16/12/2017

தமிழினமே விழித்துக்கொள்...


பழங்குடியாக வாழ்ந்த நம்மை
எங்கிருந்தோ வந்த ஒரு நாகரீக (நாகர்) கூட்டம் நம்மை அடிமை படுத்தி இவர்கள் வணிகத்திர்காக நம் வாழ்கை முறை மாற்றபட்டு இவர்களுக்கு தேவையானதை உருவாக்க நம்மை தொழில் ரீதியாக பிரித்து நம் ஒற்றுமையாக இருந்தால் இவர்களை எதிர்பது எளிமை ஆகிவிடும் என்பதால் சாதி சாயம் பூசி ஒரு சாதி குழுவிற்கு ஒரு தலைவன் விதைத்து பிரித்து வைத்தது இந்த வணிகர்களின் தந்திரம்.

ஒரு காலகட்டத்தில் இவர்கள் வணிகம் விரிவடையும் நோக்கத்தில் இவர்களே இரண்டு பிரிவாக பழங்குடியை பிரிந்து 

சைவர் - சைவன் - சிவன்

வைணவர் - வைனவர் - விஷ்னு

இங்கிருந்த அடிமை பழங்குடியான நம்மை உலவியல் ரீதியாக பயம் புருத்த ( thasavatharam  starting scene)
சைவர்கள் வைணவர்கள் மீது போர் தொடுத்து இங்கிருந்து ஒரு கூட்டத்தை கப்பள் மூலமாக கம்போடியா அழைத்து சென்று நாகரீகம் வளர்த கதை உள்ளது.

பிறகு தொடர்து தஞ்சை யில் இருந்து காவேரி வழியாக கடல் அடைந்து அந்தமான் சென்று அங்கிருந்து கம்போடியா தொடர் வணிகம் நடந்துள்ளது.

இதற்கு சான்று அந்தமான் தீவில் தமிழ் பழங்குடி உள்ளனர். 

பிற்காலத்தில் ஏதோ காரணத்தால் அங்கோர் கைவிட பட்டது அங்கிருந்த தமிழர் சிங்கபூர் மலேசியா தஞ்சம் அடைந்தனர்.

இதே அந்தமானில் பெங்காளிகள் வாழ காரணமும் பெங்காளின் சதுப்பு நில காட்டில் தமிழ் பழங்குடி இருப்பதன் தொடர்பு அடுத்த பதிவில்...

நாகரிக கோமாளிகளே...


திராவிடம் என்பதே தெலுங்கர்கள் கட்சி தான் டா.. இதில் திமுக தெலுங்கில் பேசியதில் என்னடா ஆச்சரியம்...


இந்தி எதிர்ப்பு என்று சொல்லி இந்தியிலே போஸ்டர் அடித்து.. இந்தி பேசி வாக்கு கேட்கிறார்கள்.. அதை வேண்டும் என்றால் அதிர்ச்சி என்று சொல்லுங்கடா...


தெலுங்கர்கள்.. இந்தியில் வாக்கு சேகரித்தார்கள் என்று...

ஸ்டாலினுக்கு பிறகு திமுக தலைமைக்கு தகுதியான ஆளு யாரென்று தேடினால்...


ஸ்டாலின் குடியரசு தினம் டிசம்பர் 15ன்னு சொல்லிட்டு சந்தேகமா திரும்பி பார்த்தப்ப ஒருத்தன் "இல்ல இல்ல அது டிசம்பர் 25"ன்னு சொல்லி தந்தான் பாருங்க அவன் தான்...

ஆர்கே நகரில் ஆளும் கட்சியினரின் பணப்பட்டுவாடா தொடர்பான எதிர்கட்சிகளின் புகார்ககள் குறித்து வழக்கு பதிவு செய்யாத 5 இன்ஸ்பெக்டர்களை இட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு...


நிலமோசடி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உச்சநீதிமன்றம் ஆணை...


திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் புதிதாக கட்டபட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகளின் தரத்தின் லட்சனத்தை பாரீர்.....


தேசியநெடுஞ்சாலை துறை இணை அமைச்சர் குமரி தொகுதி எம்.பி பொன். ராதாகிருஷ்ணன் என்கிற பொய். ராதா கிருஷ்ணன்..

பாலம் கட்றத்துக்கு முன்னாடியே இந்த லட்சனமுனா கட்டிய பின்பு...

பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தமிழ்ச் சமூகம் அனுமதிக்கவில்லை - கன்னட ஈ.வே.ரா பக்தர்...


அப்டியாப்பா?அதிகாரிச்சி அப்டினா என்னவென்று தெரியுமா?

1000 ஆண்டுகளுக்கு முன்பே ராஜராஜ சோழன் காலத்து அரசாங்க அதிகாரிகளில் பெண்களும் இருந்தனர் அவர்கள் தான் அதிகாரிச்சி.

அதிகாரிச்சி 'சோமயன் அமிர்தவல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.

180 பேரை வைத்து வேலைவாங்கிய அதிகாரிச்சி 'எருதன் குஞ்சரமல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.

இவர்களைப் பற்றி (ராஜராஜ சோழனின் பட்டத்தரசி உலோகமாதேவி கட்டிய கோவிலான) திருவையாறு கோயில் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது.

இது போக கோவிலுக்கு தனது சொத்திலிருந்து  கொடை வழங்கிய பெண்கள் விபரமும் உள்ளது.

உங்கள்  பெண்ணுரிமை கருத்துகளான...

கர்ப்பப்பை நீக்குதல்,
ஆண் போல முடிவெட்டுதல்,
ஆசைநாயகர்கள் வைத்துக்கொள்ளல்

போன்றவற்றை உங்கள் திராவிடர்களான தெலுங்கர்.. கன்னடர்.. மலையாளி களிடம் போய் பரப்பவும்...

படம்: ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவி (அகமதாபாத் அருங்காட்சியகம்)...

திருவண்ணாமலை கிரிவலப்பாதை விவரிவாக்கப்பணியின் போது ரமணா ஆசிரமத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்து...


ஒருவர் உயிரிழப்பு, 3 பேர் படுகாயம்...

இஸ்லாமியர்களின் முத்தலாக் முறையை ஒழிக்க வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...


தற்சார்பு வாழ்க்கை முறை...


உங்களது எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள அடிமை ஓட்டத்தில் இருந்து விடுபட....

முதலில் நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி செல்லுங்கள் அல்லது உங்கள் சொந்த ஊர்களை நோக்கி செல்லுங்கள்.

வாழ்வதற்கும் தன்னிறைவு விவசாயம் செய்வதற்கும் போதுமான அளவு நிலங்களை வாங்குங்கள்.

சொந்தநிலத்தில் குறைந்தது 10 மரங்களையாவது நடுங்கள்..

இந்த விதைகளை எங்கும் வாங்காதிர்கள் நன்கு வளர்ந்த மரங்களின் விதைகளை சேகரித்து விதைத்து வளருங்கள்.

எளிய வாழ்கைக்கு போதுமான அளவு வீடுகளை கட்டி கொள்ளுங்கள்.

கிணறுகளை வெட்டுங்கள், (முடிந்தவரை ஆழ்துளை கிணறுகளை அமைக்காதீர்கள்) இல்லையென்றல் ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு சுழற்ச்சி முறையுடன் அமையுங்கள்.

வீட்டிற்கும், விவசாயத்திற்கும் தேவையான மின்சாரத்தை பெற சூரியஒளி அமைப்பை பயன்படுத்துங்கள்.

நிலத்தில் அன்றாட வாழ்கைக்கு தேவையான  காய்கறி, கீரைவகை, சிறியவகை மரங்களான எலுமிச்சை, கொய்யா, மாதுளை, கறிவேப்பிலை வளருங்கள்.

விவசாயத்திற்கு தேவையான நாட்டுமாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகளை வளருங்கள் இதன் கழிவுகளை விவசாயத்திற்கு பயன்படுத்துங்கள்.

பாரம்பரிய நெல்ரகங்கள் அல்லது தானியவகைகளை வளருங்கள்.

உங்களுக்கு தேவையானவற்றை போக மற்ற விளைபொருள்களை விற்று பொருள் ஈட்டிக் கொள்ளுங்கள்.

இதுபோன்று ஆர்வமுள்ள இளைஞர்களை உங்கள் ஊரிலே  தேடி தர்சார்புமுறை அமைப்புகளையும், குழுக்களையும் மற்றும் Facebook, what's app குழுக்களையும் உருவாக்குங்கள்.

அந்த அமைப்புகள் மூலமாகவே விதைகளையும், விளைபொருள்களையும் பரிமாரி கொள்ளுங்கள்.

மற்றும் கிராம மற்றும் ஊர் பாரம்பரியங்களை பின்பற்றுங்கள்..

போதும் என்ற மனம் கொள்ளுங்கள், இயற்கையோடு இன்புற்று வாழுங்கள்.

மேற்கொள்காட்டியவைகளை முதலில் நிச்சயம் செய்ய முயற்சிப்பேன் என தினமும் எண்ணம் கொள்ளுங்கள் உங்கள் எண்ணங்கள் உங்களை வழிநடத்தும்...

இந்தியாவில் நீதிமன்றங்கள் எதற்கு..?


தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்...


உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி...

பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.

2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது.

3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.

4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.

5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.

6 . துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.

7 . நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.

8 . பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.

