பர் 14-ம் தேதி அதற்கான முடிவு வெளிகாக உள்ளது. அதற்காக காத்திருக்கிறேன். நீட் தேர்வு மிகவும் கடினமாக இருந்தது. மக்கர் செய்து படிப்பவர்களுக்கு நீட் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். புரிந்து படிப்பவர்கள் எளிதாக நீட் தேர்வை எழுத முடியும். நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் என் கருத்து. நான் பல் மருத்துவர் ஆகும் வரை என்னை வீட்டை சுற்றியுள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. ஆனால், தற்போது அப்படியில்லை. பழங்குடியின மக்கள் தங்களை உலகறியச் செய்வதற்கு வாகனங்கள் வாங்குவதாலோ, வீடு கட்டிக் காெள்வதாலோ தங்களை உலகறியச் செய்ய முடியாது, கல்வி மட்டுமே பழங்குடியின மக்களை உலகறியச் செய்யும்’’என்றார்.

பாரதியின் தந்தை மந்தேஷ் குட்டன் மற்றும் தாய் நேந்திரா பேசுகையில், `` விவசாய தாெழில் செய்யும் நான் 10-ம் வகுப்பு வரையும் எனது மனைவி 3-ம் வகுப்பு வரையும் படித்துள்ளாேம். எங்களுக்கு 4 குழந்தைகள் முதல் மகள் திவ்யா முதுகலை படித்து, டெல்லியில் ஒரு ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இரண்டாவது மகள் பாரதி பல் மருத்துவராகியுள்ளார், மூன்றாவது மகன் சக்தி இன்பராஜ் கர்நாடக மாநிலம் மைசூருவில் சட்டம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். கடைசி மகள் பிரீத்தி பொறியியல் பயின்று வருகிறார்.

தாேடர் பழங்குடியின சமூகத்தில் பெரும்பாலான சிறுவர்கள் பள்ளிப் படிப்புடன் கல்வியை நிறுத்திவிடுகிறார்கள். தாேடர் சமூகம் மட்டுமல்ல. அனைத்து பழங்குடியின சமூகத்தில் உள்ள குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக எங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். தற்பாேதைய சூழ்நிலையில் தாேடர் பழங்குடியின சமூகத்தில் 10-ம் வகுப்பு முடித்தவுடன் பெண்களுக்குத் திருமணம் நடத்தப்படுவதில்லை. அவர்களும் படிப்பை தாெடர்கின்றனர். வரும் காலத்தில் தாேடர் சமுதாயத்திலிருந்து மேலும் பல பட்டதாரிகள் உருவாவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

வாழ்த்துக்கள் சகோதரி...

கங்கை நதி சுத்தம் செய்யப்பட்டதாக பாஜக வானதி ஸ்ரீனிவாசன் பகிர்ந்த படங்கள் உண்மையா? BBCFactCheck...


கங்கை நதியை சுத்தம் செய்ததன் மூலம் பாரதிய ஜனதா கட்சி புதிய சாதனையை நிகழ்த்திவிட்டது என்று தென் இந்தியாவில் சமூக ஊடகங்களில் இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

5YearChallenge மற்றும் 10YearChallenge என்ற ஹாஷ்டாகுடன் சமூக ஊடகங்களில் இந்த புகைப்படமானது பகிரப்பட்டுள்ளது. கங்கை நதியின் நிலை மிக மோசமாக இருந்ததாகவும், பாரதிய ஜனதா கட்சி அந்த நதியின் நிலையை மேம்படுத்துவதில் வியத்தகு சாதனை புரிந்துள்ளதாகவும் அந்த சமூக ஊடக பகிர்வு கூறுகிறது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசனும் அந்த புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார்.

கங்கை நதியின் மாற்றத்தை பாருங்கள். 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போதும், 2019ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் போது எப்படி உள்ளது என்று பாருங்கள் என்கிறது ட்வீட்.

ஆனால், உண்மையில் இந்த புகைப்படங்கள் காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்டவை.

கங்கையின் நிலை என்ன?

கங்கை நதியை சுத்தம் செய்வதில் மத்திய அரசின் முயற்சிகள் போதுமான அளவு இல்லை என்கிறது பாராளுமன்ற நிலைக் குழுவின் கடந்தாண்டு அறிக்கை.

https://aajtak.intoday.in/story/budget-2019-namami-gange-modi-gov-clean-ganga-narendra-modi-tut-1-1057962.html

கங்கையை சுத்தம் செய்யும் விஷயத்தில் போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை என தேசிய பசுமை ஆணையமும் அரசை குற்றஞ்சாட்டி உள்ளது.

கங்கையை சுத்தம் செய்ய வேண்டி, சுவாமி கியான் சுவரப் என்று அழைக்கப்பட்ட சூழலியல் பேராசிரியர் ஜி.டி. அகர்வால் கடந்தாண்டு 112 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்...

பாஜக ஆர்எஸ்எஸ் சின் இந்துத்துவா அரசியல்...


ஐன்ஸ்டீனின் மூளை...


படத்தில் இருப்பது மாபெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மூளை. இன்றைக்கும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவருடைய மூளையை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் வியந்து போய் பேசுகிறார்கள்.

இத்தனைக்கும் அவரது மூளையில் 3 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாம், அது பத்து சதவிகிதமாக இருந்திருந்தால் என்னென்ன கண்டு பிடிப்புகள் வந்திருக்குமோ...

