18/10/2018

மாவீரன் வீரப்பனார் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு அஞ்சலி...


வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி
இன்னொரு தோளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

வீரப்பன் யானைத் தந்தந்களை கடத்திய போது இந்திய அரசால் கொல்லப்படவில்லை.

வீரப்பன் சந்தன மரங்களை வெட்டியபோதும் இந்திய அரசால் கொல்லப்டவில்லை.

வீரப்பன் பொலிசாரைக் கொன்றபோதும்கூட இந்திய அரசால் கொல்லப்படவில்லை.

ஆனால் வீரப்பன் தமிழ்நாடு விடுதலையை முன்வைத்ததும் உடனடியாக இந்திய அரசால் சதி செய்து கொல்லப்பட்டார்.

தமிழ்நாடு விடுதலையை முன்வைக்கும் பலர் உயிரோடுதானே இருக்கிறார்கள். அப்படியிருக்க வீரப்பனை மட்டும் கொன்றார்கள் என்று எப்படி சொல்ல முடியும்?

உண்மைதான். நல்ல கேள்விதான். இதற்கு காரணம் வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கியே.

வீரப்பனின் துப்பாக்கி யானைகளை சுட்டுக் கொன்ற போது இந்திய அரசு கவலை கொள்ளவில்லை.

வீரப்பனின் துப்பாக்கி பொலிசாரை சுட்டுக் கொன்றபோதும்கூட இந்திய அரசு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் வீரப்பன் துப்பாக்கி தமிழ்நாடு விடுதலைக்காக சுடப் போகிறது என்று அறிந்ததும் உடனடியாக இந்திய அரசால் கொல்லப்பட்டார்.

தோழர் தமிழரசன் தமிழ்நாடு விடுதலைக்காக துப்பாக்கி ஏந்திப் போராடியதாலேயே அவரும் இந்திய அரசால் சதி செய்து கொல்லப்பட்டார்.

கொலைகாரன், கொள்ளைக்காரன், கடத்தல்காரன் என்று அழைக்கப்படும் வீரப்பன் முன் வைத்த கோரிக்கைகள் சில,

(1) 10ம் வகுப்புவரை தமிழ் வழிக் கல்வி வேண்டும்

(2) வாசாத்தியில் பாதிக்கப்ட்ட பெண்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்

(3) தடா சட்டத்தில் அடைக்கப்பட்ட அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்

(4) பெங்களுரில் மூடப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறக்க வேண்டும்

(5) காவிரி பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்...

ஆயுத பூஜை வந்த வரலாறு...


தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாப்படும் நிலையில் இந்த விழாவுக்கான பெயர் சூட்டப்பட்டதன் வரலாறு மிகவும் சுவாரஷ்யமானது.

பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்றது நம் அனைவருக்கும் பரிட்சியமே.

நாடு இழந்து, பெருமை இழந்து, வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தடியில் மறைத்து வைத்திருந்தனர்.

பின்னர் 14 வருட வனவாசத்திற்கு பிறகு நாடு திரும்பிய பாண்டவர்கள், அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.

அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு “ஆயுதபூஜை” எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

ஆயுத பூஜை எதற்காக?

ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது எனலாம்.

உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம்.

ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

நாம் செய்ய வேண்டியது..

ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமே...

யார் திராவிடன்...


கற்ப மூலிகை வேப்பிலை...


உடலை என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் அற்புத சக்தி படைத்தவை தான் கற்ப மூலிகைகள்.

நரை, திரை, மூப்பு என்ற மூன்றையும் அணுகவிடாமல் தடுக்கும் குணம் கற்ப மூலிகைகளுக்கு உண்டு.

இந்த இதழில் வேப்பிலை என்னும் கற்ப மூலிகையைப் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே நம் மூதாதையர்கள் வேப்பிலையை உட்கொள்ளும் பொருளாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். அப்படி உபயோகிப்பதில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் கருத்தரித்த தாய்மார்களும் கருத்தரிப்புக்காக காத்திருப் போரும் இதை உட்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

2005ம் ஆண்டு ஆய்வாளர்கள் வெளியிட் டுள்ள அறிவியல் ஆய்வறிக்கையில் வேப்பிலையின் மருத்துவக் குணங்கள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. கீழ்கண்ட மருத்துவக் குணங்கள் வேப்பிலையில் நிறைந்துள்ளது.

1. நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்குதல் (Immunomodulatory).

2. வீக்க உருக்கி (anti inflammatory).

3. ஆண்டி ஹைப்போகிளைசிமிக் (anti hypoglycemic).

4. குடல் புண்ணகற்றி (Anti-ulcer).

5. மலேரியா போக்கி (Anti malarial).

6. பூஞ்சை நோய் நீக்கி (Anti fungal).

7. பாக்டீரியா அகற்றி (Anti bacterial).

8. வைரஸ் அகற்றி (Anti viral).

9. ஆண்டி ஆக்சிடென்ட் (Anti oxidant).

10. புற்றுநோய் தடுப்பு (Anti cancerous).

வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் Azadirachtia, nimbidiol, nimbidin போன்ற வேதிப் பொருட்கள் இதுவரை பகுக்கப்பட்டுள்ளன.

வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர்.

வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.

நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.
வேப்பிலையை பயன்படுத்தும் முறை

புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.

வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.

வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.

வேப்பிலையின் பொதுவான பயன்கள்...

வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.

சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.

சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.

வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

வேப்பிலையின் தொழிற்சாலை உபயோகங்கள்...

விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.

அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

இந்திய மருத்துவத்தில் வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுகிறது.

வேப்பிலையின் மருத்துவக் குணங்கள்
சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச் சாறுக்கு உண்டு.

வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும். காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.

பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலையைப் பயன் படுத்துகின்றனர்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


ஆய கலைகள் அறுபத்து நான்கு...


அன்று தமிழன் வாழ்ந்து காட்டி விட்டுச் சென்ற வாழ்கையைத் தான், அறிவியல் கண்டுபிடிப்புகள் என இன்றைக்கு தினமும் ஒன்றாய் விஞ்ஞானம் தந்து கொண்டு உள்ளது.

இன்றைக்கு நாம் இந்த அறுபத்து நான்கையும் கற்க முடியாது என்றாலும், இதன் பெயரும் அது எதற்காக பயன்பட்டது என்பதையாவது தெரிந்து
கொள்வோமே...

ரெய்க்கி மருத்துவம்...


ரெய்க்கி மருத்துவம் எந்தக் தொந்தரவும் தராது...

எனவே தினமும் புது வலுவைப் பெறவும் நோய்கள் விரைந்து குணமாகவும் ரெய்க்கி என்னும் மேஜிக் மருத்துவம் கற்றுக் கொள்வது நல்லது.

ரெய்க்கி : சில சுவையான செய்திகள்..

திபெத் நாட்டில் தோன்றிய முறை இது. ஜப்பான் வழியாக – 19 ஆம் நூற்றாண்டிலிருந்து எல்லா நாடுகளிலும் இது பரவிவிட்டது.

