06/11/2018

தீபாவளிக்கு ரூ.700 கோடி மது விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா தெரிவித்துள்ளார்...


நாளை கொண்டாடப்பட இருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் தீபஒளி திருநாள் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.

அதில், தமிழக மக்களின் வாழ்வை ஒளிமயமாக்க உழைப்பதற்கு உறுதி ஏற்க வேண்டும்..

ஒளிகள் சிந்தும் உவப்பான திருவிழாவான தீப ஒளித் திருநாளைக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். மகிழ்ச்சியையும்,  கொண்டாட்டங்களையும் நினைத்து மட்டும் தான் பார்க்க முடியுமோ? எனும் அளவுக்கு தமிழகத்தின் நிலைமை உள்ளது. தமிழ்நாட்டில் தீப ஒளித் திருநாளுக்கு ரூ.700 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.1,500 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர எந்த முன்னேற்றமும் தமிழகத்தில் ஏற்படவில்லை. வறுமை வாட்டுவதும், வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களை துரத்துவதும் வாடிக்கையானதாகி விட்டன.

தீப ஒளி என்பது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கொண்டாடப்படுவதாக இருக்கக் கூடாது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தீப ஒளியால் நிறைந்து ஒளிமயமாகத் திகழ வேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற வேண்டும். அத்தகைய இலக்கை நோக்கி உழைக்க தமிழக மக்கள் அனைவரும் ஒளி நிறைந்த இந்த நன்னாளில் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மருத்துவர் அய்யா தெரிவித்துள்ளார்...

1000 ரூபாய்க்கு மேல் மது குடிப்பவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் உள்ளிட்ட பொருட்கள் பரிசு, அறிவிப்பு செய்த பார் உரிமையாளர் கைது...


சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில் 1000 ரூபாய்க்கு மேல் மது குடிப்பவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டது.  தகவல் அறிந்த போலீஸார், பார் உரிமையாளரும், அதிமுக பிரமுகருமான முகமது அலி ஜின்னா உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் மதுகடை பார் மேலாளர் வின்செண்ட் ராஜ்,  உதவியாளர் ரியாஸ் அகமது ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன...

ஒருவர் இறந்த பின் மூலாதாரம் வழியே மீண்டும் உள்நுழைய முயற்சிக்கும் ஆவி – அமானுஷ்ய உண்மை...


ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டை விரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள்?

இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டும் என்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டு போய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள்.

ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிற போது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும் போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும்.

மரணம் நிகழ்ந்த பிறகு கூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்று விடுவதில்லை.

எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது.

ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும் போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன.

எனவே, அந்த உடலைச் சுற்றிக் கொண்டு இருப்பது பயன் தராது என்று அந்த உயிருக்குத் தெரிந்து விடுகிறது.

மற்ற சூழ்நிலைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்து போன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.

இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது.

பொதுவாகவே மரணம் நிகழ்கிற போது கால்கள் அகலமாகத் திறந்து கொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும்.

எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.

எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது.

யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும் போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையே தான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள்.

எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.

மூலாதாரம் திறந்திருக்கிற போது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும்.

மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும்.

அதனால் தான் ஒரு மனிதர் இறந்து விட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டை விரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன...

திருட்டு திராவிடத்தின் மக்கள் சேவை என்பது இது தான்...


மக்களே மறந்து விடாதீர்கள். மது வருமானத்தில் ஆளுங்கட்சி அதிமுக,  எதிர்கட்சி திமுக சார்ந்த இருவருக்குமே ஆலை உண்டு...

திமுக வும் விகடன் பத்திரிகை தொடர்பும்...


ஜுவி =  ஸ்டாலின்...

டைம் பாஸ் = அழகிரி..

அவள் விகடன் = கனிமொழி..

சக்தி விகடன் = செல்வி..

பசுமை விகடன் = முத்து..

நாணயம் விகடன் = தமிழரசு..

சுட்டி விகடன் = உதயநிதி..

மோட்டார் விகடன் = துரைதயாநிதி...

திருட்டு திராவிடமும் தமிழின அழிப்பும்...


உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி...


இந்த மணி வில்லியம்ஸ் என்பவரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை நியூசிலாந்தில் வன்ங்காரை நோர்த்லாந்து பிராந்தியத்தில் மாவோரி பெண்கள் உருளைக் கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்தி வந்தனர்.

அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதில் முகையிதீன் பக்குசு கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 

மணி குறைந்தது 600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் ஓரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தக தொடர்பு இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள டே பாபா தேசிய கண்காட்சியகத்தில் [ TE PAPA museum of newzland-ல் ] பாதுக்காக்கப்பட்டு வருகிறது.

குறிப்பு : நியூசிலாந்து அருங்காட்சியத்திற்கு ஒரு வேண்டுகோள்.. இந்த மணியை இந்திய கேட்டால் கொடுக்காதீங்க.. வாங்கி கொண்டு வந்து ஒன்னு தொலைச்சிடுவானுங்க இல்ல ஒடச்சி அழிச்சிடுவானுங்க... தமிழனோட உடமை என்று தெரிந்தால்...

எல்லாம் மாயை...


இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்...


விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.

குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்...

இந்த போட்டோவை விட சிறந்த கதை எதுவுமில்லை சார்...


புரிந்துக் கொள்ள முயலுங்கள்..

இது ஒன்றும் கருத்தியல் திணிப்பு இல்லை..

வெகுசன மக்கள் அனைத்து இடத்திலும் ஒரே போன்று தான் இருக்கின்றனர்...

அம்பேத்கர் ரசிகர்களுக்கு...


அம்பேத்கர் பற்றிய மூட நம்பிக்கைகள் மற்றும் அதன் உண்மைத்தன்மை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

1. அம்பேத்கர் இடவொதுக்கீடு பெற்றுத் தந்தார்...

1882ல் அதாவது அம்பேத்கர் பிறக்கும் முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடங்கிய கோல்ஹாப்பூர் அரசாட்சியில் பிராமணரல்லாத சாதிகளுக்கு முதன்முதலாக இடவொதுக்கீடு ஷாஹு எனும் அரசரால் வழங்கப்பட்டது.

