31/05/2018

இந்தியாவிற்கு இதை விட கேவலம் எதுவும் இருக்காது...


இந்தியாவில் தொடர்ந்து 16வது நாளாகப் பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்ந்துகொண்டே சென்று கொண்டு இருக்கும் நிலையில் நேபாள் எல்லையில் உள்ள பீகார் மக்கள் புதிய உத்தியை கண்டுபிடித்துள்ளனர்.

விலை குறைவு..

இந்தியாவை விட நேபாளில் பெட்ரோல் விலை 15 ரூபாய் குறைவு என்பதாலும், டீசல் 15 ரூபாய் குறைவு என்பதால் ராகுல் மற்றும் சித்தமரி இரண்டு இடங்களில் உள்ள மக்கள் இந்தியா எல்லையில் உள்ள நேப்பாளுக்குச் சொந்தமான பெட்ரோல் நிலையங்கள் சென்று பெட்ரோல் வாங்கி நிரப்பியுள்ளனர்.

இன்று காலை இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 81.66 ரூபாய் மற்றும் டீசல் 72.97 ரூபாய் என்ற நிலையில் நேபாளில் ஒரு லிட்டர் பெட்ரோல் 67.81 ரூபாய் என்றும், டீசல் 56.56 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 100 ரூபாய் என்றால் அது நேபாளில் 160.15 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.நேபாள் எல்லைக்குள் சென்று பெட்ரோல் வாங்கி வந்து இந்திய எல்லையில் விற்று காசு பார்க்கும் வேலையும் நடந்தேறிவருகிறது என நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. சித்தமரி நேபாள் எல்லைக்கும் இடையில் 30 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே ஆகும்.

கடந்த சில நாட்களாக இந்திய - நேபாள் எல்லையில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் 15 முதல் 20 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளதாகவும் நேபாள் எண்ணெய் நிறுவன அதிகாரியான ஜகதீஷ் யாதவி தெரிவித்துள்ளார்.பீகாரில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் நட்டத்தினைப் பெற்று வரும் நிலையில் நேபாள் பெட்ரோல் பங்குகள் லாபம் பெற்று வருகிறன.

இந்தியா ஏற்றுமதி..

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியாவில் இருந்து தினமும் 250 டாங்கர் லாரிகளில் பெட்ரோலிய பொருட்கள் நேபாளிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதே ஆகும். அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் இருந்து நேபாளிற்குக் குழாய் வழியாகப் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் ராக்கெட் வேகத்தில் பெட்ரோல் விலை ஏறி வரும் நிலையில் நேபாளில் எப்படி விலை குறைவு என்று பார்த்தால் அங்கு ஒற்றை வரி முறை கடைப்பிடிப்பதே காரணம் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசுகள் இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு பெட்ரோலிய பொருட்கள் மீது வரியை வசூலித்து வருகின்றன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.