28/12/2018

கொழுப்பை குறைக்கும் செம்பருத்தி...


மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன.

கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும்.

வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.

இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.

அதன் விபரம்: உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.

சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது.

இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்...

திராவிடம் என்பது தெலுங்கர்களின் பதுங்குழி என்று தெரிகிறதா..?


தினமலர் எனும் விபச்சார செய்தித்தாள்.. இனி தமிழகத்தில் யாரும் வாங்கக் கூடாது...


நீ  வெளியே வர்ரியா ? இல்லை நான் விளக்குமாத்தோட உள்ள வரவா?

பொய் செய்தி வெளியிட்ட கடலூர் தினமலர் அலுவலகத்தை துடைப்பகட்டையோடு முற்றுகையிட்டும், சாணியை கரைத்து ஊற்றியும் பொதுமக்கள் போராட்டம்...

குறிப்பு - தினமலர் தொடர்ந்து தமிழக மக்களுக்கு எதிரான செய்தியையும், பொய் செய்திகளையும்.. பாஜக விற்கு ஆதரவாக வெளியிடுகிறது...

பாஜக - அதிமுக வின் சதிகளை வீழ்த்திய பாமக...


ஒரு பிடி மண்ணைக்கூட குடுக்க நாங்க தயாரா இல்லை - அன்புமணி இராமதாஸ் எம்.பி...



இராணுவத்தை வேண்டுமானாலும் அழைத்து வாங்க..

எந்த சட்ட ஒழுங்கு பிரச்சினை வந்தாலும் வந்து நான் பார்த்துக் கொள்வேன்.


இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?


மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர்.

சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம். இளநீர் மிக மிகச் சுத்தமானது.

இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.

சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்...

தமிழகத்தில் வரும் 2019 ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணை வெளியீடு...


மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதி,  பாலமேட்டில் 16ம் தேதி,  அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியீடு...

Kinder joy உண்மைகள்...


தமிழ்நாடு இழந்த பகுதிகள்...


நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.

அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது
'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்து கொள்ளும் முறையைப் பார்க்கும் போது கேரளாவோடு சேர்க்கப்பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல.

அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது.

 முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்தியை மட்டும் திரும்பக் கேட்பது போலத் தான்.

 ஏனென்றால், தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.

அப்படி பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல் கட்சிகள். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன் வைக்கும் கசப்பான உண்மை.

நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன. அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள்.

முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர் விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ்.

அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பின் மூலம் போராடத் துவங்கினார் இந்துலால் யக்னிக்.
அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் எல்லாவற்றையும்விட பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது.

அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை.

 இங்கிருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வு இரண்டுமே அதற்கு காரணம்.

வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில் இன்றைய நான்கு தென் மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல் சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும் உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர் காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராடினர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான்.

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகள் போன்றவை எல்லாம் இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை.

மொழிவாரி மாநிலப் போராட்டம் பொங்கி பிரவகித்த நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது.

 அந்த கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேட்டனர்.

அன்று (இன்று போல) கேரளத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர்.

அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக் கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப் பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம் காணும் பதவிகள், மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர்.

தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்ற மலையாளி பொறுப்பில் இருந்தார். தமிழகம் சார்பில் யாரும் இல்லை.

அவர், ‘தனக்கு தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது (காண்க: பெட்டிச் செய்தி).

ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் அரசியல்கட்சிகளும், தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர்.

தேவிகுளம், பீரிமேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர் சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என வேண்டினார்.

அப்போது காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பினார். மணி, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்து பிரச்சினையை விளக்கினார். அவர், ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில், ‘தினமணி’யில் தலையங்கம் ஒன்று எழுதினார். சி.சுப்ரமணியம் ஒருமுறை, ‘தேவிகுளம், பீரிமேடு நமக்கு வேண்டும்’ என சட்டமன்றத்தில் வாதிட்டவர். ஆனால், மத்திய தலைமையின் கருத்து வேறாக இருக்கிறது எனத் தெரிந்தபோது, 1956 மார்ச் 28ம் தேதி பசல் கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும் அவர்தான்.

தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை (காண்க: அண்ணாவின் கடிதம்).

‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை.

‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள்.

 தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’ என்று, ‘எனது போராட்டங்கள்’ நூலில் எழுதுகிறார் ம.பொ.சி.

பிரச்சினை வலுவாக இருந்தபோது அந்த ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால் கேரளாவுக்கு மாற்றினர். அங்கு திடீர் என அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். (ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத் தொடர்ந்து போராடினார்).

அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ் அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்திட்டார்.

‘தமிழக அரசின் தலைமைச் செயலாளரான நீங்கள் இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது,

 ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார் வர்கீஸ்.

இவற்றிற்கு எதிராக நேசமணி, ம.பொ.சிவஞானம் போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன.

ஆனால், தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று.

அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில பகுதிகள்.

1950களிலேயே ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வனப் பகுதியை தமிழகம் இழந்தது.

இந்த 1,400 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டும் நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால்...

இன்று முல்லைப் பெரியாறு பகுதி முழுக்க நம்மிடம் இருந்திருக்கும். பிரச்சினையே கிடையாது.

பவானி நதிப் பிரச்சினை கிடையாது.

தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக் கோயில் நம்மை விட்டுப் போயிருக்காது. அங்கு நாம் வழிபடப் போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும் நிலைமை வந்திருக்காது.

சிறுவாணி அணையின் ஒரு பகுதியை தம்மிடம் வைத்துக்கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம் போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே வாய்ப்பிருந்திருக்காது.

எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன் சேர வேண்டிய 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததுதான்.

கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம்.

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயல சீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான். திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில்கூட தமிழ் எழுத்துகளே உள்ளன. திருப்பதியில் இருந்த தனித்தமிழ் பள்ளிகள், அங்கு தமிழ்க் கலை காலகாலமாக வளர்ந்த விதமே அழகு.

1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஆந்திரப்பிரதேசக் கிளையும் அதே கோரிக்கை வைத்தபோது இங்கிருந்த நீதிக்கட்சிப் புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு போயின.

இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு.

மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது.

அதாவது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது.

 அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.

ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?

வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர். ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லா பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.

வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர்.
 இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.

ஆனாலும் தமிழத்தின் தேசிய திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன் வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப் பகுதியில் திருத்தணி, வள்ளி மலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.

1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது.

சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது.

 ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது.

நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.

சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள். பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.

இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல் கட்சிகள் சில போராட்டங்களை நடத்தின. அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம் நாம் இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக் கொடுத்ததற்கு சமம்.

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும்.

பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும் கூர்க் மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது இந்த கூர்க் மக்கள், ‘நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது.
 தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.

கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.

பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறது.

 ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி.
ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால்-
பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.

தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.

திருட்டு திராவிடர்களும்
திருட்டு இந்தியர்களும்

தமிழர்களுக்கு செய்த துரோகங்கள்...

ஏழை மக்களிடம் மட்டும் கொள்ளை அடிக்கும் பாஜக மோடி...


மே17 திருமுருகனின் அஸ்வினி மருத்துவமனை ரகசியம்...


சிறையில் அவர் மிக மோசமான சித்தரவதை செய்யபட்டது போலவும் ஸ்லோ பாய்சன் கொடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது போலவும் மே17 சோசியல் மீடியா குஞ்சுகள் வைரல் அடிக்க நம்பிய நம் நக்கீரரே பதிவு செய்ய திருமுருகனின் டிஆர்பி ரேட் அடுத்த கட்டத்திற்கு எகிறுகிறது. ஆனால் அடுத்தநாள் திருமுருகன் உச்சரிக்க தெரியாத தமிழில் நாங்கள் செய்வோம் என உணர்ச்சி முழக்கத்தோடு சிறையில் இருந்து வெளிவர நெற்றிக்கண்ணே அதிர்ந்து போகிறது என்னடா நாம் போட்ட செய்தியில் குற்றமா?உயிருக்கு போராடியவர் புரட்சிபுயலையே மிஞ்சுகின்ற வேகத்தோடு வெளிவருகிறாரே என்ன ஆச்சர்யம்.

அதுமட்டுமா அடுத்த காட்சி அதையும் தாண்டியது, அது ஒரு படலம் ஆஸ்பத்திரியில் கானும் படலம், எல்லோரும் போய் வருகிறார்களே என்ற மரியாதைக்கு ஸ்டாலினும் போய் வந்தார்.விவரம் அறிந்த கொளத்தூர் மணி ஒதுங்கி கொண்டார். 3 லட்சம் செலவில் ஜெனிவா சென்று அங்கு சாப்பிட பைசா இல்லாமல் பஞ்சத்தில் அடிபட்டபோது வந்த வயித்து புண்ணுக்காக ஜெலுசில் மாத்திரை சாப்பிட வேண்டிய திருமுருகன், 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் வழக்குகாரர்களை விட பெரும் வீரர் என வேலூர் சிறையில் உயிருக்கு குறி வைக்கபட்டதால், அஸ்வினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 25 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார் என்று.. தமிழ் பெருங்குடி மக்கள் நம்பவைக்கபட்டு வருகிறார்கள்...

