04/02/2018

நீரின்றி காய்ந்து வரும் நெற்பயிர்கள்; வேதனையில் விவசாயிக்கு மாரடைப்பு...


தேவதானப்பட்டி : தேனிமாவட்டம் குள்ளப்புரத்தில் நெற்பயிர்கள் நீரின்றி காய்ந்து வரும் வேதனையில் விவசாயி கருப்பணன்,70,க்கு மாரடைப்பு ஏற்பட்டது.தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரத்தில் பெரியகண்மாய் உள்ளது. வராக நதியில் இருந்து இதற்கு தண்ணீர் வருகிறது.

இதன் நீரை ஆதாரமாக கொண்டு ஆயிரம் ஏக்கரில் நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்யப்படுகிறது.கடந்த அக்டோபர், நவம்பரில் பெய்த மழையால் கண்மாய் நிரம்பியது. இதன் மூலம் நுாறு ஏக்கரில் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடவு செய்து 55 நாட்கள் ஆன நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன.

குள்ளப்புரத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பணன், நீர் பாய்ச்ச நேற்று வயலுக்கு சென்றார். கண்மாயில் இருந்து பானத்திற்காக நீர் திறக்கப்படவில்லை. இதனால் காய்ந்துவரும் நெற்பயிர்களை பார்த்து வேதனையடைந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு தரையில் சாய்ந்து மயங்கினார். மற்ற விவசாயிகள், அவரை மீட்டு தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்...

தமிழகத்தில் அஜினோ மோட்டோவை தடைச் செய்வோம்...


அமானுஷ்யம்...


பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே விரும்பும்..

எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன....

பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காண முடியும்..

உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். .

பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே முயற்சி செய்யும்....

விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும். .

பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்....

பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள். .

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்....

நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்....

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..

எப்பவுமே கோவில்கள்/ சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும். .

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு.. ஆனால் உணர (sense) முடியாது. ....

பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும். .

பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலை செய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு....

பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..

எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும். .

பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்....

பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும். .

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்து போனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு...

உலகில் அனைத்து இடங்களிலும் அவர்கள் இனம், மொழி மற்றும் மண் சார்ந்தே அரசியல் வளர்கிறது, ஆனால் தமிழ்நாட்டில்..?


இறுதிப்பதிவு தமிழர்களின் கைகளில் தமிழ் தேசிய அரசியலும், அதிகாரமும் என்றே நிறைவு பெறும்...

அம்பேத்கர் உண்மையில் தாழ்த்தப்பட்ட மகர் சாதி இல்லையாமே....


அவரது உண்மையான பெயர் அம்பாவடேகர்.வடேகர்...

வடுகர்  என்பது உயர்சாதி வகுப்பினராமே...

என்னங்கடா, நீங்கள் கட்டிவைத்த பொய் மூட்டைகள் எல்லாம் இப்படி கிழிந்து சிதறுகிறது...

வாகன ஓட்டிகளை தாக்கி பணம் பறித்த சிறப்பு எஸ்ஐ உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்....


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல்நிலைய சிறப்பு எஸ்ஐ முருகன் மற்றும் ஆயுதப்படை போலீசார் சுரேஷ், அய்யனார் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வானூர் சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது பைக்கில் வந்தவர்களிடம் வழக்குபோடாமல் பணத்தை கேட்டு மிரட்டி அதனை பெற்றுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனைத் தொடர்ந்து இந்த புகாரில் சிக்கிய சிறப்பு எஸ்ஐ முருகன் உள்ளிட்ட 3 பேரையும் விழுப்புரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார். மேலும் துறைரீதியாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். விசாரணை முடிந்து எஸ்பியிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சிறப்பு எஸ்ஐ முருகன், போலீசார் சுரேஷ், அய்யனார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்...

நினைவில் இருக்கட்டும்... thermodynamics இன் 1st law இது தான்...


அரிசி, உளுந்து ஆகியவற்றை நீரில் ஊறவைத்து ஆட்டு உரலில் மாவாக அரைத்து தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லி, தோசை போன்றவற்றை முன்பு தயாரித்தார்கள்...


பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் சொந்தமாக ஆட்டு உரல் வாங்கி வைத்திருப்பார்கள்.

சாதாரண மக்கள் பொங்கல், ஆடி போன்ற திருவிழா காலங்களில் தான் இட்லி தோசைக்கு மாவு ஆட்டுவார்கள்.

அச்சமயங்களில் பணக்காரர் வீடுகளில் உள்ள ஆட்டு உரலில் அவர்கள் மாவு அரைத்த பின் காத்திருந்து அனுமதித்தால் மட்டுமே மற்றவர்கள் அரைக்க முடியும்.

எனவே அத்தகைய சாதாரண மக்களின் துன்பத்தைப் போக்க, இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி, கன்னிராஜபுரம்  மற்றும் சாயல்குடி போன்ற சில ஊர்களில் ஒவ்வொரு தெரு மூலைகளிலும் பெரிய அளவிலான ஆட்டு உரல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இவை மன்னர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த ஆட்டு உரலில் வரிசைப்படி பொதுமக்கள் மாவு அரைத்துக் கொள்ளலாம்.

காலமாற்றத்தின் காரணமாக கிரைண்டர் மிக்ஸி ஆகியவை புழக்கத்தில் வந்த பின்பு 1990 க்குப் பின் ஆட்டு உரல் பயன்படுத்துவது படிப்படியாக குறைந்து தற்போது சுத்தமாக  மறைந்து விட்டது.

குறுகலான தெருக்களில் இவை இடத்தை அடைத்துக் கொண்டு இருந்ததாலும், சாலையை அகலப்படுத்துதல் போன்றவற்றாலும் இந்த உரல்கள் வேண்டாத பொருளாகி விட தற்போது அவை சாலை ஓரத்தில் போடப்பட்டு உள்ளன.

சாயல்குடியில் இருந்து தரைக்குடி செல்லும் சாலையில் இருவேலி கண்மாய் அருகில் இரண்டு உரல்கள் கிடக்கின்றன.

இவை சாயல்குடியில் இருந்து கொண்டு வந்து போட்டதாகத் தெரிகிறது...

அரசே நீர் நிலையை ஆக்கிரமிப்பு செய்கிறது இதை எல்லாம் கேட்டால் நாம தேச விரோதிகள்...


தமிழர் நாட்டை தமிழர் தான் ஆளனும் என்று சொல்லக் கூடாது அது இனவெறி...


தமிழ்நாட்டை ரெட்டி ஆள வேண்டும் என்று ஒரு வந்தேறி சொல்லலாம் அது தான் முற்போக்கு...

போங்கடா திருட்டு திராவிட பசங்களா...

அடேய்... மானங்கெட்ட நாய்களா...


இராகம்...


இராகத்தைத் தமிழிசையில் நிரம் என்று அழைப்பர்..

இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து "தாட்" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கின்றன.

தென் இந்தியாவில் ராகங்கள் 72 மேளாகர்த்தா ராகங்களின் அடிப்படையில் ஜனக - ஜன்ய ராகங்களாக வகுக்கப்படுகின்றன. 36 மேலகர்த்தா இராகங்கள் ப்ரதி மத்தியத்திலும்... 36 இராகங்கள் சுத்த மத்தியத்திலும் அமைந்திருக்கின்றன.....

‌இராகம் என்பது இந்திய பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளன என்று பலர் கூறுகின்றனர்.

இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது. இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்.

இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும் போதும் (ஆரோகனத்தில்) கீழே செல்லும்போதும் (அவரோகனத்தில்) எந்த ஸ்வரங்களை வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது.

ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும்.

வெகு சில இராகங்களில் மட்டும் நான்கு அல்லது மூன்று ஸ்வரங்களோ, அல்லது ஏழுக்கு மேல் ஸ்வரங்கள் (அன்னிய ஸ்வரங்களை கூட்டி) வரலாம். ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு.

எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன.

