31/05/2018

தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பு....


சிலம்பு என்பது சங்ககால தென்னிந்திய மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும். கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார்.

இந்நூல் தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

அம்பலத்தில் ஆடுகின்ற நடராசப் பெருமானும் தன் கால்களில் சிலம்போடு இருப்பது இவ்வணிகலனிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது.

'நிரைகழல் அரவம்' எனத்தொடங்கும் தேவாரப் பதிகத்தில் கழல் என்பது ஆண்கள் அணியும் சிலம்பு வகையினையும், சிலம்பு என்பது பொதுவாக பெண்களாலேயே அணியப்படும் அணிகலன் வகையினையும் குறித்து நிற்கிறது.

சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் இதை அணிந்தனர். இதற்கு அக்கால இலக்கியங்களே சான்றாகும்.

பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இவ்வணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று இருக்கும். இதன் உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும்.

இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும் பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும். நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பானது ஆடும் பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்ப்பும் தன்மையுடையது...

தமிழர்களுக்கு மராட்டிய ரஜினி மூலம் பாஜக விடும் மிரட்டல்...


இன்று தடுப்பூசியை பற்றி ஆபத்தும் மற்றும் விழிப்புணர்வு புதிய பதிவுகளும்...


ஞாபகப்படுத்தி கொண்டே இருப்போம்...

ஏனெனில் தடுப்பூசி ஒரு தலைமுறையின் வாழ்வாதாரத்தையை அழிக்கிறது...

இது தூத்துக்குடியில...


ஆக்ச்சுவலா இவனுங்க வாய்லதான் சுட்டு இருக்கனும்...

போராட்டமே தப்புன்னு சொன்ன ஒரு அரைவேக்காட்டு தலைவன்...
இங்கிதம் தெரியாத ரசிகன்..

நல்ல காம்பினேஷன்...

படுகொலை செய்யப்பட்ட 13 பேரின் ஆன்மாவும் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கும் கொல்லப்பட்டவர்களின்  சாந்தி அடையட்டும்...

தடுப்பூசியை பற்றிய சாமான்ய மனிதனின் கேள்விகளுக்கு இங்கு பதில்களே இல்லை என்பது தான் நிதர்சனம்...


தடுப்பூசியை அவர்கள் விற்க ஆரம்பித்தார்கள் எல்லா வழிகளிலும்...


மனமும் கர்மாவும்...


உங்களுடைய ஆழ்மனம் எதை எவ்வாறு நம்பியிருக்கிறதோ அதுதான் உங்கள் கர்மாவை தீர்மானிக்கிறது.

அதாவது உங்களுடைய In Believable System எதை பாவம் என நம்பியிருக்கிறதோ அது பாவமாகவும், எதை புண்ணியம் என நம்பியிருக்கிறதோ அதை புண்ணியமாகவும் எடுத்துக்கொள்ளும்.

ஆனால் சராசரி மனிதனால் அந்த In Believable Systemல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அது அவ்வளவு சுலபமும் அல்ல.

இதை உணர்ந்த சித்தமார்கள் அதை எளிமையாக மாற்றி அமைத்து மனித நலனுக்காக சில இயற்கை மீறல்களையும் செய்யதான் செய்தார்கள்.

இந்த பௌதீக உடல் அழிந்தாலும் உங்கள் ஆன்மா கர்மாவை சுமந்து சென்றே மறுபிறப்பு எடுக்கும்.

ஆக மனதின் ஊடே கர்மா செயல்படும் என்பது தெளிவாகிறது. அப்படியான மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி கர்மாவை கூட்டவோ குறைக்கவோ அல்லது முற்றிலுமாக அழிக்கவோ முடியும்.

குறிப்பு : முட்டாள்தனமாக இதில் உள்ள சூட்சமம் அறியாமல் யாரும் பாவம் செய்யலாம் என எண்ணி துன்பப்படாதீர்...

தமிழின விரோத பாஜக பினாமி அதிமுக ஒபிஎஸ் தூத்துக்குடி சதி அம்பலம்...


கிளியோபட்ரா.....


வரலாற்று பேரழகிகளின்  பட்டியலில் தன் பெயரை என்றும் நிலைத்திருக்க செய்தவள்....

பாலில் குளிப்பால்...பல வண்ணங்களில் மை தீட்டி கண்களாலே பலரை வசியம் செய்யும் கொள்ளை அழகுக்காரி....

முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துபவள் என்றெல்லாம் வரலாறு அவளை வர்ணிக்கிறது....

எந்த அளவு வரலாற்றில் வர்ணிக்கபட்டாலோ  அதே அளவிற்கு தூற்றவும் பட்டால் ....