9 . மாந்தல் -- ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.

10 . கடித்தல் -- கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.

11. விழுங்கல் -- வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.

12. முழுங்கல் -- முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது...

பாஜக மோடியும்.. தேர்தல் ஆணையம் மற்றும் ஊடகங்கள் கூட்டணியும்...


தூக்கி எறியுங்கள் அவன் நோய் பரப்பும் சோப்புகளை...


குறிப்பு: ஆண்கள் பயன்படுத்தும் போது மஞ்சள் சேர்க்க வேண்டாம்...

வரும் 21 ஆம் தேதி தினகரன் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..


இரட்டை இலை லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கு..

21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் நாள் என்பது குறிப்பிடதக்கது...

வாகனத்தின் பதிவு...


ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்...

0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும்.

எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.

விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு...

TN01 - சென்னை (மத்திய)
TN02 - சென்னை (வடமேற்கு)
TN03 - சென்னை (வட கிழக்கு)
TN04 - சென்னை (கிழக்கு)
TN05 - சென்னை (வடக்கு)
TN06 - சென்னை (தென்கிழக்கு)
TN09 - சென்னை (மேற்கு)
TN10 - சென்னை (தென்மேற்கு)
TN11 - தாம்பரம்
TN11Z - சோழிங்கநல்லூர்
TN16 - திண்டிவனம்
TN18 - REDHILLS
TN18Z - அம்பத்தூர்
TN19 - செங்கல்பட்டு
TN19Z - மதுராந்தகம்
TN20 - திருவள்ளூர்
TN20Y - பூணாமல்லி
TN21 - காஞ்சிபுரம்
TN21W - ஸ்ரீபெரும்புதூர்
TN22 - மீனம்பாக்கம்
TN23 - வேலூர்
TN23T - குடியாத்தம்
TN23Y - வாணியம்பாடி
TN24 - கிருஷ்ணகிரி
TN25 - திருவண்ணாமலை
TN25Z - ஆரணி
TN28 - நாமக்கல்
TN28Y - பரமாதி வெள்லூர்
TN28Z - ராசி புரம்
TN29 - தர்மபுரி
TN29W - பாலக்கோடு
TN29Z - ஹரூர்
TN30 - சேலம் (மேற்கு)
TN30W - ஓமலூர்
TN31 - கடலூர்
TN31U - சிதம்பரம்
TN31V - விருதாசலம்
TN31Y - நெய்வேலி
TN32 - விழுப்புரம்
TN32W - கள்ளக்குறிச்சி
TN32Z - உளுந்தூர்பேட்
TN33 - ஈரோடு
TN34 - திருச்செங்கோடு
TN36 - கோபிசெட்டிபாளயம்
TN36W - பவானி
TN36Z - சத்தியமங்கலம்
TN37 - கோவை (தெற்கு)
TN38 - கோவை (வடக்கு) -
TN39 - திருப்பூர் (வடக்கு)
TN39Z - அவிநாசி
TN40 - மேட்டுப்பாளையம்
TN41 - பொள்ளாச்சி
TN42 - திருப்பூர் (தெற்கு)
TN42Y - கங்கயம்
TN43 - ஊட்டி
TN43Z - கூடலூர்
TN45 - திருச்சிராப்பள்ளி
TN45Y - திருவெறும்பூர்
TN45Z - மணப்பாறை
TN46 - பெரம்பலூர்
TN47 - கரூர்
TN47Z - குளித்தலை
TN48 - ஸ்ரீரங்கம்
TN48Z - துறையூர்
TN49 - தஞ்சாவூர்
TN49Y - பட்டுக்கோட்டை
TN50 - திருவாரூர்
TN50Z - மன்னார்குடி
TN51 - நாகப்பட்டினம்
TN51Z - மயிலதுறை
TN52 - சங்கரி
TN52Z - மேட்டூர்
TN54 - சேலம் (கிழக்கு)
TN55 - புதுக்கோட்டை
TN55Z - அறந்தாங்கி
TN56 - பெருந்துறை
TN57 - திண்டுக்கல்
TN57R - ஒட்டன்சத்திரம்
TN57V - வடசந்தூர்
TN57Y - பட்டலகுண்டு
TN57Z - பழனி
TN58 - மதுரை (தெற்கு)
TN58Z - திருமங்கலம்
TN59 - மதுரை (வடக்கு)
TN59V - வாடிப்பட்டி
TN59Z - மேலூர்
TN60 - தேனி
TN60Z - உத்தமபாளயம்
TN61 - அரியலூர்
TN63 - சிவகங்கை
TN63Z - காரைக்குடி
TN64 - மதுரை (தெற்கு)
TN65 - ராமனாதபுரம்
TN65Z - பரமக்குடி
TN66 - கோவை (மத்திய)
TN67 - விருதுநகர்
TN67U - சிவகாசி
TN67Z - ஸ்ரீவிலிபுதூர்
TN68 - கும்பகோணம்
TN69 - தூத்துக்குடி
TN69Y - திருச்செந்தூர்
TN69Z - கோவில்பட்டி
TN70 - ஒசூர்
TN72 - திருநெல்வேலி
TN72V - வள்ளியூர்
TN73 - ராணிப்பேட்
TN73Z - அரக்கோணம்
TN74 - நாகர்கோவில்
TN75 - மார்த்தாண்டம்
TN76 - தென்காசி
TN76V - அம்பாசமுத்திரம்
TN76Z - சங்கரன்கோவில்
TN77 - ஆத்தூர்
TN77Z - வாழப்பாடி
TN78 - தாராபுரம்
TN78Z - உடுமலைப்பேட்டை...

அதிமுக எடப்பாடி கலாட்டா...


இலுமினாட்டி எனும் ரகசிய கூட்டத்தினரும்.... அவர்களின் புதிய உலக ஒழுங்குகளும் (NEW WORLD ODER) அவர்களின் கொள்கையால் குழி தோண்டிப் புதைக்கப்பட்ட உண்மை...


இன்று தொழிநுற்பம் அபார வளர்ச்சி கண்டுள்ளது என மார்தட்டிக் கொள்ளும் நாம் கடந்த நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்டு குழி தோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு உண்மையை அறியாமலேயே இருக்கிறோம்..

எனினும் 1899 களில் வாழ்ந்தவர்களில் பலர் இவ்வுண்மையை அறிந்திருந்தனர்..

ஆம் வானொலி அலை வரிசையை நாம் பாவிப்பது போலவே மின்சாரத்தைம் எந்தவித இனைப்புக் கம்பிகளும் இல்லாமல் கூறையில் ஒரு அன்டெனாவைப் பொருத்திக் கொள்வதினூடாக நுகர முடியும் என்பதே அந்த மறைக்கப்பட்ட உண்மையாகும்...

படத்திலுல்ல நிகோலா தெஸ்லா அவர்கள் இம்முக்கியத்துவம் மிக்க கண்டு பிடிப்பை நிகழ்த்தி 100 வோல்டேஜ் மின்சாரத்தைக் கம்பியில்லாமல் 26 மையில்களுக்கப்பால் இருந்த வங்கிக்கு கடத்திக் காட்டினார்...

இந்த மின்சாரத்தைக் கொண்டு 200 மின் விக்குககளையும் ஒரு பெரிய ஜெனரேடரையும் இயக்க முடிந்தது.

இதனால் வெறுமனே 5% மின் சக்தியே செலவானது..

நிகோலாவின் கண்டு பிடிப்பு ஐரோப்பாவில் அதிகாரம் செலுத்திய அதனூடாக முழு உலகிலும் அதிகாரம் செலுத்த விரும்பிய மின்சாரத்தை வைத்து கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த பண முதலைகளுக்கு சவாளாக அமைந்தது..

அதனால் அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள்...

ஜெ. பி. மோர்கன் எனும் ஒரு முதலாலியை வைத்து நிகோலாவின் கண்டு பிடிப்பை செயற்படுத்த முதலீடு செய்வது போல் கண்டு பிடிப்புக்கான பாவனை உரிமத்தை எழுதி வாங்கினார்.

நிவ்யோக்கில் வார்டன் கிலீப் எனும் இடத்தில் திட்டத்திற்கான கட்டடம் அமைக்கப்பட்டு அதில் சுருள் வடிவிலான 200 அடி உயரமுள்ள அன்டெனாக்களும் பொருத்தப்பட்டன.

ஆனால் திடீரென இத்திட்டம் கைவிடப்பட்டது திட்டத்திலிருந்து மோர்கன் விலகிக் கொண்டார்.

உரிமத்தை அவர் வாங்கியதால் வேறு யாராலேயும் அதைத் தொடர முடியாமல் போய் கடைசியில் 1917 ம் ஆண்டு கட்டடமும் இடிக்கப்பட்டது..

இவ்வளவு பயண்மிக்க திட்டம் ஏன் கைவிடப்பட்டது?

எதற்காக இன்று வரை தொடர முடியாமல் கிடப்பில் உள்ளது?

பதில் மிக எளிமையானது...

மக்கள் வானொலி சேவையை இலவசமாகவே பெருவது போல் இலவசமாகவே சேவை முறையில் யாருடைய தலையீடுமின்றி மின்சாரத்தையும் பெர ஆரம்பித்தால் லட்சக்கணக்கில் கம்பி வழி மின்சாரத்தில் முதலீடு செய்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் பண முதலைகள்  நஷ்டமடைவார்கள் அல்லவா?

