இதுக்கு ஒரு கும்பல் தடை போட்டாலும் போடுவானுங்கோ......
09/11/2017
பாஜக மோடியை கலாய்த்து சிம்பு வின் புதிய பாடல் - தட்றோம் தூக்றோம்...
இதுக்கு ஒரு கும்பல் தடை போட்டாலும் போடுவானுங்கோ......
மருத்துவ மாப்பியா - தொப்புள் கொடி...
சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள் கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன் வைக்கப்படுகிறது...
அப்படி தொப்புள் கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது.
தொப்புள் கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?
அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள் கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.
அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள்.
பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும்.
இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் வருத்தம்.
இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதிய வைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்.
உண்மையில் இன்று நாம் முட்டாளா இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா என்று சிந்தித்து பார் தமிழா...
இனியாவது விழிப்போம். நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்...
இலுமினாட்டி பற்றி தெரியாதவர்கள் முதல் முறையாக தெரிந்து கொள்ளும் நாளில் தூக்கத்தைத் தொலைப்பது நிச்சயம்...
தெரியாதவர்களுக்காக இலுமினாட்டி பற்றி ஒரு சிறு அறிமுகத்துடன் கட்டுரையை தொடங்குகிறேன்.
உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சர்வதேச நாட்டாமைகள் தான் இலுமினாட்டிகள்.
உலக அரசியல் அமைப்புகள், மதங்கள், வங்கிகள், ஹாலிவுட், மீடியாக்கள், நுகர்பொருட்கள் எல்லாம் எல்லாம் இவர்களது கையில்.
எதெல்லாம் இவர்களுடையது என்று ஆராய்வதைவிட எதெல்லாம் இன்னும் இவர்களுக்கு சொந்தமாகவில்லை என்பதை வேண்டுமானால் எளிதாக எண்ணிவிடலாம்.
இன்றைய உலகைப் பொறுத்தவரை இயற்றலும் ஈட்டலும் காத்தலும் அழித்தலும் இவர்கள் கையில்.
எகிப்திய பார்வோனின் இரத்தவழி வம்சங்களாகிய 13 முதல் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் இந்த இலுமினாட்டிகள்.
சில உலக அரசியல் தலைவர்களும், மிகப்பெரிய பணமுதலைகளும், கலைத்துறையினரும், விஞ்ஞானிகளும் இதில் அடக்கம்.
இவர்கள் வரலாறு பல நூற்றாண்டுகளைக் கடந்தது. உலகில் இதுவரை நடைபெற்ற அத்தனை புரட்சிகளையும், இரு உலகப்போர்கள் உட்பட அத்தனை யுத்தங்களையும் தங்கள் சொந்த ஆதாயத்துக்காக நடத்தியவர்கள் இவர்கள் தான்.
இதை ஏன் அவர்கள் செய்ய வேண்டும்?
New World Order என்ற பெயரில் உலகம் முழுவதையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து அதை ஆளவேண்டும் என்பதே இவர்கள் நோக்கம், அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
இலுமினாட்டிகளின் சிறப்பியல்புகளில் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்வது இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள உதவும்.
இவர்கள் சொல்லி அடிப்பதில் கில்லாடிகள்.
பில்லி சூனியம், நரபலிகள், மாந்திரீகம், அஸ்ட்ராலஜி, நியூமராலஜி, occultism போன்றவற்றில் இவர்களை மிஞ்ச உலகத்தில் ஆளில்லை.
3, 6, 7, 9, 11, 22, 33, 333, 66, 666 போன்றவை இவர்களது முக்கிய எண்கள்.
சைத்தானுக்கு செய்யும் சடங்குகளாக இவர்கள் குறிப்பிட்ட நாளில் சில குறிப்பிட்ட செயல்களை செய்வார்கள். அது முழுக்க முழுக்க எண்களின், வானசாஸ்திரத்தின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.
இவர்கள் தாங்கள் செய்யப் போவதை ஏதேனும் ஒரு மீடியம் வழியாக ஏற்கனவே வெளியே சொல்லியும் விடுவார்கள், ஆனால் அதை கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.
பெரும்பாலும் சம்பவங்கள் நடந்த பின்னரே அதை உலகம் புரிந்து கொள்ளும். அப்படி முன்னரே கண்டு பிடித்தாலும் எந்தக் கொம்பனாலும் அதைத் தடுத்து நிறுத்தவும் முடியாது.
உதாரணத்துக்கு இரட்டை கோபுர இடிப்பு நடத்தப் போவது பற்றி (அதை செய்ததும் இந்தப் புண்ணியவான்கள்தானாம்) சம்பவம் நடப்பதற்கு சிலமாதங்கள் முன்னர் வெளியிட்ட 20$ அமெரிக்க நோட்டில் மறைமுகமாக சொல்லி விட்டார்களாம்.
அது மட்டுமன்றி சம்பவத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன் வெளியான புகழ்பெற்ற காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைகளிலும் ஆங்காங்கே இந்த இரகசியம் வெளியிடப்பட்டிருக்கிறது, ஆனால் அது அப்போது யாருக்கும் தெரியவில்லை.
யார் இவர்கள்? ஏன் இதைச் செய்கிறார்கள்? இவர்கள் ஏன் வெளிச்சத்துக்கு வருவதில்லை? தாங்கள் செய்யப் போவதை யாருக்கு, ஏன் முன்கூட்டியே சொல்லுகிறார்கள்? அது யார் மூலம், எப்படி வெளிவுலகத்துக்கு கசிகிறது?
இலுமினாட்டிகள் யாரும் தன்னை இலுமினாட்டி என்று அறிவித்துக் கொள்ள மாட்டார்கள்.
இது ஒரு இரகசியக் குழு, இரகசியம்தான் இவர்கள் பலம். இதை ஏன் வெளியே சொல்லுகிறார்கள் என்றால் மக்களுக்காக அதை சொல்லுவதில்லை. உலகம் முழுவதிலுமுள்ள இலுமினாட்டிகள் தங்களுக்குள் போன் மூலமாகவோ கடிதத்திலோ பேசிக் கொள்ள மாட்டார்கள், இதுபோன்ற சமிஞ்கைகள் மூலமே தங்கள் சக இலுமினாட்டிகளிடம் தகவல்களைப் பரிமாறுகிறார்கள்.
அவற்றை decode செய்து கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.
இலுமினாட்டிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்து, அவர்கள் தகவல்களை decode செய்து மக்களுக்கு வெளியிடும் conspiracy theorists பலர் இருக்கிறார்கள்.
அவர்களது கட்டுரைகள் புத்தகங்கள் மூலம் இணையதளங்கள் வழியே பல நூற்றாண்டுகளாக திரைமறைவில் உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருந்த இலுமினாட்டி இயக்கம் பற்றிய இரகசியங்கள் இப்போது ஓரளவுக்குக் கசியத்துவங்கி இருக்கிறது.
மலேசிய விமானம் MH370 தொலைந்த அதே நேரத்தில் ரஷ்யா உக்ரேன் பிரச்சனை இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. இரண்டையுமே இலுமினாட்டி சதி என்று பலரும் கூறிவந்தனர். ஆனால் அதற்கான ஆதாரம் அப்போது ஒன்றும் சிக்கவில்லை.