ஆனால் உண்மை இன்னும் சுவாரஸ்யமானது 1970 ஆண்டில் இருந்து ஈழபோரட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள இந்திய உளவுத்துறையின் இரகசிய அலுவலகமாகவே ப.சிதம்பரமதின் மாமியார், நளினி சிதம்பரத்தின தாயார் செளந்தர கைலாசம் அவர்களின் அஸ்வனி செளந்தர மருத்துவமனையின் ஒரு பகுதியாக இருக்கும் வீடு செயல் பட்டு வருகிறது... சுமார் 40 ஆண்டுகளாக பல சூழ்ச்சிகளும், சதி திட்டங்களும் வகுக்க பட்ட இடம்... ஆன்ட்டன் பாலசிங்கம் கூட சில இடங்களில் இராதாகிருஷ்ணன் சாலை குறித்து குறிப்பிட்டிருப்பார்.. அதே சாலையில் தான் டிஜிபி அலெக்சாண்டர் அலுவலகம், பழைய உட்லண்ட்ஸ் ட்ரைவின் ஓட்டல்(இன்றைய செம்மொழி பூங்க) சோழா நட்சத்திர ஓட்டல்.. இந்த இடங்களில் தான் அனைத்து ஈழ போராளி குழுக்களுக்கும் உளவுத்துறை சந்திப்புகள் நடைபெற்றது.

குறிப்பாக செளந்தர கைலாசம் அவர்களின் வீடு இந்த இடங்களுக்கெல்லாம் மையப்புள்ளி.. அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களின் ஈழம் சம்மந்தமான அத்தனை முடிவுகளும் உளவுத்துறையால் இங்கிருந்து தான் நடைமுறை படுத்தப்பட்டது.. அன்று பழ.நெடுமாறன் உள்ளிட்டு பல்வேறு ஈழ ஆதரவாளர்களை அடிக்கடி உளவுத்துறை அழைத்து பேசிய இடமும் இதுதான்.. புலிகள் இந்திய அரசுடன் உறவை முறித்துக் கொண்டு சுயமாக விடுதலை போராட்டம் கட்டியமைத்த போது இதர விடுதலை குழுக்கள் இந்திய உளவுத்துறையின் கட்டுபாட்டில் இருந்தது இதே போயஸ் தோட்ட இல்லம் தான்.

2009 போர் முடிவுற்ற உடனே ஹோம் ஆப் ஹியூமன் ரைட்ஸ் அமைப்பின் இயக்குநர் செரின் சேவியர் என்ற கனடாவின் குடியுரிமை பெற்ற இலங்கை பெண்மணி சென்னை வந்து இங்கு இருந்த அரசியல் தலைவர்களையும் அதே அஸ்வனி செளந்தரராஜன் மருத்துவ மனை இனைந்தது இருக்க கூடிய வீட்டில்தான் சந்தித்தார்.. அப்போது பெரும் அரசியல் கட்சிகள் தொடங்கி சிறு தமிழ்த்தேச இயக்ங்களில் தலைமை வரை அனைவரையும் சந்திக்க முயற்சியில் ஈடுபட்டார் (பா,சிதம்பரம் அப்போது 2009 தேர்தலில் தோல்வி அடைந்து இரகசியமாக வெற்றி பெற்று மந்திரி ஆகியிருந்த சமயம்) தமிழகத்தில் இருந்த புலம்பெயர் ஈழதமிழர்களையும் சந்தித்த முயற்சி செய்த போது ஈழதமிழர்கள் இவரை சந்திக்க மறுத்துவிட்டானர்.. அதற்கு பின் அவ்வப்போது அவர் சென்னை வந்து தங்கி முற்றுப்புள்ளியா என்ற திரைப்படம் இந்த வீட்டில் இருந்துதான் எடுத்தார்.. திருமுருகன் நண்பர்கள் உட்பட பலர் இப்படத்தில் வேலை பார்த்தனர்.

1970 களில் செளந்தர கைலாசம் இந்திராகாந்தி அவர்களுடைய நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்.. இன்றும் அவருடைய மகன் டாக்டர் சடையவேல்(ப.சிதம்பரமதின் மைத்துனர், நளினி சிதம்பரத்தின உடன் பிறந்த அண்ணன்) அவர்கள் இந்த மருத்துவ மனையின் இயக்குனர்.. அதுமட்டுமல்ல இன்றும் மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருது தேர்வு குழு உள்ளிட்ட பல்வேறு கெளரவ பொருப்புகளிளும் உள்ளார்.. திருமுருகன் உணவு ஒவ்வாமைக்கு 25 நாட்கள் மருத்துவமனையில் இருந்ததார் என்று தமிழ்ச் சமூகம் நம்பவைக்கப்பட்டது.. ஆனால் உண்மை அஸ்வனி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சடையவேல் அவர்களின் ஏற்பாட்டில் இந்திய உளவுத்துறை - திருமுருகன் - ஈழம் - தமிழக அரசியல் குறித்த சதித்திட்டம் தீட்டபட்டது.

இந்தியா உளவுத்துறை பிரதமர் மோடிக்கு தெரியாமல் தன்மை கொலை செய்ய முயற்ச்சி செய்கிறது என்று ஸ்ரீசேனா கூறியது.. போன்ற சூழலில் இலங்கை அரசியல் இந்திய கைபிடியில் இருந்து நழுவும் சூழலில் அதை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடும் போது தமிழக அரசியல் இயக்கங்கள் அதற்கு முரணான திசையில் செல்ல கூடாது என்று அதற்கான திட்டமிடலும். இந்த இயக்கங்களுக்கு என்ன அரசியல் திசைவழியில் திசைதிருப்ப வேண்டும் என்று திருமுருகனுக்கு அசைன்மென்ட் வழங்க பட்டுள்ளது...

சில ஆண்டுகளுக்கு முன்பு திருமுருகனின் உற்ற நண்பனாக இருந்து செயல்பட்டு வந்த உமர் கூட திருமுருகன் ரகசியம் அறிந்தவர் அல்ல டப்ளின் தீர்ப்பாயம் உள்ளிட்ட விசயங்களில் திருமுருகனின் இந்திய ஆதரவு பற்றி சுமார் 400 பக்க புத்தகத்தில் கேள்வி எழுப்பினார்.. 2013ல் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா இலங்கை அரசின் மீதுபோர்க்குற்றம் தெடர்பாக தீர்மானம் கொண்டுவந்து அந்த தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு இலங்கை-சீனா-இந்தியா ஒரே அணியில் நின்றது அதே திசையில் தான் திருமுருகன் நின்றார்.. தீர்மானத்தை எதிர்த்து நின்ற நாடுகளுக்கு இடையே பல முரண்பாடுகள் இருந்தாலும் வேறு வேறு காரணம் சொல்லி தீர்மானத்தை தோற்கடிப்பதில் ஒற்றை புள்ளியில் நின்றது.. அதேபோல திருமுருகன் அமெரிக்க இந்திய உள்ளிட்ட 20 நாடுகள் ஐநா சபையின் உதவியுடன் நடத்திய இனப்படுகொலை ஆகவே.. ஐநா சபையும் அமெரிக்காவும் இனப்படுகொலையின் பங்காளிகளே ஆகவே ஐநா சபை என்ற கூட்டு குற்றவாளியே குற்றத்தை விசாரிக்க முடியாது.. அமெரிக்கா என்ற குற்றவாளி இனப்படுகொலை என்று சொல்லாமல் போர்க்குற்றம் என்றுதான் தீர்மானம் கொண்டுவருகிறான் ஆகவே இதை திருத்த வேண்டும் என்று மட்டும் கூறாமல் அந்த தீர்மானத்தை எரிக்க வேண்டும் என்று லயோலா மாணவர்கள் போராட்டத்தை திசைதிருப்பி தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நடத்தினார்.. ஆனால் அதே திருமுருகன்தான் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர வாடிக்கையாளராக மாறினார்.. அதுமட்டுமல்லாமல் தான் கைது செய்ய படும் போது, "AC சார் நான் ஐநா சபையில் உங்களை பற்றி ரிப்போட் பன்னுவேன் சார்" என்று கூறினார். அத்தீர்மானம் கொண்டு வர பாடுபட்ட அத்துணை ஈழதமிழர்களின் உழைப்பை கொச்சைபடுத்தி நாசம் செய்தார்..

2009 வரை ஈழமோ தமிழகமோ எந்த உரிமை சார்ந்த போராட்டத்தில் துளி பங்கு கூட இல்லாத திருமுருகன் திடிரென்று 2009 பிப்ரவரி மாதத்தில் இருந்து போராளி அவதாரம் எடுக்கிறார்.. தீக்குளித்த முத்துக்குமார் மரணமடைந்த 10 நாட்களில் முதலில் மணியரசன் மகன் செந்தமிழன் அவர்கள் துவங்கிய இளந்தமிழர் இயக்கத்தில் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக ஆக முயற்சி எடுக்கிறார்... அது முடியாமல் போகவே பிப்ரவரி மாதம் இறுதிக்குள் மாவோயிஸ்ட் பின்னனி கொண்ட சதிஸ் சை பிடித்து முத்துக்குமார் மக்கள் எழுச்சி இயக்கத்தில் நிறுவன தலைவர்களின் ஒருவராக முயற்சியில் இறங்கினார்.. பாராளுமன்ற தேர்தலில் 2009 ஏப்ரலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸை தோற்கடிப்போம் சிதம்பரதை தோற்க்கடிப்போம் என்ற காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் நடந்தபோது அதனை தலைமை தாங்கிய 10 மேற்பட்ட நபர்கள் கைதுசெய்ய பட்டு சிறையில் இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கும் சில குழப்பம் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார் 10 நாட்கள் கழித்து சிறையில் இருந்து வெளிவந்த நபர்கள் இவரது நடவடிக்கையை கண்டிக்கவே.. , காரைக்குடி மைக்கேல் உள்ளிட்ட சிலரை தூண்டி விட்டு முத்துக்குமார் மக்கள் எழுச்சி இயக்கத்தில் குழப்பம் விளைவிக்கிறார்.

