08/07/2017

பிரமிடு இரகசியம்...


தமிழ் இலக்கியங்களில் வரக்கூடிய மேருமலை என்பது ஒருவகையில் கும்பத்தை குறித்தாலும்...

ஆதியில் அது ஒரு சூரிய வழிபாட்டுதளமான பெருமேடை (Pyramid) தான் குறித்து இருக்க வேண்டும்..

அது ஏதோ ஒரு கடல் அழிவில் அழிந்து இருக்க வேண்டும்...

ஆனால் அந்த பெருமேட்டை தங்கத்தால் அலங்கரித்த ஒரு வணிகக்கூட்டம் இருந்தது...

அதை பெருமையாக அதுவே தன் வரலாற்றில் சொல்லி கொள்கிறது...


மன்னர் குடும்பம் மறைந்து கொண்டாலும் துரத்திவிடப்பட்ட ஒரு வணிகக்கூலி கூட்டம் தன் கொண்டையை மறைக்க தவறியது...

கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் இட ஒதுக்கீடு வாங்கி தந்தார். நீங்க படிக்கிறதே அவர் போட்ட பிச்சை தான்' என்று மார்தட்டும் ராமசாமி தொண்டர்களுக்கு...


மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர, கர்னாடக, மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை --- பெரியார்.

ஆக, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆந்திர, கன்னட, கேரளா பகுதிகள் இருந்தது உண்மை. அந்த சென்னை ராஜ்தானிக்காக எடுக்கப்பட்ட சாதி பட்டியலில் நாயக்கர், மராட்டியர், சக்கிலியர், கன்னடர், மலையாளி என்று பலரும் இருந்தனர். அப்போது MBC கிடையாது. BC மற்றும் SC மட்டுமே.

பின்பு மொழிவாரி மாநிலங்கள் கேட்டும் ஆந்திர, கர்னாடக, கேரளாவினர் தனி தேசிய இனங்களாக பிரிந்து சென்றனர். இருந்தாலும் தமிழர் என்ற தேசிய இனமாக எழவிடாமல் 'நாம எல்லாம் திராவிடர்' என்று திரும்பவும் காயடித்தார் பெரியார். இது விஷயம் அல்ல. இனி பார்க்க போவது தான் விஷயம்.

மொழி வாரி மாநிலம் பிரிந்து போனதற்கு முன்பு இருந்த அதே சாதி பட்டியலை தான் இன்று வரை நாம் இட ஒதுக்கீட்டுக்கு பயன்படுத்தி வருகிறோம். இந்த உண்மையை எந்த திராவிட அயோக்கியனாவது உங்களுக்கு சொல்லி இருக்காங்களா...?

தமிழர் அல்லாத சாதிகள் அந்த சாதி பட்டியலில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேல். அவர்களுக்கு இன்றும் தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு BC / SC பட்டியலில் இருந்து கொடுத்து கொண்டு தான் இருக்கிறான் திருட்டு திராவடர்கள்.

எவன் ஊட்டு சலுகையை எவண்டா அனுபவிக்கிறது...?

இன்றைய ஆந்திர கர்னாடக கேரளாவில் எவனாவது இது மாதிரி தமிழனுக்கு ஒதுக்கீடு தரானா...?

மாநிலம் பிரிச்ச உடனே அவன் அவன் அவனுக்கு புரோஜனமா சாதி பட்டியலை தயாரிச்சி, அவனுக்கு மட்டுமே பயன்படும் படி இட ஒதுக்கீடு மாத்திகிட்டானே....?

ஏண்டா திராவிட சொம்புகளா, நீங்க ஏன் இன்னும் மாத்தாம இருக்குகீங்க...?

கேட்டா, 'அவன் நம்ம ஆளு தான், கொடுத்தா என்னன்னு கேப்பீங்க. இதை பக்கத்து மாநிலத்தில் கேட்டு தமிழனுக்கு வாங்கி தர உங்களுக்கு துப்பு இருக்கா...?

ஆனா தமிழன் மட்டும் பெருந்தன்மையா இருக்கணும்...? பரவா இல்லை. இருந்தாலும் உங்க கேள்விக்கு பதில் சொல்றோம்..

இப்படி அயோக்கிய தனமான இட ஒதுக்கீட்டை தமிழ் நாட்டில் திராவிட ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வந்ததால் வந்த வினைகளின் ஒரு சில உதாரணங்கள் இவை.

ஒரு கோடிக்கும் மேல் வன்னியர்கள் உண்டு. ஆனால் அரசு பணியாளர்களில் அவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் கூட இல்லை. ஆக BC இட ஒதுக்கீட்டால் வன்னியருக்கு பிரயோஜனம் இல்லை..

MBBS சீட்டில் 180 இல் கோனாருக்கு வெறும் 5 தான். அப்போ மீதியை யார் ஆட்டையை போடுறா...?

முக்குலத்தோர் தொடங்கி கவுண்டர் என அனைத்து தமிழ் சாதிகளின் நிலைமையும் இது தான்.

BC யில் இப்படி என்றால், SC பிரிவில் எந்த அடிப்படையில் அருந்ததியினருக்கு 3% சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொடுத்தீங்க...?

அப்போ யார் தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறா...?

தமிழக அரசு செகரட்டியெட்டில் தெலுங்கர்கள் மட்டும் சுமார் 40%க்கும் மேல். இது எப்படி சாத்தியமானது?

இருக்கும் அனைத்து திராவிட கட்சிகளின் தலைவர்களும், பெரும்பான்மை அமைச்சர்களும் தெலுங்கர்களே.