இலுமினாட்டிகள்தான் சொல்லி அடிப்பவர்களாயிற்றே இதுபற்றி ஏதாவது முன்கூட்டியே சொல்லி வைத்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து சில conspiracy theorist-கள் சில திடுக்கிடும் தகவல்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள். அந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.
இலுமினாட்டிகளின் மதத்தில் Poseidon என்ற ஒரு நெப்ட்டியூன் கடவுளுண்டு, இது கடலுக்குரிய கிரெக்கக் கடவுளாகும். இதன் கையில் ஒரு மும்முனை குத்தீட்டி வைத்திருக்கும். அந்த மும்முனை குத்தீட்டி (Trident) அதிகாரத்தின் அடையாளமாகும்.
உலகத்தின் அதிகாரம் கடவுளிடமிருந்து சைத்தானுக்கு கைமாறுவதை கொண்டாடும் விதமாக கடல் தெய்வமான நெப்ட்டியூனுக்கு கடலில் நடத்தும் ஒரு சடங்காகவும் 2014-ஆம் ஆண்டில் இந்த மும்முனை குத்தீட்டி சின்னத்தை (Trident) எல்லோருடைய ஆழ்மனதிலும் பதிக்கும் விதமாகவும் அதை உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்துவது இவர்கள் நோக்கம்.
மக்களது ஆழ்மனதில் இதை ஏன் பதிய வைக்க வேண்டும் என்று conspiracy theorist-களைக் கேட்டால் அவர்கள் இலுமினாட்டிகளை mind manipulators என்று அழைக்கிறார்கள்.
இவர்கள் இன்று உலகத்தை ஆண்டு கொண்டிருப்பதே மக்களை உளவியல் ரீதியில் மூலம் mind control செய்துதானாம்...
அதற்குப் பின்பு ஒரு ஜுலை 17-அன்று MH-17 இன்னொரு மலேசிய விமானம் உக்ரேனில் சுட்டி வீழ்த்தப்பட்டதை யாவரும் அறிவோம்.
இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் மசெராட்டி, உக்ரேன், மலேசிய விமானம் அனைத்துக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு அதுதான் மும்முனை ஈட்டி லோகோ.
இன்னொரு கூடுதல் தகவல், உலகத்தின் ஆளுகை இறைவனிடமுருந்து சைத்தானுக்கு கைமாறியதன் அடையாளமாக இரு மும்முனை ஈட்டிகள் இன்னொரு முக்கியமான இடத்திலும் இப்போது வைக்கப்பட்டுள்ளது.
அதுதான் நியூயார்க் இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதன் நினைவாக நியூஜெர்ஸியில் எழுப்பப்பட்டிருக்கும் நினைவகம்.
மலேசியன் ஏர்லைன்சில் உள்ள இரட்டை மும்முனை குத்தீட்டிக்கும், இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதன் நினைவாக நியூஜெர்ஸியில் வைக்கப்பட்டிருக்கும் இரட்டை மும்முனை ஈட்டிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு அது சைத்தானுக்குரிய எண்ணாகிய 33-ஐயும் குறிக்கிறது.
33-இன் முக்கியத்துவம் பற்றி எமது முந்தய கட்டுரையில் பார்த்து தெரிந்து கொள்ளவும்..
இன்னும் வரும் நாட்களில் நீங்கள் திரும்புமிடமெல்லாம் மும்முனை குத்தீட்டியை உலகம் முழுக்க பார்க்கலாம்.
மும்முனை குத்தீட்டியை மக்கள் ஆழ்மனதில் பதிக்கும் விதத்தில் இனி திரையுலக நாயகர்கள்கூட படத்தில் அதைத் தூக்கிக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்..
வெறும் இந்த ஆதாரங்களை வைத்து இதுதான் நடந்திருக்கும் என்று எப்படி நம்புவது என்று கேட்டால், இதில் எழுதியிருப்பது எதுவுமே எனது சொந்தக் கற்பனையோ கருதுக்களோ அல்ல, conspiracy theory என்பது வெவ்வேறு புள்ளிகளை இணைத்து ஒரு புரிந்து கொள்ளுதலுக்கு வருவதாகும்.
conspiracy theorists இணையத்தில் ஆங்கிலத்தில் சொல்லுவதை தமிழில் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறேன். அவ்வளவே..
அவர்களால்கூட இதற்கு ஒருபோதும் சட்டம் ஏற்றுக் கொள்ளும் படியான ஆதாரங்களைக் காட்ட இயலாது. இது எப்போதும் கோட்பாட்டளவிலேயே தான் நிற்கும். நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்...
ஏதேன் தோட்டம் எங்கே..?
விவிலியத்தில் ஏதேன் தோட்டம்...
ஏதேன் தோட்டம் மனிதனுக்கு இறைவன் கொடுத்த முதல் தங்குமிடம்; அங்கு அவர்களுக்கு அனைத்தும் கிடைத்தது; அது மண்ணக சொர்க்கம்; இறைவன் மனிதனோடு வாழ்ந்த இடம்.
ஏதேன் தோட்டம் - ஏதேன் தோட்டத்தில் எல்லாவகையான உயிரினங்களும் மரங்களும் கொடிகளும் இருந்தன. அங்கு தான் இறைவன் முதல் மனிதனான ஆதாமை மண்ணிலிருந்து உருவாக்குகிறார்; அவனிலிருந்து பெண்ணை உருவாக்குகிறார். அங்கே மிக முக்கியமான இரு மரங்கள் இருந்தன.
நல்லது தீயது அறியும் மரம்
வாழ்வின் மரம்.
நல்லது தீயது அறியும் மரத்தின் கனியை உண்ணக்கூடாது என "எல்" கூறியிருந்தார். எல் என்றால் இறைவன்; ஆனால் பாம்பு ஏவாளை ஏமாற்றியது; இறைவனை போல ஆகலாம் என ஆசை வார்த்தை காட்டியது; அவள் அந்த மரத்தின் கனியை உண்டாள்; அவளது துணைவனான ஆதாமுக்கும் கொடுத்தாள் அவனும் உண்டான்.
மனிதனின் கீழ்படியாமையை கண்ட இறைவன் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டி விட்டார்.
மனிதன் மீண்டும் வந்து வாழ்வின் மரத்தில் கைவைத்துவிட கூடாது என்பதற்காக , இரு சேராபீம்களை காவலுக்கு வைத்தார்; சேராபீம் வானதூதர்களில் ஒரு வகையினர்.
விவிலியத்திற்கு முன்பு...
இக்கதை ஏதோ கிறித்தவருக்கோ, யூதருக்கோ , இசுலாமியருக்கோ சொந்தமான கதை அல்ல. இவை இவற்றிகெல்லாம் முந்தையது; சுமேரியாவில் இதை போன்ற ஒரு கதை உள்ளது; ஒவ்வொரு சமூகமும் இச்செவி வழிக்கதையை தங்களது வாழ்க்கையோடு பொருத்து திரித்துக் கொண்டனர்.
உண்மையில் இது என்னவாக இருக்கும்?
மெய்யியல் - உடலியல் பாதை இதற்கு பதில் தரும்.
மறுபடியும் விவிலியம்..