ஒரு ராகத்தின் ஆரோகனத்திலோ அவரோகனத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர ராகம் என்று அழைக்கப்படும்.

கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயர் உண்டு...

பித்தவெடிப்பு மறைய...


கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி...


கோயில் நகரமான பழனிக்கு தென்மேற்கே உள்ள பொருந்தல் என்ற கிராமத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வாய்வின்போது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த சவஅடக்கம் செய்யும் தாழிகள்  கண்டுடெடுக்கப் பட்டுள்ளன.

இந்த அகழ்வாயினால், தமிழ் பிராமி எழுத்தின் காலம் எதுவாக இருக்கலாம்  என்பது பற்றிய ஆர்வம் தரும் சில  உண்மைகள் வெளி வந்துள்ளன. புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் முனைவர் கே.ராஜன் அவர்கள் மேற்பார்வையில் இந்த அகழாய்வு 2009, 2010 ஆம் ஆண்டு களில் மேற்கொள்ளப்பட்டது.

கண் டெடுக்கப்பட்டுள்ள இந்த சமஅடக்கம் செய்யப்பட்ட  தாழிகள் பல அரிய பொருள்களைத் தந்துள்ளன. இரண்டு கிலோ நெல் உள்ளே வைக்கப்பட்டிருந்த நான்கு கால் கொண்ட ஜாடி ஒன்றும், வா-அய்-ரா என்ற தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட இரண்டு மோதிர தாங்கிகள் ஆகியவை இதில் அடக்கம். அமெரிக்காவின் பிடா பகுத் தாய்வு நிறுவனத்தால் இந்த நெல் கி.மு.490 காலத்தைச் சேர்ந்தது என அக்சலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி   முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த சவஅடக்கம் செய்யப்பட்ட தாழியில் இருந்த மொத்த பொருள்களும் இந்தத் தாழி புதைக்கப்பட்டபோது ஒரே முறை யில் வைத்ததாகத்தான் இருக்க முடியும். இதிலிருந்து அந்த நெல்லிக் காலமும், தாழியில் காணப்பட்ட தமிழ் பிராமி எழுத் துகளின் காலமும் ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்பதை ஊகித்தறிய முடிகிறது. அந்தத் தாழியில் வைக்கப்பட்டிருந்த எலும்புகளின் சொந்தக்காரரின் பெயராக வா-அய்-ரா என்ற அந்த தமிழ் பிராமி எழுத்துகள் இருக்கக்கூடும்.

திருநெல்வேலி நகரத்துக்குக் கிழக்கே 24 கி.மீ. தொலைவில் உள்ள ஆதிச்ச நல்லூரில்  கண்டு பிடிக்கப்பட்ட பெருங் கற்காலத்தைச் சேர்ந்த  இடுகாட்டில் நெல்லும் உமியும் கண்டெடுக்கப்பட்டன.  அங்கு அகழாய்வை மேற்கொள்ள  100 ஆண்டுகள் கழித்து 2004 பிப்ரவரியில் இந்திய அகழ்வாய்வுத் துறை பரிந் துரைத்தது. அதன்பின் மேற்கொள்ளப் பட்ட அகழாய்வில் 157 தாழிகள் கண்டெ டுக்கப்பட்டன. எலும்புகள் வைக்கப்பட் டிருந்த பெரிய தாழிகளின் உள்ளே வைக்கப்பட்ட சிறிய மண்பானைகளில் நெல்லும் உமியும் வைக்கப்பட்டிருந்தன.

ஒரு உயரமான கம்பீரமான பெண்நின்று கொண்டிருப்பது போன்றதும், அவர் அருகில் வளர்ந்து நிற்கும் நெற்கற்றை வைக்கப்பட்டிருந்தது போன்றதுமான ஓவியம் வரையப்பட்ட மண்பாண்டத்தின் உடைந்த துண்டுகள் ஒரு பெரிய தாழியில் உள்ளே வைக்கப் பட்டிருந்தன. மற்றொரு தாழியினுள் எழுதப்பட்ட ஒரு துண்டு காணப்பட்டது. அது தமிழ் பிராமி எழுத்தின் ஒரு கூறாக இருக்கலாம் என்று பழங்கால எழுத்தாய்வாளர் ஒருவர் கூறினார். கா-ரி-அய-ர-வா(நா)-டா என்ற ஏழு எழுத்துக்கள் அதில் காணப்பட்டன. இந்த வழக்கிலும், இந்த எழுத்துகள் அந்த தாழியில் வைக்கப்பட்டிருந்த எலும்புகளின் உரிமையாளரின் பெயராக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