ரெய் என்ற ஜப்பானிய வார்த்தைக்கு எங்கும் நிறைந்துள்ள எல்லாவற்றையும் உள்ளடக்கிய (யுனிவர்சல்) என்று பெயர்.

கி என்ற வார்த்தைக்கு சக்தி என்று பெயர்.

இந்த இரு ஜப்பானிய வார்த்தைகள் இணைந்து ‘ரெய்க்கி’ ஆனது. எங்கும் நிறைந்து இயற்கைச் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளல் என்பது விரிவான விளக்கம்.

ரெயக்கி மருத்துவச் சிகிச்சைக்கு உபகரணங்கள் தேவை இல்லை.

ரெய்க்கி மருத்துவச் சிகிச்சைக்கு முன்பும் பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும். விதிகள் என்று ஏதுமில்லை. நீங்கள் ஓர் அலைவரிசைதான். தியானம் போல் ஒரே சிந்தனையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. டிவி பார்த்துக் கொண்டு கூட ரெய்க்கி செய்ய முடியும்.

ரெய்க்கி செய்யும் போது கைகளையும் கால்களையும் குறுக்கே வைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தங்க நகைகளை அதிகம் அணியக்கூடாது.

கியோட்டா நகரத்தின் மிகாவோ உஸ்யி என்ற டாக்டரே இந்த ரெய்க்கி மருத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பியவர்.

ரெய்க்கி கற்றுக் கொள்ளும் வரை தினமும் காலையும் மாலையும் கால்களை நன்கு அகற்றிக் வைத்துக் கொண்டு கைகள் இரண்டையும் அகல விரித்து தூக்கிக் கொண்டு நில்லுங்கள். ஒரு நீர் வீழ்ச்சியின் கீழ் இருப்பது போல கற்பனை செய்து கொள்ளுங்கள்.

கை விரல்கள் வழியாக இயற்கை சக்திகளும் தலை வழியாக நீர் வீழ்ச்சியும் நுழைந்து உங்கள் உடலில் உள்ள நோய்களை அழித்து கால்கள் வழியாக வெளியேற்றுவதாகக் கற்பனை செய்யுங்கள்.

நீங்கள் இயற்கை சக்தியைப் பெற்று ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் மாறி வருவதை ஒரு சில மாதங்களிலேயே கண்டு கொள்வீர்கள்...

பிளாஸ்டிக் பொருட்களுக்கு அடுத்த மாதம் முதல் தடை...


தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு...


தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி கடந்த 26-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உரையாற்றினார்.

இந்த நிலையில் கலவரத்தைத் தூண்டுதல், சாதி இன மொழி ரீதியாக மோதலை தூண்டுதல், இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கி மிரட்டும் தொனியில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வேல்முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்...

திராவிடர்களை விட இனவெறியர்களை தமிழ்நாட்டில் பார்க்க முடியாது...


பிராணாயாமம்...


நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய் எதிர்ப்பு தன்மையின்றியும் இருக்கிறது.

மேலும் நாம் குடிக்கும் குடிநீர். சுவாசிக்கும் காற்று. மண் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தும் கெட்டுள்ளது.

இவற்றின் மூலம் நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கினால் இரத்தம் கெடுகின்றன, இரத்தம் அசுத்தம் ஆவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோய்கள் உருவாகின்றன.

உலகம் என்பது பரந்து விரிந்துள்ளது, நாம் உலகத்தை சுத்தம் செய்ய முடியாது, நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கை சுத்தம் செய்ய முடியும்.

உடல் அழுக்கானால் எப்படி சோப்பு போட்டு குளிக்கின்றோமோ அதைப் போல் நம் உடலின் உள்ளே இருக்கும் உயிர்காற்றைக் கொண்டு பிராணாயாமம் என்னும் பயிற்சியின் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றோம்.

மேலும் பிராணாயாமப் பயிற்சியின் மூலம் இரத்தத்தின் ஓட்டமும் பிராணனுடைய இயக்கமும் உடல் முழுவதும் சரிசமமாக இயக்கப்படுவதால் அதிகப்படியான சக்தியையும். ஆற்றலையும் பெறுகின்றனர்.

இதனால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் கூடிய துடிப்பான உடல் இயக்கமும் இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கமும் ஏற்படுகிறது.

நோய் நொடிகள் இன்றி மாத்திரை மருந்துகள் இன்றி வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்விற்கு பிராணாயாமப் பயிற்சி வழி வகுக்கிறது...

சூயஸ் நிறுவனத்தினால் நமக்கு வரும் ஆபத்தை அறிய இவ்வீடியோவை பார்க்கவும்...


https://youtu.be/6RqrZMnIL4w

விழித்துக்கொள் தமிழகமே...

அடிப்படை உரிமைகள்...


அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொண்டு தான்...

நாம் இதை அரசாங்கம் நமக்கு கொடுத்த கருத்து சுதந்திரம் என தம்பட்டம் அடித்து கொள்கிறோம்..

இந்த கட்சி, அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்கலாம்.

ஆனால் இந்த அமைப்பின் அடித்தளத்தை எதிர்த்து ஒருபோதும் கேள்வி கேட்க முடியாது...

கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என திமுக கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...


அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌...

கடன் வேண்டுமானால் படுக்கைக்கு வா என அழைத்த மேனேஜர்.. நடுரோட்டில் செருப்பால் அடித்து போலீசில் ஒப்படைத்த பெண்...


கர்நாடக மாநிலம் தாவணகெரேவை சேர்ந்த பெண் ஒருவர் சுயதொழில் செய்வதற்காக தனியார் வங்கியில் ரூ 2 லட்சம் கடன் கேட்டிருந்தார். எனவே கடன் குறித்து பேச வேண்டும் என அந்த பெண்ணை மேனேஜர் தேவய்யா தனது வீட்டுக்கு அழைத்தார்.

அந்த பெண்ணும் கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மேனேஜரின் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்றவுடன் அவர் வீட்டின் கதவை சாத்தி தாழ்பாள் போட்டார். பின்னர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் கடன் கிடைக்கும் என்று கூறினார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மேனேஜரை தரதரவென வெளியில் இழுத்து வந்து நடுரோட்டில் உருட்டு கட்டையால் அடித்துள்ளார். மேலும் செருப்பால் அடித்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மேனேஜரை மீட்டு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள்...


மந்திர தியானம்...

அடுத்ததாக இன்னொரு எளிமையான, சக்தி வாய்ந்த தியானமான மந்திர தியானத்தைப் பார்ப்போம்.

மந்திரம் என்றால் அது இந்து மத தியானம் என்பது போல் ஒரு எண்ணம் தோன்றலாம். ஆனால் இது சர்வ மதத்தினரும், மதங்களைச் சாராதவர்களும், நாத்திகர்களும் கூட பின்பற்றக் கூடிய வகையில் அமைந்த தியானம் என்பதே உண்மை.

மந்திரம் என்பது சக்தி வாய்ந்த சொல் அல்லது சொற்றொடர். இந்த மந்திரங்களின் சக்தியை இந்தியர்களும் திபெத்தியர்களும் பண்டைய காலத்திலேயே நன்றாக அறிந்திருந்தார்கள்.