தொடக்கத்தில் ஏதேன் தோட்டத்தில் மனிதனோடு இருந்த இறைவன்; இசுராயேல் மக்களின் வரலாற்றில், பின் உடன்படிக்கை பேழையில் வழியாக உடன் இருந்தார்.
ஆண்டவருடன் பேசும்படி மோசே சந்திப்புக் கூடாரத்தினுள் சென்றார். இரு கெருபுகளிடையே உடன்படிக்கை பேழையின் மேலிருந்த இரக்கத்தின் அரியணையிலிருந்து பேசிய குரலை அவர் கேட்டார்; ஆண்டவர் அவருடன் பேசினார்.
எண்ணிக்கை 7:89.
கெருபு தான் சேராபீம். இந்த உடன்படிக்கை பேழை படத்தை பாருங்க.
உடன்படிக்கை பேழை.
சரி. எப்படியோ இரு வானதூதர்களுக்கு இடையில தான் இறைவன் மறைந்திருக்கிறார்.
இந்த கெருபு (அ) சேராபீம் (அ) வானதூதர் இவற்றை போன்றே எகிப்துல ஒன்று உள்ளது அதுதான் ஆமென் கொம்பு, கிப்போகம்பசு.
ஆமென் கொம்பு..
கிப்போகம்பசு என்பது என்பது நமது தலையில் இருக்கும் ஒரு உறுப்பு.
படத்தை பாருங்க இரு சேராபீம், ஆமென் கொம்பு தெரியுதா என..
இதற்கு நடுவுல என்ன இருக்கு ? எப்படி அதில் இறைவன் பேசுவார் ?
இந்த இரு சேராபீம்களும் தான் ஏதேன் தோட்டத்தை , வாழ்வின் மரத்தை பாதுகாக்குறாங்க.
அது தான் பீனியல் சுரப்பி என்ற மூன்றாம் கண்..
மூன்றாம் கண்... மூன்றாம் கண்ணை திறப்பதின் வாயிலாக நாம் பிரபஞ்ச நினைவுடன் தொடர்பு கொள்ள முடியும் ; அது தான் இறைவன்; இது வரை உலகம் அனுபவித்த அனைத்தும் அந்த நினைவில் தான் உள்ளது. அதில் நாம் இணைந்தால் அந்த முழு அறிவும் நமக்கு சொந்தமாகும்.
வாழ்வின் மரத்தை அடைவதன் வாயிலாக மரணமில்லாமல் வாழலாம்.
நமது நாட்டில் இது போன்ற நிறுவன மாக்கபட்ட தத்துவங்கள் சமண மதத்தால் தான் வந்தன.
பழங்குடிகளில் இது இயல்பாக காணப்படும் அறிவு; ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் இறைவனோடு பேசுபவர் இருப்பார்.
பழங்குடிகள் வாழ்வியலுக்கு பின் திணிக்கபட்ட மதங்கள் அந்த இறைவனோட பேசுபரின் இடத்தை பிடித்தன; அப்பழங்குடிகளுக்கு துரோகம் செய்தனர். 300 பருத்தி வீரர்கள் படத்தில் இதை பற்றி காணலாம்.
அதோடு இலுமினாட்டிகள் ஒரே உலக மதத்தின் கருவாகவும் இதை போன்ற மெய்யியல் கருத்துக்கள் தான் இருக்க போகின்றன...
துறையூர் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி எதிரில் சாலையில் காணப்படும் மணலால் புழுதி படலம், அவதிப்படும் மக்கள்...
துறையூர் பேருந்து நிலையத்தில் இருந்து பிரிவு ரோடு வரை உள்ள சாலையில் அகற்றப்படாத மண்ணால் அந்த சாலையில் கடக்க முடியவில்லை..
சாலையில் மண் இருப்பதால் வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் புழுதியால் சாலையில் செல்ல முடியவில்லை..
வாகனத்தில் வருவோர் ஹெல்மட் போட்டு வருவாங்க. சாலையில் நடந்து செல்வோரும் எப்படி ஹெல்மட் போடுவது.
அனைவராலும் கண்களை மூடி நடக்கவும் முடியாது , கண்களுக்கு கண்ணாடி வாங்க முடியாது அல்லவா....
மழைப்பொழிவுக்கு அடுத்த நாள் புழுதி புயலுக்கு பஞ்சமே இல்லை.. விரைவில் சாலையில் உள்ள மண்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா.. என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் ...
துத்திச்செடி...
துத்திச்செடியில் உள்ள பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இவை இரத்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கி நெஞ்சுக்கு இதம் தரும்..
மருத்துவக் குணங்கள்...
துத்திப்பூக்களை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ரத்தவாந்தி, ரத்தபேதி, சளியில் இரத்தம், சிறுநீரில் இரத்தம் ஆகியவற்றை குணமாக்கும். மேலும் ஆண்மையை பெருக்கும்..
ஆஸ்துமாநோய் குணமாக:
துத்திப்பூக்களை காம்பு நீக்கி நிழலில் உலர்த்தி சூரணம் தயார் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் சமஅளவு சர்க்கரை சேர்த்து அரைதேக்கரண்டி அளவு சூரணத்தை காலை, மாலை பாலில் கலந்து பருகினால் ஆஸ்துமா நோய் குணமாகும். மேலும் காசம் என்ற எலும்புருக்கி நோய் குணமாகும்..
மூலநோய் குணமாக:
ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வந்தால் மூலநோய் குணமாகும்.
ரத்தவாந்தி குணமாக:
அரைக் கைப்பிடியளவு துத்திப்பூக்களை ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதனை இறக்கி வடிகட்டி நான்கு மணிக்கு ஒருமுறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.
இத்தகைய நன்மைகள் வாய்ந்த இந்தப்பூக்களை நாம் நம் அன்றாட உணவுடன் கலந்து உண்போம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்...
தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான்...
முக்கடலும் முத்தமிழும் மூவேந்தர் பரம்பரையும் கோட்டையிலே வில், புலி, மீன் கொடிகள் நாட்டி செந்தமிழ் தாய் சீரிமை திறம் விளங்க சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியனும் அவன் அமைத்த தமிழ் சங்கத்திலே எழுத்தாணி ஏந்தி தலைமைப் புலவனாய் தமிழாய்ந்த புலவர்களில் ஒருவர் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் ஆவார்.
அதன் கோட்டின் அமைவிடம்:
தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க இடம்தான் அதங்கோடு. இவ்விடம் குமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது.
அதன் கோட்டில் சூரியமுக்கு என்னும் இடமுண்டு. இவ்விடத்தின் அருகில் "பக்றுளி ஆறு" என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட குழித்துறை தாமிரபரணி ஆறு செல்கிறது. தொன்றுதொட்டே அதங்கோடு ஒரு ஆற்றங்கரை நாகரீகப் பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.
அதங்கோடு சூரியமுக்கில் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ் சங்கம் தண்ணீர் பெருக்கால் அழிக்கப்பட்ட காரணத்தினால் அவரும் அவரோடு சார்ந்த தமிழ்ப்புலவர்களும் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த 'கபாடபுரத்தில்' நடந்த தமிழ் சங்கத்தில் இணைந்தார்கள். கபாடபுர தமிழ்ச்சங்கத்தை கும்பவம்பக்குறுமுனி என்று அழைக்கப்பட்ட "அகத்தியர்" தலைமைதாங்கி நடத்தி வந்தார். அவருடன் கீழ்க்கண்ட பன்னிரு பெரும் சீடர்களாயினர்.
