10/11/2017

சுடுநீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்...


மூக்கடைப்பு: வெதுவெதுப்பான நீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பதால், உடலினுள் வெப்பம் தூண்டப்பட்டு, சுவாசக் குழாய்களில் உள்ள அழற்சிகள் நீக்கப்பட்டு, மூக்கடைப்பில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தொண்டைப்புண்: தொண்டைப்புண் அல்லது தொண்டை கரகரப்பு இருக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிப்பதால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பித்தக்கற்கள்: பித்தக்கற்கள் இருப்பவர்கள், உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சையுடன், சிறிது ஆலிவ் ஆயில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால், பித்தக்கற்கள் கரையும்.

எடை குறையும்: தினமும் காலையில் சுடுநீரில் 1/2 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் மிளகுத் தூள், சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்களை கரைக்கும் செயல் வேகப்படுத்தப்பட்டு, உடல் எடையும் வேகமாக குறைய ஆரம்பிக்கும்.

பல் வலி: பல் வலியால் கஷ்டப்படுபவர்கள், இந்த கலவையால் தினமும் வாயைக் கொப்பளித்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை கிருமிகளை அழித்து, பல் வலியில் இருந்து நிவாரணம் தரும்

காய்ச்சல்: காய்ச்சல் இருக்கும் போது, சுடுநீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சையுடன், தேன் சேர்த்து கலந்து குடித்து வர, உடலைத் தாக்கிய வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் திறன் அதிகரித்து, காய்ச்சலில் இருந்து விரைவில் குணமாகலாம்.

குமட்டல்: உப்பு மற்றும் மிளகுத் தூள் வயிற்றில் உள்ள அமிலங்களை நீர்க்கச் செய்யும், எலுமிச்சையின் மணம் குமட்டலைக் குறைக்கும். மொத்தத்தில் இந்த கலவையை எடுத்து வர வயிற்றுப் பிரச்சனைகள் தடுக்கப்படும்...

14 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை கடத்தி வந்த பெண் கொல்கத்தா விமான நிலையத்தில் கைது...


லக்கேஜ் பேக்கின் ட்ராலியின் இடுக்கில் மறைத்து எடுத்து வந்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர்...

இளைஞர்கள் கைகோர்த்து உதவினால் நேர்மையாண தமிழகத்தை நிச்சயம் காணலாம் - சகாயம் அறிவிப்பு...


என்னோடு இணைய விரும்பு இளைஞர்கள் இந்த எண்ணை அழைக்கலாம் - சகாயம் அறிவிப்பு...

சேலத்தில் வரும் 19 தேதி இளைஞர்களை திரட்டி பொதுக் கூட்டம் நடத்தும் சகாயம் அவர்கள் , என்னோடு இளைஞர்கள் கைகோர்த்து உதவினால் நேர்மையான தமிழகத்தை நிச்சயம் காணலாம் என அறிவித்துள்ளார்.

சகாயம் அவர்களின் இந்த அறிவிப்பிற்கும் இதற்கு முன்னர் அரசியல் கட்சி தலைவர்கள் இதே போன்று அறிவித்ததற்கும் மிகப் பெரும் வித்தியாசம் உள்ளது,

கலெக்டர் என்ற உச்ச கட்ட அந்தஸ்து அதிகாரத்தில் இருந்த சகாயம் அவர்கள் நேர்மையின் காரணமாக இன்றைக்கு அவர் ஐஏஎஸ் ஆக இருந்தும் என்ன பொறுப்பில் உள்ளார் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

தான் நேர்மையானவன் என்பதை இதை விட ஒருவரால் நிரூபிக்க இயலாது. எனவே சகாயம் அவர்களின் இந்த அறிவிப்பை மற்ற அரசியல் கட்சி , நடிகர்ககளின் அறிவிப்பை போன்று நம்மால் பார்க்க முடியாது எனக் கூறுகின்றனர் சகாயத்தை விரும்பும் தமிழக இளைஞர்கள்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 56...


அறிந்ததை சோதித்துப் பாருங்கள் - டெலிபதி...

ஆழ்மன சக்திகள் பற்றி ஆதாரபூர்வமான நிகழ்வுகளை ஆரம்பத்தில் பார்த்தோம். பிறகு அந்த ஆழ்மன சக்திகளை அடைய உதவும் வழிகளில் தியானம் துவங்கி பல வகைப் பயிற்சிகளையும் பார்த்தோம். ஆழ்மன சக்திகளைப் பெற உதவும் உணர்வு மற்றும் மனநிலைகளையும், அதைப் பெறத் தடையாக இருக்கக்கூடிய மனநிலைகளையும் பார்த்தோம். கடந்த சில வாரங்களில் ஆழ்மனதைப் பலப்படுத்துபவை எவை, பலவீனப்படுத்துபவை எவை என்றும் பார்த்தோம். இது வரை அறிந்தவற்றை எல்லாம் பயன்படுத்தி நம்மாலும் அந்த சக்திகளைப் பயன்படுத்த முடிகிறதா என்று சோதித்துப் பார்க்கும் கடைசிக் கட்டத்திற்கு இப்போது வந்திருக்கிறோம்.

ஒரு விஷயத்தை அறிவு பூர்வமாக அறிந்து கொள்வது வேறு. அதை உணர முடிவது வேறு. அறிந்து கொள்வதற்கு அறிந்தவர்களும், தகவல் சாதனங்களும் உதவ முடியும். ஆனால் உணர்வது என்பது தனிமனித அனுபவமே. அதற்கு மற்றவர்களோ, சம்பந்தப்பட்ட தகவல்களோ உதவ முடியாது. இந்த உண்மை மற்றெல்லா விஷயங்களையும் விட அதிகமாக ஆழ்மன சக்திகளுக்கு பொருந்தும்.