ஓம் என்கிற ஓங்காரத்தில் இருந்தே அனைத்தும் தோன்றின என்கின்றது இந்து மதம். ஓம் மந்திரமும் காயத்ரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களாக இந்துக்கள் கருதுகிறார்கள்.

ஆதியில் வசனம் இருந்தது. அந்த வசனமே தெய்வத்துடையதாக இருந்தது. அந்த வசனமே தெய்வமாக இருந்தது என்று பைபிள் கூறுகிறது. (In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. New Testament, John1:1-2)
அரபுக்கதைகளிலும் சில மந்திரச் சொற்கள் அற்புதங்களை நிகழ்த்துவதாகக் கூறுவதை நாம் படித்திருக்கிறோம். ஆக உலகமெங்கும் மந்திரங்களை சக்தி வாய்ந்தவை என பலரும் பல காலமாக அங்கீகரித்திருப்பதை நாம் உணரலாம்.

இந்த மந்திர தியானத்தில் மனதைக் குவிக்க ஒரு எளிய சொல் அல்லது மந்திரம் உபயோகப்படுத்தப் படுகிறது.

ஒரு காலத்தில் அது குருவால் தரப்படும் இரகசியச் சொல்லாக இருந்தது. அது நாமாகத் தேர்ந்தெடுக்கும் சொல்லாக இருந்ததில்லை. குரு மூலம் பெறும் அந்த சொல்லிற்கு மிகுந்த சக்தி இருப்பதாக நம்பப்பட்டதால் அந்த மந்திர தியானம் சக்தி வாய்ந்ததாக கருதப்பட்டது. அன்றும் இன்றும் பிரபலமான தியான முறைகளில் ஒன்றாக இது இருந்து வருகிறது.

மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானத்திலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு மந்திரம் தியானத்திற்காகத் தரப்படுகிறது. தியானத்தின் போது அந்த மந்திரச்சொல்லில் முழுக்கவனத்தையும் வைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

மந்திர தியானம் மதங்களைக் கடந்து பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு ஒரு சுவையான உதாரணத்தைச் சொல்லலாம்.

ஜான் மெய்ன் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த கத்தோலிக்க ஐரிஷ் பாதிரியார் இரண்டாம் உலகப் போரின் போது அரசுப்பணியில் மலாயாவிற்கு அனுப்பப்பட்டார். அப்போது கோலாலம்பூரில் ஒரு ஆசிரமம் நடத்தி வந்த ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதியை சந்தித்த போது ஆன்மிக விஷயங்களைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதி தியானங்கள் பற்றி விவரித்தது ஜான் மெய்னை மிகவும் கவரவே தங்கள் மதத்திற்கேற்ப தியானம் செய்ய முடியுமா என்று அவர் ஸ்வாமியைக் கேட்டார்.

தியானம் மதங்களைக் கடந்தது என்று சொன்ன ஸ்வாமி ஜான் மெய்னுக்கு ஒரு கிறிஸ்துவ புனித வார்த்தையை உபதேசம் செய்து அந்த மந்திரத்தின் மீது தினமும் இருமுறை தியானம் செய்யச் சொன்னார். அந்த மந்திர தியான முறையையும் ஸ்வாமி அவருக்குச் சொல்லித்தந்தார். அவர் சொல்லித் தந்தபடியே தியானத்தை செய்த ஜான் மெயின் வாரா வாரம் ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதியின் ஆசிரமத்திகே வந்து அந்தத் தியானத்தை ஸ்வாமியுடன் சேர்ந்து செய்தார். அதனால் சிறப்பான ஆன்மிக அனுபவத்தைப் பெற்றதால் ஜான் மெயினின் ஆன்மிக வாழ்க்கையின் அங்கமாக அந்த தியானம் மாறியது.

இங்கிலாந்து திரும்பிய பின்னர் அந்த தியானத்தைத் தொடர்ந்த ஜான் மெய்ன் அவரது தலைமை பாதிரியாரிடமிருந்து எதிர்ப்பை சந்தித்தார். இந்த தியான முறை கிறிஸ்துவ சம்பிரதாயத்திற்கு எதிர்மாறானது என்று தலைமை பாதிரியார் தடுத்தார். சிறிது காலம் அந்த தியான முறையை நிறுத்திக் கொண்ட ஜான் மெய்ன் ஏதோ இழந்தது போல் உணர்ந்தார். பின் கிறிஸ்துவ நூல்களை ஆழமாகப் படித்த போது மிகப் பழைய காலத்தில் இது போன்ற தியான முறை கிறிஸ்துவர்களிடமும் இருந்தது என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தார்.

பலரிடமிருந்து வந்த கடும் விமரிசனங்களைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தான் கடைப்பிடித்து வந்த தியானத்தைத் தொடர்ந்த ஜான் மெய்ன் தனது தியானத்திற்கு ’கிறிஸ்துவ தியானம்’ என்று பெயரிட்டு பரப்பினார்.

1982ல் அவர் மறைந்தாலும் கிறிஸ்துவ தியானம் பல நாடுகளில் பிரபலமாகி பின்பற்றப்பட்டு வருகிறது.

இப்படி மந்திர தியானம் உலகில் பல வடிவங்களில், பல மதத்தினரால், பல பெயர்களில் இக்காலத்தில் பின்பற்றப்படுகிறது.

மந்திரத் தியானம் செய்யும் முறையை அறியும் முன் ஒரு மந்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது முக்கியம். அந்த மந்திரத்தை நீங்கள் ஒரு குருவிடம் இருந்து பெறலாம். இல்லா விட்டால் நீங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மந்திர தியானத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் மந்திரம் இரண்டு தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும். முதலாவதாக அந்த மந்திரம் சுருக்கமாக இருக்க வேண்டும். பொதுவாக அது ஓரிரு வார்த்தைகளாக மட்டும் இருப்பது நல்லது. (காயத்ரி மந்திரம் மிக உயர்ந்த மந்திரமானாலும் அது ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் நீண்டு இருப்பதால் இது போன்ற மந்திர தியானங்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை).

நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த மந்திரம் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு மிக உயர்ந்ததாகவோ, சக்தி வாய்ந்ததாகத் தோன்றுவதாகவோ இருக்க வேண்டும். அப்போது தான் மந்திர தியானத்தில் நீங்கள் பெறும் பலன் சக்தி வாய்ந்ததாக இருக்கும். (அந்த மந்திரத்தின் அர்த்தம் உங்களுக்கு விளங்கியிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. உதாரணத்திற்கு மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானத்தில் பங்கு பெறும் அமெரிக்க, ஐரோப்பிய நபர்களுக்கு மந்திரமாக தரப்படுபவை பெரும்பாலும் வேதங்களில் இருக்கும் சம்ஸ்கிருத சொற்கள் தான். அது புனித சொல், சக்தி வாய்ந்த மந்திரம் என்பது மட்டும் அவர்களுக்கு உணர்த்தப்படுகிறது).

மந்திர தியானத்திற்குப் பொதுவாக பலரும் பயன்படுத்தும் சில மந்திரங்களையும், மந்திர தியானம் செய்யும் முறையையும் அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.....

விரைவில் தமிழக சட்டசபையில் பத்து பேர்கள் காவி வேட்டியுடன் அமர்ந்திருப்பார்கள் - பாஜக அமித்ஷா...