இன்னும் இன்னும் மகக்களின் பணத்தை சுரண்ட முடியாதல்லவா?

Http:/www.teslasocitety.com/tesla_tower.htm

தமிழ் சோறு போடுமா?


இல்லை.. உட்கார வைத்து வடைப் பாயாசம் பீட்சா, கேஎப்சியுடன் விருந்தே வைக்கும்...

தமிழை நன்கு படித்து அறிந்தவன் இந்த கேள்வியைக் கேட்பதில்லை....

தமிழைப் படிக்காமலேயே இந்த முட்டாள் தனமான கேள்வியை எதுக்குங்க கேட்கிறிங்க,....

தமிழைப் படித்து பாருங்கள்...

தமிழ்ச்சாற்றை அருந்தி பாருங்கள்....

இதுப்போன்ற கேள்வி தோன்றாது...

மீறி தோன்றினால் குறை தமிழ் மீது அல்ல... உங்கள் மீதுதான்..

சில தமிழர்களைத் தவிர வேறு எந்த இனத்தவரும் தங்கள் தாய்மொழியைப் பார்த்து இப்படி கேட்பதில்லை....

ஆறு அறிவு இருக்கிறது என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடித்துக்கொண்டால் மட்டும் போதாது.... அதற்கேற்றாப் போல் நடந்து கொள்ளல் அவசியம்...

இன்னுமா நீ இந்தியன்...


பாஜக மோடிக்கு சாமானியன் கடிதம்...



அனுப்புநர்..

காரிக்கோட்டை
கிராமவாசி,
மன்னார்குடி(வ)
திருவாரூர் ( மா,வ)
தமிழ்நாடு
தென் இந்தியா

பெறுநர்..

மாண்புமிகு திரு.மோடி     
இந்தியப் பிரதமர்
புதுதில்லி.

பொருள் - தாங்கள் தருவதாக வாக்குறுதி அளித்த ரூ 15,00,000 பணத்தை உடனடியாக
எனது வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி வேண்டுதல்.

ஐயா வணக்கம்,

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் பிரதமராகப் போட்டியிட்டுப் பெருமைக்குரிய வெற்றியை ஈட்டினீர்கள்..

மூன்று முறை சென்னையில் அப்போது பரப்புரை செய்தீர்கள்.

அந்த மூன்று கூட்டத்திலும் ,
"நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடிக் கறுப்புப் பணத்தை மீட்பேன்.

மீட்டவுடன் ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கில் ரூபாய் பதினைந்து லட்சம் செலுத்துவேன் என்றீர்கள்.

அதையும் நூறே நாளில் தருவதாக பொது மேடையில் வாக்குறுதி அளித்தீர்கள்.

உங்களைத் தொடர்ந்து பேசியவர்களும் அதை ஆமோதித்தார்கள்.

இந்தியா முழுவதும் இதைச்சொல்லியே பரப்புரை செய்தீர்கள்.

பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி செய்கிறீர்கள்.

நீங்கள் வாக்குத்தவறாத பிரம்மச்சாரி என்று எங்கள் ஊர் எச்.ராஜா அவர்களும் பலமுறை கூறியுள்ளார்.

ஐயா ,

நீங்கள் பிரச்சார மேடையில் இருந்து கீழே இறங்கிய அடுத்த நொடி , உங்கள் வாக்குறுதியை நம்பி பதினைந்து இலட்சம் கடனாகப் பெற்றுவிட்டேன்.

வட்டி கொடுத்து என்னால் சமாளிக்க முடியவில்லை.

நூறுநாளில் தருவதாக, தங்கள் வாக்குறுதியை நம்பிக் கடன் வாங்கி விட்டேன்.

100 நாள் இப்போது 1000நாளாகி விட்டது.

ஐயா நீங்கள் மானஸ்தன்..

பலமுறை உங்களைத் தொடர்பு கொண்டேன்.
நீங்கள் வெளிநாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள்.

நீங்கள் கறுப்புப் பண மீட்பில் இருந்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

எனக்குக் கடன் தந்தவர்களும் அதை நம்பினார்கள்.

ஆனால், கடந்த சில மாதங்களாகக் கறுப்புப் பண விவகாரம் குறித்துப் பேச மறுக்கிறீர்கள்.

உங்கள் மன் கீ பாத்திலும் பதினைந்து லட்சம் பற்றிப் பேச மறுக்கிறீர்கள்.

உங்கள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் , எனக்குப் பணம் கொடுத்தவர்களைச் சமாளிக்க இயலவில்லை.

அதில் பல வங்கிகளும் அடக்கம்.

உங்கள் அருண்ஜெட்லி , வாராக் கடன் வசூல்களை வேறு தீவிரப்படுத்தி உள்ளார்.

ஜி... விஜயமல்லய்யாவைப் போல் நான் ஓடி ஒளிபவன் அல்ல.

என் நேர்மையை வங்கிகள் சந்தேகிப்பதில் எனக்குக் கவலை இல்லை.

அதன் மூலம் உங்கள் நேர்மையையும் அவர்கள் சந்தேகிப்பதை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

எங்கள் வீட்டில் மொத்தம் 4 பேர்.

மொத்தம் நீங்கள் எமக்குத் தரவேண்டிய தொகை 60 லட்சம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக்கே வாக்களிப்போம். இது உறுதி.

உடனடியாகக் கீழ்க்காணும் எனது
வங்கிக் கணக்கில் ரூபாய் அறுபது லட்சத்தை சேர்க்கவும்.

இது அவசர வேண்டுகோள் ஐயா.

நல்லவேளை நான் விவசாயி இல்லை..

பத்திரிகையாளன். இந்நேரம் கடனுக்காக என்  கை காலை முறித்திருப்பான்  வங்கி அடியாள்.

ஐயா..

ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த இந்தியர்களும் பணத்தைக் கேட்டால் என்ன செய்வீர்கள் ?

தயவுசெய்து உடனே பணத்தைப் பட்டுவாடா செய்யுங்கள்.

வரும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நீங்கள் சென்னை வரும்போது நமக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே இருக்கக்கூடாது.

ஜெய்ஹிந்த்..

ஸ்வச் பாரத்...

ஆப் கி மோடி சர்கார்
நமஸ்கார்...

இணைப்பு - தலைக்குப் பதினைந்து இலட்சத்தை 100 நாளில் தாங்கள் தருவதாக உறுதி அளிக்கும் காணொலி.

குறிப்பு - ஜி ... இதுகுறித்து ப் பலமுறை உங்கள் முகநூல் இன்பாக்சில் தகவல் அனுப்பியுள்ளேன்.

முக்கியக் குறிப்பு  - ஐயா இக்கடிதத்தைப் பகிரும் என் நண்பர்கள் வங்கிக் கணக்கிலும் 15,00,000 செலுத்தவும்.

- நன்றி

பாஜக மோடியின் வங்கி கொள்ளை...


https://www.siasat.com/news/hyderabad-long-queues-banks-withdrawing-money-panic-among-people-1278898/amp/

இசையும் தமிழில் இசைந்தது...


சங்கீதம், கர்நாடக சங்கீதம் இப்படி எதை நாம் பயில முற்பட்டாலும் அதன் பயணம் தியாகராயர், முத்துசாமி தீக்ஷிதர், ஷாமா சாஸ்திரிகள் போன்றோரின் தெலுங்கு கீர்த்தனைகளில் தான் இருக்கும்...

ஆனால் 19ஆம் நூற்றாண்டில் கல்கி கிருஷ்ணமூர்த்தி, டி கெ சி, ராஜாஜி ராஜா சார் முத்தையா செட்டியார் போன்றோர் கொண்ட முயற்சிகள் இன்றளவும் வெற்றி பெறவில்லை என்பதை காட்டும் வகையில் மரபு இசை மேடைகள் அங்கிகாரம் கொடுக்கப்படவில்லை..

ஆனால் இன்றைய தலைமுறைகள் இந்த நிலையை மாற்றி அமைக்கிறது..

தமிழ் பாடல்கள் ராகங்களின் அடிப்படையில் மரபு மேடை ஏறுகிறது.

மிகவும் குறைவான முந்தைய தலைமுறையினர் மட்டுமே இந்த கோட்பாடு கொண்டு இன்றும் உள்ளனர்.

இசை என்பது மொழி மரபு போன்றவற்றை கடந்தது. நாம் உணர்ந்து ரசிக்கவல்ல தாய்மொழியில் பாடல்கள் தோன்றினால் தத்தம் மொழியினருக்கு ஒரு இன்பம் தோன்றும்.

இசையில் பாகுபாடு ராகங்களால் இருக்கலாம் மொழியால் கூடாது என்பதை தற்போதைய தலைமுறை விதைத்து வருகிறது..

இசையில் இசைவோம் உணர்ந்து இசைவோம்...

அரசை குறை சொல்வதில் மட்டும் குறியாக இருக்காமல், மாற்றத்தை ஏற்படுத்தி, நாம் நம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பழக்கத்தை சொல்லித்தருவோம்...


சில்வர் பாத்திரம் விட செம்பு இருந்தால் மிக நல்லது...

தமிழர் வரலாறு பகுதி - 3...


(நாகரிக மாந்தன் பிறந்தகம்) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்..

6. நாகரிக மாந்தன் பிறந்தகம்...

