மனிதன் வாழ்நாள் காலத்தில் 4 விதமான உயிர் போகும் கண்டத்தை சந்திக்கிறான். அதை பற்றி திருமூலர் தெள்ள தெளிவாக விளக்குகிறார்...
“அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சும்
மூன்றும்,
மொழிகின்ற முப்பத்து மூன்றுஎன்பது ஆகும்
கிழிகின்ற காலஅறு பத்திரண்டு என்பது
எழுகின்றது ஈரைம்பது எண்அற்று
இருந்தே” (திம 742)
பொருள்:
முதல் கண்டம்: 25 - 28 வயது வரை (இந்த
கால கட்டத்தில் தான் மனது அலைபாயும் காலகட்டம். மனிதன் உடம்பை பேண மாட்டான். காம இச்சை மிகுந்திருக்கும். முதியோர்களை மதியா தன்மை இருக்கும்).
இரண்டாம் கண்டம்: 30 - 33 வயது வரை (இந்த கால கட்டத்தில் குடும்ப பாரம் மிகுதியால் உடலை பேண மாட்டான். மனம் எப்போதும் கணத்திருக்கும், வாழ்க்கை பற்றி பயம் கலந்த சிந்தனை மிகுதிருக்கும்).
மூன்றாம் கண்டம்: 60 - 62 வயது வரை (இந்த காலகட்டத்தில் மனிதனுக்கு தனது
சந்ததியினர் குறித்த கவலைகள் மேலோங்கி இருக்கும். முதுமை குறித்த பயம் இருக்கும், ஆளுமை தன்மை மேலோங்கி இருக்கும் அதனால் ஏற்படும் அழுத்த காரணத்தால் தனது உடலை பேண மாட்டான்).
நான்காம் கண்டம்: மேல் கூறிய 3 கண்டங்களை ஒரு மனிதன் கடந்து விட்டால் தீர்க்க ஆயுள் பெறுவதற்கு சித்தி உண்டு. இதற்கு மேல் எல்லை இல்லை.
இதைத் தான் இன்றைய அறிவியல் அறிஞர்கள். Human Life Cycle Psychology என்கின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.