அவளது வாழ்வு மர்மங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்தது......

அவளின் அழகால் எகிப்து.. ரோம்... கிரேக்கம் வரலாரே மாறி போனது....

எகிப்து பேரரசியாக இருந்தாலும் கிரேக்க பேரரசர் அலெக்ஸ்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவழியை சார்ந்தவள்...

தன்னை கிரேக்கர் என்று சொல்வதையே விரும்பியவள்......

எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி என பிரகனபடுத்தி கொண்டவள்.....

11 மொழிகளை சரளமாக பேசக் கூடியவள்..... அவள் பேச்சுக்கு மறு பேச்சில்லை.....

தனது 14 ஆம் வயதில் இருந்தே தந்தையுடன் ஆட்சியை பகிர்ந்து கொண்டாள்.. 

தனது 18 ஆம் வயதில் தந்தை இறந்து விட எகிப்தின் அரசியானாள்...

எகிப்து நாட்டு  வழக்கப்படி அரசி மட்டுமே ராஜ்ஜியத்தை ஆள முடியாது.. அரச வழக்கப்படி தனது தம்பி 13 ஆம் தாலுமியை திருமணம் செய்து கொண்டாள்....

எகிப்து நாட்டில் பெரும் போர் படைகள் கிடையாது.. எகிப்தில் தன்னகத்தே கொண்ட நைல் நதியின் செழிப்பு எகிப்தில் செல்வத்துக்கு பஞ்சமில்லை...

அதனால் எதிரிகளுக்கு எப்போதுமே எகிப்து மீது ஒரு கண் உண்டு...

எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க எண்ணிய கிளியோபட்டரா அப்போது பெரும் படை பலமுடன் திகழ்ந்த ரோம் பேரரசர் ஜுலியட் சீசரை காதலிப்பது என முடிவெடுத்தால்... முதல் பார்வையிலே அதில் வெற்றியும் பெற்றாள்... அப்போது கிளயோபட்ராவுக்கு வயது 21... சீசருக்கு வயது  54... இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்...

இதற்கிடைய தன் முன்னால் கணவன் 13 ஆம் தாலு மி மர்மமரணம் அடைய  சந்தேகம் கிளியோபட்ராவின் மீது விழ்ந்தது... கிளியோபட்ராவே கொலை செய்து விட்டதாகவும் வரலாறு சொல்கிறது....

அதன்பின் தன் காதலியை சீசர் எகிப்திலிருந்து ரோமிற்கு அழைத்து வந்து விட ... ரோமானியர்களுக்கு இது பிடிக்கவில்லை... அதிகார போட்டியில் சீசர் கொல்லபட (ஆட்சியை பிடிப்பது யார் என்ற போட்டியில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் இடைய ஆன சண்டையில் இனியும் ரோமில் இருந்தால் ஆபத்து என உணர்ந்து எகிப்திற்கு தப்பினாள்...

இந்நிலையில் ரோமில் ஆட்சியை கைப்பற்றிய ரோமானிய தளபதி மார்க்  ஆண்டனியை தனது தந்திரத்தால் காதல் வலையில் வீழ்த்தி மணந்து கொண்டால்... இந்த திருமணத்தில் அவர்களுக்கு 3 குழந்தைகள்... இந்த இடைபட்ட காலகட்டத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதர்களை கொன்று எகிப்தில்  தன்னை தவிர  ஆட்சியில் வாரிசுகளே இல்லாமல் பார்த்துக் கொண்டால்...

இந்நிலையில் ஆட்சியை பறிகொடுத்த சீசரின் வாரிசுகளால் எகிப்துக்கு ஆபத்து வந்தது...

சீசரின் வாரிசான அகஸ்டஸ் எகிப்து மீது போரிட்டு கிளியோபட்ராவையும் அவளின் வாரிசுகளையும் சிறைபடுத்தினான்... போரில் தோற்ற ஆண்டனி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டான்..

சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோ பட்ரா பாலைவனங்களில் இருந்த பாம்பை தீண்ட செய்து மரணித்தாகவும்... சிலர் அழகே உருவான அவள் பாம்பு திண்டினால் உடனே மரணம் நிகழ்வதில்லை மாராக அது ஒரு மரண போராட்டத்தை உருவாக்கி தனது அழகு அலங்கோலமாகி விடும் என்பதால் எகிப்தில் உள்ள ஓபி யும் எனும் கடுமையா விழத்தை உண்டு மரணித்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள்  கூறுகிறார்கள்.....

அப்படி மரணிக்கும் போது கிளியோபட்ராவுக்கு  வயது 39...

அழகே உருவான அவளின் கல்லரை வாசகம் இது தான்......