மாந்தன் நாகரிக நிலைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு. மலையும் மலைசார்ந்த இடமுங் குறிஞ்சி; காடும் காடுசார்ந்த இடமும் முல்லை; நாடும் நாடுசார்ந்த இடமும் மருதம்; கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல். இவை ஆங்காங்குச் சிறப்பாகப் பூக்கும் பூ அல்லது வளரும் மரம்பற்றிப் பெயர் பெற்றன.

இயற்கை அல்லது அநாகரிக மாந்தன் விலங்கு பறவைகளை வேட்டையாடி வாழ்வதற்கேற்ற இடம் குறிஞ்சி; அதற்கடுத்த படியாக, ஆடுமாடுகளைச் சிறப்பாக வளர்த்து வாழ்வதற்கு ஏற்ற இடம் முல்லை; அதற்கடுத்த படியாக, பயிர்த்தொழிலைச் சிறப்பாகச் செய்து வாழ்வதற்கு ஏற்ற இடம் மருதம்; அதற்கடுத்த படியாக, மரக்கலங்களைச் செய்து கடல் வாணிகத்தை நடத்துவதற்கு ஏற்ற இடம் நெய்தல்.

இந் நால் நிலங்களும் மாந்தன் நாகரிக வளர்ச்சிக் கேற்றவாறு அடுத்தடுத் திருந்தது அல்லது இருப்பது குமரிநாடும் அதனொடு இணைந்திருந்த இற்றைத் தமிழகமுமே.

இற்றைத் தமிழ்நாட்டிற் போன்றே பண்டைத் தமிழகமாகிய குமரிநாட்டிலும் மேல்கோடியிலேயே பெருமலைத்தொடரிருந்தது.

அதனால், நிலம் மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருந்தது. இந் நிலைமைபற்றியே, குடதிசை மேல் (மேற்கு) என்றும், குணதிசை கீழ் (கிழக்கு) என்றும் பெயர் பெற்றன.

ஒருவன் மேற்றிசையினின்று கீழ்த்திசை வரின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்நிலமும் முறையே அடுத்தடுத்திருக்கக் காண்பான். இந் நிலைமையைப் பிற நாடுகளிற் காண்டல் அரிது.

வெள்ளம் பள்ளத்தையே நாடுமாதலால், தமிழ்நாட்டில் பொருநையும் (தாம்பிரபரணியும்), வைகையும், காவிரியும் போலும் ஒரு பேரியாறு தோன்றும் மலையகத்தினின்று, ஒருவன் அவ்வாற்றுவழியே தொடர்ந்து வருவானாயின், நிலம் வரவரத் தாழ்ந்திருப்பதையும், குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலுமாக முறையே மாறுவதையுங் காண்பான்.

முதற்கால மாந்தன் இயற்கை யுணவையும் இயற்கை நீர்நிலையையுமே சார்ந்திருந்ததனாலும், மரஞ்செடிகொடி யடர்ந்த அடவியை யூடறுத்துச் செல்லும் ஆறுதவிர வேறு வழி அவனுக்கின்மையாலும், குறிஞ்சியினின்று நெய்தல்வரை பெரும்பாலும் ஆற்றோரமாகவே இடம்பெயர்ந்து வந்ததாகத் தெரிகின்றது. ஆறு என்னுஞ் சொல்லுக்கு வழியென்னும் பொருள் தோன்றியதும் இங்குக் கவனிக்கத் தக்கது.

7. தமிழன் பிறந்தகம்...

தமிழன் என்னும் இனம் தமிழ்பற்றியதே யாதலால், தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்வாரியில் மூழ்கிப்போன குமரிநாடே. அதற்குச் சான்றுகள்..

1. தமிழும் அதனொடு தொடர்புள்ள திரவிடமொழிகளும் நாவலந் தேயத்திற்குள்ளேயே வழங்குதலும்; தென்மொழி வடக்கிற் செல்லச் செல்ல ஆரியப் பாங்கில் வலித்தும் உருத்தெரியாது திரிந்தும் சிதைந்தும் ஒடுங்கியும் இலக்கியமற்றும் இடையீடு பட்டும், தெற்கில் வரவர மெல்லோசை கொண்டும் திருந்தியும் விரிந்தும் இலக்கிய முற்றும் செறிந்தும் இருத்தலும்.

2. நாவலந் தேயத்திற்கு வெளியே திரவிடமொழி யின்மையும், மேலை மொழிகளிலுள்ள தென்சொற்கட்கெல்லாம் தமிழிலேயே வேர் அல்லது வேர்ப்பொரு ளிருத்தலும்.

3. தென்மொழிக் குடும்பத்து இற்றை நாற்பெரு மொழிகளும் தொன்றுதொட்டுத் தென்னாட்டிலேயே வழங்குதலும்,   அவற்றுள் முழுத் தூய்மையுள்ள தமிழ் அந் நாட்டின் தென்கோடியிலிருத்தலும்.

4. தமிழ்நாட்டுள்ளும் தெற்கே செல்லச்செல்லத் தமிழ் திருந்தியும் சொல்வளம் மிக்கும் ஒலியெளிமையுற்றும் இருத்தலும், திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன் என்னும் வழக்குண்மையும்.

5. வடநாட்டு முன்வட (பிராகிருத) மொழிகளிலும் தெலுங்கு முதலிய திரவிட மொழிகளிலுமுள்ள வன்மெய்களின்றிப் பதினெண் மெய்களே தமிழிலிருத்தலும், எட்டும் பத்தும் பன்னிரண்டுமாக மெய்யொலிகள் கொண்ட மொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனை யடுத்துள்ள தீவுகளிலும் வழங்குதலும்.

6. தமிழ் முழுவளர்ச்சியடைந்து முத்தமிழான பின் ஏற்பட்ட தலைக்கழகம் குமரிக்கண்டத் தென்கோடிப் பஃறுளி யாற்றங் கரை மதுரையில் இருந்தமையும், குமரிக்கண்டத் தோற்றத்தின் எண்ணிற்கு மெட்டாத் தொன்மையும், அக் கண்டம் வரலாற்றுக் காலத்திற்கு முன்பே முழுகிப் போனமையும்.

7. தென்னைமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்படுவதும், குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந்தமையும், தென் என்னும் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.

8. பண்டைத் தமிழ்ச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள நீர்நாயும், உரையாசிரியராற் குறிக்கப்பட்டுள்ள காரோதிமமும் (காரன்னமும்), ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாசுமேனியத் தீவில் இன்றுமிருத்தல்.

9. வாணிகத்தால் வந்த இரண்டோர் அயல்நாட்டு விலங்கு களும் நிலைத்திணை (தாவர) வகைகளுந்தவிர, மற்றெல்லாக் கருப் பொருள்களும், காலவகைகளும் நிலவகை களுமாகிய முதற் பொருளும், இன்றும் தென்னாட்டிற்கு இயற்கையாக வுரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல்.

10. தென்னாடு, தென்னர் (தென்னாட்டார்), தென்மொழி, தென்னவன் ( பாண்டியன்), தென்கலை என்னும் பெயர்கள் தொன்றுதொட்டு வழங்கிவந்துள்ளமை.

11. தென்வடல், தெற்கு வடக்குத் தெரியாதவன், தெற்கும் வடக்குமாய்த் திரிகின்றவன், தென்பல்லிவடபல்லி (தலையணிகள்) முதலிய வழக்குகளில் தென்திசை முற்குறிக்கப் பெறுதல்.

12. கடைக்கழகக் காலத்தமிழர் தம் இறந்த முன்னோரைத் தென் புலத்தார் எனக் குறித்தமையும், கூற்றுவன் தென்றி சைக்கிழவன், தென்றிசை முதல்வன், தென்புலக்கோன் எனப் பெயர்  பெற்றிருத்தலும்.

13. தென்மொழி வளர்ச்சியின் முந்துநிலைகளையெல்லாம் தமிழே காட்டிநிற்றல்.

14. கோதுமை, வாற்கோதுமை, உறைபனி, பனிக்கட்டி முதலிய குளிர்நாட்டுப் பொருள்கள் பண்டைத் தமிழிலக்கியத்திற் சொல்லப்படாமையும், தமிழர்க்கு வந்தேறிக் கருத் தின்மையும்.

15. கடைக்கழகப் புலவர் நாற்பத்தொன்பதின்மராயும் இடைக் கழகப் புலவர் ஐம்பத்தொன்பதின்மராயும் இருக்க, தலைக் கழகப் புலவர் மட்டும் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மரா யிருந்தமை.
குறிப்பு: தலைக்கழகப் பாண்டியநாடு தெற்கே ஈராயிரங் கல் தொலைவு நீண்டு பரந்திருந்ததனால், அதற்கேற்பப் புலவர் தொகையும் மிக்கிருந்ததென அறிக.

16. தமிழ்ஞாலத்தின் நடுவிடமாக, நடவரசன் தில்லை மன்று குமரி நாட்டுப் பாண்டியனால் அமைக்கப் பெற்றமை.
குறிப்பு: தில்லைமன்று வடபாற் பனிமலைக்கும் தென்பாற் குமரிமலைக்கும் நடுவிடையே அமைந்ததனாலேயே, பேருலகத்தின் நெஞ்சத்தாவை நிகர்த்ததாயிற்று.

இதன் விளக்கத்தை என் தமிழர் மதம் என்னும் நூலுட் காண்க..