அறிய உதவும் தகவல்கள், வரைபடங்கள் போன்றவை. ஒரு இடத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று மட்டுமே தெரிவிக்கும். ஆனால் அந்தத் தகவலை எந்த அளவுக்கு ஒருவன் பயன்படுத்துகிறான், அங்கு போக எந்த அளவு முயற்சி செய்கிறான், அவன் போகும் வேகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது அந்த தனிமனிதனையே சார்ந்தது. அதைப் பொறுத்தே அவன் அந்த இடத்திற்குப் போய் சேர்வதும், சேராதிருப்பதும் தீர்மானிக்கப்படுகிறது.

இங்கு இது வரை சொல்லப்பட்ட பயிற்சிகள், தகவல்கள் எல்லாம் வரைபடங்கள் போன்றவையே. அந்தப் பயிற்சிகளை எந்த அளவு பயன்படுத்துகிறீர்கள், செயல்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இதில் பெறும் வெற்றியின் அளவும் இருக்கும். இதில் சில பயிற்சிகள் சுவாரசியமில்லாதவையாக இருக்கலாம். சில பயிற்சிகள் கடினமானதாக இருக்கலாம். சில பயிற்சிகள் பொருளில்லாதவையாகக் கூடத் தோன்றலாம். ஆனாலும் அதை விடாமுயற்சியோடும், ஆர்வத்தோடும் செய்வது மட்டுமே முடிவில் ஆழ்மன சக்திகளை அடைய வழி செய்யும்.

ஆனால் உங்களுக்குள்ளே இருக்கும் ஆர்வம் உறுதியானதாக இருந்தால், அது காலப்போக்கில் வடிந்து போகாததாக இருந்தால் அது ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான அனைத்தையும் உங்களைச் செய்ய வைக்கும். அப்படித் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்து, உங்களுக்குத் தெரிந்த வகையில் விடாமல் பயிற்சிகளும் செய்து வந்திருந்தால் அந்த சக்திகளை ஓரளவாவது நிச்சயமாக நீங்கள் அடைந்திருப்பீர்கள். அதை சோதித்துப் பார்க்கும் வழிகளைப் பார்ப்போம்.

முதலில் ‘டெலிபதி’ எனப்படும் ஒரு மனதில் இருந்து இன்னொரு மனதிற்கு வார்த்தைகளால் அல்லாமல் செய்திப் பரிமாற்றம் செய்யும் சக்தியைப் பார்ப்போம். மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தி இயல்பாகவே அதிகம் இருக்கும் என்று பார்த்தோம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருக்கும். எதையும் சொல்லியே தெரியப்படுத்திப் பழகி விட்டதால் சொல்லாமல் உணரும் சக்தியைப் பெரும்பாலும் நாம் இழந்து விட்டிருக்கிறோம். பொதுவாக ஏதோ சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மட்டும் இது நம்மிடையே எழுகிறது.

ஆதிசங்கரர் சன்னியாசம் வாங்குகையில் அவர் தாய் ஆர்யாம்பாள் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தார். அவரிடம் அவருடைய மரண காலத்தில் கண்டிப்பாக வந்து சேர்வதாக ஆதிசங்கரர் சத்தியம் செய்து தந்தார். அதே போல ஆர்யாம்பாள் மரணத் தருவாயில் மகனை நினைக்க உடனடியாக ஞான திருஷ்டியால் ஆதிசங்கரர் உணர்ந்து தாயிடம் விரைந்து சென்றார் என்று படித்திருக்கிறோம். இது தான் டெலிபதி என்று சொல்லலாம்.

இதே போன்ற இன்னொரு சம்பவம் நடந்ததை நான் அறிவேன். எங்கள் வங்கியில் வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண் தன் தந்தையுடன் மிகவும் பாசமாக இருப்பவர். வெளியூரில் வேலை கிடைத்ததால் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தார். ஒரு நாள் தன்னுடன் தங்கி இருந்த தோழியுடன் கோயிலுக்குச் சென்றார். கோயிலுக்குச் செல்லும் போது மிகவும் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டு சென்ற அவர் கோயிலுக்குச் சென்ற சில நிமிடங்களில் காரணம் தெரியாமல் சோகமயமானார். திடீரென்று விக்கி விக்கி அழ ஆரம்பிக்க அந்தத் தோழி காரணம் கேட்டார். ஆனால் அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. ”ஏனோ அழுகை அழுகையாய் வருகிறது” என்று சொல்லி தொடர்ந்து அழுதார். சிறிது நேரம் கழித்து இருவரும் ஹாஸ்டலிற்குத் திரும்பினார்கள். ஹாஸ்டலுக்கு வந்த போது அவரது தந்தை மாரடைப்பால் காலமானார் என்று சிறிது நேரத்திற்கு முன் போனில் தகவல் வந்ததைத் தெரிவித்தார்கள். அந்தக் காலத்தில் இந்தக் காலத்தைப் போல செல் போன் வசதி இல்லாத காரணத்தால் வீட்டார்கள் லேடீஸ் ஹாஸ்டலிற்குப் போனில் தகவல் சொல்லி இருந்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் தந்தைக்கு மாரடைப்பு வந்த சமயத்தில் தான் காரணம் தெரியாமல் அந்தப் பெண் அழ ஆரம்பித்திருக்கிறார் என்பது பின்னர் புரிந்தது. தந்தைக்கும், அந்தப் பெண்ணிற்கும் இடையே எல்லை இல்லாத பாசம் இருந்தது என்பதைத் தவிர ஆழ்மன சக்தி, டெலிபதி போன்ற பெரிய விஷயங்களைப் பற்றி இருவரும் அறியாதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படி உணர்ச்சிகளின் உச்சக்கட்டங்களிலும், அவசரமான கட்டங்களிலும் மிகவும் நெருக்கமான நபர்களுடன் நாம் அரைகுறையாக உணர முடிகிற விஷயங்களை இயல்பான நேரங்களிலும் கூட வார்த்தைகளில்லாமல் தெளிவாக உணர முடியும் என்பது ஆழ்மன சக்திகளை அடைந்தவர்களின் அனுபவம். இந்த டெலிபதி உங்களுக்கு கைகூடி வருகிறதா என்பதை இனி சோதித்துப் பாருங்கள்.

முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள். என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம். இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது. ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.

பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான மனநிலை. சரியாகச் சொல்ல முடிய வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற சந்தேகமோ மனதில் வேண்டாம். முதலில் எளிமையான சோதனையில் இருந்து ஆரம்பியுங்கள். நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்

இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது, அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத் தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின் மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம் நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில் பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை, அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற எண்ணை வாய் விட்டு அவரிடம் சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம் தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம் ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம் வரவழைக்கச் செய்திருக்கலாம்.

முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக் கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம், சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற படபடப்பு போன்றவை இல்லா விட்டால் விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.

தோல்வியைப் போலவே வெற்றியும் நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல் மனநிலைகளைத் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள். களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை செய்வதைத் தவிருங்கள்.

அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஏதாவது சிந்தனையில் இருக்கையில் அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால் உணர முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். முன்பு சொன்னது போல யூகம், கற்பனை இரண்டின் வழியாக அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக விடை ஏதும் வரா விட்டால் விட்டு விடுங்கள். கட்டாயப்படுத்தி வரவழைக்க நினைக்கும் விடைகள் சரியாக இருப்பதில்லை. ஒரு விடை மனதில் உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள். தவறாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல. அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக நீங்கள் அந்த உணரும் சக்திக்கு ‘ட்யூன் ஆக’ ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில் வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய சோதனையை ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.

உதாரணத்திற்கு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது முன்னால் போகும் நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள். அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப் பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப் பார்க்கிறாரா என்று பாருங்கள். உங்களிடம் பேச வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சொல்லை அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள். நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.

அப்படி நடக்கா விட்டால் அது உங்களின் சக்தியின் குறைபாடாக இருக்க வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க் கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப் பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது. அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய் அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ, அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ சொல்ல வைப்பதும் கடினமே. ஆகவே இது போன்ற சமயங்களில் முன்பே ஏதோ சிந்தனையிலோ, கவலையிலோ, வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.

இது போல பல சோதனைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள் எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு இசைவில்லாத செயல்களைச் செய்ய வைக்கும் முயற்சியாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த சோதனைகள் சுவாரசியமானவை. இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள் ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அதையும் அலசுங்கள்.

போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இந்த சோதனைகள் குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ, அலசுவதையோ தவிர்ப்பது நல்லது. காரணத்தைப் பின்பு பார்ப்போம்.

இனி அடுத்த ஆழ்மன சக்திகளைப் பரிசோதிக்கச் செல்லலாமா?

மேலும் பயணிப்போம்...

நிலவேம்பு கசாயம் செய்முறை...


சூரியனும் உணவும்...


பூமிக்கும் பூமிசார்ந்த உயிரினங்களுக்கும் ஆதாரமாக விளங்குவது சூரியனே. சூரிய ஆற்றல் நமக்கு கிடைக்கவில்லை எனில் நம்மால் உயிர்வாழ முடியாது.

இதனை ஆய்ந்தறிந்த நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் எனும் ஆசனத்தை அறிமுகப்படுத்தினர். இதுவரை நம் மண்ணில் வாழ்ந்த பல்லாயிரம் முன்னோர்கள் சூரிய சக்தியை கிரகிக்கும் முறையை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

பல யோக நூல்களில் இதற்கான ஆதாரங்கள் உள்ளது. ஆனால் நாம் அதை மூடநம்பிக்கைகளின் பட்டியலில் ஒன்றாக வைத்திருந்தோம். இவற்றை ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது NASA.

கடந்த ஒரு வருடமாக Hina Manek என்பவரை வைத்து ஆய்வு செய்ததில் திடுக்கிடும் பல தகவல்களை கண்டு NASA வே ஆட்டம் கண்டது. எல்லோராலும் புலன்கடந்த ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற உண்மையே அது.

Sun Gazing அல்லது Sun Eatingvஎன்பதை பற்றிய பயிற்சிகள் இதோ.

காலணி ஏதும் அணியாமல் நேராக நின்று கொண்டு சூரியனை பார்க்க வேண்டும்.

சூரிய உதயத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாகவோ அல்லது சூரிய மறைவிற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவோ தான் இதனை செய்ய வேண்டும்.

உங்களுக்கு வசதியான ஏதேனும் ஒருவேளையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது காலையோ அல்லது மாலையோ..

முதல் நாள் பயிற்சியில் வெறும் 10 வினாடிகள் மட்டுமே சூரியனை பார்க்க வேண்டும். அடுத்தநாள் கூடுதலாக 10 வினாடிகள் ஆக 20 வினாடிகள். மூன்றாம் நாள் 30 வினாடிகள்..

