பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் சொந்தமாக ஆட்டு உரல் வாங்கி வைத்திருப்பார்கள்.
சாதாரண மக்கள் பொங்கல், ஆடி போன்ற திருவிழா காலங்களில் தான் இட்லி தோசைக்கு மாவு ஆட்டுவார்கள்.
அச்சமயங்களில் பணக்காரர் வீடுகளில் உள்ள ஆட்டு உரலில் அவர்கள் மாவு அரைத்த பின் காத்திருந்து அனுமதித்தால் மட்டுமே மற்றவர்கள் அரைக்க முடியும்.
எனவே அத்தகைய சாதாரண மக்களின் துன்பத்தைப் போக்க, இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி, கன்னிராஜபுரம் மற்றும் சாயல்குடி போன்ற சில ஊர்களில் ஒவ்வொரு தெரு மூலைகளிலும் பெரிய அளவிலான ஆட்டு உரல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இவை மன்னர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த ஆட்டு உரலில் வரிசைப்படி பொதுமக்கள் மாவு அரைத்துக் கொள்ளலாம்.
காலமாற்றத்தின் காரணமாக கிரைண்டர் மிக்ஸி ஆகியவை புழக்கத்தில் வந்த பின்பு 1990 க்குப் பின் ஆட்டு உரல் பயன்படுத்துவது படிப்படியாக குறைந்து தற்போது சுத்தமாக மறைந்து விட்டது.
குறுகலான தெருக்களில் இவை இடத்தை அடைத்துக் கொண்டு இருந்ததாலும், சாலையை அகலப்படுத்துதல் போன்றவற்றாலும் இந்த உரல்கள் வேண்டாத பொருளாகி விட தற்போது அவை சாலை ஓரத்தில் போடப்பட்டு உள்ளன.
சாயல்குடியில் இருந்து தரைக்குடி செல்லும் சாலையில் இருவேலி கண்மாய் அருகில் இரண்டு உரல்கள் கிடக்கின்றன.
இவை சாயல்குடியில் இருந்து கொண்டு வந்து போட்டதாகத் தெரிகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.