பின்னர் நாம் தமிழர் என்ற கட்சி துவங்க பட்ட போதும் அதன் நிறுவன ஆலோசனை கூட்டத்தில் இயக்குனர் சீமான், பாதர் ஜகத்கஷ்பர், மருத்துவர் எழிலன், புதுக்கோட்டை முத்துக்குமார், காரைக்குடி மைக்கேல், திருமுருகன், இராஜிவ்காந்தி, அனைவரும் இருந்தனர். அக்கூட்டத்தில் தான் மதுரையில் முதல் பொதுக்கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.. முதல் கூட்டத்திலேயே மருத்துவர் எழிலன் பெரியார் குறித்த நிலைப்பாட்டில் முரண்பட்டு ஒதுங்கி கொள்கிறார்.. மதுரை பொதுக்கூட்டத்தில் மேடையில் இருந்து பாதர் ஜகத் கஷ்ப்பர் அவமான படுத்தப்பட்டு வெளியேறுகிறார்.. மதுரை பொதுக்கூட்டம் வரை நாம் தமிழர் கட்சியில் சில வேலைகள் செய்து கொண்டே முக்கிய பொருப்புகளை கைப்பற்ற முயற்சியில் இருந்த திருமுருகன் ஜகத்கஷ்பர் நிலைமை பார்த்த பின்பு அங்கும் ஒன்றும் செய்ய முடியாது என்று வெளியேறி மே17 ஐ நிறுவினார்.

அதற்கு பிறகு இராஜா ஸ்டாலின், பிரவின், லேனகுமார், ஓவியர் புருசோத், (புலி எதிர்ப்பாளர்கள், எழுத்தாளர் வளர்மதி அருள்முருகன்) உமர் என்று ஒரு குழு உருவாக்கப்பட்டது.. திருமுருகன் வழியாக இந்த குழு ஈழபோரட்டத்திற்கு எதிரிகள் என்று ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தை எதிராக கட்டமைப்பதில் தொழிலாக செய்து கொண்டிருந்தது. சீன எதிர்ப்பு,ஏர்டெல் எதிர்ப்பு இந்து பத்திரிகை எதிர்ப்பு, காலச்சுவடு எதிர்ப்பு, அருந்ததிராய் எதிர்ப்பு என்று ஈழபோரட்டத்திற்கு இவர்கள் தான் முதன்மை, எதிரிகள் திசைதிருப்பினார். சீனாவின் பொருளாதார அடியால் தி இந்து ராம்.. சீனாவின் கைக்கூலியாக செயல்பட்டது போல் சீன முற்றுகைகுள் இந்தியா என்று பீதியை ஏற்படுத்திய இந்திய பொருளாதார அடியாலையும் தமிழ் பெருங்குடி மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் டெல்லியில் தங்கியிருந்த எழுத்தாளர் வளர்மதி மிக தீவிரமான புலி எதிர்ப்பாளர் ஆனால் அவர்தான் மே17 இயக்கத்தின் ஆஸ்த்தான அரசியல் ஆலோசகர் அவர் டெல்லியில் இருந்து அந்த குறிப்பிட்ட காலகட்டத்தையிம் அவருக்கு டெல்லியோடு அதிகார மய்யத்தோடு இருந்த உறவு மிகரகசியமானது... அதேபோல் சார்லஸ் ஆண்டணி? என்ற புனை பெயர் கொண்ட நபரோடு இனைந்து புவிசார் அரசியல் புருடாக்களை எழுதி ஜாட்டுகள் மத்தியில் சோகால்டு அறிவாளியாக மாறமுயற்சித்து, இன்று திராவிட அரசியலின் ஏகபோக பிரதிநிதியாக தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிசெய்யும் ,திருமுருகன் யார்?.அமெரிக்க அரசு தன்னுடைய அரசு ஆவணங்களில் மலையாள மாஃபியா என்ற வார்த்தையை பயன்படுத்தியதை விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அம்பலப்படுத்தி இருந்தார் அதே வார்த்தையை அதற்கு முன்பிருந்தே அவர் பயன்படுத்தி.. மலையாள மக்களுக்கு எதிரான கோபம் தமிழாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.. MK.நாராயணன், சிவசங்கர் மேனன், சதீஷ் நம்பியார், போன்ற மலையாளிகள் தமிழர்களை கொன்றார்கள் இந்திய அரசை வைத்து தூண்டி ஈழ இனப்படுகொலையை நிகழ்த்தினார்கள் என்று இந்தியாவை மறைத்து மலையாள எதிர்ப்பு என்று மாற்றியவர்தான் இந்த திராவிட காவலர் இது மட்டுமா திராவிடத்தை விமர்சிக்கும் சீமானிடமிருந்து திராவிடத்தை காக்கும் புதிய கேரக்டரை ஏற்றுள்ளார்..2009 வரை யாரென்றே தெரியாதவர் திடீர் ஈழப்போராளி,இப்பொழுது திராவிட நடிகர் திலகமாக மாறியுள்ளார்..ஏறிவந்த சீமான் எட்டி உதைத்ததை நினைத்து திராவிட இயக்கத்தவர்க்ளிடம் உள்ளகுமறல் உண்டு,இன்றோ இன்னொரு காப்பாளர்.இதுவரை ஈழத்தை கலைத்தார்கள், திசைதிருப்பினார்கள், அடுத்து பெரியாரிய இயக்கங்களை நோக்கியா, பார்ப்போம் அஸ்வினி சந்திப்பில் வெளிவராத புகைப்படங்களில்தான் முழுக்காட்சி விடியும்.

இக்குழுவில் இருந்த சிலர் உண்மை விளங்கும் போது வெளியே வந்தனர் ஆனால் உண்மை அறியாதவர்களும் இயக்கங்களும் அவ் வலையில் சிக்கி வீழ போகிறார்கள்...

- why am not a may17 member

விசித்திர கோவில்...


கன்னட தெலுங்கர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் எதிர்த்தது பார்ப்பனரையே.. பிராமணரை அல்ல...


ஈ.வே.ரா எதிர்த்தது பார்ப்பனரையே (தமிழரை)..

பிராமணரை (திராவிடரை)  அல்ல...

உங்களுக்கு உறுதியாக இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன்..

மறந்தும் உங்கள் வாயில் ‘பிராமணன்’ என்று வரக் கூடாது..

‘பார்ப்பான்’ என்று கூறுங்கள்..

கண்டிப்பாக பிராமணன் என்று கூறக் கூடாது..

- ஈ.வே.ரா (விடுதலை 30.06.1957)...

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா? மருந்தை தேடி அலைய வேண்டாம்...


தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள்...

பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்...

சிறிது நேரத்தில் வெள்ளைக் கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது...

சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும்...

தொடர்ந்து செய்து வந்தால்.....

அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும்....

தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே....

பூமி மாயை அல்ல நிஜம்...


உனக்குள் இருப்பது போல் எல்லா பக்கமும் இருக்கிறது..

இந்த பூமி முழுவமே  ஓர் கண்ணாடி அந்த கண்ணாடி முழுவதும் நீயே தான்..

ஓர் செல் உயிர் முதல் பல செல் உயிர் வரை.. எல்லாம் நீயே தான்..

இந்த கண்ணாடியை மகிழ்வுடன் பார்..
சிரிப்புடன் பார்..
அன்புடன் பார்..

அந்த கண்ணாடி நீ பார்ப்பதே பிரதி எடுக்கும்...

அரிசி மாவு உபயோகங்கள்...


தமிழிசைச் சிறப்பு...


இசை பலவகை. அதில் தமிழிசை ஒருவகை.

இரண்டெழுத்துள்ள இச்சொல் பொருள் அமைதியுடையது.

சுதி, பாட்டு, பண், பாடுவோர் உள்ளம், கேட்போர் உள்ளம் ஆகிய அனைத்தும் இசைந்தால் தான் அதற்கு இசை என்று பெயர். இல்லையேல் அது ‘இரைச்சல் என்றாகி விடும்’. இசைக்கு ‘புகழ்’ என்றும் பெயர் உண்டு. ‘ஈதல் இசைப்பட வாழ்தல்’ என்ற சொற்றொடரும் இதனை மெய்பிக்கும்.

இசையென்னும் எச்சம் பெறாவிடின் வசையென்ப வையத்தார்க் கொல்லாம் என்பதும் , வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கைப் பொறுத்த நிலம் என்பதும், வசைய்யொழிய வாழ்வாரே வாழாதவர் என்பதும் வள்ளுவர் வாக்கு.

இதிலிருந்து வசைக்கு எதிர்மறை இசை என்பதை நன்கறியலாம்.

அக்காலத்து மன்னர்களை பாணரும் புலவரும் இசையின் மூலமே புகழ்ந்ததால், இப்பொருள் வந்தது போலும். (தமிழின் சிறப்பு கி.ஆ.பெ. விசுவநாதம்).

இறைவனையே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள்.

ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் என்று குறிப்பிட்டனர். இறைவனை இசைக் கொண்டு பாடியே வணங்கினர்.

இம்முறையில் பண்ணோடு கூடிய பக்தி பாடல்கள் பல தமில் மொழியில் உள்ளன. இவற்றுள் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பிரபந்தம், திருப்புகழ் முதலியவை குறிப்பிடத்தக்கவை.