இத்தகு பெருமைமிக்க ஐன்ஸ்டீனிடம், மனித கண்டு பிடிப்புகளில் உங்கள் மனதை வெகுவாக கவர்ந்தது எது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக புத்தகங்கள் என்று பதில் சொன்னாராம்.

அத்தகு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் நமக்கு இன்று மெச்சத்தகுந்த அளவில் இருக்கிறதா?

பல் துறை நிபுணர்கள் எழுதிய நூல்கள், பல விலை உயர்ந்த புத்தகங்கள் குவிந்திருக்கும் இடம் நூலகம். இத்தகு நூல்களை நூலகங்களில் மட்டுமே ஒருங்கே நாம் கண்டு, பயன்படுத்திட முடியும்.

நம்மில் எத்தனை பேருக்கு தொடர்ந்து நூலகம் செல்லும் வழக்கம் இருக்கிறது?

இரண்டு லட்சம் மக்கள் வசிக்கும் ஓர் நகரத்தில் 20 நூலகங்களாவது இருக்க வேண்டும். ஆனால் இருக்கும் ஒரு நூலகத்தில் கூட்டத்தை காணோம்.

ஆனால் இருக்கவே கூடாத டாஸ்மாக் கடைகள் 20 இருக்கின்றன, அத்தனையிலும் கூட்டம் அலை மோதுகிறது. இதுதான் இன்றைய தமிழ்க்குடிகளின் நிலைமை.

சமீபத்தில் ஒரு சர்வே கூறுகிறது.7 கோடி மக்கள் கொண்ட தமிழகத்தில் ஒரு கோடியே முப்பது லட்சம் மக்கள் குடிப்பழக்கம் உள்ளவர்களாம். அதில் 50 லட்சம் பேர் தினமும் குடிப்பவர்களாம். 30 சதவிகிதம் பேர் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களாம். கொடுமை.

இந்த நிலை தொடர்ந்தால் வெள்ளப் பெருக்கினால் அழிந்த சிந்துசமவெளி நாகரிகம் போல், கடற்கோளினால் அழிந்த குமரிக்கண்டம் போல், கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்ற பெருமைமிக்க சமுதாயம் டாஸ்மாக்கினால் அழிந்தது என்ற நிலை இந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு வந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா கலாட்டா...


ஈர்ப்பு விதியை பயன்படுத்துவது எப்படி?


அலாவுதீனின் பூதத்தை போல ஈர்ப்பு விதியும் உங்களுடைய ஒவ்வோர் ஆணையையும் நிறைவேற்றும்..

நீங்கள் விரும்பியவற்றை பெற மூன்று எளிய படிகள் உருவாக்க , படைப்பியக்கச்  செயல்முறை உங்களுக்கு உதவும், அவை கேளுங்கள், நம்புங்கள், மற்றும் பெறுங்கள்  ஆகியவை.

உங்களுக்கு வேண்டியதைப் பிரபஞ்சத்திடம் கேட்கும் போது , உங்கள் விருப்பம்  குறித்த தெளிவை நீங்கள் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தெளிவு நீங்கள் கேட்டதற்குச் சமானம்.

நீங்கள் கேட்டது ஏற்கனவே கிடைத்து விட்டது போல நடந்து கொள்வது, பேசுவது மற்றும் சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும். கிடைத்து விட்டது என்ற அலைவரிசையில் நீங்கள் ஒளிபரப்பும் போது அதை நீங்கள் பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை , நிகழ்வுகளை , மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.

உங்களது விருப்பம் நிறைவேறிவிட்ட பிறகு நீங்கள் எப்படி உணர்வீர்களோ அத்தகைய மனவுனர்வை உண்டாக்கிக் கொள்வது பெற்றுக் கொள்ளுதலின் முக்கியமான அம்சம். மகிழ்ச்சியான மன நிலையுடன் இருப்பது, உங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் அலைவரிசையில் உங்களை வைத்து விடும்.

உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் , கவனத்தை எடைக் குறைப்பில் காட்டாதீர்கள். மாறாக, கச்சிதமான எடையில் உங்களது கவனத்தைக் குவியுங்கள். உங்களுடைய கச்சிதமான எடையை உணர்வுப் பூர்வமாக உணருங்கள், அது உங்களை நோக்கித் தானாகவே ஓடி வரும்.

நீங்கள் விரும்புபவற்றை உங்களுக்கு அளித்திடப் பிரபஞ்சத்திற்குச் சொடுக்குப் போடும் நேரம் கூட ஆகாது. ஒரு டாலரைத் தருவிப்பது எவ்வளவு எளிதோ அதே அளவு எளிதானது தான் ஒரு மில்லியன் டாலரைத் தருவிப்பதாகும்.

ஒரு டம்ளர் காபி அல்லது கார் நிறுத்தும் இடம் போன்ற சிறிய விசயங்களில் துவங்குவது , ஈர்ப்பு விதி மீது நம்பிக்கை ஏற்படச் சிறந்த வழி , ஏதாவது சிறிய விஷயம் ஒன்று தேவை என்று சக்தியுடன் கேளுங்கள். ஈர்க்கக் கூடிய உங்கள் சக்தியை நீங்கள் உணர உணர பெரிய விசயங்களை ஈர்ப்பது பெரிய காரியமாக இருக்காது.