தொல்காப்பியர்
அதங்கோட்டாசான்
துராளிங்கன்
செம்புத்செய்
வையாபிகன்
வாய்ப்பியன்
பணம்பாரன்
கலாரம்பன்
அவினயன்
காக்கை பாடினியன்
நட்டதன்
வாமணன்
இவர்களை அகத்தியரின் "பன்னிருமாணாக்கர்" என அழைக்கிறோம்.
'கபாடபுரத்தில் ', "அகத்தியர்" தலைமையில் நடந்து வந்த தமிழ் சங்கத்திற்கு, முதல் தமிழ் இலக்கண நூலாக இருந்தது "அகத்தியம்" என்னும் இலக்கண நூல் ஆகும்.
"அகத்தியம்" கால வெள்ளத்தால் அழிந்த காரணத்தால் அதற்கு வழி நூலக ஒரு இலக்கண நூலை இயற்ற தனது தலை மாணாக்கரான தொல்காப்பியரை அழைத்துச் சொன்னார் அகத்தியர்.
இந்நிலையில் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார்.
மதுரை தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு.
தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களிலும் எக்குற்றமும் இல்லை என அறுதி இட்டு கூறினார் அதங்கோட்டாசான்.
பணம்பாரரின் கருத்து:
தொல்கபியப் பாயிரத்திற்கு உரை எழுதிய பணம்பாரன் என்னும் தமிழ்ப் புலவர் தனது சிறப்புப் பாயிரத்தில்..
"நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அரங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து"
இதன் விளக்கம் யாதெனில்..
மாற்றானது நிலத்தை தன் கீழ் வாழ்வார்க்கு கொண்டு கொடுக்கும் மன்னன் மாகீர்த்தியது அவையின் கண் நான்கு மறைகளையும் அதாவது ரிக், யஜூர் , சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என விரிவாக எழுதிஉள்ளார்.
இளம்பூரணரின் கருத்து:
தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணம் என்னும் தமிழ்ப்புலவர் நான்கு மறைகளையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று எழுதி உள்ளார்.
அடைமொழி இன்றி தனிமொழியாக "அதங்கோடு" என்கிற ஊர் திகழ்கிறது.
அதனால் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தை அரங்கேற்றியவர் அதன் கோட்டில் பிறந்து தமிழ் ஆய்ந்த இடம் "அதங்கோடு" என உறுதி செய்யப்பட்டுள்ளது...
சித்தர்கள் சமாதியான இடம். அவர்கள் வாழ்ந்த நாட்கள்...
1. பதஞ்சலி சித்தர் - 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
2. அகஸ்தியர் - 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
3. கமலமுனி - 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
4. திருமூலர் - 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில்சமாதியானார்.
5. குதம்பை சித்தர் - 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
6. கோரக்கர் - 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
7. தன்வந்திரி சித்தர் - 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
8. சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
9. கொங்ணர் - 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
10. சட்டமுனி - 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
11. வான்மீகர் - 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
12. ராமதேவர் - 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
13. நந்தீஸ்வரர் - 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
14. இடைக்காடர் - 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
15. மச்சமுனி - 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
16. கருவூரார் - 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
17. போகர் - 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
18. பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்...
ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2... உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 6...
தீர்க்க தரிசனத்தின் எஞ்சிய பகுதிகள் இனி “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற இப்பகுதியில் இடம் பெற உள்ளன.
நாம் வெளியிட்ட அனைத்து தீர்க்க தரிசனங்களும் செயல்படும் காலம் வந்துவிட்டன. உலக மக்களின் மனதில் மரணப் பயங்கள் தென்படும் அளவிற்கு சம்பவங்கள் இனி ஒவ்வொன்றாக நடக்க போகின்றன என 6-ம் தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு ஒரு குறிப்பை தருகின்றது.
இன்றைய 6-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் பல செய்திக் குறிப்புகள் தீர்க்க தரிசனங்களாக நாம் காண இருக்கின்றோம். அதில் முதலாவதாக “வாணியம்பாடி“ கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பகுதி என்றும், நகரத்தின் தெற்குவாசல் என்ற அடைமொழி கொண்ட ஒரு இடத்தில் நடக்கும் சம்பவம் தமிழக மக்களை நிலைகுலையச் செய்யும் என்று இந்த தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
சென்னையின் தென்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவாலயத்தில் நடக்கும் ஒரு திகில் சம்பவம் அது சென்னை நகருக்கு வரப்போகும் ஆபத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும் ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம் என இந்த 6-ம் தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு மற்றொரு குறிப்பை தருகிறது.
காலம் சென்ற தமிழ் புலவர்களின் வரலாற்றில் இடம் பெற்ற சீத்தலைசாத்தனார் என்ற புலவரின் கல்வெட்டு ஒன்று தமிழகத்தில் கண்டெடுக்கும் சமயத்தில் ஆகாய மார்க்கத்தில் ஒரு வான் ஊர்தியை இந்திய மக்கள் பலரும் காணும் பாக்கியத்தை பெறுவார்கள் என்றும், இந்த சமயத்தில் தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை போன்ற பகுதிகளில் மழைநீர் ஆறாக ஓடும் சம்பவம் நடக்கும் என்று இந்த 6-ம் தீர்க்க தரிசனம் ஒரே சமயத்தில் நிகழப்போகும் பல சம்பவங்களை நமது கவனத்திற்கு கொண்டு வருகிறது.
ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது தீர்க்க தரிசனப் பகுதியில் இடம் பெற்றுள்ள 36-ம் தீர்க்க தரிசனப் பகுதியை நாம் இப்பொழுது திரும்பி நினைவில் கொள்ள வேண்டும் என்றும், ஆகாயச் சூரர்கள் என்ற ஒரு நிலையை இஸ்ரேல் காண உள்ளதாகவும், இறைமகன் இயேசுவின் வருகைக்கான முதல் நிகழ்வு அங்கே அரங்கேறிடும் என்ற ஒரு தகவலை கிருஸ்துவ தலைமை அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிடும் சமயத்தில் தமிழகத்தில் ஒரு மாபெரும் அதிசய நிகழ்வு நடக்க உள்ளதாக “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்க தரிசனத்தின் உண்மைத் தன்மையை உலக மக்கள் அறிவார்கள் என ஒரு குறிப்பு நமக்கு இங்கே நினைவூட்டப்படுகிறது.