அதிமுக MLA க்களுக்கு மேலிடத்திலிருந்து தீபாவளி ட்ரெஸ் எடுத்து கொடுத்திருப்பாங்க போல...

நாம் அழுதுவடியும் இனமல்ல... தமிழர்களுக்கு போரும் சாவும் புதிதல்ல..


கல்கி எழுதிய 'மோகினித்தீவு' படித்திருக்கிறீர்களா?

1942ல் சப்பான் பர்மாவின் மீது படையெடுத்து ரங்கூனை (யகூன்) கைப்பற்ற முனையும் போது அங்கே வாழ்ந்த பர்மா தமிழர்கள் உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு வெளியேறுகிறார்கள்..

பல்வேறு இடர்களுக்கு நடுவில் அவர்கள் பாதி தொலைவு வந்ததும் ஒரு சப்பானிய போர்கப்பல் (க்ரூஸர்) அவ்வழி வருவதாகத் தகவல் வருகிறது..

கப்பலின் நாயகர் (கேப்டன்) அருகிலுள்ள ஒரு தீவுக்குள் கப்பலை மறைவாக கரையொதுக்குகிறார்..

அந்த கப்பலில் இருந்து இறங்கி அந்த தீவை பார்வையிடச் சென்றவர்களில் ஒருவர் இலக்கியவாதி..

பின்னாட்களில் அவர் அமரர் கல்கியைச் சந்தித்து தாம் அந்த தீவில் காதல் மணம் புரிந்த சோழ இளவரசனையும் பாண்டிய இளவரசியையும் சந்தித்ததாக கற்பனையான ஒரு கதையைக் கூறுகிறார்..

இது 1950ல் கல்கி எழுதி 'மோகினித் தீவு' என்ற புதினமாக வெளிவருகிறது..

அந்தக் கதையில் என் மனதில் நின்றது எது தெரியுமா?

அந்த இளவரசனிடம் கல்கியின் நண்பர் போர் நடக்குமுன் தப்பி வந்ததை கூறுகிறார்..

அதற்கு தமிழர் நிலை அப்படி ஆகிவிட்டதா? போருக்கு தமிழர் பயப்படும் நிலையும் வந்துவிட்டதா? என்று அந்த இளவரசன் அதிர்ச்சியாகக் கேட்கிறார்.

தமிழர்களுக்கு போரும் சாவும் புதிதல்ல...

ஆயிரமாயிரம் போர்க் களங்களையும் முள்ளி வாய்க்கால்களையும் கடந்து தான் நாம் தாக்குப் பிடித்து இன்றுவரை மிஞ்சியிருக்கிறோம்..

அதற்கு காரணம் நம் வீரம்...

தமிழன் என்றாலே வீரம்...

நம்மைப் போன்ற பல பழங்குடிகள் இன்று காணாமல் போய்விட்டனர், நாம் அழிவின் விளிம்பிற்கு வந்துவிட்டோம், இவ்வளவு காலம் தாக்கு பிடித்தது நம் வீரத்தால் தான்..

வீரம் என்பது வெட்டி வீழ்த்துவது மட்டுமில்லை இழப்புகளை மீறி நிமிர்ந்து நிற்பது தான் வீரம்..

இருகால்கள் இழந்த நிலையில் தள்ளாத வயதில் குதிரைகூட உயிரோடு எஞ்சியிராத போர்க்களத்தில் இருவர் தோளில் தூக்கிக் கொள்ள இருகைகளில் வாளேந்தி களத்தில் புகுந்து எதிரிகளை சிதறடித்த 96 விழுப்புண்களே பதக்கங்களாகக் கொண்டிருந்த விஜயாழய சோழன் வழிவந்த தமிழர்களே...

கரிகாலன் இமயமலையைக் குடைந்து அமைத்த பாதை சோழா கணவாய் (chola pass) என்ற பெயரில் இன்றும் இருக்கிறதே, அவன் வழிவந்த நம்மிடம் அவ்வீரம் எப்படி இல்லாமல் போகும்?

உங்களுக்கு வீரத்துறக்கம் என்றால் தெரியுமா?

பிறந்த குழந்தை இறந்தே பிறந்தால் விழுப்புண் இல்லாத அதன் மார்பில் வாளால் கீறி புதைத்து வீரத் துறக்கம் (வீரசொர்க்கம்) அடைந்து விட்டதாக எண்ணிக் கொள்வர்..

குழந்தை இறந்த துயரம் ஏற்படுத்திய வெற்றிடத்தை வீரவுணர்வால் நிரப்பிய இனம்,
இன்று ஒப்பாரி மட்டுமே வைக்கும் இனமாக ஆனது ஏன்?

எதிரிகள் மிகப்பெரிய வெற்றி நம்மை கொன்று வீசியது அல்ல, நம்மை நாமே இழிவானவர்களாக நினைத்துக்கொள்ள வைத்தது தான்...

நாம் காது குத்துவதும், அலகு குத்துவதும், தீமிதிப்பதும், நோன்பிருப்பதும், மலை சுற்றுவதும், காளையடக்குவதும் வெறும் சடங்குகளில்லை போர்ப் பயிற்சியின் வடிவம்...

நாம் கேடயம் அணிந்ததே கிடையாது, வாளின் கூர்மைதான் கேடயம், மாரில் தைத்த ஈட்டியை எடுத்து போரிட்ட வம்சம், தனியறையில் துணையே இல்லாமல் தானே பிள்ளை ஈன்று கொண்ட இனம்..

இன்று பிணங்களின் படத்தைக் காட்டி நீதிப்பிச்சை கேட்கும் கூட்டமாக மாறியது தான் நம் தோல்வி..

மே18 இனப்படு கொலை நாள் என்றால் ஒன்றாம் தேதியிலிருந்தே ஒப்பாரி தொடங்கிவிடுகிறது..

அவர்கள் உயிரைத் துறந்தது நாம் கூடி அழவா?

இல்லை, அவர்கள் நமக்காக விட்டச் சென்றது ஒரு காரணம்..

நமக்கு என்ன தான் பெரிதாக கொடுமை நடந்துவிட்டது என்று மற்றவர்கள் கேட்டால் காரணம் சொல்லத்தான் அவர்கள் மொத்தமாக செத்து விழுந்தார்கள்..

அந்தப் படுகொலை நிகழ்வை வேற்றினத்தார் எத்தனை முயன்றும் மறைக்க முடியாமல் இன்று உலகத் தமிழரிடம் விழிப்புணர்வு பரவிவருகிறது..

2009 நடந்த படுகொலை 2016 வரையில் 90% தமிழர்களிடம் பரவலாகத் தெரிந்துவிட்டது..

8 ஆண்டாகி விட்டதே என்று எண்ணாதீர்கள்.

இரு ஆண்டுகள்தான் ஆகிறது, சூடு இன்னமும் பரவிக் கொண்டிருக்கிறது...

புலிகளே தமிழகம் வாருங்கள்...

தமிழக விடுதலைக் குழுக்களே மீண்டும் களத்தில் இறங்குங்கள்...

தமிழ் மக்களே தலைவர் வழியில் போராடும் இளைஞர்களுக்கு தயங்காமல் ஆதரவு தாருங்கள்...

