25/11/2020

மதுரையில் திலகர் திடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியின்போது அங்கே சுற்றித்திரிந்த திருநங்கையை பிடித்து போலீசார் விசாரித்தனர்...

 


அப்போது தான் ஒரு எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர் என்று சொல்லியிருக்கிறார். இதை நம்பாத போலீசார் திருநங்கையை காவல் ஆய்வாளர் ஜி.கவிதா முன்பு கொண்டு போய் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள்.

நீ டாக்டருக்கு படித்திருக்கிறாய் என்பதை எப்படி நம்புவது? என்று கேட்டிருக்கிறார் ஆய்வாளர் கவிதா.

உடனே, தனக்கு தெரிந்த திருநங்கையிடம் சொல்லி, தான் படித்து வாங்கிய படிப்பு சான்றிதழ்களை எல்லாம் கொண்டு வரச்சொல்லி இருக்கிறார். அதையெல்லாம் வாங்கிப்பார்த்த ஆய்வாளர் ஆடிப்போயிட்டார்.

இவ்வளவு பெரிய படிப்பு படித்துவிட்டு ஏன் ரோட்டில் பிச்சை எடுத்து திரியுற? என்று கேட்டதும், ‘’நான் திருநங்கைதான் என்று சான்றிதழ் வாங்குவதற்கு ரொம்ப சிரமமாக இருக்குது.

சமுதாயத்திலும் எனக்கு நிரந்தரம் அங்கீகாரம் இல்லை. இதனால் வேறு வழியில்லாம இப்படி ரோடு ரோடு அலைஞ்சு பிச்சை எடுத்து திரியுறேன்’’ என்று அழுதிருக்கிறார்.

திருநங்கையின் கண்ணீர் கதையை கேட்டு உருகிய ஆய்வாளர் கவிதா, உயரதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். உயரதிகாரிகளின் உதவியுடன் கிளினிக் அமைத்துக் கொடுத்து, தனது சொந்த செலவில் மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுத்திருக்கிறார் ஆய்வாளர் கவிதா.

திருநங்கை ஒருவர் டாக்டராக பணியை தொடங்கவிருக்கும் தகவலும், அவர் டாக்டர் பணியை செய்வதற்கு உதவிய ஆய்வாளரின் செயலும் சமூக வலைத்தளங்களில் பரவியதால் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

வாழ்த்துக்களும்... பாராட்டுக்களும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.