தமிழிசைத் தோன்றிய காலம், தமிழ் மொழி தோன்றிய காலமே. தமிழ் மக்களின் எண்ணம், சொல், செயல், வாழ்வு அனைத்தும் இசைக் கலந்தவையாகவே காட்சியளிக்கின்றன.

அவை, தாலாட்டு இசை, சோறூட்ட இசை, திருமண இசை, ஒப்பாரி இசை மற்றும் இன்னும் பல.

இசை என்பது வாய்யினால் பாடுவது மட்டுமல்ல... கருவியினால் இசைப்பதும் இசையே ஆகும்...

அவை தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி என மூவகைப்படும்.

இவற்றை விழா நாட்களிலும் இசைத்து முழக்குவது மட்டுமல்ல பிற நாட்களிலும் இசைத்து முழக்குவதுண்டு.

மணப்பறை, பிணப்பறை, போர்பறை, விழாப்பறை என்ற சொற்கள் இவற்றை பெய்பிக்கின்றன...

இத்தனை வகை நாட்டு மாடுகள் எங்கே..?


தமிழர்கள் பயன்படுத்திய காசுகள் பற்றிய வரலாற்று தகவல்கள்...


மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார்.

பிறிதொருவர் தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறரிடமிருந்து வாங்கினார். இம்முறையில் மிகுதியான பொருட்களைப் பண்டமாற்றம் செய்கையில் அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது.

ஆதலால் ஒரு பொருளை மையப் பொருளாகக் கொள்ளத் திட்டமிட்டனர். தொடக்கத்தில் மாடு அம்மையப் பொருளாக இருந்தது. இந்தக் காலக்கட்டம் அரப்பன்நாகரிக காலமாக இருக்கலாம்.

அரப்பன் களிமண் முத்திரைத் தகடுகள் கூட அக்காலக் காசுகளாக இருக்கலாம். ஏனெனில் அரப்பன் களிமண் தகடுகளில் காளை உருவம்தான் மிகப் பெரியதாக காணப்படுகிறது.

மாடு மிகுந்த அளவில் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்பட்டது. குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவதில் இடர்பாடு ஏற்பட்டது. ஆதலால் - சோழிகளை - மையப் பொருளாகப் பின்னாளில் பயன்படுத்தினர்.

சோழிகளைக் கொண்டு குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவது எளிதாக இருந்தது. இம்முறையில் உயர்ந்த மதிப்பில் பொருள்களை வாங்க வேண்டுமானால் மூட்டை மூட்டையாகச் சோழிகளைத் தருதல் வேண்டும.

அது மட்டுமின்றி சோழிகள் எளிதில் உடைந்து போகக்கூடிய தன்மை கொண்டவை. இவ்வாறாக இருக்கும் நேரத்தில் உலோகம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆதலால் உலோகத் தகட்டை மையப்பொருளாகக் கொள்ள முடிவெடுத்தனர். அவ்வுலோகத்திலும் செம்பு மற்றும் தங்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். இரண்டுமே கடினமான பொருள்கள். ஆகையால் இவை அவர்களுக்கு நன்கு பயன்பட்டன.

செப்புத் தகட்டைச் சாதாரண பொருள்கள் வாங்குவதற்கும், தங்க உருண்டைகளை மதிப்பு மிகுந்த அறிய பொருள்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தினர்.

தங்க உருண்டைகள் வேப்பம்பழம் வடிவிலும், நெல்லிக்கனி வடிவிலும் நிறத்திலும் இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இக்காசுகள் மக்கள் கூட்டு வாழ்க்கை நடத்தியபோது பயன் படுத்தப்பட்டவை.

பிறகு தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தபோது தங்களுக்கென சில குலச்சின்னத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அக்குழுக்கள் வெளியிட்ட காசுகளில் ஒவ்வொரு குழுவும் தங்கள் உண்மையே நிலைநாட்ட தங்களது குலச்சின்னத்தைச் செப்புத் தகட்டிலோ அல்லது வெள்ளித் தகட்டிலோ முத்திரையாகப் பதித்து வெளியிட்டனர்.

அப்பொழுதுதான் அவை தங்கள் பகுதிகளில் பயன்படுத்தப்படும் உரிமை பெறும். அத்தகைய காசுகள் முத்திரை பதிக்கப்பெற்ற காசுகள் என்று காசு இயல் வல்லுநர்களால் அழைக்கப்படுகின்றன.

அனைத்துக் குழுத்தலைவர்களுக்கும் தலைவனாக ஒருவன் உருவானான். அவனே வேந்தன் என்று அழைக்கப்பட்டான். அவ்வாறு உருவானவர்களே தமிழக மூவேந்தர்கள்.

அம் மூவேந்தர்களும் தங்களுக்கென சில காசுகளை வெளியிட்டார்கள் . அவை சதுரச் செப்புக் காசுகள் என்று வழங்கப் பெறுகின்றன.

சேரரது காசில் ஒரு பக்கம் யானை உருவமும் மறுபக்கம் வில் அம்பு உருவமும் அல்லது பனை மரம் உருவமும் இருக்கும்.

சோழரது காசில் ஒரு பக்கம் யானை உருவமும், மறுபக்கம் புலியினது உருவமும் காணப்படும்.

பாண்டியரது காசில் ஒருபக்கம் யானை உருவமும், மறுபக்கம் மீன் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

குறுநில மன்னரான மலையமான் காசில் ஒரு பக்கம் குதிரைச் சின்னமும், மறுபக்கம் ஆற்றின் சின்னமும் காணப்படும்.

குறுநில மன்னரான அதியாமான் காசில் ஒரு பக்கம் நீண்ட கழுத்தையுடைய குதிரைச் சின்னமும், மறுபக்கம் ஆற்றின் கரைகள் சின்னமும் காணப்பெறும்.

மேற்குறிப்பிட்ட சதுரச் செப்புக் காசுகளின் காலம் இற்றைக்குச் சற்றேற குறைய 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும்.

இதற்கு அடுத்தகட்ட வளர்ச்சி செப்புச் சதுர மற்றும் ஈய முட்டை வடிவக் காசுகளில் பண்டைத் தமிழ் எழுத்தில் மன்னர் பெயர் பொறித்து வெளியிடப்பட்டவை ஆகும்.

இதுவரை பாண்டிய மன்னன் பெருவழுதி பெயர் பொறிக்கப்பட்ட காசும், அதிய மன்னன் - சேந்தன் அதினன் எதிரான் - பெயர் பொறிக்கப்பட்ட காசும் தொ¢ய வந்துள்ளன. அவை கி.மு 4-3 ஆம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்டவை.

காசு வெளியிடுவதில் இதற்கு அடுத்ததாக மன்னன் தலை உருவத்தோடு, மன்னரது பெயர் பொறிக்கப்பட்டு வெளியிடப் பெற்றிருப்பவை காணப்படுகிறது.

முதல் வகைக் காசில் ஒரு பக்கம் வாயிலில் நிற்கும் மன்னன் உருவமும், அவனைச் சுற்றிப் பண்டைத் தமிழ் எழுத்தில் கொல்லிப்புறை என்ற மன்னன் பெயரும் காணப்படுகின்றன. மறுபக்கம் வில் அம்பு உருவம்.

இரண்டாம் வகைக் காசில் மாக்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.

மூன்றாம் வகையில் குட்டுவன்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.

மூன்றுவகைக் காசுகளிலும் கோதை, பொறை, என்ற சேர அரசர்களின் பெயரொட்டுக்கள் காணப்பெறுவதால் இவை சேரர் காசுகள் என்பது தெளிவாகிறது. இக்காசுகளின் காலம் இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்

மலையமான் காசுகள்...

திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இருமபுக் காசுகள் கிடைத்துளன.

அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கிபி 100 - 300 ஆகும்.

இப்போது நாம் பயன் படுத்தும் காசுகள் பல காலங்களையும் பல நாகரிகங்களை தாண்டி வந்து உள்ளது...

வங்கி யும் அரசும் மக்களுக்கு எதிரானதே...


மூட்டு வலிக்கான நிரந்தர தீர்வு...


இயற்கை முறையில் மூட்டு வலிக்கான நிரந்தர தீர்வுகள்...

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை எனலாம். மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்...

1. மூட்டழற்சி(osteo arthritis) இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

2. முடக்குவாதம் (rheumatoid arthritis) இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்...

மூட்டழற்சி நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பின்போ, வேலை செய்த பின்போ வலி அதிகமாகும்.

முடக்குவாதம் இது ஆரம்பத்தில் தெரியாது. நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். முழு உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.

முடக்குவாதம் சில கிருமிகளினாலும், உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் ஒன்று (Hormone) எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும், பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

வைத்தியம்...

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6. இரண்டு மேசைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை சர்க்கரை நாரத்தை (orange) சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும்.(இது ஒரு சு(ஸ்) பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும்).

மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7. ஒரு மேசைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்...

1. வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.

2. காய்கறி ரசம் (Soup) அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

3. கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்

தவிர்க்க வேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்...

கற்பனைகளின் சக்தி...


ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப் படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.

வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும்.

முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை.

அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது. இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு பயன்படுத்திக் கொண்டு சிறந்தபலன் கண்டவர்கள் ரஷியர்கள்.
ஆழ்மன சக்திகள் குறித்து முதல் முதலில் அதிகமாக ஆராய்ந்த நாடுகளில் முதலிடம் வகித்தது ரஷியா என்றே சொல்லலாம்.

