25/11/2020
பெரியார் எனும் தெலுங்கர் ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் சாதி வெறியும்...
கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா -ஈ.வே.ரா ஆவேசம்...
தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதான சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பது தானா?
பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்பட வில்லையானால்.. அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?
இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள்.. இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது.
என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்..
நூல்: வைக்கம்போராட்ட வரலாறு
– வீரமணி...
ஏழ்வர் விடுதலையே இனத்தின் விடுதலைனு ஒலிச்ச குரல் எல்லாம் இப்போ பேரறிவாளன் விடுதலைய சுற்றி மட்டுமே நிக்குது...
இன்னைக்கு ஹேஸ்டாக்ல பிரபலங்கள் கூட அண்ணன் பேரறிவாளன் விடுதலைய தாண்டி ஏழுதமிழர் விடுதலைனு ஒரு வார்த்தை கூட சேக்கல...
இத ஆரம்பத்தில இருந்து இப்போ வரைக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர் விடுதலைனு பேசி வரது அமீர்,வெற்றிமாறன்,ராம், போல வெகு சில பிரபலங்கள் தான்...
இந்த இடைவெளிக்கும் ஒரு அரசியல் காரணம் பூசி நம்ம கோரிக்கைய மழுங்காம பாத்துக்குறது எவ்வளவு தேவையோ அப்பிடி தான் ஏழ்வர் விடுதலைங்குற வார்த்தையும்...
ஏழ்வர் விடுதலையே இனத்தின் விடுதலை...
உங்களுக்கு தெரியுமா? அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் அல்லது அனுமதி என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
10, 20, 30 ஆண்டுகளாக பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகளே 100% பாதுகாப்பானது இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த தடுப்பூசிகளால் நோய்கள் தடுக்கப்பட்டது என்பதற்கு ஆதாரமே இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? தடுப்பூசி மூலமாகவே பலருக்கு நோய்கள் பரவியது உங்களுக்கு தெரியுமா?
இன்று கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பெரு பார்மா நிறுவனங்களான மொடேர்னா Moderna, பிஸிர் Pfizer, ஜான்சன் & ஜான்சன் அமெரிக்காவில் தங்கள் தடுப்பூசிகளால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பாதிப்புகளுக்கு பல மில்லியன் டாலர்கள் நட்ட ஈடு வழங்கி இருப்பது உங்களுக்கு தெரியுமா?
நீங்கள் கண்மூடித்தனமாக நம்புவது அறிவியல் இல்லை, ஒரு மாபெரும் அரசியல் மோசடி என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு...
கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்.
அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில.....
குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.
கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.
உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.
இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.
பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.
பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.
பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்...
தெலுங்கர் ஈ.வெ.ரா எனும் பெரியார் தனித்தமிழ்நாடு கேட்டாரா?
மூன்றுமுறை நிறம் மாறிய பச்சோந்தி...
1930ல் இந்திய சார்பு..
இந்திய மக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந்திரமோ பெறுவதற்குத் தங்களை அருகர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்கு முன்பாக இந்தியர்கள் ஒரே சமூகத்தார், ஒரே இலட்சியமுடையவர் என்கின்ற நிலையை அடைய வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம்.
இன்று முற்போக்கோ, சுதந்திரமோ, விடுதலையோ அடைந்திருக்கும் நாட்டார்கள் எல்லாம் முதலில் தங்கள் நாட்டாரெல்லாம் ஒரே சமூகத்தார் என்றும், ஒரே இலட்சியமுடையவர்கள் என்றுமான பிறகுதான் அவர்கள் முன்னேறவும், விடுதலைப் பெற்று சுதந்திரமடையவும் முடிந்தது என்பதையறியலாம் - (குடிஅரசு, 09.11.1930)..
1938 ல் தனித்தமிழ்நாடு...
உதைக்கும் காலுக்கு முத்தமிட்டுப்பூசை செய்கிறோம். மலத்தை மனமாரமுகருகிறோம். மானமிழந்தோம், பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத் தானா தமிழன் உயிர்வாழ வேண்டும்?
எழுங்கள். நம்மை ஏய்த்து அழுத்தி, நம்தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போகவடநாட்டானுக்கும், தமிழரல்லாதவனுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம். இனியாவது, தமிழ்நாடு தமிழருக்கே.. என்று ஆரவாரம் செய்யுங்கள்.
உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் வீடுகள் தோறும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள்.