உலகத்திலே அழகான பிணம் இங்கே உறங்குகிறது... நல்லவேளை அவள் பிணமாகிவிட்டாள். இல்லையென்றால் ரோமாபுரி ராஜ்ஜியமே இந்த கல்லரையில் உறங்கியிருக்கும்...

தடுப்பூசி உண்மைகள்...


தலைவனின் கருத்தியலை ஏற்காதே, அது ஒருபோதும் உன்னை யோசிக்க விடுவதில்லை...


உன்னுடைய ஓருமித்த கருத்தியலை தலைமையிடம் கொடுத்து அதை வழிநடத்த சொல், அதிலிருக்கிறது உன் அதிகாரத்தின் வலிமை...

லட்டு சாப்பாட்டால் பற்களில் பிரச்சனை வருகிறதாம்...


நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை, ரமேஷ் குடவாலா, ஒரு ஐபிஎஸ் அதிகாரி. தற்போது காவலர் பயிற்சி நிலையத்தின் கூடுதல் டிஜிபியாக இருந்து வருகிறார்...


விஷ்ணு 2009ம் ஆண்டு முதல் படமான வெண்ணிலா கபடிக் குழு படத்தில் நடிக்கத் தொடங்கியது முதல், அவரோடு மனோகர் என்ற தலைமைக் காவலர் உடன் வருவார்.  விஷ்ணுவுக்கு பிஏ, செயலாளர், உதவியாளர் அனைத்தும் இந்த மனோகர்தான். 

ஒவ்வொரு நாள் ஷுட்டிங்கிலும், இந்த மனோகருக்கு, குறைந்தது, 1000 ரூபாய் பேட்டா.   நமது வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் தலைமைக் காவலருக்கு விஷ்ணு விஷாலோடு என்ன பணி ?

இப்படி காவல் பணியாளர்களை துஷ்பிரயோகம் செய்யும் ரமேஷ் குடவாலாவிடம் பயிற்சி பெறும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இவர் என்ன பயிற்சி கொடுப்பார் ?

ஏற்க முடியாத உண்மையை கூறுகிறேன்...


மே22 - ஒரு துரோக வரலாறு...


சின்னகட்சி பெரியகட்சி பாகுபாடு இல்லாமல் சின்ன இயக்கம் பெரிய இயக்கம் வேறுபாடு இல்லாமல்  எல்லோருக்கும் துப்பாக்கி சூடுநடைபெறப் போவது முன்கூட்டியே  தெரிந்தே நடைபெற்றுள்ளது!

களத்தில் ஒரு பக்கியையும் காணோம்...

பெரிய கட்சிகளுக்கு அரசியல் கட்சிகளை விரட்டியடித்த மக்கள் சாகட்டுமே என்ற குரூரபுத்தி!
புதிய குட்டி கட்சிகளின் நிலைபாடு தான் கேள்விக்குறி!

பணமா? பயமா?

இதில் திமுக ஒருபடி மேலே போய் கீதாஜீவன் (கட்சிவிசுவாசம்+ ஸ்டெர்லைட் விசுவாசம்) மூலம் அதே தினத்தில் திட்டமிட்ட போட்டி ஊர்வலம் ஒன்றை சமூகவிரோதிகள் துணையோடு காவல்துறை தயவோடு நடத்தி காவலர்களை பொதுமக்கள் தாக்குவது போல நாடகம் நடத்தி கைதாகி துப்பாக்கி சூட்டுக்கு காரணத்தை உருவாக்கினார்!
சரியாக கீதாஜீவன் மற்றும் 70 ரவுடிகள் கைது செய்து காவல்துறை பத்திரபடுத்திய பின் துப்பாக்கி சூடு நடந்தது!

வேதாந்தா, பிஜேபி ,அஇஅதிமுக ,திமுக, அமமுக ,காங்கிரஸ், மதிமுக மற்றும் உதிரிபுதிரி அதிரி குதறி கட்சிகள்,
சமுக விரோதிகள் காவல்துறை,மாவட்ட ஆட்சியர் ,மாசுகட்டுபாட்டு வாரியம் , நீதித்துறை மற்றும் ஊடகத்துறை
இவர்கள் அனைவரும் சேர்ந்து அப்பாவி மக்களின் இரத்தம் குடித்த வரலாறே!

 மே-22...

1.பன்னாட்டு முதலாளித்துவ நரி வேதாந்தாவின் அசாத்திய பணம்.

2.மத்திய அரசின் இனவெறி மதவெறி கொள்ளையடிப்பு கொள்கை.

3.ஆளும் அடிமை அஇஅதிமுக.

4.ஆளும் கட்சிக்கு சாதகமாக எதற்கும் உதவாத எதிர்கட்சி.