 வாசிலிவ் என்ற ஆழ்மன ஆராய்ச்சியாளர் செய்கையால் கவரப்பட்டு ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின் லெனின்கிராடு பல்கலைகழகத்தில் ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி அளித்தது பற்றி முன்பு கூறியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

அங்கு நடந்த ஆராய்ச்சிகளில் ஸ்டாலினும், பிந்தைய ஆட்சியாளர்களும் ஆர்வம் காட்டினார்கள்.

1976ல் மாண்ட்ரீல் நகரில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் மிக அதிகமான கோப்பைகளைத் தட்டிச் சென்ற கிழக்கு ஜெர்மானிய வீரர்கள் ஆழ்மனப் பயிற்சிகளில் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.

 அதைப் படித்தவுடனேயே 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாரான ரஷியா தங்கள் நாட்டிலேயே நடக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் மிகச் சிறப்பாக சோபிக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளுக்கு அந்தப் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தது.

 அந்தப் பயிற்சிகளையே ஆராய்ச்சிகளாகவும் மாற்ற எண்ணிய ரஷியர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் விளையாட்டு வீரர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர்.
’ஏ’ பிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நூறு சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ’பி’ பிரிவில் 75 சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் 25 சதவீதம் மன ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.

அடுத்ததாக ‘சி’ பிரிவில் உடல்ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும், மனரீதியான பயிற்சிகளும் 50, 50 சதவீதமாக அளிக்கப்பட்டது. கடைசியாக ‘டி’ பிரிவில் உடல் ரீதியான பயிற்சிகள் 25 சதவீதமும், மனரீதியான பயிற்சிகள் 75 சதவீதமும் அளிக்கப்பட்டது. கடைசியாக 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்த போது கணக்கிட்டதில் அந்த விளையாட்டு வீரர்களில் மிக அதிகமான வெற்றிக் கோப்பைகளைப் பெற்றது ‘டி’ பிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதை ரஷிய ஆராய்ச்சி தெரிவித்தது.

அதாவது 25 சதவீத உடல் ரீதியான பயிற்சிகளும், 75 சதவீத மனரீதியான பயிற்சிகளும் பெற்றவர்கள் தான் அதிகக் கோப்பைகள் பெற்றவர்கள். மற்ற பிரிவினர்களிலும் மனரீதியான பயிற்சிகள் பெற்ற அதிக விகிதத்தின் படியே அதிகக் கோப்பைகள் பெற்றிருந்தார்கள்.

மன ரீதியான பயிற்சிகளில் பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தியது மனக்கண்ணில் வெற்றியைக் காட்சியாகக் காணும் பயிற்சியைத் தான். இது விளையாட்டு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு மேலை நாடுகளில் சர்வ தேசப் போட்டிகளில் பங்கு பெறும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்க விளையாட்டு மனோதத்துவ நிபுணர் (sports psychologist) தனியாக நியமிக்கும் வழக்கம் ஆரம்பித்தது.

 1970 களில் மொத்த விளையாட்டுகளுக்கும் சேர்த்து ஓரிரண்டு விளையாட்டு மனோதத்துவ நிபுணர்களை மட்டும் வைத்திருந்த மேலை நாடுகளில் பல இப்போது ஒவ்வொரு விளையாட்டின் குழுவிற்கும் தனித்தனியாக விளையாட்டு மனோதத்துவ நிபுணரை நியமிக்கின்றன.

டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி, கால்ஃப் வீரரான ஜேக் நிக்ளாஸ், கால் பந்தாட்ட வீரர் பீலே போன்றவர்கள் தங்கள் துறையில் சிகரத்தை எட்டி வரலாறு படைத்தவர்கள். அவர்களும், அவர்களைப் போன்ற பல வெற்றி வீரர்களும் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்பவர்களாகத் தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள்.

அது அவர்களுடைய விளையாட்டுப் பயிற்சியுடன் சேர்ந்த ஒரு அங்கமாகவே பிரதான இடம் வகிக்கிறது.
கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார்.

 ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார்.

அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார். அப்படி உருவகப்படுத்தும் பயிற்சியின் போது ஆட்டத்தின் முழு சூழ்நிலையையும் கொண்டு வர வேண்டும் என்கிறார்.

ஆட்ட மைதானத்தின் சத்தம், கைதட்டல்கள், தட்பவெப்ப நிலை என்று முடிந்த அளவு எல்லா சின்னச் சின்ன விஷயங்களையும் அந்தக் காட்சியில் தெளிவாகக் கொண்டு வர வேண்டும் என்கிறார். இப்படி மனத்திரையில் தொடர்ந்து காட்சியைக் கண்டு ஆழ்மனதில் ஆழமாகப் பதித்தால் நிஜமான விளையாட்டின் போது ஆழ்மனம் அந்தப் பதிவை படபடப்பில்லாமல் நிஜமாக்கிக் காட்டும்.

 இது விளையாட்டுக்கு மட்டுமல்ல எல்லா இலட்சியங்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்தி வரும் என்கிறார்கள் ஆழ்மனப் பயிற்சியாளர்கள்.

ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால் நெப்போலியனைச் சொல்லலாம்.

ஒரு சாதாரணக் குடிமகனாய் பிறந்து வறுமையில் வாடி வளர்ந்த நெப்போலியன் இளமையில் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் அமர்ந்து பகற்கனவு காணுவது வழக்கம். மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் அவன் மட்டும் அங்கு அமர்ந்து சக்கரவர்த்தியாகத் தன்னை பாவித்து போர்களை வெல்வது போலவும் நாடுகளை ஆக்கிரமிப்பது போலவும் கற்பனை செய்வது வழக்கம். திரண்டு வரும் அலைகளைத் தன் எதிரிகளாகவும், எதிரிகள் தன்னருகே வந்து தோற்றுப் பின் வாங்குவது போலவும் கற்பனை செய்து கொள்வானாம்.

அவன் ஆழ்மனதில் பதித்த அந்த கற்பனைகள் பிறகு வரலாறாகியது என்பதை எல்லோரும் அறிவோம். நெப்போலியன் அமர்ந்து கற்பனைக் கனவு கண்ட அந்த பாறைப் பிளவு இன்றும் “நெப்போலியனின் அழகுமிகு செயற்கைக் குகை (Napoleon’s Grotto)” என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

இன்னொரு வியப்பூட்டும் சம்பவத்தையும் மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்திக்கு உதாரணமாய் சொல்லலாம்.

சில வருடங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் மனோசக்தி பற்றிய சில அசாதாரண நிகழ்வுகளைக் காண்பித்தார்கள். அதில் ஒரு நிகழ்வு கான்சரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுடையது. கான்சர் முற்றிய கட்டத்தில் இருப்பதால் அவன் ஆறு மாதங்களுக்கு மேல் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அவனை ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பி அழைத்து வருகையில் அந்த சிறுவன் தாயிடம் தன் உடலுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தாய் அவனிடம் அந்த நோய் பற்றி விளக்கப் போகாமல் “உன் உடலில் நோய்க்கிருமிகள் நிறைய உள்ளன. அதனால் தான் உனக்கு அசுகம்” என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாள்.

ஆறுமாதங்கள் கழித்து சிறுவன் இறந்து போவதற்குப் பதிலாக ஆரோக்கியமாய் இருக்க தாய் மறுபடி அவனை அந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள்.

அவனைப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டருக்கு பேராச்சரியம். அவன் உடலில் கான்சர் செல்கள் இல்லவே இல்லை. அவர் அந்தத் தாயிடம் என்ன மருத்துவம் பார்த்தீர்கள் என்று கேட்க அவளோ “பெரிய டாக்டர் நீங்களே இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டதால் நான் வேறு சிகிச்சைக்கே போகவில்லை” என்றாள். பின் மெல்ல அந்த சிறுவனை விசாரித்த போது பதில் கிடைத்தது. ’வீடியோ கேம்’களில் மிக ஆர்வம் உள்ள அந்த சிறுவன் தாய் அவன் உடம்பில் இருப்பதாகச் சொன்ன நோய்க்கிருமிகளை எதிரிகளாக பாவித்து தினமும் அவற்றை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது போலவும் அவை எல்லாம் செத்து விழுவது போலவும் மனதில் கற்பனை விளையாட்டு விளையாடுவானாம். ஆழ்மனம் அவனுடைய கற்பனைப்படியே நோய்க்கிருமிகளைக் கொன்று அவனைக் குணப்படுத்தியே விட்டது.

இது நடந்து முடிந்து பல வருடங்கள் கழித்து தான் டிஸ்கவரி சேனலில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்கள். அந்த சிறுவன் அப்போது இளைஞனாக மாறி ஆரோக்கியமாய் இருப்பதைக் காட்டவும் செய்தார்கள்.

சக்கரவர்த்தியாவதும், ஒலிம்பிக்கில் கோப்பைகள் வாங்குவதும், கடும் நோய் குணமாவதும் கூட நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.

இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள்.

பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும்.

அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும். அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள்.

 அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்...

நெய்வேலியில் மக்களுக்காக களத்தில் இறங்கிய பாமக...


யார் தமிழர் ?


1956க்குமுன் வந்தவர்கள் எல்லாம் தமிழ்ர்களா?

அப்படியானால் சுமார் 250 அண்டுகளுக்கு முன் வியாபாரம் செய்ய வந்து பின் இந்தியாவை ஆண்ட சிறுபான்மை இனமான வெள்ளையர்களை நாம் ஏன் விரட்ட வேண்டும்.

500 ஆண்டுகளுக்கு முன் படை எடுத்து வந்து தமிழ்நாட்டை நாசம் செய்த வடுக வந்தேறிகளை மட்டும் இன்னும் தமிழர்களை ஆள விடவேண்டும் என்று சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா?

