அதெப்படி 98 னு கரெக்டா சொல்ற..🙄🥺
அதெல்லாம் சொல்லி அனுப்புறது தாண்டா 😕
http://getlokalapp.com/share/videos/2432482?utm_source=video_link&utm_district_id=413
இதுதான் சமத்துவம் பேசும் பெண்ணியமோ.? 🙄
பொதுவாக கண்களைச் சுற்றியுள்ள பகுதியானது மிகவும் மிருதுவான அதிக கவனம் செலுத்த வேண்டிய சருமமாக உள்ளது. இதனை காக்க அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
உறக்கமின்மை, மனக்கவலை, மகிழ்ச்சி, உடல் நலக் குறைவு, சோர்வு, மன அழுத்தம் என பல விஷயங்களை இந்த கருவளையம் காட்டிக் கொடுத்துவிடும்.
இது மட்டுமல்லாமல், பரம்பரை ரீதியாகவும், சத்துக் குறைவாலும் இந்த கருவளையம் ஏற்படுகிறது. எனவே ஒருவருக்கு கருவளையம் எதனால் ஏற்பட்டது என்று கண்டறிந்து அதன் மூலமாகத்தான் கருவளையத்தைப் போக்க வேண்டுமே ஒழிய, வெறும் கருவளையத்தைப் போக்க சிகிச்சை பெறுவது எந்த வகையிலும் பலன் தராது.
சிலருக்கு பரம்பரை ரீதியாகவே கருவளையம் ஏற்படலாம். அவ்வாறானவர்கள், சில முயற்சிகள் செய்வதால் ஓரளவுக்கு அதனை கட்டுப்படுத்தலாம். முழுவதுமாக போனாலும், அது மீண்டும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
உறக்கமின்மை காரணமாக சிலருக்கு கருவளையம் ஏற்படுகிறது. இது அவ்வப்போது வந்து, பின்பு மறைந்துவிடும். இதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. நன்கு உறங்கினாலே போதுமானது. உறக்கம் குறையும் போது உருவாகும் கருவளையமானது, உங்களது உடல்நிலை எடுத்துக் காட்டும் கண்ணாடியாகவும் அமைகிறது.
சிலருக்கு சத்துக் குறைவால், கண்களுக்கு அருகே உள்ள சருமம் சுருங்கி அதனால் கருவளையம் தோன்றுகிறது. இதனை போக்க நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். புரதமம், நார்ச்சத்து, கொழுப்புச் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் தானாகவே இந்த கருவளையும் மறைந்து விடும்.
சிலருக்கு அதிகப்படியான பணி பளுவால் கருவளையம் ஏற்படுகிறது. அதிக நேரம் கணினி முன் அமர்ந்து பணியாற்றுபவர்கள், அதிக நேரம் கண் விழித்து வேலை செய்பவர்கள் அல்லது படிப்பவர்கள், தொடர்ந்து டிவி பார்ப்பவர்களுக்கும் இந்த கருவளையம் ஏற்படுகிறது.
எனவே, கண்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
இது மட்டுமல்லாமல், அதிக உடல் உழைப்பும், டென்ஷனும் கூட கருவளையத்தை ஏற்படுத்தலாம். வீட்டில் அனைத்து வேலைகளையும் ஒருவரே செய்யாமல், வேலைகளை பகிர்ந்து கொள்வதால், வேலை பளு குறையும், எனவே எல்லா வேலைகளையும் ஒருவரே செய்ய வேண்டும் என்று எண்ணாமல் வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது பகிர்ந்து அளியுங்கள்.
சிலருக்கு ரத்த சோகை காரணமாகவும் கருவளையம் ஏற்படுகிறது. இரும்புச் சத்துள்ள உணவுகளையும், ரத்தத்தை அதிகரிக்க உதவும் காய்கறிகளையும் அதிகம் சாப்பிட்டு ரத்த சோகையை சரி செய்தால், இநத் கருவளையமும் தானாகவே மறைந்துவிடும். கீரை, நெல்லிக்காய், பீட்ரூட், நாவல்பழம் போன்றவற்றில் இரும்புச் சத்து உள்ளது.
