20/11/2021

நோய்களும் உணர்வுகளும்...

 


நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம். இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.

நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.

அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.

இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன. அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை. இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.

சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால் தான் ஏற்படுகின்றன. இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்.

பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும்(சளி, ஆஸ்துமா போன்றவை), வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும்(அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை), பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை), தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும்(தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.

நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.

எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதர்க்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.

இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள். இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள். இவை அனைத்திற்கும் ஹிப்னாடிசத்தில் தீர்வு உண்டு...

பாஜக மோடியின் பெட்ரோல் கொள்ளை...

 


பெட்ரோல், டீசல் உண்மைகள்...

 


நம்ப முடியாத உண்மைகள்...

 


மரணம் ஒரு ஆனந்தம்...

 


நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்..

கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும், எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள்..

நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும், உறவினர்..

களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும்..

இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள்..

இத்தனைக்கும் அந்த வீட்டை நாம் தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம், எல்லாம் நேரம்..

ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது..

அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று..

உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம்..

ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்..

ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்து விட்டார்கள், இருட்டிக் கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள்.

அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான், 'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல் போடனும்..

நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது..

கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்..

ஒருபக்கம் தாரை தப்பட்டைஇன்னொரு பக்கம் மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்..

அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே..

என்ன பண்றது பொணமா பொறந்தாலே இப்படிதான்..  ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள்..

இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள் கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்..

இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்..

அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால் அழுகை குறைந்து விசும்பலாகி விட்டிருக்கும் அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும்.

இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்..

ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும் சேர்ந்தே புதைந்து போகின்றன..

இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும் 70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்..

நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது .

நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்?

பூமியில் வாழும் காலத்தில்.. சந்தோஷமாக வாழுங்கள்...

உங்கள் விருப்பம் போல் வாழுங்கள்.. அனைத்து ஆசைகளை மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள்...

தேர்தல் வந்தாலே.. பாஜக மோடி பித்தலாட்டங்கள் செய்ய தொடங்கிடுவார்...

 


ஆண்கள் தின வாழ்த்துக்கள் 😁

 


அகத்திக் கீரையீன் சிறப்பு...

 


அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..

சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு மருந்திடுதல் எனும் ஒரு பழக்கம் தமிழ் மக்களை ஆட்டி வந்திருக்கிறது;

கணவனின் அன்பு தொடர மனைவியும், மனைவியின் அன்பு தொடர கணவனும், விலை மாதர்கள் தங்களுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர் கிடைக்கவும் இந்த மருந்திடுதலை பயன் படுத்தினர்.

உள்ளுக்குல் ஒரு சில கூட்டு மருந்துகளை சேர்த்து கொடுத்து விட்டால் அதை அருந்தியவர் கொடுத்தவரிடம் தொடர்ந்து அன்புடன் இருப்பார் என்பது ஒரு நம்பிக்கை .

அத்தகைய மருந்திடுதல் எனும் தோஷத்தை நீக்கும் சத்தி அகத்திக்கு உண்டு .

அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்த தொடர்பான நோய்கள் நீங்குகும்,

வாரத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல் அகத்தி கீரையை சமைத்து சாப்பிடடால் தேகத்தில் உஷ்ணம் தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். குடல் புண் ஆறும் சிறு நீர் மற்றும் மலம் தாரளமாக கழியும். பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும், அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும்..

இதற்கு அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்கு பங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம்.

அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.

அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.

உடம்பில் காண படும் தேமலுக்கு அகத்தி கீரையீன் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

அகத்தி கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிடலாம்..

அகத்தி கீரையை ஏகாதசி அன்று விரதமிருந்த பிறகு துவாதசியன்று உணவில் அகத்தி கீரை உடன் நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு, எதையும் அர்த்ததுடன் தான் நம் முன்னோர்கள் வகை படுத்தியுள்ளனர்.

நாம் அதை மதித்து நடக்க வேண்டும்..

அகத்தி கீரைக்கு எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறிக்கும் சக்தி உண்டு. எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்..

வாரம் ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும் .. அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும்...

இப்போலாம் பொறக்கும் போதே கேடிகளா பொறக்குதுங்க 😏 நான் தான் அப்பாவியா பொறந்துட்டேன்😏

 


செந்தில் Vs கவுண்டமணி கலாட்டா...

 


செந்தில் : அண்ணே காதல்னா என்ன னே...

கவுண்டமணி: டேய். உன்ன மாதிரி கடலை மிட்டாய் திருடி திங்கிறவனுக்கு சொன்னாலம் புரியாதுடா.

 செந்தில்: அட சொல்லுங்கண்ண.

கவுண்டமணி: சரி சொல்றேன் கேளு. நீ எப்படி இன்னொரு வாழபழம் எங்கடான்னு கேட்டா அதாண்ண இதுன்னு சொன்னியோ. 

அதே மாதிரி அவன, நீ யார்ரானு கேட்டா நான் தான் அவள்னு சொல்றதும்.

அவள, நீ யார்றினு கேட்டா நான் தான் அவர்னு சொல்றதும் தாண்டா காதல்..

🤣🤣

நோய் தீர்க்கும் ஆடாதோடா...

 


சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.

ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது.

ஆடா தோடைவின் முருத்துவ பெயர் ( Adhatoda zeylanicaணீ) ஆகும்.

இது உடலில் தசைப்பகுதிகளில் ஏற்ப்படும் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள் இதில் இருக்கும் வாசிசின் என்னும் வேதிப்பொருள் நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால் ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.

நீண்ட நாள் தொடந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.

இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு (ஆஸ்த்துமா) தீரும்.

இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.

ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்...

திமுக ஸ்டாலின் அரசே... எச்ச. ராசாவை கைது பண்ண துப்பில்ல...

 


அறவழியில் போராடிய மாணவர்கள் மீது வழக்கு போட்டு கைது பண்றது...

இதுல பேரு வேற விடியல் அவியல்னு...

இனிய இரவு வணக்கம் 😁

 


பிராடு பாஜக மோடி அரசின் பொய்கள்...

 


இனிய இரவு வணக்கம் மக்களே 😁

 


திமுக ஸ்டாலின் பித்தலாட்டம்...

 


கூகுளை கொண்டு வலிமை சிமெண்ட் பற்றிய உண்மையை உடைத்த கோவை சத்யன்...