இப்படி பத்து பத்து வினாடிகளை மட்டுமே தினமும் கூட்டிக்கொண்டு போக வேண்டும், இது மிகவும் முக்கியமானது..

இவ்வாறு தொடர மூன்று மாதங்களில் 15 நிமிடங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும். அப்போது உங்கள் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் சூரிய கதிர்களால் மறைந்து போயிருப்பதை காண்பீர்கள்..

இப்படியே ஆறு மாதம் தொடர 30 நிமிடங்கள் தொடக்க கூடியதாக இருக்கும். அப்போது உங்கள் உடலில் இருந்த அனைத்து நோய்களும் காணாமல் போயிருக்கும்..

இப்படியே ஒன்பது மாதம் தொடர 45 நிமிடங்கள் பயிற்சியாக கணக்கு வரும். அப்போது உங்கள் உடல் ஓர் உச்சக்கட்ட ஆற்றலை பெற்றிருக்கும், இனி உங்களுக்கு உணவோ தண்ணீரோ தேவைப்படாது..

இந்த பயிற்சியை செய்யத் தொடங்கிய நாள் முதல் தினமும் 45 நிமிடங்கள் வெறும் காலில் நடைப் பயிற்சி செய்ய வேண்டும், இது உங்களுக்கு அதீத சக்திகளை பெற்றுத் தரும்..

இனி நீங்கள் எதையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது. ஒன்பது மாத பயிற்சி முடிந்தபின் வாழ்நாள் முழுவதும் நீங்கள் சுதந்திர பறவை.

If your mind accepts, Your body adapts...

இலுமினாட்டி கார்பரேட் வியாபாரம்...


Corporates Buisness Techniques.. 1st உலக அழகி.. அப்புறம் விளம்பர நடிகை...

இலுமினாட்டி யும் ரஜினி காந்த்தும்...


Superstar RAJNIKANT is an ILLUMINATI Member...

Rajnikant (aka - Rajinikanth, Indian Chuck Norris) is a name that any Indian would associate with swag. But have you ever wondered how this former bus-conductor born to Marathi parents in Karnataka became the biggest star of Tamil Nadu and eventually the whole country? By selling his soul to the devil, of course.


According to anecdotes from people who barely knew him and similar evidence, Rajinikanth joined the Indian branch of the Illuminati (Head-office believed to be located in Mumbai - the house of Bollywood and various other Satanic devices used to control the minds of the unenlightened) in around 1975. He sent a DD of Rs. 666 to them (his life-savings at the time) and got a certificate validating him as an Illuminati member which he proudly hangs in his bedroom even today. This is also when he adopted the name Rajnikanth to replace his real name - Shivaji Rao Gaikwad. This is extremely interesting because Rajnikanth spelled backwards is Htnakinjar.

Rajnikanth/Htnakinjar is an anagram for Raja Nth Kin. He chose this name to represent that he considers himself a relative of Satan (The Nth Kin of Satan, the King (Raja) of Hell. Diabolical, isn't it?

If the above rock-hard evidence wasn't enough to convince you, you're obviously a devil-worshiper. Still, here's some diamond-hard evidence. Just like Jay-Z, George W. Bush, Lady Gaga, Sachin Tendulkar and several others who are in the Illuminati, Rajnikant also likes to flaunt his affiliation.


Proof 1 : The Eye of Horus Horus
This symbol of the Illuminati can be found everywhere, including Google Images pics of Rajnikanth.

Quoting the aforementioned source,
The Eye of Providence (or the all-seeing eye of God) is a symbol showing an eye often surrounded by rays of light or a glory and usually enclosed by a triangle.

Now, take a look at this poster for one of his obscure movies :


According to this source, this gesture is the Satanic salute, a sign of recognition between and allegiance of members of Satanism or other unholy groups. Making this gesture is one of the most disgusting, heinous and evil things you can do with your hands, second only to masturbation. It is said that a portal to hell opens up if you do both at the same time.

Unfortunately, this vile symbol has become so integrated into popular culture that no one notices when an actual Illuminati member flashes it. Take a look at this...

தீக்காயமா... மருந்தை தேடி அலையாதீர்கள்...


தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள். பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்.

சிறிது நேரத்தில் வெள்ளைக் கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும்.

தொடர்ந்து செய்து வந்தால், அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும்.

தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே...

சாம்பிராணி எப்படி உருவாகிறது தெரியுமா?


பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது . சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?

மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.

சாம்பிராணி ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட (Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை சேர்ந்த ஃபிரங்கின்சென்ஸ் (Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும் இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது. இவையை எரித்தால் மிகுந்த மணத்தை பரப்பும் ஃபிரங்கின்சென்ஸ் (Frankincense) மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது மரமானது உறுதியானது ஆனால் எளிதில் அறுக்கவும் , இழைக்கவும் முடியும் இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன.

நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்.

சாம்பிராணி மருத்துவ பயன்கள்..

ஃபிரங்கின்சென்ஸ் (Frankincense) மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான் கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது இது இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு ,படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை, டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை எடுக்கிறார்கள் இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது.

சாம்பிராணி எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது...

உரோம விருட்சம்...


உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு. இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலை போல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும்.

அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும்.

இதைக் கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்.

அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம் போட்டு பத்திரம் செய்யவும்.

இதை வாயில் போட்டுக் கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

இது ஒரு கற்பம் இதனால் நரை, திரை, முப்பு, பிணி நிங்கி காயசித்தி உண்டாகும்.

இதை இடையில் கட்டிக் கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்து விழாது.

இதை துடையில் கிழித்து வைத்து தைத்து விட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது.

சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும் இம்முறையால் தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன.

மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும்.

தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன...

அதிமுக தினகரன் சபதம்...


வக்கீல்களின் பள்ளி சான்றிதழ்களை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு...


வக்கீல்கள் கட்டபஞ்சாயத்து செய்வது தொடர்பான புகார் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு...

அனைத்து வக்கீல்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அடிப்படை வசதி இல்லமல் இயங்கும் லெட்டர் பேட் சட்ட கல்லூரிகள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிளஸ் 2 படிக்காமல், திறந்த நிலை பல்கலை.,யில் படித்தவர்கள் லெட்டர் பேடு கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்ட பட்டத்தை விலைக்கு வாங்குகின்றனர். போலி வக்கீல்களை நீக்க புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்த பிறகே பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்...

ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2.. உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 7...


உண்மைகள் உறங்குவதில்லை  என்ற இந்த தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று இடம் பெறும் தீர்க்க தரிசனம் 7-ம் பகுதியாகும். இந்த 7-ம் தீர்க்க தரிசனம் உலகத்தில் இனி நடக்ககூடிய பல சம்பவங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர உள்ளது.



இந்த 7-ம் தீர்க்க தரிசனத்தில் முதலாவதாக நாம் தெரிந்து கொள்ள இருப்பது என்னவெனில் அமெரிக்க நாட்டில் உள்ள தென் மாகாணத்தில் பல திடீர் சம்பவங்கள் தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்பட உள்ளதாகவும், “வாட்டிகன்“ என்ற நகரத்தில் இரண்டாம் போப் வாழ்ந்த பகுதியில் திடீரென்று ஒரு வியப்பான சம்பவம் நடக்கும் என்றும் இதனால் உலகம் வியப்பில் ஆழ்ந்து போகும் சம்பவங்களாக இந்த இரண்டு சம்பவங்கள் அமைய உள்ளதாக 7-ம் தீர்க்க தரிசனம் இங்கு குறிப்பை தருகின்றது.



கனடா நாட்டில் “வான் ஊர்தி“ ஒன்று தரையிறங்கும் சம்பவம் நடக்கும் என்றும், அதில் பல வியத்தகு அதிசயங்கள் காணப்படும் என்றும் 2017, 2018 ஆண்டில் நடக்கும் இரட்டைச் சம்பவத்திற்கு இது ஒரு ஒத்திகை நிகழ்வாக இருக்கும் என “NASA" கருத்து தெரிவிக்கும் அளவிற்கு இச்சம்பவம் அமையும் என 7-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகிறது.




பாபிலோன் (பாபிலோனியா) கவனத்தில் கொள்ள வேண்டிய வரலாற்று பகுதி என்றும், இறை தூதுவர்கள் தென்படும் அதிசய நிகழ்வுகள் அங்கு உடனே நடக்க உள்ளதாகவும், இச்செய்தி மீடியாக்களில் வேகமாக பரவும் என்றும், அச்சமயத்தில் வானத்தில் பலமணி நேரம் ஒளி பந்துக்கள் வலம் வரும் அதிசய நிகழ்வு நடக்க உள்ளதாக 7-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


மலேசியா நாட்டில் வரலாறு காணாத கனமழை பெய்ய உள்ளதாகவும், JULY மாதத்தின் பிறகு அது அரங்கேறிட உள்ளதாகவும், மலேசியாவின் வடக்கு பகுதி பெருமளவு பாதிப்புக்குள்ளாகும் என்றும், இனி அப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு இருக்கும் என்று 7-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.




ஜெனிவா கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கு மக்களின் கூட்டத்தில் ஒரு பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படும் என்றும், அங்கு தோன்றும் இனக்கலவரம் உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் என்று 7-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.



பாகிஸ்தான் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என 7-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை உலக மக்களுக்கு தெரிவிக்கின்றது. அதாவது வரும் மாதத்தில் அங்கு ஏற்படும் பூமி அதிர்வானது 8.1 முதல் 8.9 என்ற வீரியம் அளவில் பல ஆயிரம் மக்களை பழிவாங்கிட உள்ளதாகவும், இது முந்தைய அழிவைவிட அதிகமாக இருக்கும் என 7-ம் தீர்க்க தரிசனம் ஒரு எச்சரிக்கையை செய்கிறது.


ஆஸ்திரேலியா நாட்டின் வட பகுதியிலிருந்து ஒரு பூமி அதிர்வு துவங்கி வடகிழக்கு வழியாக பயணித்து தென் பகுதியில் இது முடிவடையும் சமயத்தில், அங்கு மிகப்பெரிய அழிவுச் சம்பவம் நடந்தேறி இருக்கும் என 7-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு அழிவுச் செய்தியை நமக்கு தெரிவிக்கின்றது.



உபஸ்தான் (உஸ்பெகிஸ்தான்) என்ற நிலப்பரப்பில் பல்வேறு பூமி சம்பந்தப்பட்ட திரட்டுகள் கண்டறியப்படும் என்றும், முஸ்லீம் இனத்தவர் என்ற அடையாளம் உள்ள இப்பகுதியில் புத்தரின் இரகசியக் குறிப்புகள் அங்கு கண்டெடுக்கப்படும் சம்பவம் இந்திய தேசத்தின் வரலாற்று உண்மைகளை அறியும்படி அமைய உள்ளதாக 7-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் ஏற்கனவே நாம் வெளியிட்டுள்ள 37-ம் தீர்க்க தரிசனத்தை நாம் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், அதில் குறிப்பிட்டுள்ள பல குறிப்புகள் உடனே நடக்க உள்ளதாகவும், வான்வெளி சம்பந்தமுள்ள  ஒரு சம்பவம் இந்தியாவின் தென்பகுதியில் நடக்க உள்ளதாக 7-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

இம்மாத இறுதியில் அரபிக்கடலில் உருவாகும் புயல் இந்திய தேசத்தில் பலத்த சேதங்களை உருவாக்கிட உள்ளதாக 7-ம் தீர்க்க தரிசனம் சமீபத்தில் நடக்க உள்ள ஒரு சோக சம்பவத்தை நமக்கு எச்சரிக்கை செய்தியாக இங்கு சுட்டிக் காட்டுகின்றது.