பொருந்தை அகழாய்வில், தாழியில் வைக்கப்பட்டு இருந்த நெல்லின் காலத்துடன் தொடர்புபடுத்தி அதில் காணப்பட்ட எழுத்துக்களின் காலத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டபோது,  அந்த எழுத்து கி.மு.490 காலத்தைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய் வில், ‘Preliminary thermo-luminescence  dating’ முறையில் தாழிகளில் காணப்பட்ட பானைகள் கி.மு. 500 காலத்தைச் சேர்ந்தது என்ற முடிவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுக் குழு வந்தது. (தி இந்து 17.2.2005) அந்தத் தாழி யில் இருந்த பொருள்களின் காலத்தை கார்பன் 14 முறையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாலும், அது போன்றதொரு சோதனையின் முடிவு வெளியிடப்படவில்லை.  தமிழ் பிராமி எழுத்துகளில் இருந்த பதிவை களத்தில் உள்ள மற்ற அதிகாரம் பெற்ற கல்வியாளர்கள் பரிசீலனை செய்யாமல் விட்டிருக்கலாம் என்று கருதலாம்.

சிறிய இடுகாட்டுப் பானைகளில் காணப்பட்ட நெல் அங்கு காணப்பட்ட எழுத்துகளின் காலத்துடன் ஒரு தொடர்புடையது. எழுத்துகளின் காலம் பற்றிய ஒரு முடிவை மேற்கொள்வதற்காக நெல்லின் காலம் பற்றி சோதனை மேற்கொள்ளப்பட்டதற்கான சான்று ஏதுமில்லை. பொருந்தல் அகழாய் வின்போது எட்டப்பட்ட இறுதியான முடிவும், ஆதிச்சநல்லூர் கண்டுபிடிப்பு களும்  கீழ்க்குறிப்பிடப்பட்டதை மெய்ப் பிக்கின்றன.

1. அசோகருக்கு முந்தைய காலத்திய பண்டைய தமிழகத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

2. கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி நடந்து வந்துள்ளது.

கே. ரவீந்திரன்
உதவி பொதுக் கணக்காய்வர் (ஓய்வு)
திருவனந்தபுரம்...

பேராசிரியர் பணிக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிய கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கைது...


சுதந்திரம்...


நீ எதிலிருந்து விடுபட நினைக்கிறாயோ அவற்றுடனெல்லாம் நீ மேலும் பந்தப்படுவாய்.

ஏனெனில் சுதந்திரம் என்பது எதற்கும் எதிரானதல்ல.

சுதந்திரம் என்பது எதனிடமிருந்தோ அல்லது எதற்காகவோஅல்ல.

சுதந்திரம் என்பது எதனுடனும் உடன்படுவதுமல்ல.

சுதந்திரம் என்பது கடந்து செல்வது. உடன்பாடு, எதிர்மமறை இரண்டையும் கடந்து செல்வது. சுதந்திரம் என்பது இருமைத் தன்மையிலிருந்து விடுதலை.

அங்கு உடன்பாடு எதிர்மறை எங்கிருக்கிறது.....?

எதனுடன் சம்பந்தப்படுவது....?

எதை எதிர்ப்பது........?

சம்பந்தம் புத்திசாலித் தனமானதல்ல. எதிர்ப்பும் பழையதோடு சம்பந்தப்பட்டது தான்.

ஆகவே, புரிந்துகொள்-சண்டையிடாதே.

சண்டையிடுவதன் மூலம் யாராவது ஏதாவது அடைந்திருக்கிறார்களா......?

வலியைத் தவிர-தோல்வியைத் தவிர.