எனவே, கருவளையம் வந்து விட்டதே என்று எண்ணி அதற்காக பல க்ரீம்களை போட்டு மன உளைச்சலுக்கு ஆளாகாமல், முதலில் எதனால் கருவளையம் வந்தது என்று கண்டறிந்து அதனை குணப்படுத்த முயலுங்கள். கருவளையம் தானாகவே சரியாகிவிடும்...
ஆங்கில ஆட்சியில்கீழ் இந்தியாவில் முதன்முதலாக மொழிவாரி கணக்கெடுப்பு நடத்திய க்ரையெர்ஸன் (Grierson) என்பார் வெளியிட்ட Linguistic Survey of India என்ற நூலில் உள்ள வரைபடம் (அதன் ஒரு பகுதி).
1928வாக்கில் கையால் வரையப்பட்ட இந்த வரைபடத்துடன் தற்போதைய தமிழக மாநிலத்தின் வரைபடத்தைப் பொருத்திப்பார்க்கையில் ஓரளவு நாம் இழந்த பகுதிகளை அறியமுடிகிறது.
( Madras Presidency என்ற தலைப்பில் சென்னை மாகாணம் பற்றிய விக்கிபீடியா பக்கத்தில் இதுவே நிறமில்லாத வடிவில் இடம்பெற்றுள்ளது)
ஆனாலும் இது முழுமையாக சரியென்று சொல்ல முடியாது.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கன்னடம் பேசும் பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த மாவட்டத்தில் தமிழர்களும் அல்லர் காடர் போன்ற (தமிழ்) பழங்குடி மக்களும் சில பகுதிகளில் மலையாளிகளுமே இருக்கின்றனர்.
அதேபோல மைசூர் தமிழர் பெரும்பான்மை நகரம் அதுவும் இதில் இல்லை.
அதேபோல ஈழத்தின் கிழக்குபகுதி சிங்களப் பகுதியாகக் குறிக்கப்பட்டுள்ளது.
கிரையர்சன் வடமொழிகளில் மிக மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார்.
தனது நூலின் முதல் தொகுதியில் தொடக்கத்திலேயே தனது ஆய்வில் தென்னிந்தியா இடம்பெறவில்லை என்பதை வரைபடம் மூலம் குறிப்பிட்டும் உள்ளார்.
அதாவது தென்னிந்தியாவில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை என்று கூறலாம்.
ஆந்திரா மற்றும் கேரளா பறித்துக் கொண்ட தமிழ் நிலத்தினை ஓரளவு அறிந்து கொள்ள இந்த வரைபடம் உதவுகிறது.
இவ்வரை படத்தின் படி...
தற்போதைய ஆந்திராவின்.. சித்தூர் மாவட்டத்தில் பாதி தமிழர் பெரும்பான்மை கொண்டது.
தற்போதைய கர்நாடகத்தின் கோலார் கால்பகுதி மற்றும் பெங்களூர் மாவட்டத்தில் கால்வாசி.. ராமநகரா கால்வாசி.. சாம்ராஜ்நகர் பாதி.. தமிழ் பெரும்பான்மை உடையன.
தற்போதைய கேரளத்தின் பாலக்காடு முழுவதும்.. இடுக்கி பாதியும்.. திருவனந்தபுரம் முழுவதும்.. தமிழ் பெரும்பான்மை உடையன.
(இவ்வரைபடம் ஏற்கனவே 03.03.16 அன்று இதே வலையில் போடப்பட்டிருந்தது.. ஆனால் படம் அழிந்துவிட்டது பதிவு மடடும் இருந்தது அதனால் மீண்டும் பதவிடப்படுகிறது)...
நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் சண்டை போட வேண்டியது கணவருடன் அல்ல வாழ்க்கையுடன்,
அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டாதீர்கள், அவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த கணவர்களை காப்பாற்ற பாடுபடும் மாமியார், மாமனார், கொழுந்தியாக்கள் மற்றும் நண்பர்களை மதிப்புடன் நடத்துங்கள் முழு ஒத்துழைப்பு தாருங்கள்.
