31/05/2018

தைராய்டு பிரச்சனையா? இதெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்கள்...


உணவில் அயோடின் சத்துக்குறைபாடு, மன அழுத்தம், மரபியல் குறைபாடுகள் போன்ற காரணங்களினால் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எனவே தைராய்டு நோயாளிகள் அன்றாடம் முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

பால் : நம் உடலின் தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்வதற்கு அயோடின் சத்து அவசியமாகிறது. எனவே தினமும் ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதால், தேவையான அயோடின் சத்துக்களை பெறலாம்.

யோகர்ட் : தயிரிலிருந்து தயாரிக்கப்படும் யோகர்ட் (குறைந்த கொழுப்புள்ள தயிர்) அதிக அயோடின் சத்துள்ள உணவாகும். எனவே, தினசரி உணவில் யோகர்ட் சேர்த்துக் கொள்ளலாம்.

இறைச்சி : தைராய்டு ஏற்பட துத்தநாகச் சத்து குறைபாடும் ஒரு காரணமாகும். எனவே துத்தநாக சத்துக்கள் உள்ள கோழிக்கறி மற்றும் மாட்டிறைச்சியை சமைக்கும் போது, அயோடின் உப்பைப் பயன்படுத்தி சாப்பிடலாம்.

முட்டை : ஒரு முட்டையில் 16% அயோடினும், 20% செல்லினியமும் உள்ளது. எனவே இந்த உணவில் இருந்து தேவையான அயோடின் சத்து கிடைப்பதால் தினமும் ஒரு முட்டையை சாப்பிடலாம்.

தானியங்கள் : தானியங்களில் ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவற்றில் விட்டமின் B உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், அது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து, தைராய்டு சுரப்பியை சீராக்க உதவுகிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் பாஸ்ட் ஃபுட், பதப்படுத்தப்பட்ட பேக்கரி உணவுகள், சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற சல்பர் நிறைந்த உணவுகள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்ற அயோடின் சத்துக்களை உறிஞ்சும் காய்கறி வகைகளை சாப்பிடக் கூடாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.