காலம் சென்ற விஞ்ஞானியும், மெய்ஞானியுமான “ஐன்ஸ்டீன்“ என்பவரின் கல்லறையை பலர் தோண்டி பல அறிவியல் சாராத திடுக்கிடும் செய்திக் குறிப்புகளை வெளியிடுவார்கள் என்றும், அவரின் கல்லறைக்குள் ஒரு இரகசிய வழி ஒன்றை கண்டறிந்து அதன்வழி சென்று ஒரு அரிய புத்தகத்தை கைப்பற்றி அதில் இடம் பெற்றுள்ள குறிப்புகளை உலக மக்களுக்கு அறிவிக்கும் அன்றைய தினத்தில், உலகம் வியக்கும் மற்றொரு அதிசயம் லண்டன் மாநகரில் நடக்கும் என்று 6-ம் தீர்க்க தரிசனப் பகுதி ஒரு அரிய குறிப்பை இங்கே நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
டிசம்பர் 2017 நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மாதம் என்றும், தமிழக அரசியல்வாதிகளுக்கு இது போதாத காலம் என்றும், இந்திய அரசியல்வாதிகளே பலர் வியக்கும் பல சம்பவங்கள் நடக்கும் காலமாக அது இருக்கும் என்றும், இது துவக்கத்தின் முதல் காலம் என்று மக்கள் அறிய வேண்டும் என 6-ம் தீர்க்க தரிசனம் நமக்கு மற்றொரு குறிப்பை தருகின்றது.
சிங்காநல்லூர் மீண்டும் மக்களால் கண்டறியப்படும் ஒரு நிகழ்வு நடக்க உள்ளதாகவும், வரலாற்று சின்னமாக கருதப்படும் ஒரு சிலைக்காக மக்கள் கொந்தளித்து எழும் ஒரு எழுச்சி நிகழ்வு அங்கு நடக்க உள்ளதாக 6-ம் தீர்க்க தரிசனம் நமக்கு குறிப்பை தருகின்றது.
மேல் உலகவாசிகளான வேற்றுகிரக வாசிகளை மக்கள் காணுகின்ற பல நிகழ்வுகள் இந்திய தேசமின்றி உலக நாடுகள் முழுவதும் நடந்தேறும் ஒரு அரிய நிகழ்வு விரைவில் நடக்க உள்ளதாகவும், இந்திய தேசத்தின் மேற்கு பகுதியில் கனமழை ஒன்று ஏற்பட்டு பல சேதங்களை ஏற்படுத்துவதோடு பல நதிகள் உடைபடும் நிகழ்வு நடக்க உள்ளதாக 6-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.
ஸ்ரீஇராமனுஜர் வாழ்ந்த பகுதியிலிருந்து சித்தர் ஒருவரின் அற்புதம் மக்கள் மத்தியில் எழும் என்றும், அப்பொழுது திருப்பதி தேவஸ்தானத்தில் ஒரு மாற்றம் திடீரென்று நிகழும் என்றும், அப்பொழுது ஜீயர் ஒருவர் மக்களை வியப்பில் ஆழ்த்தும் ஒரு செய்தி குறிப்பை வெளியிடுவார் என்றும், அதன்படியே அந்த நிகழ்வு திருப்பதியில் நடந்தேறும் என்ற குறிப்பை 6-ம் தீர்க்க தரிசனம் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
தமிழகத்தில் உள்ள ஒரு ஆஸ்ரமத்தை அரசு கைப்பற்றும் நிகழ்வு 2018-ம் ஆண்டில் நடந்தேறும் என்றும், அங்கு புதைக்கப்பட்ட பல மர்மங்கள் உலகத்திற்கு தெரிய வரும் என்றும், அதே சமயத்தில் அம்மன் குடிகொண்டுள்ள ஒரு ஆலயத்தில் அதிசயம் ஒன்று நடந்தேறும் என்று 6-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
செவ்வாய் கிரகத்தில் வாழும் வேற்று கிரகவாசிகளைப் பற்றி “ NASA ” ஒரு இரகசிய பிரமாணத்தை உலக மக்கள் அறியும்படி வெளியிடும் என்றும், அதே சமயத்தில் திபெத்தில் உள்ள புத்த மடாலயத்தில் “வேற்றுகிரக வாசியின் உடல்“ ஒன்றை அங்கு உள்ள புத்த சன்னியாசிகள் பாதுகாத்து வரும் செய்தியை ஆதாரத்துடன் ஒரு சந்நியாசி வெளியிடுவார் என்றும், இதனால் உலக மக்கள். வேற்றுகிரக வாசிகள் நிச்சயம் உள்ளனர் என்ற நம்பிக்கைக்கு வருவார்கள் என 6-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு முக்கிய அரியச் செய்தியை வெளியிடுகிறது.
சேலம் மாவட்டத்தின் தென்பகுதியில் அமையப் பெற்றுள்ள முருகன் ஆலயத்தில் ஒரு சுரங்கம் கண்டறியப்படும் என்றும், அதன் பாதையை பல மக்கள் கண்டறிந்து வியப்பார்கள் என்றும், அங்கு பல ஓலைச் சுவடிகளை கண்டெடுப்பார்கள் என்றும், அதில் இடம் பெற்றுள்ள குறிப்புகள் யாவும் அடுத்து 3000 ஆண்டுகள் இவ்வுலகில் நடக்கும் மாற்றங்களை கணித்து எழுதப்பட்ட குறிப்புகள் அதில் இடம் பெற்றிருக்கும் என்றும், அதில் கூறப்பட்ட பல குறிப்புகள் தற்போது நாம் வெளியிடும் நமது தீர்க்க தரிசனப் பகுதியோடு ஒத்துப் போகும் என்றும், அதை எழுதியவர்கள் யார்? என்பது மட்டும் புரியாத புதிராக இருக்கும் என்று 6-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
நிகழ்வுகள் நிகழ்கின்ற காலமாக இக்காலம் இருக்கும் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் “உண்மைகள் உறங்காது“ அவை ஒரு நாள் இவ்வுலகில் வலம் வருவதை நாம் காண்போம் என்றும், அதுவரை நாம் காத்திருப்போம் என 6-ம் தீர்க்க தரிசனம் நமக்கு ஒரு குறிப்பை சுட்டிக் காட்டுகின்றது.
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...
சிறு கீரை மருத்துவம்...
சிறுகீரை வேரை இடித்துச் சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவுக்குக் குடித்து வந்தால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.
சிறுகீரையுடன் இஞ்சி , பூண்டு , பெருங்காயம் , மஞ்சள்தூள் ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்து சூப் வைத்துக் குடித்தால் தலைவலி குணமாகும்.
சிறுகீரை , பார்லி ஆகியவற்றோடு சீரகம் ( சிறிதளவு ) மற்றும் மஞ்சள்தூள் ( 4 சிட்டிகை ) சேர்த்துக் கொதிக்க வைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் வீக்கம், உடல் பருமன் குறையும்.
சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்துக் கொண்டால் சொரி , சிரங்கு , படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
சிறுகீரையுடன் சிறு பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் பித்த சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
சிறுகீரையோடு மிளகுத் தூள் , உப்பு சேர்த்துச் சமைத்து கொஞ்சம் நெய்யோடு சாதத்தில் போட்டுச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்...
வள்ளுவனின் கடவுளைத் தொலைத்த தமிழர்கள்...
தலைப்பு அதிர்ச்சி தருகின்றதா? படித்து முடித்ததும் பதிவும் ஆதிர்ச்சி தரும், வள்ளுவர் அப்படி எந்த கடவுளை தன்னுடைய குறளில் குறிப்பிட்டுள்ளார்? எதை நாம் தொலைத்தோம்? அந்த கடவுளுக்கு அப்படி என்ன சிறப்பு?