5.காவல்துறையின் கண்மூடித்தனமான ஏவல் புத்தி.

6.பதவிக்காக படிப்பை அடகுவைத்த அதிகாரிகள் வர்கம்.

7. ஊனமாகிப்போன ஊடகங்கள் செய்த இருட்டடிப்பு.

 8. பாம்பு மிஸ்ராவின் குட்டிகள் கையில் சிக்கிய  நீதித்துறை கள்ளமௌனம்.

9.உதிரிகட்சிகளின் பெயரளவு எதிர்ப்பு.
இயக்கங்களின் கையாலாகாத ஒப்பாரி.

10.தூத்துகுடி மக்கள் செத்தால் எனக்கென்ன? என்ற பிறப்பகுதி மக்களின் சுயநலம்.

11.போலி போராளிகளாக மக்களோடு ஊடுறுவி போராட்டத்தை திசைதிருப்பிய ஸ்டெர்லைட்  கைகூலிகள்.

12. வெற்று விளம்பரத்துக்காக வந்து தன்னை மதிக்கவில்லை என விலகி போராட்டத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்த சில துரோகிகள்.

13.வீரத்தை காட்டுகிறேன் என்று சாதாரணமக்களை பற்றி கவலைபடாது வன்முறை செய்த போராளிகள் மற்றும் காவல்துறையினர்.

என 13 துரோகங்கள் 13 தோட்டாக்களாக எம் மக்களின் 13 உயிர்களை பலிகொண்ட மே- 22 ஒரு துரோக வரலாறு...

குறையே சொல்லிகிட்டு இருந்தா ஒண்ணும் செய்ய முடியாது...


முதல் அடியை நீ எடுத்து வை..
உலகம் உன்னை தொடரும்...

சேலத்தில் கடையை மறைப்பதால் எதிரே இருந்த பிரம்மாண்டமான மரத்தை வெட்டித் தள்ளிய போத்தீஸ் நிறுவனம்...


விதிமுறைகளை மீறிய இந்த செயலை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை..

 சென்ற ஆண்டுகளில் போத்தீஸ் பசுமை கொண்டாட்டம் நடத்தி மரக்கன்றுகளை பரிசளித்து வாடிக்கையாளர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

மராட்டிய ரஜினி கலாட்டா...


இயற்கை என்றால் என்ன.. செயற்கை என்றால் எனன..?


இயற்கை என்பது பார்கின்ற உயிர்களை பெருத்தது...

ஒரு செயல் உருவாகுவதும் இயங்குதலும்  நமது கட்டுபாட்டிற்கு அப்பால் இருந்தால்  அது இயற்கை..

மனிதனின் பார்வையில் இருந்து நம்மால் உருவாக்கி இயக்க கூடியதை தவிர்த்து அனைத்தும் இயற்கை..

நாம் ஒரு செயலை உருவாக்கி அதன்
இயங்குதலை நாம் இயக்கினால் இது செயற்கை..

எடுத்துக்காட்டாக எறும்பு புற்றை எடுத்துக்கொள்வோம்..

எறும்பின் பார்வையிலிருந்து அந்த புற்று
காரணம் புற்றை உருவாக்குவது எறும்பு தான் பயன்படுத்துவதும் எறும்பு தான்
அந்த புற்றை  நமது பார்வையில் பார்த்தால்  இயற்கை காரணம் அதன் படைத்தலிலும் இயங்குதலிலும் நமது கைவண்ணங்கள் இருப்பதில்லை..

பிரபஞ்சத்தை படைத்தவனின் பார்வையிலிருந்து பார்த்தால் பிரபஞ்சத்தில் நடந்து கொண்டிருப்பது அனைத்தும் செயற்கை தான்.

இயற்கை செயற்கை என்பது பார்க்கும் ஜீவன்களின் பார்வையில் இருக்கு.

ஆனால் இயற்கை செயற்கை என பிரித்து உணரும் தன்மை இந்த உலகில் மனிதனிக்கே உள்ள வரமும் சாபமும்...

இந்தியாவிற்கு இதை விட கேவலம் எதுவும் இருக்காது...


இந்தியாவில் தொடர்ந்து 16வது நாளாகப் பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்ந்துகொண்டே சென்று கொண்டு இருக்கும் நிலையில் நேபாள் எல்லையில் உள்ள பீகார் மக்கள் புதிய உத்தியை கண்டுபிடித்துள்ளனர்.

விலை குறைவு..