ஆக, தமிழர் அல்லாதோரின் விகிதாச்சாரத்துக்கு அதிகமாகவே அவர்கள் இட ஒதுக்கீட்டால் இங்கே பயன் அடைத்துள்ளனர் என்பதும், தமிழ் சாதிகள் திருவோடு ஏந்தி கொண்டு தான் உள்ளனர் என்பதற்கும் இவை சில உதாரணங்கள் மட்டுமே.

ஏம்பா திராவிட சிகாமனிகளா, இப்படி என் தமிழ் சாதிக்கு வர வேண்டிய சலுகை எல்லாத்தையும் கமுக்கமாக நீங்க அனுபவிச்சுக்கிட்டு இருக்குறதும் இல்லாம, 'கவுண்டரோட இட ஒதுக்கீட்டை ஒரு பறையர் தான் பரிச்சிகிட்டார்' என்று எங்களுக்குள்ளையே சண்டையை மூட்டி விட்டுகிட்டு இருக்கீங்களே..... எவ்ளோ பெரிய அயோக்கியர்கள் நீங்கள்...?

சுதந்திரம் வாங்கிய நாள் முதல் இன்று வரை சாதி வாரியான இட ஒதுக்கீடு தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது' என்று RTI மூலம் தமிழகத்துக்கு கேள்வி அனுப்பப்பட்டு உள்ளது.

ஆக தமிழக அரசு பதில் கொடுத்தாலும் சிக்கல், கொடுக்காவிட்டாலும் திராவிட யோக்கிய சிகாமணிகளுக்கு சிக்கல் தான்.

அந்த புள்ளி விவரம் வெளியில் தெரியும் போது 'பெரியாரும், திராவிடமும் இட ஒதுக்கீடு மூலம் தமிழனை கை தூக்கி விட்டாங்க' என்ற பொய் பிம்பம் சுக்கு நூறாக உடையும்.

தமிழா உனக்கு தமிழகத்தில் வேலை இல்லாமல் செய்து தமிழகத்தை விட்டு உன்னை வெளியேற்றி வெளி நாட்டில் அடிமைப் படுத்திக் கொண்டிருக்கிறது இந்த திராவிடம்...

பாஜக வும் சாதி பிரிவுகளும்...


வடதமிழக மக்களுக்கு ஒரு வரலாற்றுக் கதை...


பிரான்ஸின் எல்லையை ஒட்டிய ஜெர்மனியின் ஒரு பகுதி 'ஸார்' (saar)...

முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்றபோது பிரான்ஸ் அதை எடுத்துக்கொண்டது.

அங்கே பெருமளவு நிலக்கரி வளம் இருந்தது. பிரான்ஸ் அதை நன்கு பயன்படுத்தியதுடன் அப்பகுதி ஜெர்மானியரையும் நன்றாக கவனித்துக்கொண்டது.

அதாவது ஒட்டுமொத்த ஜெர்மனியும் வறுமையில் திண்டாடியபோது ஸார் ஜெர்மானியர் ஓரளவு வசதியாக வாழ முடிந்தது.

பிறகு ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்ததும் இழந்த பகுதிகளை மீட்க முயற்சி மேற்கொண்டார்.

பிரான்ஸ் அதைத் திருப்பித்தர வேண்டும் என்று கேட்டார்.

பிரான்சுக்கு ஹிட்லரை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லை.

ஒப்பந்தத்தின்படி வாக்கெடுப்பு நடத்தி ஸார் மக்களே தீர்மானிக்கும்படி ஒரு ஏற்பாடு செய்தனர்.

பிரான்ஸ் ஸார் பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்தது.

ஜெர்மனிக்கு ஸார் போனால் வறுமை வரும். நாஜிக்கள் இனவெறியால் போர் வரும்.
பிரான்ஸிற்கு வாக்களித்தால் உங்களை ஸார்லேன்ட் எனும் தனிநாடாக ஆக்கித் தருவோம் என்றெல்லாம் ஆசை காட்டினர்.

பிரான்சிற்குள் இருக்கும் ஸாரில் நாஜிக்களால் நேரடியாக பிரச்சாரம் செய்ய முடியாத நிலை.

1935 ல் வாக்கெடுப்பு நடந்தது.

தமது பெரும் நிலக்கரி வளத்துடன் ஸார் ஜெர்மனிக்கு வாக்களித்து தம் தாய்நிலத்தோடு மீண்டும் இணைந்தது.

கதை இதோடு முடியவில்லை.

பிரான்ஸ் சொன்ன அத்தனையும் நடந்தது.
வறுமை, இரண்டாம் உலகப்போர், தோல்வி, பட்டினிச்சாவு, இனப்படுகொலை பழி என அத்தனையையும் ஜெர்மனியோடு ஜெர்மனியாக ஸார் சந்தித்தது.

இப்போது மீண்டும் பிரான்ஸ் ஸாரை எடுத்துக்கொண்டது.

முன்பு போலவே ஜெர்மனியின் பரிதாப நிலையைவிட ஸார் மக்கள் ஓரளவு நல்லநிலையில் இருந்தனர்.

பிரான்ஸ் முன்பை விட அதிக சலுகையாக ஸார் பகுதிக்கு தன்னாட்சி கொடுத்து தனது நாட்டில் வைத்துக்கொண்டது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அப்போது ஸார் மக்களுக்கு தனிநாடு ஆகலாமா? பிரான்சுடன் இணைவதா? ஜெர்மனியுடன் இணைவதா? என்று மூன்று வழிகள் இருந்தன.

அப்போது மீண்டும் ஜெர்மனிக்கே வாக்களித்து தன் தாய்நிலத்துடன் இணைந்தது ஸார்.