நாம் பிறரை வையும் போது "மூதேவி" என்ற வார்த்தையை அடிக்கடி நாம் பயன்படுத்துவோம், அந்த மூதேவி யார் என்று ஒரு முறையேனும் நாம் சிந்தித்திருப்போமா? இல்லை. சரி இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள்..
மூதேவி என்பவள் திருமகளின் (லக்ஷ்மி) அக்காள், அதாவது லக்ஷ்மிக்கு மூத்தவள் என்பதால் "மூத்ததேவி", அதை தான் நாம் சுருக்கமாக "மூதேவி" என்றழைக்கிறோம்.
வள்ளுவர் தன்னுடைய அறத்துப்பாலில் 167 வது குறளில் இந்த மூதவியை "தவ்வை" என்ற பெயரில் முதன் முதலாக நமக்கு அறிமுகம் செய்கிறார்.
அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். (குறள்:167)
விளக்கம்: பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய் விடுவாள்.
தவ்வை என்பவள் யார் என புரிந்தது, அவள் எப்படி இருப்பாள் என்று யோசிக்கிறீர்களா?
மேலே உள்ள படத்தை பாருங்கள் பெரிய வயிறுடன் காக்கைக் கொடியை கையில் ஏந்தி தன்னுடைய இடது பக்கம் மகள் அக்னியுடனும், வலது பக்கம் தன்னுடைய மகன் நந்தியுடனும் பல கோயில்களில் காணக் கிடைப்பார், பல கல்வெட்டுகள் இவரை " ஜேஷ்டை" என்ற பெயரிலும் அறிமுகப்படுத்துகின்றது.
சங்க கால தமிழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் என அனைத்து மக்களும் கொண்டாடிய தெய்வம் இவள்,
கடைசியாக சோழர் காலம் வரை சிறப்புற்று இருந்த இந்த தெய்வத்தை, பிற்காலத்தில் நாம் தொலைத்து விட்டோம்.
ஆனால் இன்றும் பழங்கால கோயில்களில் பத்தோடு பதினொன்றாக தன்னுடைய மகன் மகளுடன் ஏதோ ஒரு மூலையில் யார் கண்ணிலும் படாமல் வருவோருக்கு அருள் புரிந்து கொண்டு தான் இருக்கிறாள்.
ஒருவேளை யார் கண்ணிலாவது பட்டாலும் அங்கே செல்லும் மக்களுக்கு இவள் யார் என்பது தெரியாது, இவளுக்கு இப்படி ஒரு நீண்ட நெடிய வராலாறு இருப்பதும் புரியாது.
பணம் தான் வாழ்கை என்றாகிவிட்ட காலத்தில் தவ்வை நமக்கெதற்கு?
அவளின் தங்கை திருமகளே போதும் என்கிறீரா?
யாரை வேண்டுமானாலும் வணங்குங்கள் ஆனால் இத்தனை அறிவியல் வரலாற்றையும் ஈராயிரம் வருடங்களுக்கு முன் வாழ்க்கை நெறியை நமக்கு கற்பித்த வள்ளுவனும் கூறிய தவ்வையை மறந்து விடாதீர்கள் தமிழர்களே...
பிராணயாமம் - நாடி சுத்தி...
பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே. சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும்.
அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும். இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும். இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது.
நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும்.
இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும். இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய்வாய்ப்படுத்துகின்றன.
இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது.
மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன.
மூச்சுப் பயிற்சி...
எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் தெரியாது. இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். ஆசனங்களை முறையாக செய்வது நன்மை தரும்.
நம்முடைய சுவாசம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும். சுவாசத்தை சரியாக செய்யாதபோது, நம் செயல்களில் கவனம் செலுத்த முடியாது. தியானமும் இதன் அடிப்படையில் உருவானது தான். மூச்சுப் பயிற்சியை முறையாக செய்தால் சிறந்த பலன்கள் பெற முடியும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்தது. அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதிக்க முடிந்தது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதை பத்து முறையாக்கும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.
இதனை தியானத்தின் மூலம் பெறலாம். தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டால் புதிய அனுபவத்தை உணரலாம்.
மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடம் மாலையில் 5 நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும்...
கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கரும் இந்தி எதிர்ப்பும்...
தமிழர்களின் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்திய படைகளால் கொல்லப்பட்டாலும், இறுதியாக வென்றார்கள்..
தமிழின எழுச்சியை சகிக்காத திராவிடர் தந்தை கன்னட ராமசாமி வெறிபிடித்து சாவி இதழுக்கு அளித்த பேட்டி. (ஏப்ரல் 11,1965)..
சாவி : அந்த காலத்தில் இந்தியை எதிர்த்து போராட்டமெல்லாம் நடத்தினீர்கள். இப்போது சும்மா இருக்கிறீர்களே?
ஈவேரா: அப்படியா. மன்னிக்க வேண்டும். இந்தி இப்போ எங்கே இருக்கிறது?
சாவி: இந்தி தான் ஆட்சிமொழியாக வந்துவிட்டதே?
ஈவேரா: உனக்குத்தான் ஆங்கிலம் இருக்கிறதே. இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் பொதுவாக ஒரு ஆட்சிமொழி இருக்க வேண்டும் தானே? இந்திக்காரன் ஆங்கிலத்தை இழிவா நினைக்கிறானே, தமிழ்நாட்டுக்காரன் சொன்னால் நடக்குமா? அதுதான் மக்களாட்சியா?
சாவி : ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் இந்தி வரத்தானே போகிறது?
ஈவேரா: அப்படியா? ஒருநாளைக்கு இல்லாவிட்டாலும் ஒருநாள் சாகத்தானே போகிறோம். அதற்காக இப்போதே கிணற்றில் விழுவானா? அப்படியே இந்தி வந்தால் உயிரோடு இருந்தால் எதிர்க்க போகிறவன் நான் தானே?
சாவி: இந்தி வந்தால் நாம் இரண்டாந்தர குடிமகனாகி விடுவோமே?
ஈவேரா: இந்தி வந்தால் நீ இரண்டாந்தர குடிமகன் ஆகிவிடுவேன் என்றால், ஆங்கிலம் வந்தால் இந்திக்காரன் மூன்றாந்தர குடிமகனாகி விடுவேன் என்பானே?
சாவி : மும்மொழி திட்டப்படி நாம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமே?
ஈவேரா: சரியா போச்சு. ஏதாவது ஒரு அயல்மொழி கற்கவேண்டும் என்றால் அது இந்தியாக இருந்துவிட்டு போகட்டுமே?
சாவி: இந்தி கற்க கட்டாயப்படுத்தினால்?
ஈவேரா: அப்ப பார்த்துக்கலாமே?
சாவி: நடுவண் அரசில் இந்தி கற்க கட்டாயப்படுத்துகிறார்களே?
ஈவேரா: படித்துவிட்டு போயேன். அவன் காசிலே இன்னொரு மொழியை தெரிந்து கொள்வது நல்லது தானே...
தமிழ் தேசியம் பேசுகிற எவரும் அம்பானி, அதானி , டாடா, பிர்லாக்கள் அல்ல... எல்லோரும் அன்றாடம் காய்ச்சிகள் தான்...
தமிழாட்டின் நிலப்பிரபுக்களும் தொழில் முதலைகளும் பிற மொழியினரே...
