04/02/2018

அமானுஷ்யம்...


பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே விரும்பும்..

எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன....

பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காண முடியும்..

உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். .

பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே முயற்சி செய்யும்....

விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும். .

பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்....

பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள். .

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்....

நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்....

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..

எப்பவுமே கோவில்கள்/ சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும். .

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு.. ஆனால் உணர (sense) முடியாது. ....

பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும். .

பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலை செய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு....

பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..

எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும். .

பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்....

பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும். .

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்து போனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.