1893 ல் (அதாவது அம்பேத்கர் இரண்டு வயது குழந்தையாக இருந்த போதே) அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான சென்னை மாகாணத்து தலைவர்கள் ஆங்கிலேயருக்கு கோரிக்கை வைத்து 49 சாதிகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலக் கல்வியில் இடவொதுக்கீடு வழங்கச் செய்தனர்.

1927 லேயே இடவொதுக்கீடு அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான மெட்ராஸ் மாகாணத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டது.

இதைப் பெற்றுத் தந்தது சுப்பராயக் கவுண்டர் மற்றும் முத்தையா முதலியார்.

(அதாவது அம்பேத்கர் காந்தியுடன் பூனா ஒப்பந்தம் போட்டு தேர்தலில் 18% தனி தொகுதிகள் வாங்கித் தருவதற்கு 5 ஆண்டுகள் முன்பே).

1935ல் எம்.சி.ராஜா அவர்கள் தெளிவாக வரையறுத்து அதை சட்டமாக்கினார்.

SC 14%,

BC 14%,

Non Brahmin 44%,

Brahmin 14%,

Christian 7%,

Muslim 7%

என்றவாறு 100% இடவொதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.

(அதாவது அம்பேத்கர் ஆங்கில அரசுடன் பேசி 8.33% இடவொதுக்கீடு கொண்டு வந்ததற்கு 7ஆண்டுகள் முன்பே).

தற்போதும் இந்திய ஒன்றியம் முழுவதும்.

SC=15%

ST=7.5%

OBC=27.5

என 50% இடவொதுக்கீடு உள்ள நிலையில்.

தமிழகத்தில் மட்டும்தான்..

BC=26.5%

BCM=3.5% (பிற். இசுலாமியர்)

MBC=20%

SC=15%

SCA=3% (அருந்ததியர்)

ST=1%

என 69% இடவொதுக்கீடு உள்ளது.

(இதற்கு முக்கிய காரணம் பா.ம.க முன்னெடுத்த போராட்டம் ஆகும்).

2. அம்பேத்கர் தலித் என்ற அடையாளத்தின் கீழ் மக்களை ஒன்று திரட்டினார்..

அம்பேத்கர் ஓரிரு முறை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தாலும் அவர் 'தீண்டத்தகாதோர்' என்ற சொல்லாலேயே எப்பொதும் குறிப்பிடுவார்.

ஆவணங்களில் 'சாதியற்ற இந்துக்கள்' என்று குறிப்பிட முன்மொழிந்தார்.

தலித் என்ற வார்த்தை அவர் விரும்பாதது.

(தமிழகத்தில் 'தலித்' என்ற வார்த்தையும் 'தாழ்த்தப்பட்ட' என்ற வார்த்தையும் 1981ல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளன).

3. அம்பேத்கர் சுதந்திரத்திற்காக போராடினார்..

அம்பேத்கர் இறுதிவரை ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்தவர்.

காந்தியை எதிர்கொள்ள ஆங்கிலேயர் அவரை பயன்படுத்தினர்.

ஆங்கிலேயர் வெளியேறியதும் அவர் இந்துத்துவத்திற்கு மாறினார்.

அம்பேத்கர் இந்து மதத்தை அதன் சாதிய கட்டுமானத்தை எதிர்த்தார்...

தொடக்கத்தில் அவ்வாறு இருந்தாலும் பிறகு நிறம் மாறினார்.

இசுலாமியரை நம்பமுடியாதவர்கள் என்றும் இந்துக்களின் எதிரி என்றும் கூறி பாகிஸ்தானை பிரிக்கவும் முழு ஆதரவளித்தார்..

ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்ற இந்துத்துவ - இந்திவெறி கொள்கையை முன்வைத்தார்.

பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களை இந்துமதத்தின் பிரிவுகள் என்றாக்கி அவர்களை சட்டபடி இந்துக்களாக ஆக்கினார் (சட்டம்-25).

சமஸ்கிருதத்தை ஆட்சிமொழி ஆக்க முயற்சிகளை மேற்கொண்டார் (6,7,8).

4. அம்பேத்கர் சாதி அடையாளத்தை உதறியவர்...

நிச்சயமாக இல்லை.

தனது சாதி பட்டத்தை மறைத்து அம்பேத்கர் எனும் உயர்சாதி பட்டத்தைப் போட்டுக் கொண்டாலும்.

இறுதிவரை தமது சாதியான மகர் சாதிக்கு முடிந்தவரை போராடினார்.

அவருக்கு முதலில் கிடைத்த பெரிய பதவி 1941ல் 'பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்' பதவியாகும்.

அவர் செய்த முதல் வேலை ராணுவத்தில் மஹர் படையணி என்று ஒன்றை உருவாக்கியது ஆகும் (1941).

அது இன்றும் உள்ளது.

5. அம்பேத்கர் மொழி இன அடையாளங்களைக் கடந்தவர்...

இதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் முழுமையாக அப்படி கூறமுடியாது.

பாம்பே (மும்பை) நகரம் குஜராத்தியர் கைக்கு போக இருந்தது.

தன் இனத்தின் தலைநகரமான அதை தனது இனமான மராத்தியர்களுக்கே கிடைக்கச் செய்ததில் அம்பேத்கரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

அப்போது அந்நகரம் குஜராத்திய பெரும்பான்மை மாநிலத்துடன் இணைந்திருந்தது.

சொத்துகள் அனைத்தும் குஜராத்தியர் வசமிருந்தன.

மராத்தியர் எண்ணிக்கை அந்நகரில் பாதி கூட இல்லை.

அதற்கு முந்தைய மராத்திய பேரரசிலும் அந்நகர் இல்லை.

மாநில எல்லைகள் புனரமைப்பின்போது மராத்திய மொழிவழி மாநிலம் அமைவது பற்றி அவர் சமர்ப்பித்த ஆவணம்(3) மராத்தியருக்கு மும்பையை பெற்றுத்தந்தது.

அதன் வரலாற்றுப் பெயரான மகாராஷ்ட்ரா என்ற பெயரும் அவரால் பரிந்துரைக்கப்பட்டு சூட்டப்பெற்றது.

6. அம்பேத்கர் தமிழ் மீதும் தமிழர் மீதும் அன்பு கொண்டிருந்தார்...