தில்லைக்கு வடக்கிற் பனிமலையளவு தொலைவிலேயே தெற்கிற் குமரிமலையும் இருந்தது...

இதுக்கு ஒரு முடிவு இல்லையா....


இன்னும் எத்தனை குழந்தைகள் அவர்களுடைய அப்பா இன்னும் திரும்பி வருவார் என்று எதிர்பார்த்தே காத்துக் கொண்டுருக்கிறதோ....

உடுமலை சங்கரை கொலை செய்த ஆறு பேருக்கு மரணதண்டனை விதித்த கோர்ட்டின் தீர்ப்பை மாய்ந்து மாய்ந்து வரவேற்ற இஸ்லாமியர்கள்...


ஜிஷா கொலை குற்றவாளி "அமிருல் இஸ்லாமிற்கு" வழங்கப்பட்ட  தீர்ப்பை பற்றி வாய் திறக்கவே இல்லையே ஏன்?

ஒருவேலை இதற்கு பெயர் தான் அமைதி மார்க்கமோ?

தமிழர் வரலாறு பகுதி - 2 ...


(மாந்தன் பிறந்தகம்) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்...

5. மாந்தன் பிறந்தகம்...

தென்னிலம்..

மாந்த இனங்களின் கொடிவழியும் பொதுப்படையான இடமாற்றங்களும் பற்றியகருதுகோள்: "மாந்தனின் முந்தியல் இருப்பிடம் இன்று இந்துமாவாரியில் மூழ்கியுள்ள ஒரு கண்டம் என்றும், அது இன்றுள்ளபடி ஆசியாவின் தென்கரையைநெடுகலும் அடுத்து (பெரும்பாலும் இருந்திருக்கக் கூடியபடி) அதனொடு சிலவிடங்களில் இணைந்தும்), கிழக்கில் அப்பாலை இந்தியாவும் (Further India) சண்டாத்தீவுகளும் வரையும், மேற்கில் மடகாசுக்கரும் ஆப்பிரிக்காவின் தென்கீழ்க்கரையும் வரையும், பரவியிருந்த தென்றும் கருதுவிக்கும் பல சூழ்நிலைகள் (சிறப்பாகக் காலக் கணக்கியல்உண்மைகள்) உள்ளன.

விலங்குகளும் நிலைத்திணையும் பற்றிய பல ஞாலநூலுண்மைகள், அத்தகைய தென்னிந்தியக் கண்டமொன்று முன்னிருந்த தென்பதைப் பெரிதுங் காட்டுகின்றன. அக் கண்டத்திற்குச் சிறப்பாகவுரியன வாயிருந்த முந்தியற் பாலுண்ணிகளால், அது இலெமுரியா(Lemuria) எனப் பெயர் பெற்றது.

அதை முதற்கால மாந்தனின் உறைவிடமாகக்கொள்வோ மாயின், மாந்த இனங்கள் இடம்பெயர்ந்து ஆங்காங்கும் குடியேறி யிருக்கும் திணையியற் பாதீடு எளிதாய் விளங்கிவிடும்."

"மாந்த இனவாராய்ச்சி, வடபாகத்திலும் நண்ணிலக் கடற்கரை யிலும் இன்றுவாழும் மாந்த இனங்களின் முன்னோர், தென்னிந்தியா வழியாகத்தான் அவ் விடங்கட்குச் சென்றிருந்தார் என்பது, எவ் வகையிலும்நடந்திருக்கக்கூடாத செய்தியன்று என்பதைக்காட்டும்.

இந்தியக் கீழ்கரையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக் கூடுகட்கும் அடையாளங்கட்கும் உரிய காலம், இன்னதென்று தீர்மானிக்கப் படாததாயிருப்பினும், பொதுவாகக் கணிக்கப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்டதாகும்.

இதுவரை உலகிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தன் எலும்புக் கூடுகளுள், சாலித்தீவில் (Java) 1891-ல் தூபாயிசு என்பவரால் எடுக்கப்பட்டதற்குரிய "நிமிர்ந்த குரக்கு மாந்தன்" (Pithecanthropos Erectus) காலம் கி.மு. 5,00,000 என்று கணிக்கப்பட்டுள்ளது.

1961-ல் தென்னாப்பிரிக்காவில் தங்கனியிக்காவில் பேரா. இலீக்கி (Prof. Leakey) என்னும் ஆங்கில மாந்தனூ லறிஞராற் கண்டெடுக்கப்பட்டுள்ள ஈரெலும்புக் கூடுகளுள், ஒன்றற்குரிய 'நெற்றுடைப்பான்' (Nut cracker Man or sinjanthropos Boisi) இற்றைக்கு 6,00,000 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும், இன்னொன்றற்குரிய, இன்னும் பெயரிடப்படாத, நனிமிக முந்திய மாந்தன், குறைந்த பக்கம் 17,50,660 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதை அமெரிக்க மாந்தனூற் பேராசிரியர் சிலர் மறுத்துள்ளனர்.

உண்மை எங்ஙன மிருப்பினும், சாலித்தீவையும் தென்னாப் பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த பெருநாடே குமரிக்கண்ட மாதலின், அந் நிலத்திலேயே மாந்தன் தோன்றினானென்றும், அத் தோற்றம் கி.மு.5,00,000 ஆண்டுகட்கு முந்தியதென்றும், மறுப்பச்ச மின்றிக் கூறலாம்.

'உயிரினங்களின் இடம்பெயர்வும் பாதீடும்' பற்றிய அதிகாரத்தில், ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக்கொண்டி ருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும்போது, எக்கேல், "இந்துமா வாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின் கீழ்கரைவரைக்கும் பரவியிருந்த ஒரு கண்டமாயிருந்தது.

கிளேற்றர் இப் பழங்காலப் பெருங்கண்டத்திற்கு, அதில் வதிந்த குரங்கொத்த உயிரிபற்றி இலெமுரியா என்று பெயரிட்டிருக்கின்றார். இக் கண்டம் மாந்தனின் பிறந்தகமா யிருந்திருக்கக்கூடுமாதலின், மிக முதன்மையானதாகும்"9 என்று கூறுகின்றார்.

தொன்னிலம்...

நிலவியல் வரலாற்றாராய்ச்சிக்குத் தெரிந்தவரை, இஞ் ஞாலத்தின் தொன்முது பழம்பகுதியாயிருந்தது, தென்மாவாரியில் மூழ்கிப்போன குமரிக்கண்டமே. யோவான் இங்கிலாந்து (John England) என்னும் ஆராய்ச்சியாளர், "கோடி யாண்டுகட்குமுன், ஒருகால் அதற்கும் முந்தி, ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தி யாவையும் இணைத்திருந்தது" என்பர்.

இற்றைத் தமிழகத்திலும், நீலமலை, ஆனைமலை, பழனிமலை, ஏலமலை, சேரவரையன் (சேர்வராயன்) மலை ஆகியவற்றின் பாறை வகை எழுபது கோடியாண்டுகட்கு முற்பட்டுத் தோன்றியதென நிலநூலாராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

நண்ணிலம்..

முந்தியல் மாந்தனின் வாழ்விற் கேற்ற பல்வேறு நிலைமைகளை நோக்கின், இஞ் ஞாலத்தின் நடுவிடமே நிறைவுற்ற மாந்தன் பிறந்தகமா யிருந்திருக்க முடியுமென்பது புலனாகும். அத்தகைய இடம் குமரிக்கண்டமே.

நண்ணிலக்கோடு (Equator) அதனூடேயே செல்வதைத் திணைப்படத்திற் (Map) காண்க..

முதனிலை மாந்தனின் மேனி முழுவதையும் மூடியிருந்த கோரைமயிர் உதிர்வதற்கும் மென்மையடைவதற்கும், வெப்பநாட்டு வாழ்க்கையே ஏற்றதாகும்.

ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையே நண்ணிலக் கடல் (Mediterranean Sea) என்று பெயர் பெற்றுள்ளது, உண்மையில் இருகண்டத்திடைக் கடலேயன்றி நண்ஞாலக் கடலன்மை அறிக.

வண்ணிலம்..

முதற்கால மாந்தன் காட்டு விலங்காண்டியாகவும் அநாகரிக னாகவுமிருந்து, தன் வாழ்க்கைக்கு இயற்கை விளைவுகளையே சார்ந்திருந்ததனால், அவனுக்கேற்ற பெருவளநாடு குமரிக்கண்டமே.

ஏதேன் (Eden) தோட்டம் என்பது பல்வகைக் கனிமரங்கள் நிறைந்த வளநாட்டையே குறிக்கும்.

ஏதேன் என்பது இன்பம் என்று பொருள்படும் எபிரேயச் சொல்.

பாலும் தேனும் ஓடும் கானான் தேசமென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டாலும், மேலையாசியா விற்கு அது சிறந்ததேயன்றி ஞாலத்திற் சிறந்த நாடாகாது.

நண்ணிலக்கடல் ஒரு காலத்தில் நேரே கிழக்குநோக்கி நீண்டு அமைதிமாவாரியிற் (Pacific Ocean) கலந்திருந்ததனால், அன்று கானானும் ஏதேன் தோட்டம் இருந்ததாகச் சொல்லப்படும் மெசொப்பொத்தேமியாவும் கடலடியில் இருந்திருத்தல் வேண்டும்.