ஒருபிடி தமிழ்மண் கூட மாற்றான் கையில் இருக்கக்கூடாது...

மண்ணை மீட்போம் அல்லது மண்ணோடு மண்ணாக கலந்து விடுவோம்...

அழுது வடியும் அடிமை இனமாக இருக்க வேண்டாம்...

போர்க்குற்றக் கதைகள் எல்லாம் நம் தலைமுறைகளுக்கு உரமூட்ட மட்டுமே பயன்படட்டும்...

இதுவரை அழாமல் இருந்தவன் மாந்தனில்லை...
இனியும் அழுதுவழிந்தால் அவன் தமிழனில்லை...

இது திருப்பி அழிக்கும் நேரம்...

திருட்டு கன்னடன் கமலும்.. விபச்சார ஊடகங்களும்...


தமிழ்நாட்டை ஆள்வதற்கு திரையில் வருபவனையே முன்நிறுத்தி நம்மை இப்போதும் முட்டாள் ஆக்குகிறார்கள் அதிகாரவர்கத்துடன் இனைந்து ஊடகங்களும் செயல்படுகின்றன, இதை புரிந்துக் கொண்டு வெளியேற முயலுங்கள்...

வெந்தயத்தின் மருத்துவக் குணம்...


வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.

வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.

கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.

வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.

வெந்தய லேகியம்: வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.

நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.

மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.

இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.

வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்...

தூத்துக்குடி மே 22 போரட்டத்தில் பங்கேற்ற போது காவல்துறையினர் நடத்திய தடியடிக்கு உள்ளான ஜஸ்டின் 15.10.2018 அன்று உயிரிழந்தார்...


மே 22 ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற பொது மக்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள் பலர் துப்பாக்கி குண்டு பாய்ந்ததும் காவல்துறை பொது மக்கள் மீது நடத்திய தடியயில் காயமடைந்து சிகிச்சைகள் பெற்று வந்தனர்.

அந்த சம்பவத்தில் காவல்துறையினர்  நடத்திய தடியடிக்கு உள்ளான கிழ்முடிமண் கிராமத்தை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் பாதிப்புக்குள்ளாகி சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜஸ்டின் 15.10.2018 அன்று உயிரிழந்தார்...

நவீனகால மருத்துவத்திற்கு உன்னை குணமாக்குவது நோக்கம் இல்லை...


நீ அதன் வாடிக்கையாளராக மாற வேண்டும்...

வெகுசன மக்களின் ஒருவன்...

சமாதி - (அட்டாங்க யோகம்)...



சமாதி நிலை...

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே - 619

விளக்கம்:  நாதபிந்துக்களானது பிரணவத்தின் நுனியில் ஏறிவிட்டால் பிராணாபானன் சந்திக்கும் இடத்தில் சமாதியிற் சேர்ந்து விடும்.  முடிவற்ற அறிவினுடைய அருமையான பொருளாகிய அழகுள்ள சோதியும் தோன்றும்.

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மனமனத் துள்ளே மகிழ்ந்திருப்பார்க்கு
மனம்மனத் துள்ளே மனோலய மாமே. -- 620

விளக்கம்: பெருமை பொருந்திய மனம் எங்கிருக்கிறதோ வாயும் அங்குயிருகின்றது.  பெருமை பொருந்திய மனம் எங்கு இல்லையோ அங்கு வாயுவும் இல்லை.  நெருங்கியிருக்கும் மனதிலேயே மகிழ்ச்சி யோடிருப்பவர்களுக்கு அந்த மனதுக்குள்ளேயே அந்த மனமானது லயமாகி விடும்.

விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதி யிருப்பவர்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத்தாரே -- 621

விளக்கம்: பிரிவாகி மலர்ந்திருக்கும் கிணறு  ஆகிய நடுவீட்டையும் அறிவினிடத்திலும் அதைச் சுற்றியும் உள்ள அஞ்ஞான தத்துவங்களையும் பார்த்து அறிவாக எண்ணியிருப்பார்கள்.   அவர்கள் சிதாகாயத்தின் மத்தியில் செழுமையாகிய பிரணவ மேருவிடத்தில் சென்றால் பிராணாபானனை மேல் கொண்டு போக அதைக் கட்டியிருக்கும் மனமாகிய கயிற்றை அறுத்தான் பரமசிவம்.

குறிப்பு: நடுவீட்டையும், பிரணவத்தைச் சுற்றியிருக்கும் அஞ்ஞான தத்துவங்களையும் பார்க்கிறவர்கள் பிராணாபானனை பிரணவ நுனிக்கு ஏற்றும் போது சிவா அருளினால் மனம் நசுங்கி விடும்.  மன மடங்காமல் பிராணாதிகள் மேலேற்ற முடியாது.  இம்மந்திரம் மனோ நாசத்துக்கு தந்திரம் சொல்லப்பட்டது.

பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து
தேட்டத்தை மீட்டு நயனத் திருபார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலுமாமே - 624

விளக்கம்: சூரிய, சந்திரர்கள் ஒத்து அதனால் தேகத்துக்குள் பிரணவத்தில் கட்டுப்பட்டுக் கொண்ட பிராணாபாணனை ஆராய்ச்சி செய்யமுடியாத அந்த நடுவீட்டில் சேரும்படி செய்து பார்வையைத் தன் வசப்படுத்திக் கொண்டு பிழக்கடையிலுள்ள மாம்பழத்தைப் போல வேறுவிதமாக ஒன்றையும் கருதாமலும் பார்வையைச் செலுத்தாமலும் நேத்திரத்திலேயே மனதைச் செலுத்தி நின்றால் தூங்காமல் தூங்கலாம்.

நம்பனை யாதியை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப் போய்க்
கொம்பேறி கும்பிட்டுக் கூட்டமிட்டாரே -- 626

விளக்கம்: சிவனை முதன்மையான வனை நான்கு வேதங்களும் குதிக்கும் படியான வனை நாதபிந்துக்குள்ளே பிரகாசிக்கின்ற சோதியை அன்பை அருளும்படி செய்து ஆசையை ஒடுக்கி பிராணவமாகிய கொம்பின் ஏறிப்போய் அஞ்சலி செய்து (பூரணமான கலைகளை) கூட்டமாகச் சேர்த்தார்கள்

கற்பனை யற்றுக் கனல்வழியேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே -- 628

விளக்கம்:  சங்கல்பமற்று கனலேறும் வழியே சென்று சித்திரங்களை எல்லாம் உற்பத்தி செய்த பெரிய ஒளியின் அழகைசேர்க்க வேண்டிய சந்திரனோடு பொருத்தமாக்கிக் கொண்டு மனதினால் நாடுவது குளிர்ச்சி பொருந்தியசமாதி அதனால் தானே சிவமாகத் தகும்.

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்தும் மாதுநல் லாளுங்
குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந்
துலைப்பட் டிருந்திடுந் தூங்கவல் லார்க்கே -- 629

(பிரணவநுனியில் ஒளியோடு சந்திரனைப் பொருத்தி)  நின்றால் சிவதரிசனம் உண்டாகும்.  பார்வதியும் (பார்வையின் சக்தி) உன் வசமாய் இருந்திடுவாள்.  நடுக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் கோபமானது ஒழியும்.  தூங்காமல் தூங்கும் சமாதி நிலையினால் சமபார்வை உறுதியாய் விடும்.