இல்லை. தமிழ் மூத்தமொழி என்று கூறினார் தான்.

ஆனால் மூத்த குடி என நாகர் எனும் இல்லாத இனத்தைக் கூறினார்.

தமிழகம் உட்பட மொழிவழி மாநிலம் அமையவிருந்தபோது எதிர்த்தார்.

மொழிவழி மாநிலங்கள் இந்தியாவை துண்டுதுண்டாக உடைக்கும் என்று எச்சரித்தார்.

மொழி உரிமைகளை அவர் வழங்கக்கூடாது என்று கூறினார்.

காஷ்மீருக்கு தன்னாட்சி வழங்கும் சிறப்பு சட்டத்தை (பிரிவு- 370) நேரு சொல்லியும் எழுதித்தர அவர் மறுத்தார் (பிறகு கோபாலசாமி ஐயங்கார் எழுதினார்).

தமிழ் ஆட்சிமொழி ஆக காயிதே மில்லத் அவர்கள் வாக்கெடுப்பு நடத்தி தமிழ் 72ம் இந்தி 73 வாக்குகளும் பெற்றதை அதிர்ச்சியுடன் குறிப்பிட்டு இந்தியை நாடு முழுவதும் திணிப்பதற்கு முழு ஆதரவு வழங்கினார்.

7. அம்பேத்கர் இந்தியா முழுவதற்குமான தலைவர்...

அம்பேத்கர் அவரது வாழ்நாளில் மக்கள் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தது இல்லை.

தேர்தலிலும் கூட தோற்றுதான் போனார்.

அவர் தொடங்கிய இயக்கங்களும் பரவலான ஆதரவைப் பெறவில்லை.

அவருக்கு கிடைத்த பதவிகள் ஆங்கிலேயரோ அல்லது காங்கிரசோ அளித்த வாய்ப்பு தான்.

8. அம்பேத்கர் ஒழுக்கமானவர்...

அம்பேத்கர் தமது 57 வயதில் தமக்கு மருத்துவம் பார்த்த தன்னை விட 19 வயது இளையவரான ஒரு பிராமணப் பெண்ணை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டவர்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இறந்தும் போனார்.

9. அம்பேத்கர் சாதியொழிப்பில் முன்னோடி...

முதல் சாதி ஒழிப்பு மாநாடு தமிழகத்தில் 1891ல் அயோத்திதாசர் அவர்களால் நீலகிரியில் நடத்தப்பெற்றது.

சாதி ஒழிப்பில் தமிழகமே முதலடி எடுத்து வைத்தது.

எம்.சி.ராஜா 1927ல் எழுதிய 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து.

'The Untouchables' எனும் நூலாக 1948ல் வெளியிட்டார் அம்பேத்கர்.

இதேபோல 1907 ல் அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய 'புத்தரும் அவரது ஆதிவேதமும்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து..

'The Buddha and his dhamma' என்ற புத்தகமாக அம்பேத்கர் எழுதி (அவர் இறந்த பிறகு அது) 1957ல் வெளிவந்தது.

நகலெடுத்து தமது பெயரில் போட்டுக் கொண்டது கூட பரவாயில்லை.

அந்த சிந்தனை எங்கே கிடைத்தது என்று பின்னிணைப்பில் கூட அவர் மேற்கண்ட தமிழர்களை மேற்கோள் காட்டவில்லை.

10. அம்பேத்கர் தீண்டாமையை எதிர்த்ததில் முதல் ஆள்...

வடயிந்தியா அளவு தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்றாலும்,

1923 ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரெட்டமலை சீனிவாசன் பொது இடங்களில் பட்டியல் சாதியினர் நடமாட தடையில்லை என்று அரசாணை வெளியிட்டது தீண்டாமைக்கு எதிரான குறிப்பிடத் தகுந்த முதல் நடவடிக்கை ஆகும்.

11. அம்பேத்கர் வந்த பிறகு தான் பறையர் முன்னேறினர்...

நிச்சயமாக இல்லை.

அம்பேத்கர் அரசியலுக்கு வரும் முன்பே பறையர்கள் கல்வியிலும் அரசியலிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து விளங்கினர்.

சொல்லப் போனால் அம்பேத்கருக்கு முன் அவரது இடத்தில் இருந்தவர் எம்.சி.ராஜா எனும் பறையர் தான்.

12. அம்பேத்கர் ஆரியர்களை எதிர்த்தார்...

அம்பேத்கர் ஆரிய கட்டுக்கதையை நிராகரித்தவர்.

பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து மனுஸ்மிருதி எரிப்பு போராட்டத்தை நடத்தியவர்.

பிராமணர் ஆரியர் என்பதையோ வேற்றினம் என்பதையோ அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

13. அம்பேத்கர் புத்தமதத்தை சாதியை ஒழிக்கும் தீர்வாக முன்வைத்தார்...

அம்பேத்கர் இயற்றிய சட்டப்படி புத்தமதம் இந்து மதத்தின் பிரிவே.

ஒரு இந்து புத்தமதத்திற்கு மாறினாலும் சட்டப்படி அவரது சாதி மாறாது.

உயர்சாதி இந்துக்களுடன் சண்டை போடுகிறேன் அதற்காக நான் இந்து இல்லை என்று ஆகாது.

பாகிஸ்தான் முஸ்லீம்களால் ஆபத்து வந்தால் இந்தியாவிற்காக உயிரைக் கொடுத்து போராடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இறப்பதற்கு 50 நாட்கள் முன்பு அவர் லட்சக்கணக்கான மக்களோடு புத்த மதத்தைத் தழுவிய போது எடுத்த 22 உறுதிமொழிகளில் சாதி பற்றி எதுவுமே இல்லை.

அம்பேத்கருக்கு ஃபேர் அண்ட் லவ்லி போட்டு வெள்ளையாக்கி கோட்சூட்டுடன் வரைந்து..

தம்மை உயர்த்திய தலைவர் அவரென்றும் தம்மை தலித் என்றும் கூறிக்கொண்டு..

வரலாறும் உண்மையும் தெரியாமல்..

மற்ற எந்த சாதிவெறி கும்பலுக்கும் சளைக்காத அலப்பறை செய்யும் அம்பேத்கர் ரசிகர்களே..