நாளைய தினம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ , அதை முன்கூட்டியே சிந்தனை மூலம் உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையையும் உங்களது நோக்கப்படி உங்களால் அமைத்துக் கொள்ள முடியும்...

தமிழின எதிரி பாஜக நிர்மலா சீத்தாராமன் தமாழர்களுக்கு மிரட்டல்...


இசுலாமியர் கட்டிய முருகன் கோவில்...


இசுலாமியர் முருகனை ஏற்பதில்லை என்பாருக்கு...

இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவிலை பற்றிய செய்தி..

புதுச்சேரியில் உள்ள ஒரு முருகன் கோயிலை கட்டியது இஸ்லாமியர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளமாக திகழும் அந்த கோயிலைப் பற்றி தற்போது பார்ப்போம்.

புதுச்சேரி ரயில் நிலைய வாயிலின் அருகே உள்ள சாலைக்கு எதிரே அழகாய் அமைந்துள்ளது "கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயில்".

அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ள இக்கோயிலை கட்டியவர் மதுரையை பூர்வீகமாக கொண்ட முகமது கௌஸ்.

1940ம் ஆண்டுகளில் அவரது முன்னோர்கள் புதுச்சேரியில் குடியேறிய பின்,கடவுள் முருகன் மீது மிகுந்த பற்று கொண்டதால் முருகன் கோவிலை கட்ட எண்ணியுள்ளார்.

இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், இந்துக்களுக்கான கோயிலைக் கட்டுவதில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டிவந்தது.

எனினும், கடந்த 1970ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி அன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பி.டி.ஜாட்டியுடன் சேர்ந்து கோயிலுக்கான அடிக்கல் நாட்டி அனைத்து எதிர்ப்புகளையும் சமாளித்து கோயிலைக் கட்டி முடித்தார் முகமது கெளஸ்.

1977-ம் ஆண்டு கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்தார்.

பின்னர் கோயில் கட்டியவரின் பெயருடன் இணைந்து கௌசிக பாலசுப்பிரமணிய சாமி திருக்கோயில் என பெயர் பெற்று இன்று வரை அழைக்கப்படுகின்றது.

சித்ரா பவுர்ணமி, வைகாசிப் பெருவிழா,கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபப் பெருவிழா என வருடம் முழுவதும் இத்திருக்கோயில் மின்னுகிறது.

2003-ம் மரணமடைந்த முகமது கௌஸூக்கு பின் அவரது மகன் முகமது காதர் தற்போது கோயிலை நிர்வகித்து வருகிறார்.

இக்கோயிலுக்கு கடந்த 2002ம் ஆண்டில் இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் நடந்த நிலையில் தற்போது 3வது முறையாக கும்பாபிஷேகம் (23.06.2018) நடைபெறவுள்ளது.

மதங்களின் பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக இன்று உயர்ந்து நிற்கிறது இந்த கௌசிக பாலசுப்ரமணிய கோவில்...

200 ரூ கொடுத்து கிராமசபை கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வரும் திமுக ஸ்டாலின்...


https://youtu.be/G4mPnG8Nan8

Subscribe the channel for more news...

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்.?


முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்.. ஆனால் இப்போது உணவு உண்ணும் மேசை (dining table).. இது சரியா தவறா.? முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.

எனவே செரிமானம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு செரிமானமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு செரிமானம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது...

தமிழக நடிகர்களில் தமிழன் தலைமையை எங்கே தேடுவது..?


மனச்சங்கிலி...



நாம் அனைவரும் கோவிலில் யானையை பார்த்திருப்போம்.

அதன் காலில் ஒரு சங்கலி கட்டபட்டிருக்கும்.

பாகன் கையில் ஒரு கம்பை வைத்து குத்தி அடக்கி வைத்திருப்பான்.

யானை மனிதனை விட பல மடங்கு பலம் வாய்ந்தது.

ஆனால் சிறிய பாகனுக்கு பயந்து கட்டுப்பட்டு நடக்கிறது.

அவன் சொன்னால் ஆசீர்வாதம் கொடுக்கிறது, காசு வாங்குகிறது.

உண்மையில் யானையை கட்டுபடுத்துவது அதன் ஆழ் மனதில் பதிந்த எண்ணம்.

யானை சிறுவயதில் இருக்கும் போதே பாகன் சங்கிலியால் கட்டி வைத்து கட்டுபடுத்துகிறான்.

யானை சங்கிலியை உடைக்க முயன்று முடியாமல் முயற்சிஐ கைவிட்டிற்கும்.

இப்போது அது வளர்ந்து பெரிய யானையாக இருக்கும்.

ஆனால் அது சங்கிலியை உடைக்க இப்போது முயற்சி செய்யாது.

நீங்கள் உற்று நோக்கினால் அவ்வப்பொழுது தன் கால்களை அசைக்கும் யானை சங்கிலி கட்டிருக்கும் காலை அசைப்பது இல்லை.

சங்கிலிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணம் யானையின் ஆழ்மனதில் நன்கு பதிந்துவிட்டது. அதனால் தான் கட்டுப்பட்டு நிற்கிறது.

யானைய போல நம்மில் பலபேர் நிறைய மன சங்கிலிகளை கட்டி கொண்டிருக்கிறோம்.