அதற்கு முன்பு முதற்காலத்திலும் ஏதேன் தோட்டமிருந்த இடம் நிலப்பகுதியாகவே இருந்ததென்று கொள்ளினும், அது குமரிநாட்டினும் வளஞ் சிறந்ததாகக் கொள்ள முடியாது.

அதை வளப்படுத்திய நாலாறுகளுள் ஒன்றான ஐபிராத்து (Euphretes) பஃறுளிபோற் பேரியாறன்று. அங்குள்ள மலைகளுள் ஒன்றும் குமரிபோற் பன்மலையடுக்கமன்று. இடையிடை வறண்ட வெம் மணற் பாலைகளும் பல வுள.

பனிமலை (இமயம்) போலும் குமரிமலைத் தொடரும் கங்கை போலும் பஃறுளியாறுங் கொண்டு, பசியுந் தகையுந் தணிக்க, இனியனவும் வாழ்நாள் நீட்டிப்பனவுமான கனிகளுங் காய்களும், மாரியுங் கோடையும் விளையும் பல்வகைத் தவசங்களும், சுவைமிக்க பயறுகளும், எளிதாகக் கில்லியெடுக்குங் கிழங்குகளும், தேனும் தெங்கிளநீரும் கடுங்கோடையிலும் வற்றாச் சுனைபொய்கைத் தெண்ணீரும், உணவும் மருந்துமான பல்வேறு விலங்கு பறவை யூனும், ஆடுமாடுகளின் பாலும், இராத்தங்கி யுறங்க மலைக்குகை களும் புடைகளும்; அற்றம் மறைக்க இலையுந்தோலும் மட்டையும் மரவுரியும் ஏராளமாகக் கிடைத்த குமரிநாடு போலும் இயற்கை வளநாடு இஞ்ஞாலத்தில் வேறேதேனு முண்டோ?

முகவை மாவட்டத்திலுள்ள பாரி பறம்புமலையும், ஆயிரத் தெண்ணூறாண்டுகட்கு முன் மூவேந்தராலும் முற்றுகையிடப் பட்டிருந்தபோது, அதன்மேற் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களைக் காலமெல்லாந் தாங்குமளவு எத்துணை இயற்கைவள முற்றிருந்த தென்பது,

"அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொண் முரசின் மூவிரு முற்றினும்
உழவ ருழாதன நான்குபய னுடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே
நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே
வான்க ணற்றவன் மலையே வானத்து
மீன்க ணற்றதன் சுனையே யாங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினுந்
தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்"
(புறம். 109)

என்று கபிலர் பாடியதனின்று அறியக்கிடக்கின்றது. மூவாயிரம் அடி உயரமுள்ள ஒரு சிறு மலை இத்தகைய வளத்ததெனின், பனிமலை போலும் பன்மலையடுக்கத்துக் குமரிமாமலைத் தொடர் எத்துணை வளத்ததா யிருந்திருத்தல் வேண்டும்..

காலமழையும் பொய்க்குமாறு முல்லையிலும் குறிஞ்சியிலு முள்ள சோலைக்காடுகளெல்லாம் பெரும்பாலும் அழிக்கப்பட்டும்,

நிலந் தாங்கக்கூடிய அளவுபோல் இருமடங்கு மக்கள்தொகை பெருகியும் உள்ள இக்காலத்தும், ஐம்பதிற்கு மேற்பட்ட வாழைக்கனி வகைகளும், ஒட்டுமாவல்லாத இருபான் மாங்கனி வகைகளும், நால்வகைப் பலாக்கனிகளும், கொழிஞ்சி, குடகு, நாரந்தம், வெள்ளரி, விளா, பனை முதலிய பிற கனிவகைகளும்; நெல்,கம்பு, வரகு, கேழ்வரகு, சோளம், சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி என்னும் தொண்வகைத் தவசங்களும், அவரை, துவரை, உழுந்து, மொச்சை, பாசி (பச்சை), தட்டான் (தட்டை), கல், கரம்பை (வயல்), கொள் (காணம்) என்னும் தொண்வகைப் பயறுகளும் ஆகிய பதினெண் கூலமும்; கறிசமைக்கப் பத்துவகைக் காய்களும், முப்பான் வகைக்கு மேற்பட்ட கீரைகளும் கறிசமைக்கவோ அவித் துண்ணவோ பயன்படும் பத்துவகைக் கிழங்குகளும் கிடைக்கின்றன.

நெல்லில் மட்டும், அறுபான்வகைச் சம்பாவும் நாற்பான்வகை மட்டையுமாக நூறுவகையுள்ளன. பொன்தினை, செந்தினை, கருந்தினை எனத் தினை முத்திறத்தது. சோளம் ஐவகையது.

காராமணி, வரிக்கொற்றான் என்பன தட்டானுக்கு நெருங்கிய வகைகள்.

இற்றைத் தமிழகத்திலேயே இத்தனை இயற்கையுணவு வகைகளெனின், கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்குமுன் தெற்கில் 2500 கல் தொலைவு நீண்டு பரந்திருந்த குமரிக்கண்டப் பழம் பாண்டி நாட்டில், எத்தனை வகையிருந்தனவோ இறைவனுக்குத்தான் தெரியும்..

பிற நாடுகளிற்போல் என்றும் வற்றி வறண்டு கொதிக்கும் பாழ் மணற் பாலைவனமாகிய இயற்கைநிலம், தமிழகத்தில் எவ்விடத்தும் இருந்ததில்லை.

இங்குள்ள பாலையெல்லாம், முல்லையுங் குறிஞ்சியும் முதுவேனிற் காலத்தில் நீர்நிலை வற்றி நிலைத்திணை (தாவரம்) பட்டு நிலங் காய்ந்த குறுங்கால நிலையினவே. கோடை மாறி மாரி பெய்தபின், அப் பாலைநிலம் புல்பூண்டும் மரஞ்செடி கொடிகளும் தளிர்த்து முன்போல் முல்லையுங் குறிஞ்சியுமாக மாறிவிடும். இங்ஙனம் பாலையின் நிலையில்லா நிலை நோக்கியே, அதனை நீக்கி ஞாலத்தை நானிலம் என்றனர் பண்டைத் தமிழறிஞர்.

கோவலனுங் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தினின்று மதுரைக்குச் சென்ற கடுங்கோடைக் காலத்தை,

"கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்திய லிழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளுங்
காலை"

(சிலப்.11: 60-7)

என்று ஒரு மறையோன் கூற்றாக இளங்கோவடிகள் கூறுதல் காண்க. இந் நிலைமையை இன்றும் தமிழ்நாட்டில் முதுவேனிற் காலத்தில் குறிஞ்சி முல்லைநிலங்களிற் காண்க.

இதனால், பண்டைத் தமிழகம் ஈடிணையற்ற பெருவள நாடாயிருந்த தென்பதற்கு எள்ளளவும் இழுக்கில்லை யென்க..

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா வின் 2018 ஆப்பு...


பாஜக பொன். ராதா கிருஷ்ணன் எனும் பொய். ராதா கிருஷ்ணனுக்கு.. புரட்சி படை தேசிய விஞ்ஞானி விருது அறிவித்திருக்கிறது...


தமிழர் வரலாறு பகுதி - 1...


(ஞாலமுந்திய நிலை) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்...

முன்னுரை...

1. ஞாலமுந்திய நிலை..

ஞாலம் என்பது மக்கள் வாழும் உலகமாகிய இம் மாநிலம். 'பூமி' என்னும் வடசொல்லை வேண்டாது வழங்கியதனால், ஞாலம் என்னும் தென்சொல் வழக்கற்றுப் போயிற்று.

தென்சொல்லெனினும் தமிழ்ச் சொல்லெனினும் ஒக்கும்.

ஞாலநிலப்பாகம் இன்றுள்ளவாறு ஐந்து கண்டங்களாகவும் ஆயிரக்கணக்கான தீவுகளாகவும் தொன்றுதொட்டு இருந்ததில்லை.

ஒரு காலத்தில் அது காண்டவனம் (Gondwana), அங்காரம் (Angara), பாலதிக்கம் (Baltica), அமசோனியம் (Amazonia) என்ற நாற்பெரு நிலங்களாகவும் ஒருசில தீவுகளாகவும் பகுந்திருந்தது.

காண்டவனம் ஆப்பிரிக்காவையும் கடகத் திருப்பத்திற்குத் (Tropic of Cancer) தெற்கிலுள்ள இந்தியாவையும் ஆத்திரேலியாவையும், அங்காரம் ஆசியாவின் வடகீழ்ப் பெரும்பகுதியையும், பாலதிக்கம் வட அமெரிக்காவின் வடகீழ்ப் பகுதியையும் கிரீன்லாந்து என்னும் பைந்தீவையும் ஐரோப்பாவின் தென்பகுதியையும், அமசோனியம் தென்னமெரிக்காவையும் தம்முட் கொண்டிருந்தன.

அரபிக் கடலும் வங்காளக்குடாக் கடலும் அன்றில்லை.

இந்துமாவாரியின் பெரும் பகுதியும் அத்திலாந்திக்க மாவாரியின் வடபகுதியும் நிலமாயிருந்தன.

நண்ணிலக்கடல் ஆசியாவை ஊடறுத்துச் சென்று அமைதி மாவாரியொடு சேர்ந்திருந்தது.

அதனால், பனிமலைத்தொடர் (இமயம்) அன்று கடலுள் மூழ்கியிருந்தது..