ஆகஸ்ட் மாதம் மேல் மக்கள் மனங்களில் பல திடுக்கிடும் சம்பவங்களின் நினைவுகளை ஏற்படுத்தும் மாதமாக அமைய உள்ளதாகவும், கலிபோர்னியா, அண்டார்டிகாவின் தென்பகுதி, வெனிசுலா, கம்போடியா, தாய்லாந்து, உக்கரைன் போன்ற நிலப்பரப்புகளில் பூமி, கடல் சார்ந்த பல நிகழ்வுகள் நடக்க உள்ளதாக 7-ம் தீர்க்க தரிசனம் இங்கு மற்றொரு குறிப்பை தருகின்றது.


உலகத்தின் தலையெழுத்தை மாற்றி அமைக்கக்கூடிய இறை அவதாரத்தின் ஆத்மா ஒரு உடலில் தஞ்சம் கொள்ளும் அதிசய நிகழ்வு வரும் மாதத்தில் நடக்க உள்ளதாகவும், இது சித்தர்களின் தவப்பயனால் ஏற்படக்கூடிய அதிசய நிகழ்வாக அமைய உள்ளதாகவும், அந்த இறை அவதாரத்தின் நோக்கம் இனி பூலோகம் முழுவதும் நடைபெறும் விதமாக பல அதிசய சம்பவங்கள் பூமி மற்றுமின்றி வான்தேசங்கள் முழுவதும் நடக்கும் அளவிற்கு அமைய உள்ளதாகவும், சத்திய யுகத்தின் பொன்னான நாளாக இந்நாள் கருதப்படும் என்றும், வரலாற்றில் இதுவே சிறப்பு வாய்ந்தது என 7-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


ஒரு ஓலைச்சுவடியால் ஒரு ஊரே கவலைபடும்படி மாற உள்ளதாகவும், இச்செய்தி காட்டு தீ போல ஊர் முழுவதும் பரவும் சமயத்தில் ஆன்மீக குடில் ஒன்றில் பல வியப்பான சம்பவங்கள் நடைபெறும் என்றும், அச்சமயத்தில் மூவரின் வருகை ஏற்படும் என்றும், இதனை விளக்கமாக மக்கள் அறிய விரும்பி அங்கு கூட்டம், கூட்டமாக படையெடுப்பார்கள் என்றும், அச்சமயத்தில் வான் மண்டலத்தில் ஒரு “கிரகணம்“ ஏற்படும் என்றும், இந்த கிரகணம் இந்த பூமி பல சம்பவங்களை எதிர் நோக்கி உள்ளதற்கான அறிகுறியாக இருக்கும் என்று 7-ம் தீர்க்கதரிசனம் மக்களுக்கு எடுத்து கூறும் இச்சமயத்தில், “உண்மைகள் உறங்குவதில்லை“ அது உலகத்தில் நடந்த வண்ணமே உள்ளது என மக்கள் நம்புவார்கள் என 7-ம் தீர்க்க தரிசனம் நமக்கு தெளிவுபட எடுத்துக் கூறுகிறது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

மீத்தேன் திட்டத்தின் உண்மை பின்னணி...


கதிராமங்கலம்,நெடுவாசல் தொடர்ந்து இப்போது நன்னிலத்திலையும் மீத்தேன் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது....

சரி மீத்தேன் திட்டத்தை பற்றி முழுமையான உண்மை பின்னணி பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

ஆசியாவிலே மிகப்பெரிய நெற்சமவெளிபரப்பை கொண்ட காவிரி ஆற்றுப்படுக்கை தனது நிலத்திலிருந்து 10,000 அடிக்கு கீழே ஆசியாவிலே மிகப்பெரிய நிலக்கரிப்படுக்கையும் தன்னுள் கொண்டுள்ளது, பாண்டிசேரி பாகூர் தொடங்கி நெய்வேலி படர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட நிலப்படுக்கைகளுக்கு அடியில் கிளர்ந்தது பரவியிருக்கிறது.

மொத்தம் 19,500 க்யூபிக் மில்லியன் டன் நிலக்கரிப்படுக்கையை கொண்டுள்ளது. அரசும்,தனியார் நிறுவனங்களும் இந்த நிலக்கரிப்படுக்கையை கறுப்புதங்கமாக பார்க்கின்றனர்

ஆனால் இதை கைப்பற்ற இவர்களுக்கு வேறுமாதிரியான சிக்கல்கள் உள்ளது. காவிரி டெல்டா பகுதியை எளிதில் நெய்வேலி போல் சுரங்கம் அமைத்து நிலக்கரியை எடுத்துவிட முடியாது, அப்படி எடுக்க எண்ணினால் நிலக்கரிப்படுக்கையின் மேலடுக்கு பாறையில் உள்ள மீத்தேனும் அதற்கும் கீழ் உள்ள shale rock எனப்படும் களிப்பாறை இடுக்குகளில் உள்ள ஷெல் வாயும் பற்றி எரியும்.