கணவர்களை பாதுகாப்போம் அதனால் இந்த தேசம் வெற்றிக் கொள்ளும்...
மருத்துவ துறையில் மா.சுப்பிரமணி செயல்பாடு மிகச்சிறப்பு 🙄🙄
கொரோனா தொற்று கையாள்வதில் மிக சிறப்பாக செயல்படுகிறது...
உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...
பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.
பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது. 100 கிராம் முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
தயோசயனேட், கார்பினால், லுடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற ரசாயன மூலக்கூறுகள் முட்டைக்கோஸில் உள்ளது. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப் பொருட்களாக செயல்படுகின்றன. மார்பகம், தொண்டை, குடற் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும். கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைக்கும்.
முக்கியமான நோய் எதிர்ப்பொருளான 'வைட்டமின் சி', முட்டைக்கோசில் மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் 'வைட்டமின் சி' கிடைக்கிறது. தொடர்ச்சியாக 'வைட்டமின் சி' உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.
தீங்கு விளைவிக்கும் 'பிரீ-ரேடிக்கல்' களை சுத்தப்படுத்தும் தன்மை 'வைட்டமின் சி'-க்கு உண்டு. ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களை உறிஞ்சி அகற்றும் அளவை கணக்கிட்டால், 100 கிராம் பச்சை முட்டைக்கோசானது, 508 மைக்ரான் ரேடிக்கல்களை விரட்டி அடிக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸில் 2 ஆயிரத்து 252 மைக்ரான் அளவு ரேடிக்கல்களை சுத்தப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.
வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.
பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.
முட்டைக்கோஸில் 'வைட்டமின் கே', நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் 'வைட்டமின் கே' -விற்கு உண்டு...
நகைகடன் ரத்து, பயிர்கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் லிட்டருக்கு 5ரூபாய் குறைக்கபடும் சொன்ன வாக்குறுதி ௭ன்ன ஆச்சு
௮ல்வா தான்... 😂😂
௮ப்ப ௮ந்த மகளிருக்கு மாதம்தோறும் 1000, மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய வங்கிகடன் ரத்து ௭ல்லாம்
௮துவும் ௮ல்வா தான்.. 😂
போன ஆட்சி ஊரடங்குல Emi கட்ட முடியல, லோன் கட்ட முடியலனு கொந்தளிச்சவன் ௭ல்லாம்,, இந்த ஊரடங்குல செத்துட்டான்களா 🙄🙄
Dmk_Fraud
1.மாநிலத்திற்கு தமிழ்நாடு ௭ன 1967ல் ௮ண்ணா பெயர் வைப்பதற்கு முன்பே, கோட்டைகட்டி கொடிகட்டி ஆண்ட கூட்டம் நாங்கள் தமிழர்கள்..
2. யார் வீட்டு சொத்துக்கு யார் பெயர் வைப்பது.?
3.திராவிடர்கள் தமிழர்களுக்கென நாடு கிடைக்க விடாமல் மொழியாலும், இலக்கியத்தாலும், பண்பாட்டாலும் ௭ங்களை சிதைத்தது போதும்...
௭ங்கள் மூதாதையர் ஏமாந்துவிட்டார்கள், ஆனால் ௮றிவார்ந்த தமிழ்தேசிய பிள்ளைகளாகிய நாங்கள் இனி ஒருபோதும் ௭மாந்துவிட மாட்டோம்...
4.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சொன்னதுபோல் ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான்...
இதோ நம் வரலாற்றை ௮ழிக்க பகைவர்கள் போல் நாடகமிட்டு சங்கமித்து வருகிறார்கள்..
விழித்துகொள்_தமிழா..
5.இது பெரியார் பூமி அல்ல,,,
சேரனும், சோழனும், பாண்டியனும், வள்ளுவரும், வாழ்ந்த தமிழர்பூமி..