நம் வீட்டுக்குள் அந்நியன் புகுந்து கொண்டதோடல்லாது, அவன் நம் எஜமான் என்றால் நமக்கு இதைவிட மானமற்றதன்மை, இழிதன்மை வேறு என்ன எனச் சிந்தியுங்கள். புறப்படுங்கள்.
தமிழ்நாட்டுக்குப்பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச்சின்னா பின்னமாக்குங்கள்.
தமிழ்நாடு தமிழருக்கே -(குடிஅரசு 23.10.1938).
1947 ல் மீண்டும் இந்திய சார்பு...
தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப் படுவனவெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும். (ஈ.வெ.ரா.,விடுதலை 11.01.1947).
1957 ல் மீண்டும் தனித்தமிழ்நாடு...
என் பிறவி காரணமாக என் இன இழிவுக்குக் காரணமாக இருக்கும் சாதியை ஒழிப்பதும் என் இன மக்களாகிய தமிழர்களுடையவும், என்னுடையவும் தாய் நாடான தமிழ்நாட்டைப் பனியா - பார்ப்பனர்களின் அடிமைத்தளையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும்.
அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்கிறேன், சென்று வருகிறேன். வணக்கம்! வணக்கம்! வணக்கம்! - (விடுதலை தலையங்கம் 15.12.1957)
1965 ல் மூன்றாவது முறையாக இந்திய சார்பு...
இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே?
இந்திக்காரன் உங்க மாதிரி இங்கிலீஷை நினைக்கல்லையே. இங்கிலஷ் அவமானம்னு நினைக்கிறானே.
தமிழ்நாட்டுக் காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா? - (ஆனந்த விகடன் பேட்டி 11.4.1965).
1973 ல் மூன்றாவது முறையாக தனித்தமிழ்நாடு...
நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும் பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் ‘சுதந்திரத் தமிழ்நாடு’ பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டிய ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
‘சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்’ என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
பதினாயிரக்கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன்.
பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக (கூப்பாடாக) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
பொது மக்களே! இளைஞர்களே!
பள்ளி, கல்லூரி மாணவர்களே! மாணவிகளே!
உறுதி கொள்ளுங்கள்!
உறுதி கொள்ளுங்கள்!
உறுதி கொள்ளுங்கள்.
(1973-ல் பிறந்த நாள் அறிக்கையில்)...
சங்கம் வைத்து இந்தி வளர்த்த பெரியார் எனும் தெலுங்கர் ஈ.வெ.ரா...
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர்..
இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்கஇலவசமாக இடம் கொடுத்தார்.
திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலில் பக்கம் 436ல்..
இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால்ஈரோட்டில்ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது.திறப்பு விழாவுக்கு யானுஞ்சென்றிருந்தேன்.
தென்னாட்டில்ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே என்று திரு.வி.க. அவர்கள்எழுதியுள்ளார்.
1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டு வரை பிராமணர்களின் தாசனாக விளங்கி வந்தார் (ஏமாற்றுவதில்) பெரியார்...
மதுரையில் திலகர் திடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியின்போது அங்கே சுற்றித்திரிந்த திருநங்கையை பிடித்து போலீசார் விசாரித்தனர்...
அப்போது தான் ஒரு எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர் என்று சொல்லியிருக்கிறார். இதை நம்பாத போலீசார் திருநங்கையை காவல் ஆய்வாளர் ஜி.கவிதா முன்பு கொண்டு போய் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள்.
நீ டாக்டருக்கு படித்திருக்கிறாய் என்பதை எப்படி நம்புவது? என்று கேட்டிருக்கிறார் ஆய்வாளர் கவிதா.
உடனே, தனக்கு தெரிந்த திருநங்கையிடம் சொல்லி, தான் படித்து வாங்கிய படிப்பு சான்றிதழ்களை எல்லாம் கொண்டு வரச்சொல்லி இருக்கிறார். அதையெல்லாம் வாங்கிப்பார்த்த ஆய்வாளர் ஆடிப்போயிட்டார்.
இவ்வளவு பெரிய படிப்பு படித்துவிட்டு ஏன் ரோட்டில் பிச்சை எடுத்து திரியுற? என்று கேட்டதும், ‘’நான் திருநங்கைதான் என்று சான்றிதழ் வாங்குவதற்கு ரொம்ப சிரமமாக இருக்குது.
சமுதாயத்திலும் எனக்கு நிரந்தரம் அங்கீகாரம் இல்லை. இதனால் வேறு வழியில்லாம இப்படி ரோடு ரோடு அலைஞ்சு பிச்சை எடுத்து திரியுறேன்’’ என்று அழுதிருக்கிறார்.