தமிழ் நிலப்பிரபுக்களும், தமிழ் முதலாளிகளும் இருந்தால் இந்நேரம் தமிழ்தேசியம் எழுச்சிப் பெற்றிருக்கும்...
தமிழ்நாட்டைப் பொருத்தவரை முதலாளிகளும் அவர்களே.. நிலப்பிரபுக்களும் அவர்களே.. தொழிற்சங்க விவசாயச் சங்க முதலாளிகளும் அவர்களே...
தமிழர்களிடம் இழப்பதற்கு தற்போது எதுவும் இல்லை..
பிறமொழியாளர்களின் பிடியில் இருந்து விடுதலை ஒன்றே எமது தமிழ் தேசியத்தின் இலக்கு...
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 55...
மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி...
ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப் படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.
வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும். முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது. இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு பயன்படுத்திக் கொண்டு சிறந்தபலன் கண்டவர்கள் ரஷியர்கள்.
ஆழ்மன சக்திகள் குறித்து முதல் முதலில் அதிகமாக ஆராய்ந்த நாடுகளில் முதலிடம் வகித்தது ரஷியா என்றே சொல்லலாம். வாசிலிவ் என்ற ஆழ்மன ஆராய்ச்சியாளர் செய்கையால் கவரப்பட்டு ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின் லெனின்கிராடு பல்கலைகழகத்தில் ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி அளித்தது பற்றி முன்பு கூறியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அங்கு நடந்த ஆராய்ச்சிகளில் ஸ்டாலினும், பிந்தைய ஆட்சியாளர்களும் ஆர்வம் காட்டினார்கள்.
1976ல் மாண்ட்ரீல் நகரில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் மிக அதிகமான கோப்பைகளைத் தட்டிச் சென்ற கிழக்கு ஜெர்மானிய வீரர்கள் ஆழ்மனப் பயிற்சிகளில் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அதைப் படித்தவுடனேயே 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாரான ரஷியா தங்கள் நாட்டிலேயே நடக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் மிகச் சிறப்பாக சோபிக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளுக்கு அந்தப் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தது. அந்தப் பயிற்சிகளையே ஆராய்ச்சிகளாகவும் மாற்ற எண்ணிய ரஷியர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் விளையாட்டு வீரர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர்.
’ஏ’ பிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நூறு சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ’பி’ பிரிவில் 75 சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் 25 சதவீதம் மன ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ‘சி’ பிரிவில் உடல்ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும், மனரீதியான பயிற்சிகளும் 50, 50 சதவீதமாக அளிக்கப்பட்டது. கடைசியாக ‘டி’ பிரிவில் உடல் ரீதியான பயிற்சிகள் 25 சதவீதமும், மனரீதியான பயிற்சிகள் 75 சதவீதமும் அளிக்கப்பட்டது. கடைசியாக 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்த போது கணக்கிட்டதில் அந்த விளையாட்டு வீரர்களில் மிக அதிகமான வெற்றிக் கோப்பைகளைப் பெற்றது ‘டி’ பிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதை ரஷிய ஆராய்ச்சி தெரிவித்தது. அதாவது 25 சதவீத உடல் ரீதியான பயிற்சிகளும், 75 சதவீத மனரீதியான பயிற்சிகளும் பெற்றவர்கள் தான் அதிகக் கோப்பைகள் பெற்றவர்கள். மற்ற பிரிவினர்களிலும் மனரீதியான பயிற்சிகள் பெற்ற அதிக விகிதத்தின் படியே அதிகக் கோப்பைகள் பெற்றிருந்தார்கள்.
மன ரீதியான பயிற்சிகளில் பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தியது மனக்கண்ணில் வெற்றியைக் காட்சியாகக் காணும் பயிற்சியைத் தான். இது விளையாட்டு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு மேலை நாடுகளில் சர்வ தேசப் போட்டிகளில் பங்கு பெறும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்க விளையாட்டு மனோதத்துவ நிபுணர் (sports psychologist) தனியாக நியமிக்கும் வழக்கம் ஆரம்பித்தது. 1970 களில் மொத்த விளையாட்டுகளுக்கும் சேர்த்து ஓரிரண்டு விளையாட்டு மனோதத்துவ நிபுணர்களை மட்டும் வைத்திருந்த மேலை நாடுகளில் பல இப்போது ஒவ்வொரு விளையாட்டின் குழுவிற்கும் தனித்தனியாக விளையாட்டு மனோதத்துவ நிபுணரை நியமிக்கின்றன.
டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி, கால்ஃப் வீரரான ஜேக் நிக்ளாஸ், கால் பந்தாட்ட வீரர் பீலே போன்றவர்கள் தங்கள் துறையில் சிகரத்தை எட்டி வரலாறு படைத்தவர்கள். அவர்களும், அவர்களைப் போன்ற பல வெற்றி வீரர்களும் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்பவர்களாகத் தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள். அது அவர்களுடைய விளையாட்டுப் பயிற்சியுடன் சேர்ந்த ஒரு அங்கமாகவே பிரதான இடம் வகிக்கிறது.
கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார். ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார். (கிட்டத்தட்ட இதையே 53வது அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.)
அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார். அப்படி உருவகப்படுத்தும் பயிற்சியின் போது ஆட்டத்தின் முழு சூழ்நிலையையும் கொண்டு வர வேண்டும் என்கிறார். ஆட்ட மைதானத்தின் சத்தம், கைதட்டல்கள், தட்பவெப்ப நிலை என்று முடிந்த அளவு எல்லா சின்னச் சின்ன விஷயங்களையும் அந்தக் காட்சியில் தெளிவாகக் கொண்டு வர வேண்டும் என்கிறார். இப்படி மனத்திரையில் தொடர்ந்து காட்சியைக் கண்டு ஆழ்மனதில் ஆழமாகப் பதித்தால் நிஜமான விளையாட்டின் போது ஆழ்மனம் அந்தப் பதிவை படபடப்பில்லாமல் நிஜமாக்கிக் காட்டும். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல எல்லா இலட்சியங்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்தி வரும் என்கிறார்கள் ஆழ்மனப் பயிற்சியாளர்கள்.
ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.
பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால் நெப்போலியனைச் சொல்லலாம்.
ஒரு சாதாரணக் குடிமகனாய் பிறந்து வறுமையில் வாடி வளர்ந்த நெப்போலியன் இளமையில் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் அமர்ந்து பகற்கனவு காணுவது வழக்கம். மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் அவன் மட்டும் அங்கு அமர்ந்து சக்கரவர்த்தியாகத் தன்னை பாவித்து போர்களை வெல்வது போலவும் நாடுகளை ஆக்கிரமிப்பது போலவும் கற்பனை செய்வது வழக்கம். திரண்டு வரும் அலைகளைத் தன் எதிரிகளாகவும், எதிரிகள் தன்னருகே வந்து தோற்றுப் பின் வாங்குவது போலவும் கற்பனை செய்து கொள்வானாம். அவன் ஆழ்மனதில் பதித்த அந்த கற்பனைகள் பிறகு வரலாறாகியது என்பதை எல்லோரும் அறிவோம். நெப்போலியன் அமர்ந்து கற்பனைக் கனவு கண்ட அந்த பாறைப் பிளவு இன்றும் “நெப்போலியனின் அழகுமிகு செயற்கைக் குகை (Napoleon’s Grotto)” என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு வியப்பூட்டும் சம்பவத்தையும் மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்திக்கு உதாரணமாய் சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் மனோசக்தி பற்றிய சில அசாதாரண நிகழ்வுகளைக் காண்பித்தார்கள். அதில் ஒரு நிகழ்வு கான்சரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுடையது. கான்சர் முற்றிய கட்டத்தில் இருப்பதால் அவன் ஆறு மாதங்களுக்கு மேல் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அவனை ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பி அழைத்து வருகையில் அந்த சிறுவன் தாயிடம் தன் உடலுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தாய் அவனிடம் அந்த நோய் பற்றி விளக்கப் போகாமல் “உன் உடலில் நோய்க்கிருமிகள் நிறைய உள்ளன. அதனால் தான் உனக்கு அசுகம்” என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாள்.