உதாரணத்திற்கு எனக்கு கணக்கு வராது, அது ரொம்ப கஷ்டம், அது என்னால் செய்ய முடியாது முதலியன.

இந்த சங்கிலிகளை நாம் உடைத்து எரிய வேண்டும்.

தியானம் பழகினால் இந்த சங்கிலிகளை உடைத்து எரிந்து விடலாம்.

நாம் தியானம் செய்யும் போது என்னகளின் வேகம் குறைந்து மனம் பீட்டா நிலையில் இருந்து அல்ஃபா நிலைக்கு வருகிறது.

நமது ஆழ்மனம் திறக்கபடுகிறது.

இந்த அல்ஃபா நிலைதான் முன்னோர்கள் கூறும் துரிய நிலை ஆகும்.

தியானம் ஆழ் மனதை திறக்கும் அற்புத சாவி...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...


உலக புற்றுநோய் தினத்தில் நடிகை கவுதமி செய்த காரியம்.. குவியும் பாராட்டு...


வருடம் தோறும், பிப்ரவரி 4 ஆம் தேதி, 'world Cancer Day ' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பலர் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுடைய தலை முடியை தானமாக கொடுப்பது, தங்களால் முடிந்த பணம் கொடுப்பது போன்ற நற்செயல்களை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சைக்கு பின் மீண்டு வந்த நடிகை கௌதமி, கேன்சர் நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக கடந்த சில வருடங்களாக அமைப்பு ஒன்றை தொடங்கி நடத்தி  வருகிறார்.

இந்த அமைப்பு மூலம் புற்று நோய் உள்ளவர்களை தைரியப்படுத்துவதோடு, அவர்களின் மேல் சிகிச்சைக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.

நேற்று, புற்று நோய் தினம் என்பதால், பிரபல தனியார் புற்று நோய் மருத்துவமனைக்கு சென்று, அங்குள்ள புற்று நோய் நோயாளிகளை சந்தித்தார்.

மேலும் புற்று நோய் பாதித்த குழந்தை வரைந்த ஓவியத்தை பார்த்து ரசித்தார். இந்த புகைப்படங்களை தற்போது வெளியாகியுள்ளது. அதே போல் இவரின் இந்த செயலுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை  தெரிவித்து வருகிறார்கள்...

உனக்கான அரசியலை நீ தேர்ந்தெடுப்பதில் என்ன தயக்கம் தமிழா...


உன்னிடம் உனது அரசியல் என்பதை சாக்கடை என அவர்கள் கூறி, அந்த சாக்கடையில் அவர்கள் வாழ்ந்து குடும்பம் நடத்தி, அந்த சாக்கடையிலேயே அவர்கள் பிள்ளைகளையும் இறக்கி விடுகிறார்கள்...

சபரிமலைக்கு சென்ற கனகதுர்காவிற்கு நேர்ந்த துயரம்...


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்றதால் கணவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட கனக துர்கா நீதிமன்ற உத்தரவை பெற்று வீடு திரும்பினார்.

ஆனால், தனது மனைவி வீட்டிற்கு வருகிறார் என தெரிந்ததும், தனது அம்மா மற்றும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் கனகதுர்காவின் கணவர்..

சபரிமலைக்கு சென்றதால், தற்போது வாழ்விழந்து தவிக்கிறார் கனகதுர்கா...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...


ஆஸ்துமாவிற்கு மருத்துவக் குறிப்பு...


ஆஸ்துமா இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம்.

இந்நோய்க்கும் காச நோய்க்கும் அதிக வேறுபாடுகள் உண்டு.

ஒவ்வாமை காரணமாகவே இந்நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

அறிகுறிகள்: மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.

காரணங்கள்: தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி - கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம்.

மூலிகைகள்...

வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவளை, முருங்கையிலை ஆகியவை ஆகும்.

இவை அனைத்தையும் பறித்து வந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து சமஅளவு ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும்.

இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட் கொண்டால் பூரணகுணம் பெறலாம். முதல் மாதத்திலேயே ஓரளவு குணம் தெரிய ஆரம்பிக்கும்...

அரசியல்வாதிகளுடன் ஒரு உரையாடல்...


விஷமாய் மாறிவரும் கேன் தண்ணீர். அபாய எச்சரிக்கை...


இன்று ஒரு டீ, காபியின் விலையை விட, ஒரு கேன் தண்ணீரின் விலை என்பது அதிகம். இதில் இருந்தே வரும்காலங்களில் நாம் எவ்வளவு பெரிய பிரச்னையை சந்திக்கப் போகிறோம் என்பதை புரிந்துக் கொள்ளலாம். இதைவிடவும், இவ்வாறு விலை கொடுத்து வாங்கும் குடிநீர் தற்போது மனித உயிர்களுக்கு மிகப்பெரும் ஆபத்தாகி வருகிறது என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? நாள்கணக்கில் அடைத்துவைத்து விற்கப்படும் பாக்கெட், பாட்டில், கேன் தண்ணீர் விஷமாகும் அபாயம், மோசடிகளை அம்பலப்படுத்துகிறது இந்தபதிவு.

உங்கள் கடைக்காரர் விற்கும் கேன் தண்ணீர் தரமானதா ? எப்படி கண்டுபிடிப்பது ?

சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 75 லட்சம் லிட்டர் கேன் தண்ணீர் விற்கப்படுகிறது. ஆனால் கேன்களில் அடைத்து விற்கப்படும் 60 சதவிகிதம் தண்ணீர் தரமற்று இருப்பதாக நுகர்வோர் அமைப்பினர் கூறுகின்றனர். மார்க்கர் பேனாவை வாங்கியவுடன் அது எழுதுகிறதா என்று பார்க்கும் நாம் அதில் எக்ஸ்பைரி டேட் குறிப்பிடவில்லையே என்று ஒரு நாளும் கவலைபட்டதில்லை.

குறிப்பாக நமக்கு கிடைக்கும் கேன் தண்ணீரானது பெயரளவில் மட்டுமே மினரல் வாட்டர், உண்மையில் கடல் நீரையோ, ஆழ்குழாய் நீரையோ சுத்திகரிப்பு செய்தே கேன்களிள் மூலம் வழங்கப்படுகிறது. பொதுவாக இது போன்ற கேன் வாட்டர்கள் இந்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும், Bureau of Indian Standards அமைப்பால் ISI mark பெற்றிருக்க வேண்டும்.

மிகமுக்கியமாக, சான்றிதழ் பெற சில வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு குடிநீர் நிறுவனத்திற்கும் அங்கீகரிக்கப்பட்ட குடிநீர் பரிசோதனை கூடம் அவசியம். அதில் பரிசோதனை செய்த தண்ணீர் மாதிரிகளை இந்திய தர நிர்ணய அமைப்புக்கு அனுப்பி குடிக்கத் தகுந்த தண்ணீர் என்று அனுமதி பெற வேண்டும். அதன் பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

Bureau of Indian Standards அமைப்பு தண்ணீர் நிறுவனங்களில் கச்சா நீரை மாதம் இரு முறை சோதனை செய்யும். குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் பாட்டிலில் அல்லது கேன்களில் தொழில் நுட்ப விவரங்கள், தயாரிக்கப்பட்ட தேதி, பேட்ச் எண், காலாவதி தேதி ஆகியவற்றை தெளிவாக எழுத வேண்டும். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இவற்றை எல்லாம் செய்வதில்லை, அப்படியே சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் கூட கேன் தண்ணீரை தயாரிக்கும் போது பல நேரங்களில் முறையான வழிகளை பின்பற்றுவதில்லை.

கேன் தண்ணீர் இப்படியா சுத்திகரிப்படுகிறது ?

தண்ணீர் நிறுவனங்கள் குடிநீரை வடிகட்டி சுத்திகரிப்பதில் சில விதிமுறைகளை பின்பற்றப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத தண்ணீரை கடினத்தன்மையற்றதாக மாற்ற டோஸிங் மெஷின் பயன்படுத்தபடுகிறது. அடுத்து மண் மற்றும் கார்பன் மூலம் வடி கட்ட வேண்டும். பிறகு நீரில் உள்ள தூசி மற்றும் அசுத்தங்களை அகற்ற மைக்கான் காண்டிரேஜ் முறை பின்பற்றப்படும். இதன்பின் ஆர்.ஓ மூலம் தண்ணீரில் இருக்கும் தேவையற்ற உப்புக்கள் நீக்கப்படும். இறுதியாக அல்ட்ரா கதிர்களை பயன்படுத்தி தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும். கொடுமை என்னவென்றால் இந்த முறைகளை பல தண்ணீர் நிறுவனங்கள் முறையாக கடைபிடிப்பதில்லை.

உங்கள் தண்ணீர் கேன் எப்படி இருக்கும்?

கடைக்காரர் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கேன்களை மாற்ற வேண்டும். ஆனால் நமக்கு நன்றாகவே தெரியும் ஒவ்வொரு கடையிலும் தண்ணீர் கேன் பல வருடங்களாக அப்படியே இருக்குமென்று. இதனால் பாக்டீரியாக்கள் உருவாகும், இப்படிப்பட்ட கேன்களில் தண்ணீர் இருந்தால் இரண்டு நாட்களில் பாசி பிடித்து விடும். அடுத்த சில தினங்களில் புழு பூச்சிகள் உருவாகும். சோகம் என்னவென்றால் இப்படிப்பட்ட தண்ணீரையே பெரும்பாலான மக்கள் விலை கொடுத்து வாங்குகின்றனர்.

இப்படிப்பட்ட தண்ணீர் கேன்களால் ஏற்படும் ஆபத்துகள்...

ஒரு லிட்டர் தண்ணீரில் மனித உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் தாதுக்கள் கிடைக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 500 மில்லி கிராம் வரை அந்த தண்ணீரில் உப்பு இருக்க வேண்டும். ஆனால் சுத்திகரிக்கப்படுவதால் முதல் 10 மில்லி கிராம் உப்புதான் கிடைக்கிறது. இதனால் உடம்புக்கு எந்தவித நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்காமல் போய்விடுகிறது. மாறாக நோய் உருவாகும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதைவிடவும் ஆபத்தானது வயிற்றுப்போக்கு, சுவாச நோய், எலும்பு நோய், சிறுநீரக நோய், தோல் புற்று நோய்கள் உருவாகிறது.

கேன் தண்ணீர் நிறுவனங்களின் மோசடிகள்...