திருநங்கையின் கண்ணீர் கதையை கேட்டு உருகிய ஆய்வாளர் கவிதா, உயரதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். உயரதிகாரிகளின் உதவியுடன் கிளினிக் அமைத்துக் கொடுத்து, தனது சொந்த செலவில் மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுத்திருக்கிறார் ஆய்வாளர் கவிதா.
திருநங்கை ஒருவர் டாக்டராக பணியை தொடங்கவிருக்கும் தகவலும், அவர் டாக்டர் பணியை செய்வதற்கு உதவிய ஆய்வாளரின் செயலும் சமூக வலைத்தளங்களில் பரவியதால் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
வாழ்த்துக்களும்... பாராட்டுக்களும்...
தமிழன் தான் உலகத்திற்கே வழிகாட்டி...
சோழர் காலத்தில் ஆட்சி முறை அமைப்பு...
ஒரு நாடு சீராய் செயலாற்ற, நல்ல நிர்வாகம் தேவைப்படுகிறது. இங்கு நாம் பார்ப்பது, சோழ ஆட்சியின் அமைப்பு.
இந்த படம், இன்று மக்களாட்சி என்று நாம் பின்பற்றும் விடயங்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்த மண்ணில் இருந்தவை என்பதை கூறுகிறது.
நகரின் வகைக்கு ஏற்ப , அதன் ஆட்சியையும், நிர்வாகத்தையும் மாற்றி அமைத்துள்ளனர்.
குறிப்பு: ராசராசசோழன் வரலாற்றுக் கூடம் புத்தகத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டது...
எப்படி தன்னுடைய உயிர் போகும் என்று முன்பே அறிந்த ஆப்ரஹாம் லின்கன்...
எதிர்காலத்தை முன்பே அறியும் திறன் உண்மையாக உள்ளதா என்பதை இது வரை எந்த அறிவியல் ஆராய்ச்சியாளரும் சொல்ல முடிய வில்லை..
எதிர்காலத்தில் நடக்க போவதை கணிக்க இயலும் என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர்.
எதிர்காலத்தில் தாங்கள் இறக்க போகும் தருணத்தை பெரும்பாலானோர் கண்டதாக கூறி உள்ளனர்.
இதில் மிகவும் பிரபலமான ஒன்று தான் ஆப்ரஹாம் லின்கனின் மரணம்.
1865 ஆம் ஆண்டு , ஆப்ரஹாம் லின்கன் துப்பாகியால் சுட்டு கொல்லப்படும் முன்பு அவரின் கனவில் தான் இறந்து கிடப்பதை கண்டு அந்த கனவை தனது மனைவியிடம் கூறி உள்ளார்.
இருவரும் முற்போக்கு சிந்தனையாளர்கள் என்பதால் , இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. எதோ ஒரு கேட்ட கனவு என்று விட்டு விட்டனர். இரண்டே வாரங்களில் ஆபிரகாம் லின்கன் சுட்டு கொள்ள பட்டார்.
இந்த மாதிரி கனவுகளை Precognitive Dreams என்று ஆங்கிலத்தில் கூறுவர்...
தமிழா திருட்டு திராவிட கொள்ளைக் காரர்களை விரட்டி அடிப்போம்...
தமிழர்கள் ஏய்க்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும், நசுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் காலாகாலமாக நடந்து வருகின்ற ஒன்று தான்.
தாக்கினால் திருப்பி அடிப்பார்கள் என்கிற நிலை இருக்கும் போது தான் உலகில் அமைதி நிலவுகிறது.
மலேசியாவிலோ, பர்மாவிலோ, ஈழத்திலோ, கர்நாடகத்திலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் உலகத் தமிழர்களும் தமிழகமும் கொதித்து எழும் என்கிற நிலை இருந்தால் பன்னிரண்டு கோடித் தமிழனைத் தொட எந்தக் கொம்பனுக்கும் உலகில் துணிவிருக்காது.
மாறாக, பர்மாவின் சயாம் நகரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போதோ, கர்நாடகத்தில் தமிழர்கள் வெட்டித் துண்டாடப்பட்ட போதோ, மும்பையிலும் மணிப்பூரிலும் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்ட போதோ, பர்மாவிலிருந்து தமிழர் விரட்டப்பட்ட போதோ, ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் கொடுமையாகக் கொன்றொழிக்கப்பட்ட போதோ, ஆந்திராவில் 20 தமிழர்கள் கொள்ளப்பட்ட போதோ.. தாய்த் தமிழகத்தில் எதிர்ப்பில்லை, கொதிப்பில்லை, கொந்தளிப்பில்லை. காரணம் என்ன? திராவிடம் என்ற நச்சு போதை போல் ஏறி சித்தம் சிதைந்து கிடக்கிறான் தமிழன்...