இனியாவது திருத்துங்கள்..
இதிலுமா வடக்கத்திய மோகம்..

1. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 2.

2. Thoghts on linguistic states

3. Maharashtra as linguistic

4. Who were the untouchables?

5. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 1. page: 213 & 214)

6. Statesmen, 11th September 1949

7. The National Herald (11.09.1949)

8. The Hindu (11.09.1949)

9. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 15. page: 130 - 143)...

டெங்குவால் தினமும் தொடரும் உயிரிழப்பிற்கு ஆட்சியாளர்களே காரணம்...


எப்பொழுதும் டயர்டா இருக்கா.? அப்போ இது உங்களுக்கு தான்..


இந்த அவசர உலகில் பெரும் பாலானோர் அடிக்கடி சலிப்புடன் பயன்படுத்தும் வார்த்தை ரொம்ப டையர்டா இருக்கு என்பது தான்..

இந்த சோர்விற்கு காரணம் எல்லா நேரங்களிலும், வெறும் சமைத்த உணவை மட்டுமே சாப்பிடுவது தான்.

நாம் எடுத்துக் கொண்ட உணவுகளை ஜீரணிக்க, ஜீரண உறுப்புகள் படாதபாடு படுகின்றன.

அதனால் நச்சு உடலிலேயே தங்கி உடலுக்கு பல தீங்குகளை ஏற்படுத்துகிறது.

மேலும், வயிறு நிரம்ப உணவு சாப்பிட்டு விட்டால் பணியில் கவனம் செலுத்த முடியாது.

உயிர் சக்தி எல்லாம், உணவை ஜீரணம் செய்வதற்காக செலவு ஆகுவதால் மூளைக்கு செல்ல வேண்டிய சக்தி தடைபடுகிறது.

இதனால் அதிக உயிர் சக்தியை பணியில் செலுத்த வேண்டிய கட்டாயத்தினால் மனசோர்வு ஏற்பட்டு பின் உடல் சோர்வு ஏற்படுகிறது.

சோர்வை தவிர்க்க...

ஒரு நாளில் ஒரு வேலையாவது பச்சை காய்கறி சேலட், பழங்கள், முளைகட்டிய தானியங்கள் என ஏதாவது இயற்கை உணவுப் பொருளை உண்ன வேண்டும்.

மதியம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து, 11 மணிக்கு, மற்றும் 4 மணிக்கு ஏதாவது பழங்கள் சாப்பிடவும்.

இதனால் வயிற்றை கிள்ளும் பசி என்பது இருக்காது. இதன் மூலம் பசியால் ஏற்படும் சோர்வு இருக்காது.

மேலும், மதியம் சாப்பிட்ட பின் சிறிது தூரம் நடந்தால் மிகவும் நல்லது. இதனால் இரத்த ஓட்டம் சீரடைந்து உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு அடையும்.

சோர்வு நீங்க...

பணி முடித்து வீட்டு வரும் பொழுது வேளைப் பளுவினால் ஏற்படும் சோர்விற்கு ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடனே உடல் புத்துணர்ச்சி பெற்று விடும்.

ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவதால் கொடிய காய்ச்சல் கூட குணமடைந்து விடும்.

நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல் சோர்வு போக்கலாம்.

வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது.

நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில் மற்றும் நடுவினில் வைக்கும் பொழுது அதன் செயல் நேரடியாக நமது உடம்பில் வினை புரியும்.

உங்கள் இரத்தத்தை நன்கு சுத்தம் செய்யும் மற்றும் உங்கள் வயற்றில் இருக்கும் நச்சுக்களையும் உறிஞ்சிவிடும்.

அக்கரகாரச் சூரணத்தில் சம அளவு உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர உடல் சோர்வு உடனடியாக நீங்கும்...

நீங்கள் வாழ்வது பெண்களுடனா அல்லது பிசாசுகள் கூடவா?


இந்த கருத்தை ஏற்காத ஆண்கள் தங்கள் மனைவியை அல்லது சகோதரி மற்றும் தாயை ஒருவார காலம் எங்காவது அனுப்பிவிட்டு வீட்டில் வசிக்கவும்..

அதன் பின் மயானமாகத் தோன்றும்..

அப்படி தோன்றவில்லை என்றால் நீங்கள் வாழ்வது பெண்களுடன் அல்ல பிசாசுகள் கூடத்தான்...

கடவுள் சிலை இல்லாத இடத்தை எப்படி கோவிலாக கருத முடியாதோ..

அது போலத் தான் பெண்கள் இல்லாத இடத்தையும் வீடாக கருத முடியாது...

ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும் - நம்மாழ்வார்...


எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் தெரியுமா?


நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது.

கடிகளைக் கண்டறிதல்..

இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்… வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்… கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்…

தேள் கடி மருந்துகள்..

எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும். கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும்.

பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும். குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும். சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர். நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும். பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

வெறி நாய் கடித்து விட்டால்..

நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

பாம்பு கடித்து விட்டால்..

உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்க வைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழிய வேண்டும். சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில் படுக்க வைத்தவன் பல் கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.

எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க..

நாயுருவியின் விதையை வீசும் படி எடுத்து வெய்யலில் காய வைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும்.

இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும். உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம் வெளியேறிவிடும்.

வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும்.

சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது.
நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் மருந்துண்டு...

தமிழா.. நீ இந்தியனும் இல்லை.. திராவிடனும் இல்லை...


தமிழன் என்று சொல்லுவதே பெருமை....


தமிழில் எத்தனை வகைகளாக நாம் சொல்ல முடியும்? சொல்லும் வகைகள் குறித்து தேவநேய பாவாணர்..

நூல் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம்...

தீய பழக்கங்களில் இருந்து விடுபட ஆழ்மனப் பயிற்சி...


ஆழ்மனதின் அற்புத சக்திகளை ஆரம்பத்தில் இருந்து விளக்கமாகப் பார்த்தோம். அந்த சக்தியை அடைய உதவும் பயிற்சிகளை அறிந்து வரும் இந்த வேளையில் ஒரு மிக முக்கியமான உண்மையை நாம் உணர வேண்டும்.

ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்தது என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.
ஆனால் அது நன்மை தரும் சக்தியாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அது தீமையின் ஊற்றாகக் கூட இருக்கலாம். அது வரமாகலாம். சாபமுமாகலாம். அது எப்படி என்பதையும் அதை சாபமாக்கிக் கொள்ளாமல் வரமாக்குவது என்பதற்கான பயிற்சியையும் இப்போது பார்க்கலாம்.

மேல்மனம் மூலமாகத் தான் ஆழ்மனம் தகவல்களைப் பெறுகிறது. அது மேல்மனம் எப்படிச் சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு நினைவு வைத்துக் கொள்கிறது. நல்லது, கெட்டது, இனிமையானது, சகிக்க முடியாதது என்று எப்படியெல்லாம் மேல்மனம் அடைமொழிகளோடு செய்திகளை நினைக்கிறதோ அதே அடைமொழிகளோடு அந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பினும் அது தனியாக சிந்தித்தறியும் வேலையை செய்வதில்லை.

ஆழ்மனம் தான் நம் பழக்க வழக்கங்கள் பதிந்திருக்கும் இடம். நம்மை உண்மையாக இயக்குவது அது தான். கவனத்தோடு சிந்தித்து செயல்படும் போது மட்டுமே நாம் மேல்மன ஆதிக்கத்தில் இருக்கிறோம். மற்ற சமயங்களில் நாம் ஆழ்மன தகவல்கள் படியே இயக்கப்படுகிறோம்.
உதாரணத்திற்கு ஒரு வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது மேல் மனம் கவனமாக இருந்து ஒவ்வொன்றையும் செய்கிறது. அந்தத் தகவல்கள் ஆழ்மனதில் சேகரிக்கப்படுகிறது. ஆழ்மனம் அதைப் பழக்கமாக்கிக் கொள்கிறது. பின் நாம் மேல்மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் நம்மையறியாமலேயே வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கிறோம். இனி வாழ்நாள் பூராவும் வாகனம் ஓட்டும் விதம் குறித்து மேல்மனம் கவலைப்பட வேண்டியதே இல்லை.

இது போன்ற வேலைகளை அற்புதமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடுவதால் தான் நமக்கு வாழ்க்கை சுலபமாகிறது. இல்லாவிட்டால் நடப்பது, வண்டி ஓட்டுவது, சட்டைக்குப் பட்டன்கள் போட்டுக் கொள்வது போன்ற அன்றாட வேலைகளைக் கூட முதல் முதலில் செய்வது போலவே ஒவ்வொரு முறையும் நாம் சிரமத்துடன் செய்ய வேண்டி இருக்கும். எனவே இது போன்ற தேவையான பழக்கங்களும், வேறு நல்ல பழக்கங்களும் அமைய உதவும் போது ஆழ்மனம் நமக்கு வரப்பிரசாதமே.

தகவல்களை உள்ளே அனுப்பும் வேலையை மட்டுமே மேல்மனம் முக்கியமாகச் செய்கிறது. ஆழ்மனம் அது சொல்கிற படியே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதால் அனுப்பும் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் பெரும் பொறுப்பு மேல்மனத்திற்கு உண்டு. ஆழ்மனம் வரமாவதும் சாபமாவதும் மேல்மனதின் இந்தத் திறனைப் பொறுத்தே அமையும். மேல்மனம் அந்தத் திறன் பெற்றிராமல் இருந்தால் மற்றவர்கள் சொல்வதையே அல்லது தோற்றத்தில் தெரிவதையே உண்மை
என்று எடுத்துக் கொண்டுவிடும். ஆழ்மனமும் அதை அப்படியே பதிவு செய்து கொள்ளும். எடுத்துக் கொள்வது தவறான செய்திகளும், நம்பிக்கைகளுமாக இருந்தால் பின் ஆழ்மனம் மூலமாக தீமைகளே விளையும் என்பதில் சந்தேகமில்லை. எத்தனையோ கொடுமையான செயல்களைச் சிறிதும் உறுத்தல் இன்றி செய்ய சில தீவிரவாதிகளாலும், கொடியவர்களாலும் எப்படி முடிகிறது என்ற கேள்விக்கு இங்கு தான் பதில் கிடைக்கிறது.

மதம் என்ற பெயரிலும், கொள்கை என்ற பெயரிலும் இளமையிலேயே மூளைச்சலவை செய்து தவறான, வெறுப்பு விதைகளை நியாயமானவைகளாக ஆழ்மனதில் விதைத்து இப்படித் தான் சமூக விரோதிகள் தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள்.

ஆழ்மனம் என்ற அரண்மனைக்கு மேல் மனம் தான் வாட்ச்மேன். யாரை உள்ளே விடுவது, யாரை உள்ளே விடக்கூடாது என்பதை அது தான் தீர்மானிக்க வேண்டும். அது பொறுப்பற்று இருந்தால், கவனக்குறைவோடு இருந்தால் யார் யாரோ உள்ளே நுழைந்து அரண்மனைச் சொத்துகள் சூறையாடப்பட்டு தீய வழிக்குப் பயன்படுத்தப்படும். உள்ளே விட்ட எதையும் வெளியேற்றுவது மேல்மனதிற்கு அவ்வளவு சுலபமல்ல.

நம்முடைய எல்லா தீய பழக்கங்களும் இப்படி உருவானவை தான். அதில் இன்பம் கிடைக்கிறது என்ற செய்தியை உள்ளே அனுப்பி அதில் ஆரம்பத்தில் ஈடுபடுகிறோம். அதில் நமக்குக் கட்டுப்பாடும் இருப்பதாக ஒரு தோன்றல் கூட ஆரம்பத்தில் சிலருக்கு இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அவர்கள் எண்ணுவதுண்டு. ஆனால் ஆழ்மனதில் பதிந்து அது பழக்கமாக மாறி விட்ட பின்னர் அதைக் களைவது கிட்டத்தட்ட முடியாத காரியமே. இது போன்ற தீய பழக்கங்களை அமைத்துக் கொண்டு நாம் கஷ்டப்படும் போது ஆழ்மனம் ஒரு சாபக்கேடே.

’நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்று ஒரு குடிகாரன் சபதம் எடுத்துக் கொண்டு மறு நாள் மறுபடி போதையுடன் வருவதைப் பார்த்து பலரும் கிண்டல் செய்கிறோம். ஆனால் அந்தக் குடிகாரன் அந்த சபதம் எடுக்கையில் உண்மையான ஆர்வத்துடன் இருந்திருக்கக்கூடும். மறுநாள் அந்த சந்தர்ப்பம் வரும் போது ஆழ்மனம் அந்த செயலுடன் மகிழ்ச்சியைப் பிணைத்து வைத்து இருப்பதால் குடிக்காமல் இருப்பது அந்த குடிகாரனுக்கு முடியாமல் போகிறது.

நல்ல புத்தகங்களைப் படிக்கையிலும், பெரியோர் பேச்சுகளைக் கேட்கையிலும் அந்த கணத்தில் நல்ல முறையில் எதிர்காலத்தில் இருந்து விட நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. ’இனி மேல் கோபப்பட மாட்டேன்’, ’இனி மேல் தவறான வழிகளில் ஈடுபட மாட்டேன்’ என்றெல்லாம் நாம் உறுதியுடன் நினைப்பதுண்டு. ஆனால் மறுநாளே நாம் பழைய படியே நடந்து கொள்வதற்குக் காரணமும் ஆழ்மனமே. முதலிலேயே பதித்து வைத்திருந்த தகவல்களையும், நம்பிக்கைகளையும் வேரோடு பிடுங்கி எறிகிற வரை நாம் எந்த விதத்திலும் மாறி விடப் போவதில்லை.

எனவே தவறான பழக்கங்களில் ஈடுபடும் முன்பே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மேல்மனம் விழிப்புணர்வோடு இருந்தால் அந்த தவறான விதைகளையே உள்ளே விடாமல் தடுப்பது மிக எளிதான விஷயம். விதைக்காமலேயே இருந்தால், அறுக்கவும் தேவை இல்லை. பின் வேரோடு பிடுங்கப் போராடவும் அவசியம் இல்லை.

சரி, நாம் ஒரு முறை தவறாக பழகி விட்ட எதிலிருந்தும் விடுபட முடியாதா, தீய பழக்கங்களைக் களைய முடியாதா என்றால், கஷ்டமானாலும் முடியும் என்பது தான் நல்ல செய்தி. எப்படி என்பதைப் பார்ப்போம்.

முதலில் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள். நாம் முன்பு பார்த்த மூச்சு சீராகும் பயிற்சியையும், ஏதாவது ஒரு தியானத்தையும் செய்து அமைதியான மனநிலையில் இருங்கள்.

பிறகு, முதலில் நாம் நம் ஆழ்மனதில் பதிய வைத்திருந்த தவறான செய்திகளுக்கு எதிர்மாறான நல்ல, உணர்வு பூர்வமான செய்திகளை ஆழ்மனதிற்கு அனுப்ப வேண்டும். அந்தப் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை, அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை மிகவும் விவரமாக மனதில் திரும்பத் திரும்ப எண்ணுங்கள். அந்தக் கஷ்டங்களை எல்லாம் அந்த பழக்கத்தோடு இணைத்துப் பாருங்கள். அந்தப் பழக்கத்தால் கஷ்டப்பட்ட நிகழ்ச்சிகளை உங்கள் மனதில் நிதானமாக ஓட விடுங்கள். உங்கள் பழக்கத்தால் நீங்கள் மிகவும் நேசிக்கும் மனிதர்கள் அடையும் துன்பங்களையும் படமாக மனதில் ஓட விடுங்கள். மனம் அதைச் செய்ய மறுத்து முரண்டு பிடிக்கும். ஆனாலும் உறுதியாக அதைச் செய்யுங்கள். உண்மையாக நேர்ந்தவற்றை அப்படி சினிமா பார்ப்பது போல் கசப்பாக இருப்பினும் மனதில் ஓட விடும் போது அதன் தாக்கம் மனதில் விரைவில் ஆழப்படும்.

அடுத்ததாக அந்தப் பழக்கம் மட்டும் இல்லை என்றால் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படும் மகிழ்ச்சியையும், மேன்மையையும் ஆழமாக சிந்தியுங்கள். அந்தப் பழக்கத்திலிருந்து நீங்குவதுடன் அதையெல்லாம் இணைத்து மனதில் பதியுங்கள். சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டது போல மனதை ஒருமுனைப்படுத்தி இப்படி இரண்டு விதமாகவும் ஆழமாக சிந்தித்து ஆழ்மனதில் பதிய ஆரம்பியுங்கள்.

இத்தனை நாட்கள் அந்தப் பழக்கத்துடன் சுகத்தையும், அதை விடுவதுடன்
அசௌகரியத்தையும் இணைத்து பதிய வைத்திருந்த ஆழ்மனம் இந்தப் புதிய நேர்மாறான செய்தியை உள்ளே பதித்துக் கொள்ளத் துவங்கும். அப்படி புதிய செய்தி ஆழமாகப் பதியும் வரை இதைத் தொடர்ந்து செய்யுங்கள். அத்துடன் அந்த பழக்கத்திலிருந்து விடுபட்டு முழுக் கட்டுப்பாட்டுடன் நீங்கள் இருப்பது போலவும், அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளாக நீங்களும், உங்களை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருப்பது போல் ஒரு கற்பனைக் காட்சியையும் மனதில் முடிந்த வரை தத்ரூபமாக எண்ணுங்கள். இந்த பயிற்சி காலம் வரை அந்தப் பழக்கத்தில் ஈடுபடாமல் இருக்க உங்களுக்கு உண்மையான ஆர்வமும், மன உறுதியும் தேவை. அது மட்டும் முடிந்தால் சில நாட்களிலேயே அந்த தீய பழக்கத்திலிருந்து சுலபமாக விடுதலை பெற்று விடலாம்.

(மனவியல் அறிஞர்கள் இது போன்ற புதிய பழக்கங்கள் நம்மிடம் வெற்றிகரமாக நிலைத்து நிலைக்க துவக்கத்தில் 21 நாட்கள் விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்தல் அவசியம் என்கிறார்கள்.).

எத்தனை ஆண்டுகளாக உங்களிடம் இருந்தாலும் சரி தீய பழக்கங்களையும், பலவீனமான குணாதிசயங்களையும் இந்த முறையில் நீங்கள் உங்களிடமிருந்து விலக்கி விடலாம்.