பேரதிர்ச்சியில் உறைந்தது பிரான்ஸ்..

ஜெர்மானியர் இனப்பற்றுக்கு முன் பிரான்சின் அத்தனை ராஜதந்திரங்களும் வீணாகிப்போனது.

அத்தகைய இனப்பற்றால்தான் இரண்டு உலகப்போர்களில் தோற்றும் இன்றும் உலகின் தலைசிறந்த வல்லரசாக நிமிர்ந்து நின்று ஐரோப்பா கண்டத்திற்கே தலைமை தாங்கி வழிநடத்துகிறது ஜெர்மனி.

அன்று பிரான்சைப் போல இன்று ஹிந்தியா கதிராமங்கலம் உட்பட வடதமிழ்நாட்டு வளங்களை சுரண்ட வடக்கை தனியாக பிரிக்க சதி செய்கிறது.

ஒருவேளை வடதமிழ்நாடு நமக்கு நன்மையாக அமையுமோ என்று யாராவது சிலர் சிந்தித்தால் அதற்கான பதில் மேற்கண்ட பதிவில் உள்ளது.

இனப்பற்று பிரச்சாரம் செய்து வருவதில்லை.

வட தமிழக மக்கள் ஸார் ஜெர்மானியரைப் போன்றவர்கள்தான்.

எதற்கும் இருக்கட்டுமே என்று இப்பதிவை இட்டுவைத்தேன்.

வரலாற்றில் அடையாளம் தெரியாமல் போய் ஆயிரம் ஆண்டுகள் கழித்து பேரெழுச்சி பெற்ற ஐரோப்பிய மூத்த இனமான ஜெர்மனி போல...

தமிழர்நாடும் மீண்டு எழத்தான் போகிறது...

பாஜக மோடி இஸ்ரேலுக்கு அளித்த தமிழ் செப்பேடு...


பிரதமர் மோடி அவர்கள் இஸ்ரேல் பிரதமருக்கு அளித்த 9 -10 நூற்றாண்டை சேர்ந்த தமிழ் வட்டெழுத்து செப்பேடு, சேர அரசர் சேரமான் பெருமாள் அவர்கள் வணிகம் செய்ய வந்த யூதர்களுக்கு அளித்தது.

மோடி அவரை இந்திய அரசர் என்று மழுப்பினார்...

தமிழக விளைச்சல் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை...


141 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பஞ்சம்...

தமிழ்நாட்டில் உணவு தானிய உற்பத்தி 65 சதவீதம் வீழ்ச்சி..

பருவமழை பொய்த்துவிட்டது..

ஏரி குளங்களில் தண்ணீர் இல்லை..

காவிரி தண்ணீரும் வரவில்லை..

வர்தா புயல் பாதிப்பு..

2016-17 ல் 60 லட்சத்து 32 ஆயிரம் டன் மட்டுமே உணவுதானியம் உற்பத்தி..

இது அரசு நிர்ணயித்த இலக்கில் 3 ல் 1 பங்கு. அதாவது 65% வீழ்ச்சி. கடந்த 141 ஆண்டுகளில் இப்படி வீழ்ச்சி நடந்ததில்லை..

இதன் பாதிப்பு (அதாவது பற்றாக்குறை) இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும்..

என்று விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு சட்டசபையில் கூறினார்..

அதாவது வரும் இரண்டு ஆண்டுகளில் விளைச்சல் நல்லபடியாக அமைந்தாலும் பற்றாக்குறை இருக்கும்.


1876 ல் பஞ்சம் (The great madras famine of 1876) வந்து அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் 50 லட்சம் தமிழர்கள் இறந்தனர்..

20 லட்சம் மக்கள் தாய்நிலத்தை விட்டு வெளியேறி தோட்டக்கூலிகளாக ஆங்கில ஆட்சி நடந்த நாடுகளுக்கு போனார்கள்.

இதற்கு முக்கிய காரணம் ஆங்கிலேயர் செய்த சுரண்டலும் விவசாயத்தை மேம்படுத்துவதில் அக்கறை காட்டாமல் இருந்ததுமே..

அந்த பரிதாப நிலை மீண்டும் தற்போது ஏற்பட்டுள்ளது..

இதற்கு காரணம் ஆளும் ஹிந்தியரும் அவர்களை ஆட்டுவிக்கும் கார்ப்பரேட் கொள்ளையர்களுமே..

இப்படியே போனால் தமிழத்தில் பஞ்சம் விரைவில் ஏற்படும்.

சோமாலியா போல விவசாயம் அழிந்து பட்டினிச்சாவு வந்தபிறகு ஆயுதம் தூக்கி போராடி எந்த பலனும் இல்லை..

முடிவை இப்போதே எடுக்க வேண்டும்...

தமிழா விழித்தெழு...


கத்தி படத்தை எதிர்த்து போராடிய புரட்சியாளர்கள் எல்லாம் 2.0 படத்தை எதிர்ப் பார்களா... இல்லை ஏற்கனவே டீலிங் முடிந்து விட்டதா...


பாஜக மோடியும் மத அரசியலும்...


இசுலாமியர்கள் குல்லா அணிவித்த போது மோடி மறுத்த போது உண்மையில் வியந்தேன். வெகு நிச்சயம் பாராட்டுக்குரியது. போலித்தன்மை அற்ற செயல் என்பதால்...

ஆனால் இசுரேலில் யூதர்கள் அணியும் குல்லா அணிந்து வணங்கி நிற்பது ஏன்னு சங்கி மங்கிகள் கிட்ட கேளுங்க அவனுங்களுக்கே தெரியாது...

