25/11/2020

தெலுங்கர் ஈ.வெ.ரா எனும் பெரியார் தனித்தமிழ்நாடு கேட்டாரா?

 


மூன்றுமுறை நிறம் மாறிய பச்சோந்தி...

1930ல் இந்திய சார்பு..

இந்திய மக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந்திரமோ பெறுவதற்குத் தங்களை அருகர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்கு முன்பாக இந்தியர்கள் ஒரே சமூகத்தார், ஒரே இலட்சியமுடையவர் என்கின்ற நிலையை அடைய வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம்.

இன்று முற்போக்கோ, சுதந்திரமோ, விடுதலையோ அடைந்திருக்கும் நாட்டார்கள் எல்லாம் முதலில் தங்கள் நாட்டாரெல்லாம் ஒரே சமூகத்தார் என்றும், ஒரே இலட்சியமுடையவர்கள் என்றுமான பிறகுதான் அவர்கள் முன்னேறவும், விடுதலைப் பெற்று சுதந்திரமடையவும் முடிந்தது என்பதையறியலாம் - (குடிஅரசு, 09.11.1930)..

1938 ல் தனித்தமிழ்நாடு...

உதைக்கும் காலுக்கு முத்தமிட்டுப்பூசை செய்கிறோம். மலத்தை மனமாரமுகருகிறோம். மானமிழந்தோம், பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத் தானா தமிழன் உயிர்வாழ வேண்டும்?

எழுங்கள். நம்மை ஏய்த்து அழுத்தி, நம்தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போகவடநாட்டானுக்கும், தமிழரல்லாதவனுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம். இனியாவது, தமிழ்நாடு தமிழருக்கே.. என்று ஆரவாரம் செய்யுங்கள்.

உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் வீடுகள் தோறும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள்.

நம் வீட்டுக்குள் அந்நியன் புகுந்து கொண்டதோடல்லாது, அவன் நம் எஜமான் என்றால் நமக்கு இதைவிட மானமற்றதன்மை, இழிதன்மை வேறு என்ன எனச் சிந்தியுங்கள். புறப்படுங்கள்.

தமிழ்நாட்டுக்குப்பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச்சின்னா பின்னமாக்குங்கள்.

தமிழ்நாடு தமிழருக்கே -(குடிஅரசு 23.10.1938).

1947 ல் மீண்டும் இந்திய சார்பு...

தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப் படுவனவெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும். (ஈ.வெ.ரா.,விடுதலை 11.01.1947).

1957 ல் மீண்டும் தனித்தமிழ்நாடு...

என் பிறவி காரணமாக என் இன இழிவுக்குக் காரணமாக இருக்கும் சாதியை ஒழிப்பதும் என் இன மக்களாகிய தமிழர்களுடையவும், என்னுடையவும் தாய் நாடான தமிழ்நாட்டைப் பனியா - பார்ப்பனர்களின் அடிமைத்தளையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும்.

அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்கிறேன், சென்று வருகிறேன். வணக்கம்! வணக்கம்! வணக்கம்! -  (விடுதலை தலையங்கம் 15.12.1957)

1965 ல் மூன்றாவது முறையாக இந்திய சார்பு...

இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே?

இந்திக்காரன் உங்க மாதிரி இங்கிலீஷை நினைக்கல்லையே. இங்கிலஷ் அவமானம்னு நினைக்கிறானே.

தமிழ்நாட்டுக் காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா? - (ஆனந்த விகடன் பேட்டி 11.4.1965).

1973 ல் மூன்றாவது முறையாக தனித்தமிழ்நாடு...

நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும் பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் ‘சுதந்திரத் தமிழ்நாடு’ பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டிய ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

‘சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்’ என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

பதினாயிரக்கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன்.

பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக (கூப்பாடாக) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

பொது மக்களே! இளைஞர்களே!

பள்ளி, கல்லூரி மாணவர்களே! மாணவிகளே!

உறுதி கொள்ளுங்கள்!

உறுதி கொள்ளுங்கள்!

உறுதி கொள்ளுங்கள்.

(1973-ல் பிறந்த நாள் அறிக்கையில்)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.