மேலும் பயணிப்போம்.....

தீபாவளி - கொஞ்சம் யோசிங்க பாஸ்...


தீபாவளி கொண்டாடுவது தப்பில்ல. ஆனா, கொஞ்சம் புத்திய பயன்படுத்தி அது ஏன் கொண்டாடப்படுதுனு தெரிஞ்சிக்கிட்டு கொண்டாடு...

செம்மறி ஆடு மாதிரி பாட்டன், பூட்டன் கொண்டாடினாங்க, நானும் கொண்டாடுரனு சொல்லக்கூடாது...

கொஞ்சம் யோசிங்க பாஸ்...

சிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு...


சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர

உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்...

பாமக வும் உண்மையும்...


பாஜக அடிமை அதிமுக வின் ஈபிஎஸ் - ஓபிஎஸ் சின் தமிழின அழிப்பு...


தமிழ்நாட்டில் இதுவரை  அமைந்த அரசுகளிலேயே மிக மோசமான அரசாக வரலாற்றில் எழுதப்படப் போவது இந்த ஈபிஎஸ் - ஓபிஎஸ்  அரசாக‌ இருக்கும்.

ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆட்சியில் தமிழர்கள் ஒவ்வொரு உரிமையாக இழந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது TNPSC...

திமுக வும் திருட்டு அரசியலும்...


தனது குழந்தையை அங்கன்வாடி மையத்தில் சேர்த்த கலெக்டர்.. குவியும் பாராட்டு...


உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்ட கலெக்டராக இருப்பவர் ஸ்வாதி. இவரது கணவர், நிதின் பதோரியா, அல்மோரா மாவட்ட கலெக்டராக உள்ளார்.

இவர்களது மகன் அங்பயுதயை (3). இந்நிலையில், கலெக்டர் தம்பதிகள், தங்களது பிள்ளையை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தகண்ட் மாநில சமோலி மாவட்ட கலெக்டர் ஸ்வாதி, தனது மகன் அப்யுதயை, கோபேஷ்வர் நகரில் உள்ள, அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் ஸ்வாதி கூறியதாவது, அங்கன்வாடி மையத்தில், அனைத்து வசதிகளும் உள்ளன. மற்ற குழந்தைகளுடன் பேசி, பழகி, ஒன்றாக அமர்ந்து உணவருந்த முடியும்.

எதிர்காலத்தில், பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி, அனைவருடன் எளிதாக பழகுவதற்கு, இது உதவும். அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதன் மூலம், அரசு அங்கன்வாடி மையத்தை பற்றிய மக்களின் அணுகு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்...

உயிருக்கு நேரம் குறித்து.. வரவுக்கு கணக்கு பார்ப்பது தான் நீதித்துறை & அதிமுக வின் மக்கள் நலனா....?


சர்கார் திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற தமிழ் ராக்கர்ஸ் சவாலை முறியடிப்போம் - திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்...


அடேய் அடேய் கண்டவன் கை கால பிடிச்சு வாங்குன கதடா. கண்டத பேசி மொத்தமா மண்ணல்லி போட்டுராதீங்கடா அப்பரசண்டிகளா...

திமுக ஸ்டாலின் சுவிஸ் வங்கியில் 10,500 கோடி பதுக்கல்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


இந்த ஓவியம் - 1595 இல் வென்ச்சுரா சில்லிம்பெனியத்தால் வரையப்பட்ட நற்கருணை ஓவியம். இது இத்தாலியில் புளோரன்ஸ் என்ற நகரத்தில் உள்ளது. பரிசுத்த இயேசு, கடவுள் மற்றும் பரிசுத்த ஆவியானவர் இருக்கும் திரித்துவ ஓவியம்.

ஆனால் இந்த ஓவியத்தில் சதித்திட்ட கோட்பாட்டாளர்கள், வேற்றுகிரக கோட்பாட்டை அவர்கள் கண்டிருக்கிறார்கள், அவர்கள் இந்த ஓவியத்தில் இருவருக்கிடையே இருக்கும் கோளப்பொருளானது, பரிசுத்தமான கடவுள் எதிர்கால தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்ததை காட்டுகிறதாக கூறுகின்றனர்.

சோவியத் யூனியன் 4 அக்டோபர் 1957 அன்று ஸ்க்ருட்னிக் ஒரு நீள்வட்ட குறைந்த பூமி கோளப்பாதைக்குள் நுழைந்த முதல் புவி செயற்கைக்கோள் என்பது நமக்கு தெரியும்.

"ஸ்டீவ் மேரா" என்பவர் புலனாய்வு அசோசியேஷன் (MAPIT) என்ற அமைப்பின் தலைவராக உள்ளார், இது இங்கிலாந்தின் மிகப்பெரிய அமானுட அமைப்புகளாகும்.

அவர் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டார், அவர் இந்த ஓவியம் பற்றிய தன் கோட்பாட்டை விளக்கினார். அவர் கூறினார்: "நாங்கள் வேற்றுகிரக பறக்கும் பொருள், உயிரினங்கள் நிகழ்வுடன் இணைந்த பல மதக் கருத்துக்களை கண்டுபிடிக்கத் தொடங்கியுள்ளோம்.

இந்த ஓவியம் (நற்கருணை) என்ற அடிப்படையில் வரையப்பட்டது. அதில் உள்ள கோளப்பொருள் பூமி சுற்றுவதற்கு அனுப்பிய முதல் செயற்கைகோளாக இருந்த ஸ்பூட்னிக்கினைப் பார்க்கும் வரை, அது ஒரு ஓவியம் என்று தான் அறிந்திருந்தனர். உண்மையிலேயே மிகவும் சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால், ஓவியத்தில் உள்ள கோளப்பொருள். அப்படியே ஸ்பூட்னிக் செயற்கைகோளை வியக்கத்தக்க வகையில் ஒத்திருக்கிறது என்பது தான். அங்கே உள்ள சிறிய கோடுகளும் அப்படியே ஒத்துப்போகிறது.