மேலும் அவர்களையும் தமிழர்களாக ஏற்கிறோம் என்று சொல்வதும் அயோக்கியத்தனம் இல்லையா?

வடுகனுக்கு ஒரு நியாயம், வெள்ளையனுக்கு ஒரு நியாயமா?

இதற்குப் பெயர் தமிழ்தேசியமா?
அல்லது பெரியாரியக்கமா?

வெள்ளையனே வெளியேறு என்றது சரியென்றால்... அந்நியனே வெளியேறு என்பதும் சரி தானே...

கண் பார்வை இல்லாத மாணவன் கோகுல் ராஜ் சிறந்த பாடகராக கின்னஸ் சாதனை படைத்த மாணவனுக்கு ஒரு வாழ்த்துக்கள்...


உன்னைப் புறக்கணித்து விட்டதாக ஏன் கதறுகிறாய்?


யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக் கொண்டுள்ளது.

சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?

இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.

உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்.

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன். அது மனதின் வேலை.

உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு.  நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.

எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.

சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.

சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது.  அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.

வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

இது மனதின் உயர்வு-தாழ்வு மனப்பான்மை என்ற குணத்தினால் விளைவது.

அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும் போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.

பிறரைத் தாழ்வாகக் கருதும்போ து உன்னை நீயே உயர்வாகக் கருதிக் கொள்கிறாய்.

உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.

சிறு புல்லும், பெருஞ் சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.

ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

தியானம் செய். இயற்கையை நேசி. 
வலிகள் மறையும்.

பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார். இது இயல்பே என எண்ணு.

வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை. அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய்...

இழப்பீடு கொடுத்தாலும் இனி அவர்கள் படப்போகும் இன்னல்கள் வலிகள் எவனுக்காவது தெரியுமா...?


தரங்கெட்ட தர்குறிகளின் செயல் ஒரு குடும்பத்தின் வாழ்வினை சிதைத்துவிட்டது...

இனியும் ஒரு கணமேனும் இவ்வாறு செயல்படாமல் இருக்க அத்துனை கயவர்களுக்கும் சரியான தண்டனை கிடைக்க வேண்டும்...

ஆரியத்தைத் தழுவியதால் தான் , அதாவது சமஸ்கிருதத்தை தமிழில் கலக்க அனுமதித்ததால் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற நீங்கள் பேசுகின்ற திராவிட மொழிகள் பிறந்தன...


ஆரியத்தை ஏற்றுக்கொண்டதால் தான் அம்மொழியினர் தங்களைத் திராவிடர்களாச் சொல்லிக் கொள்வதும் இல்லை.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆரியத்தை எதிர்துப் போராடியது தமிழினம் ஒன்று மட்டுமே.

தமிழர்கள் எந்தக்காலதிலும் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டதே கிடையாது.

அப்படியிருக்கும் போது பெரியார் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்,

தமிழர்களை என்றைக்குமே திராவிடர் என்ற மாயை உருவாக்கி ஆரியர்களிடம் அடிமையாக வைக்கவே திராவிடம் , திராவிடர் என்ற நச்சு விடத்தை தமிழர்களிடம் விதைத்தார்..

இதனை தமிழர்கள் உணரத் தொடங்கியதால் திராவிடர்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை எரிகிறது.

சிலரை சில நாள் ஏமற்றலாம்,
பலரைப் பலநாள் ஏமாற்றலாம்.
ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்றமுடியாது என்பதை திராவிடர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லையேல் தமிழர்கள் நாங்களே புரிய வைப்போம்...

ஆரியமும் திராவிடமும் ஒன்றே...


அன்பென்று கொட்டு முரசே — மக்கள்
அத்தனை பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் — இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால் 
-(பாரதி)...

வெளிநாட்டு ‘அறிஞர்களும், உள்நாட்டு அரசியல்வாதிகளும் செய்துவரும் பொய், பித்தலாட்ட, சூது, வாதுகளை அம்பலப்படுத்தவே இதை எழுதுகிறேன்.

ஆரிய-திராவிட வாதத்தை ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகாநந்தர் போன்ற பெரியோர்கள் உடைத்துத் தகர்த்து எறிந்த பின்னரும் சிலர் உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.

திராவிடர்கள் பிராமணர்களே. பிராமணர்கள் திராவிடர்களே.

திராவிடர்கள் யார்?

தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன..

ஆதி சங்கரர் என்ற உலகம் வியக்கும் தத்துவ வித்தகரைப் பற்றித் தமிழ் அறிஞர்களும் வடமொழி அறிஞர்களும் ஒரு கருத்தை தயங்காமல் ஒத்துக் கொள்கின்றனர். அவர் காலத்தைக் கணிக்க முக்கியச் சான்றாகவும் அதைக் கருதுவர். அவர் எழுதிய சௌந்தர்ய லஹரி (அழகின் பேரலைகள்) என்னும் சம்ஸ்கிருதக் கவிதையில்/ துதிப்பாடலில் ஒரு இடத்தில் “திராவிட சிசு” என்ற ஒரு குறிப்பு வருகிறது. யார் இந்த திராவிடக் குழந்தை (சிசு)?

சிலர் இதை திருஞான சம்பந்தர் பற்றி ஆதிசங்கரர் குறிப்பிட்டது என்று சொல்லுவர். இதனால் ஆதி சங்கரரை சம்பந்தருக்குப் பின்னாலுள்ள காலத்தில் வைப்பர். இது உண்மையானால் “திராவிட” என்பது ஒரு பார்ப்பனச் சிறுவனைக் குறிக்கிறது. அதாவது சம்பந்தரை. ஆக, திராவிட என்பது பிராமணரைக் குறிக்கும்!

நான் ஆதி சங்கரர் பற்றி எழுதிய கட்டுரையில் இது பின்னால் வந்த அபினவ சங்கரர் என்பவர், அவருக்கு மிகவும் முந்திய ஆதி சங்கரரைப் பற்றிக் குறிப்பிட்டதாக இருக்கலாம் என்று எழுதினேன். அல்லது ஞான சம்பந்தர் எல்லா இடங்களிலும் தன்னையே குறிப்பிடுவது போல ஆதி சங்கரரே தன்னை இப்படி “திராவிட சிசு” என்று குறிப்பிட்டிருக்கலாம் என்றும் எழுதினேன். இந்த மூன்று விளக்கங்களில் எது சரியானாலும் திராவிட என்பது ஒரு பிராமணச் சிறுவனைக் குறிக்க பயன்படுத்தப் பட்டதே. சங்கரனும் சம்பந்தரும் பிராமணர்களே!

கிரிக்கெட் ஆடும் திராவிடன்...

கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராகுல் திராவிட் ஒரு மராட்டிய பிராமணர். இவருக்கு ஏன் திராவிட அடைமொழி வந்தது?

ஏனெனில் இவர் ஒரு தெற்கத்திய பிராமணர்.

கர்நாடகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை குடியேறிய தெற்கத்திய பிராமணர்களை இப்படி அழைப்பர் (மேல் விவரங்களை விக்கி பீடியாவில் காண்க) இதே போல பாண்டிய நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்களை குஜராத்தில் பாண்டியா என்று அழைப்பர். சோழ நாட்டுப் பிராமணர்களை சோழியர் என்று அழைப்பர். இதில் ஒரு முக்கிய விஷயமும் அடங்கி இருக்கிறது. பிராமணர்கள் வடக்கிலிருந்து வரவில்லை. தெற்கிலிருந்து நேபாள காத்மண்டு கோவில் வரை சென்று அர்ச்சகர் பதவியை ஏற்றனர். இலங்கை மகாவம்சம், இலங்கைப் பார்ப்பனர் பற்றிப் பேசும்.

இதைச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், உண்மை இப்படி இருக்க, கடந்த நூறு ஆண்டுகளில் மதத்தைப் பரப்ப வந்தவர்களும், ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களும், ஆங்கிலேய ஆட்சிக்கு நிரந்தர சிம்மாசனம் கொடுக்கவேண்டும் என்று கட்சி நடத்தியவர்களும் “திராவிட “ என்ற சொல்லில் எவ்வளவு “விஷத்தைக்” கலந்து அர்த்தத்தை அனர்த்தமாக்கி விட்டார்கள் என்பதைக் காட்டத்தான்.

உண்மையில் ஆரிய என்ற சொல் பாண்பாடுமிக்க கனவான் என்றும் திராவிட என்பது தெற்கிலிருந்து வந்தவன் என்ற பொருளிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அதில் விஷத்தைக் கலந்து திராவிடன் ஒரு சப்பை மூக்கன், குட்டையன், சுருட்டை முடியன், ஆண்குறியை (லிங்கம்) வழிபடுபவன், சிந்துவெளியிலிருந்து ஓடிவந்த கோழை என்றெல்லாம் சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காரர்களும் வெள்ளைக்காரர்களும் எழுதி வைத்து விட்டார்கள்..

இன்னும் சிலர் அகத்தியர் பெயரில் கதை அடித்துள்ளனர். அகத்தியர்தான் பிராமணர்களை தெற்கே அழைத்துவந்தவர் என்றும்.. அது சரியல்ல.