ஆகவே, தப்பி ஓடாதே, பதிலாக விழித்துக்கொள்.

தப்பி ஓடுவதனால் ஒருவன் தப்பி ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.

அதற்கு முடிவு இல்லை.

அறிதலே சுதந்திரம். பயமல்ல, கோபமல்ல, பகையல்ல, எதிர்ப்பல்ல.

அறிதல் மட்டுமே சுதந்திரம்...

சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில், 20 மணிநேரம் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய இளைஞர் சுயநினைவின்றி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி...


நாம் செலுத்திய வாக்குகளின் பிரதிபலிப்பு தான் அவர்கள் நமக்கு செய்யும் இந்த அற்புதமான திட்டங்கள்..


நமது தமிழ் தேசிய அரசியலை விதைக்காத வரை நமக்கான அனைத்து திட்டங்களும் வெற்றிடமாக தான் இருக்கும்..

இப்போது சில பக்தாஸ், திராவிடன்ஸ், தே(வே)சப்பற்று கொண்டவர்கள் தானாக முன்வந்து இந்தப்பதிவை எதிர்ப்பார்கள்..

அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...

கத்தாழையை பத்தி தெரிஞ்ச்சிக்கலாமா?


இளமையா இருக்க ஆசையா?

‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மருத்துவம்.

குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.

‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு..

கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில்சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.

கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

என்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்...

சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமல் இருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண்ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.

தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது...

அலையின் தொடர்பு...


தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப்படுகின்றீர்கள். வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அது போலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே சபித்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பரவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாக கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்து விட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும் பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த  வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாயம் முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன...

பாஜக தமிழிசை மற்றும் பொன்னார்க்கு தன் சாதியை மறுத்தால் தான் கோபம் வரும்...


தமிழினத்தையோ அல்லது தமிழையோ அழித்தால்.. பணம் பதவி வாங்கிட்டு மூடிட்டு தான் இருப்பாங்க.. ஏனெனில் இவர்கள் தமிழினத் துரோகிகள்...

எண்ணெய் பாக்கெட்டின் பின்புறம் உள்ள " ingredients " பாருங்கள்.. பாமாயில் - 80%.. சூரியகாந்தி எண்ணெய் - 20%...


ஆனால் முன்புறம் கவரில் இது சூரியகாந்தி எண்ணெய் என்று உள்ளது...

அதே போல் External use only (வெளி உபயோகத்திற்கு மட்டும்) என்று உள்ளது.

அப்படி என்றால் இது சமையல் எண்ணெய் இல்லை என்று தானே அர்த்தம்.

ஆனால் இதை சமையல் எண்ணெய் என்று விற்பனை செய்வதுதான் பெரிய கொடுமை.

பாமாயில் எனும் பெயரில் வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோலிய கழிவுகளும் எண்ணெயில் கலக்க இறக்குமதி செய்யப்படுவதையும் கவனத்தில் கொள்ளவும்.

மக்களும் பார்க்காமல் வாங்குறார்கள்.

அரசும் கேட்பாரற்று கிடக்கிறது.

என் மக்கள்.. கடல் மலை மேகம் தான் எங்கள் கூட்டம்...

தமிழா விழித்தெழு...


யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுஉடமை சிந்தனை மலர்ந்த இந்த மண்ணின் மைந்தர்கள் மறைக்கபட்டும், மறக்கப்பட்டும் வரலாற்றிலிருந்து தொலைகபட்டும் வருகின்றனர்..

உலகிற்கே வானியல் அறிவியலையும் , வள்ளுவத்தையும், நாகரிகத்தையும் தந்தவர்கள் இன பற்று நீங்கி சாதியால் மதத்தால் பிளவு பட்டு கிடப்பது யாரால்?

பிராமணியத்தை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு திராவிடத்தை திணித்துவிட்டு தமிழினத்தின் உடமைகளையும் உரிமைகளையும் தமக்குள் பங்கு போட்டு கொண்டவர்கள் தமிழர் அல்லாதவர்களே...