இந்தியாவை விட நேபாளில் பெட்ரோல் விலை 15 ரூபாய் குறைவு என்பதாலும், டீசல் 15 ரூபாய் குறைவு என்பதால் ராகுல் மற்றும் சித்தமரி இரண்டு இடங்களில் உள்ள மக்கள் இந்தியா எல்லையில் உள்ள நேப்பாளுக்குச் சொந்தமான பெட்ரோல் நிலையங்கள் சென்று பெட்ரோல் வாங்கி நிரப்பியுள்ளனர்.

இன்று காலை இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 81.66 ரூபாய் மற்றும் டீசல் 72.97 ரூபாய் என்ற நிலையில் நேபாளில் ஒரு லிட்டர் பெட்ரோல் 67.81 ரூபாய் என்றும், டீசல் 56.56 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 100 ரூபாய் என்றால் அது நேபாளில் 160.15 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.நேபாள் எல்லைக்குள் சென்று பெட்ரோல் வாங்கி வந்து இந்திய எல்லையில் விற்று காசு பார்க்கும் வேலையும் நடந்தேறிவருகிறது என நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. சித்தமரி நேபாள் எல்லைக்கும் இடையில் 30 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே ஆகும்.

கடந்த சில நாட்களாக இந்திய - நேபாள் எல்லையில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் 15 முதல் 20 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளதாகவும் நேபாள் எண்ணெய் நிறுவன அதிகாரியான ஜகதீஷ் யாதவி தெரிவித்துள்ளார்.பீகாரில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் நட்டத்தினைப் பெற்று வரும் நிலையில் நேபாள் பெட்ரோல் பங்குகள் லாபம் பெற்று வருகிறன.

இந்தியா ஏற்றுமதி..

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியாவில் இருந்து தினமும் 250 டாங்கர் லாரிகளில் பெட்ரோலிய பொருட்கள் நேபாளிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதே ஆகும். அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் இருந்து நேபாளிற்குக் குழாய் வழியாகப் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் ராக்கெட் வேகத்தில் பெட்ரோல் விலை ஏறி வரும் நிலையில் நேபாளில் எப்படி விலை குறைவு என்று பார்த்தால் அங்கு ஒற்றை வரி முறை கடைப்பிடிப்பதே காரணம் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசுகள் இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு பெட்ரோலிய பொருட்கள் மீது வரியை வசூலித்து வருகின்றன...

நம்பகமான தகவல்...


சிறு தொழிலை அழித்து பெரு வணிகத்தை உண்டாக்குதல்...


கடைசி வரையில் என்னை மட்டுமே நம்பி வாழ வேண்டும் மக்களே, இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒரு கல்லில் ஆயிரம் காய்கள்...

டெலிகினிசிஸ் (Telekinesis)...


டெலிகினிசிஸ் (Telekinesis)  என்பது மனதால் உடலின் சக்தி இயக்கத்தை அதீத அதிர்வெண்ணில் வெளியேறுதல் ஆகும்..

இவ்வாறு வெளியேற்றும் போது எதிரே  உள்ள பொருளின் அதிர்வெண் மாற்றப்பட்டு அதனுள் சில மாற்றங்கள் ஏற்படுகிறன..

இதனால் அப் பொருள் நகருதல் அல்லது வளைதல் போன்ற மாற்றங்கள் ஏற்ப்படலாம்...

நம்ப முடியாத உண்மைகள்...


ESP என்றால் என்ன..?


Extra sensory perception..

(புலன் புறத்தெரிவு) என்பது நமது ஐந்து புலன்களை தாண்டி நமது ஆழ்மனதின் மூலம் செய்யப்படும் அல்லது உணரப்படும் விடயங்கள் ஆகும்.

இது அறிவியலுக்கும் சாதாரண மனித அறிவுக்கும் அப்பாற்பட்டு விளங்குவதால் என்றும் மனிதனுக்கு இதன் மீது அளவு கடந்த ஆர்வம் உள்ளது.

ESP - இன் வகைகள்:

Telepathy : பிறரின் எண்ணங்களை அறிதல் அல்லது பிறருக்கு குறிப்பிட்ட எண்ணத்தை அனுப்புதல்.

Clairvoyance : தொலைதுரத்தில் நடைபெறும் நிகழ்சியை பார்த்தல் அல்லது அங்கு இருக்கும் பொருள்களை பார்த்தல்.

Precognition : எதிர்க்காலத்தை கணித்தல்.

Retrocognition : கடந்த கால நிகழ்வுகளை பார்த்தல்.

Mediumship : இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசுதல்.

Psychometry : ஒரு பொருளை பார்த்து ஒரு குறிப்பிட்ட மனிதரை பற்றியோ அல்லது நிகழ்வுகள் பற்றியோ சொல்லுதல்.

Apportation : பொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மறைய செய்தல்.

Aura reading : மனிதனை சுற்றியுள்ள ஒளி அலையை காணுதல்.