உண்மையில் புறநானூற்றுக்கு உரை எழுதியோர் 18 குடி வேளிரை, அவர் தெற்கே அழைத்துவந்ததாக எழுதியுள்ளனர். கோயபெல்ஸ் என்பவன் ஒரு பொய்யை பத்து முறை சொன்னால் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்று சொல்லி ஹிட்லருக்கு பக்க பலமாக நின்றான். இங்கோ வெளி நாட்டு, உள்நாட்டு தேச விரோதிகளும் மத விரோதிகளும் தமிழ் ,சம்ஸ்கிருத நூல்களில் இல்லாத விஷயங்களை உண்மைபோல நூறு முறை எழுதியுள்ளனர்.

திராவிடாசாரியா...

அ.சிங்காரவேலு முதலியாரின் அருமையான நூல் ‘’அபிதான சிந்தாமணி’’, இன்னும் பல செய்திகளத் தரும்...

பஞ்ச திராவிட என்ற சொற்றொடருக்கு சிங்காரவேலு முதலியார் தரும் விளக்கம்: கன்னடம், தெலுங்கு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கூர்ஜரம் என்னும் தேசத்துப் பிராமணர். கன்னடம், மைசூர் முதல் கோகொண்டா வரை; தெலுங்கு, காளத்தி முதல் கஞ்சம் வரை; மகராஷ்டிரம், கோல்கொண்டா முதல் மேற்குக் கடல் வரை; கர்நாடகம் (தமிழ்), கன்யாகுமரி முதல் காளத்தி வரை; கூர்ச்சரம், குசராத், முதல் டில்லி வரையிலுள்ள தேசங்களாம்.

(இந்த அற்புதமான விளக்கம், பஞ்ச திராவிடர் என்பது பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதைக் கட்டுகிறது. கர்நாடக சங்கீதத்தை ஏன்”கர்நாடக” என்று சொல்கிறோம் என்பதையும் விளக்குகிறது)

அபிதான சிந்தாமணி வழங்கும் மேலும் பல விளக்கங்கள் இதோ...

திராவிடாசாரி என்பவர் வேதாந்த சூத்திரத்துக்குப் பாஷ்யம் செய்தவர். இவர் ஆதி சங்கரருக்கும் முன்னதாக அத்வைத கொள்கையைப் பரப்பியவர். இவரும் பிராமணரே.

திராவிடபூபதி என்பவன் அகத்தியர் கால திராவிட அரசன்.

திரவிடன் என்பவன் சூர்ய வம்சத்தரசன்

திவ்யப் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்பர்.

நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையில் கி.மு 1320ல் ஆண்ட திராவிட ராணி குறித்து எழுதி இருக்கிறேன்.

தெலுங்கு பிராமணர்களில் ஒரு பிரிவினருக்கு திராவிட என்ற ஜாதிப் பெயர் உண்டு. ஆக திராவிட என்பது பூகோளப் பெயரே அன்றே இனப் பெயர் அல்ல. தெற்கே பேசிய பாஷையை — திராவிட பாஷை என்று அழைத்தனர். அது தமிழாகவும் இருக்கலாம், தெலுங்காகவும் இருக்கலாம்.

தென் இந்தியாவில் இருந்து வடக்கே போன எல்லோரையும் மதறாசி ( மெட்ராஸ்காரன் ) என்று வடக்கத்தியர் சொல்லுவர். ஆனால் அவர்களில் பலர் தெலுங்கர், மலையாளிகள், கன்னடக்காரரகள்.. இது போலத் தான் திராவிடன் என்பதும்.

தமிழ் நாடு — திராவிடநாடு அல்ல...

இதைவிட வியப்பான மற்றொரு செய்தியும் நமது இலக்கியங்களில் உள்ளது. ஆதி காலத்தில் திராவிடத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை..

இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை.

இந்தியாவில் இருந்த 56 தேசங்களில் சேர, சோழ, பாண்டிய, கேரள, கொங்கண தேசங்களுக்குப் பின்னர் திராவிட என்றும் ஒரு தேசம் குறிப்பிடப்படுகிறது. ஆக இது தமிழ்நாட்டின் பகுதி அல்ல. பழங்கால தேசப்பட புத்தகங்களிலும் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் காட்டப்பட்டிருக்கிறது. தெலுங்கு தேசத்தில் ஒரு சிறிய பகுதிக்கு இப்படி பெயர் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் தோண்டத் தோண்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

நம்முடைய தெலுங்கு, கன்னட, மலையாள அரசியல்வாதிகள் (மேனன்கள், நாயக்கர்கள்) தமிழ் நாட்டில் உட்கார்ந்துகொண்டு “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லோரையும் ஏமாற்றுகையில் அழுவதா, சிரிப்பதா? என்று தெரியவில்லை.

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?

தமிழ் என்பதே திராவிடம் என்று மாறியது (தமிழ்=த்ரமிள=த்ரவிட=த்ராவிட) என்றும் இல்லை, இல்லை, த்ராவிடம் (த்ராவிட=த்ரவிட= த்ரமிள = தமிழ் ) என்பதிலிருந்தே தமிழ் வந்தது என்றும் முட்டி மோதிக் கொள்ளும் ஆராய்ச்சியாளர்களும் உளர்..

தில்லான் என்னும் வடக்கத்திய பெயர் பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான விளக்கத்தைக் கூறியுள்ளார்: த்ரிலிங்க தேசம் (தெலுங்கு) என்னும் இடத்திலிருந்து வடக்கே சென்றவர்கள் தில்லான் (த்ரிலிங்கன்) என்று அழைக்கப்பட்டனர் என்பார்.இதே போல தெற்கிலிருந்து சென்ற பிராமணர்களுக்கு திராவிட் — என்று பெயர்.

திராவிட என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் கிடையாது. ஆனால் ஆரிய என்ற சொல் சங்கத் தமிழ் நூல்களிலேயே ஏழு இடங்களில் வருகிறது. இனத்தைக் குறிக்கும் பொருள் யாங்கனும் இல்லை.

பிராமணர்கள் மட்டுமே திராவிடர்கள் என்று சொல்லவில்லை.

திராவிட என்பது தெற்குத் திசையை மட்டுமே குறிக்கும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கவந்த சொல் இல்லை, இல்லவே இல்லை என்று சொல்லவே இவ்வளவும் எழுதினேன்...

திட்டமிட்டு மறைக்கப்பட்டது தமிழர் வரலாறு என்பதற்கு ஓர் சிறந்த சான்று இது...


இயற்கை...


தினமும் உங்கள் வீட்டில் அல்லது எதோ ஓர் இயற்கைக்கு காலை வணக்கம் செலுத்துங்கள் தினமும் முடிந்தால் அரவனைத்து கொள்ளுங்கள்...

ஓர் மனிதனுக்கு செலுத்தும் அன்பு போல்.. ஒருநாள் உணர்வீர்கள்..

நீங்கள் வருவதை பார்த்து மரங்கள் ஆடுவதை கண்களால் பார்ப்பீர்கள்...

உங்களின் உடலில் அவைகளின் அரவனைப்பை உணர்வீர்கள் மெல்ல மெல்ல...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


இராமாயணம் குறைந்தது 5000 ஆண்டுகளுக்கு இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பேசப்படுகிறது. ஆரம்பத்தில் எழுதப்பட்ட நூல் கி.மு. 500  வரை தொடர்கிறது, வால்மிகியால் எழுதப்பட்ட காவியத்தின் தோற்றம் இந்தியாவிலும் இந்து மதத்திலும் உள்ளது, ஆனால் பல நூற்றாண்டுகளாக இந்தக் கதை கடல் மற்றும் மலை, மொழிகள் மற்றும் மதங்கள், கிரகங்கள் கடந்து சென்றுக் கொண்டுதான் உள்ளது..

சீனா, ரஷ்யா, ஜாவா, தாய்லாந்த், இந்தோனேசியா, கம்போடியா, அவுஸ்திரேலிய, ஐரோப்பா, அமெரிக்க என அனைத்து நாடுகளிலும், சித்திரங்களிலும், சிற்பங்களிலும், நடனங்களிலும், நாடகங்களிலும், உலகம் முழுவதும் சடங்காகவும் செயல்படுகிறது. ஒவ்வொரு கதையுடனும் ஒவ்வொரு பார்வையாளர்களும் தங்கள் கலாச்சாரங்களுக்கு ஏற்ப்ப கதையை மறுபதிவு செய்கிறார்கள். ராமாயணம் இன்றும் ஒரு வாழ்வியல் கலைதிறன் பாரம்பரியம் தான்.

சரி எகிப்தில் உள்ள  இராமயணத்தை பார்ப்போம்;

எகிப்து என்பது அஜ்மதியிடம் இருந்து வந்த பெயர், இது ராமரின் முன்னோரின் ( Grand Father ) பெயராகும். எகிப்தில் பல்வேறு புராணங்களை ஆய்வு செய்தால் அங்கு தசரதன் பற்றிய குறிப்புகளைக் காணலாம். #Ramesses எகிப்தின் பழங்கால ஆட்சியாளர்கள் ரமேஸிஸின் வம்சங்கள், சமஸ்கிருத மொழியில் "ராம் ஐசுஸ்," எனப் பொருள்படுகிறது. பின் அவரின்  வழித்தோன்றல்களாகவே ரமேஸிஸ் 1,2,3 இருந்தனர்.