ஆறுமாதங்கள் கழித்து சிறுவன் இறந்து போவதற்குப் பதிலாக ஆரோக்கியமாய் இருக்க தாய் மறுபடி அவனை அந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள். அவனைப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டருக்கு பேராச்சரியம். அவன் உடலில் கான்சர் செல்கள் இல்லவே இல்லை. அவர் அந்தத் தாயிடம் என்ன மருத்துவம் பார்த்தீர்கள் என்று கேட்க அவளோ “பெரிய டாக்டர் நீங்களே இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டதால் நான் வேறு சிகிச்சைக்கே போகவில்லை” என்றாள். பின் மெல்ல அந்த சிறுவனை விசாரித்த போது பதில் கிடைத்தது. ’வீடியோ கேம்’களில் மிக ஆர்வம் உள்ள அந்த சிறுவன் தாய் அவன் உடம்பில் இருப்பதாகச் சொன்ன நோய்க்கிருமிகளை எதிரிகளாக பாவித்து தினமும் அவற்றை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது போலவும் அவை எல்லாம் செத்து விழுவது போலவும் மனதில் கற்பனை விளையாட்டு விளையாடுவானாம். ஆழ்மனம் அவனுடைய கற்பனைப்படியே நோய்க்கிருமிகளைக் கொன்று அவனைக் குணப்படுத்தியே விட்டது. இது நடந்து முடிந்து பல வருடங்கள் கழித்து தான் டிஸ்கவரி சேனலில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்கள். அந்த சிறுவன் அப்போது இளைஞனாக மாறி ஆரோக்கியமாய் இருப்பதைக் காட்டவும் செய்தார்கள்.
சக்கரவர்த்தியாவதும், ஒலிம்பிக்கில் கோப்பைகள் வாங்குவதும், கடும் நோய் குணமாவதும் கூட நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.
இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும். அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்.
மேலும் பயணிப்போம்.....
இந்திராகாந்தி ரூ 1000 ரூ 500 ஒழித்திருந்தால் நான் ஒழித்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது - பாஜக மோடி...
இந்திராகாந்தி இறந்தது 1984ம் ஆண்டு...
இந்தியாவில் 500 ருபாய் நோட்டு
அறிமுகப்படுத்தப்பட்டது... 1987ம் ஆண்டு..
1000 ருபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது... 2000ம் ஆண்டு..
இந்திராகாந்தி 500, 1000 ருபாய் நோட்டுக்களை ஒழித்திருந்தால்.... நான் தடை செய்ய வேண்டிய அவசியமே வந்திருக்காது.
இதை சொன்னது பாஜக மோடி...
எவ்வளவு பெரிய அறிவாளி பிரதமர் இந்தியா வை ஆள்கிறார் என்பது புரிகிறதா...
பாஜக விற்கு வேலூர் மக்கள் கொடுத்த செருப்படி...
பணமதிப்பிழப்பு திட்டம் வெற்றி பெற்றது என எதிர்கட்சிகளுக்கு போட்டியாக பாஜக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கறுப்பு பணம் ஒழிப்பு தினம் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட முடிவு செய்தது.
வேலூரை அடுத்த காட்பாடி பகுதியில் பொதுமக்களை தேடி தேடிச்சென்று இனிப்பு வழங்கினர் பாஜகவினர். பேருந்தில் இருந்தவர்களுக்கும் அதை வழங்கினர். பேருந்தில் அமர்ந்திருந்த பலரும் அதை வாங்காமல் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியான பாஜக நிர்வாகிகள் காரணம் சொல்லாமல் வேகவேகமாக சிலருக்கு மட்டும் இனிப்பு தந்துவிட்டு, மீந்ததை அவர்களே சாப்பிட்டுவிட்டு கிளம்பி சென்றனர்.
- நக்கீரன்...
பாஜக அதிமுக தினகரனை மிரட்டும் சதி ஆரம்பம்...
திவாகரனுக்கு சொந்தமான மகளிர் கல்லூரியில் சோதனை... மாணவிகள் பெரும் அவதி...
மன்னார்குடி: திவாகரனுக்கு சொந்தமான பெண்கள் கல்லூரியில் காலையில் இருந்து வருமான வரித்துறை சோதனை நடத்து கொண்டு இருக்கிறது. இதனால் அந்த கல்லூரி ஹாஸ்டலில் தங்கி இருக்கும் மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.
தமிழ்நாடு முழுக்க மொத்தம் 160 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் மட்டும் மொத்தம் 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மன்னார்குடியில் சசிகலா தம்பி திவாகரன் ஆதிக்கம் செலுத்திவரும் அனைத்து இடங்களிலும் சோதனை நடந்து கொண்டு இருக்கிறது.
காலை 7.30 மணிக்கு சரியாக திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர்.
சுந்தரக்கோட்டையில் இருக்கும் செங்கமல தாயார் பெண்கள் கல்லூரியில் இன்னும் சோதனை நடைபெறுகிறது. மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நிறைய பெண்கள் அங்கு படித்து வருகின்றனர்.
மேலும் தொலைதூரத்தில் இருந்து அந்த கல்லூரியில் சேர்ந்து இருக்கும் பெண்கள் அந்த கல்லூரி விடுதியில் தங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் அந்த கல்லூரியில் நடக்கும் சோதனை காரணமாக அங்கு ஹாஸ்டலில் தங்கி இருப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். யாரும் வெளியேயும் உள்ளேயேயும் செல்ல அனுமதிக்கப்படாமல் உள்ளனர்.
மேலும் காலையில் இருந்து அந்த கல்லூரி பேருந்துகள் எதுவும் வெளியே அனுமதிக்கப்படவில்லை. 30க்கும் மேற்பட்ட கல்லூரி பேருந்துகள் கல்லூரிக்குள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பைக்குகளிலும், காரிலும் வரும் மாணவிகள் கல்லூரிக்கு வெளியே காத்துக் கொண்டு இருக்கின்றனர். கல்லூரிக்கு விடுமுறை விடப்படுவது குறித்து முறையான தகவல்கள் வெளியாகவில்லை.
அந்த கல்லூரியில் வேலை பார்க்கும் அன்பு என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. இவர் அந்த கல்லூரி உரிமையாளர் திவாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகிகள் சிலரும் அந்த கல்லூரியை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்...
Subscribe to:
Posts (Atom)