Automatic writing : சுயநினைவு இன்றி ஆழ்மனதின் உதவயுடனோ அல்லது பிற சக்திகளின் உதவியுடனோ எழுதுதல்.

Bilocation : ஒரே நேரத்தில் பல இடங்களில் இருத்தல்.

Death-warning : பிறரின் இறப்பை முன்கூட்டியே காணுதல.

Divination : குறி சொல்லுதல்

Dowsing : தங்கம்,புதையல் ,நீர் அல்லது கண்களுக்கு புலப்படாத பொருள்களை குறிப்பிட்ட சில உபகரணங்களை வைத்து கணித்தல்.

Energy medicine : Healing சிகிச்சை முறைமூலம் மனித உடலின் குறிப்பிட அலைவரிசையை சரிசெய்தல்.

Levitation  : ஆழ்மனத்தின் உதவியுடன் காற்றில் மிதத்தல்.

Psychokinesis or telekinesis  : மனத்தால் பொருள்கள் நகர்த்துதல்

இவ்வாறு பலவிதமான ESP சக்திகள் உள்ளன. ஆனால் விஞ்ஞான பூர்வமான பலதும் நிருபிக்கபடவில்லை.

ஆனால் மேலே கூறப்பட்ட பல சக்திகளும் பல காலங்களில் பல்வேறு மனிதர்களால் நிகழ்த்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

தியானம்,யோகா, இயற்கையோடு சேர்த்த வாழ்க்கை முறை, முன்னோர்களின் வழிகாட்டல்கள் போன்றவற்றின் மூலமாக இந்த சக்திகளை மனிதனால் பெற முடியும் என்பது சான்றோர்களின் கருத்து.

காரணம் இச் சக்திகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்து கிடக்கும் சக்திகள் ஆகும்.

அதை வெளிக்கொண்டு வர அவனால் மட்டும் தான் முடியும்...

சகோ உன் கேள்வி நிதர்சனமானது.. ஆனால் ஒன்றை புரிந்துக்கொள்ள முயற்சி செய்...


நாங்களும் அடிமைகள் தான், இந்த அடிமை பொருளாதாரத்தில்..

எங்களின் அடிப்படை நோக்கமே...

நாம் அனுபவித்த அடிமைத்தனத்தை ஒருபோதும் அடுத்த தலைமுறை அனுபவிக்க கூடாது என்பதே..

பல ஆண்டுகால அடிமைத்தனம், சில ஆண்டுகளில் பதிவு போடுவதால் போய்விடாது சகோ..

நாங்கள் செய்து கொண்டிருப்பது அடிப்படையே சகோ..

ஒருநாள் இந்த அடிப்படை அமைப்பு வலுவான கட்டமைப்பால் உருவாக்கப்படும்..

அன்று உனது அடுத்த தலைமுறை அங்கு அடிதைத்தனம் இல்லாமல் வாழ்வார்கள்..

அன்று நாங்களும் இருக்க மாட்டோம்,
நீயும் இருக்க மாட்டாய்...

ஆனால் நாம் உருவாக்குன கட்டமைப்பு அடுத்த பல தலைமுறைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்...

கனடா வாழ் தமிழ் உறவுகளுக்கு, வணக்கம்...


தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்நாட்டு உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு, வரும் சூன் 3 ஆம் நாள், ஞாயிறு மாலை 3 மணியளவில் இசுக்கார்பரோ நகரசபை நடுவத்தில் (Scarborough Civic Centre) நடைபெற உள்ளது. உயிர் ஈகம் செய்தவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்த  அனைவரும் வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

நினைவேந்தல் அறிவிப்பை கனடாவில் வாழும் தமிழ் உறவுகளுக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்...

இன்று கடந்து செல், கவலையில்லை.. நாளை கவலை கொள்வாய், அன்று ஏன்..? கடந்து சென்றோம் என்று...


பிரமிடு தமிழர் கட்டியது... எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்...


பிரமிடு தமிழர் கட்டியது...

16 டன் எடையுள்ள துல்லியமாகச் செதுக்கப்பட்ட கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, 13 ஏக்கரில், மயிரிழைகூட மாறாது நேர்த்தியாக, செப்பமாக பிரமிடு அமைத்தவர்கள் தமிழர்கள்.

350 அடி உயரத்துக்கு 260 கோணத்தில், மேலேறிச் செல்ல அம்புபோல் நீண்ட பாதையைக் குடைந்து உருவாக்கியவர்கள் தமிழர்கள்.