உலகம் முழுவதும் அறிஞர்கள் கி. மு.1400 இல். இந்தியா மற்றும் எகிப்து இடையே இணைப்பு பற்றி ஆய்வு செய்துள்ளனர். மித்திரனி ராஜா தசரதர் தனது மகளை எகிப்திய அரசரான ராம்ஸேசுக்கு திருமணம் ச
கொடுத்த பிறகு, 10 கடிதங்களை எழுதினார் (அமர்னா கடிதங்கள் போன்ற அனைத்து கலைக்களஞ்சியங்களிலும் இது கிடைக்கிறது). துஷிர்த்தா / தசரதா தற்போதைய சிரியாவை ஆட்சி செய்த அரசர், அவருடைய பெயர் மற்றும் அவரது முன்னோடி பெயர்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. அவர்கள் இந்தியாவில் இருந்ததை உறுதிப்படுத்துவதற்காக ஹிதி மற்றும் ஒரு குதிரை கையேடு சமஸ்கிருத எண்கள் கொண்ட ஒரு உடன்படிக்கையில் வேத கடவுள்களின் மித்ரா, வருணா, இண்ட்ரா மற்றும் நசத்யா (அஸ்வினி தேவாஸ்) ஆகியவற்றிற்கு ஒரு கல்வெட்டு உள்ளது.

எகிப்திய பாரோக்களில் பலர் வைஷ்ணவர்களும் இருந்தனர்.
எகிப்திய அரசர்களின் சூரிய வழிபாடு பிராமணர்கள் சண்டையதந்தனையைப் போலவே தோன்றுகிறது. சூரியனை எதிர்கொள்ளும் ஒரு நாளைக்கு பிராமணர்கள் அதை மூன்று முறை செய்கிறார்கள். எகிப்திய ராஜாக்கள் அதே வழியில் சூரியனை வழிபட்டார்கள். எகிப்திய முதல் மாமன்னர் ராமர்,  ரமேஸ்ஸு எனவும் அழைக்கப்பட்டார். ஸ்ரீ ராமர் எகிப்தில் உலகளாவிய புகழ்பெற்ற ஒரு ராஜாவாக இருந்ததால், சர்வ வல்லமையுள்ள அவரை எகிப்திய மக்கள் கடவுளாக வணங்கினர். பூர்வ எகிப்தியர்கள் தங்களது ஆட்சியாளர்களை கடவுளின் அவதாரங்களாகவே கருதினர்.

பிரபலமான எகிப்திய ராணிகளில் சித்தமென் என்ற ராணி ஒருவர் இருந்தார். பெயரை கேட்டவுடன் சீதையின் நினைவுவருகிறதா.
Sitamun: அவள் ஒரு இளவரசி,
எகிப்திய மித் அண்ட் லெஜண்ட் என்ற புத்தகத்தில் பக்கம் 368 இல்  ஒரு எகிப்திய மன்னரின் உடை அணிந்து ஒரு மனிதனின் சிலை, நடைமுறையில் உள்ள வைஷ்ணவ திலகம், நெற்றி, கைகள் மற்றும் மார்பு பகுதிகளில் உள்ளது. மேலும் சந்தனப் பெட்டி ஒன்றையும் கைகளில் ஏந்தி உள்ளார். இந்தியாவில் வைஷ்ணவ பிரிவினர் தெய்வீகக் கொள்கையில் பயன்படுத்துகிறது போலவே உள்ளது சிலை. அதேபோல புத்தகம் 'லாங் மிஸ்ஸிங் லிங்க்ட்ஸ்' மெம்பிஸ் ஃபாரோவின் சிலையிலும் வைஷ்ணவ திலகம் இருப்பது வெளியிடப்பட்டுள்ளது.

எகிப்திய கடவுள் அமுன், கான்சு மற்றும் மட். அமுன் (ராமன்), மட் / (சீதா மனைவி) மற்றும் கன்சு, முறையே ராம, சீதா மற்றும் லட்சுமணா ஆகியோருடன் தொடர்புடையதாகவே தெரிகிறது.
பண்டைய எகிப்திய நாகரிகத்தில், அமுன் சூரிய-கடவுள் ராவுடன் தொடர்புடையவர், எனவே அவர் அமுன் ரா (ராமன் எனப் பெயரில் அழைக்கப்படுகிறார்) அனைத்து உலகின் எல்லா உயிரினங்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலான சக்திவாய்ந்த படைப்பாளியாக இருந்தார். அவர் மிகவும் இரக்கமுள்ளவராகவும், துன்பத்தில் உள்ள ஏழைகளின் குரலுக்கு  எப்போதும் வருபவர் எனவும் பாராட்டப்பட்டார்.

அமுன்-ரா கழுகு அல்லது கருடன் அவரது தலையில் சின்னம், மற்றும் அவரது பாதங்களில் இருந்து வெளிவரும் ஒரு "புனித நதி" சரயு. அமுன் ராம் தெய்வங்களுள் அரசர், காற்றின் கடவுளின் தலைவனாகவும், அதேபோல் இந்து மதத்தில் மட்டுமல்லாமல் ஸ்ரீ ராமர் உலகெங்கிலும் (கடவுள்களின் உயர்ந்த மன்னனாகவும், ஹனுமானின் இறைவனாகவும்) காற்று கடவுளின் மகனாகவும் சித்தரிக்கப்படுகிறார்). மற்றும்
எகிப்து ஹதோர் கோயில். இந்த கோவிலின் கூரை மற்றும் சுவர்கள் பல கட்டமைப்புகள் மற்றும் ஓவியங்கள் உள்ளன. இவைகளில்
குரங்கு மனிதர்களை போன்ற சித்திர செதுக்கல்கள், மனித உடல்களோடு கூடிய கரடி, கழுகு போன்றவை. அனைத்தும் வால்மீகி ராமாயணத்தில் வரும் விலங்கினங்களை போன்று  காணப்படுகின்றன.

இந்த உலகில் படைப்பாளரான பிரம்மா, பூமியில் ராமனுக்கு உதவியாக, ஆற்றலை மனிதர்களை அனுப்பும் படி கட்டளையிட்டார். அவர்கள் வானராஸ், ரிக்ஷாஸ் (ஜம்புவான் ரிக்ஷா-ராஜா) போன்ற சில புதிய இனங்களை மரபணு ஆகும், வலிமைமிக்க உடலமைப்பு மற்றும் சூப்பர் மனித சக்தி + நீண்ட போர்களில் போராடும் வானரங்கள் ஆகும். வானரா என்பது வன-வசிப்பாளராகவும் விவரிக்கப்படலாம்.

ராமாயணத்தின் சுக்கிரீவர், உலகம் முழுவதும் இருந்த வானாரங்கள் அனைத்தையும் உதவிட உத்தரவிட்டார்.  எகிப்திலிருந்து சிலர் வந்திருக்க வேண்டும். அவர்கள் தங்கள் நாட்டின் ராஜாவிற்காக போரிட்டிருக்க வேண்டும். சில உயிர் பிழைத்தவர்கள் அங்கு குடியேறி இருக்க வேண்டும், சில காலம் தங்களுடைய இனம் தொடர வழிவகுத்திருக்க வேண்டும்.

எகிப்தில் குறைந்தபட்சம் பதினேழு ராஜாக்களுக்கு ராம்ஸஸ் என்பது ஒரு பட்டப்பெயர் ஆகும். அவைகள், 1932 இல் காஞ்சி பரமாச்சாரிய ஸ்வாமிஜி வேத விரிவுரையில், இப்பெயர்கள் ராமாயணத்தின் ராமனின் பெயர் என்று குறிப்பிட்டுள்ளார்...

முட்டாள்த்தனமான முட்டாள்களின் உரையாடல்களை தவிர்த்தாலே பல சச்சரவுகளை தவிர்க்கலாம்...


அதுக்காக கண்டதையும் பாத்துட்டு பொருத்துக்க வேணாம்...

மனிதனுக்கு வரும் 4 கண்டங்கள் விளக்குகிறார் திருமூலர்...


மனிதன் வாழ்நாள் காலத்தில் 4 விதமான உயிர் போகும் கண்டத்தை சந்திக்கிறான். அதை பற்றி திருமூலர் தெள்ள தெளிவாக விளக்குகிறார்...

“அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சும்
மூன்றும்,
மொழிகின்ற முப்பத்து மூன்றுஎன்பது ஆகும்
கிழிகின்ற காலஅறு பத்திரண்டு என்பது
எழுகின்றது ஈரைம்பது எண்அற்று
இருந்தே” (திம 742)

பொருள்:

முதல் கண்டம்: 25 - 28 வயது வரை (இந்த
கால கட்டத்தில் தான் மனது அலைபாயும்  காலகட்டம். மனிதன் உடம்பை பேண மாட்டான். காம இச்சை மிகுந்திருக்கும். முதியோர்களை மதியா தன்மை இருக்கும்).

இரண்டாம் கண்டம்: 30 - 33 வயது வரை (இந்த கால கட்டத்தில் குடும்ப பாரம் மிகுதியால் உடலை பேண மாட்டான். மனம் எப்போதும் கணத்திருக்கும், வாழ்க்கை பற்றி பயம் கலந்த சிந்தனை மிகுதிருக்கும்).

மூன்றாம் கண்டம்:  60 - 62 வயது வரை (இந்த காலகட்டத்தில் மனிதனுக்கு தனது
சந்ததியினர் குறித்த கவலைகள் மேலோங்கி இருக்கும். முதுமை குறித்த பயம் இருக்கும், ஆளுமை தன்மை மேலோங்கி இருக்கும் அதனால் ஏற்படும் அழுத்த காரணத்தால் தனது உடலை பேண மாட்டான்).

நான்காம் கண்டம்: மேல் கூறிய 3 கண்டங்களை ஒரு மனிதன் கடந்து விட்டால் தீர்க்க ஆயுள் பெறுவதற்கு சித்தி உண்டு. இதற்கு மேல் எல்லை இல்லை.

இதைத் தான் இன்றைய அறிவியல் அறிஞர்கள். Human Life Cycle Psychology என்கின்றனர்...