உங்களுடைய ஆழ்மனம் எதை எவ்வாறு நம்பியிருக்கிறதோ அதுதான் உங்கள் கர்மாவை தீர்மானிக்கிறது.
அதாவது உங்களுடைய In Believable System எதை பாவம் என நம்பியிருக்கிறதோ அது பாவமாகவும், எதை புண்ணியம் என நம்பியிருக்கிறதோ அதை புண்ணியமாகவும் எடுத்துக்கொள்ளும்.
ஆனால் சராசரி மனிதனால் அந்த In Believable Systemல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அது அவ்வளவு சுலபமும் அல்ல.
இதை உணர்ந்த சித்தமார்கள் அதை எளிமையாக மாற்றி அமைத்து மனித நலனுக்காக சில இயற்கை மீறல்களையும் செய்யதான் செய்தார்கள்.
இந்த பௌதீக உடல் அழிந்தாலும் உங்கள் ஆன்மா கர்மாவை சுமந்து சென்றே மறுபிறப்பு எடுக்கும்.
ஆக மனதின் ஊடே கர்மா செயல்படும் என்பது தெளிவாகிறது. அப்படியான மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி கர்மாவை கூட்டவோ குறைக்கவோ அல்லது முற்றிலுமாக அழிக்கவோ முடியும்.
குறிப்பு : முட்டாள்தனமாக இதில் உள்ள சூட்சமம் அறியாமல் யாரும் பாவம் செய்யலாம் என எண்ணி துன்பப்படாதீர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.