ஆனால் இது நாக்பூர் தலைமையின் ஆணை என்பது ஆர்.எஸ்.எஸ் குறித்து அறிந்தவர்களுக்கு தெரியும்...

காசு பணம் துட்டு மணி மணி...



அப்பவே நிறைய பேர் சொன்னானுங்க சமுத்ரகனி ஒரு டுபாக்கூர் என்று, ஆனால் நம்பவில்லை.. இப்போது நம்புகிறேன்... சமுத்திரக்கனி ஒரு பச்சோந்தி பய...

முன்னால் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாந்த் யாதவ் வீட்டில் சிபிஐ ரைடு...


2006 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த போது ஹோட்டல் விவகாரத்தில் முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு...

வீரப்பனார் எத்தனை யானைகளைக் கொன்றார்?


1972-85 ஆண்டுகளுக்கிடையில் இந்திய யானைகளின் மொத்தத் தொகையே சுமார் 10,000 தான்.

அவற்றில் தமிழ்நாட்டில் சுமார் 1500 மட்டுமே இருந்திருக்கலாம்.

வீரப்பனின் இருப்பிடம், மொத்த தமிழ்நாடோ, இந்தியாவோ அல்ல.

குறிப்பிட்ட சுமார் 600 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட அடர்த்தியற்ற ஒரு குறுமரக் காட்டுப்பகுதி தான்.

ஏனெனில் ஒரு யானைக் கூட்டத்திற்கு சராசரியாக 100 ச.கி.மீ. காடுகள் தேவை.

ஆக ஆறு யானைக்கூட்டங்கள்தான் வாழ்ந்திருக்க வேண்டும்.

ஒரு யானைக் கூட்டத்தில் ஐம்பதில் இருந்து அறுபது யானைகள் வரை இருக்கும்.

ஆக அதிகப்படியாக 350 யானைகள்தான் மொத்தமே இருந்திருக்கும்.

வீரப்பனார் வேட்டைக்காரர்தான். ஆனால் அவர் வேட்டையாடிய காலம் மிகவும் குறைவு.

அவர் என்னமோ ஆயிரக்கணக்கான யானைகளைக் கொன்றதாகக் கூறுகின்றனர்...

திருட்டு திராவிடர்ஸ்...

விவசாயிகளிடம் கடன் வசூல் நடவடிக்கையின் போது விவசாயிகளின் பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது - வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்...


கடன் வசூல் செய்யும் போது விவசாயிகளை தரக்குறைவாக பேசக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது...

மதுரையை சேர்ந்த பொதுநல வழக்காடு மையம் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது...

ஒஎன்ஜிசி மற்றும் போலிசாரை வெளியேறக் கோரி 7 வது நாளாக கதிராமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம்...


டிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் தடை...


எழும்புர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது...

தமிழினமே மீண்டும் ஒரு புரச்சிக்கு தயாராவோம்...


பாஜக மோடிக்கு ஒரு சாமானியனின் செருப்படி...


இந்தியா ஒரு ஏமாற்றுக்கார நாடு...


ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து , ஈரோட்டில் ஜவுளி கடைகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்...


போங்கடா டேய்.. போங்கடா...


தமிழ்த் தேசியம்...


தமிழ்த் தேசியம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட மனிதரோ, அமைப்போ, பிரிவினைவாதியோ, இனவெறியரோ வலிந்து முன்னிறுத்தும் கருத்து இல்லை. அது வரலாற்று வழிப்பட்டுப் புறநிலை மெய்ம்மையிலிருந்து விளைந்த சமூக அறிவியல் கருத்தாகும்.

வட வேங்கடம் தென் குமரி வரை ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம், என சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழரின் தேசத்துக்கு எல்லை குறிக்கிறார் தொல்காப்பியர்...

தேசியம் என்பது என்ன ?


தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும்.

தேசம் என்றால் என்ன ?

சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்.

ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான 'நாம";, 'நம்மவர்" என்ற தேசிய இன ஒருமை உணர்வு.

ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது. இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.
பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது. இது போன்ற சில விதிவிலக்குகளும் உண்டு.

தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்றா ?

இல்லை. தேசம் (Nation)  வேறு; நாடு (Country) வேறு. ஒரு தேசிய இனத்திற்குச் சொந்தமானது தேசம். ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதி நாடு. ஒரு தேசம் ஒரு நாடும் ஆகும். ஏனெனில் ஒரு தேசத்திற்கோர் ஆட்சி இருக்கும் போது, அதற்குட்பட்ட நிலப்பகுதி நாடு ஆகிறது.

ஆனால் ஒரு நாடு ஒரு தேசமாகவும் இருக்கலாம்; பலதேசங்களைக் கொண்டு ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதியாகவும் இருக்கலாம். வரலாற்று நிர்பந்தத்தால் ஒரு தேசமே இருநாடுகளாகப் பிளவுபட்டும் இருக்கலாம். எ-டு: கொரியா.

தேசம் என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி (Compact Oxford Dictionary Thesaurus and Wordpower Guide- Indian Edition ) கூறும் விளக்கத்தைப் பார்ப்போம்.

'ஒரே பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு ஒர் அரசின் கீழ் அல்லது ஒரு நிலப்பகுதியில் வாழும் பெருந் தொகையான ஒரு மக்கள் கூட்டம்".

நாடு என்பதற்கு அந்த அகரமுதலி கூறும் விளக்கம்:

'ஒரு குறிப்பிட்ட ஆட்சிப்பரப்பில் சொந்த அரசைக் கொண்டுள்ள தேசம்"

மேலும் அது கூறுகிறது: பேரரசு, மன்னர் அரசு, நிலம், தேசம், அரசு, ஆட்சி எல்லை போன்றவை நாடு என்று அழைக்கப்படும்.