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறுவாரே -- 630

விளக்கம்:  சோதியாகியும் ஒப்பற்றசுடராயுமுள்ள பரமசிவன் அனாதியானவனும், தேகத்துக்குள்ளிருக்கிற சீவனுமாகும்.  ஆதி பிரம்மாவும் மாலாகிய கடலில் பள்ளி கொண்ட விஷ்ணுவும் ஆதியாகிய பரமசிவனடி பணிந்து அன்பைப் பெறுவார்கள்.

சமாதி செய்வார்க்குத் தரும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையு டனேகிற்
சமாதிதா னில்லைத் தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே - 631

விளக்கம்: சமாதி செய்கிறவர்களுக்குப் பல விதயோகமுந்தரும் சிவத்துடன் சேர்ந்தால் சமாதியிலிருக்க வேண்டாம்.  தான் சிவனாக விளங்கினால் சமாதி கிடையாது சமாதியினாலே அறுபத்து நான்கு சித்திகளையும் அடையலாம்.

அட்டாங்கத்தின் சுருக்கமான கருத்து...

இமயம்: ஒருவனிடத்தில் இயற்கையாயுள்ள ஞானவிரோதமானதை நீக்குவது

நியமம்: உலகத்திலுதித்தபின், சேர்க்கையால் நியமித்துக் கொண்டதை நீக்குவது.

ஆசனம்: தேகத்தை ஸ்திரத் தன்மையில் வைத்தல்

பிராயாணாமம்: சதா அலைந்து கொண்டிருக்கும் பிராணனை அசைவற்ற நிலையில் நிறுத்துதல்.

பிரத்தியாகாரம்: அதோ முகத்திலுள்ள சக்தியை சிரசுக்கு மேலேற்றுதல்

தாரணை: தைலதாரை போல் நிற்றல்.

தியானம்: சிவத்தில் தானும் ஒன்றாயிருத்தல்

சமாதி: சிவத்தில் லயமாவது.

அட்டாங்கத்தின் கருத்தினைத் திருவருட் பிரகாச வள்ளலார் "வருகைக் கண்ணி" யில் குறிப்பிடுவதாவது.

எட்டும் இரண்டும் என்றிட்டு வழங்குதல்ல
எட்டும்படி செய்தீர் வாரீர்
எட்டுரு வாயினீர் வாரீர்
எட்டுரு என்பது அகர உரு.  அகரமே ஜீவன்

ஜோதியாயும் ஒப்பற்ற சுடராயுமுள்ள ஆண்டவன் தேகத்துக்குள்ளியிருக்கும் ஜீவனுமாகும்.

எட்டு என்பது தமிழில் "அ" அத்துடன் "ரு" சேர்த்தால் "அரு" என்று ஆகும்.  அரு என்பது அணு.  அணு என்பது ஒளி.  இதனை அணுவில் அமைந்த பேரொளியே என்று வள்ளற்பெருமான் குறிப்பிட்டு இருப்பதும் சிந்திக்கத்தக்கது.

எட்டுருவாகிய அணுவில் அமைந்த பேரொளியே உள்ளத்தில் அறிந்து, அதில் நினைவை ஒன்றுபடுத்தி தியானிப்பதுவே அட்டாங்க யோகமாகும்...

குருவித்துறை குருபகவான் கோயிலில் இருந்து கடத்தப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு - ஐஜி பொன்மாணிக்கவேல் தற்போது ஆய்வு...


இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள் உண்டா?


தமிழ்: தமிழ் எனும் சொல் பல இடங்களில் வருகிறது. முக்கியமானவை மட்டும் தருகிறேன்.

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே - புறநானூறு 58.

அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல் - புறநானூறு 50.

தமிழ் வையைத் தண்ணம் புனல் - பரிபாடல் 6.

தள்ளாப் பொருள் இயல்பின் தண்டமிழ் ஆய்வந்திலார் கொள்ளார் - பரிபாடல் 9.

தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் - பரிபாடல் 4.

தமிழர் :

தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து - புறநானூறு 19.
(இருபுறமும் தமிழர் இறந்த தலையாலங்கான போர்).

மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் - புறநானூறு 35.
(தமிழ்க் கிழவர் அதாவது தமிழ்த் தலைவர்).

தாதின் அனையர் தண்டதமிழ்க் குடிகள் - பரிபாடல் 8.
(தமிழ்க்குடிகள் அதாவது தமிழ் மக்கள்).

அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை - சிலப்பதிகாரம், நீர்ப்படைக்காதை.

தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காண - முத்தொள்ளாயிரம் 24.

தமிழர்நாடு :

தமிழர் ஆட்சி தமிழ்பேசாத நாடுகள் வரை பரவியிருந்தது..

தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த.- அகநானூறு 31.

இமயமலை முதல் குமரிக்கடல் வரை தமிழ் பேசப்பட்டது.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து - தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்.

தமிழரின் நாடு 'தண்டமிழ்' (தண்+தமிழ், தண்=குளிர்ச்சி) என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது.

தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம் - பரிபாடல் 9.

தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன் - புறநானூறு 51.
(தமிழ்நாடு எல்லாருக்கும் பொது என்றால் பொறுக்கமாட்டானாம்.
தனக்குத் தான் அது சொந்தம் என்பானாம்).

கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக் - பதிற்றுப்பத்து 63.
(செல்வம் பெருகிட தமிழர்நாட்டை இறுக்கி அதாவது சேர்த்து).

தமிழகப்படுத்த இமிழிசை முரசின் - அகநானூறு 227.
(தமிழகம் எனும் சொல்).

இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ்முழுது அறிந்த - சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை (வரைப்பு அதாவது எல்லை).

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த
தண்புனல் நல்நாட்டு - சிலப்பதிகாரம், வேனில் காதை (வரம்பு அதாவது எல்லை).

தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு - சிலப்பதிகாரம், நாடுகாண் காதை.

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய - சிலப்பதிகாரம், காட்சிக் காதை.

குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கில் தண்டமிழ் வரைப்பின்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
- சிலப்பதிகாரம், நூற்கட்டுரை.

தண்டமிழ் கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை
- மணிமேகலை.

(தமிழர்நாட்டு காலநிலை மாறி கோடை நீண்டாலும் தன் இயல்பு மாறாத தமிழ்ப்பெண் காவிரி).

யார் தமிழன்? ஏது தமிழ்? எங்கே தமிழர்நாடு? போன்ற வந்தேறித்தனமான கேள்விகளுக்கு இதற்கு மேலும் பதிலளிக்க முடியாது...

டிடிவி தினகரன் கலாட்டா...


இந்த ஆட்சியை இனிமேல் கவிழக்க முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு... அதனால் இப்போதிருந்தே.. இணைப்பு பற்றிய பேட்டிகள்...

கடைசியில் மக்கள் மற்றும் ஊடகங்கள் இருவரும் முட்டாள்கள்...