மற்ற இனமெல்லாம் நாடோடிகளாய் திரிந்த காலத்தில் நாகரிகத்தின் உச்சத்தில், நகர நாகரிகத்துடன், பொறியியல் நுட்பத்துடன், மூடநம்பிக்கைத் துளியும் இன்றி வாழ்ந்த இனம் தமிழினம்.

ஆனால், ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பினால் மூடநம்பிக்கைகளில் மூழ்கி இன்று அடிமை வாழ்க்கை, அவல வாழ்க்கை வாழ்கிறான்.

பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல்..
எகிப்தை ஆண்டவர்கள் தமிழர்கள்..

பிரமிடு என்பது தமிழ்ச் சொல்...

இறந்தவர்களை எரிப்பது ஆரியர் வழக்கம். ஆனால், இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.

எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.

அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும் போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = பெருமிடு என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.

எகிப்து தமிழர் மண், அங்கு ஆண்டவர்கள் தமிழர்கள், கிளியோ பாட்ரா தமிழ்ப் பெண் பொன்றவற்றை அடுத்தடுத்து அறிவோம்.

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.. ஆண்டவர்கள் தமிழர்கள்..

ஆதாரங்கள் இதோ...

கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். Comparison of Badalian and primitive Indian Races என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார்.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார்.

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

Asiatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

Heinrich Kari Brugsh - History of Egypt என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey  என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.

எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார். Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l Inde) LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர் என்கிறார்.

தமிழ் மன்னர்கள் பெயர் மற்றும் கிளியோபாட்ரா பற்றி அடுத்து பார்ப்போம்....

எகிப்தில் ஆண்ட மன்னர்கள் தமிழர்கள்

அங்கு ஆண்ட மன்னர்கள், “தொட்டகாமன்” “அகநாடன்: போன்ற பெயருடையவர்கள். இப்பெயர்கள் தூயத் தமிழ்ச்சொற்கல் என்பதன் மூலம் மன்னர்கள் தமிழர்கள் என்பது உறுதியாகிறது.

அதே போல் கிளியோபாட்ரா ஒரு தமிழ்ப்பெண். அவரது கருநிறமே அதற்குச் சான்று. மேலும் அப்பெயர் ஒரு தூயத் தமிப்பெயரின் திரிபு.

கிளியோ பத்தரை என்பதே கிளியோ பாட்ரா என்று மாறியது. கிளிபோன்ற அழகி. பத்தரை மாற்று தங்கம் என்னும் பொருள் உடையது அது.

அதே போல் மெசப்பட்டோமியா பகுதியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். மெசப்பட்டோமியா என்பது, தூயத் தமிழ்ப்பெயரின் திரிபு.

மிசைப்பட்டணம் என்பதே அப்படி மாறியது...

மிசையென்றால் மேடு. மேட்டில் உள்ள நகரம் என்பது அதன் பொருள். அதுவே மிசப்பட்டிணம் -----> மெசப்பட்டோமியா என்று மாறியது...

மராட்டிய ரஜினியின் காலா வசனம்...


நாளை முதல் black badge- ஐ உங்கள் சட்டையில் அணிய தயாராகுங்கள் தமிழர்களே...


இன்னும் 30 நாட்களுக்குள் ஒருவரை பார்த்து ஒருவர் என அனைவரும் தொடர்ச்சியாக குத்துவார்கள்....

மம்மி (Mummification)...


உலகத்தின் பிணங்களிலேயே மிகவும் பிரபலமானது எகிப்து நாட்டின் மம்மியாகத்தானிருக்கும்.. மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே மேற்கொள்ளும் சவ அடக்க முறையான இந்த மம்மியை உருவாக்க,  இறந்தவர்களின் உடலில் உள்ள எல்லா பாகங்களையும் எடுத்து, (மூளையை மட்டும் மூக்கு வழியாக ஒரு கொக்கியை விட்டு இழுத்து விடுவார்களாம்…… யப்பா) பின்னர், வெற்றுடலை மரத்துகள்களைக் கொண்டு அடைத்து, இறுதியில் ஒரு வகையான நாற்றைக்கொண்டு உடல் முழுவதையும் இறுகச்சுற்றி விடுவார்களாம்..

அப்படி  உருவாக்கப்படும் மம்மிகளுக்குள்ளே அந்த ஆத்மாவானது இறப்புக்குப் பின்னான வாழ்வுக்குள் பயணப்படுகிறது என்பதே எகிப்தியரின் நம்பிக்கையாம்..

https://www.youtube.com/watch?v=-MQ5dL9cQX0

தற்சார்பு வாழ்வியல்...


தைராய்டு பிரச்சனையா? இதெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்கள்...