முறையான அனுமதி இல்லாமல் சுமார் 450க்கும் மேற்பட்ட போலி தண்ணீர் நிறுவனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சென்னையின் 10 கேன் தண்ணீர் நிறுவனங்களின், 20லிட்டர் குடிநீர் கேன்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவை அனைத்துமே குடிக்க தகுதியில்லாத நீர் என்ற உண்மை தெரிய வந்தது மட்டுமல்லாமல், அந்த நீரில் கொடிய நச்சுத்தன்மையும், மனித மலத்தில் உற்பத்தியாகும் ஈகோலி, மற்றும் கோலி பார்ம் போன்ற பாக்டீரியாக்களும் இருந்ததாக நுகர்வோர் அமைப்பினர் கூறுகின்றனர். இதுமட்டுமல்லாது மூலிகை நீர் என்று மக்களை ஏமாற்றிய நிறுவனத்தின் மீதும் நஷ்ட ஈடு வழங்க வேண்டி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தெரிந்த மோசடிகள் இவை, நமக்கு தெரியாமல் இன்னும் எவ்வளவோ நடக்கிறது. உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையான தண்ணீரில் இப்படியான மோசடிகளை தடுக்க அரசால் மட்டுமே முடியும்.

கேன் தண்ணீர் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை...

ISI மற்றும் தேதி அச்சிடாமல் வெளிவரும் தண்ணீர் கேன்களை வாங்கக் கூடாது.
அடைக்கப்பட்ட ஒரு தண்ணீர் கேனின் ஆயுட்காலம் 30 நாட்கள் மட்டுமே.

இனி என்ன செய்ய போகிறோம் ?

நமது குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் அளவு ஆறு, குளம், ஏரி எங்கும் நீர்வரப்பு இல்லை. இருக்கும் நீர்நிலைகளும் அழிந்து வருகிறது. இதுபோதாமல், மக்களின் தவறான நடவடிக்கைகளால் நிலத்தடி நீரின் அளவும் குறைந்து வருகிறது. போதிய நீர் இல்லாததால் தரமான குடிநீருக்காக கேன் தண்ணீரையே நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வீடுகளில் ஆழ்குழாய் கிணற்றின் மூலம் பெறப்படும் நீரும் தற்போது வறட்சி காரணமாக அதன் தன்மையை இழந்து விஷமாக மாறி வருகிறது. நிலத்தடி நீரில் க்ளோரைடு, நைட்ரேட், அயர்ன், ப்ளோரைடு பேன்றவை இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இதனால்தான் சென்னையின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் செம்மண்ணாகவும், குடிப்பதற்கு தகுதியற்ற நீராகவும் இருக்கிறது.

இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு மழை நீர் சேகரிப்புத்தான். மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டும். அப்போது தான் நீரின் தன்மை மாற்றம் பெறும். அதிலும் ஆறு, குளம், குட்டைகளில் இருந்து கிடைக்கும் நீரில் ப்ளோரைடு இருக்காது என்பதால் அதனை அருந்துவதுதான் பாதுகாப்பானது என்கின்றனர் ஆய்வாளர்கள். 1000 500 அடி ஆழ்குழாயில் இருந்து எடுக்கப்படும் நிலத்தடி நீரைக்காட்டிலும், நில நீர்மட்டத்தில் இருந்து கிடைக்கும் நீரே சிறந்தது என்பதே உண்மை. மினரல் வாட்டர் என்ற பெயரில் கேன் கேனாக வாங்கும் நமக்கு, இயற்கையான நீர்நிலைகளில் இருக்கும் நீரில்தான் மினரல்ஸ் இருக்கிறது என்ற உண்மை எப்போது புரியும்?

Earn $300 Per month Online Without Investment/ Simple Copy - Paste Job...


https://youtu.be/bwYQVMr5pKM

Website Link : https://allworkjob.com/clients/login/registration/67ab4ae9aa52ee4d6e10282dbf6f1bb9

Subscribe the channel for more tips...

இந்தியாவில் 64 சதவீத ஆன்டி பயோடிக் மாத்திரைகள் அங்கீகாரம் பெறாதவை என ஆய்வில் தகவல்...


பன்னாட்டு நிறுவனங்கள் பல தொடர்ந்து அனுமதி பெறாமல் இந்தியாவில் ஆன்டிபயோடிக் மாத்திரைகள் விற்கப்படுவதாக ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

லண்டன் க்யூன்மேரி பல்கலைக்கழகமும், நியூகாஸ்டல் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில், இந்திய சந்தையில் விற்கப்படும் லட்சக்கணக்கான ஆன்டிபயோடிக் மாத்திரைகள் முறைப்படுத்தப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007-ம் ஆண்டு முதல் 2012 வரை இந்தியாவில் விற்கப்பட்ட ஆன்டிபயோடிக்குகளில் 64 சதவீதம், மத்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பின் அனுமதியைப் பெறவில்லை. இந்தியாவில் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாகப் பல புதிய மருந்துகள் விற்பனையும், விநியோகமும் செய்யப்படுகின்றன.

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் வெறும் 4 சதவீத மருந்துகள் மட்டுமே இவ்வாறு அனமதியின்றி விற்கப்படுகின்றன.