ஓவியம் வரைந்தபோது, ஸ்பூட்னிக் குறித்து எந்தவித அறிவும் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை.
அவர் மேலும் கூறினார்: "அநேக மக்கள் வேற்றுகிரக நிகழ்வுகளை பற்றி முன்னோக்கியே வந்துள்ளனர், மேலும் அவர்களுடனான தொடர்பு.  அவர்கள் அடிக்கடி வருகிறார்கள் அல்லது வருங்கால நிகழ்வுகள் பற்றி தெரிவிப்பதாக கூறுகின்றனர்.
மேலும் இது ஒரு வித்தியாசமான தற்செயலானதா, இருக்கவும் வாய்ப்பில்லை, ஏன் என்றால்? ஓவியம் நிச்சயமாக இயந்திரமயமாக்கல் காலமான 1800 களில் வரையப்படவில்லை"

ஸ்டீவ் மேரா அவர்கள் பல யோசனைகளை காற்றில் மிதக்க விடுகிறார்.

அவர் தண்ணீரைக் திராட்சை ரசமாக மாற்றி, தண்ணீரில் நடமாடி, இறந்தவர்களையும் உயிர்தெழ செய்ய முடிந்தால், அவர் ஏன் காலத்தை கடந்து பயணிப்பவராக இருக்க முடியாது...

பாஜக பொன் ராதா கலாட்டா...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


1964, ஏப்ரல் 24 ஆம் தேதி பிற்பகுதியில், நியூ மெக்ஸிகோவில் உள்ள சோக்கரோவின் தென்பகுதியை ஆப்பிரிக்கர் "லோன்னி சாமோரா" ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது,
ஒரு கர்ஜனை அவரது காதுகள் கிழித்து. மற்றும் தென்மேற்கு வானத்தில் ஒரு சுடர் இறங்குவதும் தெரிந்தது.  ஜமோரா அந்த தளத்தை நோக்கி தன் வாகனத்தை ஓடினார், சிறிது தொலைவில் தரையில் பளபளப்பான வெள்ளை நிற முட்டை வடிவிலான  பொருள் இறங்குவது. அதில் வெள்ளை நிற மூடுபனி போன்ற தோற்றத்தில் இரண்டு சிறிய நபர்கள் தங்கியிருப்பதையும் கண்டார்.

ஒரு மலைக்குப் பின்னால் ஜமோரா விசித்திரமான பொருள் மற்றும் அதில் இறங்கிவர்களின் செயல்பாடுகளை கண்டார். முட்டை வடிவ மற்றும் நான்கு கால்கள் நின்ற, அந்த பொருளின் பக்கவாட்டில் ஒரு விசித்திரமான முத்திரை கண்டார், ஒரு அம்புக்குறி கிரீடம் போன்றும் அம்புகுறி கீழே கிடைமட்ட அடிப்படை மூன்று கோடுகள் இருந்ததை கண்டார்.

மேலும் பொருளானது தங்கள் வந்த பணி நிறைவடைந்நதும். மீண்டும் அதே அச்சுறுத்தும் கர்ஜனையில் நெருப்பை உமிழ்ந்துக் கொண்டு விண்ணை நோக்கி பறந்தது சென்றது.

ஜமோராவின் இந்த பறக்கும் தட்டு பார்வையானது உள்ளூர் பத்திரிகைகளில் பிரபலமானது. யுஎஃப்ஒ விமானப்படை திட்டத்தின் ப்ளூ புக் அமைப்பின் கவனத்தையும் ஈர்த்தது. ஜமோராவின் நம்பகத்தன்மையைக் கொண்டு புலனாய்வாளர்கள் ஈர்க்கப்பட்டனர். அவர்கள் உடல் சான்றுகளால் ஈர்க்கப்பட்டனர். எனினும், அசாதாரண எதுவும் நடக்கவில்லை. கதிரியக்கத்திற்கும் அவர்கள் சோதிக்கப்பட்டனர், ஆனால் கதிரியக்க அளவுகள் சாதாரணமாக இருந்தன. தளத்தில் காணப்பட்ட எரிக்கப்பட்ட பொருட்களை ப்ளூ புக் விஞ்ஞான ஆலோசகர், டாக்டர் ஜே. ஆலன். ஆராய்ந்து இது அசாதாரணமானது என்று கூறினார்.

மேலும் அமெரிக்க வானூர்தி திட்டத்தின் ப்ளூ புக் இலிருந்து, ஜமோரா தான் கண்ட வடிவங்களையும், முத்திரைகளையும் அவர்களிடம் வரைந்து காட்டினார்.

இதுவரை அறியப்படும் (சாம்பல்நிற பிறவி, ஊர்வன இனம், நொர்டிக்) வேற்றுகிரக இனங்கள் பட்டியலில் ஜமோரொ வரைந்த ஓவியங்களில் காணப்படவில்லை.மேலும் அவர் அந்த பறக்கும் பொருளின் பக்கவாட்டில் உள்ள அம்புகுறிகளை வரைந்து காட்டியது. அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியது. இந்த குறியீடுகள் விண்வெளிக்கு சம்பந்தப்பட்ட அறிகுறியாக இருக்கும் என சந்தேகித்தனர்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், லோன்னி கண்ட அந்த இரண்டு நபர்கள். வெள்ளை நிற கவசங்கள் போன்ற ஆடையை அணிந்துள்ளனர் என்றார். லோனி அவர்களை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ "சாதாரண" மக்களாக தான் விவரித்தார். எப்படியிருந்தாலும், இது நிச்சயமாக வேற்றுகிரக உயிரினங்கள் பட்டியல் தேடலில் குறிப்பிடத்தக்க விஷயம் தான்.

சோகோரோவில் நடந்த பறக்கும் தட்டு சம்பவம் பற்றி, மேலே குறிப்பிட்டபட்ட அம்சங்கள் தான் அன்றைய மக்களுக்கு கூறப்பட்டது. உண்மையில் சோக்கரோவில் என்ன நடந்தது என்பது. அமெரிக்க விமான படைக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் அந்த ரகசியமும் அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வெளிப்படும் என்பதிலும் நம்பிக்கை உள்ளது.

இப்போது அனைத்திக்கும் காலம் தான் பதில்...

அண்டத்திற்கு அப்பால் உள்ள சுடரினை பிண்டத்துள் காண்பாய் - கண்மணி...