நாம் முன்னரே குறிப்பிட்டது போல், நாடு என்பது முதன்மையாக ஆட்சி நிலப்பரப்பைக் குறிக்கிறது. அந் நிலப்பரப்பில் ஒரு தேசம் இருக்கலாம்; சிதைக்கப்பட்ட ஒரு தேசமோ, பல தேசங்களோ இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஒரு தேசம். பிரஞ்சு தேசிய இனத்திற்கு உரியது. அதே சமயம் பிரான்ஸ் ஒரு நாடும் ஆகும். சுவிட்சர்லாந்து ஒரு தேசமல்ல@ அது ஒரு நாடு. அதில் செர்மானிய, இத்தாலிய, பிரஞ்சு, ரொமான்ஷ்; தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்நாட்டின் அதிகாரப் பூர்வ பெயர் சுவிஸ் பெருங்கூட்டரசு ( Swiss confederation ) என்பதாகும்.

இந்தியா ஒரு நாடு ஆனால் இந்தியா ஒரு தேசமல்ல.

இந்தியாவில் பல தேசங்கள், பல தேசிய இனங்கள் இருக்கின்றன.

அதனால் இந்திய அரசமைப்புச் சட்ட முதல் விதி இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடாமல் ஒர் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது.  (Article 1(1) India, that is Bharat shall be a Union of States )...

தேசிய இனம் என்பது என்ன ? தமிழர், திராவிடர், இந்தியர் என்பவை என்ன ?

   
ஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள் பொது மொழி அடிப்படையில் இனமாக ( Race) ஒருங்கிணைந்து வளர்ந்து, காலவளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பொது மொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாகும்.

இனம் என்பது இரண்டு நிலை வளர்ச்சி பெறுகிறது. முதல் கட்டம் மரபு இனம் ( Race )அடுத்த கட்டம் தேசிய இனம்( Nationality).

ஒரு மரபு இனம் பல தேசிய இனங்களில் கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஒரு தேசிய இனத்தில் குறிப்பான ஒரு மூல மரபினமும், அதனோடு கலந்துவிட்ட வேறு மரபினங்களும் இருக்கலாம். பல மரபினங்கள் கலந்தும் தேசிய இனம் உருவாகியிருக்கலாம்.

எடுத்துக்காட்டாக ஆரியர்கள் ஒரு மரபினம். ஆரிய மரபு இனம் ஐரோப்பிய தேசிய இனங்களிலும் இந்திய தேசிய இனங்களிலும் கலந்துள்ளது. தேசிய இனங்களில் கலந்தும் மனதளவில் ஒருங்கிணையாமல், தங்களை ஆரியர்களாகவே கருதிக் கொள்ளும் பார்ப்பனர்களின் மனக்கோணல், இந்தப் பொதுவரையறைக்கு விதிவிலக்கே தவிர அது உலகப் பொது நிலை அல்ல.

       
தமிழர் என்பது ஒரு மரபினம். அது இன்று தமிழ்த் தேசிய இனமாகவும் உள்ளது.

இந்தியாவின், பாகிஸ்தானின் பல பழங்குடிகளிலும் தேசிய இனங்களிலும் தமிழ் மரபினம் கலந்து உள்ளது.

திராவிடர் என்பது ஒரு மரபினம் அல்ல. அது ஒரு தேசிய இனமும் அல்ல. அது ஒரு மொழியும் அல்ல.

ஆரியர்கள் இந்திய மண்டலத்திற்கு வந்த போது தமிழ் பேசிய மக்களைக் கொச்சையாகத் 'திராவிட" என்று அழைத்தனர். 'தமிழ்" என்பதை ஒலிக்கத் தெரியாமல் 'த்ரமிள்" என்று உச்சரித்து அதுவே பின்னர் 'த்ரமிள",'த்ராவிட" என்று மாறியது என்றும் ஆய்வாளர்கள்(பாவாணர் உள்ளிட்டோர்) கூறுகின்றனர்.

இந்தியாவில் சமஸ்கிருத மொழிக் குடும்பம் மட்டுமே இருக்கிறது. இந்தியாவின் மொழிகள் அத்தனையும் சமஸ்கிருத மூலத்திலிருந்தே பிறந்தவை என்ற கருத்து ஐரோப்பிய ஆய்வாளர்களிடம் இருந்தது. சமயப்பணிக்காகத் தமிழகம் வந்த கால்டுவெல், சமஸ்கிருதத் துணையின்றி இயங்கக்கூடிய மொழி தமிழ் என்பதைக் கண்டறிந்தார்.

         
அதுகுறித்து மேலும் ஆய்வு செய்த போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள் தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார்.

இந்த மொழிக் குடும்பத்தில்  தமிழ் மூத்தமொழி என்றும் ஆனால் இவை அனைத்திற்கும் ஒரு மூலமொழி ( Proto Language ) இருந்திருக்க வேண்டும் என்றும் கருதினார். அந்த மூலமொழி எது என்பதிலும் அதன் பெயர் என்ன என்பதிலும் கால்டுவெல் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

சமஸ்கிருத நூல்களில், சமஸ்கிருதம் அல்லாத மொழிக்கும், ஆரியர் அல்லாத இனத்திற்கும் ஆரியர்கள் வைத்த பெயரான "த்ராவிட" என்பதை எடுத்துக் கொண்டு இந்த மொழிக் குடும்பத்தின் மூலமொழிக்கு "திராவிடம்" என்று பெயர் சூட்டிக் கொண்டார்.