ஈயும், எறும்பும், புழுவும், பூச்சியும் நசுக்கப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
காகம் ஒன்று கொல்லப்பட்டால் வானத்தையே கருப்பாக்கி காகக்கூட்டம் கரைகிறது..
ஒரு தெரு நாயைத் தாக்கினாலும் ஊர் நாய்களே ஒன்று சேர்ந்து மாந்தக் கூட்டத்தை வறுத்தெடுக்கிறது..
இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிந்தது..
மராத்தியன் பீகாரில் தாக்கப்பட்டால் பதிலடியில் நாடு எரிகிறது.
பீகாரியைத் தொட்டால் வடநாடு கொதிக்கிறது.
இரு இசுரேலியர்களை பாலத்தீனர்கள் சிறைப்பிடித்ததற்காக இரு பாலத்தீனிய நகரங்களை தடைமட்டமாக்கி இசுரேல் பாடம் கற்பித்தது.
உலகமே இப்படி இருக்கும் போது, அது இனப்பற்றாக, இனப்பாதுகாப்பாகப் பார்க்கப்படும் போது தமிழர்நாடு மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன்?
மூத்த இனம் இங்கே முடங்கிக் கிடப்பதே தன் அடையாளத்தை இழந்ததால் தான். தமிழனைத் திராவிடனாக திரித்து சிதைத்து விட்டார்கள்..
மீண்டும் இழந்த தமிழன் என்கிற அந்த அடையாளத்தை நாம் உணர்ந்து தக்க வைத்தால் மட்டுமே எதிர்காலத் தலைமுறையை நாம் பாதுகாக்க இயலும்.
இதில் சமரசம் செய்து கொண்டு அரசியல் களத்தில் ஆராவாரம் செய்து யார் களம் இறங்கினாலும் அவர் தமிழினத்தின் எதிரியாகத்தான் இருப்பார்.
தமிழகத்தைச் சீரழித்தது பெரியார் விதைத்த திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது என்பதே எங்கள் கருத்து...
சிலந்தி தண்ணீரில் நடக்கும், நீருக்கு அடியிலும் சுவாசிக்கும் தன்மை கொண்டது...
சிலந்தி தன்னை தானே கோமா நிலைக்கு எடுத்து செண்டு நீருக்கு அடியில் சில மணி நேரம் உயிருடன் இருக்கும்.
சிலந்தி தான் பின்னிய வலையையே மறுசுழற்சி செய்ய உண்ணும்.
ஒரே எடையிலான சிலந்தி வலை மற்றும் இரும்புடன் ஒப்பிடுகையில், சிலந்தி பின்னும் வலை தான் இரும்பை விட வலுமையானது.
சிலந்திகளுக்கு எறும்புகள் என்றால் பயமாம். இதற்கு காரணம் எறும்புகளிடம் இருக்கும் ஃபார்மிக் அமிலம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடைசியாக சிலந்தி கடித்து மரணம் அடைந்த சம்பவம் கடந்த 1981-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்தது.
சிலந்திகளுக்கு ஆணுறுப்பு இல்லை. இவை முகத்தை தான் இணை உறுப்புகளாக பயன்படுத்துகின்றன.
கருப்பு பெண் சிலந்திகள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டவுடன், ஆண் சிலந்தியை உண்டு விடுமாம்.
இதிலிருந்து தப்பிக்க கருப்பு ஆண் சிலந்திகள், கருப்பு பெண் சிலந்திகளின் பசியை மோப்பம் பிடித்து தப்பித்துக் கொள்ளுமாம்.
சிலந்திகள், நண்டு மற்றும் நத்தைகளுக்கு இரத்தம் நீல நிறத்தில் தான் இருக்கும். இதற்கு காரணம் இவற்றின் இரத்தத்தில் கலப்பு கொண்டுள்ள hemocyanin எனும் காப்பர்.
இதுவரை கண்டறியப்பட்ட 46,000 சிலந்தி வகைகளில். ஒன்றே ஒன்று மட்டும் தான் தாவரங்களை உண்டு வாழும் வகையை சேர்ந்தது ஆகும்...
தமிழ் சித்தர்களின் வைத்தியம்...
மறதி தொல்லையா?
ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.
இருமலால் அவதியா?
உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.
சளித் தொல்லையா?
வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.
சீதபேதி கடுமையாக உள்ளதா?
ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
அடிக்கடி ஏப்பம் வருகிறதா?
வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்...