கரிகாலன், ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன், வேலுநாச்சியாரும், தீரன்சின்னமலை, வ. உ. சி,௭ன இதுபோல் ௭ண்ணற்ற மாவீரர்கள் மறைந்து வாழ்ந்த புண்ணிய பூமி..
மேதகு பிரபாகரன், சங்கரலிங்கனார், முத்துகுமார், செங்கொடி ௭ன ஒரு மொழிக்காகவும், தன் இனத்துக்காக உயிரையே துச்சம் ௭ன தூக்கியெறிந்து போராடி மறைந்த தியாகிகளின் பூமி இது..
6.இவர்களை ௭ல்லாம் விட்டுவிட்டு தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி, திருக்குறளை மலம் ௭ன்று இகழ்ந்த தமிழின விரோதி பெரியார் பெயரை தமிழ்நாட்டிற்கு வைக்க திராவிடர்கள் துடிக்கிறார்கள்...
7.கொஞ்சம் இடம் கொடுத்தால் கோமணத்தையும் உருவிவிட்டு சென்றுவிடுவார்கள்...
8.தமிழ் பேசுபவர்கள் ௭ல்லாம் தமிழர்கள் ௮ல்ல, ௭வன் ஒருவன் தாய்மொழி தமிழே... ௮வனே தமிழன்..
தமிழா_விழித்தெழு...
நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும் போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.
உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக்கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.
இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை. நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது.
அதை எப்படி வளர்த்துக் கொள்வது?
எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்.
Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்.
ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?
நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம் நாம் படுத்தபின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள்தான் அவை.
அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.
தயவு செய்து இனி படுத்தபிறகு அந்த நேரத்தில் பிரச்சனைகளை பற்றி யோசித்து விடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகிவிடும்.
உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்துவிட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.
அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்.
ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?
நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.
சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.
வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.
ஆம் நாம், பூமி, இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும். பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம், வாழ்க வளமுடன்...
லவ் பெயிலியருக்கு அப்பறம்...
ஒரு ஆறு மாசம் கழிச்சு
லவ்வர சந்திக்கற
வாய்ப்பு கெடச்சுது...
ஏன் இப்படி பண்ணுன கேட்டதுக்கு
எனக்கு அந்த நேரத்துல
என்ன முடிவு எடுக்கறதுனே தெரிலடா...
தெரிஞ்சோ தெரியாமலோ
உனக்கு துரோகம் பண்ணிட்டேன்..
என்ன மன்னிச்சிரு..
எதாவது கோவத்துல
என்ன பழி வாங்கிடாதடா னு
கண்ணீரோட அழுதா..
அதான் எல்லாம் முடிஞ்சு போய்
ஆறுமாசம் ஓடி போச்சே..
இனி பழி வாங்கி என்னடி ஆகப்போகுது...
ஒண்ணே ஒன்னு
செய்வியானு கேட்டேன்....
பதில் எதுவும் பேசாம
முகத்தையே பாத்தா...
பயப்படாத
தப்பா எதுவும் கேக்கல...
நீ எங்க இருந்தாலும்
நான் செத்த நியூஸ் கேட்டா
ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டு
யாருக்கும் தெரியாம அழுவியானு கேட்டேன்...
ஒரு பதிலும் இல்ல...
உண்மையா லவ் பண்ணி இருந்தா சத்தியமா அவ மனசு
ஆல்ரெடி செத்துப் போயிருக்கணும்...
என்னோட எல்லா கோவமும் சேர்ந்த
அந்த ஒரு கேள்வியே
பல தடவை அவளை கொண்றிருக்கும்....
சுயமரியாதை தன்மானம் என்று எவற்றை வரையறுத்தார் பெரியார். இதனால் தமிழர்களும் தமிழகமும் பெற்ற கல்வி அறிவூட்டல் என்ன..? பொருளாதார நன்மை என்ன..?
தமிழ் தேசிய உணர்வை இது எந்த வகையில் வளர்த்தது..?
ஏன் திராவிடத்தை தமிழகம் முதன்மைப் படுத்துகிறது..?