 திராவிடம் என்று பெயர் சூட்டியதற்கு வேறு மொழியியல் சான்றுகள் எதையும் கால்டுவெல் காட்டவில்லை. ஆய்வு வசதிக்காக அவர் ஆரிய வழக்கிலிருந்து எடுத்துக் கொண்ட அடையாளப் பெயரே திராவிடம்.

பிரித்தானிய ஆட்சியில் தமிழக, ஆந்திர, கேரளப் பகுதிகளைக் கொண்டிருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் தோன்றிய பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டிக் கொண்டது அன்றைய சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்ததே ஆகும். அதற்கு மேல் அப்பெயரில் முக்கியத்துவம் எதுவும் இல்லை. தனித்தன்மை எதுவுமில்லை. அப்பெயருக்கான மொழி, இன அடிப்படையில் அமைந்த வரலாற்றுக் காரணங்கள் எதுவுமில்லை.

 ஆந்திர, கர்நாடக, கேரள தேசங்களில் "திராவிட" என்ற பெயருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.

இந்தியர் என்பது மரபினமும் அல்ல. தேசிய இனமும் அல்ல. அது ஒரு புவி அரசியல் பெயர் (Geo political name).

ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்வோரை 'ஐரோப்பியர்" என்று சொல்வது போல், இந்திய மண்டலத்தில் வாழ்வோரை 'இந்தியர்" என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

அது மட்டுமல்ல இந்தியாவில் வாழும் அனைவரையும் இந்துக்கள்( Hindoos) என்றே மேற்கத்திய ஆய்வாளர்கள் அழைத்தனர். இந்துக்கள் என்று அவர்கள் அழைத்தது மத அடிப்படையில் அல்ல. புவிசார் அடிப்படையிலேயே.

எ-டு: முதல் இந்திய விடுதலைப் போர்- காரல் மார்க்ஸ்...

இந்திய அரசமைப்புச் சட்டம், 'இந்தியர்" என்று ஒரு தேசிய இனம் (Nationality) இருப்பதாகக் கூறவில்லை. ஒர் அரசின்- நாட்டின்- குடியுரிமை (Citizenship) பற்றி மட்டுமே பகுதி2-இல் உள்ள விதிகள் 5 முதல் 10 வரை உள்ளவை கூறுகின்றன. இந்தியாவின் குடிமகன் ( Citizen of India) என்பது பற்றி மட்டுமே அரசமைப்புச் சட்டம் பேசுகிறது.

இந்தியப் பெருமுதலாளிய-இந்தி ஆதிக்க-பார்ப்பனிய சக்திகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும்  'இந்தியன்" என்று ஒரு தேசிய இனம் இருப்பது போல் சட்டவிரோதமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

அதே போல் இச்சக்திகள் இந்தியாவை ஒரு தேசம் என்றும் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

இவையெல்லாம், சுரண்டல் சக்திகளும், ஆதிக்கசக்திகளும் கிளப்பிவிடும் இந்திய தேசிய வெறிப் பரப்பல் முறையாகும்.

சமூக அறிவியலைப் பின்பற்றும் நேர்மையாளர்கள், மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்ட நேர்மையான கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவை ஒரு தேசம் என்று கூறமாட்டார்கள். 'இந்தியர்" என்று ஒரு தேசிய இனம் இருப்பதாகவும் கூற மாட்டார்கள். இந்திய தேசிய இனம், இந்திய தேசம் என்று மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்டோர் பேசினால் அவர்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள் ஆவர். கவரிங் தங்க நகை போல!

அரசு விண்ணப்பங்களில் தேசிய இனம் எது என்று கேட்பதும், அதற்கு 'இந்தியர்" என்று எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதும் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையாகும்.

ஆதிக்க சக்திகளும் சுரண்டல் சக்திகளும் இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக 'இந்தியர்" என்ற இல்லாத தேசிய இனத்தைத் திணிக்கின்றனர்.

 'தமிழர்", 'தெலுங்கர்", 'வங்காளி" என்பன போன்ற இயற்கையான தேசிய இனங்களையும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை. 'இந்தியக் குடியுரிமை" என்று மட்டுமே அது கூறுகிறது.

'தமிழர்" போன்ற இயற்கையான- நடைமுறையில் நிலவுகின்ற தேசிய இனங்களை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்.

லெனின் தலைமையில் உருவான சோவியத் ஒன்றியத்தில், ரசியர், பைலோ ரசியர், ஜார்ஜியர் போன்ற தேசிய இனங்கள் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்டன.

சோவியத் ஒன்றியத்தைத் தேசங்களின் ஒன்றியம் (Union of nations ) என்றே அழைத்தனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் விதி  371A(1) நாகர்களைத் தனிச்சமூகமாக ஏற்று அதற்கான தனிஉரிமைகளை அங்கீகரிக்கிறது...

இது தான் இந்தியா... துரோகத்தால் உருவானதே இந்திய ஒன்றியம்...


BLACK TIGER - Ravindra Kaushik இந்தியா கைவிட்ட வீரர்..

RAVINDRA KAUSHIK இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பட்ட (RAW AGENT) உளவாளியாக அனுப்பட்டவர்...

1975 இல் இந்திய அளவில் நடந்த THEATER FESTIVAL இல் கலந்து கொண்டார் , அவரின் நடிப்பை பார்த்த இந்திய INTELLIGENCE அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு SPY ஆக செல்லுமாறு கேட்டனர். RAW வில் சேர்ந்து 2 வருட கடின பயிற்சிக்கு பின் பாகிஸ்தானுக்கு சென்றார்.அங்கு KARACHI UNIVERSITY ல் சேர்ந்து LLB முடித்தார்.PAKISTAN ARMY ல் சேர்ந்தார் , பின் MAJOR ஆக பதவி உயர்வு பெற்றார் . 1979 to 1983 வரை இந்தியாவிற்கு பல தகவல்களை தந்தார்.. அவரை யாரும் சந்தேகிக்கவில்லை. அவருக்கு இந்தியா அரசாங்கதத்தால் வைக்கபட்ட பெயர் BLACK TIGER...