ஆன்டிபயோடிக்குகளை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஏற்கனவே இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், தற்போது சட்ட விரோதமாக ஆன்டிபயோடிக்குகள் விற்பனையிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த அனுமதி பெறாத ஆன்டிபயோடிக்குகள் 500 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மூலம் 3,300 பிராண்ட் பெயர்களில் விற்கப்படுகிறது. இவற்றில், 12 பன்னாட்டு நிறுவனங்கள் ஆகும்...

.பாஜகவில் சேர்ந்து கமிஷன் கொடுத்தால் ஊழல் செய்யலாம்...


சாரதா சிட்பண்ட் மூலம் 4000 தமிழர் குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்தவர் மம்தா பானர்ஜி...


சாரதா சிட் பண்ட் ஊழல் இந்த ஊழல் வழக்கை கேள்விப்படாதவர்களே இருக்க மாட்டார்கள், மேற்கு வங்கம் ஒடிசா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து ஏழை எளிய மக்கள் தங்கள் உழைத்து சேர்ந்த பணத்தினை இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக அளித்த உறுதிமொழியை நம்பி பணம் போட்டனர்.

சாராத சிட்பண்ட் நிறுவனத்தின் தலைவரான சுசில் சென் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர் இந்நிலையில் சாராத சிட் பண்ட் நிறுவனத்தில் பணம் போட்டவர்களுக்கு காத்திருந்தது பேர் இடி தவணை தொகை முடிவடைந்த நிலையில் மக்களுக்கு சேர வேண்டிய பணத்தினை நிறுவனம் திருப்பி கொடுக்காமல் நிறுவனம் காலதாமதம் செய்தது.

இதனால் பணம் போட்டவர்கள் பணத்தினை வாங்க வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபட மேற்கு வங்கம், ஒடிஷா மாநிலங்களில் வன்முறை வெடித்தது வன்முறையை கட்டு படுத்த போலீஸ் எடுத்த நடவடிக்கையில் 17 பேர் உயிரிழந்தனர் 1000 மேற்ப்பற்றோர் படுகாயம் அடைந்தனர்.

இதனை அடுத்து அமலாக்க துறை சாரதா நிதி நிறுவன மோசடியில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிந்தது மேலும் 10000 கோடிக்கு மேல் நிறுவனம் மக்களை ஏமாற்றி இருப்பதாகவும் தெரிவித்தது. இதன் விசாரணை விரிவடைய பா சிதம்பரம், மம்தாபானர்ஜி ஒடிசாவை சேர்ந்த பிஜு தன்வான் ஆகிய முக்கிய தலைவர்களின் பெயரும் அடிபட்டது.

இந்நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் எம் பி -ஐ கைது செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது இதனால் மம்தா மத்திய அரசு மீது கடுமையான குற்றங்களை முன்வைத்தார், பா சிதம்பரத்தின் மனைவி நளினியும் இதே வழக்கில் ஜாமினில் வெளியில் இருக்கிறார்.

திடீர் திருப்பமாக மேற்கு வங்க மாநில கமிஷனர் வீட்டை சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்ற போது மம்தா அதனை தடுத்து அவர்களை சிறை பிடிக்க தயாராகிவிட்டார்.

தன்னிச்சையான சிபிஐ அமைப்பை தடுக்க மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை அப்படி இருக்கையில் மம்தா ஏன் இப்படி செய்தார்?

தற்போது கமிசினர் வீட்டிலேயே உட்க்காந்து மத்திய அரசிற்கு எதிராக தர்ணா போராட்டத்தை தொடங்கி இருக்கிறார் மந்திரி வீட்டு கல்யாணத்திற்கு கூட செல்லாத மம்தா ஏன் கமிஷனர் வீட்டு வாசலில் உடகாத்திருக்கிறார்?

சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த மம்தா பானர்ஜி சாராத சிட் பண்ட் ஊழலுக்கு பிறகு மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக வந்தது எப்படி என்ற கேள்விகள் இப்போது மம்தா பானர்ஜியை நோக்கி நாடுமுழுவதும் வைக்க படுகிறது விரைவில் மம்தாவை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் எதிர்க்கட்சிகள் முன் மொழிந்து வருகின்றன.

இதில் மிக பெரிய சோகம் சாராத நிறுவனத்தில் முதலீடு செய்த 96 % பேர் தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்காகவும், படிப்பிற்காகவும் பணம் சேர்த்தவர்கள் அவர்களால் எதிர்த்து வழக்கு தொடுப்பதற்கு கூட பணமில்லை. இதில் 4000 தமிழ் குடும்பங்களும் அடக்கம்...

திமுக தெலுங்கர் ஸ்டாலின் கைகூலி விசிக திருமா விற்கு எப்படி சாதி கலவரம் செய்யலாம் என்றே சுத்திட்டு திரிகிறான்...


பில்லி கிரஹாமின் வெற்றி மொழி...


அன்பை தவிர வேறு எதுவும் உண்மையான பாதுகாப்பு உணா்வினை வீட்டிற்குள் கொண்டு வர முடியாது.

உங்கள் தனிமையை நீங்கள் இழக்கும்போது மிகவும் மதிப்புமிக்க ஒரு விஷயத்தை இழந்துவிட்டதை உணா்வீா்கள்.

ஒவவொரு நாளும் கடவுள் நமக்கு அளித்த பாிசே,நமது வயது ஒரு விஷயமே அல்ல.