கறுப்புதங்கமான நிலக்கரியை எடுக்க இந்த சிக்கல்களை சமாளிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு புவியில் விஞ்ஞானிகள் வகுத்தளித்த திட்டம்தான் மீத்தேன்,ஷெல் எரிவாயு எடுக்கும் திட்டம்.

எனவேதான் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டின் உரிமையான காவிரி நீரின் அளவை குறைத்தும் தடுத்தும் வருகிறது கர்நாடகஅரசு இதை மத்தியிலும், மாநிலத்திலையும் எத்தனை அரசுக்கள் மாறினாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அரசியல் நாடகம் நடத்தி வருகின்றன.

இதன் விளைவால் காவிரிடெல்டா பகுதிகளில் நாளுக்குநாள் விவசாயம் குறைந்துகொண்டே வருகிறது, மேலும் இந்த நிலையை தொடர்ந்து செய்து விவசாய பெருங்குடிமக்களுக்கு நெருக்கடியை கொடுத்து விவசாயம் முற்றிலும் அழிய செய்வார்கள், வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் தாங்களாகவே நிலத்தை கொடுத்துவிட்டு வெளியேறுவார்கள் பிறகு மீத்தேன், ஷெல் எரிவாயு போன்ற அபாயகரமான திட்டத்தை நிறைவேற்ற அவர்களுக்கு எளிதாகிவிடும், இதனால் மத்தியஅரசு நீதிமன்றத்தில் இப்போதைக்கு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மனுத்தாக்கல் செய்துள்ளது.

இப்படி காவிரிப்படுக்கையை கைப்பற்ற துடிக்கும் இவர்கள் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுப்பார்கள்  அதற்குள் அப்பகுதிகள் எந்த உயிரினமும் வாழமுடியாத பகுதியாக ஆகிவிடும்.

பிறகு காவிரிபடுகையை அகழ்ந்து திறந்தவெளி சுரங்கம் அமைத்து 80 ஆண்டுகளுக்கு மேல் நிலக்கரி எடுப்பார்கள் சுமார் 1650 அடி ஆழம் வரை நிலக்கரி எடுத்துவிட்டு மண்ணை இழுத்து மூடுவார்கள், இதை மத்திய, மாநில அரசுகளே வளர்ச்சி திட்டம் என கதைவிடும்.

தொழில் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் சக்தி தான் தேவையெனில் அதை பெற பலவழிகள் உள்ளது அதை விடுத்து நிலத்தில் தான் மீத்தேன் எடுப்பேன் என சாதிப்பதேன்?

வெப்பமண்டல காவிரி பகுதிகளில் சூரியஒளியில் மற்றும் கழிவுகளை கொண்டும் மின்சாரம் உற்பத்தி செய்யலாமே? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு நன்மை செய்யாமல் பன்னாட்டு நிறுவன இலாபத்திற்காக தொன்றாடுவது ஏன்? யோசியுங்கள்...

சொந்த மண்ணில் அகதிகளாக வரும் நிலைக்குள் விழித்து கொள்வோம். இது போன்ற மண்ணை மலடாக்கி , ஆற்றை அமிலமாக்கும் திட்டங்களை தடுப்போம்.....

தமிழருக்கு ஏன் இந்த இழிநிலை?


தமிழகத்தில் தொடக்க கல்வி முதல் உயர்நிலை கல்விவரை தமிழ் மொழியை பயிலாமல் ஒருவன் அடுத்தடுத்த வகுப்புக்கு செல்ல முடியும்..

தமிழ் மொழி தெரியாமலே தமிழக அரசின் வேலையில் அமர முடியும்.

மற்ற அண்டை மாநிலங்களில் அவர்களின் தாய் மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு வேலையில் அமர முடியம்..

மற்ற மாநிலங்களில் மைய அரசின் வேலைகளில் அந்த மண்ணின் மைந்தர்களுக்கே 90% முன்னுரிமை அளிக்கப்படுகிறது..

ஆனால் தமிழகத்தில் தமிழர்களுக்கு 10% வேலை கூட ஒதுக்கப்படுவதில்லை.

தமிழ் மக்களின் தமிழுணர்வு மழுக்கப்பட்டு, தமிழ்வழிக் கல்வி புறக்கணிக்கப்பட்டு, எங்கும் எதிலும் தமிழில்லா நிலையே தெடர்கிறது..

தமிழ்நாடு என்ற பெயருக்கே பொருளில்லாமல் செய்துவிட்டனர் இந்த திராவிட கட்சியினர்...

பழைய நாடுகளும் அவற்றின் புதிய பெயர்களும்...


1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா ஃபாஸோ.

3.அபிசீனியா --- எத்தியோப்பியா.

4.கோல்டு கோஸ்ட் --- கானா.

5.பசுட்டோலாந்து --- லெசதொ.

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா.

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா.

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே.

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா.

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்.

11.சாயிர் --- காங்கோ.

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா.

14.பர்மா --- மியான்மர்.

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்.

16.சிலோன் --- ஸ்ரீலங்கா.

17.கம்பூச்சியா --- கம்போடியா.

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்.

19.மெஸமடோமியா --- ஈராக்.

20.சயாம் --- தாய்லாந்து.

21.பார்மோஸ --- தைவான்.

22.ஹாலந்து --- நெதர்லாந்து.

23.மலாவாய் --- நியூசிலாந்து.

24.மலகாஸி --- மடகாஸ்கர்.

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்.

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா.

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்.

28.அப்பர் பெரு --- பொலிவியா.

29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வானா...

நரம்பு சுண்டி இழுத்தால்...


ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும்.

நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது...

சென்னை வேளச்சேரி நேருநகர் அல்முதலி 1-ம் தெருவில் மரக்கிளை மீது உரசுவதால், மின்வயர்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம்...


மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கும் வரை பகிருங்கள்...

கடலூரில், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்...


சசி ஆதரவாளர்களின் வீடுகளில் நடக்கும் ரெய்டுகளில் அரசியல் உள் நோக்கம்: திருமாவளவன்...


சசிகலா, தினகரன் ஆதரவாளர்களின் வீடுகளில் நடக்கும் வருமான வரித்துறையினரின் சோதனை அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

உட்கட்சிப் பூசலை தீவிரப்படுத்தும் வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்...

கேரளாவில் நடத்தப்பட்ட கருப்பு தின ஆர்பாட்டம்...


வருமான வரித்துறை சோதனைக்கு பின்னால் மத்திய பாஜக அரசு உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது - தினகரன்...


டிமானிடேசன் பேரழிவு என நேற்று பேட்டி கோடுத்தேன் இன்று ரைடு, 20 ஆண்டுகள் என்னை உள்ளே போட்டாலும் மீண்டு வந்து பதிலடி கொடுப்பேன் - டிடிவி தினகரன்...

திராவிடன் என்று சொல்லாமல் இந்து என்று சொல்லிக் கொள்ளும் வைகோ நாயுடு வின் பகுத்தறிவை பாருங்கள்...


அமேசான் மர்மம்...


அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும். மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும். இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசானாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரணமாகவே ஏற்பட்டது.

 வருடமெல்லாம் கொட்டும் மழை. சூரிய வெளிச்சமே பார்க்காத தரை. இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள். இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர். ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும்.மேலே சொன்ன சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும். பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான். இங்கு மழை மிக அதிகமாகப் பெய்வதால் இதனை ‘மழைக் காடுகள்’ என்றும் அழைப்பர்.

அமேசான் காடுகளின் ஜீவாதாரமாய் விளங்கும் அமேசான் நதி உலகின் மிகப் பெரிய நதியாகும். சில இடங்களில் அதன் அகலம் சுமார் 150 மைல்கள். அதாவது 190 கி.மீ. மலைக்க வைக்கும் விஸ்தாரம் கொண்ட இந்த நதிக்கு, ‘நதிக் கடல்’ என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு. கப்பல் போக்குவரத்தின் பொழுது எழும் அலைகளால் பக்கவாட்டு கரைப்பகுதி பாதிக்கப்படுவதால், வருடத்திற்கு வருடம் இந்த நதியின் அகலம் சுமார் 6 அடி கூடிக் கொண்டே போகிறதாம். 1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1500 கிலோமீட்டர் நீளம் கொண்டவை. ஆனால் நீளத்தில் ‘நைல்’ நதிக்குதான் முதலிடம் (மழைக்காலங்களில் அமேசானின் நீளம் நைல் நதியை விட சுமார் 100 கி.மீ. அதிகமாகும்).

அமேசான் ஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது. இந்த நதிக்கரையில் வளர்ந்துள்ள மரங்களின் வேர்ப்பகுதிகள் நதியின் ஊடாகப் வலைப் பரவலாய் பரவி நின்று, அந்த வழியாகச் செல்லும் படகுகளைக் கவிழ்க்கும் வல்லமை பெற்றவை. எனவேதான் இந்நதிக்கு, ‘படகுகளை அழிக்க வல்லவன்’ என்ற அர்த்தத்தில் அமேசான் என அங்கு வாழும் மக்கள் தங்களது மொழியில் பெயர் சூட்டியுள்ளனர்.

உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன. எண்ணற்ற செடிகொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள். அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர். இன்றளவும் இயற்கைக்கு மிக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். விலங்குகளை வேட்டையாடி பச்சையாகவே உண்டு வருகின்றனர். இவர்களுக்கு சமைப்பது என்றால் என்ன என்றே தெரியாது.

காட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல். ஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.

ஆய்வாளர்கள் சிலர் இங்குள்ள சில பழங்குடியின மக்களைப் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யத் தீர்மானித்தனர். ஆனால் வாகனங்களின் மூலம் இவர்களை நெருங்கிச் செல்வது ஆபத்தானது என்பதால் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று படம் எடுக்க முனைந்தனர். அவர்களின் இருப்பிடங்களுக்கு மேலே தாழ்வாகப் பறந்து இவர்கள் படமெடுத்தபோது, ஏதோ பயங்கரமான பறவைத் தங்களைத் தாக்க வருவதாக அவர்கள் நினைத்துவிட்டனர்.

Anaconda உலகின் மிகப் பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவை நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்குப் பகுதியை மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

அமேசான் நதியில் டால்பின் வகைகள் உட்பட சுமார் 3 ஆயிரம் மீன் வகைகள் உள்ளன. இந்தப் பகுதியில் காணப்படும் ஈல் வகை மீனைப் பற்றி இங்கே கூறியே ஆக வேண்டும். காரணம் இது ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது. இது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும்.

தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராளமாக உள்ளன. அதேபோல், ரத்தக் காட்டேரி வகை வெளவால்கள் இங்கு ஏராளம். ராபீஸ் என்னும் கொடிய நோயைப் பரப்பும் வல்லமை இதற்குண்டு. அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இது வாலியா ஹம்சா என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது. சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது. நாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011 ஆம் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார். எனினும் எதிர்காலத்தில் தான் ஆய்வு பூர்த்தியாகும் என சொல்லப்படுகிறது.

இன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு கூட புதுவகை டால்பின் (Inia araguaiaensis) ஒன்றினை ஆய்வாளர்கள் அமேசான் நதியில் கண்டுபிடித்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...