26 வருடங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து PAKISTAN ல் பல சூழ்நிலைகளில் இருந்தார். INYAT MAISHA என்ற இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட இன்னொரு உளவாளி PAKISTAN அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்.அவர் கொடுத்த தகவலால் RAVINDRA KAUSHIK உம் கைது செய்யப்பட்டார். இந்தியா , எதுவும் தெரியாதது போல காட்டிகொண்டது. 1985 இல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்தனைக்கு மனகஷ்டத்திற்கு பிறகும் , அவர் PAKISTAN jail இல் இருந்து பல கடிதங்களை தனது வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில்...

"Is this the reward a person gets for sacrificing his life for India? "

என்று எழுதி இருக்கிறார். பல துன்பங்களுக்கு பின் 2001 இல் RAVINDRA KAUSHIK இறந்தார்...

பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதி பயங்கர ஏரி...


பல்வேறு மர்மங்களைக் கொண்ட இந்த பூமியில் தற்போது நீர் அருந்தும் பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதிபயங்கர ஏரி குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

புராண காலங்களில் மந்திரவாதிகளும் மாயாஜால வித்தகர்களும் தங்களை எதிப்பவர்களையெல்லாம் கற்சிலைகளாக மாற்றி மகிழ்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்....

இந்த கற்சிலைகளுக்கு உயிர்கொடுத்திட அன்றைய கதாநாயகர்கள் ஏழு கடல், ஏழு மலை தாண்டிச் சென்று கடைசியாக சூட்சுமத்தை கண்டுபிடித்து கற்சிலைகளை அகலிகளாக மீண்டும் உயிர்பெற்று தருவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

இந்நிலையில் உலகிலுள்ள மக்களுக்கு உயிரூட்டம் கொடுத்திடும் பல்வேறு ஏரிகள் குறித்து நாம் கேள்விப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டிலுள்ள ஏரியொன்று தன்னில் நீரருந்தும் பறவைகளையெல்லாம் கற்சிலைகளாக மாற்றியிருக்கும் அதிபயங்கர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது....

தான்சானியா நாட்டின் வடபகுதியில் கென்யா நாட்டின் எல்லையை ஒட்டிய நாட்ரன் எனும் ஏரிதான் தன்னில் நீரருந்தும் பறவைகளையெல்லாம் கற்சிலைகளாக மாற்றி வருகிறது.

இதனை கண்டுபிடித்து வெளிஉலகிற்கு கொண்டு வந்தவர் ஆப்பிரிக்காவின் தலை சிறந்த வைல்ட்லைப் புகைப்படகலைஞர் நிக்பிராண்ட்.

இவர் கடந்த 2010-2012 ஆண்டுகளில் நாட்ரன் ஏரியை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்துள்ளார். அப்போது தான் ஏரிக்கரைகளிலும் ஏரியின் நடுவிலும் ஏராளமான பிளமிங்கோ உள்ளிட்ட பறவைகள் கற்சிலைகளாக மாறி உப்புப்பொரிந்து நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் மனம் தளராத நிக்பிராண்ட் மனதை கல்லாக்கிக் கொண்டு கற்சிலை பறவைகளை தனது விலையுயர்ந்த கேமராவில் பதிவு செய்துள்ளார்....

பின்னர் தான் நாட்ரன் ஏரியில் கண்ட அனைத்து சம்பவங்களையும் ஒருங்கிணைத்த நிக்பிராண்ட் Across the ravaged land என்ற புத்தகத்தை எழுதி தற்போது உலகப்புகழ் பெற்றுள்ளார்.

மேலும் நாட்ரன் ஏரியில் நிக்பிராண்ட் எடுத்த புகைப்படங்கள் 2012 ஆண்டின் Best wild animal photography award பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வேதியல் விஞ்ஞானிகள் நாட்ரன் ஏரியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின....

அதில் நாட்ரன் ஏரியில் எப்பொழுதும் 140 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருப்பதால் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழவழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்ரன் ஏரியில் அதிகளவு கால்சியம், நேட்ரோ கார்பன்கள், தாது உப்புகள் மற்றும் ஏராளமான வேதிப்பொருட்கள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது....

மேலும் நீண்ட நாட்கள் முகாமிட்டு நாட்ரன் ஏரியில் ஆய்வு மேற்கொணட் விஞ்ஞானிகள் பறவைகள் கற்சிலைகளாக உறுமாறுவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அந்த ஆய்வுகளில் நச்சுத்தன்மை கொண்ட தாது உப்புகள் மற்றும் வேதிப்பொருட்கள் கொண்ட நாட்ரன் ஏரியின் நீரை அருந்திய பறவைகள் தங்களின் உடலுக்குள் கலந்துள்ள உப்புக்கள் உறைவதால் உடனடியாக மரணமடைந்து காலப்போக்கில் கற்சிலைகள் போன்று மாறி உப்புப்பொரிந்து போய் உருமாறுவதை கண்டுபிடித்துள்ளனர்.

இதனை தங்களது உள்ளுணர்வால் தெரிந்து கொண்ட சிலவகை பறவையினங்கள் இந்த அதிபயங்கர ஏரிக்கு வரமுற்றிலுமாக நிறுத்திக் கொண்டு கென்யநாட்டு நன்னீர் ஏரிக்கு தங்களது வாழ்வாதாரத்தை மாற்றிக்கொண்டு விட்டன.

இருப்பினும் இந்த ஏரியின் தன்மை குறித்து அறியாத சிலவகை பறவைகள் நாட்ரான் ஏரியின் தண்ணீரை குடித்துவிட்டு தங்களது அறியாமையினால் உயிரை இழந்து கற்சிலைகளாக மாறி பார்வையாளர்களின் காட்சிப் பொருட்களாக மாறிவிடுகின்றன....

மழை மறைவுப்பிரதேசமாக காணப்படும் தான்சானியா நாட்டு வடபகுதியிலுள்ள இந்த எரிப்பகுதியில் எப்போதாவது மழை பெய்யுமானால் மழைநீர் பட்டு ஏரியிலிருந்து நச்சுவாயுக்கள் வெளியேறுவது கண்கூடாகத் தெரியுமாம். அப்போதிலிருந்து சில நாட்களுக்கு மட்டும் நாட்ரன் ஏரி நன்னீர் ஏரியாக நிசப்தத்துடன் காட்சிதருமாம். இப்பொழுது பறவைகள் கற்சிலைகளாக நிற்பதைக் காண்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர்.

இதன் மூலம் தான்சானியா நாட்டின் அந்நிய செலவாணி வருவாய் அதிகமாக கிடைப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.

எது எப்படியோ இறைவனின் அருட்கொடையான தண்ணீரை நாட்ரன் ஏரியில் அருந்திடும் பறவைகள் உயிரை இழந்து கற்சிலைகளாக மாறி நம்மை சோகத்தில் வைக்கிறது...

சமூகம், மக்கள், தேசிய இனம் ஆகியவை வெவ்வேறா ?


இவை மூன்றிற்கும் ஒற்றுமை உண்டு. ஆனால் மூன்றும் அச்சாக ஒன்றே அல்ல.

சமூகம் என்பது ஒர் இனக் குழுவின் விரிவாக்கமே. குறிப்பான நில எல்லைகளுக்குள் வாழ்ந்து, மொழி, பண்பு மற்றும் குணநலன்களைப் பொதுவாகப் பெற்றிருக்கும் ஒரு மக்கள் குழு சமூகம் ஆகும். ( Webster's Pocket dictionary ).

அரசியல் பொருளில், மக்கள் என்பது மனிதக் கூட்டம் அல்ல. ஒரே மொழி, ஒரே பண்பாடு ஆகியவற்றைக் கொண்டு, ஒரு தேசத்தில் அல்லது ஒர் அரசின் கீழ் உள்ள மனிதர்கள் மக்கள் ஆவர்.

The People என்று ஆங்கிலத்தில் சொல்லும் போது அது ஒரு தேசத்திற்குரிய மக்களைக் குறிக்கிறது.

ஐ.நா.உரிமை அட்டவணையில் தேசிய இனம் The People என்றே குறிக்கப்படுகிறது.

நடைமுறையில் சாதாரணப் பொருளில், மக்கள் என்பது மனிதக் கூட்டத்தைக் குறிக்கிறது.

உலகம் ஒன்று, உலக மக்களின் ஒருமைப்பாடு உண்டாக வேண்டும் என்ற உயர்ந்த மனித நேயக் கருத்துகள் வளர்ந்து வரும் காலத்தில் தேசிய இனம் பேசி மனித குலத்தைப் பிரிக்கலாமா ?

உலகம் ஒன்று மனித குலம் ஒன்று என்ற மனித நேயப் பார்வை மிகச் சரியானது. ஆனால் இன்று உலகமும், உலக மனித குலமும் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை என்ற நடைமுறை உண்மையைப் பார்க்க வேண்டும். ஏன் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை?

இதற்கான புவியியல், சமூகவியல், வரலாற்றியல் காரணங்கள் மனித மனநிலைக்குப் புறத்தே இருக்கின்றன.

புவிக்கோளம் வேறுபட்ட புவி அமைப்பு உள்ளிட்ட இயற்கை நிலைகளைக் கொண்டு ஐந்து கண்டங்களாகப் பிரிந்துள்ளது.

இதில் வாழும் மக்களுக்கு ஒரே மொழி இல்லை ஒரே பண்பாடு இல்லை. உணவு வகை வேறுபடுகிறது. உடை வேறுபடுகிறது. செடிகொடிகளும் விலங்குகளும் கூட வேறுபடுகின்றன.

வெவ்வேறு நாடுகளாக இருக்கிறது. கடவுச்சீட்டு அனுமதி இல்லாமல் ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டிற்குள் நுழைய முடியாது. இந்த நாடுகளில் வெவ்வேறு கொள்கை உடைய அரசுகள் இருக்கின்றன.

வலிமையுள்ள நாடுகள் வலிமைக் குறைவான நாடுகளையும், ஏமாந்த மக்களையும் ஆக்கிரமித்துச் சூறையாடுகின்றன.

எடுத்துக்காட்டாக, சர்வதேச பயங்கரவாத அரசு அமெரிக்காவில் இருக்கிறது. அந்நாட்டு மக்களில் பெரும்பாலோர் அப்படிப்பட்ட அரசை ஆதரிக்கின்றனர். அதற்கான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
உலக நிலையில் மனித சமத்துவத்திற்கான மாற்றம் வர இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது.

நாம் விரும்புவதால் மட்டுமோ, நமது கற்பனையினால் மட்டுமோ மனிதகுலச் சமத்துவத்தை உடனே படைத்துவிட முடியாது...