செல்வத்தின் இழப்பு எவ்வித இழப்புமில்லை. சுகாதாரத்தின் இழப்பு சிறிதளவு இழப்பே. குணத்தின் இழப்பே முழுவதுமான இழப்பு.

மரணத்தை விட்டு யாரும் ஒடிவிட முடியாது. இறுதியில் அனைவரையும் அது கைபற்றியே தீரும்.

மன்னிப்பு மற்றும் நோ்மை ஆகியவையே மனிதனின் இரண்டு உயாிய ஆன்மீக தேவைகளாகும்.

கடவுள் நமக்கு இரண்டு கைகளைக் கொடுத்திருப்பது ஒன்று பெற்றுக் கொள்ளவும் மற்றொன்று கொடுப்பதற்தகுமே.

உங்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான இரு வழி உரையாடலே பிரார்த்தனை.

பெற்றோ்களிடம் மாியாதை குறைவாக நடந்துகொள்ள அனுமதிக்கப்படும் ஒரு குழந்தை,வேறு யாரிடமும் மரியாதையாக நடந்துகொள்ள வாய்ப்பில்லை.

தைாியம் ஒரு தொற்று. தைாியமானவன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது மற்றவா்களின் முதுகுத்தண்டும் விறைக்கின்றது.

நோ்மையே எதையும் விற்பனை செய்வதற்கான மிகப்பெரிய தகுதியாக உள்ளது...

பாஜக மோடியும் ஏமாற்று வேலைகளும்...


பூமியுடன் தொடர்பில் இருங்கள்...


நம்மில் எத்தனை பேர் தினமும் பூமியுடன் தொடர்பில் உள்ளோம் அதாவது வேறும் கால்களுடன் நிலத்தில் நடக்கிறோம் ? பதில் முக்கால்வாசி இல்லை என்பதே.

வேறும் கால்களுடன் நடந்ததால் நோய் தொற்றிக்கொள்ளும் என சொல்லியே காலனிக்கு (செருப்பு) பழகினோம், இப்பொழுது காலனியை விட shoes அணிவதை மார்டனகவும், பெருமிதமாகவும் கொள்கிறோம்.

சரி இப்போது university of  California மற்றும் journal of Environmental and Public Health இவை இரண்டு அமைப்புகளும் மனிதன் காலனி அணியாமல் வேறும் கால்களுடன் பூமியில் நடந்தால் மனித உடம்பில் ஏற்ப்படும் மாற்றம் பற்றி ஒரு ஆய்வு நடத்தின அந்த ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை பார்ப்போம்.

ஆய்வறிக்கைப்படி நாம் பூமியில் வேறும் கால்களுடன் நடப்பதால் ஏற்ப்படும் நன்மைகள்...

புவி இயற்கையாகவே negative charge (-) கொண்டது மற்றும் anti-oxidants கொண்டது, எனவே வேறும் கால்களுடன் நாம் பூமியில் நடக்கும் போது  உடல் செல்களை பாதிக்கும் தொடர் செயல்முறையான ஆக்சிஜனேற்றம் தடுக்கப்படுகிறது அதாவது உடலுக்கு நேரடியாக பூமியில் இருந்து vitamin "C" கிடைக்கிறது.

உடலில் எலக்ட்ரான் ஓட்டம் தடையில்லாமல் சீராக பரமரிக்கபடுகிறது.

எலும்பு, கல்லிரல், மூளை (பார்கின்சன்) போன்ற உறுப்புகளை பாதிக்கும் நாள்பட்ட சிதைவு எனப்படும் Chronic Degenerative Diseases  க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

மற்றும் வேறும் கால்களுடன் நடப்பதன் மூலம்  chronic stress, உடல்வலி, தூக்கமின்மை, உடல் வீக்கம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

தொடர்ந்து ஒருமணி நேரம் இடைவெளியில் பூமியில் தொடர்பில் இருப்பதன் மூலம் முகத்தில் இரத்த ஓட்டம்  அதிகரிக்கிறது மற்றும் சீராகபராமரிக்கப்படுகிறது, இதன் மூலம் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கிறது (முகத்திற்கு முகபொலிவிற்காக பயன்படுத்தும் cream அவசியம் இருக்காது).

மிகமுக்கியமாக blood viscosity (இரத்த பாகுத்தன்மை) குறைக்கப்படுகிறது. இதனால் இதயநோய்கள் முற்றிலும் குறைக்கபடுகிறது.

எனவே இயற்கையோடு இயைந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள் இதுவே நமக்கும் நம் தலைமுறைக்கும் நல்ல வாழ்வியலை தரும் மற்றும் நாகரிகத்தால் வரும் நோய்களை களையெடுக்கும்.

முடிந்தவரை மரகன்றுகளை நட்டு பராமரியுங்கள்...

Height Increase Tips / உயரமாக வளர்வது எப்படி.?


https://youtu.be/bYk-JzrVqu0

Subscribe the channel for more tips...

பாஜக அதிமுகவின் ஏமாற்று வேலைகள்...


மேகதாது மற்றும் முல்லை பெரியாறில் அணைகள் கட்டுவதர்க்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கும், எழுதிய கடிதங்களுக்கும் பதில் சொல்லாத மத்திய அரசு, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான முறையீட்டில் அவசர அவசரமாக "கேவியட்" தாக்கல் செய்துள்ளது.

என்ன ஒரு தமிழின விரோதம்...