இதற்குள் தான் தமிழன் என்பவனின் இனத்துவ சுயமரியாதையும் தன்மானமும் அடங்கி இருக்கிறதா..? அப்படி என்றால் எந்த வகையில்..?
இந்த சுயமரியாதையும் தன்மானமும் 21ம் நூற்றாண்டில் தமிழர்களை தயார்படுத்தி 22ம் நூற்றாண்டில் எப்படி செயற்பட வைக்கப் போகிறது உலக அரங்கில்...? இதற்கு தமிழகத்தின் பங்கு என்ன..?
ஈழத்தில் தமிழ் தேசிய உணர்வோடு.. ஈழத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து நிற்க ஏன் தமிழகம் தயங்க வேண்டும்..?
இதற்கும் சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் ஏதாவது தொடர்பை காண்பித்திருக்கிறதா தமிழகம்..?
தமிழகத்தில் உள்ளவர்கள் தமிழர்கள் தானா..?
ஓரிரண்டு குரல்களைத் தவிர ஏனைய தமிழ்மக்களின் குரல் ஏன் நசுக்கப்பட்டுள்ளது. அது ஏன் தமிழீழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கத் தயங்குகிறது..?
இன்னும் இந்திய தேசியத்துக்கு அடிபணிந்து தானே உள்ளது தமிழகம். அப்படி இருக்க..
இந்த சுயமரியாதையும் தன்மானமும் எதைக் குறித்து எழுந்து நிற்கிறது. தமிழர்களின் திராவிட அடையாளம் குறித்தும் பார்பர்ன பிராமண இந்து சமய எதிர்ப்பு குறித்து மட்டும் தானா..?
ஏன் தமிழகத்தில் மதமாற்றம் செய்யும் இதர மதங்களை நோக்கி மக்களை அன்போடு வழி அனுப்பி வைக்கும் போது எங்கே போகின்றது இந்தச் சுயமரியாதையும் தன்மானமும் பகுத்தறிவும்.?
அது ஏன் இந்து சமயத்தை மட்டும் கண்டவுடன் இவை விழித்துக் கொள்கின்றன. மற்றைய மதங்களை ஏன் மென்போக்கோடு அணுகுகிறது.?
பகுத்தறிவுவாதிகள் எவராவது இறந்த மனிதன் ஏசு உயிர்த்ததற்கு சான்று கேட்டிருக்கின்றனரா..? அல்லா எங்கிருக்கிறார்.. அவருக்கு என்ன உருவம் என்பதற்கு சான்று கேட்டுள்ளனரா..?
அது ஏன் பகுத்தறிவு இந்து சமயத்தை மட்டும் குறி வைத்து நிற்கிறது. மூடநம்பிக்கைகள் சமயம் மட்டும் சார்ந்து தானா எழுந்துள்ளது. வேறு வகைகளில் இல்லையா.?
ஏன் அறிவியல் வளர்ச்சி கண்ட மேற்கு நாடுகளில் மூடநம்பிக்கைகள் இல்லையா..? மத நம்பிக்கைகள் இல்லையா..? அவர்கள் ஏன் அறிவியலை ஊட்டுகிறார்கள்.. பகுத்தறிவு என்பதையும் சுயமரியாதை என்பதையும் தன்மானம் என்பதையும் உச்சரிச்சுக் கொண்டு மத எதிர்ப்பை சமூக எதிர்ப்பைச் செய்யவில்லை..?
அது ஏன் ஊருக்கு சொல்லும் சுயமரியாதை பகுத்தறிவை நீங்களும் உங்கள் குடும்பங்கள் மட்டும் கடைப் பிடிப்பதில்லை.. அனைத்தும் தொண்டனுக்கும் தமிழனுக்கும் மட்டும் தானா?
இப்படி பல தொடரான வினாக்களுக்கு நீங்கள் விடை கூறத் தயாரா..?
ஊரடங்கில் எவைக்கு அனுமதி? எவைக்கு அனுமதி இல்லை? -முழு விவரங்கள்...