2. எழுதீவுகள்...

ஒரு காலத்தில் ஞாலநிலப்பகுதி ஏழு கண்டங்களாகவும் இருந்ததாகத் தெரிகின்றது. அவை ஒன்றினொன்று தீர்ந்திருந்தமை யால் தீவுகள் எனப்பட்டன (தீர்வு-தீவு).

அவை பெருநிலப்பகுதி களாதலால் தீவம் என்றும் சொல்லப்படும் (தீவு-தீவம்).

வடமொழியாளர் தீவம் என்னுந் தென்சொல்லைத் 'த்வீப' என்று திரித்து, இருபுறமும் நீரால் சூழப்பட்டது எனப் பொருட் கரணியங் கூறுவர். தீவு என்பது நாற்புறமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதியே.

ஒவ்வொரு தீவும் நிலைத்திணையால் (தாவரத்தால்) நிறைந்து ஒரு மாபெருஞ் சோலைபோல் தோன்றியதனால், பொழில் எனவும் பட்டது.

நாவலந்தீவு, இறலித் தீவு, இலவந்தீவு, அன்றில்தீவு, குசைத்தீவு, தெங்கந்தீவு, தாமரைத்தீவு என்பன எழுதீவுகள்.

"நாவலந் தீவே இறலித் தீவே
குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே
சான்மலித் தீவே தெங்கின் தீவே
புட்கரத் தீவே எனத்தீ வேழே
ஏழ்பெருந் தீவும் ஏழ்பொழி லெனப்படும்"

என்பது திவாகரம்.

கிரவுஞ்சம், சான்மலி, புட்கரம் என்பன முறையே, அன்றில், இலவம், தாமரை என்பவற்றின் மொழிபெயர்ப்பான வடசொல்லாம். நாவல் என்பதைச் சம்பு என மொழிபெயர்த்தனர் வடவர்.

அன்றில் என்பது ஒரு பறவை வகை.
தெங்கந்தீவு என்பதையே எழுதீவுகளுள் ஒன்றாகத் திவாகரமும் பிங்கலமும் சூடாமணியும் கூறியிருப்பவும், அதற்குப் பகரமாகத் தேக்கந்தீவு என ஒன்றைக் குறித்ததோடு, அதைப் பிங்கலமென்றுங் காட்டியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி. தெங்கந்தீவு என்பதைத் தேக்கந்தீவு எனத் தவறாகப் பாடங்கொண்டு, அதற்கேற்பச் 'சாகத்வீப' என வடமொழியில் தவறாக மொழி பெயர்த்ததைச் சரிப்படுத்த வேண்டிச் சென்னை யகரமுதலி அவ் வழியை மேற்கொண்டது போலும்..

ஆரியர் குமரிநாட்டுத் தமிழர்க்குக் காலத்தால் மிகமிகப் பிற்பட்டவராதலின், எழுதீவுக் கருத்தைத் தமிழிலக்கியத்தினின்றே கொண்டிருத்தல் வேண்டும்.

தீவு என்னும் பெயர், நாவலந்தீவு ஆப்பிரிக்காவினின்றும் பிரிந்து போன நிலையைக் காட்டும்.

3. நாவலந்தீவின் முந்நிலைகள்...

1. பனிமலையும் வடஇந்தியாவும் இல்லாத இந்தியப் பகுதி, தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டத்தொடு அல்லது பழம் பாண்டிநாட்டொடு கூடியது.

2. பனிமலையொடு கூடிய இந்தியாவும் பழம் பாண்டிநாடும்.

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி."
(சிலப்.11:19.22)

என்று சிலப்பதிகாரம் கூறுவதால், பழம் பாண்டிநாடு முழுமையும் இருந்த காலத்தில் பனிமலையும் இருந்தமை அறியப்படும்.

3. பழம் பாண்டிநாடு இல்லாத இந்தியா.
நாவலந் தீவிலிந் நங்கையை யொப்பார்"
(மணிமே. 25:12).

4. குமரிக்கண்டம் (Lemuria)...

மறைந்த குமரிக்கண்டம் (Lost Lemuria) என்னும் ஆங்கில நூலுட் போந்த படத்தினாலே, ஒரு பெருமலையானது மேலைக் கடலில் தொடங்கி வடக்குந் தெற்குமாகக் குமரிக்குத் தென்பகுதியிலுள்ள நிலப்பகுதியிலே நெடுந்தொலைவு சென்று பின் தென்மேற்காகத் திரும்பி 'மடகாசுக்கர்' என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகின்றது.

அம் மலைக்குக் கீழ்ப்பக்கம் உள்ள நாட்டில் பெருமலை ஒன்றுமிருந்ததாகத் தெரியவில்லை.

இந்த மலையானது தென்கிழக்கு முதல் வடமேற்குவரை செல்லுகின்ற இமயமலையைப் போல வடமேற்குத் தொடங்கித் தென்கிழக்கிற் செல்லுகின்ற ஒரு பெரு மலைத்தொடராக இருந்திருப்பதாகத் தெரிகின்றது" (சிலப் : 8:1) என்று பேரா.கா. சுப்பிரமணியப்பிள்ளை வரைந்திருப்பதனின்று, தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டம் என்னும் நிலப்பகுதி ஏறத்தாழ 2500 கல் தென்வடலாக நீண்டிருந்ததென்றும், அதன் மேற்குப்பகுதி நெடுகலும் ஒரு பெருமலைத்தொடர் தொடர்ந்திருந்ததென்றும் அறியப்படும்.

"முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி"
(புறம். 9)

என்று நெட்டிமையாரும்,

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும்"
(சிலப்.11:19-20)

என்று இளங்கோவடிகளும் பாடியிருப்பதால், குமரிக்கண்டமும், அதன் தென்கோடியின் மேலைப்பகுதியிலிருந்த குமரிமலைத் தொடரும், அதனின்று பாய்ந்தோடிய பஃறுளியாறும் கட்டுச் செய்திகளல்ல வென்றும் உண்மையாயிருந்தவை யென்றும் அறியலாம்.

"தொடியோள் பௌவமும்" ( தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியம், சை.சி. நூ.ப.க. பதிப்பு) என்னும் சிலப்பதிகாரத் தொடரின் உரையில், "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின் பாலைநாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரைநாடும், ஏழ் குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும்" என்று அடியார்க்குநல்லார் குமரிக்கண்டப் பகுதியாகிய பழம் பாண்டி நாட்டைப் பகுத்துக் கூறியிருப்பதும், கட்டுச்செய்தியா யிருக்க முடியாது.

"காலமுறைப்பட்ட உண்மைகளைக் கொண்டு, இற்றை மலையத் தீவுக் கூட்டம் முற்றிலும் வேறுபட்ட இருபகுதிகளைக் கொண்ட தென்று, உவாலேசு கூறியுள்ள முதன்மையான சான்று சிறப்பாக உவகையூட்டத்தக்கது.

பொருநையோ (Borneo), சாலி (Java), சுமதுரா(Sumatra) என்னும் பெருந்தீவுகளைக் கொண்ட மேலைப் பிரிவாகிய இந்தோ-மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் மலாக்காவினால் ஆசியாக் கண்டத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.

ஒருகால், சற்று முந்திக் கூறிய குமரிக் (Lemuria) கண்டத்தோடும் அது இணைக்கப்பட்டிருந்திருக்கலாம். இதற்கு மாறாக, செலிபிசு, மொலுக்காசு, புதுக்கினியா, சாலோமோன் தீவுகள் முதலியவற்றைக் கொண்ட கீழைப் பிரிவாகிய ஆத்திரேலிய-மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் ஆத்திரேலியாவுடன் நேரே இணைக்கப் பட்டிருந்தது."

"செடிகொடிகளிலும் உயிரிகளிலும் ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் மிகப் பழங்காலத்திலிருந்த மிக நெருங்கிய ஒப்புமைகளைக்கொண்டு, திருவாளர் ஓல்டுகாம் ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப்பிருந்ததென்று முடிபு செய்கின்றார்."

"இந்தியர்க்குப் பெயரே தெரியாத சில பழங்காலத்து மாபெரிய பப்பரப்புளி அல்லது யானைப்புளி அல்லது மேனாட்டு (சீமை)ப்புளி (Baobab) என்னும் ஆப்பிரிக்க மரங்கள், இந்தியத் தீவக்குறையின் (Peninsula) தென்கோடியில், அயல்நாட்டு வணிகம் நிகழ்ந்து வந்த சில துறைமுகங்களில், அதாவது குமரிமுனை யருகிலுள்ள

கோட்டாற்றிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடியருகில் பழைய கொற்கையிருந்திருக்கக்கூடிய இடத்திலும், இன்னுங் காணப்படுகின்றன.

குமரிக்கண்ட நால்நிலைகள்...

1. ஆப்பிரிக்காவொடும், ஆத்திரேலியாவொடும் கூடிய பழம் பாண்டிநாடு.

2. ஆப்பிரிக்கா நீங்கிய பழம்பாண்டிநாடு.

3. ஆத்திரேலியாவும் நீங்கிய பழம்பாண்டிநாடு.

4. சிறிது சிறிதாய்க் குறைந்துவந்தபழம் பாண்டிநாடு...

லயோலா கல்லூரி அறிக்கை...


ஆழ்மனத்தின் அரியசக்தி...