அயோத்திதாசரின் தமிழ்முழக்கம்...


கன்னட ஈவேரா-வை தமிழ்த் தேசியத் தந்தை என்று சிலர் திரிக்கின்றனர்.

தமிழ்நாடு தமிழருக்கே என்று அவர்தான் முதலில் கூறினாராம்.

ஈவேரா என்பவர் திராவிட நாடு, தனித்தமிழ் நாடு என்று மாற்றி மாற்றி பேசி கடைசிரை குழப்பியவராவார், அவர் எப்படி தமிழ்த் தேசியத்தின் தந்தை ஆவார்?

ஆனால், 1881லேயே தாழ்த்தப்பட்ட மக்களை பஞ்சமர் அல்லது தலித் என்று குறிப்பிடாமல் 'ஆதித் தமிழர்' என்று குறிப்பிட வலியுறுத்தியவர் அயோத்திதாசர்..

1885லிருந்து 'ஜான் ரத்தினம்' என்பவருடைய 'திராவிடப் பாண்டியன்' என்ற இதழில் அயோத்திதாசர் உதவியாசிராக பணிபுரியலானார்..

ஆனால், 1907ல் அவர் தனி இதழ் தொடங்கிய போது அதற்கு திராவிடப் பெயரை வைக்காது 'ஒரு பைசாத் தமிழன்' என்றே பெயர் சூட்டி தமிழிய சிந்தனைகளோடு வெளியிட்டுவந்தார்..

பிறகு 1908ல் அதன் பெயரைத் 'தமிழன்' என்று மாற்றினார்..

தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் வேத, மத, பிராமணீய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சமுக நீதி பிரதிநித்துவம், தாழ்த்தப்பட்டோர் விடுதலை, சுயமரியாதை, இந்தி எதிர்ப்பு, பெண் விடுதலை போன்ற கருத்துகளுடன் வெளிவந்தது தமிழன் இதழ்..

மலேசியா, சிங்கப்பூர் வரையிலும் கூட அவ்விதழ் பரவியது..

(1942ல் 'தமிழ் ராஜ்ய கட்சி'  என்ற கட்சியைத் தொடங்கி தமிழருக்குத் தனி ராஜ்யம் தேவை என்று முழங்கிய சி.பா.ஆதித்தனாரும் 1942ல்  'தமிழன்' என்ற வார இதழைத் தொடங்கினார்...)

மொழியின் மூலம் சாதியை பின்னுக்குத் தள்ளலாம் என்பதை  "ஓர் பாஷையின் பெயரால் சங்கத்தை நிலை நிறுத்துவோமானால் ஆதவரும் ஆதி தமிழரென்பர், வன்னியரும் ஆதி தமிழரென்பர், நாடாரும் ஆதி தமிழரென்பர், வேளாளரும் ஆதி தமிழரென்பர்" என்கிறார்...

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியம், திராவிடம் போன்ற 'தமிழர் மீதான வேற்றின ஏகாதிபத்திய' கருத்துகள் தமிழர் மத்தியில் விதைக்கப்பட்டபோது, முதன் முதலாக 'தமிழ்நாடு தமிழருக்கே' (தமிழ்தேசம் சுதேசிகளுக்கே) என்று கூறியவரும் அயோத்திதாசப் பண்டிதரே ஆவார்..

30-10-1912 அன்று தமிழன் இதழில் 'விடுதலை அளித்தால் இம்மண்ணின் மைந்தரான (சுதேசிகளான) தமிழருக்கே வழங்க வேண்டும்' என்றார்..

தமிழ்மொழியில் பிறந்து தமிழ் மொழியில் வளர்ந்து, தமிழ் மொழிக்குச் சொந்தமான பூர்வக்குடிகள் சுதேசிகளுக்கே சுதந்திரம் வழங்கவேண்டும் என்கிறார்..

மேலும் கருணை தாங்கிய ஆங்கில ஆட்சியாளர்களே சுதேசிகள் மீது கருணை பாவித்து ஆட்சி அதிகாரத்தை இத்தேச பூர்வகுடிகளுக்கு அளிப்பதே கருணையாகும்..

நேற்று குடியேறி வந்தவர்களையும் முன்னர்.. குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக்கருதி அவர்களிடம் ஆட்சியை வழங்கினால், நாடு பாழாகி சீர்கெட்டுவிடும் என
ஆங்கிலேயரிடம் விடுதலை பெறுவதற்கு 35ஆண்டுகளுக்கு முன்னரே அவர் கோரிக்கை விடுத்துள்ளார்..

(இதே காலகட்டத்தில் 1922ல் அருணாசலம்'தனி ஈழம்' என்கிற கருத்தியலை உருவாக்குகிறார்)..

ஈவேரா பொதுவாழ்க்கைக்கு வரும் முன்னரே 'தமிழர் ஒரு தேசிய இனம்' என்று சிந்தித்த அயோத்தி தாசரே 'தனித் தமிழர் நாடு'  என்ற கருத்தியலின் தந்தை ஆவார்...

நான் பயணிக்கும் சிறந்த தலைமை ஒன்றே ஒன்று தான்...


அது எம் தலைவன் பிரபாகரன் அவர்கள் மட்டுமே...

திருமணம் ஆன 20 நாளில் கணவனை போட்டு தள்ளிய மனைவி.. கள்ளக்காதலனுடன் கைது...


சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கதிரவன். இன்ஜினியரான இவருக்கும் அனிதா என்பவருக்கும் கடந்த 20 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. புதுமண தம்பதியர் நேற்று முன்தினம் திருவான்மியூர் கடற்கரைக்கு வந்த போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் கதிரவனை தலையில் இரும்பு கம்பியால் தாக்கினர்.

அவர் நிலைகுலைந்து கீழே விழுந்த நிலையில் அனிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் செயின் மற்றும் செல்போனை பறித்துகொண்டு தப்பி ஓடினர்.இதையடுத்து கதிரவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுதொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளை சம்பவத்துக்கு திட்டம் தீட்டியது கதிரவனின் மனைவி அனிதா என்பது தெரியவந்தது.  அவரிடம் நடத்திய விசாரணையில், தன் கள்ளக் காதலன் ஜெகன் என்பவர்  மூலம் கணவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளார்.

திருமணத்துக்கு முன்பே ஜெகனுக்கும், அனிதாவுக்கும் இடையே  காதல் இருந்து வந்தது. இதை அறிந்த அனிதாவின் பெற்றோர் அவசர, அவசரமாக அனிதாவுக்கும், கதிரவனுக்கும் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். ஆனால் ஜெகனை மறக்க முடியாத அனிதா, தனது கள்ளத் காதலனை தொடர்பு கொண்டு கதரிவனை தீர்த்துக் கட்ட பிளான் போட்டுள்ளனர். ஆனால் சிசிடிவி கேமரா இந்த கொலையை காட்டிக் கொடுத்துவிட்டது.

இதனையடுத்து அனிதாவை போலீசார் கைது செய்தனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் கள்ளக் காதலன் ஜெகனையும் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே அனிதாவின் கள்ளக் காதலனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கதிரவன் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது...

ஆண்களுக்காக வீ டூ இயக்கம் தொடக்கம்...


உலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்...


வடக்கு பாக்கிஸ்தானில் உள்ள புன்சா என்ற இளம்பெண்கள் தான் உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்வதோடு ஆரோக்கியமாக வாழ்வதும் இவர்கள் தான்.

கரக்கோரம் என்ற மலைபகுதியில் வாழும் இவர்கள் உலகில் அதிக ஆரோக்கியம் ஆனவர்கள். இவர்களுக்கு இதுவரை எந்த ஒரு கொடிய நோயும் வந்ததில்லையாம்.

70 வயது வரை இவர்கள் முகத்தில் முதுமையான தோற்றம் வராமல் இருப்பதோடு, 80 வயதில் கூட இவர்கள் கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்றனர்.

இங்கு வாழும் பெண்களிடம் உலக அழகியும் தோற்றுப் போவார். காண்போரை கண்கொட்டாமல் பார்க்கவைக்கும் அழகானவர்கள் இந்த பெண்கள்...

பாஜக மோடியின் காவிரி விற்பனை திட்டம்...


ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தேதி ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்...


இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தேதி ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் 424 மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

அப்போது பள்ளியில் இலவச ரோபோட்டிக் பயிற்சி மூலம் மாணவர்கள் தாங்களே உருவாக்கிய ரோபோக்களை காட்சிப்படுத்தினர். பின்னர் ட்ரோன் ஒன்றையும் மாணவர்கள் பறக்கவிட்டனர்.

பபார்வையிட்ட அமைச்சர் செங்கோட்டையன், ட்ரோன் மற்றும் ரோபோக்களை உருவாக்கிய மாணவர்களை பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவை பொருத்தவரை தமிழகத்தில் கல்வி இடைநிற்றல் சதவீதம் குறைவாகவே உள்ளது என கூறினார். 

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தேதி ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்...

தடுப்பூசி உண்மைகள்...


இதுபோன்ற கேள்விகளை கேட்க பழகுங்கள்...

கடவுள் உண்டா இல்லையா?


பேய் உண்டா இல்லையா?
மறுபிறவி உண்டா இல்லையா?
விதி என்பது எது?
தலையெழுத்து நம் தலையில் எங்கு உள்ளது?
நிம்மதி எங்கு உள்ளது?
மகிழ்ச்சியின் திறவுகோல் எது?
வாழ்க்கை எங்கு தொடங்குகிறது?
வாழ்க்கை எங்கு முடிகிறது?
நிலையான பொருள் எது?
அறிவு என்பது யாது?
பொருள் மட்டும் தான் வாழ்க்கையா?
நம்மால் நிகழ்காலத்தில் மட்டும் ஏன் வாழ முடியவில்லை?
மழலையின் மொழி எது?
கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?

இப்படிப் பல புதிர்களுக்கான பதிலை நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு மாணவனிடம் கேட்டேன்..

உனக்குப் புதிரான ஒன்று சொல் என்று..
அவன் சொன்னான்..

ஐயா தேர்வில் கேட்கப்படும் வினாத்தாள் தான் புதிரானது என்றான்.

நான் சொன்னேன் நீ படிக்காமல் இருக்கும வரை அப்படித்தான் இருக்கும் என்று..

எனக்கும் நீண்ட காலமாகவே ஒரு புதிருக்கான பதில் தெரியவில்லை..

தமிங்கிலம் பேசும் இன்றைய மக்களுக்கு தாய்மொழி எது? என்பது தான் எனக்குப் புரியவில்லை?

எல்லாம் புரிந்துவிட்டால் நாம் ஒவ்வொருவருமே கடவுளாகிப் போவோமே..

அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை அறியாத ஒவ்வொரு மணித்துளிகளுமே எதிர்பார்ப்பு நிறைந்தது தான்..

இந்த எதிர்பார்ப்பில், கிடைக்கும் அனுபவத்தில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்பது என் அனுபவம்...

வைரமுத்து மீது மேலும் 2 பாடகிகள் புகார்...


தருமபுரியில் பூக்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி...


தொடர் பண்டிகை காரணமாக தருமபுரி பூ சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இன்று காலை 4 மணிக்கு கூடிய சந்தையில் 3 மணி நேரத்தில் 10 டன் பூ விற்பனை செய்யப்பட்டுள்ளன, நேற்று கிலோ ரூ.50-க்கு விற்பனையான செண்டுமல்லி இன்று ரூ.120- க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதேபோல் மல்லிகைப்பூ கிலோ ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.600 - க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது...

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் யூடியூப் இணையதளம் தற்போது முடங்கியுள்ளது...


சபரிமலை பேச்சுவார்த்தை தோல்வி; மன்னர் குடும்பம் அதிருப்தி...


சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்படும் நிலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்படும் நிலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுமுதல் 50 வயதுடைய பெண்கள் செல்ல நூற்றாண்டுகளாகத் தடை இருக்கிறது. இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலைஐயப்பயன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் சென்று சாமிதரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்கு கேரளாவில் உள்ள பந்தம் அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தினர், மற்றும் பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாஜக, இந்து அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இதனால் கேரள அரசுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்பட உள்ளது.

இதையொட்டி சபரிமலை விவகாரத்தில் சுமூகமான முடிவை எட்ட திருவாங்கூர் தேவசம் போர்டு போராட்டம் நடத்தி வரும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தது. அதன்படி திருவாங்கூர் தேசவம் போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது.

பந்தளம் அரச குடும்பம், தந்திரிகள், பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டன. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பின்னர் இதுகுறித்து பந்தளம் அரண்மனை சார்பில் பங்கேற்ற சசிக்குமார் வர்மா கூறுகையில் ‘‘சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்வது பற்றி அக்டோபர் 19-ம் தேதி விவாதிப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம். இன்று நடந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையவில்லை. எங்களுடைய கோரிக்கைகளை ஏற்க அவர்கள் தயாரில்லை’’ எனக் கூறினார்...

பாஜக அடிமை அதிமுக ஊழல் எடப்பாடி கலாட்டா...


தமிழகத்தை தொடர்ந்து... கேரளாவையும் கலவர பூமியாக்கியது பாஜக... சபரிமலையில் தடியடி...


சபரிமலையில் கோயிலின் அடிவாரப்பகுதியான நிலக்கல்லில் பெண்களை அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் காவலர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தொடர் தடியடியில் ஈடுபட்டு போராட்டக்காரர்களை கலைத்தனர். தடியடியால் பலர் வனப்பகுதிக்குள் ஓடினர்...

இலுமினாட்டியும் கிருஸ்துவமும்...


மத்தியப்பிரதேச பாஜக அரசின் வியாப்பம் தகுதித் தேர்வு முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் (அரசியல்வாதிகளை தவிர்த்து) தொடர்ந்து மர்மமான முறையில் இறந்து வருகின்றனர்...


அதன் தொடர்ச்சிாக இன்று CBI விசாரணைக்கு ஆஜர் ஆகும் நிலையில் ஒரு மருத்துவர் தனக்கு தானே மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக செலுத்தி தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வழக்கு தொடர்பாக சர்ச்சையான முறையில் இறந்தவர்களில்  இவர் 30 ஆவது நபர்...