உணவில் அயோடின் சத்துக்குறைபாடு, மன அழுத்தம், மரபியல் குறைபாடுகள் போன்ற காரணங்களினால் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எனவே தைராய்டு நோயாளிகள் அன்றாடம் முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

பால் : நம் உடலின் தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்வதற்கு அயோடின் சத்து அவசியமாகிறது. எனவே தினமும் ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதால், தேவையான அயோடின் சத்துக்களை பெறலாம்.

யோகர்ட் : தயிரிலிருந்து தயாரிக்கப்படும் யோகர்ட் (குறைந்த கொழுப்புள்ள தயிர்) அதிக அயோடின் சத்துள்ள உணவாகும். எனவே, தினசரி உணவில் யோகர்ட் சேர்த்துக் கொள்ளலாம்.

இறைச்சி : தைராய்டு ஏற்பட துத்தநாகச் சத்து குறைபாடும் ஒரு காரணமாகும். எனவே துத்தநாக சத்துக்கள் உள்ள கோழிக்கறி மற்றும் மாட்டிறைச்சியை சமைக்கும் போது, அயோடின் உப்பைப் பயன்படுத்தி சாப்பிடலாம்.

முட்டை : ஒரு முட்டையில் 16% அயோடினும், 20% செல்லினியமும் உள்ளது. எனவே இந்த உணவில் இருந்து தேவையான அயோடின் சத்து கிடைப்பதால் தினமும் ஒரு முட்டையை சாப்பிடலாம்.

தானியங்கள் : தானியங்களில் ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவற்றில் விட்டமின் B உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், அது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து, தைராய்டு சுரப்பியை சீராக்க உதவுகிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் பாஸ்ட் ஃபுட், பதப்படுத்தப்பட்ட பேக்கரி உணவுகள், சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற சல்பர் நிறைந்த உணவுகள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்ற அயோடின் சத்துக்களை உறிஞ்சும் காய்கறி வகைகளை சாப்பிடக் கூடாது...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய கொள்ளை...


நீரிழிவுக்கு மற்றுமோர் ஆறுதலான செய்தி...


உலகம் முழுவதும் நீரிழிவு நோய் அதிக அளவில் உள்ளது. இதனால் மனிதர்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே இதைக் கட்டுப்படுத்த லணடன் கேம்பிரிட்ச்(ஜ்) பல்கலை விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு செயற்கை கணையம் தயாரித்து வெற்றியும் கண்டுள்ளனர்.

இரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிப்பின் காரணமாக நீரிழிவு ஏற்படுகிறது. இன்சுலின் மற்றும் குளுகான் என்கிற 2 சுரப்பிகள் சரிவர இயங்காததால்தான் இந்த நோய் உருவாகிறது. இவற்றை கணையம் உற்பத்தி செய்கிறது. இன்சுலின் பீட்டா செல்கள் மூலமும், குளுகான் ஆல்பா செல்கள் மூலமும் தயாராகிறது. கணையம் பாதித்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

எனவே, கேம்ப்ரிட்ச் பல்கலையின் ரோமன் கோ(ஹோ)வோர்கா தலைமையிலான நிபுணர் குழுவினர் கடந்த ஐந்தரை ஆண்டு காலமாக தீவிர முயற்சி செய்து செயற்கை கணையத்தை உருவாக்கியுள்ளனர். இதன் பரிசோதனை இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்தது. நீரிழிவு நோய் பாதித்தவர்களிடம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கணையம் கொடுக்கப்பட்டது.

அதை அவர்கள் தொடர்ந்து 4 வாரங்கள் இரவு நேரங்களில் பயன்படுத்தி வந்தனர். அவர்களில் 5 பேருக்கு ரத்தத்தில் குளுகோசு(ஸ்) அளவு மிகவும் குறைந்தது. அதன் மூலம் நீரிழிவு நோயின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்பட்டது.

எனவே, பரிசோதனை வெற்றி பெற்றதன் மூலம் அடுத்து 24 பேரிடமும் இந்த செயற்கை கணையம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே, இனி நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஊசி மூலம் உடலில் இன்சுலின் செலுத்த வேண்டியதில்லை, என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்...

அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்போம்...


ஏனெனில் இங்கு மறதி அடிக்கடி வரும் வியாதி...

காவல்துறையின் சாதனைகள்...


சிந்தித்துப் பார் தமிழினமே...


இந்த கட்சி,
இந்த நடிகன்,
இந்த தலைமை,
இந்த தலைவன்,
இந்த சாதி,
இந்த மதம்.

என எதையும் நம்பாமல் ஒரு கூட்டம் இங்கே எப்போதும் இந்த சமூகத்தின் மீது அக்கறையோடு இங்கு இருக்கும்..

அவர்களை நோக்கியே உவனின் பயணம்..