நாம் பிறந்தது முதல் இன்றுவரை நம் ஆழ்மனதில் பதிந்த விடயங்களே நம் வாழ்வை தீர்மானிக்கிறது.

உதாரணமாக பத்து வருடங்களாக கார் ஓட்டிய அனுபவசாலியை ஹிப்னாடிசம் செய்து உங்களுக்கு கார் ஓட்ட தெரியாது என அவர் ஆழ்மனத்தை குழப்பிவிட்டால், அவரால் நிச்சயமாக ஓட்டவே முடியாது.

அப்படியெனில் காரை ஓட்டுவது எது?

அவரின் ஆழ்மன தகவலா? அல்லது அவரின் உடலா?

அவரின் ஆழ்மனம் இத்தனை ஆண்டகளாக அவர் கார் ஓட்டும் போது செய்யும் சிறு தவறுகளை கூட கூர்ந்து கவனித்து தகவல்கள்களை சீர்செய்து அவரை ஆபத்தில் இருந்து புதிய உக்திகளை பயன்படுத்தி காப்பாற்றும்.

தீவிர பக்தி செய்கிறவனால் தான் கடவுளை உணர முடியும்.

எதை உன் ஆழ்மனம் முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்கிறதோ, அதை உனக்கு காட்டும். அது உனக்கு கிடைக்கும். அதுவகவே நீ மாறுவாய்.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவனை ஐந்தே நிமிடத்தில் வெறும் வார்த்தைகளால்  காய்ச்சலில் படுக்க வைக்க முடியும்.

நம் வாழ்க்கை நம் எண்ணங்களாலும் பிறரின் கருத்தேற்றத்தாலுமே நகர்கிறது...

அரசுகள் அம்பலம் - 5...


உன்னுடைய தேடல் இலுமினாட்டி, Rothschild, சாத்தன், என்றில்லாமல் IMF , Deep state, World bank என்றிருந்தால் இந்திய  அரசின் தற்போதய காய் நகர்த்தலை அதன் பின் உள்ள இயக்கங்களை ஓரளவு யூகிக்கலாம்...

எட்டு நடை...


எட்டு போடுகிறவனுக்கு நோய் எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி..

மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம் அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு வருகிறது நோய்.

நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல், அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை தேடிக் கொள்ளவே விரும்பும்.

சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
தெளிவான விடைகளை தருகிறது.

சித்தர்கள்... எட்டுப் போடு, எல்லாம் பறந்தோடும்.. என்கிறார்கள்.

நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்
அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,
மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம்.

எத்தனை தான் மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் போவதால்) மறுபடியும் இவை தாக்கும்.

இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும் நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர் சித்தர்கள்.

இதிலிருந்து விடுபட்டு, நாம் மனிதர்கள், நலமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த முறையை வகுத்துக் கொடுத்துள்ளனர்.

காலை நேரத்திலோ, அல்லது நேரம் கிடைக்கும் பொழுதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்ட வெளியிலோ (குறைந்தது 10 அடி நீளம் வேண்டும்) எட்டு போடுகிற
வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள்
நடை பயிற்சி செய்ய வேண்டும்.

முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள் வடக்கிலிருந்து தெற்காக நடக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு இருமுறை செய்ய வேண்டும்.

காலையும், மாலையும் வேளைகள்
மிக வசதியாக இருக்கும்.

இதை செய்வதால் என்ன நடக்கும்...

1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி கரைந்து வெளியேறுவதை காணலாம்.

2. இந்த பயிற்சியை இருவேளை செய்து வந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.

3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும் குணமாகும். (பின்னர் மாத்திரை, மருந்துகள் தேவை இல்லை).

4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.

5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.

6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.

7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்.

8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.

9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும்.

10. பாத வலி, மூட்டுவலி மறையும்.

11. சுவாசம் சீராகும் அதனால் உள்
உறுப்புக்கள் பலம் பெரும்.

சரி.. இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும்.

8 வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள்..

அந்த வடிவம் முடிவில்லாதது மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சமநிலை படுத்துகிறது.

இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்த சித்தர்கள், இதையே வாசி யோகத்தில் (மூச்சு பயிற்சியில்) உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?

விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து பலனடையுங்கள்...

தமிழா சேவல் சண்டைக்கு தயாராக இரு...


அதிமுக எடப்பாடி முகம் இறுகியது: பிடி பிடி என பிடித்த குமரி மாவட்ட பிஷப்...


ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்துக்கு நேற்று சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு மீனவ கிராமத்துக்கு கூட செல்லாமல் ஜூட் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு புறப்பட்டு சென்று விட்டார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கோட்டறு மறைமாவட்ட ஆயர் நஸ்ரேன் சூசை பேசிய போது முதல்வரின் முகம் இறுகியது.

மீனவர்களின் குரலாக இருந்தது அவரது பேச்சு அங்கு.

ஆயர் நஸ்ரேன் சூசை பேசியது...

மீனவர் மரணம் என்பது ஆண்டுதோறும் நடந்து கொண்டிருக்கிறது.

இயற்கைச் சீற்றம், இலங்கை கடற்படை தாக்குதல் என்று ஒவ்வோர் ஆண்டும் மீனவர்களை இழப்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போது 400, 500 மீனவர்கள் காணோம் என்ற இன்றைய நிலைமையை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஒரு பெரிய வல்லரசான நாட்டில் 30-ஆம் தேதி நடந்த இயற்கை சீற்றத்துக்குப் பிறகு 13 நாள்கள் கழித்தும் 465 மீனவர்களைக் காணவில்லை என்று அரசாங்கமே சொல்கிறது என்று சொன்னால் அது கேவலமாக இருக்கிறது.

அதற்கு இன்னொரு வார்த்தை எனக்குத் தெரியவில்லை என கூறினார். அப்போது முதல்வர் எடப்பாடியின் முகம் இறுகியது.

அதோடு விடாமல் தனது பேச்சை தொடர்ந்தார் அவர்...

உள்ளார்ந்த ஈடுபாட்டோடு மத்திய அரசு இந்த மீட்புப் பணிகளில் ஈடுபடவில்லை என்பதை நாங்கள் எல்லாருமே உணர்கிறோம்.

அன்றைக்கே துரிதமாகத் தேட ஆரம்பித்திருந்தால் இன்று காணாமல்போன மீனவர்களின் எண்ணிக்கையை 30, 20 என்று குறைத்திருக்கலாம். 20 மீனவர்கள் காணோம் என்ற எண்ணிக்கையைக்கூட எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.

இருந்தாலும் 460-க்கும் 20-க்கும் இடையில் எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்று யாருக்கும் கணக்குப் பாடம் நடத்த வேண்டிய தேவை இல்லை.

இறந்த மீனவர்களுக்குத் தமிழக அரசு பத்து லட்சம் ரூபாய் அறிவித்திருக்கிறது. ஆனால், நடந்து போகும் தூரத்தில் இருக்கும் கேரள அரசு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. அதேபோல தமிழக அரசும் வழங்க வேண்டும் எனது எங்கள் கோரிக்கை.

அரசாங்கத்துக்கு சிக்கல்கள் இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களின் மனத்தில் என்ன ஏக்கம் இருக்கிறது என்பதை உணர அரசாங்கம் முயல வேண்டும்.

மாண்டுபோன உயிர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது. மனித வாழ்க்கையில் இறந்து போனவர்களைத் திரும்பக் கொண்டுவர முடியாது. தங்கள் கணவன் கடலோடு போய்விட்டானே என்று துடித்துக்கொண்டிருக்கும் மீனவக் குடும்பங்களுக்கு அரசு ஆறுதலாக இருக்க வேண்டும்.

காணாமல் போனால் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் உயிரிழந்தார் என்று கருதி உதவித் தொகை கொடுக்கிறீர்கள். அந்த கால அளவைக் குறைக்க வேண்டும் என பிஷப் அதிரடியாக பேசி முடித்தார்...

பிரபல போர்ட்டிஸ் மருத்துவமனையை கலாய்த்த நபர்...


அரசுகள் அம்பலம் - 4...


பாஜக மோடியின் ஊழல் கூட்டாளி வருமானத் துறையே...


தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த மகாராக்ஷ்டிர ஆளுநர் பாஜக வித்யாசாகர் ராவின் பேத்தி திருமணத்திற்கு  அணிவிக்கப்பட்ட தங்க, வைர நகைகளின் மதிப்பு கிட்டத்தட்ட 70கோடி ரூபாய்...

திருமண செலவு 100 கோடி ரூபாய்க்கு மேல்.

இதுவெல்லாம் மோடியின் கண்களுக்கு நிச்சயம் தென்படாது...

ஆனால், கஷ்டப்பட்டு, உழைத்து சம்பாதிக்கும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பெற்றோர்கள், தன் குழந்தையின் படிப்பு மற்றும் திருமண செலவிற்காக வங்கியில் ஒரு லட்சத்திற்கும் மேல் சேமித்து வைத்திருந்தால் அதை எடுப்பதற்கு ஆயிரம் கட்டுப்பாடுகள்.

மோடி அரசின் சட்டங்கள் என்பது ஏழைகளை கட்டுப்படுத்த மட்டும் தானே?

அழகிய ஆச்சரியங்கள்...


உணவுக்கு பின்...


1. உணவுக்குப் பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்...

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது...